தமிழ் சமூகத்தில்முதலில் சமூக நீதி இயக்கத்தை விதைத்தவர் யார் ?
-------------------------------------------------------------------------------------------------------------------
நாகரிகத்தின் உச்சியில் இருந்த தமிழர் எல்லாத் துறைகளிலும், எல்லா இனத்தவரையும் மிஞ்சி, எட்டா உயரத்தில் எப்போதோ இருந்தனர் .உலக மொழிகளின் தாயான தமிழ் தான் அவர்கள் பேசிய உயர் மொழி .இயல் ,இசை ,நாடகம் என்ற 3 கிளைகள் கொண்ட மகத்தான மொழி தமிழ் .யானைக்கு 60 சொற்கள் ,சிங்கத்திற்கு 24 சொற்கள் கொண்ட மொழி அது .பரிசுத்த வேதாகமத்தில்'பாபேல் கோபுரத்திலிருந்து 'தான் உலக மொழிகள் யாவும் உருவாகியதாக கூறப்படுகிறது . அங்கு குறிப்பிடப்படும் 'பாபேல் கோபுரத்தில் 'பேசப்பட்ட முதல் மொழி தமிழ் தானோ என்று சொல்ல பல சான்றுகள் உள்ளன .
-------------------------------------------------------------------------------------------------------------------
நாகரிகத்தின் உச்சியில் இருந்த தமிழர் எல்லாத் துறைகளிலும், எல்லா இனத்தவரையும் மிஞ்சி, எட்டா உயரத்தில் எப்போதோ இருந்தனர் .உலக மொழிகளின் தாயான தமிழ் தான் அவர்கள் பேசிய உயர் மொழி .இயல் ,இசை ,நாடகம் என்ற 3 கிளைகள் கொண்ட மகத்தான மொழி தமிழ் .யானைக்கு 60 சொற்கள் ,சிங்கத்திற்கு 24 சொற்கள் கொண்ட மொழி அது .பரிசுத்த வேதாகமத்தில்'பாபேல் கோபுரத்திலிருந்து 'தான் உலக மொழிகள் யாவும் உருவாகியதாக கூறப்படுகிறது . அங்கு குறிப்பிடப்படும் 'பாபேல் கோபுரத்தில் 'பேசப்பட்ட முதல் மொழி தமிழ் தானோ என்று சொல்ல பல சான்றுகள் உள்ளன .
கணக்கியலில் மிக பெரிய எண் ஆன ,ஒன்று 22 மேல் உயர்த்தப்பட்ட எண்ணுக்கும் தமிழில் ஒரு சொல் உண்டு ;மிகச்சிறிய பாகமான எண்ணுக்கும் பெயர் உண்டு .விண்ணியலியலிருந்து உளவியல் வரை தமிழர் தீண்டாத துறையே இல்லை எனலாம் .தற்போதைய 'ராக்கெட் விஞ்ஞானம் 'கூட பண்டைக்காலத்தில் தமிழில் 'வாண சாத்திரமாக 'இருந்திருக்கிறது ..
எல்லாவற்றிலும் உயர்ந்திருந்த தமிழனின் ஒரே பலவீனம் ,அவன் சார்ந்த அற வாழ்வு தான் .சூது ,வாது அறியாத நல்லவனாய் அவனிருந்தது தான் அவனுடைய பெரும் பலவீனமாய் காலம் செல்ல செல்ல மாறியது .
சூது தான் உருவாக ,தம்முடைய முக்கிய வாழ்வியல் நெறியாகக் கொண்ட ஆரியர்கள்,எங்கிருந்தோ வந்து இந்திய துணைக்கண்டத்தில் , கி .மு .காலத்தில் குடியேறினர் .சொல்லக்கூடிய அளவில் ஒரு மொழியோ அல்லது கலாச்சாரமோ கொண்டு வராத அவர்கள் எல்லாவற்றிலும் செழித்தோங்கிய தமிழரைக் கண்டு சிறிதும் பயப்பட வில்லை .மாறாக தங்கள் சூதினால் தமிழரை வென்றெடுக்க திட்டமிட்டனர் .சூது ,வாது அறியாத தமிழினம் ,காவல் இல்லாத கலாச்சார கருவூலம் ,வந்தாரை வாழ வைக்கும் ஏமாளித்தனம் ,இவையெல்லாம் ஆரியர்களின் மொழி மற்றும் கலாச்சார திருட்டை எளிதாக்கின .
