பரிசுத்த வேதாகமத்தில் ஒரு சுவையான கதை .யாக்கோபுவும் ஏசாவும் சகோதரர்கள் .அந்த கால வழக்கப்படி மூத்தவன் ஏசாவுக்குத்தான் சொத்து உரிமைகளும் ஆசீர்வாதங்களை உண்டு .ஆனால் ,ஏசாவோ ,பசியாய் இருந்த போது ,ஒரு கூழுக்காக அவைகளை விற்றதாக கதை .தமிழர்கள் ,நாம் எல்லோரும் ஏசாக்கள் தாம் .கேவலம் 500 ரூபாய்க்காக நம்மை ஆளும் உரிமையை அந்நியருக்கு விற்று விட்டோம் .இப்போது நம் அண்ணன் ,தம்பிகள் அங்கே அடிவாங்கி அழுது கொண்டிருக்கும் போது ,அடுத்த தேர்தலை பற்றி பேசிக்கொண்டிருக்கும் தலைவரை பெற்றிருக்கிறோம் !ரோம் பற்றி எரியும் போது நீரோ அரசன் இசை கேட்டுக்கொண்டிருந்தானாம் !இப்போது பெங்களூரு பற்றி எரிகிறது !நமது நீரோக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ?
படம் நன்றி :கூகுள்
No comments:
Post a Comment