Monday, 25 March 2019

துக்கடா துணுக்குகள் !

'கரவல் ' என்றால் என்ன ?
நீங்கள் உங்கள் மனைவிக்கு ஒரு தங்க மோதிரம் வாங்கி வந்து ,கொடுக்கும் முன் மனம் மாறி நீங்களே வைத்துக் கொள்கிறீர்கள் ! அது தான் கரவல் !
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அவன் 'அசகாய சூரன் 'என்பார்கள் !அப்படி என்றால் என்ன பொருள் ?

‘வேறுதுணைவேண்டாதுபகைவரைவெல்லும்வீரன்’
என்று பொருள் ! அதாவது தனி ஒருவன் அவ்வளவு பலம் கொண்டவன் ! படங்களில் வரும் எம் .ஜி .ஆர் போல !
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------'உக்கடம் 'என்பது கோவையில் ஒரு இடம் .அதன் பொருள் என்ன ?'உக்கடம் ' என்றால் 'கண்காணிப்பு கோபுரம் 'என்று பொருள் !
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
'அழகி 'கேள்விப்பட்டிருப்பீர்கள் .'அழகியன்,அழகியள் ' ?
அவ்வாறும் சொற்கள் உள்ளன தமிழில் !
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காக்கா கடிக்குமா ?கடிக்காது ,கொத்தும் ! பின்னர் ,'காக்கா கடி ' என்று சொல்வதேன் ?
ஒரு தின்பண்டத்தை ஒரு கடி கடித்துவிட்டு ,மற்றவருக்கு காக்கா போல் பகிர்வது ,'காக்கா கடி'யாகும் !

பெயர்களில் "தமிழ் சமஸ்கிருத" மொழியின் அர்த்தங்கள்

‎குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்களில் "தமிழ் சமஸ்கிருத" மொழியின் அர்த்தங்கள்???

*பிந்து; விந்து,
*ரோகிணி; விபச்சாரி,
*ராகுல்; திருடன்,
*மாயா/மாயாவதி; மந்திரவாதி,
*பிரேமா; பிரம்மை,
*தர்ஷினி; ராணியாரின் அடிமை,
*சுபிக்ஷா; பைத்தியக்காரி,
*பிரியா; பிச்சை,
*சுவேதா; சோம்பேரி,
*தஷ்வந்த்; துரோகி,
*ஜேக்கப்; வித்தைக்காரன்,
*நீலாவதி; பாம்பு,
இன்னும், பல... இவையெல்லாம் வட மொழி பெயர்கள், இவற்றின் அர்த்தம் தமிழில் முற்றிலுமாக மாறுகிறது, அவற்றின் அர்த்தம் நீங்கள் அறிந்த பிறகு, அந்த நிலை சொல்லில் அடங்காதவை...

*இராவணன்; வீரவணன்,
*யாத்திரிகன்; காதலன்,
*சுரேஷ்; சுபிக்ஷம்,
*சுடர்; தோரணை,
*மாரி; மழை,
*ரேவதி; மங்கை.
*கனிமொழி; பழங்களின் அரசி/பழங்களை புசிப்பவள்,
*திலோத்தமை; சேவகி,
*பாண்டியன்; பண்பானவன்,
*பாண்டியம்மாள்; பண்பானவள்,
*கண்ணகி; கடவுளின் கருணை,
*வள்ளி; அல்லி/யாம்பல் மலர்,
*சிந்தாமணி; கடல் முத்து,
*லட்சுமி/லக்ஷ்மி; தேவதை,
*சாமுண்டி; கடவுளின் அடிமை,
*ஆக்காஷ்; வானம்,
இவையெல்லாம் தமிழ் மொழியின் அழகிய அர்த்தமுள்ள பெயர்கள்...

பொதுவாக தமிழ் குல சமூகத்தினருக்கு தமிழ் கடவுளின் பெயர்களே வைக்கப்படுகிறது, கண்ணன். சிவன், பார்வதி, முருகன், வினாயகன், நாராயணன், அகத்தியன்,... இதுபோல...

