Wednesday, 21 January 2026

பொது வெளியில், பெண்கள் ஆண்களை எப்படி நடத்த வேண்டும்?

                                         கடந்த வாரத்தில், கேரளாவில் நெஞ்சம் பதபதைக்க வைக்கும் ஒரு சம்பவம் நடந்தது .பேருந்து பயணத்தில்,ஒரு பெண் முன்னால்  நின்று கொண்டிருந்த ஒரு ஆணின் முழங்கை, தன்னுடைய மார்பில் படும்போது படும்படியாக வைத்து விட்டு, பின்னர் அவர் வேண்டுமென்று இடித்து விட்டார் என்று பொய் குற்றச்சாட்டு கூறி, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையை பெற்று விட்டார்! மறுநாள்,பட்ட அவமானம், மன உளைச்சல் தாங்காமல், அந்த 41 வயது உடைய ஆண் தற்கொலை செய்து கொண்டார் !இதை பல ஆண்கள் கண்டித்து, ஆண்களுக்கு எதிரான வன்கொடுமை இது என்று பதிவிட்டு இருக்கிறார்கள் .இந்த மாதிரி சூழ்நிலையில், பொதுவெளியில் பெண்கள் ஆண்களை எப்படி நட த்த வேண்டும் என்பதை குறித்து ஒரு பெரிய விவாதம் ,சமூக ஊடகங்களில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது .அதை குறித்து இங்கே நாமும் ஆராயலாம் .                     

                                                                                                 (படம் :நன்றி கூகுள் )
                                   பொதுவாக ,  ஆண் பெண் உறவுகளில்,பொதுவெளியில் ஆண்கள் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை குறித்த சமூக நெறிகள் நன்றாக வகுக்கப்பட்டு, பல நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது நமக்கு தெரிந்ததே .ஆனால், பொதுவெளியில், பெண்கள் ,ஆண்களை எப்படி நடத்துவது என்பதைக் குறித்து, அப்படியான விரிவான நெறிமுறைகள் எதுவுமே இதுவரை வகுக்கப்படவில்லை என்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இதுவரை அதற்கு ஒரு தேவை இல்லை என்றே  தோன்றுகிறது.ஆனால்,இப்போது, சில சமூக முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டதால்,பெண்கள் பொது வெளியில் அதிகமாக உலாவுகிறார்கள் .ஆண்களுடன் அதிகமாக சமூக வெளிகளில்,அலுவலகங்களில், கடைகளில், வியாபாரங்களில் பேச வேண்டி இருக்கிறது .உடன் நடக்க வேண்டி இருக்கிறது.அதனால்,அந்த தேவையை குறித்து நாம் ஆராய வேண்டிய ஒரு அவசிய சூழ்நிலை இப்போது எழுந்துள்ளது.

                                                   ஒரு காலத்தில் இந்த சமூகம் முற்றிலும் ஒரு ஆணாதிக்க சமூகமாக இருந்தது.சமீப காலமாக ,ஆண்-பெண் சமத்துவம் என்ற கோட்பாட்டின் தாக்கம் அதிகமாகி கொண்டே வந்து, இப்போது ஒரு உச்சத்தை தொட்டிருக்கிறது. அதாவது, எல்லா வகையிலும் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்று ஒரு தவறான நம்பிக்கையை ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து சமூகத்தில் திணித்து, பெண்களை தவறாக வழி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.ஆண்- பெண் என்பவர்கள்,இயற்கையில்,ஒரு ஜோடியாக , ஈருடல் ஓர்  மனமாய், இசைந்து வாழும்,ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும்,இரு பாலியல் பிரிவினர் என்பதை முக்கியப்படுத்தாமல், ஆணுக்கு எதிர் பெண் என்று நிலை நிறுத்தி , ஒரு தவறான முழக்கத்தை கொண்டு வந்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஒரு ஞானமில்லா கூட்டத்தினர். அதன் ஒரு விளைவாக,பெண்கள் பொது வெளியில் ஆண்களை எப்படி என்றாலும் நடத்தலாம், அதற்கு அவர்களுக்கு பொதுமக்கள்ஆதரவு கிடைக்கும் என்ற ஒரு எண்ணம் உருவாகி இருக்கிறது.இந்த எண்ணம் பரவலாக இருப்பதால் ,பொது வெளியில் உலவும் பெண்களைக் கண்டால் ,ஆண்களுக்கு இப்போது அவர்களை அறியாமல் ஒரு பயம் பற்றிக்  கொள்கிறது .டெல்லி மாநகரத்தில் ஒரு பேருந்தில் திடீரென பிரேக் போட்டதால், ஒரு ஆண் முன்னால் இருந்த பெண் மீது .மோத வேண்டிய ஒரு சூழ்நிலை வந்தது. அந்தப் பெண் ,சற்றும் சிந்திக்காமல்,இவன் வேண்டுமென்றே செய்கிறான் என்று சொல்லி எல்லோர் முன்னிலையிலும் ,அவனை  அடித்து அவமானப்படுத்தி விட்டார்.எந்தத் தவறும் செய்யாத அந்த ஆண், அந்த அவமானம் தாங்க முடியாமல், பின்னர் தற்கொலை செய்து கொண்டார். உண்மையில் அவர் வேண்டுமென்று மோதவில்லை என்பது பின்னால் விசாரணையில் தெரியவந்தது .ஆனால் ,அதனால் ஒரு பயனும் இல்லை.அந்தப் பெண்ணின் அவசர செய்கையினால் வீணாக ஒரு ஆண் உயிர் போய்விட்டது.ஆனாலும் ,அந்தப் பெண் நடந்த சம்பவத்திற்காக வருத்தப்பட்டு மன்னிப்பும் கேட்கவில்லை.அப்படிப்பட்ட ஒரு அழுத்தமும் அவளுக்கு சமூக ஊடகங்களால் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால், இப்போது சமூக ஊடகங்கள் பெண்களுக்காக பரிந்து பேசும் ஊடகங்களாக மாறி விட்டது .அரசியல் தலைவர்களும் பெண்களின் வாக்குகளுக்காக அவர்கள் என்ன தவறு செய்தாலும் ,அதை எதிர்த்துப் பேசுவதில்லை என்ற நிலை வந்து விட்டது.

                                            இந்த மாதிரி சம்பவங்களின் உச்சமாக, கடந்த 29/11 /2025 அன்று ,சென்னையில் சட்டக் கல்லூரி மாணவி  ஒருவர் ,கிளாம்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏறி, தாம்பரம்  வரை மட்டும்  பயண சீட்டு எடுத்திருக்கிறார். தாம்பரத்திற்கு அப்புறம் சீட்டு  இல்லாமல் பயணிப்பதை பார்த்த  நடத்துனர்,பயண சீட்டு  வாங்க சொல்லி கேட்டிருக்கிறார். அதற்கு இந்த சட்டக் கல்லூரி மாணவி, 'என்னை தாம்பரத்தில் இறக்கி விட்டிருக்க வேண்டியது உங்கள் கடமை. நீங்கள் கடமை தவறி விட்டீர்கள் 'என்றெல்லாம் ஒருமையில் பேசியதாக சொல்லப்படுகிறது .இந்நிலையில் வாக்குவாதம் முற்றி ,மாணவி கடைசியில் தன்னுடைய செருப்பை கழற்றி, எல்லோர் முன்னிலையிலும் அந்த நடத்துனரை  கன்னத்தில் பளார் பளார் என்று அடித்திருக்கிறார்.இந்த சம்பவம் முழுவதும் உள்ளிருக்கும் காணொளி கேமராவில் பதிவாகி உள்ளது.

