ஒலிம்பிக்கில் இந்தியாவின் பரிதாப முகத்திற்கு காரணம் என்ன ?சீனா முதலிடத்தில் இருக்கும் போது ,கேவலம் ஒரு பதக்கம் கூட நாம் வாங்க முடியாமல் இருப்பத்திற்கு காரணம் என்ன ?
நாம் இங்கு இருப்பவர்களில் நல்ல தகுதி உள்ளவரை அனுப்புகிறோமோ ?நீச்சல் போட்டிக்கு ஆள் எடுக்க ,நீரிலே பிறந்து ,நீரிலே வளர்ந்து ,நீரிலே மடியும் ஏழை மீனவரை தேர்ந்தெடுத்து,உற்சாகப்படுத்தி , வெளி நாட்டவரை கொண்டு பயிற்சி கொடுத்து ஒலிம்பிக்கிற்கு அனுப்பலாம் .மலை இனத்தவரை வில் /சுடுதல் போட்டிக்கு அனுப்பலாம்.ஆனால் நாமோ மேல் ஜாதி ,இந்தி மொழி ,வடஇந்தியன் ,பணக்காரன் என்றல்லாம் பார்த்து ,தகுதியில்லாதவர்களை அனுப்பினால் ,0 பதக்கம் தான் கிடைக்கும் !இந்தியர்கள் ,மற்ற இந்தியர்களை தேர்ந்தெடுப்பது ஏதாவது ஒரு வழியில் 'ஆள் ' பார்த்து எடுப்பது என்பது வாடிக்கை .இது மாறும் வரை இந்திய ஒலிம்பிக்கில் தலையை தொங்க போடவேண்டியது தான் ! இந்த இந்திய போட்டியாளர் பட்டியலை பாருங்கள் .தென் இந்தியர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ?
தகுதியானவர்களை தேர்ந்தெடுப்போம் !தலை குனிந்த இந்தியாவை ,தலை நிமிர்த்துவோம் !
படம் நன்றி :கூகுள்
No comments:
Post a Comment