Sunday, 18 May 2025

அன்னையர் தினத்தில் ஒரு மழலையின் அழுகுரல்!

 அம்மா !அம்மா! நீ எங்கே? 

அம்மா !அம்மா! நீ எங்கே?

அழுது அழுது ஓய்ந்து  விட்டேன்! 

உன்னைக்  காணவில்லை!

 காலையிலே கண் விழித்தேன்!

 உன்னைக்  காணவில்லை!

பாலுக்காக  அழுதேன்!

அழுகுரல் கேட்டதும் ரவிக்கையே நனைந்து விடுமாம் !

பால் எல்லாம் துணியில் ஒழுகுமாம்!

சொல்வார்கள் பாட்டிகள் !

ஆனால் இப்போது என் அழுகையை கேட்டு,

பால் கொடுத்தது கூட நீ இல்லை !

அதற்கு நீ நியமித்த  பணிப்பெண் !

'சீக்கிரம் பால்குடி சனியனே!

சீரியல் பார்க்க வேண்டும் எனக்கு!'

பணிப்பெண்ணின் அதிகார குரல்!

எங்கே போய்விட்டாய் அம்மா?

 என்னை விட உனக்கு அப்படி  என்ன அம்மா முக்கியம்?

 காலையிலே உதட்டு சாயம் பூசிக்கொண்டு 

பேருந்துக்கு முந்தியடித்து ஓடினாயே! எதற்கம்மா?

 என்னை விட என்னம்மா அப்படி முக்கியம்?

எதற்கம்மா  ஓடுகிறாய்?

எல்லாம் உனக்காகத்தான்! 

என்றெல்லாம் நீ சொன்னால்  நான் நம்ப மாட்டேன்! 

நீ நன்றாக படிப்பதற்கு தான் நான் பணம் சம்பாதிக்கிறேன்!

என்பதெல்லாம் வேண்டாம்,கேட்டு சலித்த கதை!

 எனக்கு அதெல்லாம் வேண்டாம் அம்மா !

அதற்குத்தானே அப்பா இருக்கிறார்!

 எனக்கு நீ தான் வேண்டுமம்மா !

உன் அணைப்பு வேண்டுமம்மா! 

நிலவை காட்டி ஊட்ட வேண்டும் அம்மா !

நீ முழு நேர தாயாக எனக்கே எனக்காய்  வேண்டும்! 

பணத்திற்காக ,என்னை தவிக்க விட்டு விட்டு 

 பகலில் நீ எங்கும்  போக வேண்டாம் அம்மா!

எனக்காக படைக்கப்பட்டவள் நீ அம்மா!

பேணுபவள் என்பதால்தான் உன் பெயர் பெண்!

உன்னிடம் தான் அம்மா பால் புட்டி உள்ளது !

உனக்குத் தெரியுமாம்மா  மனித இனம் பாலூட்டி இனமென்று!

பின்னர் எனக்கு பாலூட்டாமல் எங்கே சென்றாய் அம்மா!

அப்பாவும் பாலூட்டி இனம் தான் என்றாலும் 

அவரால் பாலூட்ட முடியாது அம்மா!

அப்பாவின் அணைப்பில் பால் கிடைக்கவில்லை!

 ஆனால் அவர் நெஞ்சின்  ஈரம் எனக்குத் தெரிந்தது!

பகுதி நேர தாயாக ,பகல் நேரம் பக்கத்தில் இல்லாமல்

 நான் தூங்கிய பின் கொஞ்சும்  தாயாக, எனக்கு வேண்டாம் அம்மா நீ !

எனக்கு தாயாக நீ பெருமை கொள்ளாமல்

 ஓட்டம் ஓடி சாதிக்கிறாய்!

 பாட்டு பாடி கைதட்டல் வாங்குகிறாய் !

நன்றாக நடித்து நான்கு கோடி வாங்குகிறாய் !

காவல்துறை கால் சட்டை போட்டுக் கொண்டு

 நேரம் பாராமல் நின்று கொண்டு உழைக்கிறாய்!

நேற்று நான்  பார்த்தேன் உன்னை டிவியில்! 

இங்கு என் வேதனை  தெரியாமல் ,பசி புரியாமல் 

 சிவப்பு பேண்ட் போட்டுக்கொண்டு,சிரித்துக்கொண்டே

 சிங்கப் பெண்  விருது பெற்றது நீ தானே  அம்மா ?

ஆண்டவர் பெண்களை இதற்காகவா படைத்தார் ?

வேலை செய்ய தான்  ஆண்களை படைத்திருக்கிறாரே !

ஆண்களால் குட்டி போட்டு பாலூட்ட முடியாது  என்றுதானே 

ஆண்டவர் பெண்களைப் படைத்திருக்கிறார் அறிவாயா அம்மா ?

படைத்தது, குட்டி போட்டு, பாலூட்டி, குடும்பத்தைப் பேணுவதற்கு!

 அதை விட்டுவிட்டு எங்கு போய் சாதனை புரிகிறாய் ?

யாருக்காக சாதனை  புரிகிறாய் ?

என்னை அழவிட்டுவிட்டு ,யாருக்காக உழைக்கிறாய் ?

சொல்லம்மா சொல்!

உன்மேல், உன் அன்பின் மேல், உன் அணைப்பின்  மேல் 

எனக்குத் தான் அம்மா முதல் உரிமை !

வா அம்மா வா !

வீராங்கனையாக அல்ல !நடிகையாக அல்ல! தலைவியாக அல்ல !

நல்ல ஒரு தாயாக மனம் திரும்பி வா!

இது ஆண்டவன் கட்டளை அம்மா !

வா அம்மா வா! தாயாக திரும்பி வா!

நான் தூங்கும் முன் வா!

ஆண்டவன் அளிப்பார் உன் அன்புக்கு விருது !

தாய்மைக்கு உயரிய விருது !

நானும் அளிப்பேன் கட்டி பிடித்து 

கட்டி  முத்தம் ஒன்று !

விலை மதிப்பற்ற 

 அது ஒன்று போதும்  அம்மா உனக்கு!

 வா திரும்பி வா அம்மா !

அழுகையுடன் காத்திருக்கிறேன் !

Saturday, 22 February 2025

சட்டத்துக்கு அடங்குமா காம இச்சையின் ஆவி?

 செய்தித்தாள்களை புரட்டினால் தினமும் பல ஒரு காம வெறி குற்றங்கள் அரங்கேறுவது  பதிவாகிறது. மாணவிகளை மனைவிகளாக பார்க்கும் ஆசிரியர்கள், கீழே வேலை பார்க்கும் காவலர்களை காமக்கண்ணோடு பார்க்கும் காவல்துறை மேலதிகாரிகள் ,வாகனங்களில் பெண்களிடம் அத்துமீறல்கள் ,இப்படி எங்கு பார்த்தாலும் தமிழ்நாட்டில் காமக் குற்றங்கள் பெருகி ,இங்கு வாழும் சிறுமிகளையும், பாட்டிகளையும் மற்றும் பெண்களையும் திகில் அடைய வைத்திருக்கிறது.தமிழ்நாட்டில் பெருகி  வரும் காமவெறி  குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், சமீபத்தில் தமிழக அரசு பாலியல் குற்றங்களுக்கு தண்டனை அதிகரித்து சட்டம் இயற்றி இருக்கிறது.இதன்  முக்கியமான அம்சங்கள் இதோ :


தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்ன?

இந்த  சட்டம், அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை  கட்டுப்படுத்துமா? இந்த சட்டத்தின்  பின்னணி என்ன? பாலியல் குற்றங்கள் ஏன் தமிழ்நாட்டில் மட்டும்  அதிகம் நடக்கிறது ?தமிழ்நாட்டில் மட்டும் ஏன் PERVERTED CRIMES , அதாவது மனப்பிறழ்வான பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கிறது?தமிழ்நாட்டில் என்று அதற்கு சிறப்பான காரணங்கள் உள்ளனவா?அப்படி என்றால் ,அதற்கு உள்ளார்ந்த காரணம் என்ன? இவைகளை  எல்லாம் இப்பொழுது ஆய்ந்து பார்ப்போம்.

முதலில் இந்த சட்டத்தின் பின்னணி என்று என்ன என்று பார்ப்போம் . தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை அரசு உன்னிப்பாக கவனித்து ,அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று எண்ணி இயற்றியது அல்ல இந்த சட்டம். சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் நடந்த ஞானசேகரன் வன்புணர்வு குற்றத்தினால்  ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பை அடக்குவதற்காக கொண்டு வந்த சட்டம் தான் இது என்பது தான் பல  அரசியல் ஆய்வாளர்கள் கருத்து.

 அது எப்படியோ,வலுவான  ஒரு சட்டத்தை கொண்டு வந்தாகி விட்டது. இந்த சட்டத்தை கொண்டு பாலியல் குற்றங்களை குறைத்து அடக்கி  விட முடியுமா?இல்லையா ?முதல் கேள்வி ,இந்த  சட்டத்திற்கு அடங்குமா காமவெறி/ இச்சையின் ஆவி?

தவறான புரிதல் ! தவறான தீர்வு !                                                                            இதை விளக்குவதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு பார்க்கலாம். ஆண்களை அதிகமாக பாதிக்கும் ஒரு நோய் 'சிறுநீர் தட தொற்று'. ஆங்கிலத்தில் இதை Urinary Tract Infection என்று சொல்வார்கள். இந்த தொற்று ஏற்பட்டால் சிறுநீர் சொட்டு சொட்டாக வரும் .சிறுநீர் கழிக்கும் போது,ஒரே வலியாக இருக்கும் .இதை ஏற்படுத்துவது ஒரு வகை பாக்டீரியா. இதில் பல வகை பாக்டீரியாக்கள் உள்ளது. அதில் எந்த குறிப்பிட்ட பாக்டீரியா இந்த தொற்றை உருவாக்கியது என்பதை முதலில் பகுத்தறிய வேண்டும்.அந்த குறிப்பிட்ட பாக்டீரியாவை கொல்லும் திறன் கொண்ட நுண்ணுயிர் கொல்லி மருந்தை உட்கொண்டால் தான் அந்த பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டு நோய் தீரும்.இதற்கு பலவிதமான ஆன்ட்டி பயோடிக்  நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் உள்ளன. ஆனால், அந்தத் தொற்று எந்த கிருமியால் உண்டாகி இருக்கிறது என்று கண்டுபிடித்து அதை கொல்லும் நுண்ணுயிர் கொல்லி மருந்தை சாப்பிட்டால் மட்டும் தான் போகும். .இல்லாவிட்டால் நீங்கள் எத்தனை மருந்து சாப்பிட்டாலும் அந்த கிருமிகள் சாகாது .தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கும் .ஆக, ஒரு நோயின் சரியான  காரணம் என்ன என்று கண்டுபிடித்தால்  தான் அதை  குணப்படுத்த முடியும் . இல்லை என்றால் குருட்டு வாக்கில்  மருந்து கொடுத்து  அது .குணமே ஆகாது .

அதேபோலத்தான்  இந்த பாலியல் குற்றங்களும்  .என்ன காரணத்தினால் நடக்கிறது என்பதை  தெரியாமல் ,அதற்கு இதுதான் மருந்து என்று கூறுவது சரி அல்ல  என்பது சமூகவியலாளர்கள் கருத்து.

தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை ஆராய்ந்து பார்த்த சமூகவியலாளர்கள்,தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களுக்கு  கீழ்க்கண்ட காரணங்களை பட்டியலிடுகிறார்கள்.அவற்றை ஒவ்வொன்றாக இப்போது அலசுவோம்:

