Sunday, 21 February 2021

அர்ப்பணிப்பின் சிகரம் சாரா டக்கரின் கதை


 பாளையங்கோட்டைக்குப் போனீர்கள் என்றால்  அங்கு 

சாரா டக்கர் கல்லூரி, சாரா டக்கர் ஹையர்  செக்கண்டரி ஸ்கூல்,

சாரா டக்கர் டிரெய்னிங் ஸ்கூல் ...என்ற பலகைகளைப் பார்க்கலாம்..

உங்களுக்கு தெரியாமலும் இருக்கலாம்..இங்கிலாந்து தேசத்தில் இரண்டு கால்களும் முடமான, தன் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாதபடி,அடைக்கப் பட்டிருந்த,ஒரு பெண் இருந்தாள்..அவள் பெயர் சாரா டக்கர்.

அவளால் ஒன்று தான் செய்ய முடியும்.ஒரு சாதாரண வீல் சேர்ல ..ஆலயத்துக்கு செல்வாள்.அப்போல்லாம் இப்போ உள்ள மாடர்ன் வீல் சேர்

கிடையாது..

ஒரு நாள் தென்னிந்திய மிஷனரி ஜான் டக்கர் (சாரா டக்கரின் சகோதரர்)

அந்த ஆலயத்தில் பேசினார்..

தென் இந்தியாவில் பெண் பிள்ளைகள் படிக்க முடியாத 

சூழ்நிலைகளையும், சமுதாயக் கட்டுப்பாடுகளையும், பெண்களை சிறு வயதிலேயே  கோயிலுக்கு பொட்டுக் கட்டி, விட்டு வாழ்நாளெல்லாம் விபச்சாரி

ஆக்கப் படுகிறார்கள் என்று அழுகையோடு சொன்னார்..பெண்கள் படிப்பது கேவலம் என்று கருதுகிறார்கள் என்றார்..நொறுங்கிய மனதுடன்.....

வீட்டுக்கு வந்தாள் சாரா.. அவளுக்கு 20 வயது இருக்கலாம்..அவளின் அப்பாவின் பெயர் ..டக்கர்..

 அவள் ஆண்டவரிடம் சொன்னாள்.."ஆண்டவரே எனக்கு இந்தியாவுக்கு போக ஆசையாய் இருக்கிறது.. ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள் என அந்தப் பெற்றோரின் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும் போல் இருக்குது .. அறிவுக் கண்ணைத் திறந்தால் தானே ஒளி வரும்"

அவளுக்கு ஒன்று தோன்றியது..அவள் இந்தியாவைப் பார்த்ததில்லை..

திருநெல்வேலி மக்களைப் பார்த்ததில்லை..

திருநெல்வேலி மக்களுக்காக ஏங்கினாள்.அவள் உறவினரிடம்  இது பற்றி சொன்னாள்..அவள் தன் பிறந்த நாளை பரிசுகள் வாங்கி கொண்டாடவில்லை..

அதற்கு பதிலாக பணமாகத் தாருங்கள் என்று பணத்தை சேர்த்தாள்....

தனது தோழிகளிடம் இருந்து நன்கொடையாக பெற்ற 200 பவுன் நகைகளுடன் தனது 100 பவுன் நகைகளையும் சேர்த்து,ஒரு நாள் அந்த மிஷனரி ஜான் டக்கருக்கு பணத்தை அனுப்பி வைத்தாள்..சாரா....

அதில்  உருவாகியது தான் சாராடக்கர் ..ஸ்தாபனங்கள்..

இலவசமாகவே கல்வி கற்றுக் கொடுக்கப் பட்டது. 

இன்று 4000 பிள்ளைகள் படிக்கும் பெரிய ஸ்கூலாக

கல்லூரியாக கம்பீரமாக நிற்கிறது..

அவள் இந்தியாவுக்கு வரவில்லை.திருநெல்வேலிக்கும் வரவில்லை.

அதில் படிக்கும் ஒவ்வொருவரும், சொல்வது "நான் சாரா டக்கர்  மாணவி " என்று பெருமையாகச் சொல்லுகிறார்கள்..

அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்.

(தோழர் பீர் முகமது அவர்கள் முகநூலில் இருந்து)

----------------------------------------------------------------------------------------------------------------------------

சாரா டக்கர் கல்லூரி தான் தென் இந்தியாவின் முதல் பெண்கள் கல்லூரி .1895 ல் நிறுவப்பட்ட ஒரு சிறு பெண்கள் பள்ளி வளர்ந்து ஒரு கல்லூரியாக நம் முன் நிற்கிறது .கல்வி தர மறுத்த இந்து சமூக சூழ்நிலைகளை எதிர்த்து ,உடல் ஊனமுற்ற ஆங்கிலேய சகோதரி சாரா டக்கரின் மனத்தை போற்றுவோம் .

Monday, 15 February 2021

காதலர் தினத்திற்கு' வேலன்டைன் நாள் ' என்று எப்படி பெயர் வந்தது?

