Sunday, 25 September 2016

காதல் கொலைகளில் தமிழ் படங்களின் முக்கிய பங்கு என்ன ?

காதல் சம்பந்தப்பட்ட  கொலைகளில்  தமிழ் படங்களின் முக்கிய பங்கு என்ன ?
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போலிருக்கிறதா இந்த தலைப்புக் கேள்வி ?இந்த கட்டுரையை முழுதும் வாசித்து பார்த்தால் தலைப்பின் பொருள் நன்றாகவே புரியும் .
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டால் ,எப்படி அதை எதிர்பாலரிடம் சொல்வது ?அப்படி சொல்லும்போது ,நாம் எப்படி பதில் சொல்வது ?இதற்கெல்லாம் ,மற்ற பாடங்களுக்கு இருப்பது போல் கோனார் உரை கிடையாது .இதற்கெல்லாம் ,இளைஞர்  பதில்தேடுமிடம் ,திரை படங்களாகவே இருந்து கொண்டு இருக்கிறது .திரை படங்கள் இந்த மாதிரி காட்சிகள் அமைத்து ,இளைஞரின் கேள்விகளுக்கு பதில் தருகிறார்கள் .அந்தக் காலத்தில் நாங்கள் பார்த்த எம் .ஜி .ஆர் . படங்களில் எல்லாம் ,தலைவர் பெண்களை தேடி அலைய மாட்டார் .நாயகிகள் அவரை தேடி வருமாறு நடந்து கொள்வார் !காதலை கொச்சை படுத்த மாட்டார் .அவர் படத்தை பார்த்தால் காதல் உணர்வு வரலாம் ஆனால் பால் உணர்வு கொப்பளிக்காது .பெண்களை மரியாதையுடன் நடத்த கற்று கொடுப்பார் .ஒரு போதும் புண் படுத்தும் வசனங்கள் அவர் படங்களில் வராது .
ஆனால் இன்றைய திரை காட்சிகளின் நிலைமை என்ன ?வசனங்களின் தரம் என்ன ?என்ன மாதிரி விதைகளை அவை விதைக்கின்றன ?கீழே பாருங்கள் ,விடை கிடைக்கும் !
  1. "ஒம் மூஞ்சிக்கெல்லாம் நயன்தாராவா கிடைப்பா ?ஏதாவது தேன் மொழி ,கயல்விழி ன்னு அலைவா !அவளை தேடி போ !"                                                                                                              விதைத்த விஷ விதைகள் : மூஞ்சியை பொறுத்து தான் பெண் கிடைப்பாள் ;சமஸ்க்ரித பெயர் பெண் ன்னா பெண் அழகு ;தமிழ் பெயர்ன்னா அசிங்கம் .                                                                                                           இந்த வசனம் எழுதினவன் ஓவ்வொரு தமிழனையும் கேவலப்படுத்தி இருப்பதோடு ,தோற்றத்தை பற்றி கீழ் தரமாக வர்ணித்திருக்கிறான் .இந்த எண்ணம் இளைஞர் நெஞ்சில் வேரோடி ,தன்னிடம் காதல் சொல்லும் ஆணிடம் மனம் புண் படும் விதத்தில் பதில் சொல்ல வைக்கலாம் .ஸ்வாதி ஏதோ ஒரு புண் படுத்தும் சொல்லை திரும்ப ,திரும்ப சொல்லியிருந்தால் அதற்கு காரணம் அவள் அல்ல ,இந்த வசனம் தான் என்பதை மறுக்க முடியாது .
  2. "எனக்கு கிடைக்காத அந்த சொர்க்கம் ,எவனுக்கும் கிடைக்க விடமாட்டேன் !"                       விதைத்த விஷ விதைகள்:'அவளை தீர்த்து விடு'என்ற அறிவுரை .அந்த காலத்தில் 'அவள் எங்கிருந்தாலும் வாழ்க 'என்ற அறிவுரை தான் காணலாம் . 
  3. இரட்டை பொருள் படும் படியான, 'அசிங்கமான ', இளைய சமுதாயத்தை தப்பான பாதையில் கொண்டு செல்லக்கூடிய காட்சிகள் மிகுதியாக  வருகின்றன.தாயாய் மதிக்க வேண்டிய வயதுடைய பெண்களையும் காமக் கண்ணோடு பார்ப்பது போல் காட்சிகள்.இன்னொருவரின் மனைவியையும் இச்சையோடு பார்ப்பது போல் காட்சிகள் !கல்லூரி யில்  பெண்கள் காதலுக்கத்தான் வருவது போலவும் ஆண்கள் எல்லாம் அதற்காக அலைவது போலும் காட்சிகள்.                                                                            விதைத்த விஷ விதைகள்:சேவை செய்யும் செவிலியரைக்கூட 'சைட் ' அடிக்கலாம் என்ற விஷ எண்ணம் 
  4. அடிப்பதும்  ,கொல்லுவதல்லாம் நகைச் சுவையா ?கொதிக்கும் வெந்நீரை முகத்தில் வீசுவது 'சிரிப்பா ' ? ஒரு குறிப்பிட நடிகரை அடிப்பது தான் ,எல்லா படங்களிலும் நகை சுவையாக  காட்டப்படுகிறது .எதற்க்கெடுத்தாலும் அரிவாள்களை தூக்கிக் கொண்டு விரட்டுவது போல் காட்சிகள்.பார்க்கும் குழந்தைகள் எல்லோரும் ,அரிவாளை தூக்குவதும் ,ஆளை அடிப்பது ஒன்றும் தவறில்லை ,நகைச் சுவை தான் ,என்று நம்ப வைக்கிறது இப்படியான காட்சிகள்.அப்புறம் தெருவில் யாரயாவது உதைத்தால் ,நம் இளைஞ்ச ரெல்லாம்  ,விழுந்து விழுந்து சிரித்து விட்டு போய் விடுவார்கள் !ஆண்களை அடிக்கக்  கூடாத இடத்தில அடித்தால் மரணம் தான் .ஆனால் அப்படி அடிப்பது தமிழ் படங்களில் 'ஜோக் ' !                                                                                                                    விதைத்த விஷ விதைகள்:வன்முறை ,அரிவாள் கலாச்சாரம் 
  5. இன்னொரு மோசமான போக்கு என்னவென்றால் ,ஏமாற்றி ஒருவரை எதிலாவது மாட்டி விடுவது நகைச்சுவையாக கருதப் படுவது  தான் .ஒரு படத்தில் மின்சார மோட்டார் ஒன்றை சரிசெய்து கொண்டிருக்கும் ஒரு நடிகரை ,இன்னொரு நடிகர் மின்சாரத்தை பாய விடுகிறார் .உடனே அவர் அலறுகிறார் .என்ன ஒரு 'ஜோக் ' ! இதை எப்படி சிரிப்பாக கொள்வது ? அப்பாவிகளை பிரச்னையில் மாட்டி விடுவது நல்ல நகைச்சுவையா ?
  6. ஆட்களை அசிங்கமாக வருணித்து பேசுவது அடுத்த நகைச்  சுவை !'போண்டா தலையா ,உன் கரடி மூஞ்சிக்கு ,தவக்களை ,போன்ற சொற்கள் எல்லாம் 'ஜோக் ' தானா ?சிந்திக்க வேண்டும் . 
  7. அடுத்தது ,பெரியவர்களை அவமதிப்பது ,ஆசிரியர்களை ஏமாற்றுவது போன்ற காட்சிகள் 'நகைச்  சுவையாக, வரம்பில்லாம்மல் காட்டப்படுகிறது .இவைகள் பார்ப்பவரின் மனதை நிச்சயமாக பாதிக்கும் என்பதில் ஐயமில்லை .
  8. ஒரு படத்தில் நாயகன் கருப்பு என்று நாயகி காதலிக்க மறுப்பதாகவும் ,உடனே நாயகன் வெள்ளையாக லேகியம் வாங்கி அதில் குளிப்பதாகவும் ஒரு கேவலமான காட்சி வருகிறது .  'கருப்பு'தமிழனின் பெருமைக்குரிய நிறம் .அதை வெளியிலிருந்து ,வாழ வந்தவர்கள் .நம்மை ஆள வந்தவர்கள் ஆகி ,சிறுமை படுத்தி ,வெளிரிய தோல் நிறத்தை கொண்டு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் .தமிழ் ஊடகம் முழுவதும் கருப்பு ஒருவரும் இல்லாமல் ஒழித்து விட்டார்கள் .அப்பாவி தமிழனே, தமிழனை நிறத்தை வைத்து கேவலமாக பேச வைத்து விட்டார்கள் .
இந்த காட்சிகள் எல்லாம் சமுதாயத்தை ,குறிப்பாக இளவயதினரை மிகவும் பாதித்து ,அவர்களுடைய நல்ல பண்புகளை ,தவறான பாதையில் கொண்டு செல்லக்  கூடியது என்பதை உணர்ந்து கொள்வது எல்லோருக்கும் நல்லது .சமுதாய நலனுக்காக ,இந்த மாதிரி காட்சிகளை தவிர்த்து ,நல்ல சுத்தமான  நகைச்சுவைக்  காட்சிகள் வரும் படியாக ,சம்பந்தப் பட்டவர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். நம் குழந்தைகளிடம் இதைக் குறித்து பேசி புரிய வைப்பதும் நல்லது . இத நான் ஒரு சமுதாயக் கவலையோடு தான் பதிவு செய்கிறேன் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை .காதல் கொலைகளில்  முக்கிய பங்கு தமிழ் திரைக்கு உண்டு என்பது உறுதி .

No comments:

Post a Comment