  1. தமிழ்நாட்டில் நிலவும் குடி மற்றும் போதை பொருட்கள் பயன்பாடு                  தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றுதான் அரசே மதுவை விற்று அதனால் லாபம்  பார்க்கிறது.பொங்கலுக்கு மட்டும் 434 கோடிக்கு  மது விற்பனை நடந்திருக்கிறது. மது விற்பனைக்கு ஒரு இலக்கு நிர்ணயித்து அதை செயல்படுத்தும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.இதைத் தவிர தற்போதைய தமிழ்நாட்டில்  போதைப் பொருள்கள் புழக்கம் மிகவும் அதிகரித்து, ஒரு கட்டுப்பாடு இல்லாமல் காணப்படுகிறது .தமிழ்நாட்டில் நடக்கும் பல பாலியல் குற்றங்களுக்கு பின்னணியில் முக்கியமாக மதுவும், போதை பொருட்களும் அதிகமாக பங்கு வகிக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இதை குறித்த புள்ளி விவரங்கள் நம் கையில் இல்லாவிட்டாலும், நாம் தினமும் வாசிக்கும் செய்திகளில், பல பாலியல் குற்றங்கள் மது போதையில் மற்றும் போதை  பொருட்கள் பயன்பாட்டினால் தான் நடக்கிறது என்பது தெளிவு. இப்போது  இயற்றப்பட்டிருக்கும் சட்டத்தில்,மது,போதை பொருளை எடுத்துவிட்டு, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு என்று தனியாக அதிகரிக்கப்பட்ட தண்டனை என்று ஒன்றும் இல்லை. அதைப்பற்றி இந்த சட்டத்தில் பேசப்படவே இல்லை என்பதை  சமூக செயல்பாட்டாளர்கள்  சுட்டிக் காட்டுகிறார்கள்.
  2. காமவெறியூட்டும் காட்சிகள் மற்றும்  பாடல்கள் தடை                                    இரண்டாவதாக ,தமிழ் திரைப்படங்களிலும் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்,மற்றும் சமூக ஊடகங்களிளும்  ஒளிபரப்பப்படும் காணொளி(reels ) போன்றவைகளிலும், எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் விரும்பியபடி காம வெறியேற்றும் காட்சிகளை யாரும் போடலாம். அதற்கு எந்தவித அரசு கட்டுப்பாடும் கிடையாது .பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் பெண்கள் கவர்ச்சி படத்தை போடுவது சமூக ஊடகங்களில் இப்போது பரவலாக வாடிக்கையாக வைத்தது விட்டது. BMW  கார் கம்பெனி எப்படி உருவாகியது என்று அதன் சரித்திரத்தை போட்டுவிட்டு, அதன் கீழே ஒரு கவர்ச்சிகரமான பெண்ணை போடுகிறார்கள் .இதை யாரும் கேட்பதும் இல்லை, எந்தவித தடையும் இதற்கு கிடையாது .மாறாக இந்த காட்சிகளுக்கு விருப்பங்கள் LIKES  நிறைய கிடைக்கின்றன. திரும்பத் திரும்ப போடுகிறார்கள். பிறந்த நாள் வாழ்த்து எனக்கு தெரிவியுங்கள் என்று சொல்லி கவர்ச்சியான பெண்களின் படங்களை போடுகிறார்கள் .இவைகள் எதுவும் எந்தவிதமான கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டது அல்ல. ஆனால், இவைகள் இளம் வாலிபர்களின் நெஞ்சினிலே காமத் தீயை மூட்டி அவர்களை ஒரு காம வெறியனாக மாற்றுகிறது என்பது சமூகவியலாளர்களின் கருத்து. அதிலும் குறிப்பாக திரைப்படங்களில் வரும் 'ஐட்டம் சாங் 'என்று சொல்லப்படும் காம களியாட்டங்கள் மிகவும் இந்த வெறியை கூட்டும். இதன் விளைவாக, இவ்வாறு வெறியேற்றப்பட்ட ஆண்கள் ,அந்த வெறியை  எப்படி தீர்ப்பது என்று என்ற எண்ணத்திலேயே சாலைகளில் அலைந்து கொண்டிருப்பார்கள். வெறியேற்றியது தமன்னாவாக,சமந்தாவாக  இருக்கலாம். ஆனால் வெறியை  தணிப்பதற்கு,அந்த  பாவம் செய்த தமன்னா கிடைக்க மாட்டார் !வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு பாவமும் செய்யாத சிறுமியோ அல்லது இருளில் தனியே நடந்து கொண்டிருக்கும் ஒரு பாட்டியோ தான் எளிதாக கிடைப்பார்கள்! உடனே இவர்கள் அவர்களிடம் தங்கள் காம வெறியை தீர்த்துக் கொள்கிறார்கள்.பெண் சமத்துவத்தில் மேலை நாடுகளை இந்தியா பின்பற்றினாலும், மேலை நாடுகள் போல, காமவெறி பாலியல் சேவை மையங்கள் இந்தியாவில் கிடையாது.இந்தியாவில் சட்டப்பூர்வமான விபச்சார விடுதிகளும்  கிடையாது .அதை அனுமதிக்கவும் மாட்டார்கள். அனுமதி இல்லாமல்,மசாஜ் சென்டர் போன்ற போன்ற வேறு பெயர்களில் நடத்திக் கொண்டிருக்கும் சிலரையும்  உடனே கைது செய்வார்கள் .ஆக ,காம வெறியை தீர்த்துக் கொள்ள,அப்படி ஒரு வழியும்  இந்தியாவில் இல்லை.ஆதலால்,காமவெறியூட்டப்பட்ட இளைஞர்கள், கிழவர்கள், மொத்தத்தில் ஆண்கள் எல்லோரும், கிடைத்த எளிதான வழியில் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வார்கள்..சில சமயம் கிடைக்காத பட்சத்தில், சிலர் தன் சொந்த வீட்டிலேயே,சொந்த  மகளிடம்  கூட தீர்த்துக் கொண்ட கேவலமான செய்திகள் கூட உள்ளது. அந்த அளவு கட்டுப்படாத  பலமானது காமவெறி ஆவி.இதை சட்டத்தினால் நிச்சயமாக கட்டுப்படுத்த முடியாது என்பது ஆவிகளை பற்றி தெரிந்தவர்களின் ஆழமான கூற்று.
  • அப்படியென்றால்,எப்படித்தான் இந்த காம ஆவியை கட்டுபடுத்துவது ?                                                                                                              ஆண்களின் பார்வையை பற்றி சமீபத்திய ஒரு ஆராய்ச்சி முடிவு  வந்திருக்கிறது. அது  என்னவென்றால், சராசரியாக ஒரு ஆண் தன்னுடைய வாழ்நாளில் கிட்டதட்ட ஒரு வருடம் பெண்களை இச்சைக் கண்ணோடு உற்று நோக்குவதிலேயே கழிக்கிறான் என்பதுதான் இந்த செய்தி !இதை இங்கு  இளைஞர்கள் 'சைட்' அடிப்பது என்று அவர்களுடைய மொழியில் சொல்வார்கள் . இது இயற்கையிலேயே நடக்கிறது.இது  ஆணின் இயற்கை கடமை. ஒரு தகுந்த பெண்ணை தேடுவது ,அவளுடன் உறவு கொள்வது, பின்னர் குழந்தை பெறுவது என்ற ,இனப்பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட  இயற்கை உந்தல்  ஒன்றாகும் .இந்த இயற்கையின் உந்துதலை சட்டம் போட்டு எப்படி தடுக்க முடியும் ?அப்படி தடுப்பது அறிவுபூர்வமாக சரியா? ஒரு பெண்ணை பின் தொடர்வது என்பது ,ஆண்  கணக்கில்,தனக்கு ஏற்ற துணையை  தேடுவதன் ஒரு முயற்சியாகும் . ஆண் பெண் காதல் வாழ்க்கையில் ,அது இன்றியமையாத  ஒரு அங்கமாகும்.அதை சட்டப்படி குற்றம் என்றால் ஒரு ஆண் தனக்கு ஏற்ற துணையை எப்படி தேட முடியும் ?என்பதே இனப்பெருக்க விஞ்ஞானிகளின்  கேள்வி.பெண்களின் காம இச்சை  என்பது அவர்களுடைய மாதவிடாய் நின்ற பிறகு பொதுவாக தணிந்து  விடுகிறது. ஆனால், ஆண்களுக்கு அப்படி அல்ல. அவர்கள் உயிர் வாழும் கடைசி நாள் வரை இந்த உந்துதல் Masculinity இருந்து கொண்டே இருக்கும் என்பது விஞ்ஞானம்.       இந்த சூழ்நிலையில் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த சில வழிகள் தான் வேலை செய்யும் .அவைகள் என்னென்ன என்று பார்ப்போம்:                                                                                                                             X முதலாவதாக இச்சை  என்பது ஒரு பயங்கரமான ஆவி .அதை கட்டுப்படுத்த வேண்டுமானால் அதற்கு தீனி போடக்கூடாது என்பதை நாம் உணர வேண்டும்.காமவெறி ஊட்டும்  பாடல்களையோ அல்லது  காட்சிகளையோ  தடை செய்ய ஆவன  செய்ய வேண்டும் .இப்போது எளிதாக அவைகள் கிடைக்கிறது . ஆக, காம வெறி ஒவ்வொரு நிமிடமும் தீனி போட்டு வளர்க்கப்படுகிறது.24 மணி நேரமும் காமத்தை பற்றிய பேச்சு, ஆட்டம் ,கூத்து: இது போதாது என்று 'ஹேப்பி ஸ்ட்ரீட் 'என்று ஆண்களும் பெண்களும் தெருவில் கூத்தடிப்பது ,இப்போது தமிழ்நாட்டில்  மிகவும் சாதாரணமாக நடக்கிறது. இதுபோல் நிகழ்ச்சிகள் கர்நாடகாவிலோ , கேரளாவிலோ ,ஆந்திராவிலோ நடப்பது போல கேள்விப்படவில்லை.இந்த ஆபத்தான போக்கை மாற்றாவிட்டால்,பெருகிவரும் பாலியல் குற்றங்களை எந்த முறையிலும் குறைக்க முடியாது என்பது சமூக ஆர்வலர்கள் கருத்து . 
  •   இரண்டாவதாக CIVIL LAW என்று சொல்லப்படும் உரிமை இயல் ச ட்டத்தில் ஒரு கொள்கை உள்ளது. அது என்னவென்றால், ஒரு குற்றம் நடப்பதற்கு அந்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்திருந்தால், அதை ஆங்கிலத்தில் contributory negligence என்று சொல்வார்கள். தமிழில் 'பாதிக்கப்பட்டவரின் பங்கு' என்று சொல்லலாம். இந்தக் கொள்கையின் படி ,ஒரு குற்றம் நடப்பதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்டவர் ஏதாவது பங்களிப்பு செய்திருந்தால், அதை, குற்றத்தை தீர்மானிக்கும் போது/ தீர்ப்பு சொல்லும் போது கணக்கில் கொள்ள வேண்டும் என்பதே.இதை எளிதாக  விளக்க வேண்டும் என்றால் ,ஒரு விபத்தினால் பாதிக்கப்பட்டவர் ,சாலை நடுவே தூங்கிக் கொண்டிருந்தார்,என்று வைத்துக் கொள்வோம் ,அவர் மேல் ஒரு வாகனம் ஏறி அவர் இறந்துவிட்டார் என்றால், பாதிக்கப்பட்டவர் சாலையின் நடுவில் படுத்து இருந்ததால் தான் இந்த சம்பவம் நடந்தது, ஆகவே வாகன ஓட்டியின் மேல் முழுவதுமாக குற்றம் சாட்ட முடியாது. இதே சம்பவம் பாதிக்கப்பட்டவர் ,சாலையின் நடைமேடையில் படுத்திருந்தார் என்றால் நீதி அரசரின் குற்றத்தின் மேல் உள்ள பார்வை  முற்றிலும் மாறும் என்பதே.                                                                                                                 இந்தக் கொள்கையை அமுல்படுத்தினால், பெண்கள் எந்த நேரத்திலும் எங்கும் போகலாம் என்ற சுதந்திரம் பாதிக்கப்படலாம். அது ஆண்களுக்கும் பொருந்தும் என்பதை நாம் மறக்க கூடாது. எடுத்துக்காட்டாக ஒரு ஆண் துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்திற்குள் சுதந்திரமாக நுழைந்து, அதனால் அவன் சுடப்பட்டான் என்றால் ,சுட்டவர் மேல் குற்றமில்லை. ஏனென்றால் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் தடையை மீறி சென்றது அந்த ஆண் தான். அது போல பெண்கள் எந்த இடத்தில் எந்த நேரத்தில் இருக்கலாம் என்பது அவர்களுடைய தேவையை பொருத்தது. எடுத்துக்காட்டாக, இரவு நேரத்தில் அலுவலக வேலை நிமித்தமாக ஒரு பெண் நிறுவன வாகனத்தில் செல்கிறாள்.அப்போது ஒரு பாலியல் குற்றம் நடக்கிறது என்றால் அந்த குற்றத்தை ஒரு பாலியல் குற்றமாக கருதலாம். ஆனால், ஒரு பெண் தானாகவே சிவப்பு விளக்கு பகுதிக்குள் சென்று ,அதை வேடிக்கை  பார்க்கப் போனேன் என்று சொல்லி இருக்கும் நேரத்தில், அவள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டாள் என்றால், இந்த (contributory negligence) 'குற்றத்தில் பங்கு' என்ற கொள்கை பொருந்தும் .அதுபோல காதலனுடன்  ஒரு பெண், தனியாக ஆபத்தான ஒரு காட்டுப் பகுதிக்குள் சென்று காதல் செய்து கொண்டிருக்கும் போது ,அங்கு வரும் வேறு ஆண்களால் அவளுக்கு பாலியல் துன்புறுத்தல் நேருகிறது என்றால், அதையும் வீட்டிற்குள் பத்திரமாக இருக்கும் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிலையும் ஒன்று என்று சொல்ல முடியாது.ஆக ஒரு பெண் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அவளை அரசு பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல என்பது சமூகவியலாளர்கள் கருத்து .காவல்துறையின் உயர்மட்ட அதிகாரியாக இருந்தால் கூட அவர்களுக்கு என்று ஒரு RISK PROFILE என்று சொல்லப்படும் 'ஆபத்து கணிப்பு ' என்று உள்ளது .எடுத்துக்காட்டாக, மாநிலத்தின் முதன்மை காவல்துறை அதிகாரி நள்ளிரவு தனியாக ஒரு சாலையில் செல்கிறார் என்றால் , அவருக்கு பல எதிரிகள் இருப்பார்கள், அவரைத் தாக்க  முற்பட முயற்சிக்கலாம் . அதையெல்லாம் அவர் கருத்தில் கொண்டு அங்கு போவதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும். அது போல தான் பெண்களும் .ஆண் நண்பர்களை நம்பி, அவர்கள் கொடுக்கும் தனியான விருந்துகளுக்கு செல்வது, அவர்கள் கொடுக்கும் பானத்தை நம்பி குடிப்பது என்பதெல்லாம் குற்றத்திற்கு இவர்கள் பங்களிப்பு என்ற கணக்கில் வரும். அப்படி போவது என்றால் அதனால் ஏற்படும் risk  assessment  'ஆபத்து கணிப்பு' செய்து அவர்கள் போக வேண்டும். ஏதாவது ஒன்று நடந்தால், அழைத்த ஆண் நண்பர்கள் மேல் பழி  போடுவது சரியல்ல.ஆண்களின்இயற்கையான  பாலியல் குணமே ,  பெண்களைக் தங்களிடம் கவர்ந்து, அவர்களுடன் உறவு கொள்வது தான். இது .அவர்களுடைய இயல்பு .ஆண்களுடைய இந்த  அடிப்படை குணத்தை  புரிந்து கொள்ளாமல்,அவர்களை நம்பி,பெண்கள்  தனியாக செல்வது தவறு. ஆண்களுடன் துணையின்றி பெண்கள் போகும்போது,அவர்கள் எது நடந்தாலும் சம்மதம் தான் என்று சொல்வதற்கு சமம் .சூழ்நிலைக்கு ஏற்ப  சரியான முடிவு எடுக்க அவர்களுக்கு ஞானம் வேண்டும்,என்பது  சமூக வியலாளர்கள் கருத்து.ஆக காம வெறி  குற்றங்களுக்கு ஆளான பெண்கள், 18 வயதிற்கு கீழே உள்ளவர்களானால் , அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு தங்களுடைய பெற்றோர் சம்மதம் பெற்று தான் சென்றார்களா இல்லையா என்பதை கேட்டு, இல்லை என்றால் அவர்களை எச்சரித்து கண்டிக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால், நடந்த குற்றத்திற்கு அவர்களும் ஒருவகையில் பங்களிப்பு செய்தி ருக்கிறார்கள் என்று கருத வேண்டும். இதற்கான சட்டதிருத்தங்களை  அரசு மேற்கொள்ள வேண்டும். காவல்துறையின் கட்டுப்பாட்டுகளை பெண்களும் மதித்து நடக்க வேண்டும் என்பதும் இதில் முக்கியம்.  
