இந்து மதத்தின் தாழ்த்தப்பட்ட மக்களில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் இனம் ஒன்று உண்டு என்றால் அது 'பறையர் 'இனமே .இவர்களை தீண்டத்தகாதவர்களாக்கி ,ஊருக்கு ஒதுக்கு புறத்தில் சேரியென்று ஒன்றை உருவாக்கி இந்த சமுதாயம் வைத்திருக்கிறது . மற்றவர் செய்ய தயங்கும் வேலைகளை இவர்களுக்கு அளித்து,பின்னர் அதை செய்வதினால் இவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் 'பறையர்' என்கிற சொல்லை பரப்பிவிட்டு,ஆங்கில அகராதிகளில் அதை இடம்பெற செய்து, இப்போது அதை ஒரு 'வெறுப்பு சொல்'லாக பயனாகும்படி இந்திய ஆட்சியாளர்கள் செய்துவிட்டார்கள்.
இதோ மேரியம் -வெப்ஸ்டர் அகராதியில் 'pariah 'என்ற சொல்லின் பொருள் :
- உண்மையில்அழுக்கு வேலை செய்யும் சுத்தமற்ற தீண்டத்தகாதவர்களா பறையர்கள் ?
- ஆதியில் இவர்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தனர் ?
- இவர்கள் இந்த நிலைக்கு வந்ததன் காரணம் தான் என்ன ?
- உண்மையில் இவர்கள் வரலாறு தான் என்ன ?
அறிய நான் ஒரு தீவிர கள ஆராய்ச்சியில் இறங்கினேன் .
என்னுடைய ஆராய்ச்சியை ஆங்கில மனிதவியலாளர், எட்கர் தர்ஸ்டன் அவர்கள் எழுதிய ' 'காஸ்ட் அண்ட் ட்ரைப்ஸ் ஆப் சவுத் இந்தியா '(1909) என்ற புத்தகத்திலிருந்து ஆரம்பித்தேன் .
அதிலிருந்து மற்ற எல்லா ஆதார தளங்களிலும் தேடிய பின் ,பல சுவையான தகவல்கள் கிடைத்தன .இவற்றை உங்களுடன் இங்கு பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .இந்த தகவல்களை சாதியை பற்றி பேசுவதாக எடுக்காமல் ,ஒரு அறிவு பூர்வ ஆராய்ச்சியாக மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .
'பறையர் 'என்ற சொல்லின் வேர் !
முதலில் 'பறையர் 'என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம் . 'பறை 'என்றால் 'முரசு 'என்று பொருள் படும் என்றும் ,'பறையர் ' என்றால் 'பறை அடிப்போர் 'என்றும் சொல்லப்படுகிறது .இந்த 'வேரை ' கூர்ந்து பார்த்தால் , இது உண்மையல்ல என்பது தெளிவாகும் .எப்படி என்று பார்ப்போம் .
.தமிழ் நாட்டில் தற்போதய கணக்குப்படி 12620 ஊர்கள் உள்ளன .பண்டைய தமிழகத்தில் இதை விட குறைந்த அளவே ஊர்கள் இருந்திருக்கும் .பறையர்கள் பறை அடித்து ,அதனால் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தால் ஒவ்வொரு ஊரிலும் ,பறை அடித்து நிகழ்ச்சிகள் /சடங்குகள் செய்ய ,அதிக பட்சம் 10 பேர் தேவையாய் இருந்திருக்கும் .ஆக ,10000 ஊர்களுக்கு அதிக பட்சமாக 100000,அதாவது 1 லட்சம் பேர் இருந்திருக்க கூடும் .ஆனால் இந்த பறையர் இனம் தற்போது சுமார் 50 லட்சத்திற்கு மேல் ஜனத்தொகை கொண்டது .பழங் காலத்தில் சில லட்ச கணக்கில் இருந்திருக்கும் ஒரு இனம் .அவ்வளவு பேரும் பறை அடித்து வாழ்க்கை நடத்தியிருக்க வாய்ப்பில்லை,என்பது வெள்ளிடை மலை . அதில் ஒரு சிறு பிரிவினர் பறை அடித்திருக்க கூடும் .இந்த கருத்தை 1891 ல் ஆங்கிலேயர்கள் வெளியிட்ட 'மெட்ராஸ் சென்சஸ் ரிப்போர்ட் 'டில் குறிப்பிட்டிருக்கிறார்கள் .
