செய்தித்தாள்களை புரட்டினால் தினமும் பல ஒரு காம வெறி குற்றங்கள் அரங்கேறுவது பதிவாகிறது. மாணவிகளை மனைவிகளாக பார்க்கும் ஆசிரியர்கள், கீழே வேலை பார்க்கும் காவலர்களை காமக்கண்ணோடு பார்க்கும் காவல்துறை மேலதிகாரிகள் ,வாகனங்களில் பெண்களிடம் அத்துமீறல்கள் ,இப்படி எங்கு பார்த்தாலும் தமிழ்நாட்டில் காமக் குற்றங்கள் பெருகி ,இங்கு வாழும் சிறுமிகளையும், பாட்டிகளையும் மற்றும் பெண்களையும் திகில் அடைய வைத்திருக்கிறது.தமிழ்நாட்டில் பெருகி வரும் காமவெறி குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், சமீபத்தில் தமிழக அரசு பாலியல் குற்றங்களுக்கு தண்டனை அதிகரித்து சட்டம் இயற்றி இருக்கிறது.இதன் முக்கியமான அம்சங்கள் இதோ :
தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்ன?
இந்த சட்டம், அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்துமா? இந்த சட்டத்தின் பின்னணி என்ன? பாலியல் குற்றங்கள் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் அதிகம் நடக்கிறது ?தமிழ்நாட்டில் மட்டும் ஏன் PERVERTED CRIMES , அதாவது மனப்பிறழ்வான பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கிறது?தமிழ்நாட்டில் என்று அதற்கு சிறப்பான காரணங்கள் உள்ளனவா?அப்படி என்றால் ,அதற்கு உள்ளார்ந்த காரணம் என்ன? இவைகளை எல்லாம் இப்பொழுது ஆய்ந்து பார்ப்போம்.
முதலில் இந்த சட்டத்தின் பின்னணி என்று என்ன என்று பார்ப்போம் . தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை அரசு உன்னிப்பாக கவனித்து ,அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று எண்ணி இயற்றியது அல்ல இந்த சட்டம். சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் நடந்த ஞானசேகரன் வன்புணர்வு குற்றத்தினால் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பை அடக்குவதற்காக கொண்டு வந்த சட்டம் தான் இது என்பது தான் பல அரசியல் ஆய்வாளர்கள் கருத்து.
அது எப்படியோ,வலுவான ஒரு சட்டத்தை கொண்டு வந்தாகி விட்டது. இந்த சட்டத்தை கொண்டு பாலியல் குற்றங்களை குறைத்து அடக்கி விட முடியுமா?இல்லையா ?முதல் கேள்வி ,இந்த சட்டத்திற்கு அடங்குமா காமவெறி/ இச்சையின் ஆவி?
தவறான புரிதல் ! தவறான தீர்வு ! இதை விளக்குவதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு பார்க்கலாம். ஆண்களை அதிகமாக பாதிக்கும் ஒரு நோய் 'சிறுநீர் தட தொற்று'. ஆங்கிலத்தில் இதை Urinary Tract Infection என்று சொல்வார்கள். இந்த தொற்று ஏற்பட்டால் சிறுநீர் சொட்டு சொட்டாக வரும் .சிறுநீர் கழிக்கும் போது,ஒரே வலியாக இருக்கும் .இதை ஏற்படுத்துவது ஒரு வகை பாக்டீரியா. இதில் பல வகை பாக்டீரியாக்கள் உள்ளது. அதில் எந்த குறிப்பிட்ட பாக்டீரியா இந்த தொற்றை உருவாக்கியது என்பதை முதலில் பகுத்தறிய வேண்டும்.அந்த குறிப்பிட்ட பாக்டீரியாவை கொல்லும் திறன் கொண்ட நுண்ணுயிர் கொல்லி மருந்தை உட்கொண்டால் தான் அந்த பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டு நோய் தீரும்.இதற்கு பலவிதமான ஆன்ட்டி பயோடிக் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் உள்ளன. ஆனால், அந்தத் தொற்று எந்த கிருமியால் உண்டாகி இருக்கிறது என்று கண்டுபிடித்து அதை கொல்லும் நுண்ணுயிர் கொல்லி மருந்தை சாப்பிட்டால் மட்டும் தான் போகும். .இல்லாவிட்டால் நீங்கள் எத்தனை மருந்து சாப்பிட்டாலும் அந்த கிருமிகள் சாகாது .தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கும் .ஆக, ஒரு நோயின் சரியான காரணம் என்ன என்று கண்டுபிடித்தால் தான் அதை குணப்படுத்த முடியும் . இல்லை என்றால் குருட்டு வாக்கில் மருந்து கொடுத்து அது .குணமே ஆகாது .
