வெறிகள் பலவிதம் !
'கொலை வெறி ','காம வெறி 'பற்றி கேள்வி பட்டிருக்கிறோம் .ஆனால் 'காவேரி' ஆற்றின் மேல், ஒரு மாநில மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் 'கா வெறி 'யை பற்றி கேள்வி பட்டு இருக்கிறீர்களா ?ஏன் இந்த வெறி ? ஏன் எந்த ஒரு நியாயத்திற்கும் கட்டு பட மறுக்கும் ஒரு கூட்டம் ?
இரண்டு பேருக்கிடையில் ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை உண்டு என்றால் ,மூன்றாவது நபராகிய 'நீதிபதியிடம் 'செல்வது வழக்கம் .அவர் தீர்ப்புக்கு இருவரும் கட்டுப்பட வேண்டியது கட்டாயம் . , வன்முறையால் தீர்ப்பையே எதிர்ப்பது எந்த வகையில் நியாயம் ?
அந்த பக்க நியாயம் !
எனக்கு தெரிந்த 'அந்த பக்க' நண்பர் ஒருவர் உண்டு .அவரிடம் நட்புடன் கேட்டேன் "எப்படிங்க ,நீங்க உச்ச நீதி மன்ற தீர்ப்பையே எதிர்க்கிறீங்க ?சட்டத்துக்கு பயம் வேண்டாமா ?"அவரின் பதிலிலிருந்து நான் உணர்ந்த விடயம் என்னவென்றால் அவர்கள் எல்லோரும் ' காவேரி அவர்கள் நிலத்தில் உற்பத்தி ஆவதால் ,அவர்களுக்கு மட்டும் தான் அது சொந்தம் 'என்று தவறாக எண்ணி கொண்டிருப்பது தான் ' போராட்டத்திற்கு காரணம் .
நண்பனுக்கு அவர்கள் எண்ணம் தப்பானது என்பதை எப்படி விளக்குவது என்று யோசித்து ,ஒரு உதாரணம் சொன்னேன் .'ஒரு வீட்டின் கீழ் தளத்தில் நீங்கள் குடியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் .மாடியில் ஒரு வட இந்தியர் குடியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.உங்கள் வீட்டின் நீர் தேவை ,ஒரு ஆழ் துளை கிணறு வழியாக ,மேலேற்றி ,மாடியில் ஒரு நீர் தொட்டியில் தேக்கி வைக்க படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.' நண்பர் ,கேட்டு 'சரி ' என்றார்.'இப்போது ,மாடிக்காரர் ,நீர் தொட்டியின் குழாயை அடைத்து விட்டு 'இந்த தொட்டி என் வீட்டில் உள்ளது .ஆதலால் எனக்கு போகத்தான் விடுவேன் 'என்று சொல்கிறார் .அது சரியா ?'என்று கேட்டேன் .உடனே நண்பர் 'அது எப்படி சரியாகும் ?'என்று கோபமாக பார்த்தார் .'ஏன் ,அவர் வீட்டில் தானே நீர் தொட்டி இருக்கிறது ?அவருக்கு அதில் முழு உரிமை இல்லையா ?'என்று நான் கேட்க ,நண்பர் அவர்கள் தரப்பின் தப்பை மெல்ல உணர ஆரம்பித்தார் !
'தலைக்காவேரி ' மஹாராஷ்டிராவில் இருந்தால் ..
நண்பரிடம் மேலும் விளக்கினேன் ,'ஒரு பேச்சிற்கு ,காவேரி உற்பத்தியாகும் 'தலைக்காவேரி ' மஹாராஷ்டிராவில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.அவர்கள் அங்கு ஒரு அணை கட்டி ,தண்ணீர் தர மாட்டோம் என்றால் ,என்ன செய்வீர்கள் ?'என்றவுடன் 'அது எப்படி ?நாங்கள் உச்ச நீதி மன்றம் சென்று நீதி பெறுவோம் !' என்றார்.'அதைத்தான் தமிழகம் இப்போது செய்திருக்கிறது !'என்றவுடன் நண்பருக்கு நம் தரப்பு நியாயம் இன்னும் கொஞ்சம் அதிகமாக புரிந்தது .
தஞ்சாவூர் உழவர்கள் கன்னடம் பேசினால் ...
நண்பர் இப்போது மெதுவாக நழுவ பார்த்தார் .நான் விடுவதாக இல்லை."தஞ்சாவூர் உழவர்கள் இப்போது தமிழில் பேசுவதால் அவர்களை தாக்குகிறீர்கள் .அவர்கள் கன்னடம் பேசுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.அப்போது என்ன செய்வீர்கள் ?தண்ணீர் திறந்து விடுவீர்களா ?" என்று கேட்டேன் .
என் நண்பருக்கு 'ஆளை விட்டால் போதும்' என்று ஓட்டம் எடுத்தார் .நானும் நம் தரப்பு நியாயத்தை சொன்ன திருப்தியில் அவரை ஓட விட்டுவிட்டேன் !இயேசு சிலுவையில் அறையப்படும் போது சொன்னாரே 'பிதாவே !இவர்களை மன்னியும் !இவர்கள் செய்கிறது என்னவென்று அறியாதிருக்கிறார்களே !'என்னும் வசனம் தான் என் நினைவில் வந்தது.

No comments:
Post a Comment