"in the 1891 Madras Census Report, it is recorded that "it is only one section of Paraiyars that act as drummers, nor is the occupation confined to the Paraiyars. It seems in the highest degree improbable that a large, and at one time powerful, community should owe its name to an occasional occupation, which one of its divisions shares with other castes."
இரண்டாவதாக ,மற்ற ஜாதிகளிலும் பறை அடிப்பவர்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது .ஆக 'பறை 'அடிப்பவர் 'பறையர் 'என்ற வேர் சொல்லியல் தப்பு என்பது தெளிவாகத் தெரிகிறது .
அப்படியென்றால் 'பறையர் 'என்ற சொல்லின் உண்மையான வேர் என்ன ?
தமிழில் 'பரை 'என்ற சொல் ஒன்று உள்ளது .அகராதி .காம் என்ற தமிழ் தொகுப்பு அகராதி ,அந்த சொல்லின் பொருளை இவ்வாறாக கூறுகிறது :
ஆக ,'பரை 'என்றால்'சிவபெருமானின் அருள் பெற்று நிற்கும் நிலை ' என்று பொருள் படும் .மேலும் ,அது பார்வதி தேவியின் ஒரு பெயராகும் . இதைத் தவிர ,'பர 'என்றால் 'மேல் 'என்ற பொருள் வரும் .' .'பரன்' என்றால் 'மேலோன்' ,ஆதலால் 'நமக்கு மேலிருக்கும் கடவுள் 'என்று பொருள் . வீட்டில் 'பரண்' என்றால் 'மேலே இருப்பது' என்று பொருள்.தமிழில் 'பரம்பரை 'என்ற ஒரு சொல் உண்டு .இது 'பரன் +பரை 'என்று பிரியும் .'பரன் 'என்றால் அப்பா வழியில் 7 வது முன் பாட்டன் ;'பரை என்றால் அம்மா வழியில் ஏழாவது முன் பாட்டி .ஆக ,7 தலைமுறை ,ஒரு பரம்பரையாகும் .இதில் உள்ள 'பர 'என்ற சொல்லும் 'பரை 'என்ற சொல்லும் சேர்ந்து 'பரை ஐயர் 'என்ற சொல்லுக்கு மூலமாகும் .'ஐயர்' என்பது 'பர 'என்ற சொல்லுக்கு சமமாகும் ..ஆக ,'பரையர்'என்ற சொல்' பார்வதியிலிருந்து தோன்றிய உயர்ந்தவர் ' என்று பொருள் படும் என்பது மொழியாளர்கள் கருத்து . சிவன் தான் 'ஆதி பரையர்.பார்வதி ஆதி பரைச்சி '.
ஆதாரம் கீழே :
'பரை யோகம் 'என்றால் 'சிவனை எதிர்நோக்கும் ஒரு நிலை 'என்றும் பொருள் படும் .
