கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தக் குடியாம் தமிழ்க் குடியின் இன்றைய நிலை தான் என்ன ? தமிழ் இனம் வளர்ந்து கொண்டிருக்கிறதா ,இல்லை தேய்ந்து கொண்டிருக்கிறதா ?இல்லை ஏற்கனவே அழிந்து விட்டதா ?
எத்தனை தமிழர் இதை எண்ணி பார்க்கின்றனர் ? வாருங்கள் ,நாமாவது ஆராய்வோம் !
ஒரு இனம் வளர்கிறதா,இல்லை தேய்கிறதா?எப்படி அறியலாம் ?
ஒரு இனம் வளர்கிறதா ,இல்லையா என்பதை கணக்கிட முதலில் ,அதன் சிறப்பான ஒரு கால கட்டத்தை எடுத்துக்கொண்டு ,அப்போது அது என்ன நிலையில் இருந்தது என்பதை பட்டியலிடவேண்டும் .பின்னர் ,தற்போதைய நிலையை எடுத்து ஒரு பட்டியலிட வேண்டும் .இரண்டுக்கும் உள்ள வேறுபாடு ,அதன் வளர்ச்சியை அல்லது தேய்வை காட்டும் .
எல்லா மொழி இனங்களும் வளர்ச்சி அடைந்த நிலையில் இல்லை .சில இனங்கள் ,இந்த 21 வது நூற்றாண்டில் கூட பின்தங்கிய நிலையில் இருக்கலாம் .அதற்கென்று ஒரு மொழி இருந்தாலும் எழுத்துக்கள் இல்லாமல் இருக்கலாம் .பொருளாதார ,சமூக வளர்ச்சியில் பின்தங்கி இருக்கலாம் .இன்னும் ,ஆடை கூட அணியாத பழங்குடிகள் கூட இருக்கலாம் .
ஆனால் ,தமிழ் இனம் அப்படியல்ல ,சிந்து சமவெளி நாகரிக காலமான கி .மு .3500 யிலே உச்சகட்ட வளர்ச்சி அடைந்த ஒரு நகர நாகரிகமாக இருந்திருக்கிறது .அதை ஒரு தள அளவு கோலாகக் கொண்டு ,அதையும் ,தற்போதைய நிலையையும் ஒப்பிட்டால் உண்மை நிலையை அறிய உதவுமென நினைக்கிறன் .
அப்போதைய தமிழர் நிலை !
உலகிலே தொன்மையாக கருதப்படும் நாகரிகம் 'சுமேரியன் நாகரிகம் 'ஆகும் .இந்த சுமேரியன் நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பதை முனைவர் .லோகநாதன் அவர்கள் இந்தக் காணொளியில் பதிவு செய்திருக்கிறார் .
தமிழ் -சுமேரிய உறவு
ஆக ,நாகரிகத்தின் உச்சியில் கி .மு .4000 கால அளவிலே தமிழர்கள் இருந்திருக்கின்றனர் என்பது தெளிவு .பின்னர் 'சிந்து சமவெளி நாகரிகம் 'அவர்கள் உயரிய நிலையை உறுதிப் படுத்துகிறது .
பண்டைய காலத்தில் எந்தெந்த கலைகளில் /ஞானத்தில் தமிழர் சிறந்து விளங்கினர் ?
இதோ ,ஒரு தோராயக் கணக்கு !
ஒரு இனம் அவ்வளவு உயர் நிலையிலிருந்து ,எல்லாவற்றையும் இழந்து அழிவின் விளிம்பிற்கு வருவதென்றால் அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல .அதற்கு பல காரணங்கள் இருக்கக் கூடும் .அவை என்ன என்ன ?
தமிழரின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்பது ஆரியர் வருகைக்கு அப்புறம் தான் தொடங்கியது என்பது உறுதி .எதிரிகளை போரிட்டு வெல்வதில் சிறந்தவராயிருந்த தமிழரை வெல்ல ஆரியர் சூழ்ச்சியை கையாண்டனர் .எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய தமிழர் ஒன்றே ஒன்றில் பலவீனராய் காணப்பட்டனர் .சூது ,வாது இல்லாத தமிழர் ,அயலவரையும் அப்படியே நினைத்தனர் .அயலவரை நம்பி வீட்டிற்குள் /நாட்டிற்குள் ஏற்கும் நற்குணம் தான் அவர்களின் பெரும் பலவீனமாய் மாறிவிட்டது .
