Thursday, 22 September 2016

சே !இதெல்லாம் ஒரு நகைச் சுவையா ?

தரம் தாழ்ந்து வரும் தமிழ்த்  திரை நகைச்சுவை !
                     நான் சிறுவனாக இருந்த 60 களில் தமிழ் திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த நாகேஷ் ,சந்திரபாபு ,சோ ,மனோரமா போன்றவர்களின் நகைச்சுவைக் காட்சிகள், இன்றும் மனதை விட்டு அகலாமல்  நிற்கின்றன .தூய்மையான நகைச்சுவை காட்சிகள் .யாரையும் புண் படுத்தாமல் ,சுத்தமான நகைச் சுவைக் காட்சிகள் !.ஆனால் இன்றய நிலைமை யோ  கவலை அளிக்க க்  கூடியதாக இருக்கிறது.எப்படி  ?
இப்போதைய காட்சிகள் ! 
                                         அன்றைய காலக் கட்டத்தில் நகைச்சுவை ஒரு தனி கிளை க் கதையாக அல்லது கதையுடன் பின்னப்பட்டு  ,ஒரு அடிப்படை கருத்தோடு  அமைக்கப் பட்டிருக்கும்.பல முறை சிரிப்பையும் சிந்தனையையும் உருவாக்கும் காட்சிகளாக இருக்கும்.'திருவிளையாடலில் ' தருமியின் பாத்திரம் ,'அன்பே வா ' படத்தில் நாகேஷின் காட்சிகள்,'தேன் மழை' திரைப்படம் ,  எல்லாம் நினைத் தாலே சிரிக்கும் காட்சிகளாக இருந்தன. .
                                     ஆனால் இன்றைய நாளில் நகைச்சுவை காட்சிகள் அமைக்கும் விதம் முற்றிலுமாக மாறி விட்டது.எப்படி ?
  • இரட்டை பொருள் படும் படியான, 'அசிங்கமான ', இளைய சமுதாயத்தை தப்பான பாதையில் கொண்டு செல்லக்கூடிய காட்சிகள் மிகுதியாக  வருகின்றன.தாயாய் மதிக்க வேண்டிய வயதுடைய பெண்களையும் காமக் கண்ணோடு பார்ப்பது போல் காட்சிகள்.இன்னொருவரின் மனைவியையும் இச்சையோடு பார்ப்பது போல் காட்சிகள் !கல்லூரி யில்  பெண்கள் காதலுக்கத்தான் வருவது போலவும் ஆண்கள் எல்லாம் அதற்காக அலைவது போலும் காட்சிகள்.
  • அடிப்பதும்  ,கொல்லுவதல்லாம் நகைச் சுவையா ?கொதிக்கும் வெந்நீரை முகத்தில் வீசுவது 'சிரிப்பா ' ? ஒரு குறிப்பிட நடிகரை அடிப்பது தான் ,எல்லா படங்களிலும் நகை சுவையாக  காட்டப்படுகிறது .எதற்க்கெடுத்தாலும் அரிவாள்களை தூக்கிக் கொண்டு விரட்டுவது போல் காட்சிகள்.பார்க்கும் குழந்தைகள் எல்லோரும் ,அரிவாளை தூக்குவதும் ,ஆளை அடிப்பது ஒன்றும் தவறில்லை ,நகைச் சுவை தான் ,என்று நம்ப வைக்கிறது இப்படியான காட்சிகள்.அப்புறம் தெருவில் யாரயாவது உதைத்தால் ,நம் இளைஞ்ச ரெல்லாம்  ,விழுந்து விழுந்து சிரித்து விட்டு போய் விடுவார்கள் !ஆண்களை அடிக்கக்  கூடாத இடத்தில அடித்தால் மரணம் தான் .ஆனால் அப்படி அடிப்பது தமிழ் படங்களில் 'ஜோக் ' ! 
  • இன்னொரு மோசமான போக்கு என்னவென்றால் ,ஏமாற்றி ஒருவரை எதிலாவது மாட்டி விடுவது நகைச்சுவையாக கருதப் படுவது  தான் .ஒரு படத்தில் மின்சார மோட்டார் ஒன்றை சரிசெய்து கொண்டிருக்கும் ஒரு நடிகரை ,இன்னொரு நடிகர் மின்சாரத்தை பாய விடுகிறார் .உடனே அவர் அலறுகிறார் .என்ன ஒரு 'ஜோக் ' ! இதை எப்படி சிரிப்பாக கொள்வது ? அப்பாவிகளை பிரச்னையில் மாட்டி விடுவது நல்ல நகைச்சுவையா ?
  • ஆட்களை அசிங்கமாக வருணித்து பேசுவது அடுத்த நகைச்  சுவை !'போண்டா தலையா ,உன் கரடி மூஞ்சிக்கு ,தவக்களை ,போன்ற சொற்கள் எல்லாம் 'ஜோக் ' தானா ?சிந்திக்க வேண்டும் . 
  • அடுத்தது ,பெரியவர்களை அவமதிப்பது ,ஆசிரியர்களை ஏமாற்றுவது போன்ற காட்சிகள் 'நகைச்  சுவையாக, வரம்பில்லாம்மல் காட்டப்படுகிறது .இவைகள் பார்ப்பவரின் மனதை நிச்சயமாக பாதிக்கும் என்பதில் ஐயமில்லை .
                                         இந்த காட்சிகள் எல்லாம் சமுதாயத்தை ,குறிப்பாக இளவயதினரை மிகவும் பாதித்து ,அவர்களுடைய நல்ல பண்புகளை ,தவறான பாதையில் கொண்டு செல்லக்  கூடியது என்பதை உணர்ந்து கொள்வது எல்லோருக்கும் நல்லது .புதிதாக வந்திருக்கும் நடிகர் சங்கத்தினர் இதை கருத்தில் கொண்டு ,சமுதாய நலனுக்காக ,இந்த மாதிரி காட்சிகளை தவிர்த்து ,நல்ல சுத்தமான  நகைச்சுவைக்  காட்சிகள் வரும் படியாக ,சம்பந்தப் பட்டவர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். நம் குழந்தைகளிடம் இதைக் குறித்து பேசி புரிய வைப்பதும் நல்லது . இதை  நான் ஒரு சமுதாயக் கவலையோடு தான் பதிவு செய்கிறேன் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை .

(வலைத்தமிழ் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட என் கட்டுரை )

எதை இழந்தாலும் ,இதை மட்டும் இழக்காதீர்கள் !

என்ன காரணம் கொண்டும் உங்கள் மகிழ்ச்சியை மட்டும் இழந்து விடாதீர்கள் !அதை திருட பலர் வருவார்கள் !பல வரும் !ஆனால் ,நீங்கள் உறுதியாக இருங்கள் !
'மன மகிழ்ச்சி 'இறைவன் எனக்கு தந்தது !அதை மட்டும் நான் விடவே மாட்டேன் !
படம் நன்றி :கூகுள் 

Monday, 19 September 2016

இந்த அடங்கா 'காவெறி ' ஏன் ?

வெறிகள் பலவிதம் !
'கொலை வெறி ','காம வெறி 'பற்றி கேள்வி பட்டிருக்கிறோம் .ஆனால் 'காவேரி' ஆற்றின் மேல், ஒரு மாநில  மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் 'கா வெறி 'யை பற்றி கேள்வி பட்டு இருக்கிறீர்களா ?ஏன் இந்த வெறி ? ஏன் எந்த ஒரு  நியாயத்திற்கும்  கட்டு பட மறுக்கும் ஒரு கூட்டம் ?

இரண்டு பேருக்கிடையில் ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை உண்டு என்றால் ,மூன்றாவது நபராகிய  'நீதிபதியிடம் 'செல்வது வழக்கம் .அவர் தீர்ப்புக்கு இருவரும் கட்டுப்பட வேண்டியது கட்டாயம் . , வன்முறையால்  தீர்ப்பையே எதிர்ப்பது எந்த வகையில் நியாயம் ?
அந்த பக்க நியாயம் !
எனக்கு தெரிந்த 'அந்த பக்க' நண்பர் ஒருவர் உண்டு .அவரிடம்  நட்புடன் கேட்டேன் "எப்படிங்க ,நீங்க உச்ச நீதி மன்ற தீர்ப்பையே எதிர்க்கிறீங்க ?சட்டத்துக்கு பயம் வேண்டாமா ?"அவரின் பதிலிலிருந்து நான் உணர்ந்த விடயம் என்னவென்றால் அவர்கள் எல்லோரும் ' காவேரி அவர்கள் நிலத்தில் உற்பத்தி ஆவதால் ,அவர்களுக்கு மட்டும் தான்  அது சொந்தம் 'என்று  தவறாக    எண்ணி கொண்டிருப்பது தான்   '  போராட்டத்திற்கு காரணம் .

