ஒரு காலத்தில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர்.
Wednesday, 7 April 2021
பிராமணாள் கபே ---மற்றவா உள்ளே வராதீங்கோ !
ஒரு காலத்தில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர்.
Wednesday, 31 March 2021
தி மு க இந்துக்களின் எதிரியா?
திமுக இந்துக்களின் எதிரி?????
திமுகவா இந்திய மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்தது?
திமுகவா தமிழ் நீஷ பாசை என்று சொன்னது?
திமுகவா கோவில்களில் சமஸ்கிருத மந்திரம் மட்டும் ஓதியது? தமிழை கோவில்களில் தடை செய்தது??
திமுகவா தமிழில் தேவாரம் பாடிய ஓதுவார்களை கோவிலுக்குள் வைத்து தாக்கியது? நுழைந்த நந்தனை உயிரோடு எரித்தது??
திமுகவா தீண்டாமையைக் கடைபிடிக்கச் சொன்னது?
திமுகவா தீண்டாமையைக் கடைபிடிக்காதே என்று சொன்ன இராமானுஜரை கொல்லத் துடித்தது?? மைசூருக்கு விரட்டியடித்தது?
திமுகவா முடிசூடும் பெருமாள் என உயர் தொணியில் பெயர் இருப்பதால், முத்துக்குட்டி என மாற்று என்று அய்யா வைகுண்டரை பெயர் மாற்றச் சொன்னது. அதற்காக சிறையில் அடைத்தது?
திமுகவா வள்ளலாரை
வைதீக வெறிக்கு எதிராகப் பேச வைத்தது?
திமுகவா உங்கள் சாஸ்திரங்களை குப்பையில் தூக்கி வீசுங்கள் என்று சுவாமி விவேகானந்தரை சொல்லச் சொன்னது?
திமுகவா நாமம் போடும் வைணவரை திருநீறு பூசக்கூடாது என்று சொன்னது?
திமுகவா திருநீறு பூசும் சைவரை நாமம் போடாதே என்று சொன்னது?
திமுகவா ஸ்ரீரங்கம் கோவில் யானைக்கு நாமம் போடுவதா? திருநீறு பூசுவதா என வழக்கு நடத்தியது?
திமுகவா இந்து மக்களை கோவில் கருவறைக்குள் விடாமல் தடுத்தது?
திமுகவா அனைவரும் அர்ச்சகராகக் கூடாது எனத் தடுத்தது?
திமுகவா இட ஒதுக்கீட்டை தடுக்க முயல்கிறது?
திமுகவா பிற்படுத்தப் பட்டோருக்கு நீதி வழங்கிய மண்டல்கமிசனுக்கு எதிராக ரதயாத்திரை நடத்தியது?
திமுகவா குப்புசாமியை குப்பா என்றும் , மாடசாமியை மாடா என்றும் ஒருமையில் அழைத்தது?
திமுகவா மருத்துவம் படிக்க விடாமல்
2017- அரியலூர் அனிதா
2018- திருச்சி சுபஸ்ரீ
2018- விழுப்புரம் பிரதிபா
2019- தஞ்சை வைஷ்யா
2019- திருப்பூர் ரிதுஸ்ரீ
2019- விழுப்புரம் மோனிஷா
2020- கோவை சுபஸ்ரீ
2020- மதுரை ஜோதிஸ்ரீ துர்கா
2020- அரியலூர் விக்னேஷ்
2020- தர்மபுரி ஆதித்யா
2020- திருச்செங்கோடு மோதிலால் ஆகிய இந்து மாணவ-மாணவிகளைக் கொன்றது?
இதையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளாக செய்துவிட்டு,
இதை சரிசெய்ய முயன்ற திமுகவை இந்துக்களின் எதிரி என்கிறார்கள்.
திமுக ஒன்றே குலம். ஒருவனே தேவன் என்றது. திமுக இந்துக்களுக்கு மட்டுமல்ல எல்லா மதங்களுக்கும் நண்பன் தான்.
இந்துக்களின் எதிரி சங்கிகள் தான். இந்துத்வா தான்.
இந்து வேறு
இந்துத்வா வேறு.
இரண்டுக்கும் ஒரே வேறுபாடு தான்.
காந்தி இந்து
கோட்சே இந்துத்வா.