ஆக ,'சிவன் ,பார்வதியின் வழி வந்த மக்கள் ' பரையர்'ஆகும் .'ர 'என்ற எழுத்து 'ற 'என்று மாறியதால் ஒரு பெருங் குழப்பம் ஏற்பட்ட்ருக்கலாம் என்பது மொழி ஆராய்ச்சியாளர்கள் கருத்து .. சிவன் தமிழ் இனத்தின் கடவுள் .அவர் வழி வந்த மக்கள் ,பெரும் ஞானிகளாகவும் ,பர ஞானம் கொண்டவர்களாகவும் ,அருட் சார்ந்த பணிகள் செய்பவர்களாவும் இருந்தார்கள் .சிவனிலிருந்து தான் 'சீவன் அதாவது உயிர் தோன்றியது .சீவனை பற்றி அறிந்த சித்தர்களாகவும் ,வைத்தியம் அறிந்தவர்களாவும் 'பரையர்' இருந்தனர் .மந்திரம் ,ஆவி ஊடகம்,ஜாதகம் அறிந்தவர்களாவும் 'பரையர்' இருந்தனர்.அதில் ஒரு பிரிவினர் 'சாம்பவர்த்தி 'எனப்படுவர் .இவர்கள் சிவனின் பூசாரியாக இருந்தவர்கள் .சிவனே ஒரு சாம்பவர் என்று விக்கிபீடியா சொல்லுகிறது .
சிவனுக்கோ 'சாம்ப சிவன் 'என்று ஒரு பெயர் உண்டு .சாம்பலோடு சம்பந்தப்பட்ட பெயர் இது .' பரையரில் இன்னொரு பிரிவினர் 'வள்ளுவர் 'எனப்படுவர் .இவர்களும் ஜோதிடம் கணித்தல் ,கோயில் பூசாரி வேலைகளில் ஈடுபட்டவர்கள் ஆகும் .உலகின் சிறந்த பொது மறையாகிய திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் இந்த பிரிவை சார்ந்தவராகும் . ஆத்திச்சூடி ஒளவையாரும் ' பரையரே '.
ஆக ,மொத்தத்தில்,' பரையர்' அப்போதைய அந்தணர்களாக இருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை .'பாப்பானுக்கு மூத்தோன் பரையன் 'என்ற வழக்கு இன்றும் நடைமுறையில் உள்ளது .
அப்படியானால் .அந்தணரின் முக்கிய அணியான' பூணூல் ' பரையர்' அணிந்திருந்தனரா என்ற கேள்வி எழுகிறது இல்லையா ?அதற்கும் விடை கிடைத்தது !
பரையர்கள் சில சடங்குகளில் பூணூல் அணி வதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதை நேரில் உறுதி செய்ய ஒரு பரையர் வீட்டு சாவிற்கு சென்றிருந்தேன் .நெல்லை மாவட்டத்தில் ஒரு ஊர் அது .இறந்த தாயின் மூத்த மகனை ஓரிடத்தில் சம்மணம் போட்டு உட்கார வைத்து ,முன்னால் ஒரு சிறிய 'ஓம குண்டம் 'அமைத்தனர் .மகனை அதற்குள் ஓமத்தை போட சொல்லி ,நெய் ஊற்றினார் இன்னொரு பரையர்.சில தமிழ் மந்திரங்கள் புரியாத தமிழில் பெரியவர் ஒருவர் சொல்ல,இந்த சடங்கு சிறிது நேரம் நடந்தது .
பின்னர் அவரை மொட்டையடித்து ,ஆற்றில் ஒரு துண்டுடன் இறங்க வைத்தனர் .அப்போது தான் நான் எதிர்பார்த்தது நடந்தது .ஆம் ,அந்த பரை மகனுக்கு பூணூல் அணிவித்தனர் !
பரையர் மேல் பூணூலா ?ஒரு கணம் திகைத்துப் போனேன் !பரையர் மேல் சாதி தெருக்கள் வழியாக செருப்பு அணிந்து செல்வதையே எதிர்க்கும் மேல் ஜாதியினர் ,அவர்கள் பூணூல் அணிவதை எப்படி விட்டுவைப்பார்கள் ? அங்கிருக்கும் பெரியவர்களிடம் இதைப்பற்றி அந்த நேரத்தில் கேட்க முடியவில்லை .
