Wednesday, 5 November 2025

அன்புத் தாய்களை ,கொடூர பேய்களாக மாற்றுவது எது ?

சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் 14 குழந்தைகள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது .இதில் ஒரு குழந்தை வயது 2 என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த குழந்தைகளை இழந்த தாய்களின் மனநிலை எப்படியாக இருக்கும்  என்று பார்க்கலாம்.

 குட்டியை இழந்த தாயின் மனம் பித்து பிடித்தது போல இருக்கும். அதையே நினைத்து, நினைத்து,ஊண் ,உறக்கமின்றி , மனம் கலங்கி வாழவே பிடிக்காமல் போய்விடும் .விலங்குகள் போல ,மனிதர்களும்  இதற்கு விதிவிலக்கல்ல .ஆனால் ,கரூர் கூட்ட நெரிசலில்  இறந்த குழந்தைகளின் தாய்களின்  மனம் அப்படியே தான் உள்ளதா?

இதைக் குறித்து @senthilvel79 அவர்களின் X பதிவு என்ன சொல்லுகிறது?

என் கணவரை விட எனக்கு அவரைத்தான் பிடிக்கும் என்று ஒரு பெண்மணி சொன்னதோ, தன் தாய் தந்தையரை விட தனக்கு விஜய்தான் முக்கியம் என்று இளைஞர்கள் சொல்வதோ, கூட்டத்தில் சிக்கி உயிரே போனாலும் விஜயை பார்த்து விட்டுத்தான் போவோம் என்று சில இளம் பெண்கள் சொன்னதோ இறந்து போன தன் குழந்தையின் புகைப்படத்தை கையில் வைத்து விஜய் ஒரு புகைப்படம் எடுத்தால் போதும் என்று ஒரு பெற்றோர் சொன்னதோ தன் இரு குழந்தைகள் இறந்த சூழலிலும் விஜய் மீது தனக்கு துளியும் கோபமில்லை என்று அக்குழந்தைகளின் தாய் சொன்னதோ தன் பிள்ளையின் விதி அவன் போய் சேர்ந்துட்டான் என்று ஒரு பெண்மணி சொன்னதோ…. இதயத்தை கனமாக்கியது எனில்…. விஜயை பக்கத்தில் நின்று பார்க்கும் வாய்ப்பு தன் குழந்தை மூலம்தான் தனக்கு கிடைத்தது என்றும், என்ன ஒன்று அதற்கு ஈடாக தன் குழந்தையின் உயிரைக் கொடுக்க வேண்டியது இருந்தது என்று சொல்லும் தாயின் வார்த்தைகள் இதயத்தை ரணமாக்கியது… விதியே விதியே என் செய்ய நினைத்திட்டாய் என் தமிழ்ச் சாதியை..

(நன்றி -X  செயலி )

தமிழரிடம் உலகத்தில் சிறந்தது எது என்று கேட்டால், அது தாய்மை என்று தான் சொல்வார்கள். பத்து மாதம் குழந்தையை வயிற்றில் சுமந்து, பின்னர் தன் ரத்தத்தை பாலாக்கி ,அதை  ஊட்டி வளர்த்து, குழந்தையின் வாழ்க்கை தான் தன் வாழ்க்கை, அதற்காக எந்த தியாகமும் செய்யலாம், என்று நினைப்பதுதான் தாய் உள்ளம். அப்படித்தான் தாய்கள் இவ்வளவு நாளும் தமிழ் சமூகத்தில் இருந்தார்கள். 

