Friday, 11 December 2020

தரம் தாழ்ந்து வரும் தமிழ்த் திரை நகைச்சுவை !

  


                               நான் சிறுவனாக இருந்த 60 களில் தமிழ் திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த நாகேஷ் ,சந்திரபாபு ,சோ ,மனோரமா போன்றவர்களின் நகைச்சுவைக் காட்சிகள், இன்றும் மனதை விட்டு அகலாமல்  நிற்கின்றன .தூய்மையான நகைச்சுவை காட்சிகள் .யாரையும் புண் படுத்தாமல் ,சுத்தமான நகைச் சுவைக் காட்சிகள் !.ஆனால் இன்றய நிலைமை யோ  கவலை அளிக்க க்  கூடியதாக இருக்கிறது.எப்படி  ?

இப்போதைய காட்சிகள் ! 
                                         அன்றைய காலக் கட்டத்தில் நகைச்சுவை ஒரு தனி கிளை க் கதையாக அல்லது கதையுடன் பின்னப்பட்டு  ,ஒரு அடிப்படை கருத்தோடு  அமைக்கப் பட்டிருக்கும்.பல முறை சிரிப்பையும் சிந்தனையையும் உருவாக்கும் காட்சிகளாக இருக்கும்.'திருவிளையாடலில் ' தருமியின் பாத்திரம் ,'அன்பே வா ' படத்தில் நாகேஷின் காட்சிகள்,'தேன் மழை' திரைப்படம் ,  எல்லாம் நினைத் தாலே சிரிக்கும் காட்சிகளாக இருந்தன. .
                                     ஆனால் இன்றைய நாளில் நகைச்சுவை காட்சிகள் அமைக்கும் விதம் முற்றிலுமாக மாறி விட்டது.எப்படி ?
  • இரட்டை பொருள் படும் படியான, 'அசிங்கமான ', இளைய சமுதாயத்தை தப்பான பாதையில் கொண்டு செல்லக்கூடிய காட்சிகள் மிகுதியாக  வருகின்றன.தாயாய் மதிக்க வேண்டிய வயதுடைய பெண்களையும் காமக் கண்ணோடு பார்ப்பது போல் காட்சிகள்.இன்னொருவரின் மனைவியையும் இச்சையோடு பார்ப்பது போல் காட்சிகள் !கல்லூரியில்  பெண்கள் காதலுக்கத்தான் வருவது போலவும் ஆண்கள் எல்லாம் அதற்காக அலைவது போலும் காட்சிகள்.
  • அடிப்பதும்  ,கொல்லுவதல்லாம் நகைச் சுவையா ?கொதிக்கும் வெந்நீரை முகத்தில் வீசுவது 'சிரிப்பா ' ? ஒரு குறிப்பிட நடிகரை அடிப்பது தான் ,எல்லா படங்களிலும் நகை சுவையாக  காட்டப்படுகிறது .எதற்கெடுத்தாலும் அரிவாள்களை தூக்கிக் கொண்டு விரட்டுவது போல் காட்சிகள்.பார்க்கும் குழந்தைகள் எல்லோரும் ,அரிவாளை தூக்குவதும் ,ஆளை அடிப்பது ஒன்றும் தவறில்லை ,நகைச் சுவை தான் ,என்று நம்ப வைக்கிறது இப்படியான காட்சிகள்.அப்புறம் தெருவில் யாரயாவது உதைத்தால் ,நம் இளைஞரெல்லாம்  ,விழுந்து விழுந்து சிரித்து விட்டு போய் விடுவார்கள் !ஆண்களை அடிக்கக்  கூடாத இடத்தில அடித்தால் மரணம் தான் .ஆனால் அப்படி அடிப்பது தமிழ் படங்களில் 'ஜோக் ' ! 
  • இன்னொரு மோசமான போக்கு என்னவென்றால் ,ஏமாற்றி ஒருவரை எதிலாவது மாட்டி விடுவது நகைச்சுவையாக கருதப்படுவது  தான் .ஒரு படத்தில் மின்சார மோட்டார் ஒன்றை சரிசெய்து கொண்டிருக்கும் ஒரு நடிகரை ,இன்னொரு நடிகர் மின்சாரத்தை பாய விடுகிறார் .உடனே அவர் அலறுகிறார் .என்ன ஒரு 'ஜோக் ' ! இதை எப்படி சிரிப்பாக கொள்வது ? அப்பாவிகளை பிரச்னையில் மாட்டி விடுவது நல்ல நகைச்சுவையா ?
  • ஆட்களை அசிங்கமாக வருணித்து பேசுவது அடுத்த நகைச்  சுவை !'போண்டா தலையா ,உன் கரடி மூஞ்சிக்கு ,தவக்களை ,போன்ற சொற்கள் எல்லாம் 'ஜோக் ' தானா ?சிந்திக்க வேண்டும் . 
  • அடுத்தது ,பெரியவர்களை அவமதிப்பது ,ஆசிரியர்களை ஏமாற்றுவது போன்ற காட்சிகள் 'நகைச்  சுவையாக, வரம்பில்லாம்மல் காட்டப்படுகிறது .இவைகள் பார்ப்பவரின் மனதை நிச்சயமாக பாதிக்கும் என்பதில் ஐயமில்லை .
                                         இந்த காட்சிகள் எல்லாம் சமுதாயத்தை ,குறிப்பாக இளவயதினரை மிகவும் பாதித்து ,அவர்களுடைய நல்ல பண்புகளை ,தவறான பாதையில் கொண்டு செல்லக்  கூடியது என்பதை உணர்ந்து கொள்வது எல்லோருக்கும் நல்லது .புதிதாக வந்திருக்கும் நடிகர் சங்கத்தினர் இதை கருத்தில் கொண்டு ,சமுதாய நலனுக்காக ,இந்த மாதிரி காட்சிகளை தவிர்த்து ,நல்ல சுத்தமான  நகைச்சுவைக்  காட்சிகள் வரும் படியாக ,சம்பந்தப் பட்டவர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். நம் குழந்தைகளிடம் இதைக் குறித்து பேசி புரிய வைப்பதும் நல்லது . இத நான் ஒரு சமுதாயக் கவலையோடு தான் பதிவு செய்கிறேன் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை .
-------------------------------------------------------------------------------------
(வலைத்தமிழ்.காம்  இணைய இதழில் 5/11/2015 அன்று வெளியானது )

Monday, 7 December 2020

தமிழை சிதைக்கும் காரணிகள் !

 எந்த ஒரு தமிழ் வார இதழ் வாசித்தாலும் எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி  பார்த்தாலும் , ஒன்று மட்டும் பொது வாக காண ப்படுகிறது ..அது என்ன வென்றால் ,அதில் சுமார் 30% சொற்கள் ஆங்கிலமாக கலந்து இருப்பது தான்  .இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் விரைவில் தமிழ் மொழி ஒரு சிதைப்பட் ட 'தங்க்லீஷ் 'ஆக மாறிவிடும் அபாயம் உள்ளது . இதை தமிழர்கள் ஆகிய நாம் எப்படி தடுக்கலாம் ?