  • எந்த குற்றத்திற்கும் உடந்தையாக இருந்தவர்களையும், தூண்டி விட்டவர்களையும் சட்டம் விடுவதில்லை .அவர்களை accessory to  crime என்பார்கள் .அந்த முறையில் காம வெறி ஏற்றி ,ஒரு குற்றத்தை செய்ய வைக்கும் கவர்ச்சி நடிகைகள், சமூக ஊடகங்களில் கவர்ச்சியாக படங்களை வெளியிடுபவர்கள், இவர்களுக்கும் தண்டனை கொடுக்கும் படியாக சட்டத்தை திருத்த வேண்டும் .ஒரு காம வெறி பாலியல் குற்றம் நடப்பதற்கு முக்கியமான பங்கு இவர்களுக்கும் இருக்கிறது என்பதை யாரும் மறக்க முடியாது என்கிறார்கள் சமூக ஊடகவியலாளர்கள் .
  • இன்னொரு முக்கியமான புள்ளி என்னவென்றால், திரைப்படத்துறை,Glamour என்ற  கவர்ச்சித்துறை,நிர்வாண  புகைப்படத்துறை, இவற்றில் எல்லாம் வேலை செய்யப் போகிறவர்கள், அங்கே என்னென்ன தேவைகள் உள்ளன, என்னென்ன ஆபத்து கணிப்பு உள்ளது என்பதை எல்லாம் அறிந்து தான் நுழைய வேண்டும். நுழைந்த பின் அவர்கள் பாலியல் குற்றச்சாட்டு அளிப்பது ஒத்துக் கொள்ளக் கூடியது அல்ல .அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த துறையை விட்டு அவர்கள் வெளியேறுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை.வேலைக்கு ஒத்துக் கொண்டு பின்னர் புகார் அளிப்பது சரியல்ல.கருவாடு வியாபாரம் செய்தால் நாற்றம் எடுக்க தான் செய்யும்! எனக்கு வியாபாரமும் வேண்டும், ஆனால் நாற்றம் கூடாது என்று சொல்ல முடியாது! வியாபாரம் வேண்டாம் என்றால் வெளியே சென்று விடலாம். அங்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் 100% தெளிவான பாதுகாப்பு உள்ளது என்று யாருமே உத்தரவாதம் தருவதில்லை. அவர்களுடைய துறை அப்படி. இரவும் பகலும் படப்பிடிப்பு நடக்கும் .ஒரே இடத்தில் தங்க வேண்டியது இருக்கும்.வெவ்வேறு ஊர்களுக்கு பயணம் செல்ல வேண்டியிருக்கும். படுக்கை அறை காட்சிகள், குளியலறை காட்சிகள் போன்றவைகள் எடுக்கப்படும் .அது  நடித்துக் காட்டப்படும். அதையெல்லாம் எந்த பெண்ணும் ,எப்போது வேண்டுமானாலும் அவள் நினைத்தால், பாலியல்  குற்றமாக மாற்ற வழி உள்ளது .ஆதலால் ,பட  தயாரிப்பாளர்கள்,முதலில் பெண்களிடம் நிபந்தனைகளை பட்டியலிட்டு,சம்மத  கையெழுத்து வாங்கிக் கொண்டு, அதன் பின்னர் தான் நடிக்க விட வேண்டும் என்பதும் சமூக வியலாளர்கள் கருத்து.    
  • ஒரு பெண் ,ஒரு ஆணிடமோ அல்லது பொது வெளியிலோ தன் கவர்ச்சியை வலிந்து  காட்டினால் ,அதன் இயல்பான பொருள் என்ன? விலங்குகளை கவனித்து பார்த்தால் இது தெரியும் .அவைகள் யாருடன் உடலுறவு கொள்ள நினைக்கிறதோ ,அந்த எதிர் பால்  விலங்குக்கு தன்னுடைய கவர்ச்சியை காட்டி, அதை தன் பால் ஈர்க்கும். இப்படித்தான் ஆண் மயில்கள் அழகாக  தோகை விரித்து ஆடி, தன் அழகைக் காட்டி பெண் மயில்களை கவரும். அதுபோல மனித இனத்தில், ஒரு பெண் தன்னுடைய கவர்ச்சி பாகங்களை ஒரு ஆணிடம் காட்டினால்  அந்த ஆணை , தான் உறவு கொள்ள ஆசைப்படுகிறாள் ,அழைப்பு விடுக்கிறாள் , அதற்காக அவனை ஈர்க்கிறாள் என்று பொருள். அவர்கள் அதற்கு தயாராக இருப்பதாக தான் பொருள் கொள்ள வேண்டும் .அப்படி அவர்கள் ஏற்றிவிட்ட காம வெறியை , அவர்களால் தீர்த்து வைக்க முடியவில்லை,ஆதலால் ,அந்த காமவெறி ஏறிய ஆண் வழியில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒன்றுமறியாத அப்பாவி  சிறுமியிடம் வன்புணர்வு செய்தால் ,அதற்கு பொறுப்பு இந்த கவர்ச்சி காட்டிய பெண்தான் ,என்பது சமூக சிந்தனையாளர்கள் கருத்து .ரோஹிணி மொல்லேட்டி ஆடும் ஒரு பாட்டின் வரிகள் இதை சொல்கிறது :"ஆசை அதிகம் வச்சு மனசஅடக்கி வைக்கலாமா என் மாமா,ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா,"  அதாவது, ஆளை மயக்கி விட்டு ,அழகை  ஒழித்து வைக்க கூடாது என்கிறது இந்த பாட்டு. ஆக, பொதுவெளியில் கவர்ச்சி காட்டும்  பெண்களை,காம குற்றங்கள்  செய்யத் தூண்டியதாக தண்டிப்பதற்கு சட்டத்தில் ஒரு இடம் வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கருத்து. காம அழைப்பு விடுத்தவர்களால் அந்த காம வெறியை  தீர்த்து வைக்க முடியவில்லை என்ற காரணத்திற்காக, காமவெறிக்கு உள்ளானவர்கள் ,அதை வேறு வழியில் தீர்த்துக் கொண்டு, அதனால் ஒரு பாலியல் குற்றம் ஏற்பட்டால் ,அந்த குற்றத்திற்கு, இந்தப்  பெண்களும் உடந்தை  என்று சட்டத்தில் கருதப்பட வேண்டும். அதிகமாக, அவ்வாறு வெறியேற்றப்பட்ட ஆண்கள், தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகளிடமோ  அல்லது தன் கீழ் படிக்கும் பெண்களிடமோ  அல்லது வயதான பாட்டி போன்றவர்களிடமோ , அவர்களுடைய காம வெறியை தீர்த்துக் கொள்கிறார்கள் . அதன் விளைவாக பாலியல் குற்றங்கள் நடக்கின்றன.ஆதலால் , ஆபாச காணொளிகளை அரசு  தடை செய்ய வேண்டும். நடிகைகளின் ஐட்டம் பாடல்கள் தடை  செய்ய வேண்டும்.காமவெறி குற்றவாளிகளிடம் , எது அவர்களை இதை செய்ய தோன்றியது என்பதை கேட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்களை ,மேற்படி குற்றத்தை தூண்டியதாக கருதி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .   
  • பெண் சமத்துவ போராளிகள் இந்த குற்றங்களுக்கு உடந்தையான வர்களா ?                                                                                                                                                                                இன்று காமவெறி  குற்றங்களுக்கு ஆளாகி கதறிக் கொண்டிருக்கும் சிறுமிகள்,அவர்களின் பெற்றோர்கள்,வயதான பாட்டிகள்  மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள், அவர்களாக இந்த  நிலைக்கு விரும்பி வந்தார்களா அல்லது  மற்றவர்  தூண்டுதலால் தள்ளப்பட்டார்களா என்று சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை புலப்படும். தமிழ் பெண் சமூகம் மிகவும் பாதுகாப்பாக, குடும்பத்தில் ,கட்டுப்பாட்டுடன், அன்புக்கு அடிபணிந்து வாழ்ந்து  கொண்டிருந்தது.அவர்களை பெண் சமத்துவம், அது இது என்று வேண்டாததை பல சொல்லி,தமிழ்நாட்டில் வாழும் தமிழ்நாட்டில் வாழும் மற்ற மொழி சமூகத்தை சார்ந்தவர்கள், இந்த நிலைக்கு  தள்ளிவிட்டு  விட்டு ,இப்போது அதன் பயங்கர விளைவுகளை சந்திக்கும்போது ஒதுங்கி நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை.எல்லா  இடங்களுக்கும் ,எந்த நேரத்திலும்  பெண்களும் சமமாக செல்லலாம் என்று சொல்லும் போது,கூடவே  இந்த ஆபத்து  வரும்,அதை நீங்கள் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும், கற்பை இழந்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை  எல்லாம் அவர்கள் சொல்லவில்லை .இது பெரிய ஆபத்து  அல்ல ,இதை ஒன்றும் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம், சமத்துவத்திற்காக  எதையும் பலி கொடுக்கலாம், ஒரு பெண்ணின் மானம் ,அவளுடைய கற்பு, எதை வேண்டுமானாலும் சமத்துவத்திற்காக பலி  கொடுக்கலாம் என்று வேண்டாத போதனைகளை சொன்ன பெரியவர்கள், பெண் சமத்துவ போராளிகள் இவர்கள் எல்லாம் இப்போது நடக்கும் இந்த காமவெறி குற்றங்களுக்கு,ஒரு வகையில்  உடந்தையாக  செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.அவர்களுடைய  போதனைகள் பெண்களுக்கு ஆபத்தானது, தவறு, பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை உணரும்  தருணம் ,இப்போது வந்து விட்டது.இப்போதும் தமிழர்கள் உணரவில்லை என்றால், இந்த ஆபத்தை, காமவெறி குற்றங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம்,பெண்  சமத்துவத்திற்காக நாங்கள் கொடுக்கும் விலை அது என்று சொல்வது போல் ஆகிவிடும்.அப்படி ஏற்றுக் கொள்பவர்கள் ,பின்னர் கதறக் கூடாது ,காவல்துறையில் புகார் அளிக்கக் கூடாது, நடந்ததை மனதார மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும் .ஏனென்றால், அது பெண் சமத்துவத்தின்  விலை என்று கொள்ள வேண்டும்.இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த பெண் சமத்துவ போதனையாளர்கள் யாரும் இதை கடைபிடிப்பதில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்கள்  யாருக்கும்  இந்த குற்றங்கள் எதுவும் நடந்ததில்லை என்பதுதான்.
  • பாலியல் சேவை மையங்கள்!                                                                                   மேற்கத்திய நாடுகளைப் போல,இந்தியாவும் 100%  பெண்கள் சமத்துவத்தை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டோம் .கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் பெண்கள் வியாபித்து இருக்கிறார்கள் .எங்கு பார்த்தாலும் பெண்கள்! எந்த நேரத்திலும் பெண்கள்! எந்த ஊடகத்திலும் பெண்கள் என்று எல்லா அளவிலும் மேற்கத்திய நாடுகளைப் போல இந்தியா ஆகிவிட்டது .ஆனால் ,மேற்கத்திய நாடுகளில் ,ஆண்களுக்கு பாலியல் ஆசை வந்து விட்டால், அதை பல வழிகளில் தீர்த்துக் கொள்ளும் வழிகள் ,அவர்கள்  கலாச்சாரத்திலே  உள்ளது. இதை தவிர சட்டபூர்வமாக தீர்த்துக் கொள்ள, பாலியல் சேவை மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விபச்சார விடுதிகள் உள்ளன. எல்லாவற்றிலும் மேற்கத்திய நாடுகளை பார்த்து செய்யும் இந்தியா ஏன் அவர்களைப் போல் இங்கும் பாலியல் சேவை மையங்கள் ஆரம்பிக்கக் கூடாது ?அப்படி ஆரம்பித்தால், பெருமளவு இந்த காமவெறி குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை யாராலும் மறுக்க  முடியாது .பாலியல் தேவை உள்ள ஆண்கள் பாலியல் சேவை மையங்கள் சென்று தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்றிருக்கும் போது தெருவில் விளையாடும் சிறுமிகள்,வயதான  பாட்டிகள் போன்றவர்களிடம்  அவர்கள் காம வெறியை  காட்டுவதற்கு வாய்ப்பு மிக குறைவு  என்பதே சமூக பார்வையாளர்கள் கருத்து.                                     ==================================================================      குறிப்பு :நம் வீட்டு சிறுமிகளையும் , பெண்களையும் மற்றும் வயதானவர்களையும் பாதுகாக்க, இந்த பதிவை குறைந்தது 10 நண்பர்களுக்கு பகிரவும். இதைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும்  நீங்கள் பதிவிடலாம் .நன்றி .                                                                 