இந்த காலகட்டத்தில் ஓரிரு வார்த்தையில் சொல்வதற்கு எளிமையான அழகான பெயர் என்றும், அந்த பெயரின் அர்த்தம் எது என தெரியாமலும் வைத்துவிடுகின்றனர், அந்த பெயரின் அர்த்தம் இதுதான் என அறிந்த பிறகு "தவம் இருந்து நான் பெற்ற செல்வத்திற்கு இப்படி ஒரு பெயரா"? என வருத்தப்படுவீர்கள்,

((பெற்றோர்கள் நீங்கள் வைக்கும் பெயரின் அர்த்தத்தை இதுதான் உன் பெயரின் அர்த்தம் என குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள், அழகிய தமிழ் மொழியில் பெயர் வையுங்கள் அந்த பெயரை பிறர் சொல்லி அழைக்கும்போது அது ஒரு வகை சுவை அடி தொண்டையில் பிறக்கும் என்றால் இதை விட அந்த பெயருக்கு வேறு பெருமை என்ன இருக்கிறது,))
நன்றி :தஞ்சை ரசிகன்‎ to உலகத் தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம்

இராவணன் தமிழ் பெயரா ?

--------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் பெயர்கள் பற்றிய பதிவை குறித்து நண்பர் குமார் காளியண்ணன் இவ்வாறாக பதிலி ட்டுள்ளார் :
"இராவணன் லட்சுமி சுரேஷ் ஆக்காஷ் போன்றவை தமிழ் பெயர்கள் அல்லவே "
பல தமிழ் பெயர்களை மூக்கை கொஞ்சம் திருகி ,முகத்தை கொஞ்சம் கோணலாக்கி ஆரியர்கள் ,அவைகள் வடமொழிப் பெயர்கள் என்று வாதிடுவார் .அப்படி தான் இந்த பெயர்களும் .அவைகள் தமிழ் தான் என்பதை உறுதி செய்ய ஒரு விதி உள்ளது . அதை அறிய http://sanskritandtamil.blogspot.com/2017/12/blog-post.html என்ற பதிவை வாசிக்கவும் .
இந்தப் பெயர்களின் தமிழ் வேர்ச்சொல் இதோ :
1)இராவணன் =இரா (இல்லாத )+வண்ணன் ( உருவம் ) =உருவில்லா கடவுள்
2)லட்சுமி =இலக்குமி =செல்வ மகள்
3)சுரேஷ் =சுரேசன் =முருகன்
4)ஆகாஷ் =ஆகாசகங்கை =வான் வெளி ...
எல்லாப் பெயர்களையும் இவ்வாறக கண்டுபிடித்து விடலாம் .

பாவம் !பசி தாங்க மாட்டாங்க !

------------------------------------------------------------------------------------------
தினமும் அவன் பசியில் ,'அம்மா !ஏதாவது போடுங்கம்மா !
சாப்பிட்டு 3 நாள் ஆச்சு !'கத்துவான் .
பெரிய வீட்டில் உள்ளிருந்து ஒரு பதில் குரல்
'ஒண்ணும் இல்லை !போ !போ !
காலையில முழிச்சதும் இவன் குரல் தான் !சே !'
பட்டுடுத்து வயறு நிரம்பிய தம்புராட்டி
எரிச்சல் பட்டாள் !திட்டி தீர்த்தாள் !
இன்று ஒரு பெரும் மாற்றம் .
அவன் கையில் சாப்பாடு பொட்டலங்கள் !
ஆனால் தம்புராட்டி சாப்பிட்டு 9 நாள் ஆச்சு !
மாடியில் அவள் ,மடியில் பிள்ளைகள் !
எல்லோரும் பட்டினியில் !
நீந்தி அவன் சென்று பொட்டலத்தை கொடுத்தான் அவன் !
'பசி தாங்க மாட்டீங்கம்மா ,நீங்களெல்லாம் !
சாப்பிடுங்கம்மா !புள்ளைக்கும் கொடு தாயீ !
நிவாரண முகாம்ல எனக்கு கொடுத்தாங்க !
என்றான் கண்ணீர் மல்க அவன் !
தமிழ் தெரியாது என்று எப்போதும் சொல்லும்
தம்புராட்டிக்கு இன்று மட்டும்
தமிழ் தெரிந்தது !தமிழனும் தெரிந்தான் !
மழை வெள்ளத்தில் மூழ்கிய கேரளத்தை விட்டு
தப்பிக்காத அந்த தமிழன் தெளிவாய் தெரிந்தான் !
அவனைப் பொறுத்த வரை அன்றும் பட்டினி தான் !
சுற்றி ஓடும் தண்ணீரை ,ஒரு மடக்கு குடித்தான் !
கவிஞர் ஆழிமலர்

Monday, 4 March 2019

தமிழ்த் தாயின் புலம்பல் !