அதேபோலத்தான் இந்த பாலியல் குற்றங்களும் .என்ன காரணத்தினால் நடக்கிறது என்பதை தெரியாமல் ,அதற்கு இதுதான் மருந்து என்று கூறுவது சரி அல்ல என்பது சமூகவியலாளர்கள் கருத்து.
தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை ஆராய்ந்து பார்த்த சமூகவியலாளர்கள்,தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களுக்கு கீழ்க்கண்ட காரணங்களை பட்டியலிடுகிறார்கள்.அவற்றை ஒவ்வொன்றாக இப்போது அலசுவோம்:
- தமிழ்நாட்டில் நிலவும் குடி மற்றும் போதை பொருட்கள் பயன்பாடு தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றுதான் அரசே மதுவை விற்று அதனால் லாபம் பார்க்கிறது.பொங்கலுக்கு மட்டும் 434 கோடிக்கு மது விற்பனை நடந்திருக்கிறது. மது விற்பனைக்கு ஒரு இலக்கு நிர்ணயித்து அதை செயல்படுத்தும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.இதைத் தவிர தற்போதைய தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் புழக்கம் மிகவும் அதிகரித்து, ஒரு கட்டுப்பாடு இல்லாமல் காணப்படுகிறது .தமிழ்நாட்டில் நடக்கும் பல பாலியல் குற்றங்களுக்கு பின்னணியில் முக்கியமாக மதுவும், போதை பொருட்களும் அதிகமாக பங்கு வகிக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இதை குறித்த புள்ளி விவரங்கள் நம் கையில் இல்லாவிட்டாலும், நாம் தினமும் வாசிக்கும் செய்திகளில், பல பாலியல் குற்றங்கள் மது போதையில் மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டினால் தான் நடக்கிறது என்பது தெளிவு. இப்போது இயற்றப்பட்டிருக்கும் சட்டத்தில்,மது,போதை பொருளை எடுத்துவிட்டு, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு என்று தனியாக அதிகரிக்கப்பட்ட தண்டனை என்று ஒன்றும் இல்லை. அதைப்பற்றி இந்த சட்டத்தில் பேசப்படவே இல்லை என்பதை சமூக செயல்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
- காமவெறியூட்டும் காட்சிகள் மற்றும் பாடல்கள் தடை இரண்டாவதாக ,தமிழ் திரைப்படங்களிலும் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்,மற்றும் சமூக ஊடகங்களிளும் ஒளிபரப்பப்படும் காணொளி(reels ) போன்றவைகளிலும், எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் விரும்பியபடி காம வெறியேற்றும் காட்சிகளை யாரும் போடலாம். அதற்கு எந்தவித அரசு கட்டுப்பாடும் கிடையாது .பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் பெண்கள் கவர்ச்சி படத்தை போடுவது சமூக ஊடகங்களில் இப்போது பரவலாக வாடிக்கையாக வைத்தது விட்டது. BMW கார் கம்பெனி எப்படி உருவாகியது என்று அதன் சரித்திரத்தை போட்டுவிட்டு, அதன் கீழே ஒரு கவர்ச்சிகரமான பெண்ணை போடுகிறார்கள் .இதை யாரும் கேட்பதும் இல்லை, எந்தவித தடையும் இதற்கு கிடையாது .மாறாக இந்த காட்சிகளுக்கு விருப்பங்கள் LIKES நிறைய கிடைக்கின்றன. திரும்பத் திரும்ப போடுகிறார்கள். பிறந்த நாள் வாழ்த்து எனக்கு தெரிவியுங்கள் என்று சொல்லி கவர்ச்சியான பெண்களின் படங்களை போடுகிறார்கள் .