முதலில் தமிழ் மொழியின் கூறுகளை திருடி அதற்கு சிறிது ஒலி முலாம் பூசி அதை 'சமஸ்கிருதம் 'என்றும் ,அது தான் அவர்களின் மொழி போன்றும் ஒரு காட்சியை உருவாக்கினர் .ஆனால் ,'சமம் 'என்றால் 'மட்டம் 'என்று தமிழில் பொருள் .'கிருக்கல் 'என்றால் 'எழுத்து 'என்று பொருள் .ஆக ,'சமஸ்கிருதம் 'என்ற சொல்லே'தூய்மையாக்கப்பட்ட எழுத்து ' என்று தமிழில் பொருள் படும் சொல் தான் ..
காலப்போக்கில் தமிழ் மொழியின் பெட்டகங்கள் எல்லாவற்றையும் ஒன்று ஒன்றாக மெதுவாக சுரண்டி ,சமஸ்கிருதத்தில் மொழி மாற்றி ,அது தான் மூல மொழி போல அவர்கள் காட்ட ஆரம்பித்தனர் .தமிழை 'நீச பாஷை 'அதாவது பேயின் மொழி என்றும் ,சமஸ்கிருதம் தேவ மொழி என்றும் பொய்யுரை பரப்பினர் .தமிழர்களை சூத்திரர் என்று ஒரு தாழ்ந்த வகுப்பாக்கி சாதிய முறையை தமிழ் சமூகத்தில் மெதுவாய் நுழைத்தனர் .
காலப்போக்கில் தமிழ் மொழியின் பெட்டகங்கள் எல்லாவற்றையும் ஒன்று ஒன்றாக மெதுவாக சுரண்டி ,சமஸ்கிருதத்தில் மொழி மாற்றி ,அது தான் மூல மொழி போல அவர்கள் காட்ட ஆரம்பித்தனர் .தமிழை 'நீச பாஷை 'அதாவது பேயின் மொழி என்றும் ,சமஸ்கிருதம் தேவ மொழி என்றும் பொய்யுரை பரப்பினர் .தமிழர்களை சூத்திரர் என்று ஒரு தாழ்ந்த வகுப்பாக்கி சாதிய முறையை தமிழ் சமூகத்தில் மெதுவாய் நுழைத்தனர் .
ஆக ,ஒரு காலத்தில் மலை போல் உயர்ந்து நின்ற தமிழினம் தற்போது அடிமைப் பட்டது .சாதி என்னும் சதிக்குள் சிக்கியது .ஆக மொத்தத்தில் தமிழர் பிராமணர்களின் அடிமையாய் மாறினர் .தமிழ் அரசர்களும் கூட இந்த சதி வலைக்குள் சிக்கினர் .
தமிழர் சமூகத்தில் கிறிஸ்தவரின் பங்கு
தமிழர் சமூகத்தில் கிறிஸ்தவரின் பங்கு
இந்நிலையில் தான் முதல் நூற்றாண்டில் இந்தியா வந்த கிறிஸ்தவம் எல்லா ஜாதிகளையும் சமமாக பாவித்தது தமிழ் மக்களை மிகவும் கவர்ந்தது .அது ஓரளவுக்கு சாதிய கட்டமைப்பிலிருந்த தாழ்ந்த ஜாதிகளுக்கு விடுதலை வாங்கி கொடுத்தாலும் ,பெரும்பான்மை தமிழர்கள் அப்போதும் அடிமைகளாகவே வாழ்ந்தனர்
பின்னர் 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிறிஸ்தவர்களின் இரண்டாவது வருகை நடந்தது .ஆம் ,ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வியாபார நிமித்தமாக நுழைந்தனர் .அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததால் எல்லோரையும் சமமாக பாவித்தனர் .ஆட்சி அதிகாரம் கொண்டவரானதால் கீழ் ஜாதிகளுக்கும் கல்வி இலவசமாக வழங்கினர் .கிறிஸ்தவ சமயப்பரப்பாளர்கள் பல இந்துக்களிடம் கிறிஸ்துவை பற்றி சொல்லி மதம் மாற்றினர் .