                                      இது மாதிரி ஒரு வன்செயல்,தமிழ் சமூக  பெண்கள் ஒரு போதும் செய்யவே மாட்டார்கள்.தாய் வழி சமூக கேரளா பெண்கள்,சில நேரங்களில்  பெற்ற மகனை கன்னத்தில் அறைவார்கள். ஆந்திராவில் ,அக்கா, தங்கைகள் கூட சகோதரன் கன்னத்தில்  அறைவார்கள்.ஆனால், தமிழ்நாட்டில் அம்மாதிரி பழக்கம் எதுவுமே கிடையாது என்பது தமிழர்களின் தந்தை வழி சமூக பண்பாட்டில் உள்ளது. வீட்டிலேயோ  அல்லது பொது வெளியிலோ பெண்கள், ஆண்களை தாக்குவதாக 1960 களில் கேள்வி பட்டதே இல்லை. ஆனால், இப்போது ஒரு பெரிய காரியமே இல்லாத ஒன்றை பெரிதாக்கி, தாக்கும் அளவுக்கு இந்த  பெண்ணுக்கு இந்த கோபமும் துணிச்சலும் தந்தது யார் ?பெண்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்?சமூகத்தின்  என்ன குறைபாடு,அவர்களை இது மாதிரி எல்லாம் செய்யத்  தூண்டுகிறது என்பதை இன்று நாம் ஆழமாக  ஆராயலாம்.

                                                      தமிழ் மொழியின் சிறப்பை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.தமிழ் சொற்கள் எல்லாம் உருவாக்கப்பட்ட விதம் மிகவும் இயல்பானது. அந்த வழியில் ஆண் என்றால் ஆள்பவன் என்று பொருள். பெண் என்றால்  பேணுபவள் என்று பொருள் .தமிழ் சமூகத்தில் இவர்களுக்கு அவர்கள் பெயருக்கு ஏற்றாற்  போல் பொறுப்புகளும் கடமைகளும் கொடுக்கப்பட்டிருந்தன.பொதுவெளியை நடத்துவதில் ஆண்களுக்கு முக்கிய பங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட எல்லா உலக நாடுகளிலும் இதே பழக்கம் தான் இருந்தது/இருக்கிறது. ஆதலால், பொதுவெளியில் ,ஆண்கள் பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், அவர்களுக்கு முதல் வழி விட வேண்டும் ,அவர்களை துன்புறுத்தக் கூடாது,வேண்டிய உதவிகள் செய்ய வேண்டும் , போன்ற பல விழுமியங்கள், ஆண்களுக்கு சிறு வயது முதலே கற்றுத் தரப்பட்டன. மேலும் ,இந்த மாதிரி விழுமியங்கள் ,எல்லா கதைகள், இலக்கியங்கள் போன்றவற்றிலும் முக்கியப்படுத்தப்பட்டு, சமூகத்தில் நிலை நிறுத்தப்பட்டு வேரூன்றி விட்டது. ஒரு பெண் தவறிப்போய் ,ஒரு ஆணை அடித்து விட்டால் கூட, பதிலுக்கு அந்தப் பெண்ணை ஆண் அடிக்கக் கூடாது,அது பேடித்தனம்  என்ற எண்ணம் கூட சிறு வயது முதலே ஆண்கள் மனதில் வேரூன்றி  இருக்கிறது .பெண் என்றால் ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய சிறப்பு  பாலியல் இனம் .பெண் என்றால் பெற்ற தாயின் ஒரு உருவம்.அதை துன்புறுத்தக் கூடாது. இரண்டாவதாக  மனித இனத்தின் இனப்பெருக்கத்திற்கு பெண்ணின் முக்கிய பங்கையும் மதிக்க வேண்டும்,பெண்கள் தாயைப் போன்று மதிக்க தகுந்தவர்கள், போன்ற எண்ணங்களும் ஆண்களின் மனதில் பல நூறு ஆண்டுகளாக விதைக்கப்பட்டிருக்கிறது.

                                                        இவ்வாறாக பொதுவெளியில், ஆண்கள் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை பற்றி மிகவும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு ,ஆண்களை அந்த நல்ல வழியில் நடக்க வைக்கிறார்கள் இந்த ஊடகத்தினர் மற்றும் பொதுமக்கள். இது நாகரிகத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு விட்டது. சரி, இது இப்படி இருக்க, ஆண்கள் எவ்வளவோ தியாகங்களை செய்து, பெண்களை காப்பாற்றி, ஒரு குடும்பத்தின் தலைவராக இருந்து, பெரிய கடமைகளை செய்து, ஒரு தனிப்பெரும் பங்காற்றுகிறார்கள் . ஆனால், அப்படிப்பட்ட  ஆண்களை, பெண்கள் எவ்வாறு நடத்த வேண்டும் என்று இதுவரை பெண்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்பதை நாம் ஒருவரும் உணர்வதில்லை .அதற்கு முக்கியமான காரணம், பெண்கள் சமத்துவமாக பொதுவெளியில், முற்காலத்தில்  இருந்தது இல்லை என்பதுதான். ஆனால், இப்போது பெண்கள் சமமாக பொது வெளியில் எல்லாவிதமான காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். சொல்லப்போனால் ,அரசியலில் அடிதடி செய்யும் இடங்களில் கூட பெண்களின் பங்கு இப்போது உள்ளது.                                                                                              அப்படிப்பட்ட நிலையில், பொதுவெளியில், பெண்கள் ஆண்களை எப்படி நடத்துவது? குடும்ப சூழ்நிலையில், எப்படி ஆண்களிடம் பெண்கள் நடந்து கொள்வது? இவைகள் எல்லாம் பெண்களுக்கு போதிக்கப்பட்டு ,அதை சமூகத்தின் ஒரு முக்கிய கூறாக  மாற்ற வேண்டும். அப்படி இதுவரை செய்யவில்லை என்பதால் தான் இது போல ,பயண சீட்டு கேட்ட ஆண் நடத்துனரை  பொதுவெளியில் செருப்பால் அடித்து ஒரு இளம் பெண் அவமானப்படுத்தி இருக்கிறார். அவருடைய வயதுக்கு கூட, இந்த இளம் பெண், அதுவும் ஒரு சட்டக் கல்லூரி மாணவி, மதிப்பு கொடுக்கவில்லை என்பது அவள் செய்த காரியத்தைக் கொண்டு தெளிவாக தெரிகிறது.இந்தக் கட்டுரைக்கு ஒரு விளக்க படமாக, ஒரு இந்திய பெண். ஒரு ஆணை பொது வெளியில், இல்லை ஏன் வீட்டில் கூட, அடிப்பது போன்ற ஒரு காட்சியை கூகுள் தேடலில் ,எவ்வளவோ தேடிப் பார்த்தும் ஒன்றுகூட கிடைக்கவில்லை! அதிலிருந்து இந்திய சமூகத்தில் எந்த அளவு இந்த செய்கை  மிகவும் மோசமாக கருதப்படுகிறது என்பது தெளிவாக புரிகிறது.

