Wednesday, 12 December 2018

தமிழில் வேண்டாமே ஆங்கிலக் கலப்பு ` !

தமிழர்களின் உன்னத  மொழிப்பற்று இந்த உலகே அறியும் .உலகிலே மொழிக்காக தன் உயிரையே தரும் ஒரு இனம் உண்டென்றால் அது  தமிழ் இனம் மட்டும் தான்  .மொழிக்காக இதுவரை, எனக்கு தெரிந்த வரை, ஆங்கிலேயர்கள் தங்கள் உயிர் தந்ததில்லை ;இந்திக்காரர்கள் தந்ததில்லை !மலையாளியோ ,கன்னடரோ தந்ததில்லை ,ஆனால் தமிழர் மட்டும் 18 பேர், 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், இந்திக்கு எதிராக போராடி தன் இன்னுயிர் ஈந்தார்கள் .
                                                அது போல உலகில் எந்த இனமும் தன் மொழிப் பெயரை  தன்னுடைய சொந்தப் பெயரின்  பகுதியாக கொள்வதில்லை .எடுத்துக்காட்டாக ,ஆங்கிலேயர் பொதுவாக English Son என்று பெயர் வைப்பதில்லை .இந்திக்காரன் எவனும் இந்தி கா பேட்டா  என்று பெயர் வைப்பதில்லை .ஆனால் ,தமிழரோ, தமிழ் மகன் ,தமிழ் ,தமிழ் செல்வன் ....என்று எத்தனையோ, தமிழ் மொழியை  மகிமைப்படுத்தும் பெயர்கள் வைப்பதை வழக்கமாய் கொண்டுள்ளார்கள் .
                                                தமிழனுக்கு ,தமிழ் வெறும் பரிமாறும் மொழி அல்ல .அது ஒரு உணர்வு .அது அவன் மூச்சு .அது அவன் ஆவி ,ஆத்துமா ,சரீரம் என்று எங்கும் வியாபிக்கும் ஒன்று . ஆனால் ,இவ்வளவு மொழிப்பற்று கொண்ட தமிழர்கள் ,ஒரு விதமான அதீத ஆங்கில மோகம் கொண்டுள்ளார்கள் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத மாபெரும் உண்மை .அது ஏன் ?
ஆங்கிலம் மேல் ஏன் அந்த அதீத அன்பு ?
                                                                    தமிழர்களுக்கு  ஆங்கிலம் மேல் உள்ள மாபெரும் அன்பிற்கு காரணம் ,தமிழர்களை  பிராமண அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தது ஆங்கிலம் தான் ,என்ற நம்பிக்கை  ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் .மேலும் பிராமணத்தால் நசுக்கப்பட்டு கிடந்த அவர்களுக்கு ஆங்கிலம்  சம உரிமை வழங்கியது .சமஸ்கிருதம் படிக்க தடை செய்யப்பட்ட தமிழர்களை, ஆங்கிலேயர்கள் ஆங்கிலம் படிக்க தடை செய்யவில்லை .மாறாக ஊக்கப்படுத்தினார்கள் .ஆங்கிலம் படித்தவர்களுக்கு ,பிரிட்டிஷ்  அரசில்,பிராமணருக்கு சமமாக  வேலையும்  கொடுத்தார்கள் .
                                  எந்த ஒரு தமிழனும் இன்னொரு தமிழனை சந்திக்கும் போது ,முதலில் தெரிந்து கொள்ள மனதளவில் விழைவது அவரின் ஜாதியை தான் .தமிழ் பேசினாலே கீழ் ஜாதி தான் என்ற ஒரு எண்ணத்தை காலப்போக்கில் விதைத்து விட்டனர் தமிழ் பிராமணர்கள் .இந்த நிலையில் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டவர்கள் உயர் ஜாதி மக்களுடன் எளிதில் சேரும் படியான சூழ்நிலை உருவானது .ஆங்கிலம் பேசும்  கீழ் ஜாதி மக்களை ,யாரும் ஜாதியை துணிந்து  கேட்பதில்லை .ஆங்கிலம் பேசினாலே அவர்கள் உயர் ஜாதி தான் என்ற எண்ணம் விரைவில் நிலைக்க ஆரம்பித்தது .இதனால் பல தமிழருக்கு ஆங்கிலம் மேல் ஒரு தனி  மோகம் வந்தது .நாளடைவில் ஆங்கிலம் அறிந்த தமிழர் எல்லோரும் ஒரு தனி ஜாதியாகவே பார்க்கப்பட்டார்கள் .மதிக்கப்பட்டார்கள் .அவர்களின் உண்மையான ஜாதி எதுவாக இருந்தாலும் ஆங்கில அறிவினால் மதிக்கப்பட்டார்கள் .