ஆக ,பிராமணர்களின் ஆதிக்கம் ஆங்கிலேய ஆட்சியில் வெகுவாக குறைந்தது .கீழ் ஜாதி எனப்பட்ட தமிழர்கள் கிறிஸ்தவத்தில் இணைந்து சமுதாயத்தில் நிமிர்ந்து நடந்தனர் .
ஆக ,பிராமணர்களின் ஆதிக்கம் ஆங்கிலேய ஆட்சியில் வெகுவாக குறைந்தது .கீழ் ஜாதி எனப்பட்ட தமிழர்கள் கிறிஸ்தவத்தில் இணைந்து சமுதாயத்தில் நிமிர்ந்து நடந்தனர் .
சமூக நீதி என்றாலே அது அடிமட்டத்திலிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்பதை ஆங்கிலேயர்கள் நன்றாக உணர்ந்து அதை அப்படியே செயல் படுத்தினார்கள் .
ஆக ,தமிழ் சமூகத்திற்கு முதலில் சமூக நீதி வழங்கியவர்கள் யார் என்றால் அது ஐயமின்றி ஆங்கிலேயர்களே எனலாம் .
ஆக ,தமிழ் சமூகத்திற்கு முதலில் சமூக நீதி வழங்கியவர்கள் யார் என்றால் அது ஐயமின்றி ஆங்கிலேயர்களே எனலாம் .
ஆங்கிலேயர்களின் ஆட்சி ஜாதிய கட்டமைப்பிற்கு எதிராக அமையவே ,பிராமணர்கள் அவர்களை நாட்டை விட்டு விரட்ட ஒரு வழியாக இந்திய விடுதலை போராட்டத்தை முன்னெடுத்தனர் .அதன் வெற்றியாக ஒரு காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு செல்லும் காலம் வந்தது .இறுதியாக 1947ல் ஆங்கிலேயர் இந்தியாவிற்கு அரசியல் விடுதலையும் வழங்கி விட்டு நாட்டை விட்டு சென்றனர் .
ஆங்கில கல்வி முறை ,சட்டம் ,கட்டிடங்கள் ,கட்டமைப்புகள் என்று அவர்கள் ஆட்சியின் நன்மைகளை , தங்கள் பங்களிப்பை,அழித்து விட்டு செல்லாமல், இந்திய நாட்டிற்கு அன்பு பரிசாய் விட்டு விட்டு நாட்டை விட்டு சென்றனர் .
ஆங்கில கல்வி முறை ,சட்டம் ,கட்டிடங்கள் ,கட்டமைப்புகள் என்று அவர்கள் ஆட்சியின் நன்மைகளை , தங்கள் பங்களிப்பை,அழித்து விட்டு செல்லாமல், இந்திய நாட்டிற்கு அன்பு பரிசாய் விட்டு விட்டு நாட்டை விட்டு சென்றனர் .
ஈ .வே .ராவின் திராவிட சமூக நீதி போராட்டம்
இந்நிலையில் விடுதலை பெற்ற இந்தியாவில் ஜாதி பழையபடி தலை தூக்கியது .இந்நேரம் தான் ஈ .வே .ரா என்று அன்புடன் அழைக்கப்படும் ஈ வே .ராமசாமி அவர்கள் தமிழ் நாட்டு அரசியல் களத்தில் காலூன்ற தொடங்கினர் .1939 லிருந்து அவர் அரசியலில் ,முதலில் 'ஜஸ்டிஸ் பார்ட்டி 'என்றும் ,பின்னர் 'திராவிடக் கழகம் 'என்றும் களமிறங்கினர் .இவரது கொள்கை முக்கியமாக பிராமணர் எதிர்ப்பு என்பதாகும் .அதனால் பிராமணர்களின் ஆயுதங்களாகிய இந்து மதம் ,மூட நம்பிக்கை ,ஆசாரம் போன்றவற்றயும் அவர் ஒரு சேர எதிர்த்தார் .