அப்படி இருந்த தாய்கள் இப்போது, குழந்தைகளை கழுத்தை நெரித்து கொல்கிறார்கள். கிணற்றில் வீசி கொல்கிறார்கள். குழந்தை அழுதால்,பாசத்துடன்  பால் கொடுப்பதில்லை. குழந்தைகள் பெறுவதை ஒரு பெரும் பேறாக கருதிய காலம் போய், இப்போது அதை ஒரு \ பெரும் பாரமாக கருதுகிறார்கள். குழந்தைகள் தங்கள் சுதந்திரத்திற்கு எதிராக வந்த சனியன்கள் என்று கருதுகிறார்கள். குழந்தைகளுக்கு பால் புகட்டுவது கூட தங்கள் மார்பழகை  கெடுத்து விடும் என்று நினைக்கிறார்கள். பால் ஊட்டுவதற்காக தான் பெண்கள் மார்பு என்பதையே மறந்து விட்டார்கள். ஆக, குழந்தைகள் மேல் முற்றிலும், பாசமற்று போய் இருக்கிறது இப்போதைய தாய் சமூகம். குழந்தை பிறந்த இரண்டு நாட்களில், அந்தக் குழந்தையை விட்டுவிட்டு, மாவட்ட நீதிபதியாக பதவி ஏற்கிறார்கள் ஒரு பெண்மணி. அரசியலில் ஈடுபடும் இன்னொரு பெண்மணியை, போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் கொண்டு செல்கிறார்கள். அப்போது குழந்தையின் அழுகை சத்தம் கேட்கிறது. இந்தப் பெண்ணுக்கு பால் பொங்கி, ரவிக்கை  எல்லாம் நனைந்து, சேலை வழியாக தாய்ப்பால் கீழே வழிகிறது. பால் கொடுத்து விட்டு வர அனுமதி கேட்கிறார். ஆனால் காவல்துறைக்கு அதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. முடியாது என்கிறார்கள்.ஆதலால், குழந்தையை பட்டினி போட்டுவிட்டு காவல் நிலையம் செல்கிறார் அந்த தாய் !பச்சைக் குழந்தையை பார்ப்பதை விட ,அரசியல் அவர்களுக்கு முக்கியமாக தெரிகிறது. அரசியலில் இருக்கும் இன்னொரு பெரிய பெண்மணியும், குழந்தை பிறந்த ஒரு மாதத்தில், அதற்குப் பாலூட்டாமல், மேடையில் போய் பெண் உரிமை பற்றி முழங்குகிறார்.இதை எல்லாவற்றிலும் மேலான ஒரு கொடுமை காணொளியாக வந்தது ,அது என்னவென்றால், தன் மூன்று வயது குழந்தையை கரூர் நெரிசலில் பறிகொடுத்த ஒரு தாய், விஜய் அழைப்பிற்கு செவி சாய்த்து ,சென்னை சென்று விட்டு, அவருடைய ஆறுதல் வார்த்தைகளை கேட்டுவிட்டு திரும்புகிறார். திரும்பும்போது பேருந்து உள்ளே அவர் மகிழ்ச்சியாக நடனமாடுகிறார் .பார்க்கவே கொடுமையாக இருக்கிறது. இப்படி ஒரு தாயா? என்று கேட்கத் தோன்றுகிறது.

இவர்களுக்கெல்லாம் தாய்மை பொங்கி நிற்கவில்லை .அதைவிட அவர்களுடைய சுயநலம்,பெண்ணுரிமை பேச்சு  போன்றவை தான் மேலோங்கி நிற்கிறது .குழந்தை என்ன ஆனாலும் பரவாயில்லை, எனக்கு என்னுடைய குறிக்கோள் தான் முக்கியம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

இப்போதைய தாய் உள்ளத்தில் ,இந்தப் பெரிய ,கொடிய மாற்றம் எப்படி வந்தது?ஏன் வந்தது ?இதற்கு காரணம் யார் ?அதை பற்றி இப்போது அலசலாம்,வாருங்கள் .

                                               தமிழ் சமூகம் தந்தை வழி சமூகம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். தந்தை வழி சமூகத்தில், தாயின் பங்கு மிகவும் உயர்ந்த,தனி  இடத்தில் உள்ளது. தாயை அவளுடைய தாய்மை கடமைகளிலிருந்து ஒருபோதும் நீங்க விடாமல் இருக்க வைக்கும் சமூகம் தந்தை வழி சமூகம் ஆகும் .தாய்களுக்கு ,குழந்தைகளை பெற்று, பாலூட்டி, அன்புகாட்டி, வளர்ப்பதை தவிர வேறு எந்த வேலையும் கொடுத்து, அவர்களை திசை திருப்பி,அவர்கள் இயற்கை கடமைகளிலிருந்து தவற வைக்கும் சமூகம் அல்ல தமிழ் சமூகம்.ஆக, யார் எப்படி இருந்தாலும், எது எப்படி இருந்தாலும், ஒரு தாய்க்கு தன் குழந்தையை பேணுவது ஒன்றுதான் தெரியும் ,அது ஒன்று தான் முக்கியம் என்று போதிப்பது/கடைபிடிப்பது  தந்தை வழி சமூகமான தமிழ் சமூகம் .இதனால் தான்,உலகத்தில் சிறந்தது எது என்றால், அது தாய்மை தான்  என்று தமிழ் சமூகம் கொண்டாடியது.இவ்வாறு தாயினால்,பாலூட்டப்பட்டு , பேணப்பட்ட குழந்தைகள் ,அவர்கள் தலை முறை, ஒரு பொறுப்பான, ஒழுங்குள்ள தலைமுறையாக வளர்ந்து கொண்டிருந்தது .தாய் சொல்லை தட்டாதே! என்று ஒரு மொழி உண்டு .தாய் சொன்னால் குழந்தைகள் கேட்பார்கள். அந்த அளவு தாய்களுடைய அன்பும் ,பரிவும்  இருந்தது.

