Friday, 4 September 2020

மலையாள படங்களில் தமிழருக்கு எதிராக வெறுப்பு பரப்புரை ஏன் ?

                         வந்தாரை வாழவைக்கும் தமிழர்களின் நற்குணம் அவர்களுக்கு நன்மதிப்பையும் ,உயர்வையும் கொடுத்திருக்கிறதா ?இல்லை ,வாழ வந்தவர்கள் ,தமிழர்களால் உயர்ந்தவர்கள் ,பணம் சம்பாதித்தவர்கள் எல்லோரும் ,ஏறுவதற்கு உதவும் ஏணியை ,ஏறிய பின் மிதித்து தள்ளும் பண்புள்ளவர்களாக மாறிவிட்டார்களா ?வாருங்கள் ,சிறிது ஆராயலாம் !
                               பாருக்குள்ளே தொன்மையான குடி எது என்று கேட்டால் அது தமிழ்க் குடி தான் என்று அறுதியிட்டு கூறலாம். தொன்மையில் மட்டுமல்ல,உண்மையில் , பண்பாட்டில் எல்லாவற்றிலுமே  மேலானவர்கள் தமிழர்கள்  என்றால்  அது மிகையாகாது. வந்தாரை வாழ வைப்போம் என்று எல்லோரையும் தமிழ் நாட்டிற்குள் அனுமதித்தார்கள் தமிழர்கள் . ஆனால் வந்தவர்களோ , வழிவிட்ட அவர்களை மதியாமல், இங்குள்ள சொத்துக்களையும், இங்குள்ள பொக்கிஷங்களையும் ,எப்படி கொள்ளையடிப்பது, இவர்களை எப்படி ஆள்வது என்று திட்டமிட்டு ,சூழ்ச்சிகளில் இறங்கி தமிழர்களை அடிமைப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .
                                                     பக்கத்து மாநிலமான கேரளாவில் வாழும்  மலையாளிகள்  , தமிழ் நாட்டில்  வந்து சுதந்திரமாக  வாழ்ந்து , வியாபாரம்  செய்து , பணம்  ஈட்டி  ,வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .ஆனால் அவர்கள் மனதில் தமிழர்கள் மீது எவ்வளவு ஒரு வெறுப்பு என்பதை  அவர்கள் எடுக்கும் மலையாள படங்களில் நன்றாகவே காட்டிக்கொள்கிறார்கள்.தமிழர்களை எந்த அளவு ஒரு கேவலமாகவும்,கீழ்த்தரமாகவும்  காட்டுகிறார்கள் என்பது  மலையாள  படங்களை  பார்த்தால்  புரியும் .
                                          நான்  அடிக்கடி மலையாள திரைப்படங்கள் காண்பதுண்டு.அந்த திரைப்படங்களில் எல்லாவற்றிலும் ஒரு காட்சியாவது தமிழர்களை கேவலப்படுத்துமாறு  அமைந்திருக்கும். தமிழர்களை  மறக்காமல் 'பாண்டி' என்று அழைக்கும் காட்சி ஒன்று கட்டாயம் இருக்கும்.'பாண்டி'எனும்  சொல்  தமிழர்களை  கேவலப்படுத்த  மலையாளிகள்  பயன்படுத்தும் ஒரு  சொல்லாகும் . 
                                         மேலும் ஒரு படத்தில் ஒரு தமிழனை பார்த்து நீ 'பாண்டி' மட்டுமல்ல நீ' நொண்டி 'என்று  சொல்லி  சிரிப்பது  போல்  ஒரு  காட்சி . தமிழர்கள்  யாரும்  மலையாளிகளையோ ,மற்ற எந்த இனத்தவரையோ   கேவலப்படுத்தும்  படியாக  சொற்களை  கண்டுபிடிக்கவில்லை .  இன்னொரு படத்தில் ஒருவரைப் பார்த்து  மற்றொருவர்  'நீ பாண்டி போல் இருக்கிறாய் 'என்று சொல்ல ,பதிலுக்கு அவர் 'நீதான் பாண்டி போல இருக்கிறாய் 'என்று சொல்லி சிரிப்பது  போல்  ஒரு காட்சி அமைந்துள்ளது .அதுவும்  அந்தக் காட்சி சென்னையில் நடப்பதுபோல காட்டப்பட்டுள்ளது ! 
                                                                சென்னையில்/ஊட்டியில் /கொடைக்கானலில்  எல்லோரும் மலையாளம் பேசுவது போல காட்டுவார்கள். இவர்கள் எங்கு போனாலும் அந்த ஊரில் உள்ள எல்லோருமே மலையாளம் பேசுவது போல்தான் காட்டுவார்கள் .இன்னொரு படத்தில் ஒரு தமிழ் குடும்பத்தை காட்டி அவர்கள் அசிங்கமாக சாப்பிடுவதுபோல் காட்சி அமைத்து உள்ளார்கள் .வேறொரு படத்தில் மம்முட்டி ஒரு  பெண்ணை, ஒருதமிழன் வீட்டில் தங்க வைப்பது போல ஒரு காட்சி.உடனே மம்முட்டியின் நண்பரின் மனைவி 'தமிழன் மாரோட இவருக்கு என்ன தொடர்பு 'என்று கேவலமாக கேட்பது போல ஒரு காட்சி. ஒவ்வொரு படங்களிலும் ஒரு வாய்ப்பையும் நழுவ விடாமல் ,தமிழர்களை கிண்டல் செய்வது மலையாள படங்களில் மாமூலாக உள்ளது. ஒரு படத்தில் மோகன்லால் 'நான் தமிழ்  பேசமாட்டேன்' என்று சொல்வது போல் ஒரு காட்சி .ராவணபிரபு என்ற படத்தில் கவுண்டர்கள் எல்லாம் புத்தியில்லாதவர்கள் போலவும் , மோகன்லால் ஒரு கவுண்டரை காப்பாற்றுவது போலவும் ஒரு காட்சி அமைத்திருக்கிறார்கள். தமிழ் படங்கள் எதிலும் மலையாளிகள் புத்தி இல்லாதவர்கள் மாதிரி காட்டி தமிழர்கள் போய் அவர்களை காப்பாற்றுவது போலவும்  காட்சி அமைப்பதில்லை.