பின்னர் நீரில் 7 தடவை மூழ்கி எழுந்தவுடன் ,அந்த பர மகனை, அந்தப் பூணூலை தன் கையினாலே கழற்றி, ஓடும் நீரில் விடச்சொன்னார்கள் .அவனும் அவ்வாறே விட்டான் . பின்னர் தாயின் பிணத்தை புதைக்கும் முன் ,ஒரு பானையில் நீர் நிறைத்து ,மகன் தலையில் வைத்து ,பிணத்தை 7 முறை சுற்றி வரச்செய்தனர் .ஒவ்வொரு சுற்றுக்கும் ,அரிவாள் வைத்து ஒரு ஓட்டை போட்டனர்.நீர் முடிந்ததும், அந்த பானையை அங்கேயே போட்டு உடைத்தனர் .இந்த முறைகள் எல்லாம் ,பல தமிழ் உயர் ஜாதி மக்கள் செய்யும் முறையாக தெரிந்தது .
பின்னர் இதைப் பற்றி தெரிந்து கொள்ள ஊர் பெரியவர்களை சந்தித்தேன் .அவர்களிடம் பெற்ற தகவல்களை கொண்டு ,இன்னும் ஆழமாக ஆராய்ந்தேன்.ஆராய்ச்சியின் முடிவில் பல விதமான சுவையான முடிவுகள் கிடைத்தன .அவைகள் இதோ :.
- 'பூணூல் 'என்றாலே தூய தமிழ் சொல் .பிராமணர்கள் விரும்பும் வடமொழியில் 'பூணூலுக்கு சரியான சொல் இல்லை .yajnopavita 'யஜனோ பவித்த'என்று ஒரு சொல் கஷ்டப்பட்டு பின்னால் உருவாக்கப்பட்டது .பிராமணர்கள் முதலில் வெளிநாட்டிலிருந்து கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்ததாக சொல்லப்படுகிறது . பூணூல் பிராமணர்களின் சொந்த உருப்படி என்றால் அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறார்களோ அந்த நாட்டில் பூணூல் அணிந்த மக்கள் இன்னும் இருக்க வேண்டும். அவ்வாறாக,உலகில் எந்த நாட்டிலும் பூணூல் அணிந்த மக்கள் இருப்பதாக தெரியவில்லை.
- 'நூல் 'என்றால் ஆடை நெய்யும் நூல் அல்ல .'நூல் 'என்றால் 'அறிவு புத்தகம் '.'நூல்தல் 'என்றால் 'சைவ சித்தாந்தங்களை படித்த பின் கொடுக்கப்படும் ஒரு 'பூணூல் 'ஆகும் .இது இப்போது நாம் கல்லூரிகளில் பெறும் சான்றிதழுக்கு சமமாகும் .
- ஆக ,சைவர்களாகிய பரையர் ,சைவ நூல்களை கற்று பெற்ற தகுதிதான் 'பூணூல் '
- ஆக .பூணூலின் முதல் சொந்தக்காரர்கள் 'பரையர்'தான் என்பது உறுதியாகிறது .
- பரையர்களின் உயர்ந்த சமூக நிலை குறித்து ,'கஸடீர் ஆப் திருச்சினோபோலி' என்ற ஆங்கில அரசிதழில் ,கீழ்க் கண்ட பதிவு உள்ளது .
In a note on the Paraiyans in the Gazetteer of Trichinoply District, it written as follows.
"They have a very exalted account of their lineage, saying that they are descended from the priest SalaSambavan, who was employed in a Siva temple to worship the god with offerings of beef, but who incurred the anger of the god by one day concealing a portion of the meat, to give it to his pregnant wife, and was therefore turned into a Paraiyan. The god appointed his brother to do duty instead of him, and the Paraiyans say that Brahman priests are their cousins. For this reason they wear a sacred thread at their marriages and funerals. .... It is a curious fact that, at the feast of the village goddess, a Paraiyan is honoured by being invested with a sacred thread for the occasion by the pujari (priest) of the temple, by having a turmeric thread tied to his wrists, and being allowed to head the procession. This, the Paraiyans say, is owing to their exalted origin."