__----*----------------------*---------
(ஆசிரியர் பெயர் தெரியாது. சமூக ஊடகங்களில் வந்தது )
Tuesday, 23 March 2021
2021 தமிழகத் தேர்தல் -- யாருக்கு வாக்கு அளிக்க கூடாது?
தமிழ் நாடு சட்டசபை தேர்தல் 2021 ,தமிழகத்தின் ,தமிழ் இனத்தின் வாழ்வா சாவா போராட்டம் என்றால் அது மிகையாகாது .தமிழக மக்கள் முன் தெளிவான 3 தேர்வுகள் உள்ளன .
1) தமிழ் இனத்தை ,பண்பாட்டை ,மொழியை ,பொருளாதார வாய்ப்புகள் எல்லாவற்றையும் அழிப்பதை வெளிப்படையான கொள்கையாக அறிவித்து வாக்கு கேட்கும் ஆரிய மலர் கட்சியும் ,தமிழ் இனத்தை பலியிட்டு ,சுய லாபம் தேடும் ஒரு இலைக்கட்சி கூட்டு .
2)தமிழர்களை ஆரிய பேயிடமிருந்து காப்பாற்றும் பலமுள்ள திராவிடப் பேய் கட்சி கூட்டு .
3)தமிழ் தேசியம் பேசும் ,ஆட்சியில் முன் அனுபவமில்லாத ,நாம் தமிழர் கட்சி .
இதில் யாருக்கு வாக்கு போடக்கூடாது என்பது வெகு முக்கியமானது .
-----------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகம் பாஜகவை அதன் கூட்டணியை ஏன்_நிராகரிக்க_வேண்டும்..?
#காரணம்_1
பாஜக தமிழர்களுக்கான கட்சியல்ல..! அது தமிழரல்லாத பார்ப்பனர்களின் நலன் காக்கும் கட்சி..!!
#காரணம்_2
பாஜகவின் தேசிய கலாச்சாரம் தமிழர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதில்லை..!!
#காரணம்_3
பாஜக தமிழரல்லாத வட இந்தியர்களின் வாழ்வியலை முன்நிலைப்படுத்துகிறது..!!
#காரணம்_4
தமிழர்களிடம் வழிபாட்டு முறையில் வேறுபாடுகள் இருந்தாலும், நம் வாழ்வியலில் வேறுபாடுகள் இல்லை. பாஜக அதில் வேறுபாட்டை விதைக்க முனைகிறது..! அதை தமிழகம் ஒருநாளும் ஏற்காது..!!
#காரணம்_5
பாஜக முன்வைக்கும் தேசியம் இந்து தேசியம். தமிழகம் மதவழி தேசியத்தை ஒருநாளும் ஏற்காது..!!
#காரணம்_6
பாஜகவின் மொழிக்கொள்கை தமிழை மூன்றாம் தர மொழியாக்கி இந்தியை, சமஸ்கிருதத்தை முன்நிறுத்துகிறது..!! தமிழர்கள் தங்கள் மொழியை விழியாக கருதுகின்றனர்..!
#காரணம்_7
பாஜக மக்களின் ஒற்றுமையை விரும்பாத கட்சி..! தமிழகமோ யாதும் ஊரே, யாவரும் உறவே..! ( கேளிர் ) என்ற உயரிய கொள்கையை உலகிற்கு அளித்த மண்..!
#காரணம்_8
பாஜகவின் தேசிய முழக்கத்தில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது..! தமிழர்களின் ஆளுமைகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றனர்..!
#காரணம்_9
பாஜகவின் மேட்டிமை தன்மையை சுயமரியாதையுள்ள தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அக்கட்சி உயர்சாதியினரின் நலன் சார்ந்து மட்டுமே சிந்திப்பதால் சமூக நீதி மண்ணான தமிழகத்தில் பாஜகவால் வேர்ப்பிடிக்க இயலாது..!!
#காரணம்_10
தமிழர்களை, தமிழ் மொழியை, தமிழரின் பண்பாட்டை, அவர்தம் கலாச்சாரத்தை தொடர்ந்து அவமதித்து வரும் பாஜகவை தங்களுக்கான இயக்கமாக தமிழர்களால் ஏற்க முடியாது.. !
