தமிழன் என்றோர் இனமுண்டு!தனியே அவற்கொரு குணமுண்டு!என்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் பாடினார். உண்மைதான். தமிழர்கள் என்றால் அவருக்கு தனியே சிறப்பான பல குணங்கள் உண்டு. அன்பே அவர்கள் வழி !அமுதே அவர்கள் மொழி !என்றார் அதே கவிஞர். எல்லா உயிருக்கும் அன்பு காட்டுவது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன ஒரே இனம் தமிழினம் தான்! அவர்கள் தமிழ் மொழி மேல் கொண்ட பற்று ஈடற்றது .தமிழ் அவர்களுக்கு வெறும் பேச்சு அல்ல ,அது மூச்சு என்று சொல்லுவார் சீமான். தமிழை மூச்சாக கொண்ட தமிழர்கள், அதை தங்கள் பெயர்களிலும் வெளிப்படுத்துகிறார்கள் என்பதை நாம் வெளிப்படையாகவே காணலாம் .வேறு எந்த மொழி சார்ந்தவரும் அந்த மொழியை வைத்து அவர்கள் பெயரை வைப்பதில்லை. எடுத்துக்காட்டாக ,மலையாளம் பேசும் ஒருவன் ,மலையாள சேட்டா என்று பெயர் வைப்பது இல்லை. தெலுங்கு பேசும் ஒருவன் தெலுகுகொடுக்கு( தெலுங்கு மகன்)என்று பெயர் வைப்பது இல்லை .ஆங்கிலம் பேசும் ஒருவன் 'சன் ஆப் இங்கிலீஷ்' என்று பெயர் வைப்பது இல்லை. ஆனால், தமிழர்கள் மட்டும் தமிழ் மகன்,தமிழரசி, தமிழரசன், தமிழ்ச்செல்வன், தமிழ் இனியன், செந்தமிழன் என்றெல்லாம் பெயர் வைப்பதை பார்க்கிறோம். இது தமிழ் மொழிக்கு ஒரு சிறப்பு என்று நாம் ஒருபுறம் கருதினாலும், இவ்வாறு பேர் வைப்பதற்கு பின்னால் ஒரு பெரிய அரசியல் ஒளிந்து இருக்கிறது என்பதை கூர்ந்து பார்த்தால் தான் தெரியும்.
அது என்ன அப்படி ஒரு அரசியல், இந்த பெயர்கள் பின்னால் ஒளிந்திருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம் .இந்த மாதிரி பெயர்கள் வைப்பவர்கள் பின்னணியை ஆராய்ந்து பார்க்க வேண்டும் .அப்படி பார்க்கும்போது உங்களுக்கு ஒரு பெரிய உண்மை தெரியும் தெரியவரும்.
தமிழினத்தின் தொல்குடிகள் என்று பார்த்தால் யார் யாரை குறிப்பிடலாம்?
- பறையர்
- பள்ளர்
- தமிழ் வன்னியர்
- முக்குலத்தோர்
- சாணார்
- கோனார்
- முதலியார்
- தமிழ் செட்டியார்
- கௌண்டர்
- இது போல சில
நீங்கள் உற்று நோக்கினால் ,தமிழரசன், தமிழ்ச்செல்வி போன்ற பெயர்களை இந்த தமிழ்க் குடிகள் பொதுவாக வைப்பதில்லை. ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதற்கு? என்று சொல்வது போல இவர்கள் யாரும் நாங்கள் தமிழர்கள் என்று பெருமையாக தம்பட்டம் அடிப்பதில்லை. அப்படி என்றால் யார் யார் ,பொதுவாக இப்படி தங்கள் பெயரை தமிழை போற்றும் பெயர்களாக வைக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் ,உங்களுக்கு ஒரு பெரிய உண்மை வெளியே தெரிய வரும். நம் அருகில் இருக்கும் மற்ற மாநிலங்களில் ,அந்த மாநிலத்தின் இனம் அல்லாதவர்கள், அந்த மாநிலத்திற்குள் புகுந்து ,அவர்கள் அடையாளங்களை திருடி அவர்களை ஆள்வதற்கு முயற்சிப்பதில்லை.எடுத்துக்காட்டாக, கேரளாவில் ஒரு தெலுங்கர் உள்ளே நுழைந்து மலையாள பெயர் வைத்துக்கொண்டு ,எவ்வளவு காலம் வாழ்ந்தாலும், கேரள மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு ,மாநில அரசியலுக்கு வர முயற்சித்தால் ,அவர்களை தனியே பிரித்து வைத்து விடுவார்கள். அவர்களை ஒருபோதும் கேரளாவை ஆள விட மாட்டார்கள். ஆதலால், அப்படி ஒரு அடையாள திருட்டு முயற்சியை , கேரளாவில் தெலுங்கர்கள் எடுக்க மாட்டார்கள். ஆனால், தமிழர்களை பொருத்தவரையில், அவர்கள் தமிழ்நாட்டில் உள் வரும் எல்லா மக்களையும், இருகரம் கூப்பி வரவேற்று ,அவர்களும் ஒரு பக்கம் வாழ்ந்து விட விட்டுப் போகட்டுமே,என்ற ஒரு பெரிய அன்புடன், மாண்புடன் அவர்களை உள்ளே அனுமதிப்பார்கள்.