ஒன்றாய் இருந்த தமிழ் சமுதாயத்தை பிரித்தாள சூழ்ச்சி செய்த ஆரியர் ,ஜாதிய பாகுபாடை தமிழரிடையே புகுத்தினர் .இதை உணராத தமிழர்,சக தமிழர்களை கீழ் ஜாதி என்பதால் நசுக்கினர் ,ஆனால் தமிழரல்லாதவரை மதித்து நடத்தினர் .ஆதலால் ,தமிழகத்தில் இதுவரை தமிழர்களால் பல தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் .ஆனால் வீரத்திற்கு பேர் பெற்ற தமிழர்கள் யாரும் கன்னடரையோ ,தெலுங்கரையோ ,மலையாளியையோ இதுவரை தாக்கியதில்லை!தமிழ் நாட்டில் சுமார் 1 கோடி இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமாக ஒரு கல்லூரியோ ,பள்ளியோ கிடையாது .அனுமதிக்கவும் மாட்டார்கள் .ஆனால் ,வெறும் அரை லட்சம் பேர் கொண்ட ஜெயின் சமூகத்திற்கு பல கல்லூரிகளும் பள்ளிகளும் தமிழ் நாட்டில் உள்ளது .வேற்று மாநில நாயர்களுக்கு கோவையில் அத்தனை கல்லூரிகள் ,பள்ளிகள் !ஆத்தூர் என்ற சின்ன ஊர் பக்கத்தில் மார்வாடிக்காரர்களுக்கு ஒரு ஏதோ சோர்டியா என்று பெயருடன் பள்ளி !'தமிழனூர் 'என்று ஆந்திராவிலோ ,கர்நாடகத்திலோ கிடையாது ,ஆனால் தெலுங்குபாளையம் கோவையிலே இரண்டு உண்டு!
ஆக ,தமிழினம் தன்னுடைய உச்ச நிலையை இழந்து ,ஆண்ட நிலப்பரப்பை இழந்து ,கலாச்சார பொக்கிஷங்களை இழந்து தற்போது அழிவின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை !
இதற்கும் மேல் அவன் நெருக்கப்பட்டால் ,அவனுக்கு ஒரே வழி தான் உள்ளது !மீன் இனமாய் மாறி இந்து மாக்கடலில் குடி புகுவதை தவிர வேறு வழியில்லை !.
ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் தமிழன் இப்போதாவது விழிப்பானா ?

- இயல் ,இசை ,நாடகம் (வேறு எந்த மொழிக்கும் இல்லாத பெருமை )
- நடனம் ,நாட்டியம் (உலகப்புகழ் பெற்ற பரத நாட்டியம் தமிழரயுடையதே )
- இலக்கியம் ,இலக்கணம் (கி .மு 700 லே தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் வெளியானது )
- வான் இயல்
- வாண சாத்திரம் (விண்கல ஞானம் )
- மனையடி சாத்திரம்
- கணிதம் (கோடி கோடிக்கு கூட தனி பெயர் 'மஹாயுகம்'!)
- ஜோதிடம்
- ஆன்மிகம் (எல்லா இந்துக் கடவுள்களும் தமிழ்க் கடவுள்களே )
- மந்திரம் ,பில்லி ,சூனியம் போன்ற இருட்டுக் கலைகள்
- ஒக்கம் (யோகா )
- சித்தம்
- மல் யுத்தம் ,கம்பு ,சிலம்படி போன்ற தற்காப்பு கலைகள் .
- வாணிபம்
- கடல் சார் பயணம் /கடற்கலன் கட்டும் பொறியியல்
- மர்ம சாத்திரம்
- போர் இயல் (எடுத்துக் காட்டு -1அக்குரோணி =21870இரதம் +21870யானை +65610குதிரை +109350காலாள்)
- காதல் கலை
- அற வாழ்வு /நன்னெறி
- இன்னும் பல
தற்போதைய தமிழர் நிலை !