தமிழாக்கம் :
'பரையர்' மிக உயர்ந்த இனமாகும் .அவர்கள் சால சாம்பவன் என்ற சிவன் கோயில் பூசாரி வழி தோன்றல்கள் ஆவர் .அவர் சிவனுக்கு படைத்த மாட்டுக் கறியை, ஒரு துண்டு எடுத்து தன் கர்ப்பிணி மனைவிக்கு கொடுத்ததால், பறையனாக்கப்பட்டார் என்று ஐதீகம்.அதன் பின்னர் ,கடவுள், அவருடைய சகோதரனை பூசாரியாக நியமித்தார் .இதனால் பரையர்கள் ,.பிராமணர்கள் எங்கள் உறவு என்கிறார்கள் .இந்த காரணத்திற்காக ,அவர்கள் திருமணத்திலும் ,சாவு சடங்குகளிலும் பூணூல் அணிகிறார்கள் .ஒரு வியப்புக்குரிய செய்தி என்னவென்றால் ,கிராம தேவதை விருந்துகளில் ,ஒரு பரையருக்கு,பூசாரியை வைத்து பூணூல் அணிவித்து ,மஞ்சள் துண்டு ஒன்றை கை மணிக்கட்டில் கட்டிவிடுவர் .அந்த பரையரே அந்த ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்துவார் .இது ,பரையரின் உயர்ந்த சமூக நிலையை காட்டுகிறது .
- 1891 மக்கள் தொகை கணக்கு அறிக்கையில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது : In the Census report of 1891, it is mentioned that
- The Valluvans(Paraiya priests) were priests to the Pallava kings before the introduction of the Brahmins, and even for some time after it. தமிழாக்கம் : வள்ளுவர் என்ற பரையர் பூ சாரிகள் பிராமணர்களுக்கு முன்னரும்,சிறிது காலம் பின்னரும், பல்லவ மன்னர்களுக்கு பூசாரியாக இருந்தார்கள் .
- ஆங்கிலேயர் ஏ .சி .கிளேட்டன் ,இவ்வாறாக கூறுகிறார் : "he saw a Brahman women worshipping at Paraiyan shrines in order to procure children, and then a Paraiyan exorciser treating a Brahman by uttering mantrams (consecrated formulae), and waving a sickle up and down the sufferer's back, as he stood in a threshing floor."
தமிழாக்கம் : 'நான், பிள்ளையில்லாத ஒரு பிராமணப் பெண், பரையர் கோயிலில் வழிபடுவதை பார்த்தேன் .பின்னர் போரடிக்கும் களத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பரையர் ,ஒரு ,பிராமணனுக்கு பேயோட்டுவதை பார்த்தேன் .அவர் ஒரு அரிவாளை முதுகுக்கு பின்னால் மேலும் கீழும் ஆட்டினார் .
தமிழ் பிராமணர்களில் ஒரு பிரிவினர் 'பகுதி நேர பரையர்'என்று இருக்கிறார்கள் ! உண்மையாகவா என்று கேட்பவர்களுக்கு இதோ ஆதாரம் !இவர்கள் 'மத்தியான பரையர் 'என்று அழைக்கப்படுகிறார்கள் . அது என்ன 'மத்தியான பரையர்? மத்தியானம் மட்டும் பரையர்களா ?அதை குறித்து ஒரு சுவையான ஐதீகம் உள்ளது .இதோ கீழே: A subdivision of Tamil Brahmans as Madyana Paraiyans.
