கலைஞர் பொதுவாக ,தமிழருக்கு நண்பராகவும் ,பிராமணருக்கு எதிரியாகவும் ஊடகங்களில் சித்தரிக்கப் படுகிறார் .
எதை வைத்து அவர் தமிழர் நண்பராகவும் ,பிராமணர் எதிரியாகவும் பார்க்கப்படுகிறார் ?
இந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டால் உடன் வரும் பதில் ஒன்று,
'இசுலாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மறக்காமல் அவர்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் கலைஞர் ,தீபாவளிக்கு மட்டும் ஒரு போதும் சொல்ல மாட்டார் '
என்பதாகும் .இந்த ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு அவர் ஒரு பிராமண எதிரி என்று சொல்லிவிட முடியுமா ?
சரி ,ஒருவர் பிராமண எதிரி என்று எப்படி கண்டு பிடிக்கலாம் ?
1.கலைஞரின் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் பிராமணர்கள் உண்டா ? .
கலைஞருக்கு ,சாவி ,கி .வா .ஜகன்னாதன் ,தற்போது இந்து என் .ராம் எல்லாம் மிகவும் நெருங்கிய பிராமண நண்பர்கள் .அதில் இந்து ராம் தினமும் காலையில் ஒரு முறையாவது பேசும் நண்பராம் .
கலைஞர் மறைவிற்கு பின் இந்து குழுமமே அவர் புகழ் பாடி சிறப்பு இதழ்கள் விட்டனர் . (இந்து ராமின் புகழாரம் )
இந்து குழுமம், பிராமணரான ஜெயலலிதாவிற்கே இந்த அளவு புகழாரம் சூட்ட வில்லை என்பது கவனிக்கத் தகுந்தது .
சரி ,பிராமணர் அல்லாத நண்பர்கள் கலைஞருக்கு யார் ,யார் ?யோசித்து பார்த்தால் 'நண்பர் 'என்று சொல்லும் படி வைரமுத்து ஒருவரை தவிர வேறு யாருமேயில்லை !
2.கலைஞரின் தனி அறிவுரையாளர்கள் /ஆலோசகர்கள் எல்லோரும் பிராமணர்களே !
கலைஞர் ஆட்சியில் நிதி பொறுப்பாளர்கள் /செயலர்கள் எல்லோரும் பிராமணர்களே .அவர் ஆட்சியில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளில் பிராமணர்களுக்கு மட்டும் அவர் முக்கிய தலைமை பொறுப்புகள் வழங்குவது வழக்கம் .
3.இனி கலைஞர் ஆட்சியில் பிராமணர்கள் செழித்து வளர்ந்தார்களா அல்லது நசுக்கப் பட்டார்களா என்று பார்ப்போம் .
அவரது ஆட்சியின் ஒரு வருடத்தை எடுத்துக்காட்டாக எடுத்து ,அவர் அரசு விடுமுறை வழங்குவதில் , ஒவ்வொரு அரசியல் பிரிவுக்கும் எவ்வளவு கனமளித்தார் என்பதை பார்ப்போம் .
-------------------------------------------------------------------------------------------------------------
இதோ 2010 அரசு விடுமுறை பட்டியல் .அரசு விடுமுறை 2010 .
மொத்தம் -24 நாட்கள்.அதில் ,
எண் . % பிரிவு ---------------------------------நாட்கள் --%
மேலும் ,கலைஞர் ஆட்சியில் ,பிராமண இசை விழாக்கள் ,கல்வி நிறுவனங்கள் எல்லாம் செழித்து வளர்ந்தன என்பதை மறுக்க முடியாது .
4.பிராமணர்களின் அரசியல் செல்வாக்கு நன்றாக இருந்ததும் கலைஞரின் ஆட்சியில் தான் .
கலைஞரே அவர் தன் கைப்பட பிராமணர் புகழ் பாடும் 'ராமானுஜர் 'என்ற சரித்திர தொடரை உருவாக்கி அவருடைய சொந்த தொலைக்காட்சியிலே ஒளிபரப்பினார் . எதிரி என்று காட்டி விட்டு ,பின்னர் அவர் புகழ் பாடுமளவுக்கு கலைஞர் உயர்ந்து விட்டாரா அல்லது அது அவருடைய பிராமண நட்பின் உண்மை பிரதிபலிப்பா ? என கேள்வி எழத்தான் செய்கிறது .அதே கலைஞர்.பெரும் தமிழ் தலைவர்களான அயோத்தி தாசருக்கோ ,வேறு யாருக்குமோ கூட இவ்வாறாக தொடர் எழுதவில்லை என்பது குறிப்பிட தக்கது .ஒரு குறிப்பிட்ட ஜாதிய செல்வாக்கிற்காக 'பொன்னர் சங்கர் 'கதையையும் எழுதினார் என்பதை மறுக்க முடியாது ..