Monday, 2 September 2024

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்--யார் காரணம்?

சமீப காலமாக தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் மிகவும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்னும் செய்தி பெரும் கவலை அளிக்கிறது.பச்சிளம் குழந்தைகளை, தள்ளாடும் பாட்டிகளைகூட , ஏன் சொந்த மகளைக்  கூட காமக்கண்ணோடு பார்க்கும் பயங்கர நிலை தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறது.  ஆசிரியர் மாணவியை, மாணவன் ஆசிரியையை , பாலியல் கண்ணோடு பார்க்கும் பரிதாப நிலை  நிலை பெற்று இப்போது இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
இதற்கெல்லாம்  முக்கிய காரணம் யார் / என்ன? அந்தக் காரணங்களை தமிழர் நாம் உணர்ந்து இருக்கிறோமா? இந்தக் கேள்விக்கு பதில் தருவதற்காக தான் இந்த  ஆழமான ஆராய்ச்சி கட்டுரை.
அறவாழ்வும்  பாலியல் குற்றங்களும்
                                                                                உலகிலேயே அறவாழ்வு என்ற கருத்தியலை கொண்டு வாழும் ஒரே இனம்  தமிழ் இனம் தான்.அப்படி  அறவாழ்வு வாழும் தமிழர்களிடையே, பாலியல் குற்றங்கள் என்பதற்கு எள்ளளவும் இடமே இருந்தது  இல்லை. இதற்கு முதல் சான்றாக,சொல் வளம் மிக்க தமிழ்  மொழியில், RAPE  என்ற ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் இல்லை என்பது ஒன்றே போதும். கற்பழிப்பு, வன்புணர்வு போன்ற கருத்துக்கள் / சொற்கள் எல்லாம் இதற்காக இப்போது இங்கு வாழும் பிராமணர்கள் மற்றும் அண்டை மாநிலத்தவரால் உருவாக்கப்பட்டவையே . சங்க கால இலக்கியங்களில் இந்த வன்புணர்வை குறிக்கும் சொற்கள் எதுவும் கிடையாது. அப்படி குற்றங்கள் தமிழ் சமூகத்தில் நடக்காததால், அதற்கான சொற்கள் தமிழ் அகராதியில் இல்லை. 
                                      மேலும் காதலை கொண்டாடிய தமிழர்கள், காமத்தை என்றுமே கொண்டாடியது இல்லை .பெண்களை காமத்தோடு பார்ப்பது தமிழர்கள் பண்பாட்டில் என்றுமே இருந்ததில்லை.இன்றும் கிராமங்களில் பெண்கள் படித்துறையில் குளித்துவிட்டு அந்த ஈரத் துணியோடு தான் வீடு வரை நடந்து செல்வார்கள். அவர்கள் போகும் வழியில் ஒரு ஒரு கூட்டம் வக்கிர ஆண்கள் அதை பார்க்க காத்திருப்பது இல்லை. அப்படி நடந்து செல்லும் பெண்களுக்கு பாலியல் குற்றங்களும் நடந்ததாக சரித்திரம் கிடையாது.காந்தி ஒரு முறை சொன்னார் ' என்று இந்தியாவில் ஒரு இளம் பெண் நள்ளிரவில் தனியாக பாதுகாப்பாக செல்ல முடியுமா அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான விடுதலை நாள்' என்று.அவருக்குத் தெரியாது தமிழ்நாட்டில் அது எப்போதுமே  அப்படித்தான் என்று .இன்றும் இளம் பெண்கள் நள்ளிரவு நேரத்தில், தனியாக கால்நடையாக, பழனி பாதயாத்திரை செல்வார்கள். வழியில் அவர்கள் ஓய்வு எடுக்க கட்டப்பட்டுள்ள திறந்த வெளி இடங்களில் தான் கண்ணயர்ந்து தூங்குவார்கள் .இதுவரை அவர்கள் யாருக்கும் பாலியல் தொந்தரவு என்று ஒன்று நடந்தது இல்லை.பல நாட்களாக  தொடர்ந்து இரவு பகலாக  சென்னை மெரினா கடற்கரையில் நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில், பல இளம் பெண்கள் இரவில் ஆண்களுடன் சேர்ந்து நிம்மதியாக தூங்கினார்கள். எந்த ஒரு தமிழ் மகனும் ,  எந்த விதமான பாலியல் எண்ணத்தோடும் அவர்களிடம்  நடந்து  கொள்ளவில்லை. மாறாக, அவர்களுக்கு உணவு, நீர், அடிப்படை வசதிகள் எல்லாவற்றையும் நண்பர்களாக,உடன் பிறந்தோராக செய்து கொடுத்தார்கள் என்பது சரித்திரம்.கீழே காணும் கூட்டம் அதற்கு சான்று.
                                                                        (படம் நன்றி -மின்ட்) 
 ஆக தமிழர்கள் பண்பாட்டில் பாலியல் குற்றங்கள் என்பதற்கு துளியளவும் இடமில்லை என்பது தெளிவு. 
                                                    பின்னர் இந்தப் பாலியல் பார்வை ,இப்படியான தூய்மையான தமிழ் சமூகத்தில் எப்படி நுழைந்தது? யாரால் நுழைக்கப்பட்டது? யாரால் இப்போது அது தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது?வாருங்கள், பார்ப்போம்.
                                 இந்தியாவுக்கு 1947ல் விடுதலை  அளித்த ஆங்கிலேயர்கள்,அதே கையோடு அவர்கள் வாழ்ந்த இடத்தையும் ,வீட்டையும்  காலி செய்துவிட்டு,அவர்கள் சொந்த பூமியான  இங்கிலாந்துக்கு போய்விட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டை  ஆண்ட தெலுங்கர்கள், அரச ஆட்சி முடிந்துவிட்டாலும் ,  தமிழ்நாட்டை காலி செய்துவிட்டு அவர்கள் சொந்த பூமிக்கு திரும்பவில்லை.இன்னும் திரும்ப மனதில்லை. இங்கு இன்னும் இருக்கிறார்கள்.அன்று தெலுங்கு மன்னர்கள் அவர்களுக்கு கொடுத்த தமிழர்களின் இனாம் நிலங்களை இன்னும் ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.கிட்டத்தட்ட 1000 க்கு மேலான ஊர், இடம்,தெருப்  பெயர்கள் தமிழ்நாட்டில் இன்னும் தெலுங்கில் தான் இருக்கிறது.போடிநாயக்கனூர், ரெட்டியார்பட்டி, ரெட்டிபாளையம், தெலுங்குபாளையம், கட்டா ரெட்டிபட்டி என்று பல தமிழ்நாடு ஊர் பெயர்கள் தெலுங்கு ஜாதி பெயர்களாகவே  இன்னும் உள்ளது.டால்மியாபுரம் என்ற ஒரே ஒரு வட இந்தியப்  பெயரை, திரும்ப தமிழுக்கு, கல்லக்குடி என்று மாற்ற வேண்டும் என முதல்வர் கருணாநிதி போராடி வெற்றியும் பெற்றார் .ஆனால்,ஏனோ  இந்த தெலுங்கு பெயர்கள் ஒன்றை  கூட அவர் தமிழாக  மாற்ற முயற்சி செய்யவில்லை.இந்த தெலுங்கர்கள் ,சும்மாவும்  இருக்கவில்லை.இங்கு வாழும் பெரும்பான்மையான தமிழர்கள் மேல் இன்னும் ஆதிக்கத்தை செலுத்தி ,தமிழர்கள்  உயரிய பண்பாட்டினை மெல்ல மெல்ல சிதைத்து, போதாதென்று ,  தமிழகத்தை சதியால் ,சாதியால்,பொய்யால் இன்னும்  ஆண்டு கொண்டும் இருக்கிறார்கள்.                                                                                             இந்த தெலுங்கர்கள் பண்பாட்டில், அறம் என்பது அறவே கிடையாது. பெண்களை அவர்கள் காமக்  கண்ணோடு பார்ப்பார்கள்.தேவதாசிகளாக மாற்றுவார்கள்.'பத்மினி படிதாண்டா பத்தினியும் அல்ல: நான் முற்றும் துறந்த முனிவரும் அல்ல 'என்று அடுக்குமொழியில் காமத்தை கக்குவார்கள்.திராவிடம் என்று எங்கு இருக்கிறது என்று கேட்டால் ,பதிலுக்கு அசிங்கமாக பாவாடையை தூக்கி உள்ளே  பாருங்கள் என்றெல்லாம் சொல்வார்கள்.மனைவி, துணைவி, இணைவி என்றெல்லாம் பல பெண்களை  வைத்துக் கொள்வார்கள்  .அவர்களுடைய அந்த சகிக்க முடியாத  காமப்  பார்வையை, தமிழ் சமூகத்திலும் மெல்ல மெல்ல,அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் வழியாக திணித்து விட்டார்கள்.திணித்தும்  கொண்டிருக்கிறார்கள்.
பாலச்சந்தரின் பாலியல் பார்வை!
                                           இந்த விடயத்தில் முன்னோடி ,குறிப்பாக, பாலச்சந்தர் என்ற கன்னடர் தான் ,சமூகத்தில் அங்கும் இங்குமாக மறைமுகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஒன்றிரண்டு பாலியல் குற்றங்களுக்கு நியாயம் கற்பித்து, படங்கள் எடுத்து, அதற்கு பரிசுகளும் வாங்கி இருக்கிறார் .இவர் படங்களில் திருமணம் தாண்டிய உறவு ,வேலைக்காரியிடம் கள்ளத்தொடர்பு, தூரத்தில் வாழும் இரண்டாவது மனைவி ,அவளது குடும்பம், குடும்பப் பெண்கள் காம வெறியில் அலைவது , ஈடுபடுவது போன்ற வேண்டாத, அருவருக்கத்தக்க உறவுகளை அழகாக,கலைநயத்தோடு, அண்டை  மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழர் அல்லாத நடிகர்களை வைத்து நியாயப்படுத்துவார். மணிரத்தினம் என்ற ஒரு பிராமண இயக்குனர்,தமிழர்களுக்கு காமத்தில் ஒரு புதிய பாதையை காட்டினார். அது என்னவென்றால், ஆண்கள் எந்த வயது பெண்ணாக இருந்தாலும் ,அக்கா வயது ,அம்மா வயது, பாட்டி வயது ஆனாலும் ,அவர்களையும்  காமக்கண்ணோடு பார்க்கலாம்/ பார்க்க வேண்டும் என்ற ஒரு புதிய பாதையை காட்டினார். சிறுவர்களை அவர்கள் அக்கா வயதில் உள்ள பெண்களை,' கலக்குது பார் இவ  ஸ்டைலே' என்று பாட வைத்தார் 'ஜென்டில்மேன்' என்ற ஒரு படத்தில்.
(அந்த பாட்டில் வரும் ஒரு காட்சி இது. ஒரு சின்ன பையன் கௌதமியை பார்த்து கொடுக்கும் காம பார்வையை பாருங்கள். அவனிடத்தில் ஒரு 'ஜொள்ளு ' வடிகிறது. எவ்வளவு ஒரு கேவலமான காட்சி!)
                                         டேய் !அவன் உனக்கு அக்கா டா பாவி !
 அதே மணிரத்தினம், ரோஜா என்ற படத்தில் ,அருவி கரையில் பாட்டிகளை காம ஆட்டம் ஆட வைக்கிறார். இவ்வாறாக ஒரு பெரிய காமப் பார்வையையும், காம வெறியையும் தமிழ்நாட்டில் வாழும் தமிழர் அல்லாதவர்கள், தமிழ் சமூகத்தில் மெல்ல மெல்ல விதைத்து, அதை இன்று ஆலமரமாக வளர்த்து விட்டிருக்கிறார்கள். 
                                                         My Perfect Husband  என்று ஆங்கில பெயர் கொண்ட  ஒரு தொடர்  இப்போது வந்திருக்கிறது. டிஸ்னி ஹாட் ஸ்டார் என்ற OTT காட்சி களத்தில் அந்தப் படம்  ஒளிபரப்பப்படுகிறது. அந்தப் படத்தில், மணமாகி,பல  பிள்ளைகள் பெற்ற சத்யராஜ்,பார்க்கும் பெண்கள் எல்லோரிடமும் 'ஜொள்ளு 'விடுகிறார் .பிள்ளைகள் முன்னால் காதல் வசனம் மனைவியிடம் சொல்கிறார்.அவருடைய  பள்ளி நாட்களில் காதல் கொண்ட ஒரு பெண்ணை இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார் . அவர் வேலை பார்க்கும் கல்லூரியில் இருக்கும் எல்லா சக ஆசிரியைகளையும் அவர் பாலியல் கண்ணோடு  பார்ப்பது போல் காட்டுகிறார்கள். ஏற்கனவே பிரேமம் என்ற மலையாள படத்தில், மாணவன் தன்னுடைய ஆசிரியை காதலிப்பது போன்று காட்டிவிட்டார்கள். அதாவது,தனக்கு குரு  நிலையில் இருக்கும் ஆசிரியை கூட காதலிக்கலாம் என்ற ஒரு விஷக் கருத்தை விதைத்து விட்டார்கள். இப்போது,பள்ளிகள் எல்லாம்  காதல் கூடங்களாக  காட்டப்படுகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளை பாலியல்  அத்துமீறல் செய்யும் செய்தி தமிழ்  நாட்டில் மிக சாதாரணமாக மாறிவிட்டது.
                                                   இந்த மாதிரி விஷ கருத்துக்களை  எல்லாம் இங்கு நுழைப்பது தமிழ்நாட்டில், வாழும் அண்டை மாநிலத்தவர் தான் என்பதை குறித்துக் கொள்ள வேண்டும். ஆக ,பாலியல் குற்றங்களுக்கு விதைகளை தூவுவது, காமவெறியை விதைத்து அதற்கு நீர் பாய்ச்சி வளர்த்து விடுவதெல்லாம் ,தமிழ்நாட்டில் பிழைப்பை தேடி வந்திருக்கும் அண்டை மாநிலத்தவர்கள் தான். தமிழ் படங்களின் 75 சதவீத படங்கள் தெலுங்கில் இருந்தும், மலையாளத்திலிருந்து தான் வருகிறது என்பதை மறக்கக்கூடாது.
                                 தமிழர் மரபில் நாயகன், நாயகி என்று இருப்பார்கள்.ஆனால், வில்லன் என்ற ஒரு பாத்திரமே  கிடையாது .சங்ககால இலக்கியங்கள்/ கதைகள் எதிலும் வில்லன் என்ற ஒரு பாத்திரம் இருக்காது.எடுத்துக்காட்டாக கோவலன் கண்ணகி கதையில்  யார் வில்லன்? இப்படி வில்லன் என்று ஒரு பாத்திரத்தை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது அண்டை மாநிலத்தவர் தான். அப்படி வில்லனாக நடிப்பவர்களும்   எல்லோருமே அண்டை மாநிலத்தவர் தான் .எடுத்துக்காட்டாக, எம் .என் .நம்பியாரை சொல்லலாம் .,இப்போது பயங்கரமான தோற்றத்தில் வரும் கிச்சா போன்ற வில்லன்கள் எல்லோருமே மற்ற மாநிலங்களை சார்ந்தவர்கள் தான் என்பதை குறித்துக் கொள்ளவும்.சரி ,இந்த வில்லனுக்கும் ,வளர்ந்து வரும் காம வெறிக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்.
                                             சரி, இப்போது வில்லன் என்றால் யார் என்று பார்ப்போம். வில்லன் என்பவன் பிறவியிலேயே கெட்டவன். நல்லவனுக்கு எதிரி .அதாவது, நாயகனுக்கு எதிரி. வில்லனிடம் ,வன்முறை காமவெறி போன்றவை இயல்பாகவே இருக்கும். காரணமே இல்லாமல் கதாநாயகியை அவன் கற்பழிக்க முயற்சி செய்வான் . ஏனென்றால் அவன் வில்லன் !ஆக, ஒரு வில்லனை கதையில் நுழைத்து  விட்டால், அவனை கொண்டு கற்பழிக்க வைக்கலாம், காம லீலை செய்ய வைக்கலாம், அவனைக் கொண்டு எந்த கொடூரமான காட்சியையும் நியாயப்படுத்தலாம். அதற்காகத்தான் இந்த வில்லன் என்ற ஒரு இறக்குமதி பாத்திரம் தமிழ்நாட்டில் இருக்கும் அண்டை மாநிலத்தவர் கொண்டு வந்திருக்கின்றனர்!
                                                               எம் .என் .நம்பியார் 
                                                                     பி. எஸ் .வீரப்பா

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பின் மை, இவைகள் எல்லாம்  கவலையளிக்கிறது. இவற்றை மாற்ற வேண்டும். ஆனால் சட்டத்தை கொண்டு அது ஒரு நாளும் முடியாது .மரண தண்டனை கொடுத்தாலும் காமவெறி ஒரு நாளும் பயப்படாது. ஏனென்றால் ,அது ஒரு ஆவி. ஆவியை கம்பிகள் பின்னால் போட முடியாது .ஆவிகளை கட்டுப்படுத்த, அறத்தை கொண்டுதான் முடியும்.இதன் முதல் படியாக, பழையபடி தமிழர்கள் தங்கள் அற வாழ்வை நிலை நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் அண்டை மாநிலத்தவர் திணிக்கும் கொள்கைகளை உதறி தள்ள வேண்டும் .வெளிப்படையாக எதிர்க்கவேண்டும் .அதை நாம் உள்வாங்கிக்  கொள்ளக் கூடாது .அதை பரப்பும் அவர்கள் ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும்.அறத்திற்கு எதிரான பரப்புரைக்கு  நம்முடைய எதிர்ப்பை காட்ட வேண்டும் .
தமிழ்நாட்டு அரசியல் ,அற வாழ்வு  வாழும் தமிழர்களால் மட்டும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.அப்படி என்றால் தான் நம் வீட்டு சிறுமிகள், அக்கா, தங்கைகள், அம்மா, மனைவி போன்றவர்களை இந்த காமவெறியிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதை நினைவில் கொள்ள  வேண்டும் .

Sunday, 19 May 2024

தமிழ் இனத்தின் முக்கிய பாதுகாப்பு அரண் என்ன?

 உங்களுக்கு ஒன்று தெரியுமா? தமிழ் மொழிக்கு பலவிதமான சிறப்புகள் உள்ளன என்பது எல்லோரும் அறிந்ததே. அதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், அந்த மொழியை பேசும் தமிழ் இனத்தை அழிவினின்று பாதுகாக்கும் ஒரு பெரும் படையாகவும், பாதுகாப்பு அரணாகவும் தமிழ் மொழி இருப்பது தான்

அதாவது தமிழை கைவிடாமல், எல்லா சூழ்நிலையிலும், தமிழையே பேசிக் கொண்டிருந்தால், தமிழினத்தை ஒரு காலத்திலும் அழிக்க முடியாது  என்னும் பெரும் உண்மையை தமிழ் இனம் உணர்ந்ததால் தான் , தமிழை எப்போதும் போற்றி பெருமைப்படுத்தி கொண்டிருந்தார்கள்.

 இப்படி தமிழ் மொழி, தமிழர்களுக்கு ஒரு பெரும் பாதுகாப்பு படையாக  செயல்படுவதை அறிந்த தமிழினத்தின் எதிரிகள், தமிழ் இனத்தை வீழ்த்த ஒரே வழி, அவர்களுடைய மொழியை முதலில் அழிப்பது தான் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள் /வைத்திருக்கிறார்கள். அதனால் தான் ஆரியர்கள், வடமொழியை புகுத்தி தமிழ் இனத்தை அழிக்க முற்பட்டார்கள். இப்போது பல ஆரியர் அல்லாதவர்கள், குறிப்பாக  தெலுங்கர்கள்,அதே உத்தியை பயன்படுத்தி, வடமொழியான சமஸ்கிருதத்தை கொண்டு, தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

ஆக , தமிழர்கள் தங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற  எளிதான ஒரு வழி என்னவென்றால், எல்லோரும் சமஸ்கிருதம் கலக்காத தமிழ் மட்டும் பேச வேண்டும். உடனே, இனத்தின் விடுதலை ஆரம்பமாகிவிடும்.

 தமிழர்களுக்கு எதிராக போரிடுபவர்கள், ஒரு நாளும் படைக்கலன்களோடு வந்து நேரடியாக போராடுவதில்லை . அப்படி வந்தால் அது  தமிழர்களுக்கு எதிரான போர் என்று தெரிந்துவிடும். மாறாக, மறை முகமாக கருத்தியல் ரீதியாக போர் தொடுத்து, அதை தொடர்ந்து தினமும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மறைமுகப் போர் என்பதால், அதனால் தாக்கப்பட்டு பலவீனப்பட்டு கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அது தெரிவதில்லை. அப்படி ஒரு உணர்வு வருவதும் இல்லை.இதை அவர்கள் தினமும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.அந்த மறைமுக போருக்கு,முக்கியமான ஆயுதம் என்னவென்றால்  சமஸ்கிருத சொற்கள் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  சமஸ்கிருத சொல்லுக்கு அழிக்கும்/குழப்பும்  பெரும்  திறன் உள்ளது என்பது இதை தீர ஆராய்ச்சி செய்த மொழி அறிஞர்களுக்கு மட்டும்தான்  தெரியும். 

நான் என்ன சொல்கிறேன் என்பது பலருக்கு இன்னும் புரியாமல் இருக்கலாம். ஆதலால் அதை விளக்கு முகமாக ஒரு சிறிய எடுத்துக்காட்டை சொல்லுகிறேன்.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி சொன்ன ஒரு கருத்து அகில இந்திய அளவில் பேசு பொருளாக மாறி நீதிமன்றத்திற்கு கூட சென்று விட்டது. அவர் சொன்ன கருத்துக்கு எதிராக பலர்  காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார்கள் .அவர் அப்படி என்ன தான்  சொன்னார்.

"கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் "என்று பேசினார்.

ஆதாரம் :https://tamil.oneindia.com/news/chennai/udhayanidhi-stalin-sanatana-dharma-row-did-rahul-gandhi-call-a-senior-dmk-leader-on-the-issue-536093.html

"சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம்."என்று அவர் சொன்னதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது .இதோ சனாதனம் என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு அகராதி தரும் பொருள்.


ஆதாரம்: Sanskrit Dictionary  

ஆக, சனாதனம் என்கிற ஒரு சொல்லே  சமஸ்கிருதத்தில் கிடையாது என்பது தெளிவாகிறது. அப்படி இல்லாத ஒரு சொல்லுக்கு, ஒரு இல்லாத பொருளை கற்பித்து ,ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கு தகுந்தாற்போல் அதை பொருள் கொள்வது, சமஸ்கிருதத்தின் ஒரு தனி குழப்பும்/அழிக்கும்  திறன் என்று சொல்லலாம். இந்த சொல்லுக்கு அதிகாரப்பூர்வமான ஒரு பொருள் இல்லாத வரை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அதை பொருள் கொள்ளலாம். அவ்வாறு இருக்கையில் எந்த அடிப்படையில் அவர் பேசியது தவறு என்று சொல்ல முடியும் ?

அப்படி ஒரு குழப்பமான  சிந்தனையை விதைக்கும் திறன் தான் சமஸ்கிருத சொற்களுக்கு உள்ளது. இப்போது இதையே தமிழாக்கி பேசினால் என்ன ஆகும்? முயன்று பாருங்கள். தமிழில் அப்படி ஒன்றும் பேச முடியாது. தமிழில் என்ன பேசினாலும் அதற்கு ஒரு நேரடி பொருள்தான் கற்பிக்க முடியும். குழப்பமான பொருள் கற்பிக்க முடியாது. இந்த ஒரு சொல்லைக் கொண்டு சமஸ்கிருத சொற்களின்  திறனை ஓரளவு புரிந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

அதுபோல இன்னொரு சொல்லை பார்ப்போம். JUSTICE  என்ற ஆங்கில சொல்லுக்கு நிகராக சமஸ்கிருதத்தின் சொல் 'தர்மம்' என்பதாகும் . ஆனால், தர்மம் என்பதன் மக்கள் புரிந்து கொண்ட பொருள் என்னவென்றால்' அநியாயம்'என்பதாகும் .ஏனென்றால், தர்மம் என்றால்' சாதிக்கேற்ற நீதி', அப்படியென்றால் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு நீதி!அது ஆங்கிலத்தில் INJUSTICE .ஆக ,JUSTICE என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் INJUSTICE என்ற ,நேர் எதிர்மறையான பொருள் கொண்ட ஒரு சொல்லை பயன்படுத்துகிறார்கள்!😂😂

 இனி, இதை போல் தமிழ் இனத்திற்கு முக்கியமான இன்னொரு சொல்லுக்கு வருவோம்.தமிழ்நாட்டில் வாழும் மற்ற மாநிலத்தவர், குறிப்பாக தெலுங்கர்கள், கடந்த சுமார் 50 வருடங்களாக தமிழர்களை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால்,தெலுங்கர்கள் தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதே பல தமிழர்கள் இன்னும் உணரவில்லை. உணர முடியவில்லை.பல தமிழர்கள் அந்தத் தகவலையே  சந்தேகத்துடன் தான் கேட்கிறார்கள். பல தமிழர்கள் அதை இன்னும் நம்புவதில்லை. இதற்கு என்ன காரணம்? 

 இப்படி 5% தெலுங்கர்கள் ,85% தமிழர்களை எளிதாக ஆள்வதற்கு, அவர்களிடம் தனியாக ஒரு பெரும் படையோ அல்லது ராணுவமோ  இல்லை .தெலுங்கு விட்டலாச்சாரியா படங்களில் வருவது போல் ஒரு மாய மோகினியும்  மந்திரக்கோலும் இல்லை.பின்னர் எதைக் கொண்டு அவர்கள் தமிழர்களை ஆள்கிறார்கள் ?

அவர்களின் வெற்றிக்கு காரணம் ஒரே ஒரு  சமஸ்கிருத சொல் தான் ! அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு மந்திரச்சொல். அதைக் கொண்டுதான் வீழ்த்த முடியாத  தமிழ் இனத்தை வீழ்த்தி விட்டார்கள்!அந்த மந்திர சொல் தான் திராவிட என்னும் சொல்.அப்படி அந்தச் சொல்லில்   என்னதான் இருக்கிறது? இதோ இதை படித்து பாருங்கள்.புரியும் .

திராவிடம் என்ற பெரும் சூழ்ச்சி 

 இந்த அரசை 'திராவிட மாடல் 'அரசு என்று சொல்கிறார்கள்.நாங்கள் 'திராவிட'இனத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லுகிறார்கள் . இப்போது நடப்பது 'திராவிட ஆட்சி 'என்று சொல்கிறார்கள். உண்மையில் தெலுங்கர்கள் தான் ,இந்த திராவிட முகமூடி அணிந்து நம்மை ஆள்கிறார்கள் என்பது  ஏன் நமக்கு தெரிவதில்லை?ஏனென்றால், தமிழர்களும் அந்த திராவிட இனம் தான்  என்று  காலம் காலமாய் பொய் சொல்லி தமிழர்களை எல்லாம் நம்ப வைத்திருக்கிறார்கள் . நான் கூட என் பள்ளி நாட்களில், தமிழர்கள் என்பவர்கள் திராவிடர்கள் என்று தான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆண்டாண்டு காலமாக தொடர்ச்சியாக அவ்வாறு சொல்லி, தமிழர்கள்,தெலுங்கர்கள் எல்லாம் ஒரே இனம் தான். இந்த இனத்தின் பெயர் தான் திராவிடம் என்று ஒரு மா பெரும் பொய்  சொல்லி,அதைக் கருவியாக  கொண்டு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆக, 5% தெலுங்கர் நம்மை ஆளும் போது, நம் திராவிட இனம் தான் நம்மை ஆளுகிறது என்ற ஒரு மாயையை உருவாக்கி நம்ப வைத்து விட்டார்கள்.

இந்த சூழ்நிலையில், அவர்களை எப்படி வீழ்த்துவது? முள்ளை முள்ளால் தான் எடுக்க  முடியும். அதுபோல சொல்லை சொல்லால் தான் வீழ்த்த முடியும். எந்த சொல்லினால் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்களோ,அந்தச் சொல்லை தமிழர்கள் பயன்படுத்தாமல், அதற்குப் பதில், அதற்கு நிகரான தமிழ் சொற்களை பயன்படுத்தினால் போதும். உடனே விடுதலை ஆரம்பமாகிவிடும் .எப்படி ?

 தமிழர்கள் எல்லோரும் தங்களுடைய பேச்சில்/ வழக்கில் தமிழ் சொற்களை மாத்திரம் பயன்படுத்த வேண்டும் .எந்த காரணம் கொண்டும் சமஸ்கிருத சொல் பயன்படுத்தக்கூடாது. அப்படி செய்யும் போது ,'திராவிட மாடல்' என்பது தமிழாக்கினால் 'தெலுங்கர் மாடல் 'என்று வரும்! ஆக,தமிழர் மாடல் அல்ல என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். 'திராவிடர் ஆட்சி' என்று சொன்னால் அதை தமிழில் 'தெலுங்கர் ஆட்சி'என்று சொல்ல வேண்டியிருக்கும் . உடனே தெரிந்து விடும், 85 சதவீத தமிழர்களை 5 சதவீத தெலுங்கர்கள் தான் ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்ற பெரும் உண்மை எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்துவிடும். 'திராவிட கழகம்' என்றால்' தெலுங்கர் கழகம்'என்று தமிழில் வந்துவிடும். 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்று சொன்னால் 'தெலுங்கர் முன்னேற்ற கழகம்' என்று பொருள்படும்.ஆக தமிழர் கட்சி அல்ல திமுக என்பது தெரிந்து விடும். தமிழர் கட்சி என்றால் ' தமிழர் முன்னேற்ற கழகம் 'என்று பெயர் வைக்கலாமே !ஏன் வைக்கவில்லை என்ற கேள்வி எழும். 

இந்த கருத்து உருவாக்கம் வலுப்பெற்று இறுதியில் ,தமிழர் VERSUS  தெலுங்கர் என்னும் அரசியல் நிலைப்பாடு  வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். கே.என். நேரு என்றால் தெலுங்கர் என்று சொல்ல வேண்டி இருக்கும். கருணாநிதி என்றால் தெலுங்கர்  என்று சொல்ல வேண்டியிருக்கும்.வைகோ , வெங்கடேசன், விஜயகாந்த் எல்லோரும் தெலுங்கு மன வாடு கூட்டம் என்பது மக்களுக்கு தெரிய வரும்.

 மொத்தத்தில் இதுவரை மறைத்து வைத்திருந்த உண்மைகள் எல்லாம் அம்பலம் ஆகிவிடும். தேர்தல் சமயத்தில் தமிழர்கள் எல்லோரும் தமிழர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள்,தெலுங்கர்களுக்கு வேண்டாம் என்ற முறையில் வெளிப்படையாக பிரச்சாரம் செய்யலாம். தெலுங்கர்கள் இதுவரை செய்து வந்த ஏமாற்று வேலை ஒவ்வொன்றும் தெரிய ஆரம்பிக்கும். இறுதியில் தமிழ் தேசியம் மலரும்.

 அந்த ஒரு சொல் அப்படி ஒரு பெரிய மந்திரம் சொல்லாக இருக்கிறது. எங்கெங்கு திராவிடம் என்று சொல் வருகிறதோ  அங்கங்கு அதற்கு ஏற்ற தமிழ் சொல்லை பயன்படுத்தி பாருங்கள்.வெற்றி நிச்சயம். இதை ஒரு தனித்தமிழ் இயக்கமாக கொண்டு வந்து பிரபல படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழ் மொழி எப்படி தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது,தமிழை விட்டுவிட்டு வேறு மொழி சொற்களை பயன்படுத்தினால் தமிழனை அடிமையாக்கி விடலாம் என்ற  பெரும்  உண்மையை தமிழர்  உணர ஆரம்பிப்பார்கள்.இறுதியில் ,தமிழினால் பாதுகாக்கப்பட்ட, ஒரு வீழ்த்த முடியாத, இனமாக தமிழர்கள் மாறிவிடுவார்கள். அப்படித்தானே அவர்கள் இருந்தார்கள் சமஸ்கிருதம் என்ற மொழி வரும் வரை!

Thursday, 3 August 2023

வடக்கர்களின் பயங்கர படையெடுப்பு ---தமிழர்கள் பிழைப்பார்களா?

அண்ணாத்துரை அன்று சொன்னார் ' வடக்கு வளர்கிறது ; தெற்கு தேய்கிறது!'என்று. இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. தற்போது வடக்கு வந்து தெற்கில் வளர்கிறது! அதைவிட இது மிகுந்த ஆபத்தாகும். ஏனென்றால், அங்கு வளர்ந்தால் அது அவர்கள் நிலத்தில். இங்கு வளர்வது நம் நிலத்தில். மெல்ல மெல்ல நம் நிலம் பறிபோகும் அபாயத்தில் தமிழ்நாடு இப்போது இருக்கிறது. இந்திய துணை கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் தமிழர்கள் தான் இருந்தார்கள். இருந்த நிலத்தை மெல்ல மெல்ல இழந்து, இப்போது கடைக்கோடி தமிழகத்தில் ஒரு மூலையில் வாழ்கிறார்கள். அதையும் இழந்து விட்டால்? குமரிக்கடல் தான் உள்ளது.😭

 எங்கும் தமிழ் எதிலும் தமிழ்! என்று வாய்கிழிய சொன்னவர்கள் எல்லோரும், இப்போது எங்கும் வடக்கர்கள் எதிலும் வடக்கர்கள்! என்று இருப்பதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். பாஜகவின் தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கிறார் ' தமிழர்களும் வடக்கே வேலை நிமித்தம் சென்றிருக்கிறார்கள். பெங்களூருவில் இருக்கிறார்கள். அதுபோலத்தான் இதுவும் ' என்று சொல்லி இருக்கிறார். அவர் சொல்வது உண்மைதான். இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் தமிழர்கள் வேலை நிமித்தம் வாழ்கிறார்கள்.