(இதன் ஆசிரியர் பெயர் தெரியாது.நல்ல கருத்துக்களுக்காக பகிர்கிறேன் )
Sunday, 21 February 2021
அர்ப்பணிப்பின் சிகரம் சாரா டக்கரின் கதை
பாளையங்கோட்டைக்குப் போனீர்கள் என்றால் அங்கு
சாரா டக்கர் கல்லூரி, சாரா டக்கர் ஹையர் செக்கண்டரி ஸ்கூல்,
சாரா டக்கர் டிரெய்னிங் ஸ்கூல் ...என்ற பலகைகளைப் பார்க்கலாம்..
உங்களுக்கு தெரியாமலும் இருக்கலாம்..இங்கிலாந்து தேசத்தில் இரண்டு கால்களும் முடமான, தன் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாதபடி,அடைக்கப் பட்டிருந்த,ஒரு பெண் இருந்தாள்..அவள் பெயர் சாரா டக்கர்.
அவளால் ஒன்று தான் செய்ய முடியும்.ஒரு சாதாரண வீல் சேர்ல ..ஆலயத்துக்கு செல்வாள்.அப்போல்லாம் இப்போ உள்ள மாடர்ன் வீல் சேர்
கிடையாது..
ஒரு நாள் தென்னிந்திய மிஷனரி ஜான் டக்கர் (சாரா டக்கரின் சகோதரர்)
அந்த ஆலயத்தில் பேசினார்..
தென் இந்தியாவில் பெண் பிள்ளைகள் படிக்க முடியாத
சூழ்நிலைகளையும், சமுதாயக் கட்டுப்பாடுகளையும், பெண்களை சிறு வயதிலேயே கோயிலுக்கு பொட்டுக் கட்டி, விட்டு வாழ்நாளெல்லாம் விபச்சாரி
ஆக்கப் படுகிறார்கள் என்று அழுகையோடு சொன்னார்..பெண்கள் படிப்பது கேவலம் என்று கருதுகிறார்கள் என்றார்..நொறுங்கிய மனதுடன்.....
வீட்டுக்கு வந்தாள் சாரா.. அவளுக்கு 20 வயது இருக்கலாம்..அவளின் அப்பாவின் பெயர் ..டக்கர்..
அவள் ஆண்டவரிடம் சொன்னாள்.."ஆண்டவரே எனக்கு இந்தியாவுக்கு போக ஆசையாய் இருக்கிறது.. ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள் என அந்தப் பெற்றோரின் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும் போல் இருக்குது .. அறிவுக் கண்ணைத் திறந்தால் தானே ஒளி வரும்"
அவளுக்கு ஒன்று தோன்றியது..அவள் இந்தியாவைப் பார்த்ததில்லை..
திருநெல்வேலி மக்களைப் பார்த்ததில்லை..
திருநெல்வேலி மக்களுக்காக ஏங்கினாள்.அவள் உறவினரிடம் இது பற்றி சொன்னாள்..அவள் தன் பிறந்த நாளை பரிசுகள் வாங்கி கொண்டாடவில்லை..
அதற்கு பதிலாக பணமாகத் தாருங்கள் என்று பணத்தை சேர்த்தாள்....
தனது தோழிகளிடம் இருந்து நன்கொடையாக பெற்ற 200 பவுன் நகைகளுடன் தனது 100 பவுன் நகைகளையும் சேர்த்து,ஒரு நாள் அந்த மிஷனரி ஜான் டக்கருக்கு பணத்தை அனுப்பி வைத்தாள்..சாரா....
அதில் உருவாகியது தான் சாராடக்கர் ..ஸ்தாபனங்கள்..
இலவசமாகவே கல்வி கற்றுக் கொடுக்கப் பட்டது.
இன்று 4000 பிள்ளைகள் படிக்கும் பெரிய ஸ்கூலாக
கல்லூரியாக கம்பீரமாக நிற்கிறது..
அவள் இந்தியாவுக்கு வரவில்லை.திருநெல்வேலிக்கும் வரவில்லை.
அதில் படிக்கும் ஒவ்வொருவரும், சொல்வது "நான் சாரா டக்கர் மாணவி " என்று பெருமையாகச் சொல்லுகிறார்கள்..
அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்.
