என் குட்டிப் பிள்ளை,பள்ளி முடிந்து ஆவலுடன் ஓடி வந்தாள் .'அப்பா ,நான் பெரியவளானவுடன் உங்களத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் !'என்று ஒரு குண்டை போட்டாள் !நான் சுதாரித்துக் கொண்டு 'இல்லைடா செல்லம் ,மகள் அப்பாவை கல்யாணம் செய்ய முடியாது ,கண்ணு 'என்றேன் .ஆனால் ,அவள் முகத்தில் இன்னும் ஒரு சந்தேகம் இன்னும் நிழலாடிக்கொண்டிருப்பது எனக்கு தெரிந்தது .'யாரோ இவளுக்கு இப்படி தப்பாக சொல்லிகொடுத்திருக்க வேண்டும் .யாராயிருக்கும் ?'என்று நினைத்துக்கொண்டு ,அவளிடம் கேட்டேன் .'ஏன்டா ,அப்படி சொன்னே ?' உடன் அவள் தன் தமிழ் பாடத்தில் உள்ள ஒரு கதையை காட்டினாள் .அதில் ஒரு மகா முனிவர் அவருடைய சொந்த மகளை திருமணம் செய்வதாக ஒரு கதை ! அந்தக் கதை எனக்கும் தெரியும் .ஆனால் ,அதைப் போய் சின்ன குழந்தைகளுக்கு பாடத்தில் வைத்த அரசின் மதியை நினைத்து வேதனைப்பட்டேன் .'நல்லது எது, கெட்டது எது என்று பிள்ளைகள் உணர ஆரம்பிக்கும் வயது ,இளம் வயது தான் .இந்த வயதில் ,நாம் தாம் அதை பிரித்து பார்க்க ,குழந்தைகளுக்கு சரியாக சொல்லிக்கொடுக்கவேண்டும் .அரசின் மதியீனத்தால் ,நம் எதிர் கால சந்ததி,குழம்பி , வழி கெடும் நிலை வரலாம் .நான் ,மகளிடம் 'அது தப்பான கதை .நம்பவேண்டாம் .ஆனால் பாடத்திற்க்காக மட்டும் படித்துக்கொள் 'என்று சொல்லி ,அவள் மனதை மாற்றினேன் .
நல்லதை நல்லது என்றும் ,கெட்டதை கெட்டது என்றும் உணருவோம் !
நம்முடைய பண்பாட்டில் ,கதைகளில் ,பழக்கங்களில் ,பல நல்ல காரியங்களை கெட்டவைகளாகவும் ,பல கெட்ட காரியங்களை நல்லவைகளாகவும் சித்தரிக்கும்,ஒரு போக்கு இருக்கிறது .அது போல் ,எதற்கு கொதிக்க வேண்டும் ,எதற்கு சும்மா இருக்க வேண்டும் என்பதும் தவறாக போதிக்கப்படும் போக்கும் இங்கே காணப்படுகிறது .நான் சிறுவனாக இருந்தபோதே,இவைகளில் பல எனக்கு புலப்பட்டன .தீபாவளி கொண்டாடும் நேரத்தில் ,நான் அம்மாவிடம் கேட்டேன் 'ஏம்மா ,ஒருத்தன் செத்ததை போய் கொண்டாடணும் ?'என்று கேட்டதற்கு பதிலாக 'சும்மா ,புளு புளு ன்னு பேசா தடா ' என்ற அம்மாவின் பதில் என்னை திருப்தி படுத்தவில்லை .அதிலிருந்து ,நானே யோசித்து நாம் பண்பாட்டில் உள்ள தவறான போதனைகளை க்கண்டு பிடிக்க ஆரம்பித்தேன் .அவைகளில் சில இங்கே தருகிறேன் .
தப்பு தப்பா நாம் படித்ததும் ,உணர்ந்ததும் ..
- காவேரி ஆறு கமண்டலத்தில் இருந்து வந்தது !
- அகத்திய முனிவர் தமிழை உருவாக்கினார் !
- தெய்வங்கள் நல்லவர்களாக இருக்கவே முடியாது !அவர்கள் திருடுவார்கள்,பெண்கள் பின்னால் அலைவார்கள்,கொலை செய்வார்கள் ,சதி செய்வார்கள் ,மனைவியை அடிப்பார்கள் .....
- நாம் எப்படியானாலும் குப்பையை தெருவில் எறியலாம் .அரசுதான் தெருவை சுத்தமாக வைக்கவேண்டும் .
- எத்தனை குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளில் விழுந்து இறந்தாலும் ,நாங்கள் அதை மூடி வைக்க மாட்டோம் .ஆனால் போராடுவோம் !
- தலைமேலிருக்கும் மின்சாரக் கம்பியை கூட கவனிக்காமல் தேர் இழுக்கலாம் .மின்கம்பி பட்டு யாராவது செத்தால் 'அவன் தலையெழுத்து !'என்ற போக்கு .
- பாலை சாலையில் ஊற்றி போராடலாம் !உணவின்றி சாகும் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது !
- பழைய துணிகளை ஏழைகளுக்கு கொடுக்க கூடாது !அவர்கள் வாங்கவும் கூடாது !அதற்கு பதில் பழைய துணிகளை எரிக்கலாம் !
- ஆட்டோக்காரனுக்கு 10 ரூ அதிகம் கொடுக்கக்கூடாது ,ஆனால் கபாலி படத்திற்கு 2000 ரூ கருப்பு சந்தை சீட்டு வாங்கலாம் !
- ஒரே தெருதான் .ஆனா ,பக்கத்து வீட்டு க் காரன் சாகக் கிடந்தாலும் உதவ மாட்டேன் !சே !அவன் கீழ் ஜாதியி ல்லே !
நல்ல பதிவு பாராட்டுகள், தொடருங்கள்
ReplyDeleteநன்றி பகிர்கிறேன். நீங்களும் http://kavithaigal0510.blogspot.com-தளத்தின் பக்கம் பார்வையை படரவிடலாமே!
Deleteஅருமை
ReplyDelete