'தேசிய மொழி 'என்றால் என்ன ?ஒரு தேசம் முழுவதும் ,பேசப்படும் மொழி.எல்லோருக்கும் பொதுவாக புரியும் மொழி .இந்தியா முழுவதும் காசுமீரிலிருந்து கன்னியாகுமரி வரை எல்லோரும் அறிந்த மொழி என்ன ?
"இந்தி ?"நிச்சயமாக இல்லை !அது ஒரு ஆட்சியாளரின் கனவு .
"தமிழ் ?"இல்லவே இல்லை !தகுதியுள்ளவைகளுக்கு இந்நாட்டில் இடமில்லை !
பின்னர் என்ன தான் அந்த மொழி ?
காசுமீரிலிருந்து கன்னியாகுமரி வரை, இந்தியா முழுவதும் ,எல்லோரும் அறிந்த மொழி ஒரே இந்திய மொழி ---'பொய்'ஒன்றுதான் ! 'வாய்மையே வெல்லும் ' என்று எங்கும் எழுதி வைத்துக்கொண்டு ,எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்பவர்கள் நாம் தான் !
குடிமகனும் பொய் சொல்வார் !அரசும் பொய் சொல்லும் !
"வாங்க ,வாங்க ,வாங்க !காபி போடட்டுமா ?"(மனதில் ,'வந்துட்டான்யா !என்ன பண்ணுனாலும் ,இந்த பய வந்துர்ரானே !)
உடனே வந்தவர் "சும்மா வந்தேன் !இப்போதான் டீ குடிச்சேன் "(அவருக்கு டீ வேணும் .ஆனா சொல்லமாட்டார் .)
"என்னைய ஞாபகம் இருக்கா ?"
பதில் "உங்களையெல்லாம் மறக்க முடியுமா ?"(மனதில் 'ஆயிரம் பேரை பார்க்கிறேன் .எல்லோரையும் எப்படி ஞாபகம் வைக்க முடியும் ?கேக்கிற கேள்விய பாரு !')

சரி ,அதை விடுங்க .இவர்களாவது தனி மனிதர்கள் .இப்போ ,அரசை எடுத்துக்கொள்வோம் .பொய் சொல்லுமா அரசு ?
நீதி மன்றத்திலே போய் பொய் அறிக்கை அரசே தாக்கீது செய்யும் நாடு, நம் நாடு .'(உ -ம்)காவேரி நீர் இருப்பு குறித்து உச்ச நீதி மன்றத்திற்க்கே 'தண்ணி 'காட்டுகிறது கர்நாடகா அரசு .
நடுவண் அரசு ஒரு திட்டம் கொண்டுவந்தது .அதன்படி 'கையினால் மனித மலத்தை அள்ளுவதை முற்றிலும் ஒழிக்கவேண்டும் 'என்ற நோக்கம் .இதற்கு ஒரு கணக்கெடுப்பு எடுத்தார்கள் .அப்போது ,தமிழக அரசு 'தமிழ் நாட்டில் அப்படி பழக்கமே இல்லை 'என்று ஒரு பெரும் பொய்யய் எழுத்திலே கொடுத்து விட்டனர் ! எப்படி ?

இது இப்படியிருக்க ,இந்தியை 'எப்படியாவது ஆட்சி மொழியாக்கிவிட ,நடுவண் அரசு பலமுறை எண்களையும் கணக்குகளையும் மாற்றி சொல்லும் நிலை காண்கிறோம் .சென்னையில் கூட இந்தி பேசுவது மாதிரி வட இந்திய ஊடகங்கள் பொய் காட்சி போடும் !
ஆசிரியர் 'ஏன்டா ,நேற்று வகுப்புக்கு வரல ?'என்று கேட்டால் 'எங்க பாட்டி செத்துட்டாங்க !'என்று மாணவன் அழகாய் பொய் சொல்வான் !பெற்றோரோ ,ஒரு படி மேலே போய் 'ஆமா ,இப்பதான் அடக்கம் பண்ணிட்டு வரோம் !'என்பார்கள் !
தமிழ் திரைப்படங்களிலோ ,பொய் சொன்னாலோ ,ஏமாற்றினாலோ ,தப்பே இல்லை .அது வெறும் சிரிப்புதான் ,போங்க !

எல்லா நாடுகளிலும் இப்படித்தானா ?மற்ற நாடுகளை எடுத்துக்கொள்வோம் .பல வெளிநாட்டினர்,குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் , குற்றம் சாட்டப்பட்டவர்கள் ,நீதிமன்றங்களில் தாம் செய்த குற்றத்தை ஒத்துகொள்வது என்பது அங்கு வெகு சாதாரணம் .ஏன் ,நம் நாட்டில் மட்டும் ,கத்தியோடு பிடிபட்டால் கூட ஒத்துக்கொள்வதில்லை ?
'எந்த நாட்டிலும் இல்லாத அளவு பொய் பேசும் நாடு இந்தியா' ,என்று வெளி நாட்டினர் நினைப்பது நம்மில் பலருக்கு தெரியாது .காரணம் ,நாம் பொய் பேசுவது நமக்கே பல முறை தெரியாதது தான் !இந்த பொய் பழக்கத்திற்கு அடிப்படை காரணம் தான் என்ன ?
நம்மில் பலர் ,இம்மாதிரியான கேள்விகளையே வேண்டாமென்று நினைப்பது உண்டு .ஆனால் ,இது தேவை .இது ஒரு சுய பரிசோதனைதான் .நம்மை நாமே குறைசொல்வதல்ல நோக்கம் .ஆனால் உண்மையை மறைப்பதால் ,நாம் மாறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமலே போய்விடக்கூடும் என்ற கவலையே இதை சொல்ல தூண்டுகிறது . .
இதில்உங்கள் கருத்து என்ன ?உங்கள் நிலை என்ன ?பதிவிடலாமே !கலந்துரையாடலாமே !
படம் நன்றி :adirainirubar.blogspot.com
No comments:
Post a Comment