Friday, 21 May 2021

தெலுங்கு உண்மையிலே சுந்தர தெலுங்கா ?

             


                       

                                தமிழ் பாடல்கள் கேட்டு கேட்டு அலுத்து போய்விட்டது .சரி ,ஒரு மாற்றத்திற்கு ஒரு திராவிட (தெலுங்கு )பாட்டை கேட்போமே என்று ஒன்றை போட்டேன். ராம் சரண் ,கட்டை கால் சட்டையில் ,ஏதோ ஒரு பெயர் தெரியாத ஒரு கதாநாயகி குட்டை பாவாடையில், இருவரும் சேர்ந்து ஆடும் ஒரு செம பாடல்.

"குக்குரு குக்குரு குக்குரு 

குடுகுடு குடுகுடு 

அண்டி வண்டி ஹண்டி 

பண்டியோடு கண்ட்லு 

அப்புலு தட புடு "

                                  என்று கட புட  ஒலியுடன்  ஒரு தெலுங்கு  பாட்டு கேட்டேன் .நடனம் செம அழகாக இருந்தது. நாயகன் ,நாயகி அழகாக ஆடினார்கள்.காட்சி அமைப்பு பிரமாதமாக இருந்தது. ஆனால், சுந்தர தெலுங்கு தான் கடமுட கடமுட என்று ஆட்டுக்கல்லில் கருங் கல்லை போட்டு  அரைத்து போல  ஒரு தொனி  ! காதெல்லாம் வலிப்பது போல ஒரு உணர்வு !

                                             கேட்டு முடித்தவுடன் ,தெலுங்கு மொழியில் மெல்லிய ஒலி  என்று ஒன்று  கிடையாதோன்னு  நினைக்க வைத்தது அந்த பாடல் .இந்த ஒரு பாடல்  வைத்து  ஒரு மொழியின் இனிமையை தீர்மானிக்க முடியாது அல்லவா . ஆதலால்,ஒரு சின்ன மொழி  ஆராய்ச்சியில் இறங்கினேன் .

                                  தெலுங்கில் அதிகமாக சொற்களெல்லாம் லு ,டு ,போன்ற தொனியில் தான் முடிகிறது .அதாவது ,உயிர் மெய் எழுத்து தொனிதான் அதிகம் .ஆனாலும் , ஏனோ ஒரு இனிமையே  இல்லாமல் கட கட குடு குடு  என்ற  ஒரு சத்தத்தில் தான் மொத்தத்தில் கேட்கிறது .ஏன் ?

                                              தெலுங்கு சொற்களின் ஒலி நயத்தை ஆராயலாம் .எடுத்துக்காட்டாக ,ஏழுமலையான் என்கிற அழகான தமிழ் சொல் ,ஏடு கொண்டல வாடு என்று பல் உடைவது போல் தெலுங்கில் தொனிக்கிறது .எஸ்.பி.பி  என்று அன்பாக தமிழர்களால்  அழைக்கப்படும் தெலுங்கு பாடகர் எஸ். பி .பாலசுப்பிரமணியம் அவர்களின் முழு தெலுங்கு பெயரை  சொன்னால்  பல் உடைந்து விடும்! இதோ அவர் முழு பெயர்:Sripathi Panditaradhyula Balasubrahmanyam ஸ்ரீபட்டி பண்டிட்டாராட்யுலா பாலசுப்ரமணியம் !அப்பாடா ,ஏன் அவர் பெயரை எஸ்.பி.பி என்று  சுருக்கி வைத்திருக்கிறார் என்பது இப்போது புரிகிறதா? 

இவர் பெயர் மட்டுமில்லை, தெலுங்கு பெயர்கள்  அதிகமாக இப்படித்தான் இருக்கிறது.

இதோ சில எடுத்துக்காட்டுகள்:

  • நண்டமுறி தாரக ராம ராவ் (என் .டி .ஆர் )
  • அல்லரி நரேஷ் 
  • டெஜ்ஜா சஜ்ஜா 
  • பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் 
  • விஸ்வக் சென் நாயுடு 
  • சமந்தா அக்கினினி 
  •  கண்டசாலா