நண்பனுக்கு அவர்கள் எண்ணம் தப்பானது என்பதை எப்படி விளக்குவது என்று யோசித்து ,ஒரு உதாரணம் சொன்னேன் .'ஒரு வீட்டின் கீழ் தளத்தில் நீங்கள் குடியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் .மாடியில் ஒரு வட இந்தியர் குடியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.உங்கள் வீட்டின் நீர் தேவை ,ஒரு ஆழ் துளை கிணறு வழியாக ,மேலேற்றி ,மாடியில் ஒரு நீர் தொட்டியில் தேக்கி வைக்க படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.' நண்பர் ,கேட்டு 'சரி ' என்றார்.'இப்போது ,மாடிக்காரர் ,நீர் தொட்டியின் குழாயை அடைத்து விட்டு 'இந்த தொட்டி என் வீட்டில் உள்ளது .ஆதலால் எனக்கு போகத்தான் விடுவேன் 'என்று சொல்கிறார் .அது சரியா ?'என்று கேட்டேன் .உடனே நண்பர் 'அது எப்படி சரியாகும் ?'என்று கோபமாக பார்த்தார் .'ஏன் ,அவர் வீட்டில் தானே நீர் தொட்டி இருக்கிறது ?அவருக்கு அதில் முழு உரிமை இல்லையா ?'என்று நான் கேட்க ,நண்பர் அவர்கள் தரப்பின் தப்பை  மெல்ல உணர ஆரம்பித்தார் !
'தலைக்காவேரி ' மஹாராஷ்டிராவில் இருந்தால் ..
நண்பரிடம் மேலும் விளக்கினேன் ,'ஒரு பேச்சிற்கு ,காவேரி உற்பத்தியாகும் 'தலைக்காவேரி ' மஹாராஷ்டிராவில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.அவர்கள் அங்கு ஒரு அணை கட்டி ,தண்ணீர் தர மாட்டோம் என்றால் ,என்ன செய்வீர்கள் ?'என்றவுடன் 'அது எப்படி ?நாங்கள் உச்ச நீதி மன்றம் சென்று நீதி பெறுவோம் !' என்றார்.'அதைத்தான் தமிழகம் இப்போது செய்திருக்கிறது !'என்றவுடன் நண்பருக்கு நம் தரப்பு நியாயம் இன்னும் கொஞ்சம் அதிகமாக புரிந்தது .
தஞ்சாவூர் உழவர்கள் கன்னடம் பேசினால் ...
நண்பர் இப்போது மெதுவாக நழுவ பார்த்தார் .நான் விடுவதாக  இல்லை."தஞ்சாவூர் உழவர்கள் இப்போது தமிழில்  பேசுவதால் அவர்களை தாக்குகிறீர்கள் .அவர்கள் கன்னடம் பேசுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.அப்போது  என்ன செய்வீர்கள் ?தண்ணீர் திறந்து விடுவீர்களா ?" என்று கேட்டேன் .
என்  நண்பருக்கு 'ஆளை விட்டால் போதும்' என்று ஓட்டம் எடுத்தார் .நானும் நம் தரப்பு நியாயத்தை சொன்ன திருப்தியில் அவரை ஓட விட்டுவிட்டேன் !இயேசு சிலுவையில் அறையப்படும் போது சொன்னாரே 'பிதாவே !இவர்களை மன்னியும் !இவர்கள் செய்கிறது என்னவென்று அறியாதிருக்கிறார்களே !'என்னும் வசனம் தான் என் நினைவில் வந்தது.

Sunday, 18 September 2016

நம் குழந்தைகள் மேல் சாபம் வேண்டாமே !

