Friday, 21 May 2021

தெலுங்கு உண்மையிலே சுந்தர தெலுங்கா ?

             


                       

                                தமிழ் பாடல்கள் கேட்டு கேட்டு அலுத்து போய்விட்டது .சரி ,ஒரு மாற்றத்திற்கு ஒரு திராவிட (தெலுங்கு )பாட்டை கேட்போமே என்று ஒன்றை போட்டேன். ராம் சரண் ,கட்டை கால் சட்டையில் ,ஏதோ ஒரு பெயர் தெரியாத ஒரு கதாநாயகி குட்டை பாவாடையில், இருவரும் சேர்ந்து ஆடும் ஒரு செம பாடல்.

"குக்குரு குக்குரு குக்குரு 

குடுகுடு குடுகுடு 

அண்டி வண்டி ஹண்டி 

பண்டியோடு கண்ட்லு 

அப்புலு தட புடு "

                                  என்று கட புட  ஒலியுடன்  ஒரு தெலுங்கு  பாட்டு கேட்டேன் .நடனம் செம அழகாக இருந்தது. நாயகன் ,நாயகி அழகாக ஆடினார்கள்.காட்சி அமைப்பு பிரமாதமாக இருந்தது. ஆனால், சுந்தர தெலுங்கு தான் கடமுட கடமுட என்று ஆட்டுக்கல்லில் கருங் கல்லை போட்டு  அரைத்து போல  ஒரு தொனி  ! காதெல்லாம் வலிப்பது போல ஒரு உணர்வு !

                                             கேட்டு முடித்தவுடன் ,தெலுங்கு மொழியில் மெல்லிய ஒலி  என்று ஒன்று  கிடையாதோன்னு  நினைக்க வைத்தது அந்த பாடல் .இந்த ஒரு பாடல்  வைத்து  ஒரு மொழியின் இனிமையை தீர்மானிக்க முடியாது அல்லவா . ஆதலால்,ஒரு சின்ன மொழி  ஆராய்ச்சியில் இறங்கினேன் .

                                  தெலுங்கில் அதிகமாக சொற்களெல்லாம் லு ,டு ,போன்ற தொனியில் தான் முடிகிறது .அதாவது ,உயிர் மெய் எழுத்து தொனிதான் அதிகம் .ஆனாலும் , ஏனோ ஒரு இனிமையே  இல்லாமல் கட கட குடு குடு  என்ற  ஒரு சத்தத்தில் தான் மொத்தத்தில் கேட்கிறது .ஏன் ?

                                              தெலுங்கு சொற்களின் ஒலி நயத்தை ஆராயலாம் .எடுத்துக்காட்டாக ,ஏழுமலையான் என்கிற அழகான தமிழ் சொல் ,ஏடு கொண்டல வாடு என்று பல் உடைவது போல் தெலுங்கில் தொனிக்கிறது .எஸ்.பி.பி  என்று அன்பாக தமிழர்களால்  அழைக்கப்படும் தெலுங்கு பாடகர் எஸ். பி .பாலசுப்பிரமணியம் அவர்களின் முழு தெலுங்கு பெயரை  சொன்னால்  பல் உடைந்து விடும்! இதோ அவர் முழு பெயர்:Sripathi Panditaradhyula Balasubrahmanyam ஸ்ரீபட்டி பண்டிட்டாராட்யுலா பாலசுப்ரமணியம் !அப்பாடா ,ஏன் அவர் பெயரை எஸ்.பி.பி என்று  சுருக்கி வைத்திருக்கிறார் என்பது இப்போது புரிகிறதா? 

இவர் பெயர் மட்டுமில்லை, தெலுங்கு பெயர்கள்  அதிகமாக இப்படித்தான் இருக்கிறது.

இதோ சில எடுத்துக்காட்டுகள்:

  • நண்டமுறி தாரக ராம ராவ் (என் .டி .ஆர் )
  • அல்லரி நரேஷ் 
  • டெஜ்ஜா சஜ்ஜா 
  • பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் 
  • விஸ்வக் சென் நாயுடு 
  • சமந்தா அக்கினினி 
  •  கண்டசாலா

