நான் சிறுவனாக இருந்த 60 களில் தமிழ் திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த நாகேஷ் ,சந்திரபாபு ,சோ ,மனோரமா போன்றவர்களின் நகைச்சுவைக் காட்சிகள், இன்றும் மனதை விட்டு அகலாமல் நிற்கின்றன .தூய்மையான நகைச்சுவை காட்சிகள் .யாரையும் புண் படுத்தாமல் ,சுத்தமான நகைச் சுவைக் காட்சிகள் !.ஆனால் இன்றய நிலைமை யோ கவலை அளிக்க க் கூடியதாக இருக்கிறது.எப்படி ?
இப்போதைய காட்சிகள் !
அன்றைய காலக் கட்டத்தில் நகைச்சுவை ஒரு தனி கிளை க் கதையாக அல்லது கதையுடன் பின்னப்பட்டு ,ஒரு அடிப்படை கருத்தோடு அமைக்கப் பட்டிருக்கும்.பல முறை சிரிப்பையும் சிந்தனையையும் உருவாக்கும் காட்சிகளாக இருக்கும்.'திருவிளையாடலில் ' தருமியின் பாத்திரம் ,'அன்பே வா ' படத்தில் நாகேஷின் காட்சிகள்,'தேன் மழை' திரைப்படம் , எல்லாம் நினைத் தாலே சிரிக்கும் காட்சிகளாக இருந்தன. .
ஆனால் இன்றைய நாளில் நகைச்சுவை காட்சிகள் அமைக்கும் விதம் முற்றிலுமாக மாறி விட்டது.எப்படி ?
- இரட்டை பொருள் படும் படியான, 'அசிங்கமான ', இளைய சமுதாயத்தை தப்பான பாதையில் கொண்டு செல்லக்கூடிய காட்சிகள் மிகுதியாக வருகின்றன.தாயாய் மதிக்க வேண்டிய வயதுடைய பெண்களையும் காமக் கண்ணோடு பார்ப்பது போல் காட்சிகள்.இன்னொருவரின் மனைவியையும் இச்சையோடு பார்ப்பது போல் காட்சிகள் !கல்லூரியில் பெண்கள் காதலுக்கத்தான் வருவது போலவும் ஆண்கள் எல்லாம் அதற்காக அலைவது போலும் காட்சிகள்.
- அடிப்பதும் ,கொல்லுவதல்லாம் நகைச் சுவையா ?கொதிக்கும் வெந்நீரை முகத்தில் வீசுவது 'சிரிப்பா ' ? ஒரு குறிப்பிட நடிகரை அடிப்பது தான் ,எல்லா படங்களிலும் நகை சுவையாக காட்டப்படுகிறது .எதற்கெடுத்தாலும் அரிவாள்களை தூக்கிக் கொண்டு விரட்டுவது போல் காட்சிகள்.பார்க்கும் குழந்தைகள் எல்லோரும் ,அரிவாளை தூக்குவதும் ,ஆளை அடிப்பது ஒன்றும் தவறில்லை ,நகைச் சுவை தான் ,என்று நம்ப வைக்கிறது இப்படியான காட்சிகள்.அப்புறம் தெருவில் யாரயாவது உதைத்தால் ,நம் இளைஞரெல்லாம் ,விழுந்து விழுந்து சிரித்து விட்டு போய் விடுவார்கள் !ஆண்களை அடிக்கக் கூடாத இடத்தில அடித்தால் மரணம் தான் .ஆனால் அப்படி அடிப்பது தமிழ் படங்களில் 'ஜோக் ' !
- இன்னொரு மோசமான போக்கு என்னவென்றால் ,ஏமாற்றி ஒருவரை எதிலாவது மாட்டி விடுவது நகைச்சுவையாக கருதப்படுவது தான் .ஒரு படத்தில் மின்சார மோட்டார் ஒன்றை சரிசெய்து கொண்டிருக்கும் ஒரு நடிகரை ,இன்னொரு நடிகர் மின்சாரத்தை பாய விடுகிறார் .உடனே அவர் அலறுகிறார் .என்ன ஒரு 'ஜோக் ' ! இதை எப்படி சிரிப்பாக கொள்வது ? அப்பாவிகளை பிரச்னையில் மாட்டி விடுவது நல்ல நகைச்சுவையா ?
- ஆட்களை அசிங்கமாக வருணித்து பேசுவது அடுத்த நகைச் சுவை !'போண்டா தலையா ,உன் கரடி மூஞ்சிக்கு ,தவக்களை ,போன்ற சொற்கள் எல்லாம் 'ஜோக் ' தானா ?சிந்திக்க வேண்டும் .
- அடுத்தது ,பெரியவர்களை அவமதிப்பது ,ஆசிரியர்களை ஏமாற்றுவது போன்ற காட்சிகள் 'நகைச் சுவையாக, வரம்பில்லாம்மல் காட்டப்படுகிறது .இவைகள் பார்ப்பவரின் மனதை நிச்சயமாக பாதிக்கும் என்பதில் ஐயமில்லை .
-------------------------------------------------------------------------------------
(வலைத்தமிழ்.காம் இணைய இதழில் 5/11/2015 அன்று வெளியானது )
No comments:
Post a Comment