(தோழர் பீர் முகமது அவர்கள் முகநூலில் இருந்து)
----------------------------------------------------------------------------------------------------------------------------
சாரா டக்கர் கல்லூரி தான் தென் இந்தியாவின் முதல் பெண்கள் கல்லூரி .1895 ல் நிறுவப்பட்ட ஒரு சிறு பெண்கள் பள்ளி வளர்ந்து ஒரு கல்லூரியாக நம் முன் நிற்கிறது .கல்வி தர மறுத்த இந்து சமூக சூழ்நிலைகளை எதிர்த்து ,உடல் ஊனமுற்ற ஆங்கிலேய சகோதரி சாரா டக்கரின் மனத்தை போற்றுவோம் .
Monday, 15 February 2021
காதலர் தினத்திற்கு' வேலன்டைன் நாள் ' என்று எப்படி பெயர் வந்தது?
பிப்ரவரி மாதம் 14ஆம் நாள் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ' வேலன்டைன் நாள் 'என்று கூறுவார்கள். இதை ஏன் அப்படி கூறுகிறார்கள்?
சமீபத்தில் வாட்ஸ் அப்பில், கீழ் கண்ட ஒரு தகவலை பார்த்தேன். அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஷப் *வேலன்டைன்* என்பவர் ரோம் நகரிலிருந்து 96 கிலோ மீட்டர் துரத்தில் உள்ள இந்தெர்மனா என்று பட்டணத்தில் வாழ்ந்தார். இவர் வாழ்ந்த காலத்தில் *கிளாடியஸ் கோதிகஸ்* என்ற அரசர் ரோமை ஆண்டு வந்தார். இவர் கிறிஸ்தவர்களை துன்புறுத்தி வந்தார்.
இவர் ஆட்சி காலத்தில் வேலன்டைன் கிறிஸ்துவுக்கு உத்தமசாட்சியாய் வாழ்ந்து வந்தார். உபத்திரவபடுத்த படும் கிறிஸ்தவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து வந்தார்.
கிளாடியஸ் கோதிகஸ் அரசர் தன் போர்சேவகர்கள் திருமணம் செய்யக் கூடாது என்றும் திருமணம் செய்யாமல் பெண்களிடம் பிரவேசிக்கலாம் என்றும் சட்டம் கொண்டு வந்தான்.
இதை எதிர்த்த வேலன்டைன் முறையாக திருமணம் செய்து வாழ வேண்டும் என்றுச்சொல்லி போர் சேவகர்களுக்கு திருமணம் செய்துவைத்தார்.
இதனை அறிந்த கிளாடியஸ் கோதிகஸ் அரசர் வேலன்டைனை சிறையில் அடைத்தார். சிறையில் அடைக்கப்பட்ட வேலன்டைன் தன்னுடன் சிறையில் இருந்த 46 நபர்களுக்கு இயேசுவை அறிவித்து ஞானஸ்நானம் கொடுத்தார்.
இந்த செய்தி கிளாடியஸ் கோதிகஸ் அரசர்க்கு அறிவிக்கபட்டது. அரசர் வேலன்டைனை கிறிஸ்துவை மறுதலிக்கவும் ரோம தேவதைகளை வணங்கவும் கட்டளையிட்டான்.
வேலன்டைன் அதை ஏற்க மறுத்து அரசர்க்கு இயேசுவை அறிவிக்க முற்பட்டார்.இதனால் கோபம் அடைந்த அரசர் வேலன்டைனை பிப்ரவரி 14-ந்தேதி கொலை செய்தார்.
வேலன்டைன் பரிசுத்தமான திருமண உறவுதான் சரி என்றும் உறுதியான விசுவாசத்தின் நிமித்தமும் கிபி 270 பிப்ரவரி 14ல் மரித்தார்.
பிப்ரவரி 14 வேலன்டைன் கிறிஸ்துவின் அன்பிற்க்காய் அவருடைய பரிசுத்த கட்டளைக்காய் உயிர்விட்டு, இரத்தசாட்சியாய் மரித்த நாளே ஆகும். மற்றபடி இந்த நாளுக்கும் காதலர்களுக்கும் எந்த சம்பந்தமுமே யில்லை.