ஒரே பயமாக இருக்கிறது !
நாளுக்கு நாள் அது அதிகரித்துக் கொண்டிருக்கிறது !
என்ன ஆகுமோ தெரியவில்லை !
மயக்கமாக வருகிறது !
மனமெல்லாம் ஒரு சஞ்சலம் !
நினைக்கவே இல்லை !
என் சொந்த பிள்ளைகள் தான் !
 இப்படி செய்வார்களா ?
என்னிடம் பால் குடித்தவர்கள் தான்  ,
என்னால் வளர்ந்தவர்கள் தான்  ,
என்னை அழிக்க நினைப்பார்களா ?
சே !இருக்காது !
'வெறும் மனப் பிரமையாகத்தான் இருக்கும் '..
என்று கூட நினைத்தேன் !

ஆனால் ,
உற்று பார்த்தால் ....
உண்மை தான் !
அவர்கள் கைகளில் பளபளக்கும் கத்திகள் ...
எல்லாம் என்னை தாக்க !
பெற்ற தாயை தாக்க !

உண்மைதான் !
முதலில் 'நான் யார் ?'என்று
நீங்கள் கேட்பது புரிகிறது !
என்னைத் தெரியவில்லை ?
நான்,உங்கள் தாய் !
தமிழ்த் தாய் !
புலம்புவது நான் தான் !
உங்கள் தாய் தான் !

அவர்கள் கைகளில் இருக்கும் கத்திகள் ?
'ஆங்கிலம்' என்ற கூர்மையான கத்திகள் !
சொல்லுக்கு சொல்
அதைக் கொண்டு
என்னைக் குத்துகிறார்கள் !

குத்தி ,குத்தி அதை 'என்ஜாய் ' பண்ணுகிறார்கள் !
இருக்கட்டும்,இது அவர்கள் காலம்  !

அந்தக் காலத்தில்
 திரவியம் தேட வெளி நாடு
 சென்ற என் பிள்ளைகள்
தமிழை ,
தேடி  சென்ற  நாடுகளில் விட்டார்கள் !
நட்டார்கள் !
அவர்கள் மொழியை என்னில் நட வில்லை !

ஆனால் இன்று என் பிள்ளைகள் ,
அலுவல் ஆங்கிலத்தை
அங்கே  விடாமல்
 அழைத்து வந்து ,
தத்து எடுத்து
எனக்குள் நுழைத்து ,
என்னை பித்தாக்குகிரார்கள் !
அசுத்தப் படுத்துகிறார்கள் !

என் பிள்ளைகளே !
ஆங்கிலத்தில் தமிழை கலந்து
அயல் நாட்டில் போய்  பேசி பாருங்கள் !
அடியும்  உதையும் தான்
அளவின்றி கிடைக்கும் !

தமிழில்  ஆங்கிலத்தை கலந்து தமிழ் நாட்டில்  பேசி  பாருங்கள் !
பரிசும்,பாராட்டும் பலரால் கிடைக்கும் !
சே !என்ன கேவலம் !
அதுவும் நான் பிறந்த
என் தமிழ் நாட்டில்  !

எனக்கென்று பரிந்து பேச யாருமே இல்லையா ?
எங்கே என் தமிழ் பால் குடித்த   பிள்ளைகள் ?
கவி பேரரசும்,கவிக்கோவும் எங்கே  !
கண் காணும் தூரத்தில்
 கலைஞர் கூட காண வில்லையே  !
எதற்கெல்லாமோ குரல் எழுப்பும் சீமான் எங்கே ?
வைகோ ,தொல் எல்லாம் எங்கே ?

என்னை வைத்து
 இனி வாக்கு வாங்க
முடியாதென்று நினைத்தார்களோ  ?
தெரியவில்லை !
தொலைக் காட்சியும் உடகங்களும்
 ஆங்கிலதிற்கு அடிமை
 முகவர்களாக ஆகி
என்னை முற்றிலும் விலக்குவது ,
உங்களுக்கு தெரிகிறதோ ,இல்லையோ
எனக்கு தெளிவாக  தெரிகிறது !