ஆனால், அவர்கள் அங்கு எப்படி வாழ்கிறார்கள்? அவர்கள் அங்கு போய் தமிழை திணிப்பதில்லை. எங்கும் அவர்கள் வடக்கர்களை தாக்குவதில்லை.ஏடிஎம் கொள்ளையடிப்பதில்லை. எங்கும் அவர்கள் பெரும் சொத்துக்கள் வாங்கி குவிப்பதில்லை. எங்கும் அவர்கள் பெரிய கல்லூரிகளையும் ஷாப்பிங் மால் களையும் வாங்குவதில்லை. எங்கும் அவர்கள் வடக்கர்களை ஆள்வதில்லை. எங்கும் அவர்கள் அரசியல் அதிகாரம் கொண்டவர்களாக இல்லை. எங்கும் அவர்கள் கோடிக்கணக்காக எண்ணிக்கையில் இல்லை. எங்கும் அவர்கள் அங்குள்ள அரசியலை தீர்மானிப்பவர்களாக இல்லை. அவர்கள் வேலை செய்யும் இடங்களில் எல்லாவற்றிலும் தமிழைக் கூட சத்தமாக பேச முடியாமல் அடங்கி ஒடுங்கி சிறு சிறு வேலை செய்வார்கள். அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று இருப்பார்கள். அதுதான் தமிழர்கள். மும்பையில் இந்தியில் தான் பேசுவார்கள். அகமதாபாத்தில் குஜராத்தியில் பேசுவார்கள். அங்கு போய் ஆதிக்கம் செலுத்த மாட்டார்கள். அதுதான் தமிழர்கள்! 

ஆனால், இங்கு வாழும் வடக்கர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்கள் இங்கு தமிழ் பேசவே மாட்டார்கள். மண்ணின் மைந்தரான தமிழர்களை ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். இங்கிருக்கும் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட மாட்டார்கள். டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிப்பார்கள். கேட்டால் சண்டைக்கு வருவார்கள். இங்கு வாழ்ந்து கொண்டு, தமிழர்களுக்கு எதிரான பாஜகவிற்கு வாக்களிப்பார்கள். தமிழ்நாட்டில் வந்து அடாவடித்தனம் செய்வார்கள். அப்படியான அவர்கள், விரைவில் இங்குள்ள அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்க போகிறார்கள். இதுதான் தமிழர்கள் வெளிமாநிலங்களில் இருப்பதற்கும், வடக்கர்கள் தமிழ்நாட்டில் இருப்பதற்கும் உள்ள பெரும் வித்தியாசம் என்பது. இது கர்நாடகாவில் இருந்து வந்த அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர் சொல்கிறார் 'யார் குறைந்த பணத்திற்கு வேலை செய்கிறார்களோ அவர்களை அனுமதிப்பதுதான் பொருளாதார விதி ' என்று. இந்தியாவின் சாலை பணிகளில், தினமும் 50 ரூபாய்க்கு வேலை பார்க்க சீனர்கள் தயாராக இருக்கிறார்கள்! நாம் அவர்களை இந்தியாவிற்குள் அனுமதிக்கலாமா? ஏன் அனுமதிக்கவில்லை? ஏனென்றால், இந்தியர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்பதால். அமெரிக்காவில் வேலை செய்ய இந்தியர்களுக்கு ஏன் விசா கட்டுப்பாடுகள் உள்ளது? ஏனென்றால் அங்குள்ள அமெரிக்கர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்ற காரணத்தினால் தான்.அதே மாதிரி தான் தமிழ்நாட்டில் வடவர்கள் வந்தால் தமிழர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்பதால், தமிழர்கள் வேலை வாய்ப்புகளை பாதுகாக்க வடக்கர்கள் பெருமளவில் வருவதை கட்டுப்படுத்துவது நிச்சயமாக அவசியப்படுகிறது. தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகளில் 90 % இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வர வேண்டும். ஆட்சிக்கு வந்தால் அவ்வாறு ஒரு சட்டம் கொண்டு வருவோம் என்று திமுகவினர் அப்போது சொன்னார்கள். இதுவரை அவர்கள் ஏன் கொண்டு வரவில்லை என்று தெரியவில்லை.

 ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு இனக்கணக்கு அடிப்படை உள்ளது.இதை ஆங்கிலத்தில் demographic profile என்பார்கள்.எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில்

 தமிழர்கள் 85% தெலுங்கர்கள் 6% மற்றவர்கள் 9% என்று இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதை மாற்றுவதற்காக வடக்கே இருந்து குடியேற்றம் நடந்து தமிழர்கள் 60%, வடக்கர்கள்  30% தெலுங்கர்கள் 8% மற்றவர்கள் 2% என்று ஆகிறது என்று வைத்துக்கொள்வோம்.இதனால் அரசியல் அதிகாரம் யார் கையில் உள்ளது என்பதில் ஒரு மாற்றம் ஏற்படும்.இது சமூக குழப்பங்களுக்கு வித்திடும். வடக்கர்கள் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பங்குகளை அபகரித்துக் கொள்வார்கள். இதனால் இனக் கலவரம் ஏற்படலாம். ஆக இனக்கணக்கு விகிதாச்சாரம் மாறுவதற்கு நாம் அனுமதிக்க கூடாது. அந்த கணக்கை காப்பாற்ற வேண்டும் என்றால், தமிழர்களுக்கு எல்லா துறைகளிலும் 90% இட ஒதுக்கீடு வேண்டும்.இது மாதிரியான சட்டங்கள் பல மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. வடகிழக்கு மாகாணங்களில் உள்ளே செல்ல வேண்டுமென்றால் இன்னர் லைன் பர்மிட் என்று ஒன்று எடுக்க வேண்டும். இங்கிருந்து நாம் எல்லோரும் போய் கோடிக்கணக்கில் அங்கு போய்வாழ முடியாது. அதேபோன்று ஒரு பெர்மிட்டு முறை தமிழ்நாட்டிற்கும் நடைமுறைப்படுத்தலாம். தமிழர்களின் நலனில் குறியாக இருக்கும் தமிழக முதல்வர், நிச்சயமாக இந்த மாதிரி முறைகளை அமல்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் இட ஒதுக்கீடும் உடனே செய்வார் என்று தமிழக மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.

எது எப்படியோ,அடுத்த தேர்தலில் தமிழர்களை காப்பாற்ற உறுதிமொழி கொடுக்கும் கட்சிக்குதான் நிச்சயமாக தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்பது உறுதி. திமுக தான் கடந்த 50 வருடங்களாக தமிழர் நலனை முன்னிறுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் நிச்சயமாக தமிழர்களை காப்பாற்ற உறுதிமொழி கொடுத்து அதை நிறைவேற்றுவார்கள் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. திமுக வடக்கர்களின் கூட கைகோர்த்து தமிழர்களை பின் தள்ளி விடுவார்கள் இன்று ஒரு கூட்டம் தப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. திமுகவை பற்றி நன்கு அறிந்தவர்கள் அதை நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சமீபத்தில் வடக்கர்கள் தமிழர்களை தாக்கிய ஒரு சம்பவத்தில், திமுக அரசு உடனே தலையிட்டது மறக்க முடியாது. வடக்கர்களை உங்கள் ஊருக்கு போங்கள் என்று சொன்ன தமிழரை உடனே அரசு கைது செய்ததையும் மறக்க முடியாது. ஆக வரப்போகும் தேர்தலில்,  திமுக இந்தப் பிரச்சினையை நிச்சயமாக கையில் எடுப்பார்கள் என்பது தமிழர்கள் எதிர்பார்ப்பு. அது நியாயமான எதிர்பார்ப்பு தான்.

Saturday, 1 July 2023

வங்கி வாடிக்கையாளர் சேவையின் உச்சம் !

 ஒரு காலத்தில், குனிந்த தலை நிமிராத பெண்கள் தமிழ்நாட்டில் இருந்தனர் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் . இன்னும் அந்த வகைப் பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனரா? இல்லை என்றுதான் நீங்கள் சொல்வீர்கள், வங்கிக் கிளைகளுக்குள்  நுழையும் வரை! ஆம், அங்கு இருக்கும் ஊழியர்கள்,  ஆண்களோ, பெண்களோ,  குனிந்த தலை நிமிராமல், வேலை பார்ப்பவர்கள். அவர்கள் நிமிர்ந்து பார்க்க மாட்டார்களா, என்று ஏக்கத் துடன்  காத்துக் கொண்டிருக்கும், பரிதாபத்துக்குரிய வாடிக்கையாளர்கள் அவர்கள் முன்னால்  ! இதுதான் இன்றைய வங்கி சேவையின் இயல்பான நிலை. இதுதான் இன்றைய, வங்கி வாடிக்கையாளர் சேவையின் படம் ! ஆனால், 1980களில், நிலைமையே வேறு! நம்ப முடியவில்லையா? இதோ என் கதை!

                                                   1984 லிலிருந்து 1986 வரை நான் ஒரு பெரிய வங்கியின்  , தனிநபர் வங்கியியல்  மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.கேரளா எல்லையில் இருந்த அந்த வங்கி கிளையில் எப்போதும் கூட்டம் அலைமோதும் .காலை 9 வாக்கில் நான் வங்கிக்குள் நுழைய முற்பட்டால் ,ஒரு  300  பேராவது என் வழியை மறைத்துக்கொண்டு நிற்பார்கள் .வங்கி காவலர் சத்தம் போட்டு எனக்கு வழி வகுத்து கொடுப்பார் !

                                       அந்த வங்கி  கிளையில் வெளி நாட்டு இந்தியர்களின் கணக்கு (NRE )நிறைய இருந்தன .அந்தக் கணக்குதாரர்களுக்கு நான் ஒரு உற்ற நம்பிக்கையான குடும்ப நண்பனாக சேவை செய்தேன் .பொதுவாகவே  பணக்காரனோ  ஏழையோ யாராயிருந்தாலும் அவர்களுக்கு என் மனதார முடிந்த அளவு உதவி செய்வது என்பது என்னுடைய இயல்பு. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு மேலும் சிறப்பான சேவை நான் செய்வதற்கு காரணம் அவர்கள் தங்கள் குடும்பங்களை இங்கே விட்டுவிட்டு தனியாக அங்கு சென்று அல்லும் பகலும்  உழைத்து ,குடும்பத்திற்க்காக  பணம் அனுப்புகிறார்கள். அவர்கள் முற்றிலும் நம்பி இருப்பது இந்த வங்கியை  தான். இந்த பணம் போய் அவர்கள் குடும்பத்தில் சேர்ந்த பின்னர் தான்  அவர்களுக்கு செய்ய வேண்டிய  காரியங்கள் எல்லாம் செய்ய வேண்டும். அது எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுடைய பார்வையில் நான் எப்போதும் பார்ப்பேன் . ஆதலால் NRE  என்று சொல்லப்படும் அந்த வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த சிறப்பான சேவை எப்போதும்  செய்வேன் .அவர்கள் அனுப்பும் காசோலை  வந்தவுடன் அந்த இடத்திலேயே ஒரு அச்சடித்த பதிலை அவர்களுக்கு அனுப்பி விடுவேன். ஆதலால் அவர்கள் எல்லோருமே என்னுடைய சேவைக்காக எப்போதும் பாராட்டி கொண்டே இருப்பார்கள். அப்படி ஒரு தனி சிறப்பான சேவை நான் கொடுத்துக் கொண்டிருந்தேன் .அவர்கள் குடும்பத்தினரும்  என்னை தங்கள் குடும்பத்தில் ஒரு ஆளாகவே எடுத்துக் கொள்வார்கள். நான் அவர்கள் வீட்டிற்கு சென்று பலமுறை உதவி செய்திருக்கிறேன். பல வீடுகளில் சாப்பிட்டு இருக்கிறேன். அந்த அளவுக்கு நெருக்கமாக அவர்களுடன் இருந்தேன் .

இப்படி இருக்கையில் ஈரான் ஈராக்  போர் 1984இல் வெடித்தது. ஈரானில்  எங்கள் வங்கியின் ஒரு முக்கியமான வாடிக்கையாளர்  வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.அவர் தங்கியிருந்த இடத்தில் மேலே குண்டு போட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது.அவருக்கு ஒரே பயம் .எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் .அவர் உயிர் கூட போய்விடலாம் .அப்படி ஒரு பயங்கரமான சூழ்நிலை.அப்படி போனால் குடும்பத்தை யார் பார்ப்பார்கள் ? யாரை நம்பி அவர் சொத்துக்களை கொடுக்க முடியும் ?உறவினர்கள் எல்லோரும் துரோகிகளாக இருந்தார்கள். அவருக்கென்று ஒருவருமே இல்லை என்ற நிலை. 

இந்த சூழ்நிலையில் அவர் என்ன செய்தார் தெரியுமா?அப்போது எல்லாம் சின்ன  டைப்ரைட்டர் உண்டு . அவசர அவசரமாக, குண்டு மழை ஒரு பக்கம் பொழிந்து கொண்டிருக்கும்போது , தன்னுடைய ஒரு பக்க உயிலை டைப் அடித்து  அங்கிருந்த இரண்டு ஊழியர்களை சாட்சி கையெழுத்து போட வைத்து , அதை அப்படியே ஒரு கவரில் வைத்து, குண்டு மழை ஓய்ந்திருக்கும் நேரத்தில் தபாலில் சேர்த்தார் .அப்போதெல்லாம் அவ்வாறான தபால் இந்தியா வந்து சேர்வதற்கு 15 நாள் 20 நாள் வரை எடுக்கலாம் .அப்படி 20 நாள் கழித்து அந்த உயில்  என் கையில் வந்து சேர்ந்தது. அதை பிரித்து படித்தவுடன் எனக்கு ஒரே அதிர்ச்சி. அவருடைய சொத்துக்கள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு, அதை பாகம்  செய்யும் அந்த உரிமையை Administrator அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமையை என் பெயரில் எழுதி வைத்திருந்தார் !ஒரு பக்கம் அவர் என் மேல் கொண்டிருந்த நம்பிக்கை என்னை வியப்படைய வைத்தது. இவ்வளவுக்கும் அவரை நான் நேரில் ஒருபோதும்  சந்தித்தது இல்லை .வெறும் கடிதம் வாயிலாக தான் நாங்கள் பேசிக் கொள்வோம். அவருடைய மகள் பெயரும் என்னுடைய மகள் பெயரும் ஒன்றுதான்.  ஆக. ஒரு பக்கம் எனக்கு மகிழ்ச்சியாக  இருந்தாலும், இன்னொரு புறம் நான் அவ்வாறாக உயில் அட்மினிஸ்ட்ரேட்டராக ஆக முடியாது . வங்கியில் அப்படி ஏற்பாடு கிடையாது.ஆனால் வங்கி  அந்தப் பொறுப்பை ஏற்று administrator ஆக முடியும். ஆதலால், நான் உடனே அவருக்கு ஒரு பதில்  போட்டேன். உங்கள் கடிதம் கிடைத்தது, உங்களுக்கு ஒன்றும் ஆகாது, நான்  இறைவனை பிரார்த்திக்கிறேன். நீங்கள் நலமுடன் திரும்பி வருவீர்கள் என்று உறுதி அளித்துவிட்டு, உங்கள் உயிலை நான் செயல்படுத்த எனக்கு வங்கி அனுமதி கிடையாது .ஆதலால் அதை  சென்னை தலைமை அலுவலகத்திற்கு  அனுப்பி எங்கள் வங்கி அட்மினிஸ்ட்ரேட்டர் ஆகும் படியாக நான் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி ஆறுதலோடு அந்த கடிதத்தை உடனே தபாலில் சேர்த்தேன். கடவுள் கிருபையால் அவருக்கு  ஒன்றும் ஆகவில்லை. அவர் உயிர் பிழைத்து பின்னர் 2007  வாக்கில்,கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பின்னர்,பணி நிறைவு பெற்று  இந்தியா வந்தபோது என்னை சந்தித்தார் .அவருக்கு ஒரே சந்தோஷம். அப்போதுதான் முதன்முதலாக அவர் என்னை பார்க்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். என்னை பார்க்காமலேயே அவருடைய உயிலுக்கு என்னை administrator ஆக நியமித்தார் என்றால் அந்த அளவுக்கு வாடிக்கையாளர் சேவை நான் அந்த காலத்தில் நான் செய்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது இப்போது இருக்கும் வங்கி  ஊழியர்களை நினைத்து வேதனைப்படுகிறேன். போய் நின்றால் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். போதாததற்கு தமிழ் தெரியாத வட இந்தியர்கள் வேறு அதிகாரிகள் பதவியில் இருக்கிறார்கள். வாடிக்கையாளர் சேவையின் தரம் இப்போது அதள  பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்பதை மறுக்க முடியாது. அந்த நாட்கள் திரும்பி வருமா என்ற ஏக்கத்துடன் இதை முடிக்கிறேன்.

