"வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் !"என்று நாம் பலமுறை நம் பண்பாட்டை பற்றி சொல்லி பெருமை கொள்கிறோம் .இது சரியா ?
இந்திய பெருங்கடலில் 'சென்டினல் தீவு ' என்ற ஒரு தீவு உள்ளது .இந்த தீவில் வாழும் மனிதர்கள் ,அவர் தம் கலாச்சாரம் பற்றி வெளி உலகுக்கு ஒன்றுமே தெரியாது .காரணம் ,அந்த தீவினர் வெளி உலகினர் யாரையும் அங்கு அனுமதிப்பதில்லை .வான் வெளியில் நாம் வானூர்தியில் தீவின் மேல் பறந்து சென்றால் கூட ,உடனே அவர்கள் விஷ அம்புகளை மேல் நோக்கி எய்வார்களாம் !ஏன் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள் ?
ஏனென்றால், தம்முடைய இடத்தை இழந்தால் ,அது அவர்கள் இனத்தின் அழிவின் ஆரம்பம் என்பதை அவர்கள்நன்றாக உணர்ந்திருப்பதால் தான்.அது அப்படியிருக்க, கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடியாம் நம் தமிழினத்திற்கு இந்த அடிப்படை உண்மை தெரியாதது உண்மையில் பெரும் ஆச்சர்யம் தான் !இயேசு பிரான் 'தட்டுங்கள் !திறக்கப்படும் !' என்றார் .நாம் தமிழரோ,அதற்கு மேல் ஒரு படி போய் ,தட்டாமலே கதவை திறந்து வைத்தோம் ..நல்லவரும் வந்தார்கள்.கூடே நயவஞ்சகரும் உள்ளே வந்தார்கள் .அடையாளம் தெரியாததால் அனைவரையும் அடுக்களை வரை,நாம் அன்புடன் அனுமதித்தோம் .
வந்தவர்களோ,அதற்காக நன்றியோடு நடந்து கொள்ளவில்லை .தமிழர் மொழியை திருடினர் ,சிதைத்தனர் .அவர்கள் பண்பாட்டை நம் மேல் திணித்தனர் .இறுதியில் நம்மையே ஆண்டு கொண்டு ,நம்மை இரண்டாம் தர குடிமகன்களாக மாற்றி விட்டனர் !
இன்று தமிழருக்கு தமிழ் நாட்டில் உரிய இடமில்லை .தமிழ் பேசினால் வேலையில்லை .தமிழரின் நிறமான கருப்பை,கிண்டலுக்கு உள்ளாக்கி அவர்களையே வெறுக்க வைத்தனர் .மேலும் தமிழர் மண்ணெல்லாம் ஆக்கிரமித்து அவர்களின் வடமொழி பெயரில் குடியிருப்புக்கள் கட்டி கொண்டிருக்கிறார்கள் .தமிழ் நகரம் கோவையில் 'ஸ்ரீ தக்ஷ க்சிப்தா 'என்ற சொல்ல கூட கடினமான ,அசிங்கமான வட மொழி பெயரில் குடியிருப்பு வளாகம் உள்ளது .அது போல ,நம்மால் தில்லியில் அழகு தமிழில் 'குறிஞ்சி குடியிருப்பு 'என்று பெயரிட்டு கட்ட தான் முடியுமா ?இது போதாதென்று தமிழ் ஊடகங்கள் எல்லாவற்றிலும் தமிழரை முற்றிலும் ஒழித்து விட்டனர் .தொலை காட்சிகளில் கருப்பு முகமே இல்லாமல் செய்து விட்டனர் .தமிழ் விளம்பரங்களில் கூட வட இந்தியர் வந்து அசிங்கமாக தமிழ் பேசுகிறார்கள் .தமிழனுக்கு மிஞ்சி இருக்கும் தமிழ் நாட்டிலே ,இந்தியில் வியாபாரம் செய்கின்றனர் .சென்னை திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் இந்தியில் பேசும் ஊழியர்கள்,'தண்ணீர் ' என்றால் முழிக்கிறார்கள் !தரணி ஆண்ட தமிழன் ,இன்று தமிழகத்தை கூட ஆள முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறான் !
வடக்கு வாசல் திறந்திருப்பதால் ,தெற்கு நோக்கி தள்ளப்படும் தமிழன் ,குமரிக்கு கீழே கடல் தான் உள்ளது என்பதை மறந்து விட்டான் .கலைஞர் ஒரு முறை கூறினார் "தமிழனுக்கு போரிட தெரியும்;ஆனால் ,யாரிடம் போரிட வேண்டும் என்பது தான் தெரியாது !"உண்மை தான் .தமிழன் இன்னொரு தமிழனை அடித்தது தான் அதிகம் !"தேனீக்கள் கூட அதன் குடியிருப்புகளில் வேறு தேனீக்கள் வந்தால் கொட்டி கொன்றுவிடும் .நாய்களோ அதன் பகுதிகளில் அந்நிய நாய்களை அனுமதிப்பதில்லை .குலைத்து துரத்திவிடும் .உண்மைதான் ,நாமும் மற்ற பகுதிகளுக்கு வாழ செல்கிறோம் .ஆனால் சென்ற இடங்களில் எங்கும் நாம் அவர்களை அடிமைப்படுத்தி ஆளவில்லை .நாம் நல்லவர்கள் .ஆனால் நல்லவர்களை அடையாளம் கண்டுபிடிக்க தெரியாத அப்பாவிகள் !
இதைக்குறித்து சிந்திப்போம் !
கள்ளர்களுக்கு கதவை திறந்து வைத்தது போதும் !இடம் காப்போம் !நம் தமிழ் இனம் காப்போம் !திறந்த கதவை ஓங்கி அடைப்போம் !
கள்ளர்களுக்கு கதவை திறந்து வைத்தது போதும் !இடம் காப்போம் !நம் தமிழ் இனம் காப்போம் !திறந்த கதவை ஓங்கி அடைப்போம் !
நாய் குலைக்கும் என்பது தவறு குரைக்கும் என்பது சரி
ReplyDelete