தமிழ் உணர்வுக்காக தன் இன்னுயிரை தீக்கிரையாக்கி ,இன்று தமிழ் நாட்டில் ஒரு சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் ,விக்னேஷ் ஒரு இளைஞர் .கொண்ட கொள்கைக்காக உயிரை விடுவது என்பது ,உயிருடன் இருந்து போராடி வெற்றி பெறும் வாய்ப்பை எடுத்துவிடும். இதை இம்மாதிரி இளைஞர்கள் உணர்ந்து ,இம்மாதிரியான காரியங்களில் இறங்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்வோம் .
Showing posts with label காவேரி. Show all posts
Showing posts with label காவேரி. Show all posts
Friday, 16 September 2016
Thursday, 15 September 2016
எனக்கு சொத்து வேண்டாம் !கூழ் போதும் !
பரிசுத்த வேதாகமத்தில் ஒரு சுவையான கதை .யாக்கோபுவும் ஏசாவும் சகோதரர்கள் .அந்த கால வழக்கப்படி மூத்தவன் ஏசாவுக்குத்தான் சொத்து உரிமைகளும் ஆசீர்வாதங்களை உண்டு .ஆனால் ,ஏசாவோ ,பசியாய் இருந்த போது ,ஒரு கூழுக்காக அவைகளை விற்றதாக கதை .தமிழர்கள் ,நாம் எல்லோரும் ஏசாக்கள் தாம் .கேவலம் 500 ரூபாய்க்காக நம்மை ஆளும் உரிமையை அந்நியருக்கு விற்று விட்டோம் .இப்போது நம் அண்ணன் ,தம்பிகள் அங்கே அடிவாங்கி அழுது கொண்டிருக்கும் போது ,அடுத்த தேர்தலை பற்றி பேசிக்கொண்டிருக்கும் தலைவரை பெற்றிருக்கிறோம் !ரோம் பற்றி எரியும் போது நீரோ அரசன் இசை கேட்டுக்கொண்டிருந்தானாம் !இப்போது பெங்களூரு பற்றி எரிகிறது !நமது நீரோக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ?
படம் நன்றி :கூகுள்
Subscribe to:
Posts (Atom)