இவைகள் எதுவும் எந்தவிதமான கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டது அல்ல. ஆனால், இவைகள் இளம் வாலிபர்களின் நெஞ்சினிலே காமத் தீயை மூட்டி அவர்களை ஒரு காம வெறியனாக மாற்றுகிறது என்பது சமூகவியலாளர்களின் கருத்து. அதிலும் குறிப்பாக திரைப்படங்களில் வரும் 'ஐட்டம் சாங் 'என்று சொல்லப்படும் காம களியாட்டங்கள் மிகவும் இந்த வெறியை கூட்டும். இதன் விளைவாக, இவ்வாறு வெறியேற்றப்பட்ட ஆண்கள் ,அந்த வெறியை எப்படி தீர்ப்பது என்று என்ற எண்ணத்திலேயே சாலைகளில் அலைந்து கொண்டிருப்பார்கள். வெறியேற்றியது தமன்னாவாக,சமந்தாவாக இருக்கலாம். ஆனால் வெறியை தணிப்பதற்கு,அந்த பாவம் செய்த தமன்னா கிடைக்க மாட்டார் !வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு பாவமும் செய்யாத சிறுமியோ அல்லது இருளில் தனியே நடந்து கொண்டிருக்கும் ஒரு பாட்டியோ தான் எளிதாக கிடைப்பார்கள்! உடனே இவர்கள் அவர்களிடம் தங்கள் காம வெறியை தீர்த்துக் கொள்கிறார்கள்.பெண் சமத்துவத்தில் மேலை நாடுகளை இந்தியா பின்பற்றினாலும், மேலை நாடுகள் போல, காமவெறி பாலியல் சேவை மையங்கள் இந்தியாவில் கிடையாது.இந்தியாவில் சட்டப்பூர்வமான விபச்சார விடுதிகளும் கிடையாது .அதை அனுமதிக்கவும் மாட்டார்கள். அனுமதி இல்லாமல்,மசாஜ் சென்டர் போன்ற போன்ற வேறு பெயர்களில் நடத்திக் கொண்டிருக்கும் சிலரையும் உடனே கைது செய்வார்கள் .ஆக ,காம வெறியை தீர்த்துக் கொள்ள,அப்படி ஒரு வழியும் இந்தியாவில் இல்லை.ஆதலால்,காமவெறியூட்டப்பட்ட இளைஞர்கள், கிழவர்கள், மொத்தத்தில் ஆண்கள் எல்லோரும், கிடைத்த எளிதான வழியில் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வார்கள்..சில சமயம் கிடைக்காத பட்சத்தில், சிலர் தன் சொந்த வீட்டிலேயே,சொந்த மகளிடம் கூட தீர்த்துக் கொண்ட கேவலமான செய்திகள் கூட உள்ளது. அந்த அளவு கட்டுப்படாத பலமானது காமவெறி ஆவி.இதை சட்டத்தினால் நிச்சயமாக கட்டுப்படுத்த முடியாது என்பது ஆவிகளை பற்றி தெரிந்தவர்களின் ஆழமான கூற்று.
- அப்படியென்றால்,எப்படித்தான் இந்த காம ஆவியை கட்டுபடுத்துவது ? ஆண்களின் பார்வையை பற்றி சமீபத்திய ஒரு ஆராய்ச்சி முடிவு வந்திருக்கிறது. அது என்னவென்றால், சராசரியாக ஒரு ஆண் தன்னுடைய வாழ்நாளில் கிட்டதட்ட ஒரு வருடம் பெண்களை இச்சைக் கண்ணோடு உற்று நோக்குவதிலேயே கழிக்கிறான் என்பதுதான் இந்த செய்தி !இதை இங்கு இளைஞர்கள் 'சைட்' அடிப்பது என்று அவர்களுடைய மொழியில் சொல்வார்கள் . இது இயற்கையிலேயே நடக்கிறது.இது ஆணின் இயற்கை கடமை. ஒரு தகுந்த பெண்ணை தேடுவது ,அவளுடன் உறவு கொள்வது, பின்னர் குழந்தை பெறுவது என்ற ,இனப்பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இயற்கை உந்தல் ஒன்றாகும் .இந்த இயற்கையின் உந்துதலை சட்டம் போட்டு எப்படி தடுக்க முடியும் ?அப்படி தடுப்பது அறிவுபூர்வமாக சரியா? ஒரு பெண்ணை பின் தொடர்வது என்பது ,ஆண் கணக்கில்,தனக்கு ஏற்ற துணையை தேடுவதன் ஒரு முயற்சியாகும் . ஆண் பெண் காதல் வாழ்க்கையில் ,அது இன்றியமையாத ஒரு அங்கமாகும்.அதை சட்டப்படி குற்றம் என்றால் ஒரு ஆண் தனக்கு ஏற்ற துணையை எப்படி தேட முடியும் ?என்பதே இனப்பெருக்க விஞ்ஞானிகளின் கேள்வி.