                        சரி, ஆட்கள் பெயர்கள் தான் எப்படி இருக்கிறது, ஊர்ப்பெயர்கள் எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சிக்குள்  இறங்கினேன்.அதுவும் ரேணிகுண்டா, ஏராகுண்டலு, காஜுவாகு,  அணக்கபள்ளி ,விஜயவாடா ,காக்கிநாடா ,ராஜமுந்திரி  போன்ற சடுகுடு பெயர்கள்தான் அதிகம் உள்ளன. அனந்தப்பூர், சித்தூர் போன்ற அழகான பெயர்கள் எல்லாம் தமிழ் மொழி அடிப்படையில் அமைந்தவை தான். ஆக ஆட்கள் பெயர்கள், ஊர் பெயர்கள் இவை எல்லாமே  தெலுங்கிலே ஒரு கடினமான தொனியிலே  அமைந்துள்ளது தெளிவு .                                                                        ஆக ,எதைவைத்து தெலுங்கை சுந்தர தெலுங்கு என்று சொன்னார்கள் என்று தெரியவில்லை. பாரதியார் ஒரு பாடலில் 'சுந்தர தெலுங்கினில்' என்று  பாடலுக்காக ,எதுகை மோனைக்காக பயன்படுத்தியிருக்கிறார் .
"சிந்து நதியின் மிசை நிலவினிலே,
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே,
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து,
தோணிகளோட்டி விளையாடி வருவோம்."
 இந்த பயன்பாடை  ஒரு மொழியின் குணத்தை சொல்லும் சொல்லாக  எடுக்க முடியாது. அந்த ஒற்றை சொல் கொண்டு 'சுந்தர தெலுங்கு' என்று பேசு பொருளாக்கி, ஊதி விட்டார்கள் ஊடகத்தார் .தமிழ் மொழியின் இயல்பு, இனிமை, இசை போன்ற பேச்சு, இவை ஒன்றும் தெலுங்கு இதில் கிடையாது. ஆக இதிலும் ஊடகங்கள் சதிசெய்து தமிழை பின் தள்ளிவிட்டு, தெலுங்கை சுந்தரத் தெலுங்கு  என்று தமிழரிடையே அடையாளப்படுத்தி விட்டார்கள் . 
                               இந்தியாவில் மொழியியலில் ,வாழ்வியலில் எல்லாவற்றிலும்    தமிழைத் தவிர எல்லா  மொழிகளையும்  முன்னிலைப்படுத்தும் ஒரு போக்கு இந்திய மொழியியலில் பலநூறு  ஆண்டுகளாக உள்ளது.இது ,ஊடகங்கள், தமிழின் மௌன எதிரிகளான பிராமணர்கள் கையில் இருந்ததன் விளைவு என கொள்ளலாம் .
                         நான் இதை எழுதுவதற்கு காரணம் ,தெலுங்கின் மேல் உள்ள  வெறுப்பினால் அல்ல. தமிழின் பெருமையை தமிழ் நாட்டிலே மறைக்க, தெலுங்கை முன்னிறுத்தி, நம்மை முட்டாளாக்க நினைப்பதை வெளிக்கொணரவே என்பதே  என்று  கூறிக் கொள்கிறேன் .தமிழின் பெருமையை ,தமிழ் மொழி குடும்பத்தினரான தெலுங்கர் ,கன்னடர் ,மலையாளிகள் யாரும் ஒரு தடவை கூட ,தவறி கூட சொன்னதில்லை .ஆனால் ,தமிழர்களை  அவர்கள் மொழியை பற்றி அப்படித் தந்திரமாக சொல்ல வைக்கிறார்கள் .
தமிழை ,தமிழர்களை குறித்து  தெலுங்கர் ,கன்னடர் ,மலையாளிகள் எப்படி சொல்லுகிறார்கள் ? தெலுங்கர்கள் ,தமிழ் மொழியை கேவலப்படுத்த ,அதை 'அரவம் 'என்கிறார்கள் .அரவம் என்றால் பாம்பு .தமிழ் பேசினால் பாம்பு அசைவது போல் உள்ளதாம் !கன்னடர்கள் தமிழர்களை 'கொங்கா 'என்றும் மலையாளிகள் தமிழர்களை 'பாண்டி'யென்றும்  கிண்டலாக கூப்பிட ,தமிழர்கள்  மட்டுமே இவர்களை மரியாதையுடன் ,பட்டப் பெயரின்றி அழைக்கிறோம் .ஆக தமிழர்கள், தாம் ஏமாளிகள் என்பதை மாற்றிக் காட்டுவோம் .நம் தமிழின் பெருமையை பற்றி பேசுவோம் .சுந்தர தெலுங்கு என்று சொன்னதை நம்ப வேண்டாம் . 

Monday, 3 May 2021

ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிறித்தவ பிரிட்டிஷாரை எதிர்த்தார்கள்?



இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்துக் கட்டினார்கள்! அவைகளில் சிலவற்றை நாம் என்னவென்று பார்ப்போம்...பா ர்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,

வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த இந்து மனு தர்ம சட்டத்தை பிரிடிஷ் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1773 ஆம் ஆண்டு பிரிடிஷ் அரசு புதிய சட்டத்தை
ஏற்றி நம் அடிமை வாழ்க்கையை மாற்றத் தொடங்கியது.
சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை, 1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.
1804 யில் பெண் சிசுக்கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது.
1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.
பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும்.
(இந்து மனு சட்டம் VII 374, 375),
ஆனால் ஒரு பிராமணன் தன் காம இச்சை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். அதற்கு தண்டனை கிடையாது. அவனால்
கெடுக்கப்பட்ட பெண் கடவுளுக்கு அவள் உடலை அர்ப்பணித்ததாக கருதப்படுவாள். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் பிணம் போன்றதேயாகும்.
(இந்து மனு சட்டம் IX 178)
பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் - - -
பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது!
சூத்திரப் பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாட்கள் கோவிலில் இருக்க வேண்டும். அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.
பிராமணன் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த
இந்து சட்டத்தை 1835 ஆண்டு லாட் மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்திரனும்
கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.
சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை
1835-ல் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.
1835 ஆண்டு சூத்திரர்கள் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை கொண்டுவரப்பட்டது.
1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் பார்ப்பனிச இந்து மனு தர்ம சட்டத்தின் கொடுமைகள் அனைத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது.
இந்து மனு தர்ம சட்டத்தை ரத்து செய்ய சாதி கொடுமைகளை வேரறுக்கப் போராடியவர் ஐயா #தந்தை #பெரியார்.
இவர் மட்டும் இல்லை என்றால் பார்ப்பானைத் தவிர மற்ற சமுதாய மக்கள் இன்னும் ஆதிவாசிகளாக தான் இருப்போம்.
இந்தியாவை மட்டும் பிரிட்டிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லை. சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் மகாத்மா
ஜோதிராவ் புலே அவர்களுக்கு கல்வி கிடைத்திருக்காது, இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது, அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவ பணியும் கிடைத்திருக்காது,
சூத்திரனின் அடிமைச் சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூறுவோம்.
மீடியாக்கள் இருக்கலாம்
ஆள் பலம்
படை பலம்
பண பலம்
ஏன் அரசாங்க பலம் கூட
இருக்கலாம்.
ஆனால், பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய கருத்தியல் ஆயுதங்கள் உண்டு.