கிறிஸ்தவர்களே பிப்ரவரி 14ல் காதலர் தினம் கொண்டாடி இந்த பரிசுத்தவான் வரலாற்றை களங்கப்படுத்தாதீர்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதைக்குறித்து, என்சைக்கிளோபெடிய பிரிட்டானிகா என்ன சொல்கிறது? இந்த கதை உண்மை தானா? என்று வாசித்து பார்த்தேன். வேலன்டின் நாளை குறித்து பல விதமான கதைகளும், மரபுகளும் உள்ளன, என்று அதில் போடப்பட்டுள்ளது. இந்தக் கதை உண்மை தானா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
Saturday, 13 February 2021
சமூக ஊடக உரையாடல் விதிகள் .
- பதிவுகளில் கனிவான ,பணிவான சொற்களையே பயன்படுத்துங்கள். கிண்டலான பதிவுக்கு கிண்டலான பதில் இருக்கலாம். ஆனால் மனதை காயப்படுத்துவதாக இருக்கக்கூடாது.
- நீ, உனக்கு போன்ற மரியாதையற்ற சொற்கள் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
- எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ, சாதியையோ, மதத்தையோ குறிப்பிட்டு தாக்கக் கூடாது. இன்னொரு மதத்தின் கோட்பாடுகளை குறித்துப் பேச வேண்டுமானால், அதில் அனுபவம் இருக்க வேண்டும். இல்லாமல் அது குறித்துப் பேசக் கூடாது. எடுத்துக்காட்டாக, பரிசுத்த ஆவி எனும் கிறிஸ்தவ கோட்பாடு பற்றி ஒன்றுமே அறியாமல், அனுபவப் படாமல், அதைத் தாக்கி பல பதிவுகள் போடப்படுகின்றன. அது தவறு.சம்பந்த்தப்பட்டவர்களை அது காயப்படுத்தலாம் .
- Controversial, வெவ்வேறு பார்வைகள் கொண்ட விடயங்களை பேசலாம். ஆனால் சொற்பயன்பாடு கவனமுடன், நடுநிலையாக(neutral ) இருக்க வேண்டும்.
- கருத்துக்கு பதில் கருத்து தான் இருக்க வேண்டும். கருத்து சொன்னவரை தாக்கக்கக்கூடாது.
- ஒருவர் தன்னுடைய கதையை பகிர்ந்து கொண்டால், கதையில் அவர் பங்கை தாக்க கூடாது. உங்கள் கருத்துக்களை கனிவாக கூறலாம்.
- நல்லதை மனதார வாழ்த்துங்கள்.குறை கூறலாம் ,ஆனால் ,மனது புண்படாமல் கூறவேண்டும் .எடுத்துக்காட்டாக ,ஒரு 35 வயது தில்லி சார்ந்த பெண் ,தன் கணவர் திடீரென இறந்து விட ,வாழ்வதற்கு வழியில்லாமல் ,நட்சத்திர விடுதிகளில் விபச்சாரியாகி ,குடும்பத்தை காப்பாற்றுகிறாள் .அவள் மனசாட்சி அவளை உறுத்த ,கோராவில் மனம் விட்டு அழுது அவள் கதையை பகிர்கிறாள் .வாசகர்களின் கருத்தை கேட்கிறாள் .பலர் ,அவளை ஆதரித்து எழுதினார்கள் .ஆனால் ,நானோ ,'மகளே ,நீ செய்வது தவறு .எவ்வளவு சீக்கிரம் முடியுமோ ,அவ்வளவு சீக்கிரம் இந்த தொழிலிலிருந்து வெளியேறி ,வருமானம் குறைவாக இருந்தாலும் ,ஒரு சின்ன வேலையில் சேர்ந்து ,உன்னுடைய பிள்ளைகளை ,சின்ன பள்ளிகளில் சேர்த்துவிடு 'அதுதான் ,உன் கணவருக்கு நீ செய்யும் அஞ்சலி .'என்று போட்டேன் .அவள் ,எனக்கு கண்ணீருடன் நன்றி கூறினாள்
- ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ, அல்லது குழுவுக்கோ, கட்டுப்பட்டவரானால், எதிரான கருத்துக்கள் வரும்போது , உணர்ச்சிவசப்படாமல், உங்கள் நிலையை தெளிவாக,காரணத்தோடு விளக்கிச் சொல்லுங்கள்.
- உரையாடல் ஒரு நேரமும் சண்டையாக மாறக் கூடாது. இதையெல்லாம் நீங்கள் கடைப்பிடித்தால், உங்கள் சமூக வெளி பயணம் இனிதாகும்!வாழ்த்துக்கள் !
