Showing posts with label தோற்றம். Show all posts
Showing posts with label தோற்றம். Show all posts

Monday, 11 June 2018

எம் .ஜி .ஆர் இருந்திருந்தால் 'காலா' வில் நடித்திருப்பாரா ?


எம் .ஜி .ஆர் ஒரு ஏழைப் பங்காளனாக திரையிலும் ,நிஜ வாழ்க்கையிலும் திகழ்ந்தார் என்பதை நாம் மறுக்க முடியாது .எல்லா ஏழைகள் பாத்திரத்திலும் அவர் தோன்றி ஜொலித்திருக்கிறார் .மீனவனாக வருவார் .ரிக்க்ஷா ஓட்டியாக வருவார் .தொழிலாளியாக தோன்றி முதலாளியை எதிர்ப்பார் .உழவனாக வருவார் .'நிழல் வேண்டும் போது ,மரம் ஒன்று உண்டு ;பகை வந்த போது ,துணை ஒன்று உண்டு !'என்றெல்லாம் பாடுவார் !
ஆனால் ,இவர்கள் எல்லோருக்கும் மேலாக துன்பப்படும் /துன்பப்படுத்தப் படும் 'தலித்தாக 'மட்டும் வரவே மாட்டார் !
                                                                                   அது போல் ,கலைஞர் கொடுங்கோல் அரசருக்கு எதிராக கொந்தளிக்கும் வசனங்களை அனலாய் ஊற்றுவார் .அந்தணரின் கொள்கைகளுக்கு எதிராய் பாமரனுக்காக எழுதுவார் .ஆனால் ,ஒரு படத்திலாவது தலித்துக்கு சாதகமாய் ,தீண்டாமைக்கு எதிராய் அவருடைய எழுது கோல் கர்ஜித்தது உண்டா ?
                         நீண்ட   இந்திய திரை வரலாற்றில் , சிவாஜியாகட்டும் ,மம்மூட்டியாகட்டும் ,அமிதாப் ஆகட்டும் ,ஏன் ஒருவர் கூட ஒரு  பாதிக்கப்பட்ட தலித்தாக ஒரு படத்தில் கூட நடித்ததில்லை ?
                                        இவர்கள் யாரும் செய்ய மறுத்ததை ரஜினி துணிச்சலுடன் செய்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரியது .இன்று இந்தியா முழுவதும் 'காலா'வின் வசூலை பற்றி பேசாமல் ,ரஞ்சித்தின் கருத்து புரட்சி பற்றி பேசுவதே அவருக்கு ஒரு பெரிய வெற்றியாகும் .
 '                         திரை துறையும் ஏன் சாதியம் பார்க்கிறது ?'என்ற கேள்வி பாலிவுட் ,கோலிவுட் தளங்களில் பேச்சாக மாற வைத்திருக்கிறார் இயக்குனர் பா .ரஞ்சித் !ஒரு வேளை இந்தப் படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தால் கூட  ,அது பா .ரஞ்சித் அவருடைய கருத்து புரட்சிக்கு கொடுத்த விலையாக எடுத்துக்கொள்ளலாமா ? .இல்லை ,தலித் அல்லாதவர் இந்த திரைப் படத்தை ஆணவக் கொலை செய்ததாக எடுத்துக்கொள்ளலாம் !எதுவாயிருந்தாலும் ,திரைத் துறையில் ஒரு மாபெரும் கருத்தியல் புரட்சி நடந்ததை திருப்பி அனுப்ப முடியாது !பற்பசை குழாயிலிருந்து வெளியே பிசுக்கப்பட்ட பசையை போல !

Thursday, 26 October 2017

தமிழிசை தோற்றத்தை கிண்டல் செய்வது சரியா ?

சமூக ஊடகங்களில் தமிழிசை அவர்களின்  தோற்றத்தை கிண்டல் செய்து பல பதிவுகள் பார்த்து வேதனை அடைந்தேன் . தோற்றத்தை கிண்டல் செய்வது அயல் நாடுகளின் கலாச்சாரத்தில் இல்லை .ஏன் ,நம் இந்திய கலாச்சாரத்தில் ,குறிப்பாக தமிழக கலாச்சாரத்தில் அதிகம் உள்ளது ?
ஒருவரின் தோல் நிறத்தைக் கொண்டு ,உயர்ந்தவர் ,தாழ்ந்தவர் என்று பிரிப்பது சாதிய கலாச்சாரத்தில் உள்ள ஒரு குணம் . தோற்றத்தையும் ,உடல் ஊனத்தையும்  கிண்டல் செய்வது அந்த குணத்தின்   இன்னொரு  வெளிப்பாடே .ஆதலால் தமிழ் கலாச்சாரத்தில் கருப்பாய் இருந்தால் யாரும் கிண்டல் செய்யலாம் என்று ஒரு அனுமதி உள்ளது .கிண்டலுக்கு ஆளாகி வெற்றி அடைந்த நடிகர்கள் வடிவேலு ,செந்தில் ,தவக்களை போன்றவர்கள் .கருப்பட்டி தலையா ,நாய் ,பேய் ...என்ன வேண்டுமென்றாலும் கருப்பாய் இருப்பவரை திட்டிக்கொள்ளலாம் .வெள்ளையாய் இருக்கும் ஹைச் .ராஜாவையோ ,விவேக்கையோ ,சரளாவையோ  அப்படி    திட்ட முடியாது !
ஆக , தோற்றத்தை கிண்டல் செய்வது சாதிய மரத்தின் ஒரு விஷக் கனி . விஷ  மரத்தை வெட்டாமல் , அந்த  கனியை அழிக்கமுடியாது .
(டுவிட்டரில் பதிவான என் கருத்து )