பாலியல் குற்றங்களை செய்ய எது தூண்டுகிறது?முதலில் அதை தெரிந்து கொள்வோம் .
(படம் நன்றி- கூகுள் )
பாலியல் குற்றங்களை செய்ய தூண்டுவது இச்சையின் ஆவி என்பதாகும். இது பசி போல ஒரு ஆவி என்பதால் அதை சட்டத்தினாலோ, தண்டனையினாலோ ஒருநாளும் கட்டுப்படுத்த முடியாது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் .ஆதலால், இச்சையின் ஆவியை கட்டுப்படுத்த ,சட்டம் ,தண்டனையைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பது முற்றிலும் பொருளற்றது .அதனால் ஒரு பயனும் இல்லை .ஆவிகள் ஆட்களுக்குள் குடியிருக்கும்.ஆக ,மரண தண்டனையே கொடுத்தாலும் ,அந்த ஆவி திரும்பவும் வேறொருவர் வழியாக செயல் நடத்த வரும் .மரண தண்டனை என்பது ,அந்த ஆவி குடி இருந்த ஆளை மட்டும் கொல்லும் . இச்சையின் ஆவியை கொல்ல முடியாது . அதனால் தான் எவ்வளவு தண்டனை கொடுத்தாலும், திரும்பவும் அதே போல குற்றங்கள் நடக்கின்றன . எடுத்துக்காட்டாக, சமீபத்தில் 25/052026 அன்று,விளாத்திகுளம் கற்பழிப்பு வழக்கில், தர்ம முனிஸ்வரன் என்ற கற்பழிப்பு குற்றவாளியை இரட்டை தூக்கு தண்டனை வழங்கி, கடுமையான தீர்ப்பு வெளியானது .இதற்கு மேல் ஒருவருக்கு தண்டனை கொடுக்க முடியாது . கடுமையான தண்டனை இச்சையின் ஆவியை கட்டுப்படுத்தும் என்றால் 25/05/2026க்கு அப்புறம் தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் எதுவும் நடந்திருக்கக்கூடாது. அப்படித்தானே? ஆனால் ,அதன் பின்னர் தினமும் கிட்டத்தட்ட ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. சிறு குழந்தைகளை கூட கற்பழிக்கிறார்கள். அதை தான் இப்போது நாம் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் .தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள்!எத்தனை முறை அதை பார்த்தாலும், இந்த உண்மையை அரசால் உணரவே முடியவில்லை என்பது ஒரு பெரும் வேதனை தான்.
ஆக, பாலியல் குற்றங்களை தடுக்கவே முடியாதா ?என்றால் , முடியும்!என்பதே பதில் .அப்படி என்றால் பாலியல் குற்றங்களை தடுக்க என்ன தான் வழி?
பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த
வேண்டும் என்றால் ,இச்சையின் ஆவியை
கட்டுப்படுத்த வேண்டும்.சரி ,அதை
எப்படி கட்டுப்படுத்துவது?
இதோ ,கீழ்க்கண்ட இந்த பத்து கட்டளைகளை கடைப்பிடித்தால் ,இச்சையின் ஆவியை மட்டுப்படுத்தி, பாலியல் குற்றங்களை பெருமளவு ஒழித்து விடலாம். இல்லை என்றால் ஒருநாளும்
அது ஒழியாது என்ற
சொற்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
1) காமவெறியேற்றும் சூழ்நிலைகளை தடை செய்ய வேண்டும்.
காம வெறியேற்றும் திரைப்பட
பாடல்கள், ஐட்டம் பாடல்கள் ,சமூக
ஊடகங்களில் வெளியாகும் காமவெறி ரீல்ஸ் ,இவற்றையெல்லாம்
சட்டத்தினால் தடை செய்ய வேண்டும்.பதிவுக்கு சம்பந்தமில்லாமல் ஒரு
பெண்ணின் கவர்ச்சி படத்தை சமூக
ஊடகங்களில் போடுவது இப்போது ஒரு
கெட்ட பழக்கமாகிவிட்டது. அதை முற்றிலும் மட்டுப்படுத்த அல்லது தடை
செய்ய வேண்டும்.
2)பெண்களை அதீத இடர் (UNDUE RISK )எடுக்கும்படியாக ஊக்கம் செய்யக்கூடாது.
நீங்கள் சிங்கப்பெண்கள், எங்கு வேண்டுமானாலும்,எந்த நேரத்திலும், தனியாக போகலாம்,எதை வேண்டுமானாலும் ஆண்களைப் போல செய்யலாம் என்று ஒரு வெற்று வாக்குறுதி, கொடுத்து அவர்களை ஆபத்தான காரியங்களை செய்யும்படியாக ஊக்கம் அளித்தல் கூடாது.நீங்கள் எங்கு போனாலும், உங்களை சிங்கப்பெண் படை வந்து காப்பாற்றும் என்று ஒரு தப்பான நம்பிக்கையை உருவாக்கக் கூடாது.தமிழ்நாட்டின் பெண்கள் ஜனத்தொகை 3.88 கோடி. இவ்வளவு பெண்களையும் பாதுகாக்கும் அளவுக்கு தமிழக அரசின் சிங்கப்பெண் படை இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.மேலும் சிங்கப்பெண்ணும் பெண் தான் என்பதை நினைவு படுத்த வேண்டும். சமீபத்தில் ஒரு சிங்கப் பெண் அதிரடி படையை சேர்ந்த காவலரை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக ஒரு ஆணை இடை நீக்கம் செய்திருக்கிறார்கள் என்பதை நினைவு கொள்ள வேண்டும்.
3)பாலியல் குற்றம் ஒன்று நடைபெற்றால் , அந்த குற்றவாளிக்கு தண்டனை கொடுத்தவுடன் ,கணக்கு சரியாகிவிடும் என்ற ஒரு தவறான கருத்தை ஊடகங்கள் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
இதை முழுவதுமாக நம்பும்
மக்கள், அந்தப் பெண் இறந்து
போனால் கூட ,அதை பற்றி
அவ்வளவாக வருத்தப்பட்டு அழாமல் ,அந்த குற்றவாளிக்கு
தண்டனை கிடைத்தால் போதும் என்று ,அந்தப்
பெண்ணின் தாயை சொல்ல வைக்கிறார்கள்
.அதில் பழிவாங்கும் உணர்ச்சி தான் மேலோங்கி
நிற்கிறது. டெல்லியில் நடந்த நிர்பயா வன்கொடுமை
வழக்கிலும், இதே போல் தான்
அந்த பெண் இறந்ததை பற்றி
அவர்கள் தாயார் கவலைப்பட்டது போலவே
தெரியவில்லை .அவர்கள் கூறியெதெல்லாம் ,அந்த
குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்க
வேண்டும் ,அது போதும் !என்பதுதான்.
அவனுக்கு மரண தண்டனையை வாங்கி
கொடுத்தாலும், இறந்த பெண் திரும்ப
வரப்போவதில்லை என்பதை உணர மறுக்கிறார்கள்.
குற்றவாளிக்கு மரண தண்டனையே கொடுத்தால் கூட, நடைபெற்ற சம்பவம், அது ஏற்படுத்திய தாக்கம், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி, இழந்த மானம் ,இவைகள் எதையும் அந்த தண்டனை சரி செய்ய முடியாது ,அந்த தண்டனையினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த விதமான நன்மையும் இல்லை என்பதை ,ஊடகங்கள் பெரிதாக விவாதிப்பது இல்லை.அப்படி ஊடகங்கள் அதை பெரிதாக விவாதித்தால், அவற்றை முக்கியமான புள்ளிகளாக காட்டினால் , பெண்கள் தங்கள் சுய பாதுகாப்பை பற்றி சிந்திக்க ஆரம்பிப்பார்கள். இதனால் இவ்வளவு பாதிப்பு நமக்கு வரும் என்பதை நினைத்துப் பார்த்து ,ஒன்றுக்கு இரண்டாக சிந்தித்து முடிவெடுப்பார்கள் .இப்போது அப்படி அல்ல,பாலியல் குற்றம் நடந்தால்
அதனால் எந்த பாதிப்பும் இல்லை
, தண்டனை வாங்கி கொடுத்தால் அது
போதும் ,என்ற ஒரு நினைப்பை
பெண்களிடம் உருவாக்கி விட்டார்கள்.பாலியல்
குற்றம் ஒன்று நடந்தால் அதனால்
அந்த பெண்ணுக்கு எந்தவித இழப்பும் இல்லை
என்று நினைக்க வைப்பது,பெண்கள்
அதைக் குறித்து சிறிதும் கவலைப்படாமல்
இருக்க வைக்கிறது .பெண்கள் அதை குறித்து
கவலைப்பட்டால் தான் ,தங்கள் பாதுகாப்பை
பற்றி சரியான முடிவு எடுப்பார்கள்
.இப்போது போனால் என்ன நடக்கும்
என்பதை பற்றி சிந்திப்பார்கள். பெண்கள் ,கற்பழிப்பு குற்றங்களால் தங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று நினைப்பதால் தான், பாலியல் குற்றம்
நடந்தவுடன் காவல்துறைக்கு சென்று புகார் ஒரு
பயம் இல்லாமல், ஒரு குற்ற
உணர்வு இல்லாமல் ,அளிக்கிறார்கள் .ஊடகங்கள்
அவர்களை துணிச்சலான பெண் என்று சொல்லி
பாராட்டுகிறார்கள் .இந்த மாதிரி ஒரு
குற்றம் தன்னுடைய சொந்த மகளுக்கு
ஏற்பட்டால் இப்படி அவர்கள் பாராட்டுவார்களா?
ஆக ஒரு சமூக
பொறுப்பு இல்லாமல் ஊடகங்கள் நடந்து
கொள்கிறது. பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை
முன்பை காட்டிலும் பல மடங்காக
பதிவு ஆவதற்கும் இதுதான் காரணம்.இந்தப் போக்கு ஒரு
தவறான விதை என்பதை சமூகவியலாளர்கள்
சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த நிலையை ஊடகங்கள்
மாற்ற வேண்டும்.
4)பெண்கள் ஆண்களை,பாலியலாக,அறிந்தோ அல்லது அறியாமலோ, தூண்டி விடுவதை தவிர்க்க வேண்டும்.
இயற்கையிலேயே பெண்களைக் கண்டால் ஆண்களுக்கு ஒரு கவர்ச்சி ஏற்படும், ஒரு கிளர்ச்சி ஏற்படலாம் .இது இயற்கை .இதை பாலின கவர்ச்சி என்று சொல்வார்கள்.ஆதலால், முடிந்த அளவு பெண்கள் தங்களுடைய கவர்ச்சி பாகங்களை மறைத்து, ஆண்களுக்கு கிளர்ச்சியை உண்டாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு சமூக பொறுப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் நாங்கள் எப்படியும் உடுப்போம், அது எங்கள் சுதந்திரம் என்று இயற்கையான இந்த விஷயத்தில் சொல்ல முடியாது .உங்கள் சுதந்திரம் அவர்களை கிளர்ச்சி உண்டாக்கும் என்றால் , அந்தக் கிளர்ச்சியின் விளைவுகளுக்கு நீங்கள் காரணமாகி விடுவீர்கள் என்பதை உணர வேண்டும். ஆக, கிளர்ச்சியூட்டும் உடைகளை அணியக் கூடாது. பெண் கவர்ச்சி பாகங்களை மூடி வைக்க வேண்டும் .முந்தானை போன்ற உடைகளால் மார்பகங்களை மூடி வைக்க வேண்டும் .கால்களின் கவர்ச்சி வடிவங்கள் வெளியே தெரிய கூடாது .லெக்கின்ஸ் அணியும் போது கால்களின் வடிவம் தெளிவாகத் தெரியும் .மேலும் கால்களை கவர்ச்சியாக காட்டுவதற்கு லெக்கின்ஸ் வண்ணங்களை, தோல் போன்ற வண்ணங்களில் பல பெண்கள் அணிகிறார்கள் .இது தவறு.இவைகள் எல்லாம் இயற்கையின் விதிகள். கிளர்ச்சி என்பது இயற்கையில் உள்ளது .அதை சட்டத்தை கொண்டு அடக்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சில பெண்கள் எப்படி மூடி வைத்தாலும் கற்பழிப்பு குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று வாதம் செய்கிறார்கள். எத்தனை பூட்டு போட்டாலும் வீட்டில் திருடிக் கொண்டு போகிறார்கள் என்பதற்காக நாம் பூட்டு போடுவதை நிறுத்துவதில்லை. பூட்டு போட்டால் முடிந்த அளவு திருட்டை நாம் குறைக்கலாம் என்பதற்காக பூட்டு போடுகிறோம் .அது போல தான் இதுவும்பூட்டு ,
6) சொற்களின் தாக்கம்: எந்த சொல் சரி? கற்பழிப்பா அல்லது பாலியல் குற்றமா?
வார்த்தையின் வல்லமையைப் பற்றி பரிசுத்த வேதாகமத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.அதில் ஒரு வசனம் 'மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.'என்று உள்ளது . அதாவது ,ஒருவனின் வாழ்வும் சாவும் அவனுடைய வாயின் வார்த்தைகளினால் தீர்மானிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது .ஆக ,சரியான சொற்கள் மிகவும் முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும். லஞ்சம் என்ற சொல்லை பயன்படுத்தினால், அது ஒரு கேவலமான காரியம் என்ற உணர்வு நமக்கு வரும் .அதையே அன்பளிப்பு என்று சொல்லிவிட்டால், அது ஒத்துக் கொள்ளக் கூடியதாக மாறிவிடுகிறது! அதுபோல கற்பழிப்பு என்று சொன்னால் நாம் ஏதோ இழக்க கூடாத முக்கியமான ஒன்றை இழந்து விட்டோம் என்ற ஒரு உணர்வு வரும். ஆதலால் ,பெண்கள் அது நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அந்த சொல்லின் மூலம் வரும் .இழந்த கற்பு திரும்ப வராது என்ற எண்ணமும் அதில் வரும். ஆனால் ,அதே செயலை பாலியல் குற்றம் என்று சொன்னால், யாரோ ஒருவர் இந்த பெண்ணிடம் ஒரு குற்றத்தை செய்து விட்டு போய்விட்டார், அவ்வளவுதான் .அதில் அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை .குற்றம் செய்தது ஆண் தானே! அதனால் ,அவருக்கு தண்டனை கொடுத்து விட்டால் ,அது ஒன்றே போதும் எனக்கு ,அதனால் பெரிய இழப்பு ஒன்றுமில்லை என்ற ஒரு எண்ணத்தை பெண்களிடம் அந்த சொல் உருவாக்கி விடுகிறது .இதனால் ,பெண்கள் பாலியல் குற்றம் நடந்தால் ,இழக்க பெரிதாக ஒன்றும் இல்லை என்று துணிச்சலாக, ஆண்கள் கூப்பிடும்போது எங்கு வேண்டுமானாலும் ,எந்த நேரத்திலும் செல்கிறார்கள். இன்றைய செய்தி- ஒரு இளம் பெண் இரண்டு வாலிபர்கள் கூப்பிட்டார்கள் என்று காரில் சென்று ,ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருக்கிறாள். அங்கு அவளுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து இரண்டு வாலிபர்களும் மாறி மாறி கற்பழிப்பு செய்திருக்கிறார்கள் .அவள் அதைக் குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், திருவைகுண்டம் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்திருக்கிறார். இதை கற்பழிப்பாக எடுத்தால், அவள் முதலில் தனியாக ஆண்களுடன் துணிச்சலாக சென்றிருக்க மாட்டார்.பின்னர் கற்பழிப்பு நடந்த உடன், ஐயையோ இப்படி நடக்கக்கூடாதது நடந்து விட்டதே என்று மன முடைந்து கதறி இருப்பார், அழுது இருப்பார்,மன வேதனை அடைவார். இதைக் குறித்து வெளியே சொல்ல பயப்படுவார் . அதை காவல் நிலையத்தில் சொல்ல வேண்டுமா என்று யோசிப்பார் .ஆதலால், இதுபோன்று இன்னொரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்வார் .எல்லா பெண்களும் அதேபோல கவனமாக இருப்பார்கள் .அதே குற்றத்தை' பாலியல் குற்றம்' என்று சொன்னால் ,அதை சும்மா சொன்னது போல், துடைத்தெறிந்து விட்டு போய்விடுவாள் அந்த பாதிக்கப்பட்ட பெண்.ஆக, பாலியல் குற்றம் என்ற பதத்தை எடுத்து விட்டு கற்பழிப்பு என்ற பதத்தை பயன்படுத்துவது நல்லது என்பது மொழி ஆராய்ச்சியாளர்கள் கருத்து.
7)உறவு முறைகளை மதிப்பது/பலப்படுத்துவது
எல்லாப் பெண்களையும் தாயாக பார்க்க வைப்பது,இந்த இச்சையின் ஆவியை மட்டுப்படுத்தும்
ஒரு வழியாகும் .இன்னும்
கூட தென் மாவட்டங்களில்
,சிறுமிகளையும் ,இளம் பெண்களையும் 'தாய்
'என்று அழைக்கும் முறை கிராம
புறங்களில் காணலாம். 'ஏ ,தாயோ
,இங்க வாம்மா 'என்று மரியாதையுடன்
சிறு பிள்ளைகளை கூட அழைப்பார்கள்.
அப்படி அழைக்கும் போது, இந்த
காம கண் வருவதற்கு
வாய்ப்பே இல்லை. அப்போதெல்லாம், இளம்
பெண்களுக்கு கையைப் பிடித்து ,வளையல்
போட்டு விடுவது ஆண்கள்தான் .வளையல்
மணிக்கட்டில் நுழையாது என்பதால் ,அழுத்தி
தான் போட்டு விடுவார்கள்.எனக்குத்
தெரிந்து இதுவரையில் எந்த ஒரு ஆணும்,
எந்த ஒரு இளம் பெண்ணிடம்
இதில் அத்துமீறி நடந்ததாக கேள்விப்பட்டதே
இல்லை. அதற்கு காரணம் அந்த தாய் என்ற உறவு முறைதான்.குஜராத்தில் எல்லாப்
பெண்களையும் 'சகோதரி 'யாக 'பெஹன்
'என்று அழைப்பார்கள் .இன்னும் அறிமுகமில்லா பெண்ணையும்
'அக்கா 'என்று அழைக்கும் முறை
கோவையில் காணலாம் .
8)ஒரு ஆணுடைய பாதுகாப்பில் எப்போதும் பெண் இருப்பது
பெண்கள் முடிந்த வரை ,தனியாக செல்லாமல்,யாராவது ஒரு ஆண் துணையுடன் செல்ல வேண்டும். அந்த ஆண், சகோதரனாகவோ, தகப்பனாகவோ அல்லது நம்பிக்கை கூறிய ஒரு ஆண் நண்பராகவோ இருக்கலாம் .ஆனால், தனியே செல்லாமல் ஒரு ஆண் துணையுடன் செல்லும்போது, மற்ற ஆண்களுக்கு இயற்கையாகவே ஒரு பயம் வரும். ஆதலால், அவர்கள் வீணாக ,ஏதாவது இந்த பெண்ணுக்கு செய்யலாம் என்று நினைக்க மாட்டார்கள் .ஆகவே, இந்த அறிவுரையை பெண்கள் எல்லா பெண்களும் கடைபிடிக்க வேண்டும் .இப்படி ஒரு ஆண் துணையுடன் போயிருந்தால், திருச்சியில் கற்பழிப்பு செய்யப்பட்ட அந்த 16 வயது பெண் காக்கப்பட்டு இருக்கலாம் .அவளுக்கு மது ஊற்றி கொடுத்து ,போதை ஏற்படுத்தி, கார் ஓட்டுநர் ஒருவர் கற்பழித்து இருக்கிறார்.
9) பாலியல் குற்றங்களை குறைப்பதில் சட்டத்தின்/ஊடகங்களின் பங்கு
சமீபத்தில் திருச்சியில் ஒரு 17 வயது பெண் ஏழு சிறார்களால் சீரழிக்கப்பட்டாள்.இது எப்படி நடந்தது என்றால் ,இந்த பையன்கள் அந்த பெண்ணை இன்ஸ்டாகிராம் வழியாக தனித்தனியாக தொடர்பு கொண்டு நண்பர்களாக மாறி இருக்கிறார்கள். பின்னர் அதை பயன்படுத்தி ,அந்த பெண்ணை தனியாக ஒரு இடத்திற்கு ,ஒவ்வொருவரும் தனித்தனியாக வரவழைத்து ,அவளை பாலியல் இன்பம் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அந்தப் பெண் இந்த பையன்கள் அழைக்கும் போதெல்லாம் போயிருக்கிறாள் ! இவள் 18 வயது நிரம்பாத இளம் பெண் .ஆதலால் ,இவள் இப்படி போவதற்கு பெற்றோருடைய சம்மதம் தேவை. அப்படி சம்மதம் வாங்கியதாக தெரியவில்லை .இப்போது ஏழு பேரும் சேர்ந்து அவளை கூட்டு வன்புணர்வு செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது .இது நடந்த பிறகு,இந்த பெண் காவல்துறையை அணுகி தன்னை இவர்கள் இப்படி சீரழித்து விட்டார்கள் என்று சொல்கிறாள் ! இந்த குற்றத்தில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இந்த பெண் உடன்பட்டு இருக்கிறாள் என்பது தெளிவாக தெரிகிறது. ஆக ,இது சம்மதித்து செய்யப்பட்ட ஒரு பாலியல் உறவு .பின்னர் எல்லாம் முடிந்த பிறகு அந்தப் பெண் வந்து அந்த ஆண்கள் மேல் குற்றம் சுமத்துகிறாள் என்றால் ,இதில் அவளுடைய பங்கு இருப்பதால் இந்த குற்றத்தை பதிவு செய்யக்கூடாது .அவள் 18 வயது நிரம்பாதவள், ஆதலால் அவளுடைய சம்மதம் செல்லாது என்று வாதித்தால் ,அதேபோல 18 வயது நிரம்பாத அந்தப் பையன்களும் அறியாமல் செய்துவிட்டார்கள் என்ற வாதம் வரும் .ஆக, 18 வயது நிரம்பாத ஆணும் பெண்ணும் ,தன்னுடைய சட்டபடியான காவலரான , பெற்றோரிடம் இதற்கு அனுமதி வாங்கினார்களா என்று கேள்வி எழுப்ப வேண்டும் என்பது சட்ட நிபுணர்கள் கருத்து.தற்போதைய அணுகு முறையில் பெண்கள் என்ன தவறு செய்தாலும் அதை விட்டுவிட்டு ,அவர்கள் புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுப்பது என்பது பழக்கம் ஆகிவிட்டது .இந்த பழக்கத்தை மாற்றி அந்த பாலியல் குற்றம் நடப்பதற்கு பாதிக்கப்பட்டவர் எந்த வகையிலாவது சம்மதம் தெரிவித்து இருந்தாலோ அல்லது பங்களித்து இருந்தாலோ , அந்த குற்றத்தை பதிவு செய்யக்கூடாது என்று நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்பது சட்ட நிபுணர்கள் கருத்து .இதனால் பெற்றோர்கள் தங்கள் 18 வயது நிரம்பாத மகள்களை காப்பாற்றுவதில் முனைப்பு காட்டுவார்கள், அவள் எங்கே செல்கிறாள் என்பதை கண்காணிக்க ஆரம்பிப்பார்கள் என்பது அவர்கள் கருத்து.
இன்றைய தமிழ் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் எல்லாமே வெறும் வியாபார நோக்கில் நடத்தப்படுவது வேதனை அளிக்கிறது .அவைகள் சமூக பொறுப்பை ஏற்க மறுக்கின்றனர் .மக்களுக்கு எது சொன்னால் பிடிக்குமோ அதை சொல்லி காசு பண்ணுவதில் குறியாக இருக்கிறார்கள் . ஆக, அவர்களின் பங்கு இப்போது எந்த அளவுக்கு இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு நிறைவாக இல்லை என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து. எடுத்துக்காட்டாக ,மின்மாற்றி பழுது பார்க்கும், போது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாப சாவு என்று மட்டும் செய்தியை போட்டுவிட்டு விடுகிறார்கள்.அவர் இறப்புக்கு உண்மையில் என்ன காரணம் என்பதை போட மாட்டார்கள். பொறுப்பான ஊடகம் என்றால் அந்த மின்ஊழியர் தன்னை மின்சார அதிர்ச்சியிலிருந்து காப்பாற்றுவதற்கு கையுறைகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் அணிய வேண்டும் என்ற விதியை பின்பற்றாதால் தான் இந்த பரிதாப சாவு ,என்பதை கடைசி பத்தியில் போட்டு விட வேண்டும் .அதை போடுவதில்லை. ஏனென்றால் இது ஒரு மரண செய்தி .அப்படி போட்டால் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள் .ஆனால் ,அப்படி போட்டால் தான் அடுத்ததாக பாதுகாப்பு கருவிகள் போட்டு வேலை செய்வார்கள் என்பதை நாம் மறக்க கூடாது. அதே போலத்தான் கற்பழிப்பு குற்றங்கள் நடக்கும் போது சுய பாதுகாப்பில் அந்தப் பெண் என்னென்ன செய்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம், என்பதையும் போட வேண்டும் .அதை போடுவதே இல்லை. பெண்கள் பக்கம் எந்த தவறும் இல்லாதது போல ஒரு எண்ணத்தை ஊடகங்கள் உருவாக்குவது அவர்களுடைய சுய லாபத்துக்கு தான் .அதில் அவர்களுடைய சமூகப் பொறுப்பை தட்டி கழிக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயம்.
10) உயிர் தேவை மையங்கள்
உயிர் வாழ மனிதனுக்கு பல தேவைகள் உள்ளது .அதில் உணவு முக்கிய பங்கு வகிப்பது போல, பாலியல் தேவையும் முக்கியமானது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும் . மனித இனத்தை பொறுத்தவரையில் இனப்பெருக்கத்தின் தலைமை ஆண்களின் கையில் தான் உள்ளது என்பதே பாலியல் விஞ்ஞானிகளின் கருத்து. ஆண்கள் தான் அதை முன்னெடுத்துச் செல்கிறார்கள் .ஆண்கள் அப்படி இனப்பெருக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ,அவர்களுக்கு இயற்கையிலேயே ஒரு பெரிய உந்துதல் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண்களைக் கண்டால், அவர்கள் அழகு /கவர்ச்சியால் ஈர்க்கப்படுகிறார்கள் .பின்னர் பெண்களை ,அவர்கள் பின் தொடர்ந்து, காதல் செய்து ,உடலுறவு கொண்டு குழந்தைகள் பெறுகிறார்கள். ஆக ,இந்த பாலியல் நடவடிக்கைகள் எல்லாம் ஆண்கள் கையில் தான் முற்றிலும் உள்ளது .அதை குறிக்கு முகமாக ஆண்களின் விந்து தான் பெண்களின் கர்ப்பப்பையில் ஒரு வேகத்துடன் விடப்படுகிறது .உடல் உறவில் விடப்பட்ட ,அந்த ஆண்களின் விந்தணுக்கள் மிக வேகமாக துருதுருவென்று நீந்தி பெண்களின் கருவை நோக்கி படையெடுக்கின்றன. அதில் ஒரு விந்தணு தான் வெற்றி பெற்று ,கருவூட்டல் நடைபெறுகிறது .இது அழகான ஒரு பெண்ணுக்கு பல ஆண்கள் போட்டி போடுவதை போல என்பதை குறிக்கிறது. கடைசியில் ஒரு ஆண் தான் பொதுவாக வெற்றி பெறுகிறான் என்பதையும் இது குறிக்கிறது.இது எல்லாவற்றிலும் ,பெண்களின் செயல்பாடு ஆங்கிலத்தில் PASSIVE என்று சொல்வார்கள் .அதாவது ஒன்றும் செய்யாமல் காத்திருப்பது என்று பொருள்.அதாவது, ஆண்களின் விந்தணுவை எதிர்பார்த்து கரு காத்திருக்கும். அவ்வளவுதான் .அது எங்கும் துள்ளிக்குதித்து ஓடுவதில்லை!துறுதுறு என்று அலைவதில்லை! இதுவே ,இயற்கையில் பெண்களின் இயல்பையும் சுட்டிக்காட்டுகிறது .அவர்கள் வேலை ஆண்களின் பாலியல் நடவடிக்கைக்காக காத்துக் கொண்டிருப்பது தான் .அவர்களாக போய் பொதுவாக ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை என்பதே இயற்கை.ஒரு சராசரி பெண் தன்னுடைய வாழ்நாளில் சுமார் 400 லிருந்து 500 கரு முட்டையை உருவாக்குகிறாள் என சொல்லப்படுகிறது .அப்படி என்றால் ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 42 வருடம் தான் பாலியல் நடவடிக்கையில் இருக்கிறாள் என்று பொருள் .கருமுட்டை உற்பத்தி நின்ற பிறகு பாலியல் ஆர்வம் பெண்களுக்கு பொதுவாக குறைந்து விடும்.ஆனால் ஆண்களை பொறுத்தவரையில் அப்படி அல்ல. சுமார் 14 வயதில் ஆண்கள் பருவமடைந்து விந்தணுக்களை உருவாக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படி ஆரம்பித்தவர்கள், இனப்பெருக்கத்தின் தலைவர்கள் ஆவதால் அவர்களுடைய ஆண்மை என்பது சாகும் வரை தொடர்ந்து அவர்கள் கூட வே வருகிறது .அதனால் தான் வயதான ஆண்களுக்கு கூட பல பாலியல் உணர்வும் ஆர்வமும் குறைந்த நிலையில் பார்க்கிறோம்.
ஆக, ஆண்களுக்கு இது ஒரு அடிப்படை உயிர் தேவை என்பதை அரசு உணர்ந்து, அந்த தேவையை தீர்த்துக் கொள்ள சட்டப்படியான வழிவகைகள் செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கருத்து .அதாவது, உயிர்த்தேவை மையங்கள் அமைக்கப்பட்டு ,அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்களை சேவைக்கு அமர்த்துவது ,இந்த உயிர் தேவையை தீர்த்துக் கொள்ள ஒரு வழிவகை செய்யும் .அப்படி ஒரு சட்டபூர்வமான வழி இருக்கும் போது, இச்சை கொண்டவர்கள் சிறுமிகளையும், ஏன் கைக்குழந்தைகளையும் ,வயதான பாட்டிகளையும் நாட வேண்டிய தேவை இருக்காது என்பது அவர்கள் கருத்து. இதற்கு ஏற்றாற் போல் ,சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றம், ஒரு வயது வந்த பெண், முழு சம்மதத்தோடு ,அவளுடைய உடலை விற்பதற்கு சம்மதித்து, உடலுறவு கொண்டால் ,அது குற்றமல்ல .அவளை காவல்துறை கேட்கக் கூடாது என்று ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறது .ஆக ,உயிர்த்தேவை மையங்கள் உருவாக்கி, அதை ஒழுங்குப்படுத்தி நடத்துவது, பாலியல் குற்றங்கள் பெருமளவில் குறைவதற்கு நிச்சயமாக வழிவகுக்கும் என்பதே பாலியல் நிபுணர்கள் கருத்து.இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு தமிழ் பெண்கள் வராமல் போக கலாம் .ஆனால் ,எப்படி தமிழ் திரைத்துறைக்கு மற்ற மாநிலத்து பெண்கள் ஈ மொய்ப்பது போல் வருகிறார்களோ, அதே போல இதற்கும் தகுந்த அளவு பணம் ஈட்ட வழி இருந்தால் நிச்சயமாக வருவார்கள் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
மேற்கண்ட பத்து கட்டளைகளை தீவிரமாக பின்பற்றினால் ,நிச்சயமாக தமிழ்நாட்டில், பத்து மாதத்தில், பெருமளவில் பாலியல் குற்றங்கள் குறைந்து விடும் என்று நம்பலாம்!நம் வீட்டு சிறுமிகளும், பெண்களும், பாட்டிகளும் நிம்மதியாக வாழலாம் என்பது நிச்சயம்!