Sunday, 27 September 2020

உலகின் முதல் மொழி தமிழ்!

உலகின் முதல் மொழி தமிழ்!மொழி அறிவு இன சிறப்பு !!!

ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!

ஆதாரம் இதோ...........

W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.

எடுத்துகாட்டுகள் :

Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.

கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.

Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.

Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.

Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது

இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.

ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.

========================

தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,

உலக நாகரீகங்களின் ஊற்று ,உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !

The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all religions and all civilizations !

தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் !

S + பேசு = speach

S + பஞ்சு = sponge

S + மெது = smooth

S + பரவி = spray

S + உடன் = sudden

S + நாகம் = snake

S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..

உருளை = roll

(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .

கொல் = kill ( தமிழில் கொ  வரும் இடத்தில்  K  ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )

 பொத்தல்  ல இருந்து பொத்தான் = Button

உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .

ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .ஆங்கிலத்தின் தாய் மொழியான :

லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .

2015 ஆய்வுகளின் படி :

( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (Europe-ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).

லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.(நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறைமொழி தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.

நிறைமொழி - தமிழ் மறைமொழி - சமஸ்கிரதம்

- சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .

- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)

சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி

சம = சமைத்தல் = செய் ;கிரதம் = பாஷை = மொழி .

இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )

இயற் = இயற்கை

கிரதம் = பாஷை = மொழி

மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .

கீபுருவின் தாய் மொழி அரமைட் ,

அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .

அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .

தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .

1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !

 ழ  உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .

1500 வருடங்களுக்கு முன் தெளுகு என்ற ஒரு தனி மொழி இல்லை!

தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெளுகு.

தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.

1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!

தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.

700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!

தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .

அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .

தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :

கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான். மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் கட்டு மரம் தான்.

தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .

இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் தோரா (கி.முன் 2000 ஆண்டுகள்) ஒன்று மட்டுமே உள்ளது.

தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:

கி.முன் 1000 ஆண்டுகள் - திருக்குறள்

கி.முன் 2000 ஆண்டுகள் - தொல்காப்பியம்

கி. முன் 3000 ஆண்டுகள் திருமந்திரம்

கி.முன் 5000 பரிபாடல்;

கி. முன் 7000 அகத்தியம் போன்ற நூல்கள் உள்ளன.

பகிர்வுக்கு தயங்க வேண்டாம் 

(இது பகிர்வே .கருத்துக்கள் என்னுடையதல்ல )

Friday, 4 September 2020

மலையாள படங்களில் தமிழருக்கு எதிராக வெறுப்பு பரப்புரை ஏன் ?