 


 

பிப்ரவரி மாதம் 14ஆம் நாள் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ' வேலன்டைன் நாள் 'என்று கூறுவார்கள். இதை ஏன் அப்படி கூறுகிறார்கள்?

 

சமீபத்தில் வாட்ஸ் அப்பில், கீழ் கண்ட ஒரு தகவலை  பார்த்தேன். அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

                                                       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 

 பிஷப் *வேலன்டைன்* என்பவர் ரோம் நகரிலிருந்து 96 கிலோ மீட்டர் துரத்தில் உள்ள இந்தெர்மனா என்று பட்டணத்தில் வாழ்ந்தார். இவர் வாழ்ந்த காலத்தில் *கிளாடியஸ் கோதிகஸ்* என்ற அரசர் ரோமை ஆண்டு வந்தார். இவர் கிறிஸ்தவர்களை துன்புறுத்தி வந்தார்.       

                                             இவர் ஆட்சி காலத்தில் வேலன்டைன் கிறிஸ்துவுக்கு உத்தமசாட்சியாய் வாழ்ந்து வந்தார். உபத்திரவபடுத்த படும் கிறிஸ்தவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து வந்தார்.

                              கிளாடியஸ் கோதிகஸ் அரசர் தன் போர்சேவகர்கள் திருமணம் செய்யக் கூடாது என்றும் திருமணம் செய்யாமல் பெண்களிடம் பிரவேசிக்கலாம் என்றும் சட்டம் கொண்டு வந்தான்.

                                    இதை எதிர்த்த வேலன்டைன் முறையாக திருமணம் செய்து வாழ வேண்டும் என்றுச்சொல்லி போர் சேவகர்களுக்கு திருமணம் செய்துவைத்தார்.

                    இதனை அறிந்த கிளாடியஸ் கோதிகஸ் அரசர் வேலன்டைனை சிறையில் அடைத்தார். சிறையில் அடைக்கப்பட்ட வேலன்டைன் தன்னுடன் சிறையில் இருந்த 46 நபர்களுக்கு இயேசுவை அறிவித்து ஞானஸ்நானம் கொடுத்தார்.

                         இந்த செய்தி கிளாடியஸ் கோதிகஸ் அரசர்க்கு அறிவிக்கபட்டது. அரசர் வேலன்டைனை கிறிஸ்துவை மறுதலிக்கவும் ரோம தேவதைகளை வணங்கவும் கட்டளையிட்டான்.

                                          வேலன்டைன் அதை ஏற்க மறுத்து அரசர்க்கு இயேசுவை அறிவிக்க முற்பட்டார்.இதனால் கோபம் அடைந்த அரசர் வேலன்டைனை பிப்ரவரி 14-ந்தேதி கொலை செய்தார்.

                                 வேலன்டைன் பரிசுத்தமான திருமண உறவுதான் சரி என்றும் உறுதியான விசுவாசத்தின் நிமித்தமும் கிபி 270 பிப்ரவரி 14ல் மரித்தார்.

                                      பிப்ரவரி 14 வேலன்டைன் கிறிஸ்துவின் அன்பிற்க்காய் அவருடைய பரிசுத்த கட்டளைக்காய் உயிர்விட்டு, இரத்தசாட்சியாய் மரித்த நாளே ஆகும். மற்றபடி இந்த நாளுக்கும் காதலர்களுக்கும் எந்த சம்பந்தமுமே யில்லை.

                                          கிறிஸ்தவர்களே பிப்ரவரி 14ல் காதலர் தினம் கொண்டாடி இந்த பரிசுத்தவான் வரலாற்றை களங்கப்படுத்தாதீர்கள்.

                                                       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 

இதைக்குறித்து, என்சைக்கிளோபெடிய பிரிட்டானிகா என்ன சொல்கிறது? இந்த கதை உண்மை தானா? என்று வாசித்து பார்த்தேன். வேலன்டின் நாளை குறித்து பல விதமான கதைகளும், மரபுகளும் உள்ளன, என்று அதில் போடப்பட்டுள்ளது. இந்தக் கதை உண்மை தானா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.  

 

Saturday, 13 February 2021

சமூக ஊடக உரையாடல் விதிகள் .