                                  திலீப் நடித்த ஒரு மலையாள படத்தில் தமிழகத்தின் தலைசிறந்த மன்னன் ராஜராஜ சோழன் ஒரு ஒல்லியான உருவமாக ஒன்றுக்குமே உதவாத ஒரு மனிதனாக காட்டி கேவலப்படுத்தியிருக்கிறார்கள் .தமிழர்களை பெரிய ரவுடிகள் போல காட்டி ,ஆனால்  மலையாளிகளிடம் அடிவாங்கி தோற்கும்  படியான காட்சிகள் அமைத்திருப்பார்கள்.ஒரு படத்தில் மம்முட்டி ஒரு தமிழ் இன்ஸ்பெக்டரை பார்த்து 'டேய் , தமிழ் பையா 'என்று கூறுபது போல  ஒரு காட்சி.
                                  இன்னொரு படத்தில் ஊட்டியில் காவியா மாதவன் ஒரு வங்கியில் புகுந்து ரகளை பண்ணுவது போல் ஒரு காட்சி. வங்கியில் எல்லோருமே மலையாளம் தான் பேசுவார்கள் !அதில் ஒருவர் தமிழில் பேசுவதை ,காவியா மாதவன் 'தமிழ்ல  எல்லாம் பேசுகிறார் 'என்று கேவலப்படுத்தி சொல்வது போல ஒரு காட்சி. தமிழர்கள் எவ்வளவு படங்களில் அவர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து நம்மில் ஒருவராக அன்புடன் நடத்திக் கொண்டிருக்கிறோம் .சென்ற வருடம் நடந்த கேரள வெள்ள நேரத்தில் தமிழர்கள் ஒவ்வொருவரும் பணம்  பிரித்து அவர்களுக்கு உதவி செய்தனர். ஆனால் அவர்களோ எந்தவிதமான நன்றியும் இன்றி தமிழர்களை கேவலப்படுத்துவதில்  குறியாக உள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது.
ஒரு படத்தின் பெயரையே 'பாண்டி படை' என்று வைத்திருக்கிறார்கள். இன்னொரு படத்தில் மம்முட்டி தமிழ் நாட்டிற்குள் வந்து ஒரு தேவர் வீட்டில் புகுந்து அவரை அடிப்பது போல ஒரு காட்சி. இன்னொரு படத்தில்
 தமிழன்மார்  100 ரூபாய்க்கு கொலை செய்வார்கள் என்று ஒரு வசனம்.தமிழர்கள்  குற்ற மனம் கொண்டவர்கள் ,பெண்களை கடத்துபவர்கள் என்றெல்லாம் தவறான ஒரு பரப்புரை மலையாள படங்களின் வழியாக தொடர்ச்சியாக நடக்கிறது.மம்முட்டி படம் ஒன்றில் ' செல்வம் லாஜிஸ்டிக்ஸ் 'என்ற தமிழ் நிறுவனம் ,கேரள இளம்பெண்களை கன்டெய்னரில் கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்புவதாக காட்சி!
 இன்னும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஆனால் இத்துடன் நான் விட்டு விடுகிறேன்.
 மொத்தத்தில் மலையாள படங்களில் தமிழர் மீது ஒரு வெறுப்பு தொடர்ச்சியாக உண்டாக்கப்பட்டு அது  நிலை நிறுத்தப்படுகிறது என்பது வருத்தம் அளிக்கிற செய்தி.
                                  இவ்வளவுக்கும் மலையாள மொழி தமிழ் மொழியின் பிள்ளை தான் என்பது மலையாளிகள் எல்லோருக்கும் தெரியும்.மலையாள பண்பாடு தமிழ் பண்பாட்டின் ஒரு பிரிவு என்பது அங்கு எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
 ஆனாலும் இவ்வாறு ஏன் கேவலப்படுத்துகிறார்கள் ஒரு வெறுப்புணர்ச்சி உண்டாக்குகிறார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.
                                      தமிழ்நாடு அவர்களை மதித்து ,தமிழ் நாட்டில் ஓணத்திற்கு  விடுமுறை கூட  அளிக்கிறது.ஓண  கொண்டாட்டங்கள் தமிழ்நாட்டு கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது .ஆனால் கேரளாவில் பொங்கலுக்கு விடுமுறையோ ,கொண்டாட்டங்களோ கிடையாது . பொங்கல் கொண்டாட்டங்கள் கேரள கல்லூரிகளில் நடப்பதில்லை.
                     மலையாளிகள் தமிழனின் நற்பண்புகளை இளிச்சவாய்த் தனம் என்று எடுத்துக் கொண்டு இவ்வாறாக வெறுப்பு பரப்புரை செய்வதை  நாம் அனுமதிக்க முடியாது .
 இவ்வாறு அவர்கள் செய்வதை நாம் அவர்கள் திரைத்துறை வழியாக வன்மையாக கண்டிக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.
----------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு பத்து பேருக்காவது இதை பகிரவும்.