Prathamasaki:These Brahmans were sometimes called Prathamasaka, In the Tanjore district, the Prathamasakis are said to be known as Madyana Paraiyans. The following quaint legend is recorded in the Gazetteer of that district: " The god of the Tiruvalur temple was entreated by a pujari of this place (Koiltirumulam) to be present in the village at a sacrifice in his (the god's) honour. The deity consented at length, but gave warning that he would come in a very unwelcome shape.He appeared as a Paraiyan (Pariah) with beef on his back, and followed by the four Vedas in the form of dogs, and took his part in the sacrifice thus accoutred and attended. All the Brahmans who were present ran away, and the god was so incensed that he condemned them to be Paraiyans for one hour in the day, from noon till 1 P.M., ever afterwards. There is a class of Brahmans called midday Paraiyans, who are found in several districts, and a colony of whom reside at Sedanipuram five miles from Nannilam. It is believed throughout the Tanjore district that the midday Paraiyans are the descendants of the Brahmans thus cursed by the god. They are supposed to expiate their defilement by staying outside their houses for an hour and a half every day at midday, and to bathe afterwards; and, if they do this, they are much respected.
தமிழாக்கம் : பிராமணர்களில் ஒரு பிரிவினர் 'ப்ரதம சகி 'பிராமணர்கள் எனப்படுவார்கள் .தஞ்சாவூர் மாவட்டத்தில் இவர்களை 'மத்தியான பரையர் 'என்று அழைப்பார்கள் .இதற்கான வினோதமான கதை மாவட்ட அரசு இதழில் இருக்கிறது. "கோயில் முற்றம் சேர்ந்த ஒரு பூசாரி, திருவள்ளுவர் கோயில் கடவுளை ,தன்னுடைய ஊரில் நடக்கும் பலி திருவிழாவில் பங்கெடுக்க வேண்டினார் .அந்த கடவுள் 'நான் வருவேன் ஆனால் நீ விரும்பாத ஒரு வடிவில் வருவேன் .'என்றார் .அவர் முதுகில் மாட்டுக்கறி சுமந்த ஒரு பரையனாக வந்தார் .அவர் பின்னால் 4 வேதங்களும் 4 நாய்களாக வந்தது .அதைப்பார்த்து அங்கிருந்த பிராமணர்கள் அலறி அடித்து ஓடி விட்டனர் .இதை பார்த்த கடவுளுக்கு பயங்கர கோபம் வந்தது .அதனால் அவர் அந்த பிராமணர்கள் எல்லோரும் தினமும் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை பரையராக இருக்கும்படியாக சாபமிட்டார் .இந்த பிராமணர்கள் 'மத்தியான பரையர்' எனப்படுவார்கள் .இவர்கள் எல்லா மாவட்டங்களிலும் இருந்தாலும் ,நன்னிலத்திலிருந்து 5 மைல் தொலைவிலிருக்கும் சேதனிபுரம் ஊரில் ஒரு அக்ராஹாரமாக அதிகமாக உள்ளனர் .தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இந்த 'மத்தியான பரையர்' பிராமணர்கள் வழி வந்த சபிக்கப்பட்ட வர்கள் என்று நம்புகிறார்கள் .இவர்கள் சாபம் தீர தினமும் ஒன்றரை மணி நேரம் வீட்டிற்கு வெளியே இருந்து விட்டு ,பின்னர் குளித்த பின் உள்ளே செல்வர் .அப்படி செய்தால் அவர்கள் மதிக்கப்படுவர் ."
- திருவிதாங்கூர் பரையர்கள் பற்றிய ஒரு பதிவு இவ்வாறாக கூறுகிறது : The following extract is taken from a note on the Paraiyans of Travancore.
In the Keralolpathi, they are classed as one of the sixteen hill tribes. Concerning their origin the following tradition is current. They were originally Brahmans, but, on certain coparceners partitioning the common inheritance, the carcase of a cow, which was one of the articles to be partitioned, was burnt as being useless. A drop of oil fell from the burning animal on to one of the parties, and he licked it up with his tongue. For this act he was cast out of society, and his descendants, under the name of Paraiyas, became cow-eaters.