- பகிர்வு

Wednesday, 7 April 2021

பிராமணாள் கபே ---மற்றவா உள்ளே வராதீங்கோ !



ஒரு காலத்தில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர்.

பிராமணர் அல்லாதார்
உள்ளே சென்று
உட்கார்ந்து சாப்பிட முடியாது.
எடுப்புச் சாப்பாடுதான்
வாங்கிச் சென்று
வெளியே சாப்பிட வேண்டும்.
சென்னையில் அன்றைய மவுன்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில், ‘பஞ்சமர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது’ என்று விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர்.
இரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள், இதராள் என்று விளம்பரப் பலகை
வைக்கப்பட்டு இருந்தது.
இது மட்டுமல்ல.
இருப்புப் பாதைகள் போடப்பட்டு,
இரயில் பயணம்
தொடங்கிய காலத்தில்,
நான்கு வகைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை நான்கு வருணத்தாரும் தனித்தனியாகப் பயன்படுத்தும்படியாக
உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என
இந்து மத வேதியக் கூட்டம்
இரயில்வே நிர்வாகத்தைக்
கேட்கும் அளவுக்குப்
பேதங்கள் மோசமாக இருந்தன.
*இயக்கத்தின் தொடக்கம்*
இப்படிப்பட்ட சூழலில்தான் 1912-ல் டாக்டர் சி.நடேசனாரின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது ‘மெட்ராஸ் யுனைடெட் லீக்’. அதுவே 1913 முதல் பிராமணர் அல்லாதாரைக் குறிக்க ‘திராவிடர் சங்கம்’ என்று புதுப் பெயர் பெற்றது
பிராமணர் அல்லாதார் இயக்கமான திராவிட இயக்கம் தோன்றியதற்கு முக்கியக் காரணம்,
காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்திய பிராமண வழக்கறிஞர்கள்தான். அவர்கள் ஆதிக்கம் எங்கும் நிறைந்திருந்தது என்பதைத் தனது ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூலில் பதிவுசெய்திருக்கிறார் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திவந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.
பிராமணர் அல்லாதோர் நிலை
அந்தக் காலகட்டத்தில் உத்தியோகத் துறையில் எங்கும் பிராமணர் ஆதிக்கம்; பிராமணர் அல்லாதாருக்கு முட்டுக்கட்டை என்ற நிலை இருந்தது. எடுத்துக்காட்டாக 1912-ல் சென்னை மாகாணத்தின் நிலை என்ன? துணை ஆட்சியர்களில் 55%, சார்பு நீதிபதி 82.5%, மாவட்ட முன்சீப்களில் 72.6% பிராமணர்கள். இந்தப் பதவிகளில் இந்து பிராமணர் அல்லாதார் முறையே 21.5%, 16.7%, 19.5%.
கடப்பை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் உயர் பதவி வகித்த டி.கிருஷ்ணாராவ் (ஹுஸுர் செரஸ்தார் - மாவட்ட ஆட்சியர் பதவிக்கு நிகரானது) என்பவரின் உறவினர்கள் 116 பேர் அந்தத் துறையில் இருந்தனர். சென்னை சட்ட மன்றத்தில் 1914-ல் சட்ட மன்ற உறுப்பினர் குன்சிராமன் நாயர் எழுப்பிய வினாவுக்குக் கொடுக்கப்பட்ட பதில் என்ன?
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்யப்பட்ட 650 பட்டதாரிகளில் பிராமணர்கள் 452 பேர், பிராமணர் அல்லாத இந்துக்கள் 12 பேர், பிற இனத்தவர் 74 பேர்!
கல்வி, வேலைவாய்ப்பு நிலைதான் இப்படி என்றால் சமுதாய நிலை என்ன?.
1916-ல் டி.எம்.நாயர், தியாகராயர் உள்ளிட்டோர் முன்னின்று தொடங்கிய தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், நீதிக் கட்சியாக அழைக்கப்பெற்றது. நீதிக் கட்சி திராவிடர் கழகம் ஆனது. திராவிடர் கழகத்திலிருந்து திமுகவும் அதிலிருந்து அதிமுகவும் உருவாயின. ஒட்டுமொத்தமாக இவற்றை ‘திராவிடர் இயக்கம்’ என்று ஒரு பொதுச் சொல்லால் குறிப்பதாகக் கொண்டால், இழிவுகள் பலவற்றிலிருந்து இந்தத் திராவிடர் இயக்கமே நம் மக்களை மீட்டெடுத்தது.
திராவிடர் என்ற பெயர் மாற்றமே திராவிட இயக்கத்தின் சாதனை என்று சொல்லலாம். ஏனென்றால்,
1901-ல் எடுக்கப்பட்ட சென்னை மாகாணத்து மக்கள்தொகைக் கணக்கில் ‘பிராமணர்கள் 3.4%, சூத்திரர்கள் 94.3%’ என்று பிராமணர் அல்லாதாரை அரசாங்கமே சூத்திரர்கள் என்று குறிப்பிடும் இழிநிலைதான் அன்று இருந்தது.
இந்த நிலையில்தான் பெரியார், ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!’ என்ற பெருமுழக்கத்தை வீதிகளில் எல்லாம் ஒலிக்கச் செய்தார்.
பின்னதாக, நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவை ‘சூத்திரன்’ என்ற இழி பட்டத்தைப் பதிவேடுகளிலிருந்து ஒழித்தது.
ஆட்சியில் பங்கேற்று நேரடி மாற்றங்களைக் கொண்டுவந்தது மட்டும் அல்லாமல், எல்லாத் தளங்களிலும் மாற்றுகளை உருவாக்க முற்பட்டது திராவிட இயக்கம்.
டாக்டர் சி.நடேசன், பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க சென்னையில் 1916-ல் உருவாக்கிய திராவிட சங்க விடுதியை (Dravidian Association Hostel) ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