                         வந்தாரை வாழவைக்கும் தமிழர்களின் நற்குணம் அவர்களுக்கு நன்மதிப்பையும் ,உயர்வையும் கொடுத்திருக்கிறதா ?இல்லை ,வாழ வந்தவர்கள் ,தமிழர்களால் உயர்ந்தவர்கள் ,பணம் சம்பாதித்தவர்கள் எல்லோரும் ,ஏறுவதற்கு உதவும் ஏணியை ,ஏறிய பின் மிதித்து தள்ளும் பண்புள்ளவர்களாக மாறிவிட்டார்களா ?வாருங்கள் ,சிறிது ஆராயலாம் !
                               பாருக்குள்ளே தொன்மையான குடி எது என்று கேட்டால் அது தமிழ்க் குடி தான் என்று அறுதியிட்டு கூறலாம். தொன்மையில் மட்டுமல்ல,உண்மையில் , பண்பாட்டில் எல்லாவற்றிலுமே  மேலானவர்கள் தமிழர்கள்  என்றால்  அது மிகையாகாது. வந்தாரை வாழ வைப்போம் என்று எல்லோரையும் தமிழ் நாட்டிற்குள் அனுமதித்தார்கள் தமிழர்கள் . ஆனால் வந்தவர்களோ , வழிவிட்ட அவர்களை மதியாமல், இங்குள்ள சொத்துக்களையும், இங்குள்ள பொக்கிஷங்களையும் ,எப்படி கொள்ளையடிப்பது, இவர்களை எப்படி ஆள்வது என்று திட்டமிட்டு ,சூழ்ச்சிகளில் இறங்கி தமிழர்களை அடிமைப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .
                                                     பக்கத்து மாநிலமான கேரளாவில் வாழும்  மலையாளிகள்  , தமிழ் நாட்டில்  வந்து சுதந்திரமாக  வாழ்ந்து , வியாபாரம்  செய்து , பணம்  ஈட்டி  ,வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .ஆனால் அவர்கள் மனதில் தமிழர்கள் மீது எவ்வளவு ஒரு வெறுப்பு என்பதை  அவர்கள் எடுக்கும் மலையாள படங்களில் நன்றாகவே காட்டிக்கொள்கிறார்கள்.தமிழர்களை எந்த அளவு ஒரு கேவலமாகவும்,கீழ்த்தரமாகவும்  காட்டுகிறார்கள் என்பது  மலையாள  படங்களை  பார்த்தால்  புரியும் .
                                          நான்  அடிக்கடி மலையாள திரைப்படங்கள் காண்பதுண்டு.அந்த திரைப்படங்களில் எல்லாவற்றிலும் ஒரு காட்சியாவது தமிழர்களை கேவலப்படுத்துமாறு  அமைந்திருக்கும். தமிழர்களை  மறக்காமல் 'பாண்டி' என்று அழைக்கும் காட்சி ஒன்று கட்டாயம் இருக்கும்.'பாண்டி'எனும்  சொல்  தமிழர்களை  கேவலப்படுத்த  மலையாளிகள்  பயன்படுத்தும் ஒரு  சொல்லாகும் . 
                                         மேலும் ஒரு படத்தில் ஒரு தமிழனை பார்த்து நீ 'பாண்டி' மட்டுமல்ல நீ' நொண்டி 'என்று  சொல்லி  சிரிப்பது  போல்  ஒரு  காட்சி . தமிழர்கள்  யாரும்  மலையாளிகளையோ ,மற்ற எந்த இனத்தவரையோ   கேவலப்படுத்தும்  படியாக  சொற்களை  கண்டுபிடிக்கவில்லை .  இன்னொரு படத்தில் ஒருவரைப் பார்த்து  மற்றொருவர்  'நீ பாண்டி போல் இருக்கிறாய் 'என்று சொல்ல ,பதிலுக்கு அவர் 'நீதான் பாண்டி போல இருக்கிறாய் 'என்று சொல்லி சிரிப்பது  போல்  ஒரு காட்சி அமைந்துள்ளது .அதுவும்  அந்தக் காட்சி சென்னையில் நடப்பதுபோல காட்டப்பட்டுள்ளது ! 
                                                                சென்னையில்/ஊட்டியில் /கொடைக்கானலில்  எல்லோரும் மலையாளம் பேசுவது போல காட்டுவார்கள். இவர்கள் எங்கு போனாலும் அந்த ஊரில் உள்ள எல்லோருமே மலையாளம் பேசுவது போல்தான் காட்டுவார்கள் .இன்னொரு படத்தில் ஒரு தமிழ் குடும்பத்தை காட்டி அவர்கள் அசிங்கமாக சாப்பிடுவதுபோல் காட்சி அமைத்து உள்ளார்கள் .வேறொரு படத்தில் மம்முட்டி ஒரு  பெண்ணை, ஒருதமிழன் வீட்டில் தங்க வைப்பது போல ஒரு காட்சி.உடனே மம்முட்டியின் நண்பரின் மனைவி 'தமிழன் மாரோட இவருக்கு என்ன தொடர்பு 'என்று கேவலமாக கேட்பது போல ஒரு காட்சி. ஒவ்வொரு படங்களிலும் ஒரு வாய்ப்பையும் நழுவ விடாமல் ,தமிழர்களை கிண்டல் செய்வது மலையாள படங்களில் மாமூலாக உள்ளது. ஒரு படத்தில் மோகன்லால் 'நான் தமிழ்  பேசமாட்டேன்' என்று சொல்வது போல் ஒரு காட்சி .ராவணபிரபு என்ற படத்தில் கவுண்டர்கள் எல்லாம் புத்தியில்லாதவர்கள் போலவும் , மோகன்லால் ஒரு கவுண்டரை காப்பாற்றுவது போலவும் ஒரு காட்சி அமைத்திருக்கிறார்கள். தமிழ் படங்கள் எதிலும் மலையாளிகள் புத்தி இல்லாதவர்கள் மாதிரி காட்டி தமிழர்கள் போய் அவர்களை காப்பாற்றுவது போலவும்  காட்சி அமைப்பதில்லை.