ஆக ,கலைஞர் பிராமண எதிரி என்ற பிம்பம் அரசியலுக்காக தயாரிக்க பட்ட ஒரு பொய் முகம் .உண்மையில் அவர் பிராமணர்களுக்கு ஜாதிய முறையில் வழங்கப்பட்ட உயர் தனி கவுரவத்தை,அவருடைய ஆட்சியில் தொடர்ந்து அளித்துக் கொண்டிருந்தார் என்பதே உண்மை .
பாவம் ,தமிழர்கள் !என்ன சொன்னாலும்,அதை உண்மை என்று நம்பி ஏமாறும் அப்பாவித் தமிழர்கள் ! சமயத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் திராவிடக் கட்சிகளை பற்றி சொல்வது உண்மை தானோ என்று எண்ணத்தோன்றுகிறது !
------------------------------------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு: இது கலைஞரை பற்றிய ஒரு முது நிலை பட்டப்படிப்பு (அரசியல்)மாணவரின் ஆய்வுக்கட்டுரை .உண்மையா ,இல்லையா என்பதை நாம் தாம் தீர்மானிக்க வேண்டும் .
இதைக்குறித்த வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன .
===================================================================

- அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கூட்டத்தில் அதிகம் பிராமணர்கள் இருக்கமாட்டார்கள் .
- அவருடைய தனி அறிவுரை(Personal advisers ) கூறும் கூட்டத்தில் பிராமணர்கள் இருக்கமாட்டார்கள் .
- பிராமணர் சம்பந்தப்பட்ட சலுகைகள் அவர் ஆட்சியில் அதிகம் இருக்காது அல்லது இருந்ததும் குறைக்கப்படும் .
- பிராமணர்களின் அரசியல் செல்வாக்கு அவர் ஆட்சியில் கணிசமாக குறையும் .
1.கலைஞரின் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் பிராமணர்கள் உண்டா ? .
கலைஞருக்கு ,சாவி ,கி .வா .ஜகன்னாதன் ,தற்போது இந்து என் .ராம் எல்லாம் மிகவும் நெருங்கிய பிராமண நண்பர்கள் .அதில் இந்து ராம் தினமும் காலையில் ஒரு முறையாவது பேசும் நண்பராம் .
கலைஞர் மறைவிற்கு பின் இந்து குழுமமே அவர் புகழ் பாடி சிறப்பு இதழ்கள் விட்டனர் . (இந்து ராமின் புகழாரம் )
இந்து குழுமம், பிராமணரான ஜெயலலிதாவிற்கே இந்த அளவு புகழாரம் சூட்ட வில்லை என்பது கவனிக்கத் தகுந்தது .
சரி ,பிராமணர் அல்லாத நண்பர்கள் கலைஞருக்கு யார் ,யார் ?யோசித்து பார்த்தால் 'நண்பர் 'என்று சொல்லும் படி வைரமுத்து ஒருவரை தவிர வேறு யாருமேயில்லை !
2.கலைஞரின் தனி அறிவுரையாளர்கள் /ஆலோசகர்கள் எல்லோரும் பிராமணர்களே !
கலைஞர் ஆட்சியில் நிதி பொறுப்பாளர்கள் /செயலர்கள் எல்லோரும் பிராமணர்களே .அவர் ஆட்சியில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளில் பிராமணர்களுக்கு மட்டும் அவர் முக்கிய தலைமை பொறுப்புகள் வழங்குவது வழக்கம் .
3.இனி கலைஞர் ஆட்சியில் பிராமணர்கள் செழித்து வளர்ந்தார்களா அல்லது நசுக்கப் பட்டார்களா என்று பார்ப்போம் .
அவரது ஆட்சியின் ஒரு வருடத்தை எடுத்துக்காட்டாக எடுத்து ,அவர் அரசு விடுமுறை வழங்குவதில் , ஒவ்வொரு அரசியல் பிரிவுக்கும் எவ்வளவு கனமளித்தார் என்பதை பார்ப்போம் .
-------------------------------------------------------------------------------------------------------------
இதோ 2010 அரசு விடுமுறை பட்டியல் .அரசு விடுமுறை 2010 .
மொத்தம் -24 நாட்கள்.அதில் ,
எண் . % பிரிவு ---------------------------------நாட்கள் --%
- 3% பிராமணர் பண்டிகைகள் --5 நாட்கள் (20 %)
- 0.13% ஜைனர்கள் ------------------------1 நாள் (4%)
- 5% தெலுங்கர்கள் ----------------------1 நாள் (4%)
- 6% இசுலாமியர் -------------------------4 நாட்கள் (16%)
- 6% கிறிஸ்தவர் --------------------------3 நாட்கள் (12%)
- 89% தமிழர் --------------------------------3 நாட்கள் (12%)