5 comments:

  1. உண்மை. சமஸ்கிருத ஊடுருவலால் நம்மை விட்டு வேறுபட்டு சென்றவர்கள். ஆரியர்களின் மொழி வழியே வந்த தமிழின எதிர்ப்பு இன்று வரை அவர்களை நம்மை ஏளன படுத்த வைக்கிறது. அவர்கள் படங்களில் எனக்கு அறிந்த ஒரு காட்சி. படம் ஆக்ஷன்ஹீரோ பிஜு. அதில் ஒரு மனநலம் குன்றிய ஒருவர் ஆடையின்றி தமிழ் பாட்டு பாடி கொண்டு ஆடுவது போல ஒரு காட்சி.

    ReplyDelete
    Replies
    1. ஒரு சின்ன காட்சி கிடைத்தாலும் அதை தமிழர்களை மட்டம் தட்ட பயன் படுத்துவார்கள் . ஒரு படத்தில் கருக்கலைப்பு செய்வதற்காக ஒரு மருத்துவரிடம் ஒரு பெண் செல்கிறாள் .அந்த மருத்துவரின் பெயர் 'தமிழ்ச்செல்வி'! எப்படி பாருங்க!

      Delete
  2. வரனேஅவசியமுண்டு படத்தில் தேசிய தலைவர் பிரபாகரன் பெயரை நாய்கு பெயர் வைத்து அழைப்பார்கள் ...

    ReplyDelete
  3. Don't worry. Kerala is becoming a Minorities state. Christian and Muslim are dominating. The Kerala State will die. See none of the Hero's smile whether it is Mohanlal, Mammootty, Prithiviraj. Stop accepting Kerala heroines in Tamil movies. In fact Ban Actor Ajith also. Watch he will give more Malayalee actors in his films.

    ReplyDelete
  4. Malayalees are highly egoistic. They are selfish. Giving importance to Dead Communism. They are surviving because of Guruvayoor, Sabarimala, Palakkad and Thrissur and Kalady. Arab money and NGO funding on churches are making them to survive.

    ReplyDelete