ஒரு குவளைப் பாலிற்கு ஒரு துளி விடம் போதும் !
முற்றிலும் அழித்து அதை முழுதாய் ஒழிக்க !
நீங்களோ துளி துளியாய்
ஆங்கில விடத்தை
என் தொண்டைக் குழிக்குள் தொடர்ந்து இடுகிறீர்கள் !

'முயன்று ' என்று தமிழில் சொன்னால்  புரியாதா ?
ஏன் 'ட்ரை ' என்கிறீர்கள் ?
அப்படி சொல்லி 'முயன்று' பார்த்தீர்களா ?
அலை பேசி எண் கேட்டால்
ஒன்பது,ஆறு ,மூணு ,ஐந்து ,ஏழு ...என்று சொன்னால் புரியாதா ?
ஏன் 'நயன் ,சிக்ஸ்,த்ரீ , ......சே !

எதற்காக என்னை
திட்டம் போட்டு அழிக்கிறீர்கள்  ?
பணத்திர்க்காகவா ?
பவிசிர்க்காகவா ?
எதற்காக எனக்கு கல்லறை கட்டுகிறீர்கள் ?
எனக்கு இன்று தெரிந்தாக வேண்டும் !

கல்லறை கட்டும் பணியில்
  'கர சேவை 'செய்பவர் யார்,யார் ?

இதோ அவர்கள் பட்டியல் !
அனைத்து தொலைக் காட்சிகளும் .பதிப்புகளும் !
திரைத் துறையும் ,அதன் கலைஞர்களும் !
தின செய்தி தாள்களும் ,கல்விக்கூடங்களும் !
ஊடகங்களும் ,தொழில் நுட்பமும் !
ஆசிரியர்களும் ,மாணவர்களும் !
அரசாங்கமும் ,எதிர்க் கட்சியும் !
பணக்காரனும் ,பாமரனும் !
நீங்களும் ,உங்கள் பிள்ளைகளும் !
மொத்தமாய் சேர்ந்து ,ஒற்றுமையாய்
எனக்கு குழி தோண்டுகிறீர்கள் !
தமிழர்கள் மற்ற எல்லாவற்றிலும்
பிரிந்து இருந்தாலும்,
எனக்கு குழி தோண்டுவதில் என்ன ஒரு ஒற்றுமை !

சென்னைப் பிரளயத்தில்
இமயமாய் உயர்ந்து நின்று
எல்லோரையும் காப்பாற்றிய இளைஞர்களே !
இந்தி மிரட்டிய போது
எனக்காக போராடிய இதயங்களே !
எங்கு சென்றீர்கள் என் இன்னலான இந்த  நேரத்தில் ?
பொங்கி எழுங்கள் !

ஆங்கிலத்தை அலுவலில் மட்டும் அழுங்கள் !
இல்லத்திலே ,
உங்கள் உள்ளத்திலே ,
நான் மட்டும் ,
உன் தாய் மட்டும் ,
தமிழ் தாய் மட்டும்,
 தங்கட்டும் !
நாவில் தமிழ் மட்டும்
நடமாடட்டும் !

எனக்காகக தோண்டி கொண்டிருக்கும் ,
குழியில்
ஆங்கில மோகத்தைப் போட்டு ,
முழுதுமாய்
குழியை மூடுங்கள் !
'கல் தோன்றாக்
காலத்தில் தோன்றிய
என்னை
இன்னும் மேன்மை படுத்துங்கள் !
நான் தாய் என்றாலும் ,
கன்னித் தமிழ் தான் !

ஆங்கிலத்தை அறவே விலக்குங்கள் !
என் வலியெல்லாம் மாறும் !
வளமாய் வாழ்வேன் !
இன்னும் பல ஆயிரமாண்டு !
நானும் வாழ்வேன் !
நீங்களும் வாழ்வீர்கள் !
Photo

Tuesday, 22 January 2019

தமிழினம் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டிருக்கிறதா ?