மாணவர் விடுதிகளில்கூடப் பாகுபாடுகள் நிறைந்திருந்த காலத்தில் மாற்றாகத் தொடங்கப்பட்ட மாணவர் விடுதி இது. பிற்காலத்தில் இந்திய நிதியமைச்சராக ஆகவிருந்த ஆர்.கே.சண்முகம், பாரிஸ்டர் ரங்கராமானுஜம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்களாக விளங்கிய டி.எம்.நாராயணசாமிப் பிள்ளை, எஸ்.ஜி.மணவாள ராமானுஜம் மற்றும் சடகோப முதலியார், பிற்காலத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார் போன்றவர்களெல்லாம் இந்த விடுதியில் தங்கிப் படித்தவர்கள்தான்!
*திராவிட இயக்கம் கொண்டுவந்த மாற்றங்கள்*
திராவிட இயக்கம் கொண்டுவந்த மாற்றங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. சுதந்திரத்துக்கு முன்பு சென்னை மாகாணத்தில் 1920-1937 காலகட்டத்தில் ஆட்சியிலிருந்து நீதிக் கட்சி ஆட்சி கொண்டுவந்த மாற்றங்கள்.
2. ஆட்சியிலிருந்து இறங்கிய நீதிக் கட்சியின் தலைவராக 1938-ல் பெரியார் பொறுப்பேற்று, பிறகு 1944-ல் திராவிடர் கழகமாக அதை உருமாற்றிய பின்னர், தேர்தல் அரசியலிலிருந்து விலகி, பொதுத் தளத்திலிருந்து மேற்கொண்டுவரும் மாற்றங்கள்.
3. 1967 முதலாகத் தமிழகத்தில் ஆட்சியில் இருந்துவரும் திமுக, அதிமுக இரு திராவிடக் கட்சிகள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த மாற்றங்கள்.
*இவற்றில் தேர்தல் அரசியலில் பங்கேற்காமல், பொதுத் தளத்தில் நின்று அரசியல் கட்சிகளுக்கான சமூக நீதி அழுத்தங்களையும் கொடுத்துவரும் திராவிடர் கழகம் வெளியிலிருந்து உருவாக்கிவரும் மாற்றங்கள் என்றால், இரு திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு ஆட்சிக் காலம் மட்டுமின்றி காமராஜரின் ஆட்சிக் காலகட்டத்தையும்கூடச் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். பிராமணியத்துக்குத் துணை போகும் காங்கிரஸை ஒழிப்பதே என் கடமை என்று கூறி காங்கிரஸிலிருந்து வெளியேறி வந்த பெரியார் முன்மொழிந்த பல திட்டங்களையும் யோசனைகளையும் நிறைவேற்றியவர் காமராஜர் என்பதும் வரலாறு.*
ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தைத் தந்தை பெரியார் தலைமை தாங்கி தடுத்து நிறுத்தியது முக்கியமான ஒன்று. எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், சமூக நீதி, தமிழ், தமிழர் நலன் என்பதே எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு திராவிடர் கழகத்தின் உயிர்மூச்சாக இருந்திருக்கிறது. அதேபோல, பொதுத் தளத்தில் அது உருவாக்கிய கருத்துருவாக்கம், கட்சிக்கு அப்பாற்பட்டு ஆட்சியாளர்களைச் செயல்பட வைத்திருக்கிறது. ஆகையால், திராவிடர் கழகம் பொதுத் தளத்தில் செய்த காரியங்களை இந்தச் சின்ன கட்டுரைக்குள் கொண்டுவருவது சாத்தியமற்றது என்பதால், முன்னதாக நீதிக் கட்சி வடிவிலும் பின்னதாக திராவிடக் கட்சிகளுக்குப் பின்னின்றும் செய்த மிக முக்கியமான மாற்றங்களை மட்டும் இங்கே தருகிறேன்.
*நீதிக் கட்சி கொண்டுவந்த முக்கியமான 10 அரசாணைகள், சட்டங்கள்*
■ நாட்டிலேயே முன்னோடியாகப் பெண்களுக்கு வாக்குரிமை (10.05.1921).
.■ பஞ்சமர் என்ற சொல் நீக்கி ஆதிதிராவிடர் என்றழைக்கும் அரசாணை (25.3.1922).
■ கல்லூரிகளில் எல்லாத் தரப்பு மாணவர்களையும் சேர்க்க குழுக்கள் அமைக்கும் அரசாணை (20.5.1922). கல்வி மறுக்கப்பட்ட பிராமணரல்லாத குழந்தைகளைத் தொடக்கப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை (21.6.1923). புதிய பல்கலைக்கழகம் காண சட்டம் இயற்றப்பட்டது. பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக இது காரணமாயிற்று.
.தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்ப்பதற்கான நடவடிக்கை (24.9.1924).
.குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டு, தேவரடியார் என்று முத்திரை குத்தும் முறைக்கு முடிவுகட்டும் சட்டம் (1.1.1925).
.கோயில்களில் கொள்ளையை முடிவுக்குக் கொண்டுவர இந்து சமய அறநிலையச் சட்டம் (27.01.1925).
.சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பிராமணரல்லாத மாணவர்களைச் சேர்ப்பதற்கான உத்தரவு (15.9.1928).
.எஸ்.முத்தையா முதலியாரின் முயற்சியால் முதல் இடஒதுக்கீட்டுச் சட்டம் (13.9.1928). வகுப்புவாரி ஒதுக்கீட்டுக்கான அரசாணை (27.2.1929).
*சமூகமாற்றத்துக்கு அடித்தளமிட்ட கல்வி, சமூக நலத் திட்டங்கள்*
கல்லூரி முதல்வர்கள் எல்லாம் பிராமணர்களாகவே
இருந்த நிலையில்,
பிராமணர் அல்லாத மாணவர் சேர்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருந்த காலகட்டம் அது;
பனகல் அரசர் என்ன செய்தார்?
ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்குக் குழுக்கள் அமைக்க உத்தரவிட்டார்.
மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் எனும் நடைமுறையை நீக்கினார்.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த மருத்துவத் துறையை
இந்தியமயமாக்கிய பெருமையும் நீதிக் கட்சி முதலமைச்சர்
பனகல் அரசரையே சேரும்.
சென்னை மாநிலக் கல்லூரி சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300,
தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாயனாருக்கு மாதச் சம்பளம் ரூ.81 என்றிருந்தது.
இந்த பேதம் நீக்கப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் படிப்பதற்குத்தான் வழி இருந்ததே தவிர, தமிழ் படிக்கக் கதவு அடைக்கப்பட்டது.
நீதிக் கட்சிப் பிரமுகர்கள் ஆர்.வெங்கடரத்தினம் நாயுடு, டி.என்.சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் போன்ற தலைவர்கள் போராடிப் போராடிதான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதற்கு வழிவகுத்தனர்.
பிட்டி. தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான்,
1921-ல் பள்ளிகளில்
இலவச நண்பகல் உணவு அளித்தார்.
இதற்காக
சென்னை மாநகராட்சிப் பணம் செலவழிப்பதை
நகராட்சி சட்டத்தைத் திருத்தி மாகாண அரசே ஏற்றுக்கொண்டது.
இதன் காரணமாகப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
இன்னும் ஒரு குறிப்பிடத் தகுந்த தகவல் உண்டு.
இலவச இரவுப் பள்ளிகள் நடத்த முன்வந்தால், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைப்பாடுதான் அது.
பகல் பொழுதில் பணியாற்றச் செல்வோர் இரவில் படிக்கும் ஒரு வாய்ப்புக்குத் கதவைத் திறந்துவிட்டவர் நீதிக் கட்சித் தலைவர் பிட்டி. தியாகராயர்தான்.
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி சம்ஸ்கிருதக் கல்வி நிலையமாக இருந்ததை மாற்றி, தமிழும் சொல்லிக்கொடுக்கப்பட ஆவன செய்தார் நீதிக் கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர்செல்வம். பிராமண மாணவர்கள் மட்டும் பயன் கண்ட ராஜா மடம், ஒரத்தநாடு விடுதிகள் மற்றவருக்கும் திறந்துவிடப்பட்டன. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 10-ம் வகுப்புத் தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதேபோல, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் அரைச் சம்பளம் கட்டினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமையை நிலைநாட்ட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட உத்தரவிடப்பட்டது.
பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காவிட்டால் பேருந்துகளின் உரிமம் ரத்துசெய்யப்படும் என்று ஆணையிட்டு, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஊரிலிருந்து பள்ளிகளை நோக்கிச் செல்ல வழிவகுத்தவர் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன்.
தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணையிட்டவர் முன்னோடிகளில் ஒருவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரன்.
தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதித் தனி அலுவலர்கள் நியமனம். தனி அலுவலர் என்பது ‘லேபர் கமிஷனர்’ என்று மாற்றம். இம்மக்களுக்கு 7 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டது. குறவர்கள் சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2,776 கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியோருக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டன. மீனவர் நலன் காப்பதற்காக ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது. இதேபோல கள்ளர் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது.
*திராவிடக் கட்சிகள் முன்னெடுத்த பெரும் மாற்றத்துக்கான நகர்வுகள்*
திமுகவின் முதல் முதல்வரான அண்ணா மிக விரைவில் காலமாகிவிட்டதால், இரண்டாண்டுக்கும் குறைவாகவே ஆட்சியில் இருந்தார். எனினும், திராவிடக் கட்சிகள் செல்ல வேண்டிய திசையைச் சுட்டும் வகையில், நான்கு முக்கியமான முடிவுகளை அவர் முன்னெடுத்தார்.
1. சடங்குகள், தாலி மறுத்து நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்களுக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம். 2. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம்.
3. தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை; தமிழ், ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழி என்ற இருமொழிக் கொள்கை முடிவு.
4. அரசு அலுவலகங்களில் எந்த மதம் தொடர்பான கடவுள் படங்களும் உருவங்களும் இருக்கக் கூடாது என்ற ஆணை.
(# பதிவர் பெயர் தெரியவில்லை. பதிவர் இக்கட்டுரையை படித்தால் பின்னூட்டமிடவும்..)
0 comment