Tuesday, 18 April 2023

மணவாழ்க்கையா இல்லை பிணவாழ்க்கையா ?

                                                                      (Pic Credit -Google )
 

இயற்கையின் படைப்பில் ஆணென்றும் பெண்ணென்றும் இரண்டு தனித்தனி படைப்புகள் ஏன் இருக்கின்றன ? ஒரே படைப்பாக இருந்து, பிள்ளைகள் பெறும்படியாக இருந்திருக்கலாமே! ஏன் அவ்வாறு இல்லை? என்று நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?

அவ்வாறு இருக்க சாத்தியமில்லை என்று சொல்ல முடியாது. இயற்கையில், சில தாவர இனங்களிளிலும், விலங்கினங்களிலும் parthenogenesis என்ற ஆண் பங்கு இல்லாத asexual இனப்பெருக்கம் நடக்கிறது.  அதேபோல் மனித இனத்திலும் இருந்திருக்கலாம் அல்லவா? ஏன் இல்லை? 

மனித இனத்திலும், விலங்குகள் இனத்திலும் மாத்திரம் ஏன் ஆண் பெண் என்று இரு பாலினங்கள் உள்ளன?

 விலங்கினங்களில் மிகவும் முன்னேறியதாய் காணப்படுவது மனித இனம். ஆக, மனித இனத்தின் வாழ்க்கை முறையை ஆய்ந்து பார்த்தால் ஏன் இரு பால் தனித்தனியே  தேவைப்படுகிறது என்பது புரியும்.

 எந்த இனமும் குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்ய இரண்டு தேவைகள் உள்ளன.ஒன்று ஒரு பாதுகாப்பான கூடு.இரண்டு குட்டி போட ஒரு பெண். பாதுகாப்பான கூட்டிற்கு ஒரு ஆண் தேவை. ஆக, ஆண் என்பவன் இடத்திற்கு பாதுகாவலன். முரட்டு பலம் கொண்டவன். பயம் இல்லாதவன். எதிரிகளிடம் இருந்து காப்பதற்கு திறன் பெற்றவன் . பெண், குட்டி போட்டு, அதற்கு பாலூட்டி, பேணி வளர்க்கக்கூடிய திறன் பெற்றவள். அன்பு காட்டுபவள், ஆதரிப்பவள். ஆணுடன் இசைந்து நடப்பவள். இவ்வாறாக ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடாக அமைந்த குணங்களை ஒன்றாக்கி ஒரு பாலாக உருவாக்க முடியாது என்பதால்தான் இயற்கையில் ஆண், பெண் என்று இரு தனித்தனி பால்களாக உள்ளன.

ஆக,ஆணும் பெண்ணும் இணைந்து  ஒரு குடும்பம் உருவாகிறது.ஆணே அதற்கு இயல்பான தலைவர். இதைப் பெண் ஒத்துக் கொண்டு குடும்பம் நடத்தினால் எல்லாம் சுமுகமாக நடக்கும்.இதை பெண் ஒத்துக் கொள்ளாமல், தலைமைப் பொறுப்பை தான் ஏற்க நினைத்தால், குடும்ப வாழ்க்கையில் குழப்பம் ஏற்படலாம்.ஒரு கப்பலுக்கு இரண்டு மாலுமிகள் இருக்க முடியாது. இருந்தால் திசை தப்பி விடும்!அது குடும்பம் என்ற கப்பலுக்கும் ரொம்பவே பொருந்தும்.

            ஒருவேளை மனைவி மாலுமி ஆக விரும்பி, கணவன் அதை ஒத்துக் கொண்டால் என்ன ஆகும்? குடும்பத்தில் அமைதி நிலவும். ஆனால், குடும்பம் சரியான திசையில் பயணிக்காது! ஏனென்றால் பெண்மையின் குணங்கள் பிள்ளைகளிடம்  மேலோங்கி நிற்கும். அது குடும்பத்தை/தலைமுறையை  முன்னெடுத்து செல்ல முடியாது.

 அப்படியான ஒரு குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண், ஆளும் இயல்புடன் இருக்கும் ஒரு ஆணை மணமுடித்தால் என்ன ஆகும்? அவர்கள் மண வாழ்க்கை எப்படி இருக்கும்? இரண்டு பேரும் தலைமைக்கு போட்டி போட நினைத்தால், குடும்பம் எப்படி இருக்கும்? இவர்களின் குழந்தைகள் எந்த விதமான பாதிப்புக்கு உள்ளாவார்கள்? எந்தவிதமான  விழுமங்களை கடைப்பிடிப்பார்கள்? 

இதோ அப்படி ஒரு ஜோடியின் ஒரு உண்மைக் கதை!

கார்த்திக் ஷெரின் ஜோடி!

 கார்த்திக் எம்பிஏ முடித்தவன்.தலைமுறை தலைமுறையாக  ஆண்கள் மட்டும் ஆளும் ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவன். அவன் குடும்பத்தில் அப்பாவின் சொல் தான் கடைசி சொல். ஒரு விஷயத்தைப் பற்றி அப்பா என்ன நினைக்கிறார்,என்பதே அதன் முடிவை நிர்ணயிக்கும் . வீட்டிலுள்ள எல்லோருடைய தலைவிதியையும் இறுதியில் நிர்ணயிப்பது அப்பாதான். அவர்கள் குடும்பத்தில் அப்பா என்பது ஒரு சர்வ அதிகாரமிக்க பதவி.

ஷெரின் ஒரு குமரி மாவட்ட குமரி. குணத்தில் கிட்டத்தட்ட மலையாளி போல . ஷெரினின் குடும்பத்தில் அவளுடைய தாயார் வைத்ததுதான் சட்டம்.கார்த்திக் குடும்பத்தில் அப்பா எப்படியோ ,அதே இடத்தில் இங்கு அம்மா !தகப்பனார் என்பவர் சும்மா ஒரு 'டம்மி பீஸ் '. ஷெரினுக்கு மூன்று சகோதரர்கள் உண்டு. அவர்கள் எல்லோரும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அன்பான வேலைக்காரர்கள்! ஷெரினுடைய வாழ்க்கையில், அவளுடைய அம்மா பிள்ளைகளுக்குத் தெரிந்து,அப்பாவிற்கு ஒருபோதும் கட்டு பட்டதில்லை. அப்பா ஏதாவது செய்ய சொன்னாலும், அதையும் அம்மா வேண்டாம் என்று சொன்னால் யாரும் மீறி விடலாம்! ஆக,அங்கு ஒரு விதத்தில் அல்லி ஆட்சி! ஷெரினும் ஒரு குட்டி அல்லியாகவே வளர்ந்தாள்.

 கார்த்திக் ஒரு ஆள்பவன். ஷெரின் ஒரு அல்லி. இருவர் இணைந்த மண வாழ்வு எப்படி இருக்கும்?

                                             தேனிலவு முடியும் வரை எப்படியோ எல்லாம் ஒத்துப் போய் விட்டது. தேனிலவு நேரத்திலும், ஷெரின் தான் அதிக முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்தாள். கார்த்திக் இருவரும் தனியாக நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று திட்டமிட்டால்,ஷெரினோ போகுமிடமெல்லாம், அங்கிருக்கும் சித்தி வீட்டிற்கும்,அத்தை வீட்டிற்கும் போவதிலே அதிக குறியாக இருந்தாள்.ஆனால், கார்த்திக் அவளுடைய ஆக்ரமிப்பை எல்லாம் அப்போது  அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. அவனுள் இருந்த ஆண் அவ்வளவாக  இன்னும் வெளியே வரவில்லை.

                                        தேனிலவு முடிந்து நிஜவாழ்க்கையில் அமரும் போதுதான் இருவருக்கும் உள்ள ஆளும் ஆவிகள் மோத ஆரம்பித்தன. இரண்டு முன்பின் தெரியாத  ஆண்கள் திருமணம் முடித்தால், குடும்ப ஆளுமை  எப்படி இருக்கும்? அதுபோலத்தான், கார்த்திக்கும் ஷெரினும் ஒத்து போவதில் எப்போதும்  ஒரு உரசல் இருந்து கொண்டிருந்தது. எப்படியான உரசல் ?

                                     முதலில் அன்றாட வாழ்க்கை எடுத்துக்கொள்வோம். ஒருவர் சொல்ல, ஒருவர் கேட்க, என்பதுதான் பொதுவான நியதி. காலையில் கார்த்திக் வேலைக்குக் கிளம்பும்போது,' ஷெரின்,நான் கிளம்புறேன் 'என்பான் .ஷெரின் தரப்பில் இருந்து, ' சரிங்க, போயிட்டு வாங்க' என்ற பதிலை அவன் மனம்  எதிர்பார்க்கும். ஆனால், ஷெரினோ பக்கத்தில் நின்றாலும் பதில் ஒன்றும் சொல்ல மாட்டாள்! அவளுக்கு கார்த்திக் பேசுவது காதில் விழவே விழாது! அவளாக கார்த்திக்கிடம் ஏதாவது கேள்வி கேட்டால், அதற்கான கார்த்திக்கின் பதிலை  மாத்திரம் கேட்டுக் கொள்வாள்! இப்போது இந்த சூழ்நிலையில், அவளே வந்து,'என்ன,ஆபீஸ் போறீங்களா?' என்று கேட்டு, அதற்கு கார்த்திக் பதில் சொன்னால், அது மட்டும் கேட்கும்! சிலநேரம் இதற்காக கார்த்திக் இரண்டு மூன்று தடவை ஒரே விஷயத்தை சொல்வான். ஆனால் அது எதுவும் ஷெரின் காதில் விழாது.எப்படிங்க!

                                                               பின்னர் கார்த்திக் தண்ணீர் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஷெரின் ஒரு டம்ளரை தூக்கிக் கொண்டு வருவாள்.  கார்த்திக் தண்ணீர் கொண்டு வருகிறாள் என்று,குடிக்க தயாராவான். ஷெரின் பக்கத்தில் வந்து, டம்ளரை கார்த்திக் கையில் கொடுத்துவிட்டு,' தண்ணீர் குடத்தில் இருக்கு' என்று சொல்லிவிட்டுப் போய்விடுவாள்!தண்ணீர் எதிர்பார்த்த கார்த்திக், சிறிதுநேரம் குழம்பிப் போய் விடுவான்! இது ஆணைக்கு, பதில் ஆணை! ஆங்கிலத்தில் இதை counter instruction என்பார்கள்.இப்படி ஒவ்வொன்றிலும் ஒரு குழப்பம் ! எப்போதும் இரண்டு ஆண் ஆவிகள் மோதுவது போல் ஒரு உணர்வு.

                                                         கார்த்திக் தன் அம்மாவை நினைத்து பார்த்தான். அப்பா, தண்ணீர் என்று சொல்வதற்கு முன்னாலே, அம்மாவுக்கு ஒரு உணர்வு தட்டும். ஒரு டம்ளரில் கொண்டு வந்து கையில் கொடுத்து விட்டு போவார்கள்.இதைத்தான் வள்ளுவர் குறிப்பறிதல் என்று சொன்னார். இந்த அளவு இல்லாவிட்டாலும் வாய் திறந்து கேட்டதையாவது சரியாக செய்ய வேண்டும் அல்லவா? ஆனால், ஷெரினோ டீ கேட்டால் கூட, அதை முன்னால் வைத்துவிட்டு, ஒன்றும் சொல்லாமல் போய்விடுவாள்! செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருக்கும் கார்த்திக் ஒரு பத்து நிமிடம் காத்திருந்து பார்த்துவிட்டு ,' டீ என்ன ஆச்சு?' என்று கேட்டால்,' முன்னால பாருங்க 'என்று பதில் வரும். அதற்குள் டீ ஆறிப் போயிருக்கும்! டீயை கையில் கொடுப்பதற்கும் முன்னால் வைத்து விட்டு போவதற்கும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. டீக்கடையில் கூட அவன் கொண்டு வந்து நம் கையில் கொடுத்து விட்டு போவான் . அதில் நம் மேல் அவன் கொண்ட ஒரு அக்கறை  தெரியும்.

                                           சில நேரம் கார்த்திக்,'ஷெரின், இதை கொஞ்சம் பிடி' என்று ஒரு டம்ளரை நீட்ட, ஷெரின் அதைப் பிடிக்கவே மாட்டாள்! அவள் பாட்டுக்கு போய்க்கொண்டே இருப்பாள். சிறிது நேரம் கழித்து கார்த்திக், கையை நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு முட்டாள் போல் உணர்வார். பிறகு அவரே அதைக் கொண்டுபோய் எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைப்பார்!

                                                அன்புதான் திருமண வாழ்வின் அடித்தளம். மனைவி கணவனை நேசித்தால், அவன் குணம் என்ன, அவன் தேவைகள் என்ன, அவன் எந்த நேரத்தில் என்ன செய்வான், என்பதெல்லாம் புரிந்து கொள்வாள். அதற்கு தகுந்தால் போல நடந்து கொள்வாள்.  இயேசு ஒரு முறை அவர் சீடர்களிடம் சொன்னார்,'நீங்கள் என்னை நேசித்தால், என்னுடைய கட்டளைகளை நிறைவேற்றுவீர்கள் '. ஆக, ஒருவர் சொல்வதை செய்வது தான்  அவர் மேல் நாம் காட்டும் அன்பின் அடையாளம்.

                                                                 ஆனால்,ஷெரினை பொறுத்தவரையில்,அன்பு என்றால்,பெயர் கூட மா என்று சேர்த்து சொல்வது தான்.' என்ன கார்த்தி மா'என்று சொல்லிவிட்டு, சொல்வது எதுவும் செய்யாமல் விட்டு விடுவாள்! அவர்கள் குடும்பத்தை பொறுத்த வரையில் அது தான் அன்பு காட்டுவதாம்!அ தில் கூட 'மா'தான் ,' பா' இல்லை!