தற்போது நாம் எல்லோரும் முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் நாள் முழுதும் மூழ்கி இருக்கிறோம். பல பதிவுகள் இடுகிறோம். பல பதிவுகளுக்கு, பதில் பதிவு கொடுக்கிறோம். இவ்வாறாக நாம் ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறும்போது, பல நேரங்களில், நமது மனநிலைக்கு தகுந்தாற் போல் சொற்களை பயன்படுத்துகிறோம். சமயத்தில் அளவுக்கு மீறி பயன்படுத்தி விடுகிறோம். தவறான சொற்களை பயன்படுத்தி விடுகிறோம். சிலர் கெட்ட வார்த்தைகளை கூட பயன்படுத்துகிறார்கள். சமூக ஊடங்களை பொருத்தவரையில், நம்முடைய சொற்கள் தான், நம்முடைய படம். நல்ல சொற்களை பயன்படுத்தினால், நாம் சமூக வெளியில் அழகாய் தெரிவோம். அசிங்கமான சொற்களை பயன்படுத்தினால், அசிங்கமாக தெரிவோம். ஆக சொற்களே நம்மை வரையும் தூரிகை என்பதை மறக்கக்கூடாது. இதை கருத்தில் கொண்டு, சமூக ஊடகங்களில் கடைபிடிக்க வேண்டிய சில உரையாடல் வீதிகளை வகுத்துள்ளேன். படித்துப் பார்த்து பயன்பெறவும். இந்த பயன்பாட்டு விதிகளை நான் செயல்படுத்துவதால், சமூக ஊடகங்களில், வெற்றிபெற்ற ஒருவராக, உலாவிக் கொண்டிருக்கிறேன்.Quora கோரா என்ற பன்னாட்டு கேள்வி-பதில் இணையதளத்தில், என்னுடைய பதில்கள், இதுவரை 50 லட்சம் பார்வைகளை கடந்து, தினமும் ஆயிரம் பார்வைகள் பெறுகிறது என்பது என் வெற்றிக்கு சாட்சி . 
  1.  பதிவுகளில் கனிவான ,பணிவான சொற்களையே பயன்படுத்துங்கள். கிண்டலான பதிவுக்கு கிண்டலான பதில் இருக்கலாம். ஆனால் மனதை காயப்படுத்துவதாக இருக்கக்கூடாது. 
  2.  நீ, உனக்கு போன்ற மரியாதையற்ற சொற்கள் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. 
  3.  எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ, சாதியையோ, மதத்தையோ குறிப்பிட்டு தாக்கக் கூடாது. இன்னொரு மதத்தின் கோட்பாடுகளை குறித்துப் பேச வேண்டுமானால், அதில் அனுபவம் இருக்க வேண்டும். இல்லாமல் அது குறித்துப் பேசக் கூடாது. எடுத்துக்காட்டாக, பரிசுத்த ஆவி எனும் கிறிஸ்தவ கோட்பாடு பற்றி ஒன்றுமே அறியாமல், அனுபவப் படாமல், அதைத் தாக்கி பல பதிவுகள் போடப்படுகின்றன. அது தவறு.சம்பந்த்தப்பட்டவர்களை அது காயப்படுத்தலாம் . 
  4. Controversial, வெவ்வேறு பார்வைகள் கொண்ட விடயங்களை பேசலாம். ஆனால் சொற்பயன்பாடு கவனமுடன், நடுநிலையாக(neutral ) இருக்க வேண்டும். 
  5.  கருத்துக்கு பதில் கருத்து தான் இருக்க வேண்டும். கருத்து சொன்னவரை தாக்கக்கக்கூடாது. 
  6.  ஒருவர் தன்னுடைய கதையை பகிர்ந்து கொண்டால், கதையில் அவர் பங்கை தாக்க கூடாது. உங்கள் கருத்துக்களை கனிவாக கூறலாம். 
  7.  நல்லதை மனதார வாழ்த்துங்கள்.குறை கூறலாம் ,ஆனால் ,மனது புண்படாமல் கூறவேண்டும் .எடுத்துக்காட்டாக ,ஒரு 35 வயது தில்லி சார்ந்த பெண் ,தன் கணவர் திடீரென இறந்து விட ,வாழ்வதற்கு வழியில்லாமல் ,நட்சத்திர விடுதிகளில் விபச்சாரியாகி ,குடும்பத்தை காப்பாற்றுகிறாள் .அவள் மனசாட்சி அவளை உறுத்த ,கோராவில் மனம் விட்டு அழுது அவள் கதையை பகிர்கிறாள் .வாசகர்களின் கருத்தை கேட்கிறாள் .பலர் ,அவளை ஆதரித்து எழுதினார்கள் .ஆனால் ,நானோ  ,'மகளே ,நீ செய்வது தவறு .எவ்வளவு சீக்கிரம் முடியுமோ ,அவ்வளவு சீக்கிரம் இந்த தொழிலிலிருந்து வெளியேறி ,வருமானம் குறைவாக இருந்தாலும் ,ஒரு சின்ன வேலையில் சேர்ந்து ,உன்னுடைய பிள்ளைகளை ,சின்ன பள்ளிகளில் சேர்த்துவிடு 'அதுதான் ,உன் கணவருக்கு நீ செய்யும் அஞ்சலி .'என்று போட்டேன் .அவள் ,எனக்கு கண்ணீருடன் நன்றி கூறினாள்
  8.  ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ, அல்லது குழுவுக்கோ, கட்டுப்பட்டவரானால், எதிரான கருத்துக்கள் வரும்போது , உணர்ச்சிவசப்படாமல், உங்கள் நிலையை தெளிவாக,காரணத்தோடு  விளக்கிச் சொல்லுங்கள்.
  9.  உரையாடல் ஒரு நேரமும் சண்டையாக மாறக் கூடாது.                                      இதையெல்லாம் நீங்கள் கடைப்பிடித்தால், உங்கள் சமூக வெளி பயணம் இனிதாகும்!வாழ்த்துக்கள் !