Wednesday, 31 March 2021

தி மு க இந்துக்களின் எதிரியா?

 திமுக இந்துக்களின் எதிரி?????

திமுகவா இந்திய மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்தது?


திமுகவா தமிழ் நீஷ பாசை என்று சொன்னது?


திமுகவா கோவில்களில் சமஸ்கிருத மந்திரம் மட்டும் ஓதியது? தமிழை கோவில்களில் தடை செய்தது??


திமுகவா தமிழில் தேவாரம் பாடிய ஓதுவார்களை கோவிலுக்குள் வைத்து தாக்கியது? நுழைந்த நந்தனை உயிரோடு எரித்தது??


திமுகவா தீண்டாமையைக் கடைபிடிக்கச் சொன்னது?


திமுகவா தீண்டாமையைக் கடைபிடிக்காதே என்று சொன்ன இராமானுஜரை கொல்லத் துடித்தது?? மைசூருக்கு விரட்டியடித்தது?


திமுகவா முடிசூடும் பெருமாள் என உயர் தொணியில் பெயர் இருப்பதால், முத்துக்குட்டி என மாற்று என்று அய்யா வைகுண்டரை பெயர் மாற்றச் சொன்னது. அதற்காக சிறையில் அடைத்தது?


திமுகவா வள்ளலாரை 

வைதீக வெறிக்கு எதிராகப் பேச வைத்தது?


திமுகவா உங்கள் சாஸ்திரங்களை குப்பையில் தூக்கி வீசுங்கள் என்று சுவாமி விவேகானந்தரை சொல்லச் சொன்னது?


திமுகவா நாமம் போடும் வைணவரை திருநீறு பூசக்கூடாது என்று சொன்னது?


திமுகவா திருநீறு பூசும் சைவரை நாமம் போடாதே என்று சொன்னது?


திமுகவா ஸ்ரீரங்கம் கோவில் யானைக்கு நாமம் போடுவதா? திருநீறு பூசுவதா என வழக்கு நடத்தியது?


திமுகவா இந்து மக்களை கோவில் கருவறைக்குள் விடாமல் தடுத்தது?


திமுகவா அனைவரும் அர்ச்சகராகக் கூடாது எனத் தடுத்தது?


திமுகவா இட ஒதுக்கீட்டை தடுக்க முயல்கிறது?


திமுகவா பிற்படுத்தப் பட்டோருக்கு நீதி வழங்கிய மண்டல்கமிசனுக்கு எதிராக ரதயாத்திரை நடத்தியது?


திமுகவா குப்புசாமியை குப்பா என்றும் , மாடசாமியை மாடா என்றும் ஒருமையில் அழைத்தது?


திமுகவா மருத்துவம் படிக்க விடாமல்

2017- அரியலூர் அனிதா

2018- திருச்சி சுபஸ்ரீ

2018- விழுப்புரம் பிரதிபா


2019- தஞ்சை வைஷ்யா

2019- திருப்பூர் ரிதுஸ்ரீ

2019- விழுப்புரம் மோனிஷா


2020- கோவை சுபஸ்ரீ

2020- மதுரை ஜோதிஸ்ரீ துர்கா

2020- அரியலூர் விக்னேஷ்

2020- தர்மபுரி ஆதித்யா

2020- திருச்செங்கோடு மோதிலால் ஆகிய இந்து மாணவ-மாணவிகளைக் கொன்றது?


இதையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளாக செய்துவிட்டு,

இதை சரிசெய்ய முயன்ற திமுகவை இந்துக்களின் எதிரி என்கிறார்கள்.


திமுக ஒன்றே குலம். ஒருவனே தேவன் என்றது. திமுக இந்துக்களுக்கு மட்டுமல்ல எல்லா மதங்களுக்கும் நண்பன் தான்.


இந்துக்களின் எதிரி சங்கிகள் தான். இந்துத்வா தான்.

இந்து வேறு

இந்துத்வா வேறு.

இரண்டுக்கும் ஒரே வேறுபாடு தான்.

காந்தி இந்து

கோட்சே இந்துத்வா.

__----*----------------------*---------

(ஆசிரியர் பெயர் தெரியாது. சமூக ஊடகங்களில் வந்தது )

Tuesday, 23 March 2021

2021 தமிழகத் தேர்தல் -- யாருக்கு வாக்கு அளிக்க கூடாது?


 தமிழ் நாடு சட்டசபை தேர்தல்  2021 ,தமிழகத்தின் ,தமிழ் இனத்தின் வாழ்வா சாவா போராட்டம் என்றால் அது மிகையாகாது .தமிழக மக்கள் முன் தெளிவான  3 தேர்வுகள் உள்ளன .

1) தமிழ் இனத்தை ,பண்பாட்டை ,மொழியை ,பொருளாதார வாய்ப்புகள் எல்லாவற்றையும் அழிப்பதை வெளிப்படையான கொள்கையாக அறிவித்து வாக்கு கேட்கும் ஆரிய  மலர் கட்சியும் ,தமிழ் இனத்தை பலியிட்டு ,சுய லாபம் தேடும் ஒரு இலைக்கட்சி கூட்டு .

2)தமிழர்களை ஆரிய பேயிடமிருந்து காப்பாற்றும் பலமுள்ள திராவிடப் பேய் கட்சி கூட்டு .

3)தமிழ் தேசியம் பேசும் ,ஆட்சியில் முன் அனுபவமில்லாத ,நாம் தமிழர் கட்சி .

இதில் யாருக்கு வாக்கு போடக்கூடாது என்பது வெகு முக்கியமானது .

-----------------------------------------------------------------------------------------------------------------------

தமிழகம் பாஜகவை அதன் கூட்டணியை ஏன்_நிராகரிக்க_வேண்டும்..

#காரணம்_1

பாஜக தமிழர்களுக்கான கட்சியல்ல..! அது தமிழரல்லாத பார்ப்பனர்களின் நலன் காக்கும் கட்சி..!!

#காரணம்_2

பாஜகவின் தேசிய கலாச்சாரம் தமிழர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதில்லை..!!

#காரணம்_3

பாஜக தமிழரல்லாத வட இந்தியர்களின் வாழ்வியலை முன்நிலைப்படுத்துகிறது..!!