The Paraiyars of Northern Travancore held a traditional belief "that they were a division of the Brahmans, who were entrapped into a breach of caste by their enemies, through making them eat beef." தமிழாக்கம் : "பரையர்கள் முதலில் பிராமணர்களாகத்தான் இருந்தார்கள்.ஒரு முறை சொத்து பிரிக்கும் போது ,ஒரு இறந்த பசுவை ,பயனில்லாததால் எரித்தனர் .அதிலிருந்து ஒரு சொட்டு நெய் விழுந்ததும் ,ஒரு பங்காளி அதை நாக்கினால் நக்கினான் .அந்த செயலுக்காக அவனுடைய கூட்டத்தை ஒதுக்கி வைத்தனர் .அவர்கள் வழி வந்த மாடு சாப்பிடும் இனம் தான் பரையராகிற்று .ஆக மாட்டிறைச்சி சாப்பிட்ட பிராமணர்களின் ஒரு பிரிவு பரையராகிற்று .இது ஒரு சதியால் நடந்தது . " - பரையர்கள் பற்றி கேரளாவில் உலவும் ஒரு ஐதீகம் : In Kerala the most important Legend of Parayi petta panthirukulam, Pakkanar (Paraiyar) was one of the twelve children of a great Brahmin Vararuchi and his low caste wife. The story or myth states that During Vararuchi's travels along the Nila river, his wife had given birth to twelve children. The children left out in the forest were subsequently found, adopted and raised by families belonging to different communities, recognised one another as they grew up. Those twelve sons were: Mezhathol Agnihothri (Brahman), Pakkanar (Parayan), Rajakan (Washerman), Naranath Bhranthan (Elayathu, a lower class Brahman), Kaarakkal Maatha (high caste Nair), Akavoor Chaathan (Vysyan), Vaduthala Nair (Nair Soldier), Vallon (Thiruvalluvar of Tamil Nadu), Uppukottan (Muslim), Paananaar (Paanan, a low caste of country musicians), Perumthachan (carpenter), Vaayillaakkunnilappan (deity).
- தமிழாக்கம் : "பறையி பேட்டை பந்திரகுலம் பாக்கனார் (பரையர்) பற்றி கேரளாவில் உலவும் ஒரு ஐதீகம்.அவர் வரருஷி என்ற மகா பிராமணருக்கும் அவருடைய கீழ் ஜாதி மனைவிக்கும் பிறந்தவராகும் .நிலா ஆற்றின் கரையில் பயணித்தபோது அவர் மனைவிக்கு 12 பிள்ளைகள் பிறந்தன.அந்த பிள்ளைகளை அவர்கள் காட்டில் விட்டு விட்டு சென்று விட்டனர் .அந்த 12 பிள்ளைகளையும் 12 வெவ்வேறு ஜாதியினர் தத்து எடுத்து வளர்த்தனர் .அவர்கள் வளர்ந்ததும் ,ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டனர் . அந்த 12 பேரும் முறையே : 1.மேளத்தோல் அக்னி ஹோத்ரி (பிராமணர் )
- பாக்கனார் (பரையர்)
- ராஜக்கன் (வண்ணார்
- நரந்த பிரான்தன் ( தாழ் பிராமணர்)
- காராக்கல் மாதா (நாயர் )
- அகவூர் சாத்தன் (வைஷ்யன் )
- வடுதலா நாயர் (நாயர் வீரர் )
- வல்லோன் (தமிழ் நாட்டு திருவள்ளுவர் )
- உப்புகோட்டன் (முஸ்லீம் )
- பாணன் (கீழ் ஜாதி இசை கலைஞன் )
- பெரும்தச்சன் (தச்சன் )
- வாயில்லக்குந்நிலப்பன் (தெய்வம் )
ஆக ,எல்லா ஜாதியினரும் பிராமணருக்கும் ,பரையருக்கும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருப்பது போல் ஒரு ஐதீகத்தை உலவ விட்டிருக்கிறார்கள் . இதன் நோக்கம் , மொத்தத்தில் எல்லா ஜாதியும் ஒன்று தான் என்பதை குறிக்கவும் இருக்கலாம் . இதில் ,
பிராமணர்களுக்கு அடுத்தாற்போல் , பரையர்களுக்கு 2 வது இடம் இருப்பதை கவனிக்கவும் .