தமிழர்களின் அளவில்லா ஆங்கில  மோகம் 
                           தமிழ் நாட்டை பொருத்தவரையில் , ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலிருந்து ஆங்கில மோகமும் நம்மை ஆண்டுகொண்டு இ ருப்பதை  யாராலும் மறுக்கமுடியாது . இந்த ஆங்கில ஆதிக்கம், நம் சிந்தனையையும் ஆண்டு கொண்டு தமிழை ,தமிழில் பேசுவதை புறந்தள்ளிக் கொண்டிருப்பதை நம் கண் கூடாக காண்கிறோம் .நம் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் பெருமையுடன் சேர்த்து ,அவர்களை அதில் பேச ஊக்குவித்து ,எல்லோரிடம் சொல்லி மகிழும் ஒரே இனம் நம் தமிழ் இனந்தான் !  இதற்கெல்லாம் காரணம் தான் என்ன ? நம்மை அறியாமலேயே நாம் தமிழை அழித்துக் கொண்டிருக்கிறோமா ? ஏன் இந்த சுய வெறுப்பு ?
என்னுடைய சிங்கை அனுபவம் 
                           சிங்கப்பூர் சென்றி ருந்த போது ,'வாட்ச் ' வாங்குவதற்காக ,ஒரு கடையில் சென்று  நான் 'வாட்ச் ' வேண்டும் என்றேன் .அங்கிருந்த தமிழ்ப்  பெண் 'அண்ணாச்சி ,மணிக் கடிகாரமா ?' என்று அழகான தமிழில் கேட்க, நான் பதிலுக்கு ,திரும்பவும்  'ஆமா ,வாட்ச் தான் 'என்று சொல்ல , அந்தப்பெண் திரும்பவும் அதே கேள்வியை கேட்க, நான் திரும்பவும் ,அதே பதிலை சொல்ல ,ஒரே வேடிக்கை தான்,போங்கள்  ! சிறிது நேரம் கழித்து தான் எனக்கு அவர்கள் தூய தமிழ் பேசுவதே புரிந்தது ! ஏன் நான் அதைக் கூட புரிந்துக் கொள்ளவில்லை ? என் மேல் தப்பா ?அல்லது நம்முடைய தமிழ் சமுதாயம் மேல் தப்பா ?
                         இதைப் போல் இன்னொரு சம்பவம் .இந்த முறை இது நடந்தது கன்னியாகுமரியில் .சூரிய அஸ்தமனத்தை ரசித்துக் கொண்டிருந்த என்னை ஒருவர் தமிழில் ஏதோ கேட்டார் .நான் அதற்கு ஆங்கிலத்தில் பதில் கூறினேன் .இரு முறை என் ஆங்கில பதிலை கேட்டுவிட்டு ,அவர்  என்னிடம் "நீங்க ,தமிழன் தானே ? பின்னே ஏன் தமிழ்ல பதில் சொல்ல மாட்டேன்கிறேங்க ?" என்று ஓங்கி  கன்னத்தில் அறை விட்டது போல் கேட்டார் .எனக்கு ஒரே அவமானமான உணர்வு ! சே !இனிமேல் இருந்து தமிழ்ல தான் பேசணும் என்று முடிவெடுத்தது தான் ,அதன் பிறகு ஒரு நாள் கூட தப்பி தவறி கூட ஆங்கிலத்தில் பேசவில்லை என்று சொல்வேன் என்று எதிர் பார்க்காதீர்கள் ! இன்னும் முயன்று கொண்டுதானிருக்கிறேன் ,முடியவில்லை .ஏன் ?
நம்மை இயக்கும் நம் உள் மனது !
                                 நாம் அன்றாடம் செய்யும் செயல்கள் எல்லாம் நாம் சிந்தித்து செய்பவை அல்ல .சுமார்  75% அனிச்சை(reflex) செயலாக நடை பெறுவது தான் .இந்த அனிச்சை செயல்கள் உள்மனதின் ஆழத்தில் திட்டமிடப் பட்டு(programmed) பதிவாயிருக்கிறது .நாம் நினை த்தால் கூட இதை மாற்றுவது கடினம் .உம் .யாராவது என் காலை மிதித்தால் நான் 'அம்மா ' என்று கத்தாமல் 'தாத்தா ' என்று கத்துவேன் என்று  முடிவெடுத்து பாருங்கள் !என்ன முயன்றாலும்  'அம்மா' என்று தான் கத்த வரும் ! ஏன் என்றால் அது உள்மனதின் பதிவு.அதை உள்மனது நுழைந்து தான் மாற்ற முடியும் .உள்மனதில் இதைப்  பதிப்பது யார் ?
உள்மனதை ஊடுருவும் ஊடகங்கள் !
                          நான் சிறுவனாக இருந்த போது என்னுடைய நடை ,உடை,பாவனை எல்லாவற்றையும் பாதித்தது என்னுடைய குடும்பம்,ஆசிரியர்,சமூகம் ,அப்புறம் ஒரு அளவுக்கு திரை ப்படங்கள் போன்றவை தான் .என்னுடைய தமிழை தீர்மானித்ததும் இவை தான் .தொலைக் காட்சியோ ,வலைத்  தளங்களோ இல்லாத காலம் அது .என்னுடைய தமிழ் ஆங்கிலம் அதிகம் கலக்காத அழகு தமிழாக இருந்தது .ஆனால் இப்போது என் 1ம் வகுப்பு படிக்கும் பேத்தியிடம் தமிழில் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவது எளிது ,என்கிற அவல நிலை க்கு தள்ளப் பட்டிருக்கிறோம் .காரணம் ,நம்மை சூழ்ந்திருக்கும் எல்லாம் நம்மை பாதிக்கின்றன .ஆங்கிலக் கல்வி ,ஆங்கிலம் பேசினால்தான் உயர்வு என்று நினைக்கும் ஆசிரியர் ,நண்பர்கள் ,சமூகம் ,ஊடகங்களில் 30% ஆங்கில ஊடுருவல் ,நடிகர்களின் ஆங்கில உரையாடல்கள் இவை யாவும் நம் உள் மனதை ஆள்வதால்,நாம் முடிவெடுத்தாலும் கூட தூய தமிழில் பேசுவது ஒரு பெரிய சவாலாகத் தான் இருக்கிறது .இவைகளில் தொலை காட்சி நிகழ்ச்சிகள், தாம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது . பல நிகழ்ச்சிகள் பெயரே ஆங்கிலம் கலந்த பெயராகத் தான் இருக்கிறது.தற்போதைய ஊ டகங்கள் ,தொலைக்காட்சி ,வலை  மற்றும் அலை பேசி மூன்றும் உடலோடும் உள்ளத்தோடும் பிரியாத ஒன்றாகிவிட்டன .அதனால் அவைகளின் தாக்கத்தை என்ன முயன்றாலும் கட்டுக்குள் கொண்டு வரமுடியாது என்பது தெளிவான உண்மை.
'பண்ணி ' தமிழ் படுத்தும் பாடு !
                              தமிழர்கள் எல்லோரும்  இப்போது ஒரு விதமான  'பண்ணி' தமிழுக்கு மாறி விட்டார்கள்.அது என்ன, 'பண்ணி ' தமிழ் ?அது இது தான் !
                    கொஞ்சம் .'ட்ரை ' பண்ணிப் பார்த்து ,முடியலைன்னா 'கட் ' பண்ணிருங்க . 'மிக்ஸ் ' பண்ணும் போது 'கேர் புல்லா ' இருங்க ,அந்த 'லெவல் ' போயிடும்.இந்த தமிழ் நீடித்தால் தமிழ் ' ஐ சி யு வார்டில் '  அட்மிட் ' பண்ணும் நாள் தூரத்தில் இல்லை ! 
               இந்த அவல நிலையை மாற்றுவதற்கு நாம் என்ன செய்யலாம் ? தமிழை எப்படி காக்கலாம் ? இதுவரை இல்லாத இந்த ஒரு புதிய அச்சுறுத்தலை எப்படி எதிர் கொள்ளலாம் ?
தமிழைக்  காக்க என்ன செய்யலாம் ?
  • முதலில் தமிழுக்கு பெரிய  அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்து ,,அந்த செய்தியை சமூக ஊடகங்கள் மூலமாக வேகமாக  பரப்ப வேண்டும் .அழிவின் விளிம்பை நோக்கி தமிழ் செல்வதை குறித்து எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் .எதற்ககெல்லாமோ விழிப்புணர்வு பேரணி நடத்தும் நாம் இதற்கும் நடத்தலாமே ! 
  • நாம் ஒவ்வோருவரும் அன்றாடம் பேசும் தமிழில் ஆங்கில சொற்களை தவிர்த்து பேச வேண்டும் .இது கடினமாக இருந்தாலும் நம் தாய்க்காக செய்வதாய் நினைத்து கடமையாக செய்ய வேண்டும்.
  • நம் குழந்தைகள் நம்மைப்  பார்த்து கற்றுக்கொள்ளும் .இது அவர்கள் ஆங்கில அறிவை பாதிக்கும் என்று நினைக்க வேண்டாம்.
  • நம்முடைய சமூக ஊடகங்கள் பதிவுகள் தூய தமிழில் இருக்க வேண்டியது அவசியம் .அப்படி இல்லாத பதிவுகளை அன்புடன் கண்டிக்கலாம் .இதை நான் இப்போதே செய்து கொண்டிருக்கிறேன்.
  • தொலை காட்சி நிகழ்ச்சிகள்/வார இதழ்கள் போன்றவற்றில்  ஆங்கிலம் கலந்தால் நாம் எதிர்ப்பை கருத்தாகக் கூறலாம் .
  • தூய தமிழ் நிகழ்ச்சிகள் /இதழ்கள் ஆகியவைகளை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கலாம் .
  • எல்லாவற்றிற்கும் மேலாக தமிழிழ்  பேசுவதை நாம்  பெருமையாக  கொள்ள  வேண்டும் .
                              ஆங்கில  புலமையை  வளர்த்து கொள்வதில்  தப்பில்லை .அது  பிழைப்பிற்க்காக ! .ஆனால்  தமிழில்   பேசுவது நம்  தாய்க்கு  செய்யும் மரியாதை! .இரண்டு மலையாளிகள்  சந்தித்தால் அவர்கள்  மலையாளத்தில்  பேசுவார்கள் .இரண்டு தெலுங்கர்கள்  சந்தித்தால் தெலுங்கில்  பேசிக் கொள்வார்கள் .ஆனால் இர ண்டு  தமிழர்கள்  சந்தித்தால் மட்டும் அதிகமாக  ஆங்கிலத்தில்  தான் பேசிக்கொள்வார்கள் .
கவிஞர் ஆழிமலரின் குறுங்கவிதை  ஒன்று என்  நினைவுக்கு வருகிறது .
இதோ அந்த கவிதை .
   ஆங்கிலம் 
தமிழ் அறிந்த ஒரு தமிழனும் 
தமிழ் அறிந்த  இன்னொரு தமிழனும் 
பேசும் இணைப்பு மொழி !
மறக்க வேண்டாம் !
                            இந்த அவல நிலை மாறி" கல் தோன்றி மண் தோன்றா  காலத்தே, முன் தோன்றி மூத்த குடியின் பெருமையான தமிழைக்  காக்க தலையும் தருவேன்" என்று சொல்லும் தமிழர்கள்  இருக்கும் இந்த தமிழ்நாட்டில்  நான் சொன்ன தெல்லாம் மிக எளிது தான் .
                                             இணைந்து தமிழை உயர்த்துவோம் !
.                                                                 வாழ்க தமிழ் !. 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                          
(வலைத்தமிழ் இணையத்தில் 2/11/2015 ல் வெளியிடப்பட்டது .மறு வெளியீடு )

Saturday, 14 November 2020

தீபாவளியின் உண்மைக் கதை !

 *தீபவதி நதிக்கரையில் துவங்கிய, தீப ஒளி (தீவாளி)திருநாள் எனும் பௌத்த மக்கள் பண்டிகை.*

தென்னிந்திய சமூகப் புரட்சிக்கு தந்தையென அறியப்படும், *அயோத்தி தாசப் பண்டிதர்* , பல்வேறு இலக்கியச் சான்றுகளை ஆராய்ந்து, அதன் வழியே தீப ஒளி திரு விழாவுக்கான உண்மையை வெளிக் கொணர்ந்தார்.
முன்பு, பௌத்தம் இந்தியா முழுவதும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது. இதன் மூலம் மக்களின் வாழ்வை பௌத்தம் வளமாக்கியது. எனவே, பௌத்தத்தை பரப்புவதற்காக பௌத்த பிக்குகள் இந்தியா முழுவதும் சென்று, மக்களுக்கு பௌத்தத்தை போதித்தது மட்டுமின்றி, பௌத்த மடங்களான விகார்களிலிருந்தும் தம்மம் குறித்து போதித்து வந்தனர்.
பௌத்த விகார் என்றழைக்கப்படும், பௌத்த மடங்களில் தங்கியிருக்கும் பிக்குகள் போதனை மட்டுமின்றி மருத்துவம், அறிவியல், வானவியல், வேளாண்மை உள்ளிட்ட ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகளையும், கண்டுபிடிப்புகளையும் மக்களிடமும் கொண்டு சேர்த்தார்கள்.
மக்களிடம் விரைவாகச் சேர்ப்பதற்காக, தாங்கள் தங்கியிருக்கும் மடம் அமைந்துள்ள நாட்டின் அரசனிடம் முறையான சான்றுகளுடன் தத்தமது கண்டுபிடிப்புகளைக் காட்டி, செயல்முறை விளக்கங்களுடன் முடிவுகளை விளக்கிக் காட்டுவர். பின்னர் அரசனின் இசைவு பெற்று மக்களிடம் விரைவாகக் கொண்டு சேர்த்தனர். இந்த வழக்கம் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டதென்பதை, குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த கண்டுபிடிப்பை அயோத்திதாசப் பண்டிதர் வெளிப்படுத்தினார்.
தென்னாட்டில், 'பள்ளி' எனும் நாட்டில்- பௌத்த மடத்தில் இருந்த பிக்குகள் 'எள்' எனும் விதைகளைக் கண்டுபிடித்தார்கள். பிறகு, எள் விதை யிலிருந்து, நெய்யை (கவனிக்கவும் – நெய் என்பது பொதுப்பெயராகத் தமிழில் வழங்கும் சொல். அச்சொல்லுக்கு முன் சேர்க்கப்படும் பெயர் அது எந்த நெய் என்பதைக் காட்டும்) வடித்து அதன் குணங்களையும், மருத்துவப் பயன்களையும் கண்டறிந்தார்கள். அந்த நெய் தான் மண்டை தொடர்பான நோய்கள், சுரங்கள், மேக நோய், சேத்மம், சாமரோகம், எலும்புருக்கி, ஈளை உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்து வதுடன் சிறந்த மலமிளக்கியாகும் எனக் கண்டறிந்தனர். அந்த எள்நெய்யைத் தலையில் தேய்த்து தலை மூழ்கினால் இப்பயன் கிடைக்கும் என்பதையும், அந்த எள் நெய்யில் பலகாரங்களைச் செய்யலாம் என்பதையும் பிக்குகள் கண்டறிந்தார்கள்.
இதன்பிறகு, ‘பள்ளி’ நாட்டை ஆண்ட அரசரான 'பகுவன்' என்பவரிடம் பிக்குகள் சென்று எள்ளையும், நெய்யையும் காட்டி அதன் பயன்களை விளக்கியதால், எள்ளின் மகிமையை உணர்ந்த மன்னர் பகுவன் எள்ளினை அதிகளவில் விளைவிக்க செய்தார். எள் விதையிலிருந்து நெய்யெடுத்து அதனை தன் நாட்டு மக்கள் தலையில் தேய்த்து, பள்ளி நாட்டின் தலை நகரில் ஓடிக்கொண்டிருந்த ' *தீபவதி'* ஆற்றில் குளிக்க வேண்டுமென கட்டளையிட்டான். அதன்பிறகு பௌத்த பிக்குகள் மூலம் எண்ணெய்யை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தான். மக்களுக்கு அந்த எள்நெய் பெரிதும் உதவியதால், அது முதல் பிக்குகளால் நல்லெண்ணெய் *(நல்+ எள்+ நெய்)* எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது.
*நல் + எள் + நெய்* என்றழைக்கப்படும் நல்லெண்ணெயை தலையில் தேய்த்து ஐப்பசி மாதம் சதுர்த்தி நாளன்று தீபவதி ஆற்றில் குளித்ததோடு இணைத்து, தீபவதி குளியல் நாள் என வழங்கி வந்தார்கள் என்பதை *"பெருந்திரட்டு*” எனும் பண்டையத் தமிழ் நூலில் *‘பாண்டி படலம்’* எனும் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை சான்றாக அயோத்திதாச பண்டிதர் விளக்கியுள்ளதை நாம் நினைவு படுத்தி கொள்ளவேண்டியுள்ளது.
இது மட்டுமின்றி, தீபவதி காலத்தில் மேற்கொள்ளப்படும் விரதத்தைப் பற்றி குறிப்பிடும் போது, அது ஐந்தொழுக்கக் கொள்கைகளான கொலை செய்யாமை, களவு செய்யாமை, மது அருந்தாமை, பிறன் மனை விழை யாமை, பொய் சொல்லாமை எனும் கோட்பாட்டை பின்பற்றி தமது வாழ்நாளில் கடைபிடிக்க வேண்டுமென்பதற்காக, அவற்றை விரதமாக மேற்கொண்டு வந்ததையும் அயோத்திதாசப் பண்டிதர் விளக்கியுள்ளார்.
பிற்காலத்தில் வந்த சிலர் தீப ஒளி தத்துவத்தை மறைத்து, அவர்களின் வசதிக்கேற்ப கதைகளாக திரித்து, தமது வயிற்றுப் பிழைப்பிற்காக மக்களை மூடர்களாக்கி, மூட நம்பிக்கைகளைக் கட்டி தீபவதி நாளை திரித்தார்கள். என்று அயோத்திதாசர் பண்டிதர் கூறுகின்றார்.
அக்காலத்தில் மக்களுக்கு பயன்படக் கூடிய பொருளை, பௌத்த பிக்குகள் கண்டுபிடித்த நாளை அவர்கள் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அதைப் போற்றி கொண்டாடி வந்தனர். வீட்டின் இருளைப் போக்கி ஒளியேற்றிய எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது கொண்டாடப்பட வேண்டியதென்பதால்தான் தீப ஒளி திருவிழா கொண்டாடப்பட்டது. அந்தப்புரிதலோடு தீப ஒளி திருவிழாவை மாசில்லாமல், ஒலி சீர்கேடு இல்லாமல், நமது வீட்டில் எள் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி கொண்டாடுவோம்.
-----------------------------------------------------------------------------------------------------------
பொறுப்பு துறப்பு :இது ஒரு வெளியிடப்பட்ட ,ஆசிரியர் தெரியாத பதிவு .என்னுடைய கருத்தல்ல .

Sunday, 1 November 2020

மாட்டிறைச்சி சாப்பிட்ட பிராமணர்கள் தான் பரையராக ஆக்கப்பட்டார்களா ?


இந்து மதத்தின் தாழ்த்தப்பட்ட மக்களில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் இனம் ஒன்று உண்டு என்றால் அது 'பறையர் 'இனமே .இவர்களை தீண்டத்தகாதவர்களாக்கி ,ஊருக்கு ஒதுக்கு புறத்தில் சேரியென்று ஒன்றை உருவாக்கி இந்த சமுதாயம் வைத்திருக்கிறது . மற்றவர் செய்ய தயங்கும் வேலைகளை இவர்களுக்கு அளித்து,பின்னர் அதை செய்வதினால் இவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் 'பறையர்' என்கிற சொல்லை பரப்பிவிட்டு,ஆங்கில அகராதிகளில்  அதை இடம்பெற செய்து, இப்போது அதை ஒரு 'வெறுப்பு சொல்'லாக பயனாகும்படி  இந்திய ஆட்சியாளர்கள் செய்துவிட்டார்கள்.
இதோ மேரியம் -வெப்ஸ்டர் அகராதியில் 'pariah 'என்ற சொல்லின் பொருள் :
  • உண்மையில்அழுக்கு வேலை செய்யும் சுத்தமற்ற தீண்டத்தகாதவர்களா பறையர்கள் ?
  • ஆதியில் இவர்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தனர் ?
  • இவர்கள் இந்த நிலைக்கு வந்ததன் காரணம் தான் என்ன ?
  • உண்மையில் இவர்கள் வரலாறு தான் என்ன ?
அறிய நான் ஒரு தீவிர கள ஆராய்ச்சியில் இறங்கினேன் .
என்னுடைய ஆராய்ச்சியை ஆங்கில மனிதவியலாளர், எட்கர் தர்ஸ்டன் அவர்கள் எழுதிய ' 'காஸ்ட் அண்ட் ட்ரைப்ஸ் ஆப் சவுத் இந்தியா '(1909) என்ற புத்தகத்திலிருந்து ஆரம்பித்தேன் .
அதிலிருந்து மற்ற எல்லா ஆதார தளங்களிலும் தேடிய பின் ,பல சுவையான தகவல்கள் கிடைத்தன .இவற்றை உங்களுடன் இங்கு பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .இந்த தகவல்களை சாதியை பற்றி பேசுவதாக எடுக்காமல் ,ஒரு அறிவு பூர்வ ஆராய்ச்சியாக மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .
'பறையர் 'என்ற சொல்லின் வேர் !
முதலில் 'பறையர் 'என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம் . 'பறை 'என்றால் 'முரசு 'என்று பொருள் படும் என்றும் ,'பறையர் ' என்றால் 'பறை அடிப்போர் 'என்றும் சொல்லப்படுகிறது .இந்த 'வேரை ' கூர்ந்து பார்த்தால் , இது உண்மையல்ல என்பது தெளிவாகும் .எப்படி என்று பார்ப்போம் .
.தமிழ் நாட்டில் தற்போதய கணக்குப்படி 12620 ஊர்கள் உள்ளன .பண்டைய தமிழகத்தில் இதை விட குறைந்த அளவே ஊர்கள் இருந்திருக்கும் .பறையர்கள் பறை அடித்து ,அதனால் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தால் ஒவ்வொரு ஊரிலும் ,பறை அடித்து நிகழ்ச்சிகள் /சடங்குகள் செய்ய ,அதிக பட்சம் 10 பேர் தேவையாய் இருந்திருக்கும் .ஆக ,10000 ஊர்களுக்கு அதிக பட்சமாக 100000,அதாவது 1 லட்சம் பேர் இருந்திருக்க கூடும் .ஆனால் இந்த பறையர் இனம் தற்போது சுமார் 50 லட்சத்திற்கு மேல் ஜனத்தொகை கொண்டது .பழங் காலத்தில் சில லட்ச கணக்கில் இருந்திருக்கும் ஒரு இனம் .அவ்வளவு பேரும் பறை அடித்து வாழ்க்கை நடத்தியிருக்க வாய்ப்பில்லை,என்பது வெள்ளிடை மலை .
அதில் ஒரு சிறு பிரிவினர் பறை அடித்திருக்க கூடும் .இந்த கருத்தை 1891 ல் ஆங்கிலேயர்கள் வெளியிட்ட 'மெட்ராஸ் சென்சஸ் ரிப்போர்ட் 'டில் குறிப்பிட்டிருக்கிறார்கள் .
"in the 1891 Madras Census Report, it is recorded that "it is only one section of Paraiyars that act as drummers, nor is the occupation confined to the Paraiyars. It seems in the highest degree improbable that a large, and at one time powerful, community should owe its name to an occasional occupation, which one of its divisions shares with other castes."
இரண்டாவதாக ,மற்ற ஜாதிகளிலும் பறை அடிப்பவர்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது .ஆக 'பறை 'அடிப்பவர் 'பறையர் 'என்ற வேர் சொல்லியல் தப்பு என்பது தெளிவாகத் தெரிகிறது .
அப்படியென்றால் 'பறையர் 'என்ற சொல்லின் உண்மையான வேர் என்ன ?
தமிழில் 'பரை 'என்ற சொல் ஒன்று உள்ளது .அகராதி .காம் என்ற தமிழ் தொகுப்பு அகராதி ,அந்த சொல்லின் பொருளை இவ்வாறாக கூறுகிறது :

ஆக ,'பரை 'என்றால்'சிவபெருமானின் அருள் பெற்று நிற்கும் நிலை ' என்று பொருள் படும் .மேலும் ,அது பார்வதி தேவியின் ஒரு பெயராகும் . இதைத் தவிர ,'பர 'என்றால் 'மேல் 'என்ற பொருள் வரும் .' .'பரன்' என்றால் 'மேலோன்' ,ஆதலால் 'நமக்கு மேலிருக்கும் கடவுள் 'என்று பொருள் . வீட்டில் 'பரண்' என்றால் 'மேலே இருப்பது' என்று பொருள்.தமிழில் 'பரம்பரை 'என்ற ஒரு சொல் உண்டு .இது 'பரன் +பரை 'என்று பிரியும் .'பரன் 'என்றால் அப்பா வழியில் 7 வது முன் பாட்டன் ;'பரை என்றால் அம்மா வழியில் ஏழாவது முன் பாட்டி .ஆக ,7 தலைமுறை ,ஒரு பரம்பரையாகும் .இதில் உள்ள 'பர 'என்ற சொல்லும் 'பரை 'என்ற சொல்லும் சேர்ந்து 'பரை ஐயர் 'என்ற சொல்லுக்கு மூலமாகும் .'ஐயர்' என்பது 'பர 'என்ற சொல்லுக்கு சமமாகும் ..ஆக ,'பரையர்'என்ற சொல்' பார்வதியிலிருந்து தோன்றிய உயர்ந்தவர் ' என்று பொருள் படும் என்பது மொழியாளர்கள் கருத்து .
சிவன் தான் 'ஆதி பரையர்.பார்வதி ஆதி பரைச்சி '.
ஆதாரம் கீழே :
'பரை யோகம் 'என்றால் 'சிவனை எதிர்நோக்கும் ஒரு நிலை 'என்றும் பொருள் படும் .
                                    ஆக ,'சிவன் ,பார்வதியின் வழி வந்த மக்கள் ' பரையர்'ஆகும் .'ர 'என்ற எழுத்து 'ற 'என்று மாறியதால் ஒரு பெருங் குழப்பம் ஏற்பட்ட்ருக்கலாம் என்பது மொழி ஆராய்ச்சியாளர்கள் கருத்து ..
                                                சிவன் தமிழ் இனத்தின் கடவுள் .அவர் வழி வந்த மக்கள் ,பெரும் ஞானிகளாகவும் ,பர ஞானம் கொண்டவர்களாகவும் ,அருட் சார்ந்த பணிகள் செய்பவர்களாவும் இருந்தார்கள் .சிவனிலிருந்து தான் 'சீவன் அதாவது உயிர் தோன்றியது .சீவனை பற்றி அறிந்த சித்தர்களாகவும் ,வைத்தியம் அறிந்தவர்களாவும் 'பரையர்' இருந்தனர் .மந்திரம் ,ஆவி ஊடகம்,ஜாதகம் அறிந்தவர்களாவும் 'பரையர்' இருந்தனர்.அதில் ஒரு பிரிவினர் 'சாம்பவர்த்தி 'எனப்படுவர் .இவர்கள் சிவனின் பூசாரியாக இருந்தவர்கள் .சிவனே ஒரு சாம்பவர் என்று விக்கிபீடியா சொல்லுகிறது .
                                    சிவனுக்கோ 'சாம்ப சிவன் 'என்று ஒரு பெயர் உண்டு .சாம்பலோடு சம்பந்தப்பட்ட பெயர் இது .' பரையரில் இன்னொரு பிரிவினர் 'வள்ளுவர் 'எனப்படுவர் .இவர்களும் ஜோதிடம் கணித்தல் ,கோயில் பூசாரி வேலைகளில் ஈடுபட்டவர்கள் ஆகும் .உலகின் சிறந்த பொது மறையாகிய திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் இந்த பிரிவை சார்ந்தவராகும் .
ஆத்திச்சூடி ஒளவையாரும் ' பரையரே '.

ஆக ,மொத்தத்தில்,' பரையர்' அப்போதைய அந்தணர்களாக இருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை .'பாப்பானுக்கு மூத்தோன் பரையன் 'என்ற வழக்கு இன்றும் நடைமுறையில் உள்ளது .
அப்படியானால் .அந்தணரின் முக்கிய அணியான' பூணூல் ' பரையர்' அணிந்திருந்தனரா என்ற கேள்வி எழுகிறது இல்லையா ?அதற்கும் விடை கிடைத்தது !
பரையர்கள் சில சடங்குகளில்  பூணூல் அணி வதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதை நேரில் உறுதி செய்ய ஒரு பரையர் வீட்டு சாவிற்கு சென்றிருந்தேன் .நெல்லை மாவட்டத்தில் ஒரு ஊர் அது .இறந்த தாயின் மூத்த மகனை ஓரிடத்தில் சம்மணம் போட்டு உட்கார வைத்து ,முன்னால் ஒரு சிறிய 'ஓம குண்டம் 'அமைத்தனர் .மகனை அதற்குள் ஓமத்தை போட சொல்லி ,நெய் ஊற்றினார் இன்னொரு பரையர்.சில தமிழ் மந்திரங்கள் புரியாத தமிழில் பெரியவர் ஒருவர் சொல்ல,இந்த சடங்கு சிறிது நேரம் நடந்தது .
பின்னர் அவரை மொட்டையடித்து ,ஆற்றில் ஒரு துண்டுடன் இறங்க வைத்தனர் .அப்போது தான் நான் எதிர்பார்த்தது நடந்தது .ஆம் ,அந்த பரை மகனுக்கு பூணூல் அணிவித்தனர் !
பரையர் மேல் பூணூலா ?ஒரு கணம் திகைத்துப் போனேன் !பரையர் மேல் சாதி தெருக்கள் வழியாக செருப்பு அணிந்து செல்வதையே எதிர்க்கும் மேல் ஜாதியினர் ,அவர்கள் பூணூல் அணிவதை எப்படி விட்டுவைப்பார்கள் ? அங்கிருக்கும் பெரியவர்களிடம் இதைப்பற்றி அந்த நேரத்தில் கேட்க முடியவில்லை .
பின்னர் நீரில் 7 தடவை மூழ்கி எழுந்தவுடன் ,அந்த பர மகனை, அந்தப் பூணூலை தன் கையினாலே கழற்றி, ஓடும் நீரில் விடச்சொன்னார்கள் .அவனும் அவ்வாறே விட்டான் . பின்னர் தாயின் பிணத்தை புதைக்கும் முன் ,ஒரு பானையில் நீர் நிறைத்து ,மகன் தலையில் வைத்து ,பிணத்தை 7 முறை சுற்றி வரச்செய்தனர் .ஒவ்வொரு சுற்றுக்கும் ,அரிவாள் வைத்து ஒரு ஓட்டை போட்டனர்.நீர் முடிந்ததும், அந்த பானையை அங்கேயே போட்டு உடைத்தனர் .இந்த முறைகள் எல்லாம் ,பல தமிழ் உயர் ஜாதி மக்கள் செய்யும் முறையாக தெரிந்தது .
பின்னர் இதைப் பற்றி தெரிந்து கொள்ள ஊர் பெரியவர்களை சந்தித்தேன் .அவர்களிடம் பெற்ற தகவல்களை கொண்டு ,இன்னும் ஆழமாக ஆராய்ந்தேன்.ஆராய்ச்சியின் முடிவில் பல விதமான சுவையான முடிவுகள் கிடைத்தன .அவைகள் இதோ :.
  • 'பூணூல் 'என்றாலே தூய தமிழ் சொல் .பிராமணர்கள் விரும்பும் வடமொழியில் 'பூணூலுக்கு சரியான சொல் இல்லை .yajnopavita 'யஜனோ பவித்த'என்று ஒரு சொல் கஷ்டப்பட்டு பின்னால் உருவாக்கப்பட்டது .பிராமணர்கள் முதலில் வெளிநாட்டிலிருந்து கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்ததாக சொல்லப்படுகிறது . பூணூல் பிராமணர்களின்  சொந்த உருப்படி  என்றால் அவர்கள் எந்த நாட்டிலிருந்து  வந்திருக்கிறார்களோ  அந்த நாட்டில் பூணூல் அணிந்த மக்கள் இன்னும் இருக்க வேண்டும். அவ்வாறாக,உலகில் எந்த நாட்டிலும் பூணூல் அணிந்த மக்கள் இருப்பதாக தெரியவில்லை.
  • 'நூல் 'என்றால் ஆடை நெய்யும் நூல் அல்ல .'நூல் 'என்றால் 'அறிவு புத்தகம் '.'நூல்தல் 'என்றால் 'சைவ சித்தாந்தங்களை படித்த பின் கொடுக்கப்படும் ஒரு  'பூணூல் 'ஆகும் .இது இப்போது நாம் கல்லூரிகளில் பெறும் சான்றிதழுக்கு சமமாகும் .
  • ஆக ,சைவர்களாகிய பரையர் ,சைவ நூல்களை கற்று பெற்ற தகுதிதான் 'பூணூல் '
  • ஆக .பூணூலின் முதல் சொந்தக்காரர்கள் 'பரையர்'தான் என்பது உறுதியாகிறது .
  • பரையர்களின்  உயர்ந்த சமூக நிலை குறித்து ,'கஸடீர் ஆப் திருச்சினோபோலி' என்ற   ஆங்கில  அரசிதழில் ,கீழ்க் கண்ட பதிவு உள்ளது .
In a note on the Paraiyans in the Gazetteer of Trichinoply District, it written as follows.
"They have a very exalted account of their lineage, saying that they are descended from the priest SalaSambavan, who was employed in a Siva temple to worship the god with offerings of beef, but who incurred the anger of the god by one day concealing a portion of the meat, to give it to his pregnant wife, and was therefore turned into a Paraiyan. The god appointed his brother to do duty instead of him, and the Paraiyans say that Brahman priests are their cousins. For this reason they wear a sacred thread at their marriages and funerals. .... It is a curious fact that, at the feast of the village goddess, a Paraiyan is honoured by being invested with a sacred thread for the occasion by the pujari (priest) of the temple, by having a turmeric thread tied to his wrists, and being allowed to head the procession. This, the Paraiyans say, is owing to their exalted origin."                                                                              
தமிழாக்கம் :                                                                                           
  'பரையர்' மிக உயர்ந்த இனமாகும் .அவர்கள் சால சாம்பவன் என்ற சிவன் கோயில் பூசாரி வழி தோன்றல்கள் ஆவர் .அவர் சிவனுக்கு படைத்த மாட்டுக் கறியை, ஒரு துண்டு எடுத்து தன் கர்ப்பிணி மனைவிக்கு கொடுத்ததால், பறையனாக்கப்பட்டார் என்று ஐதீகம்.அதன் பின்னர் ,கடவுள், அவருடைய சகோதரனை பூசாரியாக நியமித்தார் .இதனால் பரையர்கள் ,.பிராமணர்கள் எங்கள் உறவு என்கிறார்கள் .இந்த காரணத்திற்காக ,அவர்கள் திருமணத்திலும் ,சாவு சடங்குகளிலும் பூணூல் அணிகிறார்கள் .ஒரு வியப்புக்குரிய செய்தி என்னவென்றால் ,கிராம தேவதை விருந்துகளில் ,ஒரு பரையருக்கு,பூசாரியை வைத்து பூணூல் அணிவித்து ,மஞ்சள் துண்டு ஒன்றை கை மணிக்கட்டில் கட்டிவிடுவர் .அந்த பரையரே அந்த ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்துவார் .இது ,பரையரின் உயர்ந்த சமூக நிலையை காட்டுகிறது .
  •  1891 மக்கள் தொகை கணக்கு அறிக்கையில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது :                                                                                                           In the Census report of 1891, it is mentioned that
  • The Valluvans(Paraiya priests) were priests to the Pallava kings before the introduction of the Brahmins, and even for some time after it.                                                                                     தமிழாக்கம் :                                                                                                           வள்ளுவர் என்ற பரையர் பூ சாரிகள்  பிராமணர்களுக்கு முன்னரும்,சிறிது காலம் பின்னரும்,  பல்லவ மன்னர்களுக்கு பூசாரியாக இருந்தார்கள் . 
  • ஆங்கிலேயர்  ஏ .சி .கிளேட்டன் ,இவ்வாறாக கூறுகிறார் :                                   "he saw a Brahman women worshipping at Paraiyan shrines in order to procure children, and then a Paraiyan exorciser treating a Brahman by uttering mantrams (consecrated formulae), and waving a sickle up and down the sufferer's back, as he stood in a threshing floor."               
  • தமிழாக்கம் :                                                                                                                   'நான்,  பிள்ளையில்லாத ஒரு பிராமணப் பெண், பரையர் கோயிலில் வழிபடுவதை பார்த்தேன் .பின்னர் போரடிக்கும் களத்தில் நின்று கொண்டிருந்த ஒரு  பரையர் ,ஒரு ,பிராமணனுக்கு பேயோட்டுவதை பார்த்தேன் .அவர் ஒரு அரிவாளை முதுகுக்கு பின்னால் மேலும் கீழும் ஆட்டினார் .
  • தமிழ் பிராமணர்களில் ஒரு பிரிவினர் 'பகுதி நேர பரையர்'என்று இருக்கிறார்கள் ! உண்மையாகவா என்று கேட்பவர்களுக்கு இதோ ஆதாரம் !இவர்கள்   'மத்தியான பரையர் 'என்று அழைக்கப்படுகிறார்கள் . அது  என்ன  'மத்தியான பரையர்? மத்தியானம் மட்டும் பரையர்களா ?அதை குறித்து ஒரு சுவையான ஐதீகம்  உள்ளது .இதோ  கீழே:                        A subdivision of Tamil Brahmans as Madyana Paraiyans.
    Prathamasaki:These Brahmans were sometimes called Prathamasaka, In the Tanjore district, the Prathamasakis are said to be known as Madyana Paraiyans. The following quaint legend is recorded in the Gazetteer of that district: " The god of the Tiruvalur temple was entreated by a pujari of this place (Koiltirumulam) to be present in the village at a sacrifice in his (the god's) honour. The deity consented at length, but gave warning that he would come in a very unwelcome shape.He appeared as a Paraiyan (Pariah) with beef on his back, and followed by the four Vedas in the form of dogs, and took his part in the sacrifice thus accoutred and attended. All the Brahmans who were present ran away, and the god was so incensed that he condemned them to be Paraiyans for one hour in the day, from noon till 1 P.M., ever afterwards. There is a class of Brahmans called midday Paraiyans, who are found in several districts, and a colony of whom reside at Sedanipuram five miles from Nannilam. It is believed throughout the Tanjore district that the midday Paraiyans are the descendants of the Brahmans thus cursed by the god. They are supposed to expiate their defilement by staying outside their houses for an hour and a half every day at midday, and to bathe afterwards; and, if they do this, they are much respected.                     
    தமிழாக்கம் :                                                                                                         பிராமணர்களில்  ஒரு பிரிவினர் 'ப்ரதம சகி 'பிராமணர்கள் எனப்படுவார்கள் .தஞ்சாவூர் மாவட்டத்தில் இவர்களை  'மத்தியான பரையர் 'என்று அழைப்பார்கள் .இதற்கான வினோதமான கதை மாவட்ட அரசு இதழில் இருக்கிறது.                                                                                                                       "கோயில் முற்றம் சேர்ந்த ஒரு பூசாரி, திருவள்ளுவர் கோயில் கடவுளை ,தன்னுடைய ஊரில் நடக்கும் பலி திருவிழாவில் பங்கெடுக்க வேண்டினார் .அந்த கடவுள் 'நான் வருவேன் ஆனால் நீ விரும்பாத ஒரு வடிவில் வருவேன் .'என்றார் .அவர் முதுகில் மாட்டுக்கறி சுமந்த ஒரு பரையனாக வந்தார் .அவர் பின்னால் 4 வேதங்களும் 4 நாய்களாக வந்தது .அதைப்பார்த்து அங்கிருந்த பிராமணர்கள் அலறி அடித்து ஓடி விட்டனர் .இதை பார்த்த கடவுளுக்கு பயங்கர கோபம் வந்தது .அதனால் அவர் அந்த  பிராமணர்கள் எல்லோரும்  தினமும் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை பரையராக இருக்கும்படியாக சாபமிட்டார் .இந்த பிராமணர்கள்  'மத்தியான பரையர்' எனப்படுவார்கள் .இவர்கள் எல்லா மாவட்டங்களிலும் இருந்தாலும் ,நன்னிலத்திலிருந்து 5 மைல் தொலைவிலிருக்கும் சேதனிபுரம் ஊரில் ஒரு அக்ராஹாரமாக  அதிகமாக உள்ளனர் .தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இந்த  'மத்தியான பரையர்' பிராமணர்கள் வழி வந்த சபிக்கப்பட்ட வர்கள் என்று நம்புகிறார்கள் .இவர்கள் சாபம் தீர தினமும் ஒன்றரை மணி நேரம் வீட்டிற்கு வெளியே இருந்து விட்டு ,பின்னர் குளித்த பின் உள்ளே செல்வர் .அப்படி செய்தால் அவர்கள் மதிக்கப்படுவர் ."
      • திருவிதாங்கூர் பரையர்கள் பற்றிய ஒரு பதிவு இவ்வாறாக கூறுகிறது :                                                                                                                             The following extract is taken from a note on the Paraiyans of Travancore.
        In the Keralolpathi, they are classed as one of the sixteen hill tribes. Concerning their origin the following tradition is current. They were originally Brahmans, but, on certain coparceners partitioning the common inheritance, the carcase of a cow, which was one of the articles to be partitioned, was burnt as being useless. A drop of oil fell from the burning animal on to one of the parties, and he licked it up with his tongue. For this act he was cast out of society, and his descendants, under the name of Paraiyas, became cow-eaters.
        The Paraiyars of Northern Travancore held a traditional belief "that they were a division of the Brahmans, who were entrapped into a breach of caste by their enemies, through making them eat beef."                                                                                                     தமிழாக்கம் :                                                                                                      "பரையர்கள் முதலில் பிராமணர்களாகத்தான் இருந்தார்கள்.ஒரு முறை சொத்து பிரிக்கும் போது ,ஒரு இறந்த பசுவை ,பயனில்லாததால் எரித்தனர் .அதிலிருந்து ஒரு சொட்டு நெய் விழுந்ததும் ,ஒரு பங்காளி அதை   நாக்கினால்  நக்கினான் .அந்த செயலுக்காக அவனுடைய கூட்டத்தை ஒதுக்கி வைத்தனர் .அவர்கள் வழி வந்த மாடு சாப்பிடும் இனம் தான் பரையராகிற்று .ஆக மாட்டிறைச்சி சாப்பிட்ட   பிராமணர்களின் ஒரு பிரிவு பரையராகிற்று .இது ஒரு சதியால் நடந்தது . "                                                        
      • பரையர்கள்  பற்றி  கேரளாவில் உலவும் ஒரு ஐதீகம் :                                            In Kerala the most important Legend of Parayi petta panthirukulam, Pakkanar (Paraiyar) was one of the twelve children of a great Brahmin Vararuchi and his low caste wife. The story or myth states that During Vararuchi's travels along the Nila river, his wife had given birth to twelve children. The children left out in the forest were subsequently found, adopted and raised by families belonging to different communities, recognised one another as they grew up. Those twelve sons were: Mezhathol Agnihothri (Brahman), Pakkanar (Parayan), Rajakan (Washerman), Naranath Bhranthan (Elayathu, a lower class Brahman), Kaarakkal Maatha (high caste Nair), Akavoor Chaathan (Vysyan), Vaduthala Nair (Nair Soldier), Vallon (Thiruvalluvar of Tamil Nadu), Uppukottan (Muslim), Paananaar (Paanan, a low caste of country musicians), Perumthachan (carpenter), Vaayillaakkunnilappan (deity).                   
      1. தமிழாக்கம் :                                                                                                       "பறையி பேட்டை பந்திரகுலம் பாக்கனார் (பரையர்) பற்றி கேரளாவில் உலவும் ஒரு ஐதீகம்.அவர் வரருஷி என்ற மகா பிராமணருக்கும் அவருடைய கீழ் ஜாதி மனைவிக்கும் பிறந்தவராகும் .நிலா ஆற்றின் கரையில் பயணித்தபோது அவர் மனைவிக்கு 12 பிள்ளைகள் பிறந்தன.அந்த பிள்ளைகளை அவர்கள் காட்டில் விட்டு விட்டு சென்று விட்டனர் .அந்த 12 பிள்ளைகளையும்  12 வெவ்வேறு ஜாதியினர் தத்து எடுத்து வளர்த்தனர் .அவர்கள் வளர்ந்ததும் ,ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டனர் .                                                                           அந்த 12 பேரும் முறையே :                                                      1.மேளத்தோல் அக்னி ஹோத்ரி (பிராமணர் )
      2. பாக்கனார் (பரையர்)
      3. ராஜக்கன் (வண்ணார் 
      4. நரந்த பிரான்தன் ( தாழ் பிராமணர்)
      5. காராக்கல் மாதா (நாயர் )
      6. அகவூர் சாத்தன் (வைஷ்யன் )
      7. வடுதலா நாயர் (நாயர் வீரர் )
      8. வல்லோன் (தமிழ் நாட்டு திருவள்ளுவர் )
      9. உப்புகோட்டன் (முஸ்லீம் )
      10. பாணன் (கீழ் ஜாதி இசை கலைஞன் )
      11. பெரும்தச்சன் (தச்சன் )
      12. வாயில்லக்குந்நிலப்பன் (தெய்வம் )
ஆக ,எல்லா ஜாதியினரும் பிராமணருக்கும் ,பரையருக்கும்  ஏதோ  ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருப்பது  போல் ஒரு ஐதீகத்தை உலவ விட்டிருக்கிறார்கள் . இதன் நோக்கம் , மொத்தத்தில் எல்லா ஜாதியும் ஒன்று தான் என்பதை குறிக்கவும் இருக்கலாம் . இதில் , பிராமணர்களுக்கு அடுத்தாற்போல் , பரையர்களுக்கு  2 வது இடம் இருப்பதை கவனிக்கவும் .
  •  .எம்மா ஹரித் என்ற வலைப்பதிவர் இவ்வாறாக கூறுகிறார் :http://parlimenfb.blogspot.in/2011/10/paraiyar-and-brahmin-connection.html

    Paraiyar and Brahmin connection

    All the Paraiyars have Y-chromosome haplogroup, Haplogroup G, specifically Haplogroup G2a3b1 (Y-DNA). This shows the Paraiyar males are Caucasians. This Haplogroup G2a3b1 is also found in 10% of Iyer and 13% o...f Iyengar Brahmins.[13][14] The Aryan Brahmins have Haplogroup R1a & Haplogroup R2.[13][14]

    All the Paraiyars have Y-chromosome haplogroup, Haplogroup G, specifically Haplogroup G2a3b1 (Y-DNA). This shows the Paraiyar males are Caucasians.                            " பரையர்கள் எல்லோருக்கும் 'ஒய் ' மரபணு 'ஹப்லாகுரூப்  ஜி 'உள்ளது .இது பரையர் ஆண்கள் 'காக்கசியன் 'என்று காட்டுகிறது .இதே மரபணு 10% ஐயர்களுக்கும் ,13%ஐயங்கார்களுக்கும் உள்ளது .ஆக ,மரபணு ஆராய்ச்சியும் பிராமணர்களுக்கும் பரையர்களுக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்கிறது .                                                                                                    இதைக்குறித்து இன்னும் பல பதிவுகள் /சான்றுகள் உள்ளன .இடமின்மையால் இத்துடன் முடிக்கிறேன் .
ஆக ,பரையர்கள் தான் பூணூலுக்கு சொந்தக்காரர்களா , இந்த நாட்டின் ஆதி ஐயர்களா என்ற கேள்விகளுக்கு  பதிலை உங்களிடம் விட்டு விடுகிறேன் .இந்த   ஆராய்ச்சியின் முடிவு  பரையர் தான் முதல் (original) ஐயர் ,ஆகவே அவர்கள் உயர் சாதி என்பதல்ல .மாறாக ,பரையர் நாம் நினைப்பது போல் தாழ்ந்த சாதி அல்ல என்பது தான் .எல்லா தமிழர்களும் உயர்ந்தவர்களே !கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடியில் யார் தாழ்ந்தவர் இருக்கமுடியும் ?அதுவும் பரையர் முதல் தமிழர் என்று சொல்லப்படும் நிலையில் உள்ள தமிழர் எப்படி தாழ்ந்தவராய் இருக்க முடியும் ?
                   சாதி பாகுபாடு தமிழர்களிடம் இருந்ததில்லை.தொழில் சார்ந்த  பல பிரிவுகள் இருந்தன என்பது உண்மை . கொல்லர் ,வண்ணார் ,பாணர் ,போன்றவை இருந்தாலும் ,அவைகள் சமுதாயத்தில் சமமாகவே இருந்தன .ஒன்றன் கீழ் ஒன்று என்ற கட்டமைப்பு இல்லை .உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் இல்லை .திருமணங்கள்  காதல் முறையில் ,களவு வழியில் எளிதாய் நடந்தன .ஆணவக்கொலைகள் நடக்கவில்லை .சாதிய அமைப்பு, பின்னர் வந்தேறிய  அந்நியர்கள் ,தமிழர்களை எளிதாய் ஆள  வகுக்கப்பட்ட சதியமைப்பே என்பதை புரிந்து கொள்வோம் .  நன்றி .
--------------------------------------------------------------------------------------------------------------------------
பொறுப்பு துறப்பு : ஆதாரங்கள் ,மேற்கோள்கள் காப்புரிமை மீறல்கள் இல்லாமல் பொது தகவல் தளங்கள் மூலமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.இது ஒரு ஆராய்ச்சி கட்டுரை. இதில் வரும் கருத்துக்கள், தகவல்கள் எந்த தனி மனிதனையே அல்லது சமூகத்தையோ  புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல.

Friday, 30 October 2020

மனுநீதி எங்கே இருக்கிறது ?காட்டுங்கள் ,பார்ப்போம் !

சமீபத்தில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வு,மனு  நீதிக்கு எதிராக திருமாவளவன் அவர்கள் பேசிய பேச்சும் அதன் தொடர்ச்சியாக ஊடகங்களில் அதை குறித்த விவாதங்களும் ஆகும். ஊடக விவாதங்களில் பல பிராமணர்கள்' மனுநீதி எங்கே இருக்கிறது காட்டுங்கள்! பார்ப்போம்!'என்று வெளிப்படையாகவே  சவால் விடுகிறார்கள். அதில் ஒருவர் 'மக்கள் குரானை வாசிப்பதை பார்த்திருக்கிறேன்; வேதாகமத்தை வாசிப்பதை பார்த்திருக்கிறேன் .ஆனால் மனுநீதி யாரும் வாசிப்பதை ல் இதுவரை பார்த்ததே இல்லை' என்று  ட்விட்டரில் கீச்சி இருக்கிறார் .

                                 அவர்கள் பேசுவதை பார்த்தால் பல நேரம் நமக்கே ஒரு குழப்பம் வந்துவிடும். ஆமாம், இந்திய அரசியலமைப்பு சட்டம் இருக்கிறது ;குரான் இருக்கிறது; வேதாகமம் இருக்கிறது.ஆனால் ,இந்த மனு தர்மம்  எங்கிருக்கிறது ?யார் அதை அறிவார்? யார் அதை சொல்லிக் கொடுக்கிறார்? எந்த புத்தகக் கடைகளிலும் அது எளிதாக கிடைப்பதில்லையே ! அவ்வாறு இருக்கும்போது எப்படி அது வேலை செய்கிறது ?அது எப்படி நம்மை பாதிக்கிறது ? திருமா தான் ஏதோ குழப்புகிறாரோ ?என்றெல்லாம் நினைப்போம் . வாருங்கள் ,சிறிது ஆராயலாம். 

                                            எல்லா நாடுகளிலும் சட்டம் என்பது ஒரே ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகிறது .ஆனால் இந்தியாவில் மட்டும் சட்டம் செயல்படும் விதம் முற்றிலும் மாறாக ,ஒரு தனி விதமாக உள்ளது. எப்படி? 

 இந்தியாவில்  மட்டும் சட்டங்கள்  மூன்று வகைப்படும் . 

1) எழுதப்பட்ட,   செயல்படும் சட்டம். 

2) பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தாலும், எப்படித்தான் முயன்றாலும், செயல்படாத சட்டம். 3)மூன்றாவதாக,  எங்கும் எழுதப்படாமல்,   ஆனால் தன்னாலே நிச்சயமாக செயல்படும் சட்டம்

 என்று மூன்று விதமான சட்டங்கள் இந்தியாவில் உள்ளன .இது உங்களில் பலருக்கு மிகுந்த வியப்பை தரலாம் .பலர் இதை நம்ப கூட மறுக்கலாம்.மேலும் தொடர்ந்து படியுங்கள். எல்லாம்  உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும் .

                                         இப்போது முதலாவது வகையான சட்டத்தை பார்ப்போம். இந்த வகை சட்டம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் எல்லோருக்கும் நிறைவேறும் ஒரு சட்டமாகும். இதில் நபருக்கு நபர் வேறுபாடு காட்டவேண்டிய தேவை அதிகம் இருக்காது .எடுத்துக்காட்டாக, போக்குவரத்து சட்டங்களை சொல்லலாம் .இரண்டாவது வகையான சட்டங்கள் சற்று வித்தியாசமானவை .அவைகள் ஒவ்வொரு  சமூகத்தையும் ,சாதியையும் , மதரீதியான பழக்கங்களையும் பாதிக்கக்கூடிய  சட்டங்களாகும் . அதாவது மனு நீதிக்கு எதிரான சட்டங்கள் இவைகள்.அப்படிப்பட்ட சட்டங்கள் ,என்னதான் நாம் முயன்றாலும் செயல்படுத்த முடியாத சட்டங்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கொண்டுவரப்பட்ட வன்கொடுமை சட்டத்தை சொல்லலாம். இதில் பாதிக்கப்பட்டவர் என்னதான் முயன்றாலும், அவர் உயர் நீதி மன்ற நீதிபதியாகவே இருந்தாலும்,  அந்த சட்டத்தை செயல்படுத்தவே முடியாது.காரணம்,அந்த  சட்டத்தை செயல்படுத்தும் உயர் சாதி அதிகாரிகள் எல்லோரும் மனுநீதிக்கு  கட்டுப்பட்டவர்கள். அதை நிச்சயம் செயல்படுத்த விடமாட்டார்கள்.அதற்கான மறைந்திருக்கும் உள்நோக்கம்  என்ன என்பதை பின்னர் விளக்குகிறேன்.

                                                    இந்த இரண்டாவது வகையான சட்ட த்தைப்பற்றி விளக்க நீதிபதி கர்ணன் வழக்கை  எடுத்துக்கொள்ளலாம் .இந்த நீதிபதி கர்ணன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த உயர் நீதிமன்ற நீதிபதியாகும் . அவரை அவர் சாதியின் அடிப்படையில், சக நீதிபதிகளால்   புறக்கணிக்கப்பட்டு ,அவமானப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டார் .அந்த சம்பவத்தின் முழு விபரங்களும் கீழ்க்கண்ட இணைப்பில் ஆங்கிலத்தில் காணலாம் .

நீதிபதி கர்ணனின் அவமானக் கதை

 அதை எதிர்த்து அவர் எல்லாவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து பார்த்தார். அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. இறுதியாக தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு கொடுக்கும் வன்கொடுமை சட்டத்தின் சரத்துக்களை உபயோகித்து,  அவரை துன்புறுத்திய  நீதிபதிகள்  மேல் தகுந்த ஆணை,உயர்நீதிமன்ற நீதிபதி என்ற முறையில் அவரே பிறப்பித்தார். ஆனால் கர்ணன் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதிலும், அவருக்கு அரசியலமைப்பு சட்டப்படி அதிகாரம் இருந்தும், அவரது ஆணைகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டன. பின்னர் எந்த நீதிபதிகளை அவர் குற்றம் சாட்டினாரோ,  அவர்களே அவர்கள் வழக்கை விசாரித்து, கர்ணனுக்கு,நீதிமன்ற அவமதிப்பு என்று   ஆறு மாதம் சிறைத் தண்டணை வழங்கினார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களே  அவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியாது என்பது சட்டம் .ஆனால் அதை யெல்லாம் மீறி,அவர்கள் விசாரித்தார்கள் .அவர்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என்றாலும் ஊடகங்களோ, ஜனாதிபதியோ இந்த அநியாயத்தை தட்டிக் கேட்கவில்லை. இதைக் குறித்து  ஜனாதிபதிக்கு கர்ணன் மனு  கொடுத்தும்,  ஜனாதிபதியே இதில் தலையிட வில்லை. ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியை இன்னொரு நீதிபதி தண்டிக்க முடியாது.  அரசியலமைப்பு சட்டப்படி பாராளுமன்றம் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதை 'IMPEACHMENT ' என்று சொல்வார்கள். ஆனால் அது எல்லாம் செய்யாமல்  நீதிபதி கர்ணன் மீது ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து நிறைவேற்றி விட்டார்கள். வேறு எந்த நாட்டிலும் இப்படி நடக்க சாத்தியமே  இல்லை. மொத்தத்தில்  இது முழு  அராஜகம் தான்.மனுநீதி எங்கே இருக்கிறது ?காட்டுங்கள் ,பார்ப்போம் !என்போருக்கு இந்த சம்பவம் ஒரு சரியான பதிலாக அமைந்துள்ளது .

                                                     சமீபத்தில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் ஒரு நீதிபதியை அவமதித்ததாக அவர்மேல் நீதிமன்ற   அவமதிப்பு வழக்கு போடப்பட்டு, அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டார் . அவர் உயர் ஜாதி சேர்ந்தவராதலால்  அவருக்கு இறுதியில் ரூ 1 மட்டும்  தண்டத் தொகையாக கட்டி விட்டு விடுதலை செய்து விட்டார்கள் ! இதுதான் அரசியலமைப்பு சட்டத்திற்கும் மேலான மனு தர்மம் !மனுநீதி எங்கே இருக்கிறது ?காட்டுங்கள் ,பார்ப்போம் ! என்பவருக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு .அந்த கதை இதோ !

உயர்சாதி பிரசாந்த் பூஷன் கதை

இதோ மனுநீதி செயலில் இருக்கும் அன்றாட காட்சிகள் !

1.சாதி மறுப்பு திருமணம் செய்தால் கொலை செய்வார்கள் !

                   எல்லா நாடுகளிலும் ஒரு ஆணும் பெண்ணும் விரும்பினால் அது சட்டப்படியான திருமணம் ஆக அமைந்தால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.ஆனால் , இந்தியாவில் மட்டும் அவர்கள் ஒரே சாதியாக இருந்தால் தான் மணம் செய்து  கொள்ள முடியும். இல்லை என்றால் பெற்றோரே பிள்ளைகளை  கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுகிறார்கள்.இது மனுநீதியின் தாக்கம் .

2.தீண்டாமை கடைபிடிப்பு  

 மதுரை அருகே ஒரு ஊரில் ,இன்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் செருப்பு அணியாமல் உயர்சாதி தெருக்களில் நடந்து செல்ல வேண்டும். மேலும் இருசக்கர வாகனத்தில் சென்றால் அவர்கள் இறங்கி அதை தள்ளிக் கொண்டு செல்ல வேண்டும்.

மதுரையில் தீண்டாமை

3.இன்னும் பல !(அருணன் கீச்சுகள் )

  • எங்கே இருக்கிறார் மநு? சாெந்த சாதி திருமணத்தில் இருக்கிறார்!
  • எங்கே இருக்கிறார் மநு?அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதைத் தடுப்பதில் இருக்கிறார்!
  • எங்கே இருக்கிறார் மநு? பாெதுத்துறை ஒழிப்பில் இருக்கிறார்! அங்குள்ள இடஒதுக்கீடு ஒழிப்பில் இருக்கிறார்!
  • ங்கே இருக்கிறார் மநு? நாடாளுமன்றம்-சட்டமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மறுப்பில் இருக்கிறார்!
  • எங்கே இருக்கிறார் மநு? 50% இடஒதுக்கீடு மறுப்பில் இருக்கிறார்!
  • தொடரும் இந்த பட்டியல் .....
  • --------------------------------------------------------------------------------------------------------
மேலும் இதைப்பற்றி அறிய ,கீழ்க்கண்ட இலவச புத்தகத்தை வாசிக்கவும் :