                    இப்படி இருந்த சமூகத்தில் தான் வெளிமாநிலத்தில் இருந்து ஒரு விஷமத்தனமான ஒருவர் தோன்றினார்.அவர் தாய் வழி சமூகத்தில் பிறந்தவர்.ஆதலால், தாய்களின் கடமையைப் பற்றி அறியாதவர் .அவர் பெண்களின் கடமை பிள்ளை பெறுவது அல்ல !குடும்பத்தை பேணுவது அல்ல !பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள்! ஆகவே, அவர்களுக்கு ஆண்களைப் போல் எல்லாவித உரிமைகளும் உள்ளது !அவர்கள் கருப்பையை வெட்டி வெளியே எறிந்து விடலாம்! அவர்கள் நினைத்தபடி யாருடனும் உடலுறவு கொள்ளலாம்! பிள்ளை பெரும் இயந்திரம் அல்ல பெண்கள்! என்றெல்லாம் ஒரு தவறான உபதேசத்தை தமிழ் நாட்டு பெண்கள் மத்தியில் பரப்பி, அவர்களை நம்ப வைத்து, அவர்கள் சிந்தையின் திசையை முற்றிலுமாக மாற்றினார்.ஆனால் ,இந்த கருத்தியலை  அவர் பிறந்த இனத்தில் உள்ள யாரும் கடைப்பிடிக்க மறுத்து விட்டார்கள் .அவர்கள் யாரும் கருப்பையை வெட்டி போடவில்லை. இவருடைய நோக்கம்,தந்தை வழி தமிழ் சமூகத்தை, இந்த சிந்தனையை கொண்டு அழித்து விடலாம் என்பதே . அப்படி என்றால் தமிழ் சமூகத்தில் பெண்கள் எல்லோரும் குழந்தைகளை கைவிட்டு விட்டு, பெண்ணுரிமை பேசி வெளியே அலைவார்கள்!வேலை செய்வார்கள்! பணம் சம்பாதிப்பார்கள்! அழகு நிலையங்களுக்கு செல்வார்கள் !ஆனால் ,வீட்டில் குழந்தைகள் பட்டினியினால் அழும்.அந்நிய வேலைக்காரிகளின் கொடூர கைகளில் வளரும் அந்த குழந்தைகள்.இப்படியே போனால், விரைவில் தாயன்பு  இல்லாத அந்த புது தமிழ் சமூகம் அழிந்துவிடும் என்பதே அவருடைய நோக்கம். இதற்கு அவருக்கு தமிழ் நாட்டு ஊடகங்கள் எல்லாம் ஆதரவளித்தது. தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த வெளிமாநிலத்தவர்கள் 100 %ஆதரித்தார்கள். 

இந்த  போதனையின் விளைவுகள்  என்ன ?