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தக் குடியாம் தமிழ்க் குடியின் இன்றைய நிலை தான்  என்ன ?  தமிழ் இனம் வளர்ந்து கொண்டிருக்கிறதா ,இல்லை தேய்ந்து கொண்டிருக்கிறதா ?இல்லை ஏற்கனவே அழிந்து விட்டதா ?
எத்தனை தமிழர் இதை எண்ணி பார்க்கின்றனர் ? வாருங்கள் ,நாமாவது ஆராய்வோம் !
ஒரு இனம் வளர்கிறதா,இல்லை தேய்கிறதா?எப்படி அறியலாம் ?
                                                               ஒரு இனம் வளர்கிறதா ,இல்லையா என்பதை கணக்கிட முதலில் ,அதன் சிறப்பான ஒரு கால கட்டத்தை எடுத்துக்கொண்டு ,அப்போது அது என்ன நிலையில் இருந்தது என்பதை பட்டியலிடவேண்டும் .பின்னர் ,தற்போதைய நிலையை எடுத்து ஒரு பட்டியலிட வேண்டும் .இரண்டுக்கும் உள்ள வேறுபாடு ,அதன் வளர்ச்சியை அல்லது தேய்வை காட்டும் .
எல்லா மொழி இனங்களும் வளர்ச்சி அடைந்த நிலையில் இல்லை .சில இனங்கள் ,இந்த 21 வது நூற்றாண்டில் கூட பின்தங்கிய நிலையில் இருக்கலாம் .அதற்கென்று ஒரு  மொழி இருந்தாலும்  எழுத்துக்கள் இல்லாமல் இருக்கலாம் .பொருளாதார ,சமூக வளர்ச்சியில் பின்தங்கி இருக்கலாம் .இன்னும் ,ஆடை கூட அணியாத பழங்குடிகள் கூட இருக்கலாம் .
ஆனால் ,தமிழ் இனம் அப்படியல்ல  ,சிந்து சமவெளி நாகரிக காலமான கி .மு .3500 யிலே உச்சகட்ட வளர்ச்சி அடைந்த ஒரு நகர நாகரிகமாக இருந்திருக்கிறது .அதை ஒரு தள அளவு கோலாகக்  கொண்டு ,அதையும் ,தற்போதைய நிலையையும்  ஒப்பிட்டால் உண்மை நிலையை அறிய உதவுமென  நினைக்கிறன் .
அப்போதைய தமிழர் நிலை !
                                      உலகிலே தொன்மையாக கருதப்படும் நாகரிகம் 'சுமேரியன் நாகரிகம் 'ஆகும் .இந்த சுமேரியன் நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பதை முனைவர் .லோகநாதன் அவர்கள் இந்தக் காணொளியில் பதிவு செய்திருக்கிறார் .
தமிழ் -சுமேரிய உறவு
ஆக ,நாகரிகத்தின் உச்சியில் கி .மு .4000 கால அளவிலே  தமிழர்கள் இருந்திருக்கின்றனர் என்பது தெளிவு  .பின்னர் 'சிந்து சமவெளி நாகரிகம் 'அவர்கள் உயரிய நிலையை உறுதிப் படுத்துகிறது .
பண்டைய காலத்தில் எந்தெந்த கலைகளில் /ஞானத்தில் தமிழர் சிறந்து விளங்கினர் ?

  • இயல் ,இசை ,நாடகம் (வேறு எந்த மொழிக்கும் இல்லாத பெருமை )
  • நடனம் ,நாட்டியம் (உலகப்புகழ் பெற்ற பரத நாட்டியம் தமிழரயுடையதே )