அப்படி வெளியே இருந்து வந்த பல சாதிகள், தமிழர்களின் அன்பையும் மாண்பையும் ஒரு ஏமாளித்தனமாக எடுத்துக்கொண்டு, அவர்களை ஆள்வதற்கு முயற்சி எடுத்தார்கள். தமிழர் அடையாளங்களை மெல்ல மெல்ல திருடி,அதைக் கொண்டு அரசியல் லாபம் பெற, பல உத்திகள் கையாண்டார்கள் .அதில் ஒன்றுதான் இந்த உத்தி.அது என்னவென்றால், அவர்கள் பெயர்களுடன், தமிழரசன், தமிழ் மகன், தமிழ்ச்செல்வி போன்ற பெயர்களை சேர்த்து ,அவர்கள் தமிழர்கள் தான் என்று ஒரு எண்ணத்தை பொதுவெளியில் உருவாக்கினார்கள் .இதனால், அவர்கள் தமிழர்களாகவே கருதப்பட்டு, பின்னால் அரசியல் வாழ்க்கையில் ,அவர்கள் எளிதாக கோலோச்சி கொண்டு, தமிழர்களை ஆண்டு அனுபவிக்க ஒரு வழியை அவ்வாறாக உண்டாக்கினார்கள். பொதுவாக, இந்த பெயர்கள் யாருக்கு வைத்திருப்பார்கள் என்றால், அவர்களைப் பார்த்த உடனே அவர்கள் தமிழர்கள் அல்ல என்ற ஒரு சந்தேகம் வரும் சில சாதிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் .எடுத்துக்காட்டாக, தமிழர்களின் பொதுவான நிறம் கருப்பு அல்லது மாநிறம் என்று சொல்வார்கள் .அப்படி இல்லாமல் வெளு வெளு வென்று ஒருவர் தமிழ்நாட்டில் வந்து 'நான் தமிழன்' என்று சொன்னால், நாம் நம்புவதற்கு தயங்குவோம் .அந்த தயக்கத்தை போக்குவதற்கு,அவர்கள் தங்கள் பெயரிலேயே, தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி, தமிழரசன் போன்று வைத்துக் கொள்கிறார்கள்.
இராஜராஜ சோழன் தமிழ்நாட்டை ஆண்ட போது, தமிழ்நாட்டின் வேளாண் நிலங்களை மேலாண்மை செய்வதற்காக, ஒவ்வொரு பெரிய துண்டுகளுக்கும் ஒரு நிலக்கிழார் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். ஆதலால், அதற்காக குஜராத் பகுதியில் இருந்து, குறிப்பாக ராஜ்கோட் போன்ற பகுதிகளிலிருந்து குஜராத்திகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார் என்று சொல்லப்படுகிறது .அவர்களுக்கு பெரும் பெரும் நிலத்துண்டுகளை கொடுத்து ,அதை மேலாண்மை செய்யும்படியாக பணித்தார். அவர்கள் எல்லோரும் வெண் தோல் கொண்டவர்கள் . பார்த்தவுடன் ஒரு பார்வையில் ,தமிழர்கள் போல இல்லாமல் இருந்தார்கள். அவர்களை வேளாளர்கள் என்று அழைத்து ,அவர்களுக்கு தமிழ் பெயர் சூட்டி, தமிழில் மிகவும் பற்று கொண்டவர்களாக காட்ட ஆரம்பித்தார்கள். அப்படி பல வேளாளர் குடும்பங்கள், அவர்கள் பெயர்களில் , தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி போன்ற பெயர்களை வைத்துக் கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆக ,தமிழ்நாட்டின் தொல்குடிகளில் காணப்படாத இந்த மாதிரி பெயர்கள் , இப்படி வெளியே இருந்து தமிழ் சமூகத்தில் ஊடுருவிய சாதிகளின் இடையே பரவலாக காணப்படுகிறது என்பதே ஆராய்ச்சியாளர்கள் கருத்து .இதை நிறுவும் வண்ணமாக, சங்க காலத்தில் ,இப்படியான பெயர்கள் எதுவுமே இருந்ததில்லை என்ற உண்மை கை கொடுக்கிறது.இனியன் சம்பத் என்று அழகான தமிழ் பெயர் இருக்கிறது என்று பார்த்தால் அவர் ஒரு தெலுங்கு நாயுடு! தமிழச்சி தங்க பாண்டியன் என்ற அழகான ஒரு தமிழ் பெயர் இருக்கிறது என்று பார்த்தால் அவர்களின் பின்புலம் தெலுங்கு என்பதை கண்டுபிடிக்கலாம் .லோகேஷ் தமிழ்ச்செல்வன் என்று ஒரு அமைச்சர் விஜய் அமைச்சரவையில் இருக்கிறார். அவர் தமிழர் என்று நீங்கள் எண்ணினால் அது தவறு. அவர் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களின் புதல்வன் .அப்படி என்றால் அவர் தெலுங்கு அருந்ததியர் சாதியை சேர்ந்தவர்.தமிழன் பிரசன்னா என்று பெயர் இருக்கிறது. விஜய் தமிழன் பார்த்திபன் என்று தற்போது ஒரு அமைச்சர் உள்ளார்.அதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் .இவ்வாறாக ,அரசியல் லாபத்திற்காக இதுபோன்ற பெயர்கள் தமிழ்நாட்டில் அதிகமாக காணப்படுகிறது என்பது மொழி ஆராய்ச்சியாளர்கள் கருத்து.
இப்படியான பெயர்கள், தமிழ் மீது,தமிழர்கள் கொண்ட பற்றினால் மட்டும் தான் என்ற தவறான எண்ணத்தை இந்த கண்டுபிடிப்பு தகர்த்து எறிகிறது என்பது உண்மை.
No comments:
Post a Comment