1710 ஆவது ஆண்டில் இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு அருட்பணி ஆற்ற வந்த கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி ,தமிழரோடு தமிழராக கலந்து ,தன் பெயரையயே 'வீரமாமுனிவர் 'என்று தமிழாக்கியவர் .தமிழில் கற்று தேர்ந்து ,பல நூல்களை இயற்றியவர் .மொத்தம் இவர் எழுதிய தமிழ் நூட்கள் 23 ஆகும் .
அருட்பணிக்காக தூர தேசத்திலிருந்து வந்த இவரே நம் தமிழ் மொழியை கற்று தேர்ந்து ,நூட்கள் எழுதியிருப்பது அவரின் மதிப்பீடுகளை காட்டுகிறது .ஆனால் ,இன்று பிழைப்பு தேடி இங்கு வந்திருக்கும் நம் நாட்டு வட இந்தியர்கள் ,தமிழைக் கற்காமல் ,தமிழர் பணத்தை மட்டும் குறி வைப்பது வேதனை அளிக்கிறது .
காஜல் அகர்வால் என்ற ஒரு தமிழ் பட நடிகைக்கு தமிழில் அடிப்படை பேச்சு கூட வராது .ஆனால் கோடிக்கணக்காக தமிழர் பணத்தை சம்பாதிக்கிறார் .இந்த நிலைக்கு முக்கிய காரணம் ,தமிழர்களின் கண்டு கொள்ளாத குணம் தான் .இந்தி படங்களில் நடிக்க செல்லும் நம் நடிகைகள் எல்லோரும் இந்தி மொழியை கற்றுக் கொண்டு தான் நடிக்க முடியும் .நம் ஊடகங்களும் அவர்களுக்கு வளைந்து கொடுத்து ஆங்கிலத்தில் உரையாடுவது கொடுமை .தமிழ் பட தயாரிப்பாளர்கள் ,நடிக ,நடிகர்கள் கட்டாயம் தமிழ் அறிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனையிட வேண்டும் .தமிழ் நாட்டிற்குள் நுழையும் எல்லோரும் தமிழ் கற்க வேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்க்க வேண்டும் .இதுவே தமிழை அழிவினின்று காக்கும் உபாயமாகும் .
No comments:
Post a Comment