                                  திலீப் நடித்த ஒரு மலையாள படத்தில் தமிழகத்தின் தலைசிறந்த மன்னன் ராஜராஜ சோழன் ஒரு ஒல்லியான உருவமாக ஒன்றுக்குமே உதவாத ஒரு மனிதனாக காட்டி கேவலப்படுத்தியிருக்கிறார்கள் .தமிழர்களை பெரிய ரவுடிகள் போல காட்டி ,ஆனால்  மலையாளிகளிடம் அடிவாங்கி தோற்கும்  படியான காட்சிகள் அமைத்திருப்பார்கள்.ஒரு படத்தில் மம்முட்டி ஒரு தமிழ் இன்ஸ்பெக்டரை பார்த்து 'டேய் , தமிழ் பையா 'என்று கூறுபது போல  ஒரு காட்சி.
                                  இன்னொரு படத்தில் ஊட்டியில் காவியா மாதவன் ஒரு வங்கியில் புகுந்து ரகளை பண்ணுவது போல் ஒரு காட்சி. வங்கியில் எல்லோருமே மலையாளம் தான் பேசுவார்கள் !அதில் ஒருவர் தமிழில் பேசுவதை ,காவியா மாதவன் 'தமிழ்ல  எல்லாம் பேசுகிறார் 'என்று கேவலப்படுத்தி சொல்வது போல ஒரு காட்சி. தமிழர்கள் எவ்வளவு படங்களில் அவர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து நம்மில் ஒருவராக அன்புடன் நடத்திக் கொண்டிருக்கிறோம் .சென்ற வருடம் நடந்த கேரள வெள்ள நேரத்தில் தமிழர்கள் ஒவ்வொருவரும் பணம்  பிரித்து அவர்களுக்கு உதவி செய்தனர். ஆனால் அவர்களோ எந்தவிதமான நன்றியும் இன்றி தமிழர்களை கேவலப்படுத்துவதில்  குறியாக உள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது.
ஒரு படத்தின் பெயரையே 'பாண்டி படை' என்று வைத்திருக்கிறார்கள். இன்னொரு படத்தில் மம்முட்டி தமிழ் நாட்டிற்குள் வந்து ஒரு தேவர் வீட்டில் புகுந்து அவரை அடிப்பது போல ஒரு காட்சி. இன்னொரு படத்தில்
 தமிழன்மார்  100 ரூபாய்க்கு கொலை செய்வார்கள் என்று ஒரு வசனம்.தமிழர்கள்  குற்ற மனம் கொண்டவர்கள் ,பெண்களை கடத்துபவர்கள் என்றெல்லாம் தவறான ஒரு பரப்புரை மலையாள படங்களின் வழியாக தொடர்ச்சியாக நடக்கிறது.மம்முட்டி படம் ஒன்றில் ' செல்வம் லாஜிஸ்டிக்ஸ் 'என்ற தமிழ் நிறுவனம் ,கேரள இளம்பெண்களை கன்டெய்னரில் கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்புவதாக காட்சி!
 இன்னும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஆனால் இத்துடன் நான் விட்டு விடுகிறேன்.
 மொத்தத்தில் மலையாள படங்களில் தமிழர் மீது ஒரு வெறுப்பு தொடர்ச்சியாக உண்டாக்கப்பட்டு அது  நிலை நிறுத்தப்படுகிறது என்பது வருத்தம் அளிக்கிற செய்தி.
                                  இவ்வளவுக்கும் மலையாள மொழி தமிழ் மொழியின் பிள்ளை தான் என்பது மலையாளிகள் எல்லோருக்கும் தெரியும்.மலையாள பண்பாடு தமிழ் பண்பாட்டின் ஒரு பிரிவு என்பது அங்கு எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
 ஆனாலும் இவ்வாறு ஏன் கேவலப்படுத்துகிறார்கள் ஒரு வெறுப்புணர்ச்சி உண்டாக்குகிறார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.
                                      தமிழ்நாடு அவர்களை மதித்து ,தமிழ் நாட்டில் ஓணத்திற்கு  விடுமுறை கூட  அளிக்கிறது.ஓண  கொண்டாட்டங்கள் தமிழ்நாட்டு கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது .ஆனால் கேரளாவில் பொங்கலுக்கு விடுமுறையோ ,கொண்டாட்டங்களோ கிடையாது . பொங்கல் கொண்டாட்டங்கள் கேரள கல்லூரிகளில் நடப்பதில்லை.
                     மலையாளிகள் தமிழனின் நற்பண்புகளை இளிச்சவாய்த் தனம் என்று எடுத்துக் கொண்டு இவ்வாறாக வெறுப்பு பரப்புரை செய்வதை  நாம் அனுமதிக்க முடியாது .
 இவ்வாறு அவர்கள் செய்வதை நாம் அவர்கள் திரைத்துறை வழியாக வன்மையாக கண்டிக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.
----------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு பத்து பேருக்காவது இதை பகிரவும்.