                        சரி, ஆட்கள் பெயர்கள் தான் எப்படி இருக்கிறது, ஊர்ப்பெயர்கள் எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சிக்குள்  இறங்கினேன்.அதுவும் ரேணிகுண்டா, ஏராகுண்டலு, காஜுவாகு,  அணக்கபள்ளி ,விஜயவாடா ,காக்கிநாடா ,ராஜமுந்திரி  போன்ற சடுகுடு பெயர்கள்தான் அதிகம் உள்ளன. அனந்தப்பூர், சித்தூர் போன்ற அழகான பெயர்கள் எல்லாம் தமிழ் மொழி அடிப்படையில் அமைந்தவை தான். ஆக ஆட்கள் பெயர்கள், ஊர் பெயர்கள் இவை எல்லாமே  தெலுங்கிலே ஒரு கடினமான தொனியிலே  அமைந்துள்ளது தெளிவு .                                                                        ஆக ,எதைவைத்து தெலுங்கை சுந்தர தெலுங்கு என்று சொன்னார்கள் என்று தெரியவில்லை. பாரதியார் ஒரு பாடலில் 'சுந்தர தெலுங்கினில்' என்று  பாடலுக்காக ,எதுகை மோனைக்காக பயன்படுத்தியிருக்கிறார் .
"சிந்து நதியின் மிசை நிலவினிலே,
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே,
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து,
தோணிகளோட்டி விளையாடி வருவோம்."
 இந்த பயன்பாடை  ஒரு மொழியின் குணத்தை சொல்லும் சொல்லாக  எடுக்க முடியாது. அந்த ஒற்றை சொல் கொண்டு 'சுந்தர தெலுங்கு' என்று பேசு பொருளாக்கி, ஊதி விட்டார்கள் ஊடகத்தார் .தமிழ் மொழியின் இயல்பு, இனிமை, இசை போன்ற பேச்சு, இவை ஒன்றும் தெலுங்கு இதில் கிடையாது. ஆக இதிலும் ஊடகங்கள் சதிசெய்து தமிழை பின் தள்ளிவிட்டு, தெலுங்கை சுந்தரத் தெலுங்கு  என்று தமிழரிடையே அடையாளப்படுத்தி விட்டார்கள் . 
                               இந்தியாவில் மொழியியலில் ,வாழ்வியலில் எல்லாவற்றிலும்    தமிழைத் தவிர எல்லா  மொழிகளையும்  முன்னிலைப்படுத்தும் ஒரு போக்கு இந்திய மொழியியலில் பலநூறு  ஆண்டுகளாக உள்ளது.இது ,ஊடகங்கள், தமிழின் மௌன எதிரிகளான பிராமணர்கள் கையில் இருந்ததன் விளைவு என கொள்ளலாம் .
                         நான் இதை எழுதுவதற்கு காரணம் ,தெலுங்கின் மேல் உள்ள  வெறுப்பினால் அல்ல. தமிழின் பெருமையை தமிழ் நாட்டிலே மறைக்க, தெலுங்கை முன்னிறுத்தி, நம்மை முட்டாளாக்க நினைப்பதை வெளிக்கொணரவே என்பதே  என்று  கூறிக் கொள்கிறேன் .தமிழின் பெருமையை ,தமிழ் மொழி குடும்பத்தினரான தெலுங்கர் ,கன்னடர் ,மலையாளிகள் யாரும் ஒரு தடவை கூட ,தவறி கூட சொன்னதில்லை .ஆனால் ,தமிழர்களை  அவர்கள் மொழியை பற்றி அப்படித் தந்திரமாக சொல்ல வைக்கிறார்கள் .
தமிழை ,தமிழர்களை குறித்து  தெலுங்கர் ,கன்னடர் ,மலையாளிகள் எப்படி சொல்லுகிறார்கள் ? தெலுங்கர்கள் ,தமிழ் மொழியை கேவலப்படுத்த ,அதை 'அரவம் 'என்கிறார்கள் .அரவம் என்றால் பாம்பு .தமிழ் பேசினால் பாம்பு அசைவது போல் உள்ளதாம் !கன்னடர்கள் தமிழர்களை 'கொங்கா 'என்றும் மலையாளிகள் தமிழர்களை 'பாண்டி'யென்றும்  கிண்டலாக கூப்பிட ,தமிழர்கள்  மட்டுமே இவர்களை மரியாதையுடன் ,பட்டப் பெயரின்றி அழைக்கிறோம் .ஆக தமிழர்கள், தாம் ஏமாளிகள் என்பதை மாற்றிக் காட்டுவோம் .நம் தமிழின் பெருமையை பற்றி பேசுவோம் .சுந்தர தெலுங்கு என்று சொன்னதை நம்ப வேண்டாம் . 

No comments:

Post a Comment