                                                                                         இந்திய சமூகத்தில் ஒரு ஆண், ஒரு பொறுப்புள்ள அப்பாவாக, அன்பான அண்ணன், தம்பியாக மேலும் மாமனாக, மச்சானாக, அத்தானாக பல முக்கிய பங்கு ஆற்றுகிறார்கள்.அப்படிப்பட்ட ஆண்களை பெருமைப்படுத்தாமல், ஏதோ அங்கும் இங்குமாக பொறுப்பற்று நடக்கும்,ஒரு  சில ஆண்களை பொதுமைப்படுத்தி, ஆண்கள் எல்லோரும் காமுகர்கள், குடிகாரர்கள் என்பது போல் ஊடகங்கள் சித்தரிப்பது ஒரு பெரிய சமூக சாபக்  கேடு.அதுவும்,குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் அதிகமாக ஆண்களைக் கேவலப்படுத்துகிறது .ஆண்களை பெருமைப்படுத்தும் படங்கள் இப்போதெல்லாம்  எடுக்கப்படுவதில்லை .இவ்வாறாக தொடர்ச்சியாக ஆண்களை சிறுமைப்படுத்தி காட்டிக் கொண்டு ,பெண்களை உயர்த்தி காட்டிக் கொண்டே  இருக்கிறார்கள். இதனால் ,பெண்கள் தாங்கள் ஏதோ ஆண்களை விட பெரியவர்கள் என்ற ஒரு எண்ணத்தை விதைத்து கொண்டிருக்கிறார்கள் இந்த ஊடகத்தினர்.

                                   ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டால் , உடனே காவல்துறையை அணுகுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக, அந்த ஆணை,பெண் அடிப்பது  சரிதான் என்பது போல் ஊடகங்கள் சித்தரிக்கின்றன.அப்படிப்பட்ட ஆண்களை, பாதிக்கப்பட்ட பெண்கள், சமூக ஊடகங்களில் காணொளியாக பதிவிட்டு, அவமானப்படுத்தலாம் என்றெல்லாம் ஒரு நியாயப்படுத்த படுத்தும் ஒரு சூழ்நிலை வந்துள்ளது .குற்றம் நடந்ததா இல்லையா என்பதை குற்றம் சாட்டியவரே தீர்மானிக்க முடியாது, என்பதை மறந்து, இவ்வாறாக ஒரு பரப்புரை செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட பெண்களை 'சிங்கப்பெண்கள்' என்று சொல்லி பெருமைப்படுத்துகிறார்கள். ஆண்கள் தான் செயல்களில் ஆற்றல் காட்ட வேண்டும் என்பது அவர்களுடைய இயற்கையில் உள்ளது .அது அவர்களின் விந்தணுக்களில் பிரதிபலிக்கிறது .விடுபட்ட விந்தணுக்கள் தான் பெண்ணின் கருமுட்டையை தேடி விறுவிறுவென்று நீந்தி செல்லும்.அது போல , பெண்களின் குணத்தை பிரதிபலிக்கும் விதமாக பெண்களின் கருமுட்டைகள் ஆண்களின் விந்தணுக்களுக்காக ஒரே இடத்தில் காத்துக் கொண்டிருக்கும். இது தான் இயற்கை .இந்த இயற்கையை  மாற்றும் படியாக எதுவும் செய்ய முடியாது. இதற்கு ஏற்றாற்  போல் தான் சமூக செயல்களும் நடக்க வேண்டும். இல்லை என்றால் ஆணின் குணம் பாதிக்கப்படும் .அதனால் இனப்பெருக்க மண்டலமும் சரியாக வேலை செய்யாது. குழந்தைகள் பிறப்பு விகிதம் தமிழ்நாட்டில் மிகவும் குறைந்து ,இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது.ஜனத்தொகையில் ஒவ்வொரு ஆயிரத்திற்கும் 18 குழந்தைகள் என்ற பிறப்பு விகிதம் தற்போது தமிழ்நாட்டில் 12 குழந்தைகள் என்று இறங்கி இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

                             மேற்கண்ட எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, குடும்பமும் சமூகமும், அமைதியாக இயங்க பெண்கள், சில காரியங்களை மனதில்  கொள்ள வேண்டும். பெண்கள் ,ஆண்களை ,குடும்பத்தில் மற்றும் பொது வெளியில், எப்படி நடத்துவது என்பதைக் குறித்து ஒரு தெளிவான வரையறை வகுக்க வேண்டும். இதைக் குறித்து சமூகவியலாளர்கள் கருத்துக்களை கீழே காணலாம் :