ஆக 7000 வருடங்கள் முன்னால் ,அவ்வாறாக நாகரிகத்தின் உச்சியில் இருந்த தமிழினம் ,7000 வருடத்தில் இன்னும் எவ்வளவு வளர்ச்சி கண்டு, இப்போது மென் மேலும் சிறந்து இருக்க அல்லவா வேண்டும் ?எல்லாக் கலைகளிலும் ,கேள்வி ஞானத்திலும் இன்னும் வளர்ந்து உலகின் முதல் இனமாக அல்லவா இருக்க வேண்டும் ?அல்லது ,குறைந்த பட்சம் அதே நிலையிலாவது இருக்க வேண்டும் அல்லவா ?
அப்படித்தான் இருக்கிறார்களா தமிழர் இப்போது ?
பண்டையக் காலத்தில் உலகெங்கும் வியாபித்திருந்த தமிழினம் ,அதன் தாய் நாடாம் இந்திய துணைக்கண்டத்தின் முழுவதும் கி .மு .3300 அளவில் பரந்து வாழ்ந்து கொண்டு இருந்தார்கள் .இந்த உண்மை அகழ்வாராய்ச்சிகள் மூலமாகவும் ,ஆப்கானிஸ்தான் ,பாகிஸ்தான் போன்ற இடங்களில் இருக்கும் சுமார் 18000 தமிழ் இடப் பெயர்கள் மூலமாகவும் உறுதியாகிறது .
அவ்வாறு பரந்து வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள் மெதுவாக தெற்கு நோக்கி விரட்டப்பட்டு,வாழ்விடம் சுருங்கி ,சுருங்கி , தற்போது ஒரு சிறிய நிலப்பரப்பான தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .தமிழ் நாட்டின் நில பரப்பு 1,30,000 சதுர கி மி இருந்தாலும் ,அதில் தமிழர் கைவசம் எவ்வளவு உள்ளது ,தமிழரல்லாதவர் கையில் எவ்வளவு உள்ளது என்று பார்த்தால் தமிழர்கள் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியாது .

- சென்னை மாநகரின் சுமார் 75% இடங்கள் ,சொத்துக்கள் ,வணிகங்கள் வடஇந்தியர் ,தெலுங்கர் ,மலையாளிகள் வசம் உள்ளது .இது போல கோவை ,மதுரை போன்ற தமிழ் நாட்டின் பெருநகரங்களின் பெரு முதலீடுகள் அனைத்தும் தமிழரல்லா தவர் கைவசமே உள்ளது .
- ஊட்டி ,கொடைக்கானல் போன்ற மலைவாச ஸ்தலங்களும் அப்படியே .
- தமிழகத்தின் தங்க வணிகமும் முற்றிலும் அயலவர் கையிலே .
- தமிழகத்தின் பணக்கார பள்ளிகள் /கல்லூரிகள் எல்லாம் தமிழரல்லாதோர் கையில் தான் உள்ளன .
- தமிழகத்தின் பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் அதிகமாக வடஇந்தியர்களே .
- தமிழ் கலாச்சாரம் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி மெதுவாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படுகிறது .இந்தி திணிக்கப்பட்டு ,தமிழின் முக்கியத்துவம் கண்ணெதிரே அழிந்து கொண்டிருக்கிறது .
- தமிழரின் மொழி ,கலாச்சாரப் பெருமைகள் மெதுவாக சுரண்டப்பட்டு சம்ஸ்கிருத பெருமைகளாக விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது .தமிழ் 'ஒக்கம் ' இந்தியாவின் யோகாவாக உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறது .இது வருடத்திற்கு சுமார் 20,0000 கோடி வருமானம் ஈட்டுகிறது .இதில் இதன் சொந்தக்காரரான தமிழருக்கு ஒரு பைசா பங்கும் இல்லை .தமிழ் அமைதியின் நிறம் காவி நிறத்தை சுரண்டி பா .ஜ .க வெறுப்பின் நிறமாக மாற்றிவிட்டது .
- தமிழ் நாடு கடந்த 50 ஆண்டுகளாக வேறு மொழி மக்களால் ஆண்டுகொள்ளப்பட்டிருக்கிறது .
- எல்லையில்லா கடலை ஆண்டு கொண்டிருந்த தமிழனை இந்திய கப்பற்படை தமிழக கடல் எல்லையிலே தாக்கும் கொடூரம் தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது .