Friday 22 September 2017

'திராவிடம் 'என்ற பெரும் சூழ்ச்சி !

திராவிடம் 'என்றால் வடமொழியில் 'தமிழ் 'என்று பொருள் .உலக சரித்திரத்தில் தமிழின் ,தமிழர்களின் பங்கை மறைக்க பலவிதமான கற்பனை பாத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன .அதில் முக்கியமானது 'திராவிடம்' என்ற ஒரு சொல் .மற்ற சொற்கள் -கிரந்தம் ,தேவநாகரி ,பாலி ,பிராமி என்பவையாகும் . 'திராவிடம்' என்ற ஒரு சொல்லைக்கொண்டு 'தமிழ் 'என்ற சொல் எங்கும் வராமல் பார்த்துக்கொண்டார்கள் .உலக மொழிகளை பட்டியலிடும்போது ,சிறிய மொழிகளின் பெயர்களெல்லாம் மொழிக் குடும்பங்களின் பெயராக வரும் (.உ -ம் )துப்பியன் ,டை -கடை என்றெல்லாம் மொழிக் குடும்பங்கள் உள்ளன .ஆனால் 'தமிழ் மொழி குடும்பம் 'என்று இல்லை .அது இல்லாமல் இருப்பதற்காக கண்டுபிடிக்க பட்ட கற்பனை சொல் தான் 'திராவிடம் 'என்ற சொல்.
மிகச்சிறிய மொழிகளெல்லாம் பெரிது படுத்தப்பட்டு ,`மிக பெரிய மொழியான தமிழை சிறுமைப்படுத்த பயன் படும் மகா சொல் 'திராவிடம்' .எடுத்துக்காட்டாக,விக்கிப்பீடியாவில் தமிழை பற்றிய பகுதி இப்படி சொல்கிறது .'Tamil (English: /ˈtæmɪl/தமிழ் Tamiḻ [t̪ɐmɨɻ]About this sound pronunciation ) is a Dravidian language .....' இது போல் கன்னட மொழியை பற்றி வாசியுங்கள் .தமிழில் இருந்து தோன்றியது கன்னடம் .ஆனால் 'தமிழ்' என்று ஒரு சொல் கூட வராமல் ஒரு முழு பக்கம் கன்னடத்தை பற்றி வாசிக்கலாம் .கன்னடம் ஒரு திராவிட மொழி என்று ஆரம்பிக்கிறது அந்த கட்டுரை !
அது போல் ,முருகன் 100% சுத்த தமிழ் கடவுள் .முருகனை திராவிட கடவுள் என்கிறது சித்தா .காம் என்ற மலையாள வலைத்தளம்! சித்த மருத்துவத்தை 'திராவிட கலை 'என்கிறது அது !.ஆக தமிழின் பங்கை மறைக்க கண்டுபிடிக்கப்பட்ட பெருங் கருவி இந்த சொல் .'திராவிடம்' என்று வருமிடமெல்லாம் 'தமிழ் 'என்று போட்டு பாருங்கள் ,நான் சொல்வது நன்கு புரியும் . ஓவ்வொரு முறை 'திராவிடம் 'என்ற சொல் பயன் படும் போது 'தமிழ் 'என்ற சொல் அமுக்கப்படுகிறது !
இந்த 'திராவிடம் 'என்ற சொல் எப்படி தோன்றியது என்பது எல்லாம்முக்கியமல்ல .எதற்காக உருவாக்கப்பட்டது என்பது தான் முக்கியம் . தமிழையே ஒரு திராவிட மொழியென்று அலட்சியமாக சொல்ல அந்த சொல் பயனாகிறது.அதாவது நேற்று தோன்றிய ஒரு மொழியும் ,கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடியின் மொழியும், ஒரே அடைப்புக்குள் 'திராவிட மொழி 'என்று சொல்லும் வசதியை இந்த ஒரு சொல் தருகிறது .
தமிழர்கள் யாவரும் இந்த சூழ்ச்சியை உணர்ந்து ,'திராவிடம் 'என்ற சொல்லை தவிர்த்து ,பதிலாக 'தமிழ்'என்ற சொல்லை பயன் படுத்துவது நல்லது .தமிழ் மொழிக் குடும்பம் ,தமிழர் நாகரிகம்,தமிழ் ....என்றே சொல்லவேண்டும் என்று சபதமேற்போம்
.'அச்சம் என்பது மடமையடா !அஞ்சாமை தமிழனின் உடமையடா !'என்று பாடுவோம் !இவ்வாறு நாம் கூறுவதால் நாம் எந்த வகையிலும் கன்னடர்களுக்கோ ,தெலுங்கர்களுக்கோ ,மலையாளிகளுக்கோ பாதிப்பு ஏற்படுத்துவதில்லை .அவர்கள் யாரும் தம்மை திராவிடர் என்று வாய் தவறிக் கூட சொல்வதில்லை .கர்நாடகாவிலோ ,கேரளாவிலோ ,ஆந்திராவிலோ திராவிட கழகங்கள் இல்லை .அவர்கள் அவர்கள் தாம் ;நாம் நாம் தான் !
' திராவிடர்' என்ற சொல் ஒழிந்தால் அவர்களுக்கும் நல்லது தான் .ஏனென்றால் ,அவர்களுடைய தனி மொழி அடையாளங்கள் வலுப்பெறும் .அவர்களுடைய கலாச்சாரம் வலுப்பெறும் .சமுதாயத்தில்அவரவர் பங்கு அங்கீகரிக்க படும் .தமிழ் சமுதாய வளர்ச்சிக்கும் இது நல்லதாகும் .'இந்தி எதிர்ப்பு ' போன்ற பொது பிரச்சனைகளில் அனைவரும் ஒன்று பட்டு போராடலாம் .தடையில்லை .

No comments:

Post a Comment