  • பெண்களுக்கு இயற்கை அளித்திருக்கும் வாழ்வில் ஒரு பெரும் பங்கை நிறைவேற்றுவது தான் அவர்களுடைய தலையாய கடமையாக கொள்ள வேண்டும் .இயற்கைக்கு எதிராக எந்தவித நிலைப்பாடும் எடுக்கக் கூடாது .எடுத்துக்காட்டாக, இயற்கையில் பெண்கள் என்பவர்கள் குழந்தை பெறுவதற்காகவே , ஒரு தனி பால் இனமாக படைக்கப்பட்டவர்கள். ஆதலால், நான் குழந்தை பெறமாட்டேன்,அது எனக்கு பிடிக்காது ,என்றெல்லாம் சொல்லக்கூடாது. மருத்துவ காரணங்களுக்காக அல்லது குழந்தை பெறுவதில் ஒரு இடர் இருந்தால், அப்படியான ஒரு நிலைப்பாடு எடுக்க வாய்ப்பு இருக்கிறது .இல்லை என்றால், இனப்பெருக்கத்திற்கு எதிராக பெண்கள் நடப்பதை  ஒத்துக் கொள்ள முடியாது .அது மனித இனத்திற்கே  எதிரானது என்பதை பெண்கள் மறுக்கக்கூடாது.குழந்தை பெறுவது என்று சொல்லும் போது, பெற்ற குழந்தைக்கு பாலூட்டுவது, பேணிக் காத்து வளர்ப்பது போன்றவைகளும் அடங்கும் .இவைகளை  துறந்துவிட்டு வேறு வேலைகளுக்கோ ,அல்லது சாதனைகளுக்கோ , அந்த நேரத்தில் செல்லக்கூடாது என்பது இயற்கையின் நியதி .அப்படி சென்றால் , மனித இனத்தின் இனப்பெருக்கம் என்பது பெருமளவில் பாதிக்கப்படும்.இதற்காக கணவனுடன் இசைந்து,வாழ்க்கை நடத்த வேண்டும்.ஆணின் பாலியல் தேவையை, அவர் கேட்கும் போதெல்லாம் நிறைவேற்ற வேண்டும் .வேதாகமத்தில் இதைக் குறித்து மிகவும் அழகான விளக்கம் தரப்பட்டிருக்கிறது .மணமுடித்த பின் பெண்ணின் உடல் மேல் கணவருக்கு உரிமை உள்ளது ;அதுபோல ஆணின் உடல் மேல் மனைவிக்கு உரிமை உள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது.பாலியல் உறவு வேண்டாம் என்றால் இருவரும் சேர்ந்து சில காரணங்களுக்காக முடிவெடுக்கலாம் என்று உள்ளது.
  • பொதுவெளியில் மற்றும் அலுவல் இடங்களில், பெண்கள் ஆண்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். பேருந்து போன்ற நெரிசலான இடங்களில் பயணிக்கும் போது ,இயற்கையாகவே ஒருவர் மேல் ஒருவர் மோதிக்கொள்ள நேரிடலாம். அது எல்லாவற்றையும் பாலியல் பார்வையில் பெண்கள் பார்க்க கூடாது. அப்படி பார்த்தால், பொதுவெளியில் அவர்கள் பயணம் செய்ய முடியாது . மிகவும் பலமான சந்தேகம் அப்படி நேர்ந்தால், அதைக் குறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படியான புகார் அளிக்கலாம் .அது இல்லாமல் சட்டத்தை பெண்கள் தங்கள் கையில் எடுத்து, ஆண்களை அடிப்பது,சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்துவது, போன்ற காரியங்களை செய்யக்கூடாது.தன்னிச்சையான நடவடிக்கைகள், சமூக உறவுகளில் பிளவுகளை ஏற்படுத்தி சண்டை சச்சரவை உண்டாக்கலாம்.
  • எந்த காரணம் கொண்டும் பெண்கள் ஆண்கள் மீது பொய் குற்றச்சாட்டு கொண்டுவரக் கூடாது.ஒரு ஆண், ஒரு பெண் மீது கொண்டுவரும் புகாரை சமூகம் அவ்வளவு எளிதாக நம்பாது. ஆனால், ஒரு பெண் ஆண்மீது பொய்யான ஒரு புகாரை கொண்டு வந்தால் ,இந்த சமூகம், ஆண்கள் உட்பட எல்லோரும் உடனே அந்த பெண்ணுக்கு சாதகமாக வருவார்கள் .ஆதலால், பொய் குற்றம் சாட்டப்பட்ட ஆண், பல இடங்களில் ஒரு உதவியும் இல்லாமல், ஒருவரும் அவரை நம்பாமல், மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறார். ஆதலால் ,அப்படிப்பட்ட எந்த ஒரு குற்றச்சாட்டையும் பெண்கள் கொண்டுவரக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.டெல்லியில் அவ்வாறு ஒரு பொய் குற்றச்சாட்டு சாட்டப்பட்ட ஆண் மிகவும் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார் .அதன் பின்னர் தான் அது பொய் குற்றச்சாட்டு என்று பொது வெளியில்  தெரிந்தது .அதன் பின்னால் எதுவும் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை!சமீபத்தில் கேரளாவில் இது போல ஒரு சம்பவம் நடந்து  பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டார் .குற்றவியல் சட்டத்தில் முக்கியமான அடிப்படை புள்ளி என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்டவரின் குற்ற நோக்கத்தை(mens rea )  குற்றம் சாட்டுபவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதாவது  வெறுமனே ஒரு சந்தேக அடிப்படையில் ,அவரை குற்றவாளி ஆக்க முடியாது .இரண்டாவதாக, குற்றம் சாட்டுபவர் அவரே நீதிபதியாகி,குற்றம் உண்மைதான் என்று, அதை சமூக ஊடகங்களில் பதிவு செய்து,குற்றம் சாட்டப்பட்டவரை அவமானப்படுத்த முடியாது.சட்டத்தில் இது குறித்து தெளிவான பார்வை உள்ளது .ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து போகலாம்; ஆனால் ,ஒரு நிரபராதி த ண்டிக்கப்படக்கூடாது என்பதே அந்தக் கொள்கை. ஆக, இது மாதிரியான காரியங்களில் பெண்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக் கூடாது. அதிகபட்சமாக ,வேண்டுமானால் காவல்துறை புகார் அளிக்கலாம்.பெண்களே  அவர்கள் குற்றசாட்டை  நியாயப்படுத்தி,சுய  நீதிபதியாக முடியாது.
  • ஆண் என்பதை தாண்டி அவர்களுடைய வயதுக்கும் பெண்கள் ஒரு மரியாதை கொடுக்க வேண்டும்.  குறிப்பாக தந்தை வயது உள்ளவர்கள், முதியோர்கள் போன்றவர்களை அவமானப்படுத்தும் படியாக  ஒரு போதும்  நடந்து கொள்ளக் கூடாது.கொங்கு பகுதியில் முதிய ஆண்களை பார்த்தவுடன், அப்பா என்று தான் பெண்கள் அழைப்பார்கள். அதுபோல வயதில் மூத்தவர்களை உடனே அண்ணா என்று சொல்லிவிடுவார்கள். இது ஒரு நல்ல பழக்கமாக தெரிகிறது.தமிழ்நாடு முழுவதும் இந்த முறையை பின்பற்றலாம்.
  • மொத்தத்தில் ஆண்கள் சமுதாயத்தின் ஆளுமைகள். பெண்கள் அவர்களுக்கு அடுத்தாற்  போல் தான் இயற்கையிலேயே அமைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இயற்கையை மதித்து, இரு பாலர்களும் இசைந்து வாழும் படியாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, பெண்கள் ,ஆண்களின் மேல் ஆதிக்கம் செலுத்த ,அதுவும் பொதுவெளிகளில் செலுத்த நினைப்பது சரியில்லை என்பதுதான் பொது கருத்து. மேற்கண்ட எல்லாவற்றையும் சரியாக செய்தால் ,சமூகம் , அமைதியாக ஒரு சண்டை சச்சரவின்றி  நடந்து கொண்டிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.அதை நோக்கி நாம் எல்லோரும் பயணிப்போம்.

Sunday, 18 January 2026

பெண்களுக்கு தங்கள் கவர்ச்சி எந்த அளவு ஒரு ஆணை கிளர்ச்சியூட்ட முடியும் என்று தெரியுமா?

 சமீபத்தில் ஒரு பழைய மலையாள படம் பார்த்தேன். படத்தின் பெயர் ரதிநிர்வேதம்(2011).மேற்படையாக பார்த்தால், அது ஒரு பாலியல் கிளர்ச்சி ஊட்டும் மஞ்சள் படம் போல தெரியும். பல காட்சிகள் அவ்வாறுதான் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால்,இறுதியில் அது சொல்லும் ஒரு பெரும் பாடம், பெண்கள் எல்லோரும் அறியவேண்டிய ஒரு பாடமாக அமைந்து விட்டது. 