#காரணம்_4

தமிழர்களிடம் வழிபாட்டு முறையில் வேறுபாடுகள் இருந்தாலும், நம் வாழ்வியலில் வேறுபாடுகள் இல்லை. பாஜக அதில் வேறுபாட்டை விதைக்க முனைகிறது..! அதை தமிழகம் ஒருநாளும் ஏற்காது..!!

#காரணம்_5

பாஜக முன்வைக்கும் தேசியம் இந்து தேசியம். தமிழகம் மதவழி தேசியத்தை ஒருநாளும் ஏற்காது..!!

#காரணம்_6

பாஜகவின் மொழிக்கொள்கை தமிழை மூன்றாம் தர மொழியாக்கி இந்தியை, சமஸ்கிருதத்தை முன்நிறுத்துகிறது..!! தமிழர்கள் தங்கள் மொழியை விழியாக கருதுகின்றனர்..!

#காரணம்_7

பாஜக மக்களின் ஒற்றுமையை விரும்பாத கட்சி..! தமிழகமோ யாதும் ஊரே, யாவரும் உறவே..! ( கேளிர் ) என்ற உயரிய கொள்கையை உலகிற்கு அளித்த மண்..!

#காரணம்_8

பாஜகவின் தேசிய முழக்கத்தில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது..! தமிழர்களின் ஆளுமைகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றனர்..! 

#காரணம்_9

பாஜகவின் மேட்டிமை தன்மையை சுயமரியாதையுள்ள தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அக்கட்சி உயர்சாதியினரின் நலன் சார்ந்து மட்டுமே சிந்திப்பதால் சமூக நீதி மண்ணான தமிழகத்தில் பாஜகவால் வேர்ப்பிடிக்க இயலாது..!!

#காரணம்_10

தமிழர்களை, தமிழ் மொழியை, தமிழரின் பண்பாட்டை, அவர்தம் கலாச்சாரத்தை தொடர்ந்து அவமதித்து வரும் பாஜகவை தங்களுக்கான இயக்கமாக தமிழர்களால் ஏற்க முடியாது.. !

(இதன்  ஆசிரியர் பெயர் தெரியாது.நல்ல  கருத்துக்களுக்காக பகிர்கிறேன் )


Sunday, 21 February 2021

அர்ப்பணிப்பின் சிகரம் சாரா டக்கரின் கதை


 பாளையங்கோட்டைக்குப் போனீர்கள் என்றால்  அங்கு 

சாரா டக்கர் கல்லூரி, சாரா டக்கர் ஹையர்  செக்கண்டரி ஸ்கூல்,

சாரா டக்கர் டிரெய்னிங் ஸ்கூல் ...என்ற பலகைகளைப் பார்க்கலாம்..

உங்களுக்கு தெரியாமலும் இருக்கலாம்..இங்கிலாந்து தேசத்தில் இரண்டு கால்களும் முடமான, தன் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாதபடி,அடைக்கப் பட்டிருந்த,ஒரு பெண் இருந்தாள்..அவள் பெயர் சாரா டக்கர்.

அவளால் ஒன்று தான் செய்ய முடியும்.ஒரு சாதாரண வீல் சேர்ல ..ஆலயத்துக்கு செல்வாள்.அப்போல்லாம் இப்போ உள்ள மாடர்ன் வீல் சேர்

கிடையாது..

ஒரு நாள் தென்னிந்திய மிஷனரி ஜான் டக்கர் (சாரா டக்கரின் சகோதரர்)

அந்த ஆலயத்தில் பேசினார்..

தென் இந்தியாவில் பெண் பிள்ளைகள் படிக்க முடியாத 

சூழ்நிலைகளையும், சமுதாயக் கட்டுப்பாடுகளையும், பெண்களை சிறு வயதிலேயே  கோயிலுக்கு பொட்டுக் கட்டி, விட்டு வாழ்நாளெல்லாம் விபச்சாரி

ஆக்கப் படுகிறார்கள் என்று அழுகையோடு சொன்னார்..பெண்கள் படிப்பது கேவலம் என்று கருதுகிறார்கள் என்றார்..நொறுங்கிய மனதுடன்.....

வீட்டுக்கு வந்தாள் சாரா.. அவளுக்கு 20 வயது இருக்கலாம்..அவளின் அப்பாவின் பெயர் ..டக்கர்..

 அவள் ஆண்டவரிடம் சொன்னாள்.."ஆண்டவரே எனக்கு இந்தியாவுக்கு போக ஆசையாய் இருக்கிறது.. ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள் என அந்தப் பெற்றோரின் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும் போல் இருக்குது .. அறிவுக் கண்ணைத் திறந்தால் தானே ஒளி வரும்"

அவளுக்கு ஒன்று தோன்றியது..அவள் இந்தியாவைப் பார்த்ததில்லை..

திருநெல்வேலி மக்களைப் பார்த்ததில்லை..

திருநெல்வேலி மக்களுக்காக ஏங்கினாள்.அவள் உறவினரிடம்  இது பற்றி சொன்னாள்..அவள் தன் பிறந்த நாளை பரிசுகள் வாங்கி கொண்டாடவில்லை..

அதற்கு பதிலாக பணமாகத் தாருங்கள் என்று பணத்தை சேர்த்தாள்....

தனது தோழிகளிடம் இருந்து நன்கொடையாக பெற்ற 200 பவுன் நகைகளுடன் தனது 100 பவுன் நகைகளையும் சேர்த்து,ஒரு நாள் அந்த மிஷனரி ஜான் டக்கருக்கு பணத்தை அனுப்பி வைத்தாள்..சாரா....