இறைவனின் கோபம் !
அந்த பணக்கார வீட்டில் எப்போதும் சண்டைதான் .அங்கு எல்லாம் உண்டு ,ஆனால் நிம்மதி இல்லை .மனைவிக்கு ஏதாவது ஒரு உடல் வியாதி .பிள்ளைகளோ பெரும் பிரச்னை .பெரியவனுக்கு வாயில் நுழையாத ஒரு பெயர் கொண்ட நோய் .மகளுக்கு ,பெயர் தெரிந்த ,ஆனால் பெரும் நோய் -புற்று நோய் !இதையெல்லாம் நினைத்து அவருக்கோ  தூக்கமே இல்லை .
பணத்தை பற்றி அவருக்கு கவலையே இல்லை.அவர் வேலை செய்யும் அலுவலகத்தில் ,அவருக்கு தினமும் சுமார் 1 லட்சம் வரை ,லஞ்சம் கிடைக்கும் .அவர் ஒன்றும் அதற்காக முயல வேண்டாம் .கேள்வி கேக்காமல் கையெழுத்து மட்டும் போட்டால் போதும் .பெருநகர கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்கும் அலுவலகம் அது .அவர் பெறும்  லஞ்ச பணத்திலிருந்து ,யாருக்கு எவ்வளவு சேர வேண்டுமோ ,அதை தவறாமல் சேர்த்து விடுவார் .இதிலெல்லாம் அவர் கெட்டிக்காரர் !
மனிதன் கண்டுபிடித்த சட்டங்களை ,மனிதன் கண்டுபிடித்த 'லஞ்சத்தை 'கொண்டு சமாளித்து விடலாம் !ஆனால் இதற்கெல்லாம் மேல்  உள்ள இறைவனின் தண்டனையை அவர் அறிவாரா ?
பரிசுத்த வேதாகமத்தின் உபாகமம்  28 அதிகாரத்தில் ,தேவன் அவர் கட்டளைகளுக்கு எதிராக செயல் படும் மனிதர்களுக்கு உரிய தண்டனைகளை குறித்து கூறுகிறார் .
இந்த தண்டனைகள்  குற்றம் புரிபவருக்கு  அல்ல ,அவருடைய பிள்ளைகளுக்கும்,பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் ,3,4 தலைமுறை வரைக்கும் பொருந்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் .
தேவனின்தண்டனைகள் :
    15. இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.

    16. நீ பட்டணத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.

    17. உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் சபிக்கப்பட்டிருக்கும்.

    18. உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும்.
    19. நீ வருகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.

    20. என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியுமட்டும், நீ கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார்.

    21. நீ சுதந்தரிக்கும் தேசத்தில் கர்த்தர் உன்னை நிர்மூலமாக்குமட்டும் கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளப்பண்ணுவார்.

    22. கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும் உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும்.
    25. உன் சத்துருக்களுக்கு முன்பாக நீ முறிய அடிக்கப்படும்படி கர்த்தர் செய்வார்; ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாய் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய்; நீ பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் சிதறுண்டுபோவாய்.
    27. நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.
    30. பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.
    31. உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் புசிப்பதில்லை; உன் கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப அகப்படாமற்போம்; உன் ஆடுகள் உன் சத்துருக்களுக்குக் கொடுக்கப்படும்; விடுவிப்பார் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.
    33. உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் எல்லாப் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள்; நீ சகலநாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.
    35. உன் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.
    38. மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதைப் பட்சித்துப்போடும்.
    39. திராட்சத்தோட்டங்களை நாட்டிப்பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்று போடும்.
    40. ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோம்.
    41. நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.
    42. உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் கனிகளையும் விட்டில் பட்சித்துப்போடும்.
    43. உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய்.
    44. அவன் உன்னிடத்தில் கடன்படான்; நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான், நீ வாலாயிருப்பாய்.
    45. உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு விதித்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத்தொடர்ந்து பிடித்து,
    46. உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும்."
    --------------------------------------------------------------------------------------------------------------
    இன்று லஞ்சம் கொடுக்க முடியாததால் ,மருத்துவ சிகிச்சை மறுக்க பட்டு,அதனால் இறந்த மதுரை மனிதனின் சாபம்,நிச்சயமாக தாக்கும் . மனித சட்டங்களை லஞ்சத்தை கொண்டு சமாளிக்கலாம் !இறைவனுக்கு மட்டும் லஞ்சம் கொடுக்க முடியாது !உங்கள் நண்பர்களில் லஞ்சம் வாங்குபவர்கள் யாரவது இருந்தால் அவர்கள் காதில் இதை போட்டு வையுங்கள் !அவர்கள் பிள்ளைகள் நன்றாயிருக்க வேண்டுமென்றால் லஞ்சம் வாங்குவதை நிறுத்தட்டும் .அவர்கள் பிள்ளைகள் மேல் இறைவனின் சாபம் இறங்காமலிருக்க ,லஞ்சம் வாங்குவதை நிறுத்தட்டும் !


Saturday, 17 September 2016

உன் கண்ணீராவது திரண்டு மேட்டூரை நிரப்பட்டும் !