பெண்களின் காம இச்சை என்பது அவர்களுடைய மாதவிடாய் நின்ற பிறகு பொதுவாக தணிந்து விடுகிறது. ஆனால், ஆண்களுக்கு அப்படி அல்ல. அவர்கள் உயிர் வாழும் கடைசி நாள் வரை இந்த உந்துதல் Masculinity இருந்து கொண்டே இருக்கும் என்பது விஞ்ஞானம். இந்த சூழ்நிலையில் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த சில வழிகள் தான் வேலை செய்யும் .அவைகள் என்னென்ன என்று பார்ப்போம்: X முதலாவதாக இச்சை என்பது ஒரு பயங்கரமான ஆவி .அதை கட்டுப்படுத்த வேண்டுமானால் அதற்கு தீனி போடக்கூடாது என்பதை நாம் உணர வேண்டும்.காமவெறி ஊட்டும் பாடல்களையோ அல்லது காட்சிகளையோ தடை செய்ய ஆவன செய்ய வேண்டும் .இப்போது எளிதாக அவைகள் கிடைக்கிறது . ஆக, காம வெறி ஒவ்வொரு நிமிடமும் தீனி போட்டு வளர்க்கப்படுகிறது.24 மணி நேரமும் காமத்தை பற்றிய பேச்சு, ஆட்டம் ,கூத்து: இது போதாது என்று 'ஹேப்பி ஸ்ட்ரீட் 'என்று ஆண்களும் பெண்களும் தெருவில் கூத்தடிப்பது ,இப்போது தமிழ்நாட்டில் மிகவும் சாதாரணமாக நடக்கிறது. இதுபோல் நிகழ்ச்சிகள் கர்நாடகாவிலோ , கேரளாவிலோ ,ஆந்திராவிலோ நடப்பது போல கேள்விப்படவில்லை.இந்த ஆபத்தான போக்கை மாற்றாவிட்டால்,பெருகிவரும் பாலியல் குற்றங்களை எந்த முறையிலும் குறைக்க முடியாது என்பது சமூக ஆர்வலர்கள் கருத்து .
- இரண்டாவதாக CIVIL LAW என்று சொல்லப்படும் உரிமை இயல் ச ட்டத்தில் ஒரு கொள்கை உள்ளது. அது என்னவென்றால், ஒரு குற்றம் நடப்பதற்கு அந்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்திருந்தால், அதை ஆங்கிலத்தில் contributory negligence என்று சொல்வார்கள். தமிழில் 'பாதிக்கப்பட்டவரின் பங்கு' என்று சொல்லலாம். இந்தக் கொள்கையின் படி ,ஒரு குற்றம் நடப்பதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்டவர் ஏதாவது பங்களிப்பு செய்திருந்தால், அதை, குற்றத்தை தீர்மானிக்கும் போது/ தீர்ப்பு சொல்லும் போது கணக்கில் கொள்ள வேண்டும் என்பதே.இதை எளிதாக விளக்க வேண்டும் என்றால் ,ஒரு விபத்தினால் பாதிக்கப்பட்டவர் ,சாலை நடுவே தூங்கிக் கொண்டிருந்தார்,என்று வைத்துக் கொள்வோம் ,அவர் மேல் ஒரு வாகனம் ஏறி அவர் இறந்துவிட்டார் என்றால், பாதிக்கப்பட்டவர் சாலையின் நடுவில் படுத்து இருந்ததால் தான் இந்த சம்பவம் நடந்தது, ஆகவே வாகன ஓட்டியின் மேல் முழுவதுமாக குற்றம் சாட்ட முடியாது. இதே சம்பவம் பாதிக்கப்பட்டவர் ,சாலையின் நடைமேடையில் படுத்திருந்தார் என்றால் நீதி அரசரின் குற்றத்தின் மேல் உள்ள பார்வை முற்றிலும் மாறும் என்பதே. இந்தக் கொள்கையை அமுல்படுத்தினால், பெண்கள் எந்த நேரத்திலும் எங்கும் போகலாம் என்ற சுதந்திரம் பாதிக்கப்படலாம். அது ஆண்களுக்கும் பொருந்தும் என்பதை நாம் மறக்க கூடாது. எடுத்துக்காட்டாக ஒரு ஆண் துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்திற்குள் சுதந்திரமாக நுழைந்து, அதனால் அவன் சுடப்பட்டான் என்றால் ,சுட்டவர் மேல் குற்றமில்லை. ஏனென்றால் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் தடையை மீறி சென்றது அந்த ஆண் தான். அது போல பெண்கள் எந்த இடத்தில் எந்த நேரத்தில் இருக்கலாம் என்பது அவர்களுடைய தேவையை பொருத்தது. எடுத்துக்காட்டாக, இரவு நேரத்தில் அலுவலக வேலை நிமித்தமாக ஒரு பெண் நிறுவன வாகனத்தில் செல்கிறாள்.