எம் .ஜி .ஆர் ஒரு ஏழைப் பங்காளனாக திரையிலும் ,நிஜ வாழ்க்கையிலும் திகழ்ந்தார் என்பதை நாம் மறுக்க முடியாது .எல்லா ஏழைகள் பாத்திரத்திலும் அவர் தோன்றி ஜொலித்திருக்கிறார் .மீனவனாக வருவார் .ரிக்க்ஷா ஓட்டியாக வருவார் .தொழிலாளியாக தோன்றி முதலாளியை எதிர்ப்பார் .உழவனாக வருவார் .'நிழல் வேண்டும் போது ,மரம் ஒன்று உண்டு ;பகை வந்த போது ,துணை ஒன்று உண்டு !'என்றெல்லாம் பாடுவார் !
ஆனால் ,இவர்கள் எல்லோருக்கும் மேலாக துன்பப்படும் /துன்பப்படுத்தப் படும் 'தலித்தாக 'மட்டும் வரவே மாட்டார் !
அது போல் ,கலைஞர் கொடுங்கோல் அரசருக்கு எதிராக கொந்தளிக்கும் வசனங்களை அனலாய் ஊற்றுவார் .அந்தணரின் கொள்கைகளுக்கு எதிராய் பாமரனுக்காக எழுதுவார் .ஆனால் ,ஒரு படத்திலாவது தலித்துக்கு சாதகமாய் ,தீண்டாமைக்கு எதிராய் அவருடைய எழுது கோல் கர்ஜித்தது உண்டா ?
நீண்ட இந்திய திரை வரலாற்றில் , சிவாஜியாகட்டும் ,மம்மூட்டியாகட்டும் ,அமிதாப் ஆகட்டும் ,ஏன் ஒருவர் கூட ஒரு பாதிக்கப்பட்ட தலித்தாக ஒரு படத்தில் கூட நடித்ததில்லை ?
இவர்கள் யாரும் செய்ய மறுத்ததை ரஜினி துணிச்சலுடன் செய்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரியது .இன்று இந்தியா முழுவதும் 'காலா'வின் வசூலை பற்றி பேசாமல் ,ரஞ்சித்தின் கருத்து புரட்சி பற்றி பேசுவதே அவருக்கு ஒரு பெரிய வெற்றியாகும் .
' திரை துறையும் ஏன் சாதியம் பார்க்கிறது ?'என்ற கேள்வி பாலிவுட் ,கோலிவுட் தளங்களில் பேச்சாக மாற வைத்திருக்கிறார் இயக்குனர் பா .ரஞ்சித் !ஒரு வேளை இந்தப் படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தால் கூட ,அது பா .ரஞ்சித் அவருடைய கருத்து புரட்சிக்கு கொடுத்த விலையாக எடுத்துக்கொள்ளலாமா ? .இல்லை ,தலித் அல்லாதவர் இந்த திரைப் படத்தை ஆணவக் கொலை செய்ததாக எடுத்துக்கொள்ளலாம் !எதுவாயிருந்தாலும் ,திரைத் துறையில் ஒரு மாபெரும் கருத்தியல் புரட்சி நடந்ததை திருப்பி அனுப்ப முடியாது !பற்பசை குழாயிலிருந்து வெளியே பிசுக்கப்பட்ட பசையை போல !
No comments:
Post a Comment