Saturday, 13 February 2021

சமூக ஊடக உரையாடல் விதிகள் .

தற்போது நாம் எல்லோரும் முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் நாள் முழுதும் மூழ்கி இருக்கிறோம். பல பதிவுகள் இடுகிறோம். பல பதிவுகளுக்கு, பதில் பதிவு கொடுக்கிறோம். இவ்வாறாக நாம் ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறும்போது, பல நேரங்களில், நமது மனநிலைக்கு தகுந்தாற் போல் சொற்களை பயன்படுத்துகிறோம். சமயத்தில் அளவுக்கு மீறி பயன்படுத்தி விடுகிறோம். தவறான சொற்களை பயன்படுத்தி விடுகிறோம். சிலர் கெட்ட வார்த்தைகளை கூட பயன்படுத்துகிறார்கள். சமூக ஊடங்களை பொருத்தவரையில், நம்முடைய சொற்கள் தான், நம்முடைய படம். நல்ல சொற்களை பயன்படுத்தினால், நாம் சமூக வெளியில் அழகாய் தெரிவோம். அசிங்கமான சொற்களை பயன்படுத்தினால், அசிங்கமாக தெரிவோம். ஆக சொற்களே நம்மை வரையும் தூரிகை என்பதை மறக்கக்கூடாது. இதை கருத்தில் கொண்டு, சமூக ஊடகங்களில் கடைபிடிக்க வேண்டிய சில உரையாடல் வீதிகளை வகுத்துள்ளேன். படித்துப் பார்த்து பயன்பெறவும். இந்த பயன்பாட்டு விதிகளை நான் செயல்படுத்துவதால், சமூக ஊடகங்களில், வெற்றிபெற்ற ஒருவராக, உலாவிக் கொண்டிருக்கிறேன்.Quora கோரா என்ற பன்னாட்டு கேள்வி-பதில் இணையதளத்தில், என்னுடைய பதில்கள், இதுவரை 50 லட்சம் பார்வைகளை கடந்து, தினமும் ஆயிரம் பார்வைகள் பெறுகிறது என்பது என் வெற்றிக்கு சாட்சி . 
  1.  பதிவுகளில் கனிவான ,பணிவான சொற்களையே பயன்படுத்துங்கள். கிண்டலான பதிவுக்கு கிண்டலான பதில் இருக்கலாம். ஆனால் மனதை காயப்படுத்துவதாக இருக்கக்கூடாது. 
  2.  நீ, உனக்கு போன்ற மரியாதையற்ற சொற்கள் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. 
  3.  எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ, சாதியையோ, மதத்தையோ குறிப்பிட்டு தாக்கக் கூடாது. இன்னொரு மதத்தின் கோட்பாடுகளை குறித்துப் பேச வேண்டுமானால், அதில் அனுபவம் இருக்க வேண்டும். இல்லாமல் அது குறித்துப் பேசக் கூடாது. எடுத்துக்காட்டாக, பரிசுத்த ஆவி எனும் கிறிஸ்தவ கோட்பாடு பற்றி ஒன்றுமே அறியாமல், அனுபவப் படாமல், அதைத் தாக்கி பல பதிவுகள் போடப்படுகின்றன. அது தவறு.சம்பந்த்தப்பட்டவர்களை அது காயப்படுத்தலாம் . 
  4. Controversial, வெவ்வேறு பார்வைகள் கொண்ட விடயங்களை பேசலாம். ஆனால் சொற்பயன்பாடு கவனமுடன், நடுநிலையாக(neutral ) இருக்க வேண்டும். 
  5.  கருத்துக்கு பதில் கருத்து தான் இருக்க வேண்டும். கருத்து சொன்னவரை தாக்கக்கக்கூடாது. 
  6.  ஒருவர் தன்னுடைய கதையை பகிர்ந்து கொண்டால், கதையில் அவர் பங்கை தாக்க கூடாது. உங்கள் கருத்துக்களை கனிவாக கூறலாம். 
  7.  நல்லதை மனதார வாழ்த்துங்கள்.குறை கூறலாம் ,ஆனால் ,மனது புண்படாமல் கூறவேண்டும் .எடுத்துக்காட்டாக ,ஒரு 35 வயது தில்லி சார்ந்த பெண் ,தன் கணவர் திடீரென இறந்து விட ,வாழ்வதற்கு வழியில்லாமல் ,நட்சத்திர விடுதிகளில் விபச்சாரியாகி ,குடும்பத்தை காப்பாற்றுகிறாள் .அவள் மனசாட்சி அவளை உறுத்த ,கோராவில் மனம் விட்டு அழுது அவள் கதையை பகிர்கிறாள் .வாசகர்களின் கருத்தை கேட்கிறாள் .பலர் ,அவளை ஆதரித்து எழுதினார்கள் .ஆனால் ,நானோ  ,'மகளே ,நீ செய்வது தவறு .எவ்வளவு சீக்கிரம் முடியுமோ ,அவ்வளவு சீக்கிரம் இந்த தொழிலிலிருந்து வெளியேறி ,வருமானம் குறைவாக இருந்தாலும் ,ஒரு சின்ன வேலையில் சேர்ந்து ,உன்னுடைய பிள்ளைகளை ,சின்ன பள்ளிகளில் சேர்த்துவிடு 'அதுதான் ,உன் கணவருக்கு நீ செய்யும் அஞ்சலி .'என்று போட்டேன் .அவள் ,எனக்கு கண்ணீருடன் நன்றி கூறினாள்
  8.  ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ, அல்லது குழுவுக்கோ, கட்டுப்பட்டவரானால், எதிரான கருத்துக்கள் வரும்போது , உணர்ச்சிவசப்படாமல், உங்கள் நிலையை தெளிவாக,காரணத்தோடு  விளக்கிச் சொல்லுங்கள்.
  9.  உரையாடல் ஒரு நேரமும் சண்டையாக மாறக் கூடாது.                                      இதையெல்லாம் நீங்கள் கடைப்பிடித்தால், உங்கள் சமூக வெளி பயணம் இனிதாகும்!வாழ்த்துக்கள் !

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete