Friday, 30 September 2016

அது ஒண்ணுக்கு மாத்திரம் ,மட்டும் தானா இந்த ஆத்திரம் ?



என்னங்க ,வீட்டை சுத்தி ஒரே குப்பை காடு ?

என்ன பண்றது !அவ்வளவுதான் ! 

அவனுக எங்க வேலை செய்றாங்க ?

நம்ம என்னங்க  பண்ண முடியும் !

===========================================

என்னங்க ,தெருவெல்லாம் ஒரே புகை ?

 என்ன பண்றது !அவ்வளவுதான் ! 

சொன்னா கேட்கவா போறாங்க ?

நம்ம என்ன பண்ண முடியும் !

===========================================

என்னங்க ,கழிப்பறை இல்லாமே பெண்கள் எங்க போகிறது ?

போராட்டம் எல்லாம் பண்ணிட்டோம் .

என்ன பண்றது !அவ்வளவுதான் ! 

நம்ம என்ன பண்ண முடியும் !

=========================================================

என்னங்க ,3 வயசு குழந்தையை பலாத்காரம் பண்ணியிருக்கான் ?

ஆமாங்க ,மோசமான பயலுக !

என்ன பண்றது !பாவம் !அவ்வளவுதான் ! 

நம்ம என்ன பண்ண முடியும் !

============================================================
நம்ம ஊரு மொட்டை கிணற்றிலே இதோட நாலாவது சாவு .
நாமெல்லாம் சேர்ந்து ஏதாவது பண்ணலாம்ல்ல ?
'என்னத்தை பண்றது ?
பஞ்சாயத்து தான் ஏதாவது பண்ணனனும் .
இதிலே எல்லாம் நாம என்னங்க  பண்ண முடியும் ?' 
---------------------------------------------------------------------------------------------------------------------------

என்னங்க ,அங்கே ஏதோ.... கலப்பு கல்யாணம்னு பேசிக்........?
டேய்ய்ய் !
எவண்டா அது பண்ணினது ?
டேய்ய்ய்ய் ...............
கூட்டுங்கடா நம்ம ஆட்களை !
எடுங்கடா .....விட்டுவிடுவமா அந்த பயலை ?
டேய்ய்ய் !டேய்ய்ய் !
=======================================================================

என்ன ஒரு வேகம் !என்ன ஒரு உணர்ச்சி !
ஆம் ,உணர்ச்சியுள்ளவர்கள் தாம் தமிழர் !

ஆனால் ,எதற்கு உணர்ச்சியுள்ளவராக இருக்கவேண்டுமோ 

அதை எல்லாம் விட்டுவிட்டு 

எதற்கெல்லாமோ 
எழுச்சியுடன் புறப்படும் கூட்டமா நாம் ?
உணர்ச்சி கொள்ளுவோம் !
எரிச்சல் அடைவோம் !
எதற்கு ?

நம்மை சுற்றி நல்ல சுத்தமான சூழ்நிலைக்கு ,

சொம்பை தூக்குவதை விட்டு விட்டு 
வீட்டில்கழிப்பறை கட்டும் பழக்கத்திற்கு  ,

ஒருவரை ஒருவர் மனிதனாக மதிக்கும் பண்பிற்கு  ,

ஊர்பொதுவான வசதிகளுக்கு 

ஒற்றுமையான உழைப்பு !

இதெற்கெல்லாம்  உணர்ச்சிப் படுவோம் !

ஒன்றாய்,நன்றாய்  உழைப்போம் !

No comments:

Post a Comment