Monday, 15 February 2021

காதலர் தினத்திற்கு' வேலன்டைன் நாள் ' என்று எப்படி பெயர் வந்தது?

 


 

பிப்ரவரி மாதம் 14ஆம் நாள் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ' வேலன்டைன் நாள் 'என்று கூறுவார்கள். இதை ஏன் அப்படி கூறுகிறார்கள்?

 

சமீபத்தில் வாட்ஸ் அப்பில், கீழ் கண்ட ஒரு தகவலை  பார்த்தேன். அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

                                                       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 

 பிஷப் *வேலன்டைன்* என்பவர் ரோம் நகரிலிருந்து 96 கிலோ மீட்டர் துரத்தில் உள்ள இந்தெர்மனா என்று பட்டணத்தில் வாழ்ந்தார். இவர் வாழ்ந்த காலத்தில் *கிளாடியஸ் கோதிகஸ்* என்ற அரசர் ரோமை ஆண்டு வந்தார். இவர் கிறிஸ்தவர்களை துன்புறுத்தி வந்தார்.       

                                             இவர் ஆட்சி காலத்தில் வேலன்டைன் கிறிஸ்துவுக்கு உத்தமசாட்சியாய் வாழ்ந்து வந்தார். உபத்திரவபடுத்த படும் கிறிஸ்தவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து வந்தார்.

                              கிளாடியஸ் கோதிகஸ் அரசர் தன் போர்சேவகர்கள் திருமணம் செய்யக் கூடாது என்றும் திருமணம் செய்யாமல் பெண்களிடம் பிரவேசிக்கலாம் என்றும் சட்டம் கொண்டு வந்தான்.

                                    இதை எதிர்த்த வேலன்டைன் முறையாக திருமணம் செய்து வாழ வேண்டும் என்றுச்சொல்லி போர் சேவகர்களுக்கு திருமணம் செய்துவைத்தார்.

                    இதனை அறிந்த கிளாடியஸ் கோதிகஸ் அரசர் வேலன்டைனை சிறையில் அடைத்தார். சிறையில் அடைக்கப்பட்ட வேலன்டைன் தன்னுடன் சிறையில் இருந்த 46 நபர்களுக்கு இயேசுவை அறிவித்து ஞானஸ்நானம் கொடுத்தார்.

                         இந்த செய்தி கிளாடியஸ் கோதிகஸ் அரசர்க்கு அறிவிக்கபட்டது. அரசர் வேலன்டைனை கிறிஸ்துவை மறுதலிக்கவும் ரோம தேவதைகளை வணங்கவும் கட்டளையிட்டான்.

                                          வேலன்டைன் அதை ஏற்க மறுத்து அரசர்க்கு இயேசுவை அறிவிக்க முற்பட்டார்.இதனால் கோபம் அடைந்த அரசர் வேலன்டைனை பிப்ரவரி 14-ந்தேதி கொலை செய்தார்.

                                 வேலன்டைன் பரிசுத்தமான திருமண உறவுதான் சரி என்றும் உறுதியான விசுவாசத்தின் நிமித்தமும் கிபி 270 பிப்ரவரி 14ல் மரித்தார்.

                                      பிப்ரவரி 14 வேலன்டைன் கிறிஸ்துவின் அன்பிற்க்காய் அவருடைய பரிசுத்த கட்டளைக்காய் உயிர்விட்டு, இரத்தசாட்சியாய் மரித்த நாளே ஆகும். மற்றபடி இந்த நாளுக்கும் காதலர்களுக்கும் எந்த சம்பந்தமுமே யில்லை.

                                          கிறிஸ்தவர்களே பிப்ரவரி 14ல் காதலர் தினம் கொண்டாடி இந்த பரிசுத்தவான் வரலாற்றை களங்கப்படுத்தாதீர்கள்.

                                                       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 

இதைக்குறித்து, என்சைக்கிளோபெடிய பிரிட்டானிகா என்ன சொல்கிறது? இந்த கதை உண்மை தானா? என்று வாசித்து பார்த்தேன். வேலன்டின் நாளை குறித்து பல விதமான கதைகளும், மரபுகளும் உள்ளன, என்று அதில் போடப்பட்டுள்ளது. இந்தக் கதை உண்மை தானா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.  

 

No comments:

Post a Comment