தமிழ்நாட்டில் தற்போது பட்டியல் இனத்திற்கு 18% கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது இந்த 18 % ல் அருந்ததியர் என்ற தெலுங்கு சாதியினருக்கு 3% உள் ஒதுக்கீடு தரப்படுகிறது. அதை தவிர மீதி உள்ள 15 % இடங்களில்,ஆதி தமிழ் குடிகளான ,பரையர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு எந்தவிதமான உள் இட ஒதுக்கீடும் கிடையாது. அந்த இடங்களிலும் தெலுங்கு அருந்ததியர்களுக்கு மேலதிகமாக முன்னுரிமை வழங்கப்படுகிறது.
அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்கலாம்:
- மொத்த பட்டியல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு = 30 இடங்கள்
- அதில் அருந்ததியர்களுக்கு 3% (3/18=1/6) = 05
- அது போக மீதம் இடங்கள் = 25
- அந்த 21 இல் அருந்ததியர்களுக்கு முன்னுரிமை =22
- மீதமுள்ள இடங்கள் =03
இந்த 3% உள் ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை விதி காரணமாக, கிட்டத்தட்ட 90 % இடங்கள் அருந்ததிய மக்களுக்கு சென்று விடுகின்றன என்று புள்ளி விவரங்கள் சான்றளிக்கின்றன. இதன் காரணமாக,தமிழ் 1.5 கோடி பரையர்+ தே.குல வேளாளர் மக்களுக்கு ஒரு இடமும் கிடைப்பதே இல்லை என்ற ஒரு பெரும் குறை உள்ளது .விடுதலை சிறுத்தைகள் கட்சி,இதை பேரளவில் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்று முறையிட்டார்கள் .அது உச்ச நீதிமன்றம் வரை சென்று, உள் ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பாகி விட்டது.முன்னுரிமை விதியை பற்றி அந்த தீர்ப்பில் என்ன சொல்ல ப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியினர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ் குடிகளான 1.5 கோடி பரையர்+ தே.குல வேளாளர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு, உள் ஒதுக்கீடு 5% தரப்படும் எனவும் , அருந்ததியர்களுக்கு மீதமுள்ள இடங்களில் முன்னுரிமை என்ற விதி நீக்கப்படும் என்றும் அறிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதைத் தவிர தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் எல்லாவற்றிலும் ஆதி தமிழ் குடிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தங்களது தேர்தல் வரைவு செயல்பாட்டில் கூறியிருக்கிறார்கள்.
இதோ ,ஆதித்தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் வாக்குறுதிகள்:
வரைவு செயற்பாட்டு பக்கம் 297 லிருந்து நாம் தமிழர் கட்சி,ஆட்சிக்கு வந்தால், ஆதித்தமிழர்களுக்கு என்னென்ன செய்வார்கள் என்று பட்டியலிட்டு இருக்கிறார்கள்.
இதோ அதன் சுருக்கம்:
- தற்போது ஆதிதிராவிடர் என்று அழைக்கப்படும் மக்களை, ஆதி தமிழர் என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.
- ஊர், சேரி என்ற இரட்டை வாழ்விடங்களை ஒழித்து ஒன்றான பொது வாழ்விடமாக மாற்றப்படும் .பொது மயான கட்டமைப்பு உண்டாக்கப்படும்.
- ஆதித்தமிழர் ஜனத்தொகைக்கு ஏற்ப கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் இடப்பகிர்வு கொடுக்கப்படும். நிதி பகிர்வு அவர்கள் ஜனத்தொகைக்கு ஏற்ப இருக்கும்.அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முற்றிலும் அவர்களுக்காகவே செலவழிக்கப்படும்.
- பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்த 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை அபகரித்தவர்களிடமிருந்து மீட்டு, சட்டவழியில் அதை உரியவர்கள் கைகளுக்கு சேர்ப்போம் .இதை உறுதியோடு செய்வோம்.
- அரசு கோயில் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு,தொல் குடிகளுக்கு அவர்கள் ஜனத்தொகைக்கு ஏற்ப பங்கு கொடுக்கப்படும் .அது போல். கோயில் வணிக நிறுவனங்களிலும் பங்கு கொடுக்கப்படும்.
- சாதி எதிர்ப்பு போராட்டத்தில் பலியானவர்களை ,சமூக போராளிகள் என்று அழைத்து , அவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலையும், இழப்பீடும் கொடுக்கப்படும்.
- தாட்கோவுக்கு பதிலாக அயோத்திதாசர் பெயரில் குவையம் அமைக்கப்படும்.
- அரசு ஒப்பந்தங்கள்,ஏரி மீன் ஏலமிடல், மரவிளைச்சல், வணிக வளாகங்கள் ,இவைகள் எல்லாவற்றிலும் ஆதி தமிழர்களுக்கும் தொல்குடியினருக்கும் இடப்பகிர்வு அளிக்கப்படும்.
- எல்லா சமூகத்தினர் தங்குவதற்கும் பொது விடுதி அமைக்கப்படும்.
- பட்டியல் சமூகத்தினர் இடப்பங்கீட்டில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்வது சரியல்ல. தேவைப்பட்டால் ,அவர்களுக்கு உரிய பங்கீடு பொது ஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்படும்.
- தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் கோரிக்கையான பட்டியல் பிரிவிலிருந்து அகற்றம் என்பது அரசாணை மூலம் உடனே நிறைவேற்றப்படும்.
- ஆணவக் கொலைக்கு எதிராக வாக்குறுதிகள்:
No comments:
Post a Comment