Friday, 11 December 2020
தரம் தாழ்ந்து வரும் தமிழ்த் திரை நகைச்சுவை !
நான் சிறுவனாக இருந்த 60 களில் தமிழ் திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த நாகேஷ் ,சந்திரபாபு ,சோ ,மனோரமா போன்றவர்களின் நகைச்சுவைக் காட்சிகள், இன்றும் மனதை விட்டு அகலாமல் நிற்கின்றன .தூய்மையான நகைச்சுவை காட்சிகள் .யாரையும் புண் படுத்தாமல் ,சுத்தமான நகைச் சுவைக் காட்சிகள் !.ஆனால் இன்றய நிலைமை யோ கவலை அளிக்க க் கூடியதாக இருக்கிறது.எப்படி ?
- இரட்டை பொருள் படும் படியான, 'அசிங்கமான ', இளைய சமுதாயத்தை தப்பான பாதையில் கொண்டு செல்லக்கூடிய காட்சிகள் மிகுதியாக வருகின்றன.தாயாய் மதிக்க வேண்டிய வயதுடைய பெண்களையும் காமக் கண்ணோடு பார்ப்பது போல் காட்சிகள்.இன்னொருவரின் மனைவியையும் இச்சையோடு பார்ப்பது போல் காட்சிகள் !கல்லூரியில் பெண்கள் காதலுக்கத்தான் வருவது போலவும் ஆண்கள் எல்லாம் அதற்காக அலைவது போலும் காட்சிகள்.
- அடிப்பதும் ,கொல்லுவதல்லாம் நகைச் சுவையா ?கொதிக்கும் வெந்நீரை முகத்தில் வீசுவது 'சிரிப்பா ' ? ஒரு குறிப்பிட நடிகரை அடிப்பது தான் ,எல்லா படங்களிலும் நகை சுவையாக காட்டப்படுகிறது .எதற்கெடுத்தாலும் அரிவாள்களை தூக்கிக் கொண்டு விரட்டுவது போல் காட்சிகள்.பார்க்கும் குழந்தைகள் எல்லோரும் ,அரிவாளை தூக்குவதும் ,ஆளை அடிப்பது ஒன்றும் தவறில்லை ,நகைச் சுவை தான் ,என்று நம்ப வைக்கிறது இப்படியான காட்சிகள்.அப்புறம் தெருவில் யாரயாவது உதைத்தால் ,நம் இளைஞரெல்லாம் ,விழுந்து விழுந்து சிரித்து விட்டு போய் விடுவார்கள் !ஆண்களை அடிக்கக் கூடாத இடத்தில அடித்தால் மரணம் தான் .ஆனால் அப்படி அடிப்பது தமிழ் படங்களில் 'ஜோக் ' !
- இன்னொரு மோசமான போக்கு என்னவென்றால் ,ஏமாற்றி ஒருவரை எதிலாவது மாட்டி விடுவது நகைச்சுவையாக கருதப்படுவது தான் .ஒரு படத்தில் மின்சார மோட்டார் ஒன்றை சரிசெய்து கொண்டிருக்கும் ஒரு நடிகரை ,இன்னொரு நடிகர் மின்சாரத்தை பாய விடுகிறார் .உடனே அவர் அலறுகிறார் .என்ன ஒரு 'ஜோக் ' ! இதை எப்படி சிரிப்பாக கொள்வது ? அப்பாவிகளை பிரச்னையில் மாட்டி விடுவது நல்ல நகைச்சுவையா ?
- ஆட்களை அசிங்கமாக வருணித்து பேசுவது அடுத்த நகைச் சுவை !'போண்டா தலையா ,உன் கரடி மூஞ்சிக்கு ,தவக்களை ,போன்ற சொற்கள் எல்லாம் 'ஜோக் ' தானா ?சிந்திக்க வேண்டும் .
- அடுத்தது ,பெரியவர்களை அவமதிப்பது ,ஆசிரியர்களை ஏமாற்றுவது போன்ற காட்சிகள் 'நகைச் சுவையாக, வரம்பில்லாம்மல் காட்டப்படுகிறது .இவைகள் பார்ப்பவரின் மனதை நிச்சயமாக பாதிக்கும் என்பதில் ஐயமில்லை .