அப்போது ஒரு பாலியல் குற்றம் நடக்கிறது என்றால் அந்த குற்றத்தை ஒரு பாலியல் குற்றமாக கருதலாம். ஆனால், ஒரு பெண் தானாகவே சிவப்பு விளக்கு பகுதிக்குள் சென்று ,அதை வேடிக்கை பார்க்கப் போனேன் என்று சொல்லி இருக்கும் நேரத்தில், அவள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டாள் என்றால், இந்த (contributory negligence) 'குற்றத்தில் பங்கு' என்ற கொள்கை பொருந்தும் .அதுபோல காதலனுடன் ஒரு பெண், தனியாக ஆபத்தான ஒரு காட்டுப் பகுதிக்குள் சென்று காதல் செய்து கொண்டிருக்கும் போது ,அங்கு வரும் வேறு ஆண்களால் அவளுக்கு பாலியல் துன்புறுத்தல் நேருகிறது என்றால், அதையும் வீட்டிற்குள் பத்திரமாக இருக்கும் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிலையும் ஒன்று என்று சொல்ல முடியாது.ஆக ஒரு பெண் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அவளை அரசு பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல என்பது சமூகவியலாளர்கள் கருத்து .காவல்துறையின் உயர்மட்ட அதிகாரியாக இருந்தால் கூட அவர்களுக்கு என்று ஒரு RISK PROFILE என்று சொல்லப்படும் 'ஆபத்து கணிப்பு ' என்று உள்ளது .எடுத்துக்காட்டாக, மாநிலத்தின் முதன்மை காவல்துறை அதிகாரி நள்ளிரவு தனியாக ஒரு சாலையில் செல்கிறார் என்றால் , அவருக்கு பல எதிரிகள் இருப்பார்கள், அவரைத் தாக்க முற்பட முயற்சிக்கலாம் . அதையெல்லாம் அவர் கருத்தில் கொண்டு அங்கு போவதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும். அது போல தான் பெண்களும் .ஆண் நண்பர்களை நம்பி, அவர்கள் கொடுக்கும் தனியான விருந்துகளுக்கு செல்வது, அவர்கள் கொடுக்கும் பானத்தை நம்பி குடிப்பது என்பதெல்லாம் குற்றத்திற்கு இவர்கள் பங்களிப்பு என்ற கணக்கில் வரும். அப்படி போவது என்றால் அதனால் ஏற்படும் risk assessment 'ஆபத்து கணிப்பு' செய்து அவர்கள் போக வேண்டும். ஏதாவது ஒன்று நடந்தால், அழைத்த ஆண் நண்பர்கள் மேல் பழி போடுவது சரியல்ல.ஆண்களின்இயற்கையான பாலியல் குணமே , பெண்களைக் தங்களிடம் கவர்ந்து, அவர்களுடன் உறவு கொள்வது தான். இது .அவர்களுடைய இயல்பு .ஆண்களுடைய இந்த அடிப்படை குணத்தை புரிந்து கொள்ளாமல்,அவர்களை நம்பி,பெண்கள் தனியாக செல்வது தவறு. ஆண்களுடன் துணையின்றி பெண்கள் போகும்போது,அவர்கள் எது நடந்தாலும் சம்மதம் தான் என்று சொல்வதற்கு சமம் .சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவு எடுக்க அவர்களுக்கு ஞானம் வேண்டும்,என்பது சமூக வியலாளர்கள் கருத்து.ஆக காம வெறி குற்றங்களுக்கு ஆளான பெண்கள், 18 வயதிற்கு கீழே உள்ளவர்களானால் , அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு தங்களுடைய பெற்றோர் சம்மதம் பெற்று தான் சென்றார்களா இல்லையா என்பதை கேட்டு, இல்லை என்றால் அவர்களை எச்சரித்து கண்டிக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால், நடந்த குற்றத்திற்கு அவர்களும் ஒருவகையில் பங்களிப்பு செய்தி ருக்கிறார்கள் என்று கருத வேண்டும். இதற்கான சட்டதிருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். காவல்துறையின் கட்டுப்பாட்டுகளை பெண்களும் மதித்து நடக்க வேண்டும் என்பதும் இதில் முக்கியம்.