                                                                   காலப்போக்கில், ஷெரின் எல்லா விடயங்களிலும் தனியாகத்தான் முடிவெடுக்க விரும்புகிறாள் என்பது தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது.ஒரு சாலையை கடப்பதில் கூட, கையைப் பிடித்து அழைத்து வந்தால், அவள் மறுத்துவிடுவாள். கார்த்திக் முதலில் கடந்து எதிர் பக்கம் போய் நின்று விடுவான். பின்னர் ஷெரின் தனியாக வருவாள்! இது பல இடங்களில் குழப்பத்தை உண்டாக்கியது. கார்த்திக் முன்னாலே போய் காத்திருக்க வேண்டும்! ஷெரின் பயந்தவள். ஆதலால் எல்லாப் போக்குவரத்தும் கடந்த பின் தான் சாலையை கடந்து வருவாள் . அதுவரை கார்த்திக் அவளுக்காக அங்கு பொறுமையாக காத்திருந்து  நிற்கவேண்டும். இந்த தனியாக முடிவு எடுக்கும் பாங்கு,ஷெரினிடம் மிகவும் பலமாக இருந்தது.  ஆதலால் கார்த்திக்கின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் அவள் முடிவை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருந்தது. எடுத்துக்காட்டாக, கார்த்திக் காலையில், டீ தான் குடிப்பான் என்று எடுத்துக் கொண்டால், அவள், அவள் விருப்பத்திற்கு காப்பி போடுவாள். பின்னர் கார்த்திக், நான் டீ தான் குடிப்பேன், என்று சொன்னவுடன் போய்விடுவாள். மறுநாளும் கார்த்திக் அதே போல சொல்ல வேண்டும். இல்லையென்றால் மறுநாளும் காப்பி தான் கிடைக்கும். இப்படியாக, வருடத்தில் 365 நாளும், தினமும் கார்த்திக் சொல்ல வேண்டும்! இதைப் பற்றி கேட்டால், ஷெரினுக்கு கோபம் தான் வரும். ரொம்ப கேட்டால் கண் கலங்கும் . கார்த்திக், இப்படி ஒருவரால் எப்படி செய்ய முடியும், என்று அடிக்கடி யோசிப்பதுண்டு . அவனுடைய அலுவலகத்தில் அவனுக்கு உதவி செய்ய ஆண்டனி என்ற ஒருத்தர் இருந்தார் . ஒருவாரம் பழக்கத்தில், கார்த்திக் காலையில் எத்தனை மணிக்கு டீ கேட்பார், எவ்வளவு சீனி போட வேண்டும்,எந்த நிறத்தில் டீ  இருக்க வேண்டும், எந்தக் கோப்பையில் கொடுக்க வேண்டும், எல்லாம் அறிந்து வைத்துக்  கொண்டார். தினமும் அவரிடம் கேட்க வேண்டாம். சரியாக காலை 11 மணிக்கு ஒரு 'மீடியம் டீ ', கார்த்திக்கு பிடித்த நிறத்தில்,பிடித்த கோப்பையில் வைத்து, சார் டீ ரெடி என்று சொல்லி விட்டு போவார்! பேசாமல் அந்த ஆண்டனியை கல்யாணம் செய்து இருக்கலாமோ என்று அடிக்கடி கார்த்திக்குக்கு தோன்றும்!

                                                                 ஒரு ஆணை, பெண் சிறுசிறு செயல்களால், மகிழ்ச்சி படுத்த முடியும், அதேபோல பெருமளவில் சங்கட படுத்தவும் முடியும். எடுத்துக்காட்டாக, என்னவர்  மாதிரி வருமா? என்று மனைவி பொது வெளியில் சொல்லிவிட்டால் போதும். ஆணுக்கு தான் ஆண் என்ற ஒரு உச்ச உணர்வு வந்துவிடும்! ஒரு ஆணை ஆணாக உணரச் செய்வது பெண்தான். மற்ற ஆண்கள் அல்ல!ஷெரின் கார்த்திக்கை, ஒரு ஆணாக ஒருபோதும் உணர செய்ததே  இல்லை. மாறாக கார்த்திக்கை பலமுறை மட்டம் தட்டியிருக்கிறாள் . அவன் உணர்வுகளை காயபடுத்தி இருக்கிறாள். பல முறை அவனை  uncomfortable ஒரு மாதிரியாக உணரச் செய்திருக்கிறாள். என்ன செய்தால் கார்த்திக்குக்கு பிடிக்காதோ, அதை விரும்பி செய்வாள் ஷெரின். வெளியே சொல்லக் கூடாத சில தகவல்களை யாரிடம் சொல்ல கூடாது என்று கார்த்திக் நினைத்தானோ, அவர்களிடமே உடனே உளறிக்கொட்டி விடுவாள். கார்த்திக்குக்கு பக்கென்று இருக்கும். கார்த்திக் அதைப்பற்றி ஷெரினிடம்  சொன்னால், அதைப்பற்றி ஒன்றும் கவலைப்பட மாட்டாள்!ஒரு sorry கூட சொல்லமாட்டாள்.இதில் கடுப்பேற்றும் விடயம் என்னவென்றால் , பிடிக்காத காரியத்தை செய்து விட்டு , அதை பெருமையாக  சொல்வாள். அதாவது, நீ என்ன சொல்லுவது நான் என்ன கேட்பது என்பது மாதிரி இருக்கும்.சரி, என்ன செய்வது இவள் ஓட்டை வாய் ,இப்படித்தான் எல்லாம் உளறி விடுவாள் என்று சமாதானப்பட முடியாது ,ஏனென்றால் அவள் பிறந்த வீட்டின்  விடயங்கள்  ஒன்றையும் 1யாரிடம் கசிய விடமாட்டாள்!இது எப்படி இருக்கு !

                                                                      மொத்தத்தில், ஆண் பெண் இருவரும் ஒவ்வொரு தண்டவாளம் என்றால், இங்கு ஷெரின் என்ற தண்டவாளம் தனிப் பாதையில் வேறு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. எல்லாவற்றிலும் ஷெரினுக்கு தனி திட்டம்! எடுத்துக்காட்டாக இருவரும் சேர்ந்து ஒரு ஊருக்கு பயணம் செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கார்த்திக் சொல்லும் சாமான்களை ஷெரின் பெட்டியில் வைக்க மாட்டாள். மாறாக அந்த ஊரில் இருக்கும் அவளுடைய உறவினர்களுக்கு /நண்பர்களுக்கு என்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை மறக்காமல் எடுத்து வைப்பாள்!! இதனால் கார்த்திக்கின் திட்டங்கள் எல்லாம் எப்படியாவது குழம்பி விடும். அல்லது குழப்பப்பட்டு விடும்! இந்த முறை எப்படி குழம்பிவிடுமோ என்று கார்த்திக்குக்கு எப்போதும் மனதில் ஒரு படபடப்பு இருந்து  கொண்டே இருக்கும்.

                                                      எல்லாவற்றிலும் ஷெரின் தலையிடுவதால், இது எந்த திசையில் நகருகிறது என்று கார்த்திக்கு பலமுறை தெரியாமலேயே போய்விடும். அவனுடைய முடிவுகள் ஒன்றையும் அவனால் செயல்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக, பக்கத்து வீட்டுக்காரர் 20000 ரூபாய்  கார்த்திக்கிடம் கடன் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். கார்த்திக் இன்னும் சம்பளம் வரவில்லை என்று சொல்லி கடன் கொடுப்பதை மறுத்து விடுகிறார்.ஆனால் கார்த்திக்கு தெரியாமல் ஷெரின் பக்கத்து வீட்டுக்காரரிடம் சம்பளம் வந்ததை பேச்சுவாக்கில் சொல்லி விடுகிறாள்! இப்போது என்ன செய்வது🤔

                                                இப்படி எல்லாம் இருந்தாலும்,சில குடும்பங்களில் மனைவியின் அன்பு இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஒன்று இல்லாமல் ஆக்கிவிடும்.ஆனால் ,இங்கோ  ஷெரினுக்கு கணவன் மேல் எந்தவிதமான அன்பும் கிடையாது. எந்த விதமான பரிவும் கிடையாது.  அதனால் கணவனுக்காக செய்யும் ஒவ்வொரு செயலும், ஷெரினுக்கு ஒரு பெரும் பாரமாக தெரியும். ஊரார்களுக்கு மிகவும் அன்புடன், கனிவுடன்  எந்த உதவியும் செய்வாள்  ஷெரின்! கார்த்திக்கை பொருத்தவரையில்  உணவு உண்ணும் முன் முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அப்படித்தான் சிறுபிள்ளையிலிருந்து அவன் பழகி இருக்கிறான். ஆனால் ஷெரின் அந்த தண்ணீரை கொடுக்கவே மாட்டாள். கார்த்திக் தினமும் தண்ணீர் கேட்க வேண்டும். தண்ணீர் குடிக்காமல் இரும வேண்டும். அதன் பின்னரும் மெதுவாகத்தான் தண்ணீரை கொடுப்பாள்  ஷெரின். 40 வருடங்கள் போராடியும் இன்னும் அது மாறவில்லை. சரி இவளிடம் போராடி தண்ணீர் பெறுவதை விட, நாமே எடுத்து வைத்துவிட்டு பிரச்சனையை தீர்த்து விடலாம் என்று கார்த்திக் முடிவெடுத்தான். தண்ணீரை தேடி போனால், ஷெரின் அது எங்கு வைத்திருக்கிறாள் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை! அவ்வளவு ஒழுங்கற்ற முறையில் வீட்டை வைத்திருந்தாள் ஷெரின்!! ஆக அவளும் தர மாட்டாள், நம்மையும் எடுக்க விடமாட்டாள்! என்ன செய்வது🤔 

                                                                        இது எல்லாவற்றிற்கும் மேலாக அவளிடம் ஒரு கெட்ட குணம்  இருந்தது . அது என்னவென்றால் குடும்பத்தை எப்படி நடத்துவது என்பதில் கணவன்  கார்த்திக்கு ஒரு பங்குமே கொடுக்க மாட்டாள் . ஏதாவது கார்த்திக் குழந்தைகளிடம் ஒன்று சொன்னால் அதை எப்படியாவது இல்லாமல் ஆக்கி விடுவாள். இதனால் கார்த்திக்கின்  வழிகாட்டுதல்  குழந்தைகள் வளர்ப்பில் சிறிது  கூட இல்லாமல் போயிற்று . குழந்தை வளர்ப்பில் அப்பாவின் பங்கு ,ஆண் குழந்தையானாலும், பெண் குழந்தை ஆனாலும் மிகவும் இன்றியமையாதது என்பதை அவள் உணரவில்லை. ஷெரின் தன்னுடைய சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அந்த குடும்பத்தை ,அதன் உள் உறவுகளை நாசம் செய்து விட்டாள் என்றே சொல்லலாம் .ஒரு  குடும்பம் என்றால் ஒருவர் தேவையை மற்றவர் கவனிப்பதுதான் முக்கியம் .அன்பு ஒன்றே அதை பின்னின்று  இயக்கும் இயந்திரம் .ஒருவரால் ஒரு காரியம் முடியவில்லை ,அல்லது மறந்து விடுகிறது என்றால் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் அதை நினைவு வைத்து அவர்களுக்கு அதை செய்து விடுவது தான் அன்பு. ஷெரின் அப்படி நினைக்கவில்லை .ஒருவருக்கு எதுவும் வேண்டுமென்றால் அவர்களே  செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களை எதிர்பார்க்கக் கூடாது. தனித்து இயங்க வேண்டும் என்று ஒரு தவறான கோட்பாட்டை சொல்லிக் கொடுத்து ,அதில் பலமாக வளர வைத்து விட்டாள் .அதனால் ஒருவரை ஒருவர் சார்ந்து  ஜோடியாக வாழும் நிலைமை தேவையே இல்லை என்ற எண்ணத்தை வளர்த்து விட்டாள் .

 மொத்தத்தில் நல்ல ஒரு மண வாழ்க்கைக்கு தேவையானது என்னென்ன என்று பார்த்தால்:

  •  கணவன், மனைவி இருவருக்கும் இடையில் ஒரு நல்ல இணக்கம் .அதாவது இதை எளிதாக சொல்ல வேண்டுமென்றால் இருவரும் ஒரே ஆவியில் ஐக்கியமாக செயல்பட வேண்டும் .
  • இரண்டாவதாக இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். அன்பு தான் மண வாழ்க்கையை ஆள வேண்டும். ஆணவம் ஒருநாளும் ஆள விடக்கூடாது.
  • கணவன் மனைவியை விட வேறு யாருக்கும் அதிகம் முன்னுரிமை கொடுக்கக் கூடாது .அது போல மனைவி கணவனுக்கு தான் முதல் முக்கியத்துவம் கொடுத்து ,அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒரு குடும்பத்தின் தலைவராக அவர் எடுக்கும் முடிவுகளை மனதார ஆதரிக்க வேண்டும் செயல்படுத்த வேண்டும்.
  •  முக்கிய முடிவுகளை இருவரும் கலந்து பேச வேண்டும் .ஆனால் இறுதி முடிவு குடும்பத்தின் தலைவரான கணவருக்கே உண்டு.
  • கணவன் மனைவி அவரவருக்கு அவர்கள் விருப்பங்கள் வேறுபாடாக இருக்கலாம் .தப்பில்லை .ஆனால் அது ஒரு நாளும் மோத கூடாது. கணவனுக்கு பிடிப்பது மனைவி எப்போதும் எதிர்க்கக் கூடாது .அதை அவளுக்கு பிடிக்காவிட்டாலும் கணவனுக்காக  அன்பின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
  • மணமான பின் கணவனோ மனைவியோ தங்கள் பிறந்த வீட்டிற்கு எப்போதும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அதையே பற்றி பேசிக்கொண்டு அவர்களுடன் உள்ள உறவை முன்பு போல் பலமாக வைத்துக் கொண்டு இருப்பது மண வாழ்க்கைக்கு நல்லதல்ல. ஷெரின் காலையில் எழும்பியதிலிருந்து அண்ணன்,அக்கா , தங்கை என்று எல்லோருக்கும் தொலைபேசி அழைப்பு கொடுப்பாள் . எல்லோரிடமும் எல்லா கதையும் ஆர்வமுடன் கேட்பாள் . ஆனால், வீட்டில் இருக்கும் யாரிடமும் எதையும் கேட்பதில்லை.அவள் நினைவெல்லாம் அவர்கள் தான்.இன்னும் பழைய கதைகளையே நினைத்து பேசிக் கொண்டிருப்பாள் . கனவில் ஏதாவது பயந்தால் கூட ,'அக்கா !தம்பி!என்னை காப்பாற்று !' என்று தான் அலறுவார் !  இப்படியான பழக்கம் நல்ல மண வாழ்க்கைக்கு எப்போதும் தடையாகத் தான் அமையும் என்பதை மறக்கக்கூடாது . மணமான பின் தன்னுடைய சொந்த குடும்பத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இருவரும் ஒருநாளும் மறக்கக்கூடாது.
  • மண  வாழ்க்கையில்  ஒரு நாளும் ஒருவர் மேல் ஒருவருக்கு வெறுப்போ ,மன  கசப்போ வந்து விடவே கூடாது .அது  வாழ்க்கையையே மெல்ல  அழித்துவிடும்.

 மொத்தத்தில் நம் வாழ்க்கை , மணவாழ்க்கையா இல்லை பிணவாழ்க்கையா என்பதை தீர்மானிப்பது நாம் தான் என்பதை ஒரு நாளும் மறக்கக்கூடாது.


.