தாய்மையின் தலையாய பண்புகள்  என்னென்ன?பெற்ற  தன் குழந்தைக்கு தன்  உயிரையே கொடுக்கும் ஒரு பேரன்பு, பிறந்த குழந்தைக்கு பாலூட்டி அரவணைத்து ,அல்லும் பகலும் கவனிக்கும் ஒரு பொறுப்பு ,சில சமயங்களில் எரிச்சல் உண்டாகலாம், ஆனாலும், குழந்தையை ஒரு பேறு  என்று தமிழ் சமூகத்தில் போற்றுவார்கள். ஆதலால் ,அந்தப் பேற்றை பேணி பாதுகாக்க வேண்டும் என்பதே முழு நோக்கமாக ஒரு தாய்க்கு இருக்கும். ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறந்து விட்டால், அந்த வீட்டின் பேச்சு முழுவதும் அந்த குழந்தையை சுற்றி தான் இருக்கும். அது என்ன செய்தது ,அது எப்படி அழுதது என்று எல்லாவற்றையும் சொல்லி சொல்லி, குடும்பத்தினர் மகிழ்வார்கள். இந்த தாய்மை குணங்கள் எல்லாம் இப்போது இந்த விஷ  போதனையால் அழிந்து போய்விட்டது .ஆண்களின் குணமான போட்டி, பொறாமை, வன்முறை, எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற எண்ணம் ,இவைகள் தான் இப்போது பெண்களை ஆட்டி படைக்கின்றன. ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் நாங்களும் செய்வோம் என்ற உறுதியுடன் வெளியே அலைந்து கொண்டிருக்கிறார்கள்.மகாராஷ்டிராவில், 7 மாத கர்ப்பிணி பெண் ஒரு காவலராக வேலை பார்க்கிறார். காவலர்கள் பளுதூக்கும் போட்டி ஒன்று நடந்தது .அதில் இவர்கள் கர்ப்பிணி என்பதால் தகுதியற்றவர் என்று தேர்வு குழு சொன்னது. அதற்கு எதிராக அவர்கள் போராடி,, 145 கிலோ எடையை கர்ப்பிணி பெண்ணாக தூக்கி சாதனை செய்திருக்கிறார். இப்படி தூக்கும் போது குழந்தைக்கு வயிற்றில் இருக்கும் கருவுக்கு ஏதாவது ஆபத்து வரும் என்று எந்த கவலையும் அவர்களுக்கு இல்லை .அது எப்படி இப்படி இருக்க முடிகிறது? அந்தக் குழந்தையின் மேல் வயிற்றில் இருக்கும் போதே அன்பு இல்லாமல் எப்படி இருக்க முடியும்?அந்தக் குழந்தையை விட இந்த சாதனை முக்கியமா?


                                                                      (படம் -நன்றி டைம்ஸ் ஆப் இந்தியா அக்டோபர் 28)

 சமூகப் பொறுப்பற்ற ஊடகங்கள் இதை சாதனை என்று போற்றி புகழ்ந்து கொண்டிருக்கிறது. இது சாதனை அல்ல! வேதனை!கேரளாவில் ஒரு பெண் ஜேசிபி இயந்திரத்தை ஒட்டி சாதனை செய்து இருக்கிறார் என்று ஊடகங்கள் புகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவர்களுடைய  வீட்டை கவனிக்காமல், குழந்தைகளை கவனிக்காமல் ,ஜேசிபி இயந்திரத்தை ஓட்டுவது தான் குறிக்கோள் என்று ஒரு  இருந்தால் , அவர்களுடைய தாய்மை  அழிந்து அது பேய்மையாக மாறிவிடலாம்  என்பதை மறுக்க முடியாது.

இப்படியே போய்க் கொண்டிருந்தால், இன்னும் சிறிது காலத்தில், பெண்மை என்பது மெல்ல மெல்ல அழிந்து விடும். பெண்களுக்கு குழந்தை பெறுவதில் விருப்பம் இல்லாமல் போய்விடும். அதை விட்டுவிட்டு, ஆண்களுடன் போட்டி போட்டு,பணம் ஈட்டுவது , சாதனை செய்வது போன்றவற்றில் குறியாக  அலைந்து கொண்டிருப்பார்கள் .இதனால் மனித குலத்தின் இனப்பெருக்க நிலை மெல்ல மெல்ல அழிந்து குழந்தைகள் பிறப்பது என்பது இல்லாமல் போய்விடும்.இது உடனே நடக்காவிட்டாலும், இப்போதே இது நடக்க ஆரம்பித்துவிட்டது என்பது கண் கூடு .இப்போதே பல பெண்கள் கருவூட்டல் மையத்துக்கு சென்று தான் குழந்தைகளை பெறுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் .பெண்களை பெண்களாக இருக்க விடாமல் ஆண்களாக மாற்றும் இந்த விஷ போதனையை முற்றிலுமாக வேரறுப்போம். இல்லை என்றால் மனித குலத்திற்கு இது ஒரு ஆபத்து என்பதை நினைவு கொள்வோம்.