- எந்த குற்றத்திற்கும் உடந்தையாக இருந்தவர்களையும், தூண்டி விட்டவர்களையும் சட்டம் விடுவதில்லை .அவர்களை accessory to crime என்பார்கள் .அந்த முறையில் காம வெறி ஏற்றி ,ஒரு குற்றத்தை செய்ய வைக்கும் கவர்ச்சி நடிகைகள், சமூக ஊடகங்களில் கவர்ச்சியாக படங்களை வெளியிடுபவர்கள், இவர்களுக்கும் தண்டனை கொடுக்கும் படியாக சட்டத்தை திருத்த வேண்டும் .ஒரு காம வெறி பாலியல் குற்றம் நடப்பதற்கு முக்கியமான பங்கு இவர்களுக்கும் இருக்கிறது என்பதை யாரும் மறக்க முடியாது என்கிறார்கள் சமூக ஊடகவியலாளர்கள் .
- இன்னொரு முக்கியமான புள்ளி என்னவென்றால், திரைப்படத்துறை,Glamour என்ற கவர்ச்சித்துறை,நிர்வாண புகைப்படத்துறை, இவற்றில் எல்லாம் வேலை செய்யப் போகிறவர்கள், அங்கே என்னென்ன தேவைகள் உள்ளன, என்னென்ன ஆபத்து கணிப்பு உள்ளது என்பதை எல்லாம் அறிந்து தான் நுழைய வேண்டும். நுழைந்த பின் அவர்கள் பாலியல் குற்றச்சாட்டு அளிப்பது ஒத்துக் கொள்ளக் கூடியது அல்ல .அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த துறையை விட்டு அவர்கள் வெளியேறுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை.வேலைக்கு ஒத்துக் கொண்டு பின்னர் புகார் அளிப்பது சரியல்ல.கருவாடு வியாபாரம் செய்தால் நாற்றம் எடுக்க தான் செய்யும்! எனக்கு வியாபாரமும் வேண்டும், ஆனால் நாற்றம் கூடாது என்று சொல்ல முடியாது! வியாபாரம் வேண்டாம் என்றால் வெளியே சென்று விடலாம். அங்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் 100% தெளிவான பாதுகாப்பு உள்ளது என்று யாருமே உத்தரவாதம் தருவதில்லை. அவர்களுடைய துறை அப்படி. இரவும் பகலும் படப்பிடிப்பு நடக்கும் .ஒரே இடத்தில் தங்க வேண்டியது இருக்கும்.வெவ்வேறு ஊர்களுக்கு பயணம் செல்ல வேண்டியிருக்கும். படுக்கை அறை காட்சிகள், குளியலறை காட்சிகள் போன்றவைகள் எடுக்கப்படும் .அது நடித்துக் காட்டப்படும். அதையெல்லாம் எந்த பெண்ணும் ,எப்போது வேண்டுமானாலும் அவள் நினைத்தால், பாலியல் குற்றமாக மாற்ற வழி உள்ளது .ஆதலால் ,பட தயாரிப்பாளர்கள்,முதலில் பெண்களிடம் நிபந்தனைகளை பட்டியலிட்டு,சம்மத கையெழுத்து வாங்கிக் கொண்டு, அதன் பின்னர் தான் நடிக்க விட வேண்டும் என்பதும் சமூக வியலாளர்கள் கருத்து.