  • இலக்கியம் ,இலக்கணம் (கி .மு 700 லே தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் வெளியானது )
  • வான் இயல் 
  • வாண சாத்திரம் (விண்கல ஞானம் )
  • மனையடி சாத்திரம் 
  • கணிதம் (கோடி கோடிக்கு கூட தனி பெயர் 'மஹாயுகம்'!)
  • ஜோதிடம் 
  • ஆன்மிகம் (எல்லா இந்துக் கடவுள்களும் தமிழ்க் கடவுள்களே )
  • மந்திரம் ,பில்லி ,சூனியம் போன்ற இருட்டுக் கலைகள் 
  • ஒக்கம் (யோகா )
  • சித்தம் 
  • மல் யுத்தம் ,கம்பு ,சிலம்படி போன்ற தற்காப்பு கலைகள் .
  • வாணிபம் 
  • கடல் சார் பயணம் /கடற்கலன் கட்டும் பொறியியல் 
  • மர்ம சாத்திரம் 
  • போர் இயல் (எடுத்துக் காட்டு -1அக்குரோணி =21870இரதம் +21870யானை +65610குதிரை +109350காலாள்)
  • காதல் கலை 
  • அற வாழ்வு /நன்னெறி 
  • இன்னும் பல 
தற்போதைய தமிழர் நிலை !
ஆக 7000 வருடங்கள் முன்னால் ,அவ்வாறாக நாகரிகத்தின் உச்சியில் இருந்த தமிழினம் ,7000 வருடத்தில் இன்னும் எவ்வளவு வளர்ச்சி கண்டு, இப்போது மென் மேலும் சிறந்து இருக்க அல்லவா வேண்டும் ?எல்லாக் கலைகளிலும் ,கேள்வி ஞானத்திலும் இன்னும் வளர்ந்து உலகின் முதல் இனமாக அல்லவா இருக்க வேண்டும் ?அல்லது ,குறைந்த பட்சம் அதே நிலையிலாவது இருக்க வேண்டும் அல்லவா ?
அப்படித்தான் இருக்கிறார்களா தமிழர் இப்போது ?
பண்டையக் காலத்தில் உலகெங்கும் வியாபித்திருந்த தமிழினம் ,அதன் தாய் நாடாம் இந்திய துணைக்கண்டத்தின் முழுவதும் கி .மு .3300 அளவில்  பரந்து வாழ்ந்து கொண்டு இருந்தார்கள் .இந்த உண்மை அகழ்வாராய்ச்சிகள் மூலமாகவும் ,ஆப்கானிஸ்தான் ,பாகிஸ்தான் போன்ற இடங்களில் இருக்கும் சுமார் 18000 தமிழ் இடப் பெயர்கள் மூலமாகவும் உறுதியாகிறது .
அவ்வாறு பரந்து வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள் மெதுவாக தெற்கு நோக்கி விரட்டப்பட்டு,வாழ்விடம் சுருங்கி ,சுருங்கி , தற்போது ஒரு சிறிய நிலப்பரப்பான தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .தமிழ் நாட்டின் நில பரப்பு  1,30,000 சதுர கி மி இருந்தாலும் ,அதில் தமிழர் கைவசம் எவ்வளவு உள்ளது ,தமிழரல்லாதவர் கையில் எவ்வளவு உள்ளது என்று பார்த்தால் தமிழர்கள்  அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியாது .


இதோ ,ஒரு தோராயக் கணக்கு !
  • சென்னை மாநகரின் சுமார் 75%  இடங்கள் ,சொத்துக்கள் ,வணிகங்கள் வடஇந்தியர் ,தெலுங்கர் ,மலையாளிகள் வசம் உள்ளது .இது போல கோவை ,மதுரை போன்ற தமிழ் நாட்டின் பெருநகரங்களின் பெரு முதலீடுகள் அனைத்தும் தமிழரல்லா தவர் கைவசமே உள்ளது .
  • ஊட்டி ,கொடைக்கானல் போன்ற மலைவாச ஸ்தலங்களும் அப்படியே .
  • தமிழகத்தின் தங்க வணிகமும் முற்றிலும் அயலவர் கையிலே .
  • தமிழகத்தின் பணக்கார பள்ளிகள் /கல்லூரிகள் எல்லாம் தமிழரல்லாதோர் கையில் தான் உள்ளன .
  • தமிழகத்தின் பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் அதிகமாக வடஇந்தியர்களே .
  • தமிழ் கலாச்சாரம் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி மெதுவாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படுகிறது .இந்தி திணிக்கப்பட்டு ,தமிழின் முக்கியத்துவம் கண்ணெதிரே அழிந்து கொண்டிருக்கிறது .
  • தமிழரின் மொழி ,கலாச்சாரப் பெருமைகள் மெதுவாக சுரண்டப்பட்டு சம்ஸ்கிருத பெருமைகளாக விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது .தமிழ் 'ஒக்கம் ' இந்தியாவின் யோகாவாக உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறது .இது வருடத்திற்கு சுமார் 20,0000 கோடி வருமானம் ஈட்டுகிறது .இதில் இதன் சொந்தக்காரரான தமிழருக்கு ஒரு பைசா பங்கும் இல்லை .தமிழ் அமைதியின் நிறம் காவி நிறத்தை சுரண்டி பா .ஜ .க  வெறுப்பின் நிறமாக மாற்றிவிட்டது .
  • தமிழ் நாடு கடந்த 50 ஆண்டுகளாக வேறு மொழி மக்களால் ஆண்டுகொள்ளப்பட்டிருக்கிறது .
  • எல்லையில்லா கடலை ஆண்டு கொண்டிருந்த தமிழனை இந்திய கப்பற்படை தமிழக கடல் எல்லையிலே தாக்கும் கொடூரம் தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது .
சரி ,இதற்கெல்லாம் காரணம் தான் யார் ?
                                                                             ஒரு இனம் அவ்வளவு உயர் நிலையிலிருந்து ,எல்லாவற்றையும் இழந்து அழிவின் விளிம்பிற்கு வருவதென்றால் அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல .அதற்கு பல காரணங்கள் இருக்கக் கூடும் .அவை என்ன என்ன ?
                                                     தமிழரின் வீழ்ச்சியின் ஆரம்பம்  என்பது ஆரியர் வருகைக்கு அப்புறம் தான் தொடங்கியது என்பது உறுதி .எதிரிகளை போரிட்டு வெல்வதில் சிறந்தவராயிருந்த தமிழரை வெல்ல ஆரியர் சூழ்ச்சியை கையாண்டனர் .எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய தமிழர் ஒன்றே ஒன்றில் பலவீனராய் காணப்பட்டனர் .சூது ,வாது இல்லாத தமிழர் ,அயலவரையும் அப்படியே நினைத்தனர் .அயலவரை நம்பி வீட்டிற்குள் /நாட்டிற்குள் ஏற்கும் நற்குணம் தான் அவர்களின் பெரும் பலவீனமாய் மாறிவிட்டது .
                                                                     ஒன்றாய் இருந்த தமிழ் சமுதாயத்தை பிரித்தாள சூழ்ச்சி செய்த ஆரியர் ,ஜாதிய பாகுபாடை தமிழரிடையே புகுத்தினர் .இதை  உணராத தமிழர்,சக   தமிழர்களை  கீழ் ஜாதி என்பதால் நசுக்கினர் ,ஆனால் தமிழரல்லாதவரை மதித்து நடத்தினர் .ஆதலால் ,தமிழகத்தில் இதுவரை தமிழர்களால் பல தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் .ஆனால் வீரத்திற்கு பேர் பெற்ற தமிழர்கள் யாரும் கன்னடரையோ ,தெலுங்கரையோ ,மலையாளியையோ இதுவரை தாக்கியதில்லை!தமிழ் நாட்டில் சுமார் 1 கோடி இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமாக ஒரு கல்லூரியோ ,பள்ளியோ கிடையாது .அனுமதிக்கவும்  மாட்டார்கள் .ஆனால் ,வெறும் அரை லட்சம்  பேர் கொண்ட ஜெயின் சமூகத்திற்கு பல கல்லூரிகளும் பள்ளிகளும் தமிழ் நாட்டில் உள்ளது .வேற்று மாநில நாயர்களுக்கு கோவையில் அத்தனை கல்லூரிகள் ,பள்ளிகள் !ஆத்தூர் என்ற சின்ன ஊர் பக்கத்தில் மார்வாடிக்காரர்களுக்கு ஒரு ஏதோ சோர்டியா என்று பெயருடன் பள்ளி !'தமிழனூர் 'என்று ஆந்திராவிலோ ,கர்நாடகத்திலோ கிடையாது ,ஆனால் தெலுங்குபாளையம் கோவையிலே இரண்டு உண்டு!
ஆக ,தமிழினம் தன்னுடைய உச்ச நிலையை இழந்து ,ஆண்ட நிலப்பரப்பை இழந்து ,கலாச்சார பொக்கிஷங்களை இழந்து தற்போது அழிவின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை !
இதற்கும் மேல் அவன் நெருக்கப்பட்டால் ,அவனுக்கு ஒரே வழி தான் உள்ளது !மீன் இனமாய் மாறி இந்து மாக்கடலில் குடி புகுவதை தவிர வேறு வழியில்லை !.
ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் தமிழன் இப்போதாவது விழிப்பானா ?