                                         படத்தின் நாயகி ரதி சுமார் 23 வயது அழகான பெண்.  நாயகன் அவளை விட 8 வயது குறைந்த ஒரு ஒரு பதின்பருவ விடலை பையன்.இருவரும் பக்கத்து வீடு என்பதால் சிறு வயது முதல் நன்றாக பழகியவர்கள். ஒருவரை  ஒருவர் ஓடி பிடித்து , கண்ணாம்பூச்சி விளையாடி வளர்ந்தவர்கள். இப்போது பையன் 15 வயதளவில் ,வெளியூரிலிருந்து விடுமுறையை  கழிக்க வீடு  வந்திருக்கிறான் .பெண் என்பதால் அவன் சிறிது தயக்கம் காட்டினாலும்,நாயகி அவனுடன் முன்போலவே  ஓடி பிடித்து விளையாடுவது ,கண்ணாமூச்சி காட்டுவது போன்ற பல விளையாட்டுகளில் கள்ளம் கபடம் இல்லாமல் செய்வது அவனை பாலியலாக தூண்டுகிறது.என்னதான் அவன்  நாயகியை 'சேச்சி, சேச்சி' என்று அழைத்தாலும் ,அவளது  நெருக்கம் அவனை என்னவோ செய்கிறது.திருட்டுத்தனமாக  அவளை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் ,குறிப்பாக அவளுடைய உடம்பின் பாகங்களை ரசிக்க வேண்டும் என்று அவனை அறியாமல் அவன் கண் அவள் மேல் செல்கிறது .அவள் ஆடை மாற்றுவதை மறைந்திருந்து பார்க்கின்றான்.அவள் வீட்டில் மாவு அரைக்கும் போது மேலாடை இல்லாமல், கேரளாவில் வழக்கமாக இருப்பது போல் ,கால்களையும் நன்றாக தெரியும் படி வைத்துக்கொண்டு ,மாவரைப்பதையும்  இவன் ஒளிந்திருந்து பார்க்கிறான்.வர வர அவனால் அப்படி ஒளிந்து பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை .என்ன முயன்றாலும் இது சிறிது சிறிதாக வளர்ந்து, ஒரு நிலையில் அவளை எப்படியும் அடைந்து விட வேண்டும் ,ஒரு முறையாவது அனுபவித்து விட வேண்டும் என்று எண்ணும் அளவு வளர்ந்து விடுகிறது.இவ்வளவு நடப்பதும் வீட்டில் இருக்கும் வயதான பெண்களுக்கு, அம்மாவுக்கு ,சித்திக்கு,அக்காவிற்கு  யாருக்கும் கொஞ்சம் கூட புரியவில்லை.(பெண்களுக்கு இது புரியாது!) அவர்கள் இந்த இரண்டு பேரையும் அப்படி கண் கொண்டு பார்க்கவும் இல்லை .இந்நிலையில் ஒரு சரியான தருணத்தில், நாயகன் நாயகியை   தன்னை அறியாமல் இறுக கட்டி  அணைக்கிறான். அவள்  தடுக்க நினைப்பதற்குள், வீட்டில் உள்ளவர்கள் நடந்ததை பார்த்து விடுகிறார்கள்.குறிப்பாக பெண்ணின் தாய் பார்த்து விட்டதால்,  பெரும் பூகம்பம் வெடிக்கிறது.

பெண்ணின் தாய் பையனின்  அம்மாவை திட்டி தீர்க்கிறார். இதன் விளைவாக இரு குடும்பங்களிடையே பெரும் பகை உருவாகிறது. இந்த நேரத்தில் தான் நாயகனின் அத்தான் ,இராணுவத்திலிருந்து  விடுமுறைக்காக  வீட்டிற்கு வருகிறார்.
                                   நடந்ததை எல்லாம் அறிந்து ,வீட்டின் மூத்த பெண்கள்  எல்லோரையும்  கூப்பிட்டு அவர் கொடுக்கும் அறிவுரை தான் ,எல்லா பெண்களும் அறிய வேண்டிய பெரும்  அறிவுரையாக இருக்கிறது. அவரும் இந்த பருவத்தை கடந்து வந்தவர் தான். அந்த அனுபவம் அவருக்கு இந்த அறிவுரை கொடுக்க கை கொடுக்கிறது. 
                            அவர் சொல்கிறார்' இவ்வளவு நடந்து இருக்கிறது. நீங்கள் இத்தனை பெண்கள் இருக்கிறீர்கள். ஒருவருக்கு கூட இது நடப்பது தெரியவில்லை. ஏன்? ஏனென்றால் உங்களுக்கு பெண்களின் எந்தெந்த செயல்கள் ஒரு பையனுக்கு  கிளர்ச்சியூட்டும், பாலியல் உணர்வை தூண்டும் என்பதை பற்றி ஒன்றுமே தெரியாது. உங்கள் உடம்பு  ஆண்களுக்கு எந்த அளவு கிளர்ச்சி உண்டாக்கலாம் என்பதும்  தெரியாது. ஆதலால்,அவனுக்கு காம உணர்வு  ஊட்டும் படியாக நடந்து கொண்டது அந்தப் பெண் ரதியுடைய குற்றம். அவள்  தான் இந்த உணர்வுக்கு மூல காரணம். இதை ஆரம்பித்து வைத்தது அவள் தான் .அதை கண்டுபிடிக்காமல் இருந்தது உங்கள் குற்றம் .இப்போது பெரும் சிக்கலுக்குள் இந்த பிரச்சனை போய்விட்டது. இவனை உடனே மேற்படிப்பிற்கு வெளியூர் அனுப்பிவிடலாம் 'என்று சொல்கிறார்.

பெண்களுக்கு அவர்கள் கவர்ச்சி எந்த அளவு என்பதை உணர முடியுமா?
                                                                        இந்தக் கேள்விக்கு, இந்த திரைப்படம் சொல்லும் தெளிவான  விடை 'பெண்களுக்கு அவர்கள் கவர்ச்சி எந்த அளவிற்கு ஆண்களை மயக்கலாம், வெறியூட்டலாம் என்பது சிறிது கூட தெரியாது ' என்பதுதான்.தமிழர் பண்பாட்டில் இதை முற்றிலும் உணர்ந்ததால்,பருவம்  அடையும் முன்பே பெண்களுக்கு இதை உணர்த்தி விடுவார்கள்.'பொம்பளையா அடக்கமா இருக்கணும்' என்று சொல்வார்கள். பெண்கள் தங்கள் இஷ்டப்படி கால் மேல் கால் போட்டுக் கொண்டு அல்லது காலை விரித்துக்கொண்டு அல்லது கால் தெரியும்படியாக இருக்க, தமிழர்கள் தங்கள் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். பருவம் அடைந்த பின் கட்டாயமாக தாவணி போட்டு விடுவார்கள். தாவணி சிறிது விலகினாலும் உடனே வீட்டில் உள்ள மூத்த பெண்கள் அதை சொல்லிக் காட்டுவார்கள். கண்டிப்பார்கள் . இந்த பழக்கம் பள்ளி வரை சென்று, பெண்களின் தாவணி சிறிது விலகினாலும், உடனே அவர்களுடைய பெண் தோழிகள்  அதை சில விதமான ஜாடை செய்து  காட்டுவார்கள். உடனே அதை புரிந்து கொண்டு ` ,இந்த பெண் அதை இழுத்து விட்டு விடுவாள் .இந்த பழக்கம் ,எப்போது தமிழர் அல்லாதவர்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்களோ ,  முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, பாவாடை தாவணி என்ற உடையையே  இல்லாத மாதிரி .காலப்போக்கில் செய்து விட்டார்கள்!எடுத்துக்காட்டாக கேரளாவில், கீழ்கண்ட மேலாடை   இடாத ரவிக்கை அணிவதை மிகவும் சாதாரணமாக பார்க்கலாம்:
                                                            (படம் நன்றி: கூகுள்)

ஆனால், தமிழ்நாட்டில் இப்படி எந்த பெண்ணையும்,,எங்கும்  பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் மலையாள படங்கள் பரவ பரவ ,இது போன்ற காட்சிகளை சில தமிழ் படங்களிலும் காட்ட ஆரம்பித்தார்கள் .அதன் விளைவு இப்போது பல தமிழ் திரைப்படங்களில் இப்படியான காட்சிகள் மிக சாதாரணமாக  காட்டப்படுகிறது.
                                    தமிழ் குடும்பங்களில், சொந்த  தங்கை /அக்காவாக இருந்தாலும் பையன்களை நெருக்கமாக பழக விட மாட்டார்கள்.உடை மாற்றும் போதும் ஆண்களை  அறைக்குள்  அனுமதிப்பதில்லை. இரவில் தூங்கும் போது தனித்தனி அறைகளில் தான் படுப்பார்கள். சொந்த அம்மாவை கூட மகன் கட்டி அணைப்பது தமிழ் பண்பாட்டில் இல்லை. இவ்வாறாக ,பல நல்ல பாலியியல் பாதுகாப்பு பழக்கங்களை தமிழ் பண்பாட்டில் காணலாம்.இது போக , தமிழ் குடும்பங்களில்  உள்ள மூத்த பெண்கள் , பையன்களின் நடவடிக்கைகளை கூர்ந்து பார்ப்பது உண்டு.
                                 ஆனால் வளர்ந்து வரும் நாகரீகம்,தமிழ் பண்பாட்டில் அன்னி யர்களின் ஆதிக்கம்,ஊடகங்களின் செல்வாக்கு   போன்றவை ,இது மாதிரியான நல்ல பழக்கங்களை மாற்றிக் கொண்டு வருகிறது என்பது ஒரு கவலைக்குரிய விடயம்  தான்.இப்போது மாறிக் கொண்டு வரும் உடைகள், குறிப்பாக, மேற்கத்திய உடைகள், வட இந்திய உடைகள், உடலை மறைப்பது போல இல்லாமல் ,கவர்ச்சியான பாகங்களை எடுத்துக்காட்டுவது போல அமைந்துள்ளது. குறிப்பாக, மேற்கத்திய மேற் சட்டைகள், லெக்கின்ஸ் என்று சொல்லப்படும் காலோடு ஒட்டிய உடை, மற்றும் இடுப்பில் வெட்டப்பட்டிருக்கும் பகுதி வழியாக இடுப்பு முழுவதும் தெரிவது போன்ற வட இந்திய உடைகள் ,காம கண்களை தூண்டுகின்றன .
                            தமிழ்நாட்டின் அழகான உடையான ,பாவாடை-தாவணி  தற்போது திரைப்படங்களில், பாடல் காட்சியில் மட்டும் வருகிறது. நேரில் யாவனும் யாரும் அணிந்து பார்க்க முடிவதில்லை. அந்த அளவு அந்த உடையை அழித்துவிட்டார்கள். நான் கூட ராமராஜ் ஆடை நிறுவனத்திற்கு, நீங்கள் வேட்டியை எந்த அளவு பரவலாக்கி இருக்கிறீர்களோ அதுபோல ஏன் பாவாடை தாவணியை  ஆக்கக் கூடாது என்று ட்விட்டர் செய்தி போட்டேன். ஆனால், அதற்கு எந்த பதிலும் இல்லை .அவர்கள் தமிழர்கள் இல்லை என்ற  காரணமாக கூட இருக்கலாம் என்று ஒரு நண்பர் சொன்னார் .அது உண்மையா என்று தெரியவில்லை.ஆனால், அந்த நல்ல பண்பாட்டு உடையை மீட்டெடுப்பது தமிழர்களின் கடமை என்று  நான் நினைக்கிறேன்.இந்த உடையின்  குணம் என்னவென்றால், இது அணிந்த பெண்களை ஒரு அழகான பட்டாம்  பூச்சி போல மெருகேற்றி காட்டும், ஆனால்,அதே நேரம்  காமக் கிளர்ச்சி ஊட்டாது
                                                             (படம் நன்றி: கூகுள்)
இறுதியாக இளம் பெண்கள் அறிய வேண்டியது என்னவென்றால் , அவர்கள் இயற்கையாக  ஆண்களை கவரும்/மயக்கும்  படியாக படைக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு முக்கிய அடிப்படை காரணம் இனப்பெருக்கம் தான் . இதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது .இந்த நிலையில் 
                             பெண்கள்  என்னதான் செய்ய முடியும்  என்று  நீங்கள் கேட்கலாம்.வீட்டில் திருட்டு நடப்பதை நாம் குறைக்க வேண்டுமென்றால், ஒரு பூட்டு போடலாம் .பூட்டு போட்டாலும் உடைத்து திருடலாம். ஆனால், பூட்டு போடுகிறோம். ஏனென்றால் அதை உடைத்து திருடுவது என்பது அதற்கு அடுத்தபடியான  முயற்சி . அதுபோல,பெண்கள்  இந்த இயற்கையான கவர்ச்சியை,மறைக்கும்  உடைகள் மூலம் தான் பூட்டு போட்டு குறைக்க முடியும். 
                   ஆனால்,மாறாக இதை அறியாத பெண்கள், மாதம்  2000 வரை செலவழித்து, அழகு நிலையத்திற்கு சென்று முடிந்த அளவு தங்கள் அழகினை கவர்ச்சிகரமாக்கி, ஆண்களை கவர்ந்து காம வெறியூட்டும்  கருவிகளாகி  கொண்டிருக்கிறார்கள் .அதனால் ,ஏற்படும் ஆபத்து அவர்களை (பெண்களை) தான் பாதிக்கும் என்பது அவர்களுக்கு பு ரியவில்லை. இப்போதே புள்ளிவிவரத்தை பார்த்தால்,1960 களில்  இருந்தது போல 10,000 மடங்கு அதிகமாக காம குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது புரியும் .சொந்த மகளை ,சொந்த அக்காவை,தங்கையை  பாலியல் துன்புறுத்தல் செய்யும் பரிதாப நிலைமை இப்போது நடந்து கொண்டிருக்கிறது .சிறு குழந்தைகளை கூட வயதான ஆண்கள் கூட  விட்டு வைப்பதில்லை போல தோன்றுகிறது. தினமும் செய்தித்தாளை திறந்தால் கட்டாயம் இது போன்ற வன்புணர்வு செய்திகள் மனதை காயப்படுத்துகின்றன.ஆனால் தமிழ் சமூகம் அந்தந்த சம்பவங்களுக்கு ஏதோ ஒரு நாள் ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள். பின்னர் அடங்கிப் போய் விடுவார்கள். இதன் அடிப்படை காரணம் என்ன ?அதை எப்படி முறியடிக்க வேண்டும் என்றெல்லாம் சிறிது கூட  சிந்திப்பதில்லை ..
                      இதற்கெல்லாம் என்ன மூல  காரணம் என்றால் ,காம குற்றங்களுக்கு அடிப்படையாக பெண்கள் ஒரு தூண்டுகோலாக  மாறிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது  தான் .அதை அவர்களால்  உணர முடியவில்லை என்பதுதான் பிரச்சனை .அதை சொன்னால் கேட்கும் மனநிலையில் அவர்கள் இப்போது இல்லை .பெற்றோர்களுக்கு கீழ்படிவதில்லை .சொந்த அப்பா சொன்னால் கூட கேட்பதில்லை என்பது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும்.இது போதாது என்று உடை அணிவது பெண்ணின் சுதந்திரம் என்றும் அதை யாரும் கட்டுப்படுத்த முடியாது ,அது பெண் உரிமையில் தலையிடுவதாகும் என்று ஒரு தவறான கருத்து ஊடகங்கள் வழியாக பரப்பப்படுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் பாதிப்பது பெண்களை  தான் என்பதை மறைத்து ஊடகங்கள் இந்த விஷம பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன என்பது வருத்தத்திற்குரிய விடயம்.
காம குற்றங்களை குறைப்பதற்கு பெண்கள் பங்களிக்க முடியுமா?
                      சட்டயியலில்   உரிமையியல்  சட்டம் என்று ஒன்று உள்ளது. ஆங்கிலத்தில் இதை  TORTS  என்பார்கள். அந்த சட்டத்தில் ஒரு கோட்பாடு  உள்ளது. அது என்னவென்றால், ஒரு குற்றம் நடைபெறுவதற்கு ,குற்றவாளி ஏதாவது ஒரு வழியில்  பங்களித்திருந்தால் ,அதை CONTRIBUTORY NEGLIGENCE  என்று சொல்லுவார்கள் .அதாவது, குற்றம் நடக்க  ஏதுவான அசட்டை என்று சொல்லலாம்.எடுத்துக்காட்டாக ,சாலை நடுவே ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இரவில் ஒரு வாகனம் அவர் மேல் ஏறி அவர் இறந்து விடுகிறார். இந்த மரணத்தில் இறந்தவர் பாகத்தில் இந்த குற்றத்திற்கு ஏதுவான அசட்டை நடந்திருக்கிறது என்று சட்டத்தில் சொல்லுவார்கள். அவர் சாலை  நடுவே தூங்கவில்லை என்றால் இந்த மரணம்  நேர்ந்திருக்காது என்ற அடிப்படையில் அவ்வாறு சொல்லப்படுகிறது.
                                  காம குற்றங்களுக்கும்  இந்த கோட்பாடு பொருந்தும். வெறியூட்டும் படியாக ஆடை அணிவது அல்லது நடந்து கொள்வது போன்றவை காம குற்றங்களுக்கு வழி வகுக்கலாம்  .நான் சொன்ன எடுத்துக்காட்டில் பாதிக்கப்படுவது அந்த அசட்டையில் ஈடுபட்ட நபர் தான்.அவர் தான்  தண்டனைக்கு உள்ளாகிறார் .ஆனால் காம வெறி குற்றங்களில்  அப்படியல்ல. வெறியூட்டும் நபர் ஒருவராக இருக்கலாம். ஆனால், அதனால் வெறி  ஊட்டப்பட்ட ஆணின்  தாக்குதலுக்கு உள்ளாகும் பெண் வேறு நபராக இருக்கலாம்! எடுத்துக்காட்டாக, நடிகை சமந்தாவின் காம வெறியூட்டும் ஒரு திரைப்பட பாடலை பார்த்துவிட்டு, அந்த வெறியில் அலைந்து கொண்டிருக்கும் ஒரு ஆண், தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குட்டி பாப்பாவை,சில நேரம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்காக சிறு பையன்களை கூட ,அவன் வெறியை தீர்த்துக்கொள்ள  வழியாக்கலாம் .ஆக ,இங்கு தவறு செய்வது ஒரு பெண் , தண்டனை பெறுவது வேறு ஒரு பெண் அல்லது ஆண் என்பது போல ஆகலாம்.
ஆக,அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை எப்படி தடுக்கலாம்?
  • காமவெறி என்பது ஒரு ஆவியாகும்,அதாவது இச்சையின் ஆவியாகும் .அதை சட்டத்தை கொண்டு அல்லது பிரம்பை கொண்டு கட்டுப்படுத்த முடியாது .ஆவியை கட்டுப்படுத்த ஆவிக்குரிய வழிகளை தான் பின்பற்ற வேண்டும் என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும்.
  • இப்போது காம ஆவியை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பார்க்கலாம் .
  • முதலாவதாக பெண்கள் தங்கள் கவர்ச்சியினை முடிந்த அளவு மூடி மறைத்து உடை அணிய வேண்டும்  இறுக்கமான உடைகளை அணிந்து தங்கள் உடலின் வடிவத்தை வெளிக்காட்டும் விதமாக இருக்கக் கூடாது.
  • அடுத்ததாக அவர்கள் நடந்து கொள்ளும் விதம் ஆண்களை கவரும் விதமாக இருக்கக் கூடாது.எடுத்துக்காட்டாக ,நைட்டி போன்ற  உடைகளை அணிந்து  பெண்கள், பொது வெளியில் வரக்கூடாது. காய்கறி எடுப்பதற்காக குனிந்து தங்கள் முன்னழகை  வெளியே தெரியும் படியாக காட்டக்கூடாது. இது மற்ற ஆண்களின் கண்களை இயற்கையாக  கவரும்.காம உணர்வை தூண்டும்.ஆண்களால்   அந்த உணர்வை  கட்டுப்படுத்த முடியாது என்பது பெண்களுக்கு தெரியாது.
  • இந்த நேரத்தில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் ஒரு முக்கியமான கோட்பாடு பெண் உரிமை என்பதாகும் . அது பெண்களுக்கு ஆபத்தான பலவற்றை  செய்யச் சொல்லி கற்பிக்கிறது.அவர்களுக்கு ஒரு அசட்டு தைரியத்தை கொடுக்கிறது .அவர்களால் ஆண்களை ,எந்நேரத்திலும் தனியாக எதிர்கொள்ள முடியும் என்று ஒரு பொய் பிரச்சாரத்தை செய்து நம்ப வைக்கிறது.வீட்டில் இருக்கும் ஆண்கள் அதாவது பெற்ற அப்பா,அன்பு  அண்ணன்,பாசமிகு  தம்பி ,யார் சொல்வது எதையும் கேட்கத் தேவையில்லை, வெளியே செல்லும்போது அவர்கள் துணை  தேவையில்லை போன்ற தவறான அறிவுரைகளையும் இந்த இயக்கம் கற்பித்து ,பெண்களை ஆபத்தான பாதையில் வழி  நடத்துகிறது.
  • இதில் முக்கியமான புள்ளி என்னவென்றால், தமிழர் பண்பாட்டில் பெண் உரிமை/ பெண் சமத்துவம் என்ற கோட்பாடு ஒருக்காலும்  இருந்தது  கிடையாது.தமிழர் சமூகம் ஆண்வழி சமூகமாக இருந்தாலும், பெண்கள் அவர்களுக்கு கிடைக்கும் எல்லா விதமான பயன்களையும் பெற்று அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாழ்வில் முன்னேறி எல்லா நிலைகளிலும் உயர்ந்து நின்றார்கள். பெரும் புலவர்களாக /கவிஞர்களாக திகழ்ந்தார்கள்.அரசனையே கேள்வி கேட்கும் துணிச்சல் கொண்ட கண்ணகி யாகவும் இருந்தார்கள் .அந்த அளவுக்கு தமிழ் பண்பாட்டில் பெண்களுக்கு ஒரு மரியாதையும் அதே நேரம் பாதுகாப்பும் இருந்து கொண்டிருந்தது.தமிழர் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் நடக்காததால்,தமிழில்  அதற்கான சொற்கள் கூட கிடையாது .எடுத்துக்காட்டாக ,ஆங்கிலத்தில் RAPE  என்று சொல்லப்படும் சொல்லிற்கு  தமிழில் நிகரான சொல் கிடையாது. ஏனென்றால் ,அப்படி ஒன்று தமிழர் சமூகத்தில் நடந்ததில்லை. இப்போது நாமாக அதற்கு ஒரு சொல்லை உருவாக்கி ,வன்புணர்வு கற்பழிப்பு என்றெல்லாம் சொல்கிறோம். இவைகள் ஒன்றும் சங்க கால இலக்கியத்தில் காணப்படவில்லை.இன்றும் கூட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இரவும் பகலும் ஒரே இடத்தில் படுத்து உறங்கிய இளம் பெண்களும் ஆண்களும் சகோதர நட்பில் தான் இருந்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு வாரமாக நடந்த அந்த போராட்டத்தில் ஒரு பாலியல் குற்றம் கூட பதிவாகவில்லை. அதுதான் தமிழரின் உயரிய  பண்பாடு.