- .எம்மா ஹரித் என்ற வலைப்பதிவர் இவ்வாறாக கூறுகிறார் :http://parlimenfb.blogspot.in/2011/10/paraiyar-and-brahmin-connection.html
Paraiyar and Brahmin connection
All the Paraiyars have Y-chromosome haplogroup, Haplogroup G, specifically Haplogroup G2a3b1 (Y-DNA). This shows the Paraiyar males are Caucasians. This Haplogroup G2a3b1 is also found in 10% of Iyer and 13% o...f Iyengar Brahmins.[13][14] The Aryan Brahmins have Haplogroup R1a & Haplogroup R2.[13][14]
All the Paraiyars have Y-chromosome haplogroup, Haplogroup G, specifically Haplogroup G2a3b1 (Y-DNA). This shows the Paraiyar males are Caucasians. " பரையர்கள் எல்லோருக்கும் 'ஒய் ' மரபணு 'ஹப்லாகுரூப் ஜி 'உள்ளது .இது பரையர் ஆண்கள் 'காக்கசியன் 'என்று காட்டுகிறது .இதே மரபணு 10% ஐயர்களுக்கும் ,13%ஐயங்கார்களுக்கும் உள்ளது .ஆக ,மரபணு ஆராய்ச்சியும் பிராமணர்களுக்கும் பரையர்களுக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்கிறது . இதைக்குறித்து இன்னும் பல பதிவுகள் /சான்றுகள் உள்ளன .இடமின்மையால் இத்துடன் முடிக்கிறேன் .
ஆக ,பரையர்கள் தான் பூணூலுக்கு சொந்தக்காரர்களா , இந்த நாட்டின் ஆதி ஐயர்களா என்ற கேள்விகளுக்கு பதிலை உங்களிடம் விட்டு விடுகிறேன் .இந்த ஆராய்ச்சியின் முடிவு பரையர் தான் முதல் (original) ஐயர் ,ஆகவே அவர்கள் உயர் சாதி என்பதல்ல .மாறாக ,பரையர் நாம் நினைப்பது போல் தாழ்ந்த சாதி அல்ல என்பது தான் .எல்லா தமிழர்களும் உயர்ந்தவர்களே !கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடியில் யார் தாழ்ந்தவர் இருக்கமுடியும் ?அதுவும் பரையர் முதல் தமிழர் என்று சொல்லப்படும் நிலையில் உள்ள தமிழர் எப்படி தாழ்ந்தவராய் இருக்க முடியும் ?
சாதி பாகுபாடு தமிழர்களிடம் இருந்ததில்லை.தொழில் சார்ந்த பல பிரிவுகள் இருந்தன என்பது உண்மை . கொல்லர் ,வண்ணார் ,பாணர் ,போன்றவை இருந்தாலும் ,அவைகள் சமுதாயத்தில் சமமாகவே இருந்தன .
ஒன்றன் கீழ் ஒன்று என்ற கட்டமைப்பு இல்லை .உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் இல்லை .திருமணங்கள் காதல் முறையில் ,களவு வழியில் எளிதாய் நடந்தன .ஆணவக்கொலைகள் நடக்கவில்லை .சாதிய அமைப்பு, பின்னர் வந்தேறிய அந்நியர்கள் ,தமிழர்களை எளிதாய் ஆள வகுக்கப்பட்ட சதியமைப்பே என்பதை புரிந்து கொள்வோம் . நன்றி .
--------------------------------------------------------------------------------------------------------------------------
பொறுப்பு துறப்பு : ஆதாரங்கள் ,மேற்கோள்கள் காப்புரிமை மீறல்கள் இல்லாமல் பொது தகவல் தளங்கள் மூலமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.இது ஒரு ஆராய்ச்சி கட்டுரை. இதில் வரும் கருத்துக்கள், தகவல்கள் எந்த தனி மனிதனையே அல்லது சமூகத்தையோ புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல.