![]() |
இறைவனின் கோபம் ! |
பணத்தை பற்றி அவருக்கு கவலையே இல்லை.அவர் வேலை செய்யும் அலுவலகத்தில் ,அவருக்கு தினமும் சுமார் 1 லட்சம் வரை ,லஞ்சம் கிடைக்கும் .அவர் ஒன்றும் அதற்காக முயல வேண்டாம் .கேள்வி கேக்காமல் கையெழுத்து மட்டும் போட்டால் போதும் .பெருநகர கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்கும் அலுவலகம் அது .அவர் பெறும் லஞ்ச பணத்திலிருந்து ,யாருக்கு எவ்வளவு சேர வேண்டுமோ ,அதை தவறாமல் சேர்த்து விடுவார் .இதிலெல்லாம் அவர் கெட்டிக்காரர் !
மனிதன் கண்டுபிடித்த சட்டங்களை ,மனிதன் கண்டுபிடித்த 'லஞ்சத்தை 'கொண்டு சமாளித்து விடலாம் !ஆனால் இதற்கெல்லாம் மேல் உள்ள இறைவனின் தண்டனையை அவர் அறிவாரா ?
பரிசுத்த வேதாகமத்தின் உபாகமம் 28 அதிகாரத்தில் ,தேவன் அவர் கட்டளைகளுக்கு எதிராக செயல் படும் மனிதர்களுக்கு உரிய தண்டனைகளை குறித்து கூறுகிறார் .
இந்த தண்டனைகள் குற்றம் புரிபவருக்கு அல்ல ,அவருடைய பிள்ளைகளுக்கும்,பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் ,3,4 தலைமுறை வரைக்கும் பொருந்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் .
தேவனின்தண்டனைகள் :
- 15. இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.
16. நீ பட்டணத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
17. உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் சபிக்கப்பட்டிருக்கும்.
18. உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும்.
19. நீ வருகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
20. என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியுமட்டும், நீ கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார்.
21. நீ சுதந்தரிக்கும் தேசத்தில் கர்த்தர் உன்னை நிர்மூலமாக்குமட்டும் கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளப்பண்ணுவார்.
22. கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும் உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும்.
25. உன் சத்துருக்களுக்கு முன்பாக நீ முறிய அடிக்கப்படும்படி கர்த்தர் செய்வார்; ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாய் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய்; நீ பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் சிதறுண்டுபோவாய்.
27. நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.
30. பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.
31. உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் புசிப்பதில்லை; உன் கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப அகப்படாமற்போம்; உன் ஆடுகள் உன் சத்துருக்களுக்குக் கொடுக்கப்படும்; விடுவிப்பார் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.
33. உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் எல்லாப் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள்; நீ சகலநாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.
35. உன் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.
38. மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதைப் பட்சித்துப்போடும்.
39. திராட்சத்தோட்டங்களை நாட்டிப்பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்று போடும்.
40. ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோம்.
41. நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.
42. உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் கனிகளையும் விட்டில் பட்சித்துப்போடும்.
43. உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய்.
44. அவன் உன்னிடத்தில் கடன்படான்; நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான், நீ வாலாயிருப்பாய்.
45. உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு விதித்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத்தொடர்ந்து பிடித்து,
46. உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும்."
--------------------------------------------------------------------------------------------------------------
- இன்று லஞ்சம் கொடுக்க முடியாததால் ,மருத்துவ சிகிச்சை மறுக்க பட்டு,அதனால் இறந்த மதுரை மனிதனின் சாபம்,நிச்சயமாக தாக்கும் . மனித சட்டங்களை லஞ்சத்தை கொண்டு சமாளிக்கலாம் !இறைவனுக்கு மட்டும் லஞ்சம் கொடுக்க முடியாது !உங்கள் நண்பர்களில் லஞ்சம் வாங்குபவர்கள் யாரவது இருந்தால் அவர்கள் காதில் இதை போட்டு வையுங்கள் !அவர்கள் பிள்ளைகள் நன்றாயிருக்க வேண்டுமென்றால் லஞ்சம் வாங்குவதை நிறுத்தட்டும் .அவர்கள் பிள்ளைகள் மேல் இறைவனின் சாபம் இறங்காமலிருக்க ,லஞ்சம் வாங்குவதை நிறுத்தட்டும் !
No comments:
Post a Comment