  • தமிழ் பெண்களின் இந்த பாதுகாப்பான சூழ்நிலை,உயர்வு எல்லாவற்றையும்  குலைக்கும் விதமாக, தமிழ்நாட்டில் வாழும் பெண் வழி சமூக வேற்று இன  மக்கள், பெண்ணுரிமை, பெண் சமத்துவம் போன்ற வேண்டாத கோட்பாடுகளை ,தமிழ்நாட்டில் நுழைத்து பெண்களுக்கு தீங்கிழைக்கும் பல பழக்கங்களை புகுத்தி ,அவற்றை நல்லது, முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வது என்றெல்லாம் பொய் பிரச்சாரம் செய்து ,இப்போது பெண்களுக்கும் /சிறுமிகளுக்கும்   ஒரு பாதுகாப்பில்லாத ,பிரச்சனை சூழ்ந்த ஒரு நிலைமையை கொண்டு வந்து விட்டார்கள்.
  • இப்போது தமிழ்நாட்டில் நடக்கும் மிகவும் அருவருக்கத்தக்க ஒரு விடயத்தை,பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள், ஆதலால் ஆண்களைப் போல் ,எந்நேரத்திலும் எங்கும் அவர்கள் நினைத்தபடி சுற்றலாம் என்று போதிக்கும் இந்த பெண் சமத்துவ இயக்கத்தோடு தொடர்பு படுத்தலாம் .காம வெறியில் அலையும் ஆண்கள் ,இப்படி எங்கு பார்த்தாலும் எளிதாக சுற்றிக் கொண்டிருக்கும் பெண்களை, வயது வேறுபாடு பார்க்காமல், பாட்டிகள், இளம் சிறுமிகள் போன்றவர்களை கூட தன் இச்சைக்கு பலியாக்குவது தற்போது மிக சாதாரணமாகிவிட்டது. 
  • அது போதாது என்று தன் காமவெறியை தீர்த்துக் கொள்ள பெற்ற மகளையே பலியாக்கும்  ஒரு கொடூரம் வேறு இப்போது அரங்கேறிக்   கொண்டிருக்கிறது. இந்த மாதிரி ஒரு அறமற்ற தீய எண்ணம் தமிழர் பண்பாட்டில்  வருவதற்கு எந்த வித இடமும்  இல்லை .ஆனால்,அதை மீறி  வந்திருக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம்? குடும்பத்து பெண்களிடம் கூட  உன்னுடைய காமப் பசியை தீர்த்துக் கொள்ளலாம் என்ற கொடூரமான எண்ணம் தமிழ் சமூகத்தில் எப்படி நுழைந்தது ?ஆய்ந்து பார்த்தால் இதற்கு காரணம் என்ன  என்பது தெரிய வரும், தமிழ்நாட்டில் வாழும் வேறு மொழி பேசும்  சிறுபான்மையினர்,அவர்தம் பண்பாட்டு கூறுகளை ,மெதுவாக ,அவர்கள்  கட்டுப்பாட்டில் உள்ள  அச்சு மற்றும் ஒளி ஊடகங்கள் வழியாக திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்படி ஒரு   இனத்தின் தலைவர்' உனக்கு காம இச்சை வந்து விட்டால் , நீ உன் அக்காவுடன், தங்கையுடன் வீட்டில் உள்ள எந்த பெண்களிடம் உறவு கொண்டு தீர்த்துக் கொள் 'என்று சொல்லி இருக்கிறார் என ஒரு பொய் பிரச்சாரம் தமிழக ஊடகங்களில் செய்யப்படுகிறது. யாரும் இப்படி நிச்சயமாக சொல்லி இருக்க முடியாது.அந்த அளவுக்கு தரம் தாழ்ந்த ஒருவர் எப்படி தலைவராக இருக்க முடியும்?ஆனால், பிரச்சனை அதுவல்ல .இப்போது அவர் சொல்லியிருக்கிறாரா இல்லையா என்பது  முக்கியமில்லை. பிரச்சனை என்னவென்றால், அப்படி ஒரு தீய எண்ணத்தை அது தமிழக பண்பாட்டில் விதைத்து விட்டது என்பதுதான் .வீட்டில் இருக்கும் சொந்த மகளை ,அக்காவை, தங்கையை, ஏன் அம்மாவை கூட காமப்  பார்வை பார்க்க சொல்லி,அது தவறில்லை என்று ஒரு தீய எண்ணத்தை அது விதைத்து விட்டது. அந்த தீய எண்ணத்தை பலப்படுத்துவது போல் ,தமிழ்நாட்டில் படங்கள் எடுக்கும் அவர்கள் (இனத்தால் தமிழர் அல்லாதவர்கள்), இந்த எண்ணத்தை திரைப்படங்கள் வழியாக பரப்புகிறார்கள். எடுத்துக்காட்டாக ,அக்கா மாதிரி இருக்கும் கௌதமியை பார்த்து , ஒரு குட்டி பையன்' சிக்கு புக்கு ரயிலே ,கலக்குது பார் இவ ஸ்டைலே ' என்று பாடும்படியான  ஒரு காட்சி. அதுபோல பாட்டிமார்கள் எல்லோரும் சேர்ந்து அருவி கரையில் காம கவர்ச்சியோடு ஆடுவது போல ஒரு காட்சி .மாணவர் தன் ஆசிரியையை காமக்கண்ணோடு பார்ப்பது போல ,ஆசிரியர் தன் மாணவியை காமக்கண்ணோடு பார்ப்பது போல, இளம் சிறார்கள் எதிர்பாலரை கா ம கண்ணோடு பார்ப்பது போல, இப்படி எல்லாம் காட்சிகள் அமைக்கிறார்கள். குறிப்பாக ,மலையாள திரைப்பட இயக்குநர்கள்  மற்றும் கதாசிரியர்கள் இப்படி பல திரைப்பட  காட்சிகள் அமைக்கிறார்கள் . தமிழர் அல்லாதவர்கள் இப்படி கேவலமாக படங்கள்  எடுத்து,தமிழ் நாட்டில்  பரவலாக்குகிறார்கள்.
  • இவ்வளவு ஒரு கேவலமான நடத்தை தமிழர்களின் அற பண்பாட்டில் எந்த காலத்திலும்  இருந்தது இல்லை.ஆனால், இப்போது பெற்ற மகளையே கற்பழிக்கும் குற்றம் நடக்கிறது என்றால் அதற்கு நிச்சயமான காரணம் இதுதான் என்பதை நாம் உணரலாம்.தன் காம வெறியை தீர்த்துக் கொள்ள குடும்பத்திற்குள்ளே ஒரு எளிய வழி கண்முன்னே  இருக்கிறது என்ற கேவலமான ஒரு எண்ணத்தை இது பலமாக விதைத்து விட்டது.                                                                                                                                                    மேற்கண்ட கொடுமைகளிலிருந்து தமிழர்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டுமானால்,தமிழர்கள் தங்களுடைய அறவாழ்வுக்கு பழையபடி திரும்ப வேண்டும். தந்தை வழி சமூகத்தை பலப்படுத்த வேண்டும். அதற்கு எதிரான ஆட்சியை விரட்டி அடித்து விட்டு, தமிழர் தலைவர்களை ஆட்சிக்  கட்டிலில் அமர்த்த வேண்டும். அப்படி செய்தால் தான் தமிழ் சமூகம் இந்தக் கொடுமைகளிலிருந்து பிழைக்கும், என்பது தமிழ் ஆர்வலர்கள் கருத்து.