ஜாதிய முறையை பொருத்தவரையில் அவர், மேல்/இடை ஜாதிகளை சேர்ந்த தெலுங்கர்கள் மற்றும் மேல் ஜாதி தமிழர்கள் என்ற சமூகத்தின் மேலே ,பிராமணர்கள் கூட்டம் ,ஆதிக்கம் செலுத்துவதை வன்மையாக எதிர்த்தார் .ஆனால் ,அதே பாதிக்கப்பட்ட மேல் ஜாதியினர், தமிழ் /தெலுங்கு கீழ் ஜாதிகளின் மேல் ஆதிக்கம் செலுத்துவதை எந்த வகையிலும் எதிர்க்கவில்லை என்பது குறிப்பிட தக்கது ..
ஆக ,ஈ .வே .ராவின் சமூக நீதி போராட்டம் என்பது 'சாதி ஒழிப்பு 'போராட்டம் அல்ல,மேல் /இடை ஜாதிகளின் மேலே பிராமணர் காட்டும் .ஆதிக்கத்தை மட்டும் ஒழிக்கும் போராட்டமே .அது சாதி ஒழிப்பு போராட்டம் என்றால் ,சாதிய சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்து மதத்திற்குள் இருந்துகொண்டே எப்படி அவர் அதை எதிர்த்து போராடமுடியும் என்ற கேள்வி எழுகிறது .அண்ணல் அம்பேத்கார் போல இந்து மதத்தை உதறி தள்ளி விட்டு சமத்துவம் போற்றும் ,இஸ்லாத்திலோ ,கிறிஸ்தவத்திலோ,பௌத்தத்திலோ ஈ .வே .ரா ,தன் கூட்டத்தோடு சேர்ந்திருக்கலாம் .ஆனால் ,அவர் அப்படி செய்யவில்லை .ஒருவேளை அவர் நாத்திகர் என்பதால் அப்படி செய்யவில்லை என சிலர் நினைக்கலாம் .ஆனால் ,ஈ .வே .ராவை நன்கு புரிந்தவர்கள் அவர் நாத்திக வாதத்தின் அடிப்படையே பிராமணர்களையும் அவர்களின் கருவியான கடவுள்களை மட்டும் எதிர்க்க தான் என்பதை ஒத்துக்கொள்வர் .
மேலும் அவர் போராட்டம் சமூக நீதி போராட்டம் என்பது உண்மையானால் அது ஆரம்பிக்கும் இடம் சமூகத்தில் மிகவும் நசுக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டும் .அதை தான் ஆங்கிலேயர் செய்தனர் .ஆனால் ,திராவிட இயக்கத்தில் 'பிராமணர் எங்களை நசுக்க கூடாது ,ஆனால் நாங்கள் கீழ் ஜாதிகளை நசுக்குவோம் 'என்ற கோட்பாடு வேலை செய்கிறது என்பது தெளிவு .இன்றும் மதுரையில் ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், மேல் ஜாதி தெரு வழியாக செல்லும் போது காலணியை கையில் எடுத்து நடக்கும் கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது .இதை எதிர்த்து தி .க .வின் வீரமணி ஒரு நாளும் போராடியது இல்லை .இனி போராடவும் மாட்டார் .
ஆதலால் தான் திராவிட கட்சியின் 50 வருட ஆட்சிக் காலத்தில் ஜாதிக் கலவரங்கள் பல அரங்கேறின .அதில் ஒன்றில் கூட பிராமணருக்கு பங்கு கிடையாது .ஆக ,ஈ .வே .ராவின் நோக்கம் 'சமூக நீதி 'அல்ல .மாறாக பிராமணர் ஆதிக்கத்திலிருந்து மேல் /இடை சாதிகளுக்கு விடுதலை .ஆனால் ,கீழ் ஜாதி தமிழர்கள் /தெலுங்கர்களை பிராமணர் கையில் இருந்து விடுவித்து ,தெலுங்கர் கையில் அடகு வைத்தது தான் எனலாம் .