- ஒரு பெண் ,ஒரு ஆணிடமோ அல்லது பொது வெளியிலோ தன் கவர்ச்சியை வலிந்து காட்டினால் ,அதன் இயல்பான பொருள் என்ன? விலங்குகளை கவனித்து பார்த்தால் இது தெரியும் .அவைகள் யாருடன் உடலுறவு கொள்ள நினைக்கிறதோ ,அந்த எதிர் பால் விலங்குக்கு தன்னுடைய கவர்ச்சியை காட்டி, அதை தன் பால் ஈர்க்கும். இப்படித்தான் ஆண் மயில்கள் அழகாக தோகை விரித்து ஆடி, தன் அழகைக் காட்டி பெண் மயில்களை கவரும். அதுபோல மனித இனத்தில், ஒரு பெண் தன்னுடைய கவர்ச்சி பாகங்களை ஒரு ஆணிடம் காட்டினால் அந்த ஆணை , தான் உறவு கொள்ள ஆசைப்படுகிறாள் ,அழைப்பு விடுக்கிறாள் , அதற்காக அவனை ஈர்க்கிறாள் என்று பொருள். அவர்கள் அதற்கு தயாராக இருப்பதாக தான் பொருள் கொள்ள வேண்டும் .அப்படி அவர்கள் ஏற்றிவிட்ட காம வெறியை , அவர்களால் தீர்த்து வைக்க முடியவில்லை,ஆதலால் ,அந்த காமவெறி ஏறிய ஆண் வழியில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒன்றுமறியாத அப்பாவி சிறுமியிடம் வன்புணர்வு செய்தால் ,அதற்கு பொறுப்பு இந்த கவர்ச்சி காட்டிய பெண்தான் ,என்பது சமூக சிந்தனையாளர்கள் கருத்து .ரோஹிணி மொல்லேட்டி ஆடும் ஒரு பாட்டின் வரிகள் இதை சொல்கிறது :"ஆசை அதிகம் வச்சு மனசஅடக்கி வைக்கலாமா என் மாமா,ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா," அதாவது, ஆளை மயக்கி விட்டு ,அழகை ஒழித்து வைக்க கூடாது என்கிறது இந்த பாட்டு. ஆக, பொதுவெளியில் கவர்ச்சி காட்டும் பெண்களை,காம குற்றங்கள் செய்யத் தூண்டியதாக தண்டிப்பதற்கு சட்டத்தில் ஒரு இடம் வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கருத்து. காம அழைப்பு விடுத்தவர்களால் அந்த காம வெறியை தீர்த்து வைக்க முடியவில்லை என்ற காரணத்திற்காக, காமவெறிக்கு உள்ளானவர்கள் ,அதை வேறு வழியில் தீர்த்துக் கொண்டு, அதனால் ஒரு பாலியல் குற்றம் ஏற்பட்டால் ,அந்த குற்றத்திற்கு, இந்தப் பெண்களும் உடந்தை என்று சட்டத்தில் கருதப்பட வேண்டும். அதிகமாக, அவ்வாறு வெறியேற்றப்பட்ட ஆண்கள், தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகளிடமோ அல்லது தன் கீழ் படிக்கும் பெண்களிடமோ அல்லது வயதான பாட்டி போன்றவர்களிடமோ , அவர்களுடைய காம வெறியை தீர்த்துக் கொள்கிறார்கள் . அதன் விளைவாக பாலியல் குற்றங்கள் நடக்கின்றன.ஆதலால் , ஆபாச காணொளிகளை அரசு தடை செய்ய வேண்டும். நடிகைகளின் ஐட்டம் பாடல்கள் தடை செய்ய வேண்டும்.காமவெறி குற்றவாளிகளிடம் , எது அவர்களை இதை செய்ய தோன்றியது என்பதை கேட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்களை ,மேற்படி குற்றத்தை தூண்டியதாக கருதி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .
- பெண் சமத்துவ போராளிகள் இந்த குற்றங்களுக்கு உடந்தையான வர்களா ? இன்று காமவெறி குற்றங்களுக்கு ஆளாகி கதறிக் கொண்டிருக்கும் சிறுமிகள்,அவர்களின் பெற்றோர்கள்,வயதான பாட்டிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள், அவர்களாக இந்த நிலைக்கு விரும்பி வந்தார்களா அல்லது மற்றவர் தூண்டுதலால் தள்ளப்பட்டார்களா என்று சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை புலப்படும். தமிழ் பெண் சமூகம் மிகவும் பாதுகாப்பாக, குடும்பத்தில் ,கட்டுப்பாட்டுடன், அன்புக்கு அடிபணிந்து வாழ்ந்து கொண்டிருந்தது.அவர்களை பெண் சமத்துவம், அது இது என்று வேண்டாததை பல சொல்லி,தமிழ்நாட்டில் வாழும் தமிழ்நாட்டில் வாழும் மற்ற மொழி சமூகத்தை சார்ந்தவர்கள், இந்த நிலைக்கு தள்ளிவிட்டு விட்டு ,இப்போது அதன் பயங்கர விளைவுகளை சந்திக்கும்போது ஒதுங்கி நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை.எல்லா இடங்களுக்கும் ,எந்த நேரத்திலும் பெண்களும் சமமாக செல்லலாம் என்று சொல்லும் போது,கூடவே இந்த ஆபத்து வரும்,அதை நீங்கள் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும், கற்பை இழந்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் அவர்கள் சொல்லவில்லை .இது பெரிய ஆபத்து அல்ல ,இதை ஒன்றும் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம், சமத்துவத்திற்காக எதையும் பலி கொடுக்கலாம், ஒரு பெண்ணின் மானம் ,அவளுடைய கற்பு, எதை வேண்டுமானாலும் சமத்துவத்திற்காக பலி கொடுக்கலாம் என்று வேண்டாத போதனைகளை சொன்ன பெரியவர்கள், பெண் சமத்துவ போராளிகள் இவர்கள் எல்லாம் இப்போது நடக்கும் இந்த காமவெறி குற்றங்களுக்கு,ஒரு வகையில் உடந்தையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.அவர்களுடைய போதனைகள் பெண்களுக்கு ஆபத்தானது, தவறு, பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை உணரும் தருணம் ,இப்போது வந்து விட்டது.இப்போதும் தமிழர்கள் உணரவில்லை என்றால், இந்த ஆபத்தை, காமவெறி குற்றங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம்,பெண் சமத்துவத்திற்காக நாங்கள் கொடுக்கும் விலை அது என்று சொல்வது போல் ஆகிவிடும்.அப்படி ஏற்றுக் கொள்பவர்கள் ,பின்னர் கதறக் கூடாது ,காவல்துறையில் புகார் அளிக்கக் கூடாது, நடந்ததை மனதார மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும் .ஏனென்றால், அது பெண் சமத்துவத்தின் விலை என்று கொள்ள வேண்டும்.இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த பெண் சமத்துவ போதனையாளர்கள் யாரும் இதை கடைபிடிப்பதில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் இந்த குற்றங்கள் எதுவும் நடந்ததில்லை என்பதுதான்.
- பாலியல் சேவை மையங்கள்! மேற்கத்திய நாடுகளைப் போல,இந்தியாவும் 100% பெண்கள் சமத்துவத்தை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டோம் .கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் பெண்கள் வியாபித்து இருக்கிறார்கள் .எங்கு பார்த்தாலும் பெண்கள்! எந்த நேரத்திலும் பெண்கள்! எந்த ஊடகத்திலும் பெண்கள் என்று எல்லா அளவிலும் மேற்கத்திய நாடுகளைப் போல இந்தியா ஆகிவிட்டது .ஆனால் ,மேற்கத்திய நாடுகளில் ,ஆண்களுக்கு பாலியல் ஆசை வந்து விட்டால், அதை பல வழிகளில் தீர்த்துக் கொள்ளும் வழிகள் ,அவர்கள் கலாச்சாரத்திலே உள்ளது. இதை தவிர சட்டபூர்வமாக தீர்த்துக் கொள்ள, பாலியல் சேவை மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விபச்சார விடுதிகள் உள்ளன. எல்லாவற்றிலும் மேற்கத்திய நாடுகளை பார்த்து செய்யும் இந்தியா ஏன் அவர்களைப் போல் இங்கும் பாலியல் சேவை மையங்கள் ஆரம்பிக்கக் கூடாது ?அப்படி ஆரம்பித்தால், பெருமளவு இந்த காமவெறி குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது .பாலியல் தேவை உள்ள ஆண்கள் பாலியல் சேவை மையங்கள் சென்று தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்றிருக்கும் போது தெருவில் விளையாடும் சிறுமிகள்,வயதான பாட்டிகள் போன்றவர்களிடம் அவர்கள் காம வெறியை காட்டுவதற்கு வாய்ப்பு மிக குறைவு என்பதே சமூக பார்வையாளர்கள் கருத்து. ================================================================== குறிப்பு :நம் வீட்டு சிறுமிகளையும் , பெண்களையும் மற்றும் வயதானவர்களையும் பாதுகாக்க, இந்த பதிவை குறைந்தது 10 நண்பர்களுக்கு பகிரவும். இதைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் நீங்கள் பதிவிடலாம் .நன்றி .