Thursday, 3 August 2023

வடக்கர்களின் பயங்கர படையெடுப்பு ---தமிழர்கள் பிழைப்பார்களா?

அண்ணாத்துரை அன்று சொன்னார் ' வடக்கு வளர்கிறது ; தெற்கு தேய்கிறது!'என்று. இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. தற்போது வடக்கு வந்து தெற்கில் வளர்கிறது! அதைவிட இது மிகுந்த ஆபத்தாகும். ஏனென்றால், அங்கு வளர்ந்தால் அது அவர்கள் நிலத்தில். இங்கு வளர்வது நம் நிலத்தில். மெல்ல மெல்ல நம் நிலம் பறிபோகும் அபாயத்தில் தமிழ்நாடு இப்போது இருக்கிறது. இந்திய துணை கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் தமிழர்கள் தான் இருந்தார்கள். இருந்த நிலத்தை மெல்ல மெல்ல இழந்து, இப்போது கடைக்கோடி தமிழகத்தில் ஒரு மூலையில் வாழ்கிறார்கள். அதையும் இழந்து விட்டால்? குமரிக்கடல் தான் உள்ளது.😭

 எங்கும் தமிழ் எதிலும் தமிழ்! என்று வாய்கிழிய சொன்னவர்கள் எல்லோரும், இப்போது எங்கும் வடக்கர்கள் எதிலும் வடக்கர்கள்! என்று இருப்பதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். பாஜகவின் தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கிறார் ' தமிழர்களும் வடக்கே வேலை நிமித்தம் சென்றிருக்கிறார்கள். பெங்களூருவில் இருக்கிறார்கள். அதுபோலத்தான் இதுவும் ' என்று சொல்லி இருக்கிறார். அவர் சொல்வது உண்மைதான். இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் தமிழர்கள் வேலை நிமித்தம் வாழ்கிறார்கள்.

ஆனால், அவர்கள் அங்கு எப்படி வாழ்கிறார்கள்? அவர்கள் அங்கு போய் தமிழை திணிப்பதில்லை. எங்கும் அவர்கள் வடக்கர்களை தாக்குவதில்லை.ஏடிஎம் கொள்ளையடிப்பதில்லை. எங்கும் அவர்கள் பெரும் சொத்துக்கள் வாங்கி குவிப்பதில்லை. எங்கும் அவர்கள் பெரிய கல்லூரிகளையும் ஷாப்பிங் மால் களையும் வாங்குவதில்லை. எங்கும் அவர்கள் வடக்கர்களை ஆள்வதில்லை. எங்கும் அவர்கள் அரசியல் அதிகாரம் கொண்டவர்களாக இல்லை. எங்கும் அவர்கள் கோடிக்கணக்காக எண்ணிக்கையில் இல்லை. எங்கும் அவர்கள் அங்குள்ள அரசியலை தீர்மானிப்பவர்களாக இல்லை. அவர்கள் வேலை செய்யும் இடங்களில் எல்லாவற்றிலும் தமிழைக் கூட சத்தமாக பேச முடியாமல் அடங்கி ஒடுங்கி சிறு சிறு வேலை செய்வார்கள். அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று இருப்பார்கள். அதுதான் தமிழர்கள். மும்பையில் இந்தியில் தான் பேசுவார்கள். அகமதாபாத்தில் குஜராத்தியில் பேசுவார்கள். அங்கு போய் ஆதிக்கம் செலுத்த மாட்டார்கள். அதுதான் தமிழர்கள்! 

ஆனால், இங்கு வாழும் வடக்கர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்கள் இங்கு தமிழ் பேசவே மாட்டார்கள். மண்ணின் மைந்தரான தமிழர்களை ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். இங்கிருக்கும் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட மாட்டார்கள். டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிப்பார்கள். கேட்டால் சண்டைக்கு வருவார்கள். இங்கு வாழ்ந்து கொண்டு, தமிழர்களுக்கு எதிரான பாஜகவிற்கு வாக்களிப்பார்கள். தமிழ்நாட்டில் வந்து அடாவடித்தனம் செய்வார்கள். அப்படியான அவர்கள், விரைவில் இங்குள்ள அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்க போகிறார்கள். இதுதான் தமிழர்கள் வெளிமாநிலங்களில் இருப்பதற்கும், வடக்கர்கள் தமிழ்நாட்டில் இருப்பதற்கும் உள்ள பெரும் வித்தியாசம் என்பது. இது கர்நாடகாவில் இருந்து வந்த அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர் சொல்கிறார் 'யார் குறைந்த பணத்திற்கு வேலை செய்கிறார்களோ அவர்களை அனுமதிப்பதுதான் பொருளாதார விதி ' என்று. இந்தியாவின் சாலை பணிகளில், தினமும் 50 ரூபாய்க்கு வேலை பார்க்க சீனர்கள் தயாராக இருக்கிறார்கள்! நாம் அவர்களை இந்தியாவிற்குள் அனுமதிக்கலாமா? ஏன் அனுமதிக்கவில்லை? ஏனென்றால், இந்தியர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்பதால். அமெரிக்காவில் வேலை செய்ய இந்தியர்களுக்கு ஏன் விசா கட்டுப்பாடுகள் உள்ளது? ஏனென்றால் அங்குள்ள அமெரிக்கர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்ற காரணத்தினால் தான்.அதே மாதிரி தான் தமிழ்நாட்டில் வடவர்கள் வந்தால் தமிழர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்பதால், தமிழர்கள் வேலை வாய்ப்புகளை பாதுகாக்க வடக்கர்கள் பெருமளவில் வருவதை கட்டுப்படுத்துவது நிச்சயமாக அவசியப்படுகிறது. தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகளில் 90 % இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வர வேண்டும். ஆட்சிக்கு வந்தால் அவ்வாறு ஒரு சட்டம் கொண்டு வருவோம் என்று திமுகவினர் அப்போது சொன்னார்கள். இதுவரை அவர்கள் ஏன் கொண்டு வரவில்லை என்று தெரியவில்லை.

 ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு இனக்கணக்கு அடிப்படை உள்ளது.இதை ஆங்கிலத்தில் demographic profile என்பார்கள்.எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில்

 தமிழர்கள் 85% தெலுங்கர்கள் 6% மற்றவர்கள் 9% என்று இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதை மாற்றுவதற்காக வடக்கே இருந்து குடியேற்றம் நடந்து தமிழர்கள் 60%, வடக்கர்கள்  30% தெலுங்கர்கள் 8% மற்றவர்கள் 2% என்று ஆகிறது என்று வைத்துக்கொள்வோம்.இதனால் அரசியல் அதிகாரம் யார் கையில் உள்ளது என்பதில் ஒரு மாற்றம் ஏற்படும்.இது சமூக குழப்பங்களுக்கு வித்திடும். வடக்கர்கள் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பங்குகளை அபகரித்துக் கொள்வார்கள். இதனால் இனக் கலவரம் ஏற்படலாம். ஆக இனக்கணக்கு விகிதாச்சாரம் மாறுவதற்கு நாம் அனுமதிக்க கூடாது. அந்த கணக்கை காப்பாற்ற வேண்டும் என்றால், தமிழர்களுக்கு எல்லா துறைகளிலும் 90% இட ஒதுக்கீடு வேண்டும்.இது மாதிரியான சட்டங்கள் பல மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. வடகிழக்கு மாகாணங்களில் உள்ளே செல்ல வேண்டுமென்றால் இன்னர் லைன் பர்மிட் என்று ஒன்று எடுக்க வேண்டும். இங்கிருந்து நாம் எல்லோரும் போய் கோடிக்கணக்கில் அங்கு போய்வாழ முடியாது. அதேபோன்று ஒரு பெர்மிட்டு முறை தமிழ்நாட்டிற்கும் நடைமுறைப்படுத்தலாம். தமிழர்களின் நலனில் குறியாக இருக்கும் தமிழக முதல்வர், நிச்சயமாக இந்த மாதிரி முறைகளை அமல்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் இட ஒதுக்கீடும் உடனே செய்வார் என்று தமிழக மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.

எது எப்படியோ,அடுத்த தேர்தலில் தமிழர்களை காப்பாற்ற உறுதிமொழி கொடுக்கும் கட்சிக்குதான் நிச்சயமாக தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்பது உறுதி. திமுக தான் கடந்த 50 வருடங்களாக தமிழர் நலனை முன்னிறுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் நிச்சயமாக தமிழர்களை காப்பாற்ற உறுதிமொழி கொடுத்து அதை நிறைவேற்றுவார்கள் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. திமுக வடக்கர்களின் கூட கைகோர்த்து தமிழர்களை பின் தள்ளி விடுவார்கள் இன்று ஒரு கூட்டம் தப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. திமுகவை பற்றி நன்கு அறிந்தவர்கள் அதை நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சமீபத்தில் வடக்கர்கள் தமிழர்களை தாக்கிய ஒரு சம்பவத்தில், திமுக அரசு உடனே தலையிட்டது மறக்க முடியாது. வடக்கர்களை உங்கள் ஊருக்கு போங்கள் என்று சொன்ன தமிழரை உடனே அரசு கைது செய்ததையும் மறக்க முடியாது. ஆக வரப்போகும் தேர்தலில்,  திமுக இந்தப் பிரச்சினையை நிச்சயமாக கையில் எடுப்பார்கள் என்பது தமிழர்கள் எதிர்பார்ப்பு. அது நியாயமான எதிர்பார்ப்பு தான்.