அவரின் அரசியல் முகமான கலைஞர் மூச்சுக்கு நூறு முறை 'தமிழருக்காக 'வாழ்வது போல் பேசுவார் .ஆனால் ,உண்மையில் கலைஞரின் 'தமிழர் 'என்ற சொல்லிற்கு பொருள் என்ன ?
முதலில் ,பொதுவாக தமிழர் என்றால் யார் ,யார் அடங்கும் என்பதை பார்ப்போம் .
- பறையர்
- பள்ளர்
- வன்னியர்
- முக்குலத்தோர்
- நாடார்
- கோனார்
- முதலியார்
- வேளாளர்
- தமிழ் செட்டியார்
- கௌண்டர்
- தமிழ் இசுலாமியர்
- தமிழ் கிறிஸ்தவர்
- போன்றவர்கள் .
- தெலுங்கர்
- மலையாளிகள்
- கன்னடர்
- மார்வாடி
- பிராமணர்
- தமிழ் உயர் சாதியினர்
- தமிழ் முக்குலத்தோர்
- ஜாதி கிறிஸ்தவர் (தலித் தவிர )
- இசுலாமியர்
அப்படியென்றால் தமிழர்களுக்கு திராவிட கூட்டத்தினால் ஒரு பயனுமே இல்லையா ?அப்படி சொல்ல முடியாது .திராவிட கூட்டம் விருந்துண்ணும் மேசையிலிருந்து ஒன்றிரண்டு உணவுத்துண்டுகள் கீழே தவறி விழலாம் .அவைகள் வாயில் எச்சிலோடு காத்திருக்கும் தமிழ் தாழ்ந்த ஜாதிகளுக்கும் ,தலித்துகளுக்கும் கிடைக்கலாம் .எடுத்துக்காட்டாக பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு உயர்த்தியபோது தலித்துகளுக்கும் 2% உயர்த்தப்பட்டது .அது வேறு வழியில்லாமல் நடந்தது .அதையும் நடைமுறை படுத்தும் போது ஒரு பதவியும் கிடைக்காமல் பார்த்துக்கொள்வார்கள் !
இதை போன்றவைகளை தவிர திராவிட அரசியலில் அடிமட்ட தமிழருக்கு இடம் கிடையாது என்பது மறுக்க முடியாத உண்மை .
----------------------------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு :
இந்தக் கருத்து யாருடையதாக இருக்கும் என்று சிந்தித்து பார்த்தேன் !சீமானுடையது போல் தோன்றியது ,ஆனால் இல்லை !வைரமுத்துவின் கருத்தாக இருக்க முடியாது .ஏனென்றால் அவர் கலைஞரின் சுவைஞர் !பா .ரஞ்சித் கருத்து போல் இல்லை .அவர் சமூக நீதி போராட்டத்தில் கிறிஸ்தவத்தின் பங்கை எப்போதுமே எடுத்து இயம்புவதில்லை .அது போல் இளையராஜாவும் கிறிஸ்தவத்தை வெளிப்படையாக எதிர்ப்பவர் தான் !
ஆக ,இது வேறு யாருடைய கருத்தோ தான் .ஆனால் ,உண்மையில்லை என்று இதை மறுக்க முடியாது .
இந்த பதிவை குறைந்தது தங்களுடைய 10 நண்பர்களுக்கு பகிரவும் .
இதை குறித்த உங்கள் கருத்துக்களையும் இங்கு பகிரலாமே !
Many wish to know about caste , what i the root about the history , very good weel written facts to know about facts on caste , in the divided system ow to get social justice
ReplyDeleteTo know about caste ,read :https://www.juggernaut.in/books/ec9082986e6a4555
Delete