அதில்  உருவாகியது தான் சாராடக்கர் ..ஸ்தாபனங்கள்..

இலவசமாகவே கல்வி கற்றுக் கொடுக்கப் பட்டது. 

இன்று 4000 பிள்ளைகள் படிக்கும் பெரிய ஸ்கூலாக

கல்லூரியாக கம்பீரமாக நிற்கிறது..

அவள் இந்தியாவுக்கு வரவில்லை.திருநெல்வேலிக்கும் வரவில்லை.

அதில் படிக்கும் ஒவ்வொருவரும், சொல்வது "நான் சாரா டக்கர்  மாணவி " என்று பெருமையாகச் சொல்லுகிறார்கள்..

அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்.

(தோழர் பீர் முகமது அவர்கள் முகநூலில் இருந்து)

----------------------------------------------------------------------------------------------------------------------------

சாரா டக்கர் கல்லூரி தான் தென் இந்தியாவின் முதல் பெண்கள் கல்லூரி .1895 ல் நிறுவப்பட்ட ஒரு சிறு பெண்கள் பள்ளி வளர்ந்து ஒரு கல்லூரியாக நம் முன் நிற்கிறது .கல்வி தர மறுத்த இந்து சமூக சூழ்நிலைகளை எதிர்த்து ,உடல் ஊனமுற்ற ஆங்கிலேய சகோதரி சாரா டக்கரின் மனத்தை போற்றுவோம் .

Monday, 15 February 2021

காதலர் தினத்திற்கு' வேலன்டைன் நாள் ' என்று எப்படி பெயர் வந்தது?

 


 

பிப்ரவரி மாதம் 14ஆம் நாள் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ' வேலன்டைன் நாள் 'என்று கூறுவார்கள். இதை ஏன் அப்படி கூறுகிறார்கள்?

 

சமீபத்தில் வாட்ஸ் அப்பில், கீழ் கண்ட ஒரு தகவலை  பார்த்தேன். அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

                                                       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 

 பிஷப் *வேலன்டைன்* என்பவர் ரோம் நகரிலிருந்து 96 கிலோ மீட்டர் துரத்தில் உள்ள இந்தெர்மனா என்று பட்டணத்தில் வாழ்ந்தார். இவர் வாழ்ந்த காலத்தில் *கிளாடியஸ் கோதிகஸ்* என்ற அரசர் ரோமை ஆண்டு வந்தார். இவர் கிறிஸ்தவர்களை துன்புறுத்தி வந்தார்.       

                                             இவர் ஆட்சி காலத்தில் வேலன்டைன் கிறிஸ்துவுக்கு உத்தமசாட்சியாய் வாழ்ந்து வந்தார். உபத்திரவபடுத்த படும் கிறிஸ்தவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து வந்தார்.

                              கிளாடியஸ் கோதிகஸ் அரசர் தன் போர்சேவகர்கள் திருமணம் செய்யக் கூடாது என்றும் திருமணம் செய்யாமல் பெண்களிடம் பிரவேசிக்கலாம் என்றும் சட்டம் கொண்டு வந்தான்.

                                    இதை எதிர்த்த வேலன்டைன் முறையாக திருமணம் செய்து வாழ வேண்டும் என்றுச்சொல்லி போர் சேவகர்களுக்கு திருமணம் செய்துவைத்தார்.

                    இதனை அறிந்த கிளாடியஸ் கோதிகஸ் அரசர் வேலன்டைனை சிறையில் அடைத்தார். சிறையில் அடைக்கப்பட்ட வேலன்டைன் தன்னுடன் சிறையில் இருந்த 46 நபர்களுக்கு இயேசுவை அறிவித்து ஞானஸ்நானம் கொடுத்தார்.

                         இந்த செய்தி கிளாடியஸ் கோதிகஸ் அரசர்க்கு அறிவிக்கபட்டது. அரசர் வேலன்டைனை கிறிஸ்துவை மறுதலிக்கவும் ரோம தேவதைகளை வணங்கவும் கட்டளையிட்டான்.

                                          வேலன்டைன் அதை ஏற்க மறுத்து அரசர்க்கு இயேசுவை அறிவிக்க முற்பட்டார்.இதனால் கோபம் அடைந்த அரசர் வேலன்டைனை பிப்ரவரி 14-ந்தேதி கொலை செய்தார்.

                                 வேலன்டைன் பரிசுத்தமான திருமண உறவுதான் சரி என்றும் உறுதியான விசுவாசத்தின் நிமித்தமும் கிபி 270 பிப்ரவரி 14ல் மரித்தார்.

                                      பிப்ரவரி 14 வேலன்டைன் கிறிஸ்துவின் அன்பிற்க்காய் அவருடைய பரிசுத்த கட்டளைக்காய் உயிர்விட்டு, இரத்தசாட்சியாய் மரித்த நாளே ஆகும். மற்றபடி இந்த நாளுக்கும் காதலர்களுக்கும் எந்த சம்பந்தமுமே யில்லை.

                                          கிறிஸ்தவர்களே பிப்ரவரி 14ல் காதலர் தினம் கொண்டாடி இந்த பரிசுத்தவான் வரலாற்றை களங்கப்படுத்தாதீர்கள்.

                                                       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 

இதைக்குறித்து, என்சைக்கிளோபெடிய பிரிட்டானிகா என்ன சொல்கிறது? இந்த கதை உண்மை தானா? என்று வாசித்து பார்த்தேன். வேலன்டின் நாளை குறித்து பல விதமான கதைகளும், மரபுகளும் உள்ளன, என்று அதில் போடப்பட்டுள்ளது. இந்தக் கதை உண்மை தானா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.