வாழ வந்தாரை ஆள வைத்த ஏமாளி தமிழா !
நன்றியாக அவர்கள் ஏதாவது செய்ய வேண்டாமா ?
அது தான் ஆள வைத்த உன்னை
அழகாக அழ வைக்கிறார்கள் !
அழு !தமிழா !அழு !
நாய்க்கு கூட தன் பரப்பை காக்க தெரியும் !
நீயோ ,கொஞ்சம் கூட குலைக்காமல்
உன் வீட்டையே  திறந்து விட்டாய் !
அடுக்களைக்குள் அவர்களை அனுமதித்தாய் !
அவர்களோ அடுப்பை மட்டும் விட்டு விட்டு
நீரையும் நெருப்பையும் திருடிவிட்டார்கள் !
அழு !தமிழா !அழு !
அதற்க்கு தான் நீ லாயக்கு !
அழு !தமிழா !அழு !
உன் கண்ணீராவது திரண்டு மேட்டூரை நிரப்பட்டும் !

படம் நன்றி :கூகுள் 

Friday, 16 September 2016

'கடவுளை 'தேர்ந்தெடுப்பதில் மட்டும் என்ன ஒரு சுணக்கம் ?

என் நண்பன் கூகுளை அலசிக்கொண்டிருந்தான் .என்னவென்று கேட்டேன் .'குற்றாலம் பார்டர் பரோட்டா'எங்கு கிடைக்கும் ,என்று தேடுகிறானாம் !ஒரு தீவனத்திற்க்காக என்ன ஒரு முயற்சி !அது போல ,இந்த பெண்கள் அவர்களுக்கு பிடித்த சேலைக்காக எவ்வளவு கடை ஏறி இறங்குகிறார்கள் !
நமக்கு என்ன தேவையென்றாலும் ,மிகவும் ஆராய்ந்து தேர்ந்தெடுக்கிறோம் .நமக்கு சிறந்தது தான்  எப்போதும் வேண்டும் .வாழ்க்கை துணையென்றால் சொல்ல வேண்டாம் !அப்படி இருக்கவேண்டும் ,இப்படி இருக்க கூடாது என்று ஆயிரம் நிபந்தனைகள் !இப்படியெல்லாம் ,சாதாரணமான விடயங்களுக்கு முக்கியம் கொடுத்து செய்யும் நாம் ,நாம் கும்பிடும் கடவுளை தேர்ந்தெடுப்பதில் மட்டும் ஏன் அலட்சியம் காட்டுகிறோம் ?என்றாவது ஒரு நாள் உட்க்கார்ந்து ,கூகுளில் 'யார் சிறந்த கடவுள் 'என்று தேடியிருக்கிறோமா ?நான் பயன் படுத்தும் அலைபேசி சரியில்லையென்றால் கூட உடனே  மாத்திவிடுகிறேன் .நான் வணங்கும் கடவுளை எடுத்துக்கொண்டால் .....என் கடவுளின் குணங்கள் என்னென்ன ?என்னை நல்வழி நடத்தும் குணங்கள் அவரிடம் உள்ளதா ,என்று என்றாவது சிந்தித்திருக்கிறேனா ?என்னுடைய குணங்கள் எல்லாம் நிச்சயமாக நான் வழிபடும் கடவுளின் குணங்களாக தான் உருவெடுக்கும்,என்பதை நான் மறக்க கூடாது .நான் ஒரு கோபக்கார கடவுளை வணங்கினால் ,என்னிடம் எப்படி அன்பு இருக்கும் ?நான் மன்னிக்கும் ஒரு அன்பான இறைவனை வணங்கினால் ,எனக்கும் மன்னிக்கும் குணம் தானே வரும் .அல்லும் ,பகலும் கூடே இருக்கும் அந்த ஆண்ட வரை தேர்ந்தெடுத்து வணங்குவோம் !நம் வாழ்க்கை சிறக்கும் !நிம்மதி பிறக்கும் !
படம் நன்றி :கூகுள் 

விக்னேஷின் அகால மரணம் .

தமிழ் உணர்வுக்காக தன் இன்னுயிரை தீக்கிரையாக்கி ,இன்று தமிழ் நாட்டில் ஒரு சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் ,விக்னேஷ் ஒரு இளைஞர் .கொண்ட கொள்கைக்காக உயிரை விடுவது என்பது ,உயிருடன் இருந்து போராடி வெற்றி பெறும்  வாய்ப்பை எடுத்துவிடும். இதை  இம்மாதிரி இளைஞர்கள் உணர்ந்து ,இம்மாதிரியான காரியங்களில் இறங்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்வோம் .