 'பாண்டிப் படா 'என்ற மலையாளப் படத்தில் ,ஊரில்  2 பெரிய  தமிழ் தாதாக்கள் சண்டை போடும் நேரத்தில் ,ஒரு பக்க தாதாவின் மகள்  ஆங்கிலத்தில் தாட் பூட் என பேச ,எதிர் பக்க தாதாவே பயந்து போவதாக ஒரு காட்சி அமைத்திருக்கிறார்கள் .ஆங்கிலம் தெரியவில்லை என்றால் ஒரு தாழ்வு மனப்பான்மையும் ,அறிந்திருந்தால் உயர்வு மனப்பான்மையும்  தமிழக பண்பாட்டில் ஊறிப்போய்விட்ட ஒன்று  .நானே இந்த யுக்தியை அலுவலகத்தில் பலமுறை பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறேன் . நான் ஊழியர்களின் தொழிற் சங்கத்தோடு  பேச்சு வார்த்தை நடத்தும் போதேல்லாம் ,முக்கியமான தருணங்களில் ஆங்கிலத்திற்கு சட்டென்று மாறிவிடுவேன் !எதிரணியில் என் ஆங்கிலத்திற்கு இணையான ஆள்  யாரும்  இல்லாததால்  அவர்கள் ஒரு கணம்  திகைப்பது எனக்கு நன்றாகவே தெரியும் ! அவர்கள் யாரும் 'ஏன் ,நீங்கள் ஆங்கிலத்திற்கு மாறுகிறீர்கள் ?'என்று துணிச்சலுடன் என்னைக் கேட்டதில்லை .ஏனென்றால் ,ஆங்கிலம் பேச எனக்கு தெரியாது என்று சொல்ல தமிழர்கள் தயக்கம் காட்டுவது  தான் ..
ஆங்கிலத்தை அலுவலுக்கு மட்டும் வைத்தால் தப்பில்லை !
                                       ஆங்கிலம் ஒரு பன்னாட்டு மொழியாக வளர்ந்து வணிக உலகில் எங்கும் வியாபித்தித்து இருப்பதை யாரும் மறுக்க முடியாது .ஆதலால் ,அதைக் கற்று ,தேர்ந்து ,அலுவல்  தேவைகளுக்கு  மட்டும் பயன் படுத்துவதில் ஒரு தப்பும் இல்லை .ஆங்கிலத்தை வீட்டிற்கும்,சமூக நிகழ்ச்சிக்கும்  கொண்டுவருவது தான் மாபெரும் தவறு .இது தமிழ் நாட்டில் எந்த அளவு மோசமாகி விட்டது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுகள்  இதோ !
                         சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன் .வரவேற்பு நிகழ்ச்சியின் போது ,நிகழ்ச்சிதொகுப்பாளர்  முழுதும் ஆங்கிலத்திலே நடத்தியது எனக்கு என்னவோ மாதிரி ஒரு உணர்வைக் கொடுத்தது .வந்திருந்தவர்கள் எல்லோரும் தமிழர்கள் தான் ,ஒன்றிரண்டு வட இந்தியர்கள் .மலையாளிகளை தவிர .எந்த அமெரிக்கனோ ,ஆங்கிலேயனோ கூட்டத்தில் நிச்சயமாக இல்லை .அப்புறம் ,யாருக்காக இந்த ஆங்கில மேடை பேச்சு ? கூட்டத்திலிருந்த தமிழ் மட்டும் அறிந்த பெரியோர்கள், மேடையில் பேசிய பேச்சு ஒன்றும் புரியாமல் சங்கடப்பட்டார்கள் .இது போதாதென்று ,நிகழ்ச்சி தொகுப்பாளர் பெருமையாக 'ஐ நவ் இன்வைட்  கிரான்னி ......' என்று முத்தம்மாள் பாட்டியை மேடைக்கு அழைக்கிறார் ! முத்தம்மாள் பாட்டிக்கு ஒரு சொல் ஆங்கிலம் கூட தெரியாது !அவர் பாட்டுக்கு வெற்றிலை போட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க ,இன்னொருவர் 'பாட்டி ,உங்களைத்தான் மேடைக்கு அழைக்கிறாங்க !'என்று சொல்ல ...ஒரே கூத்து தான் ,போங்கள் !
                                                  தமிழ் நாட்டின் வணிக நிறுவனங்கள் எல்லாம் தமிழை முற்றிலும் புறக்கணிப்பது இன்னொரு பெரிய அவலம் .பெயர்கள் ஆங்கிலத்திலே இடப்படுகின்றன .(உ -ம்) புட் பிஎஸ்தா ஸ்ட்ரீட் என்று கோவையில் ஒரு உணவகம் .பெயர்ப்பலகைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே வைக்கப்படுகின்றன .அரசு விதிகளின் படி வணிக நிறுவனங்கள் பெயர்ப் பலகை தமிழில் ஆங்கிலத்தை விட பெரிதாக இருக்க வேண்டும் என்பதை யாரும் பின்பற்றுவதில்லை .அப்படியே தவறி தமிழிலும் வைத்தாலும் ,ஆங்கிலம் இமயம் போல அளவிலும் தமிழ் பல்லாவரம் மலை அளவிலும் இருக்கும் .கிராமப் புறங்களில் கூட முழுதும் ஆங்கிலத்தில் பெயர்ப் பலகை வைக்கிறார்கள் .பெயர்ப் பலகைகளை மட்டும் பார்த்தால் தமிழ் நாடு இங்கிலாந்தின் ஒரு பகுதி தானோ என்று ஆங்கிலேயர்கள் சந்தேகப்படும் படி இருக்கிறது .தலைக் கவசத்திற்காக கவலைப்படும் நீதி மன்றமோ அரசு அதிகாரிகளோ இதைக் கொஞ்சமும் கண்டுகொள்வதில்லை .ஜல்லிக்கட்டுக்கு துள்ளி வரும் காளைகள் இதற்கு கிள்ளுவது கூட கிடையாது .ஓவியாவுக்கு ஒன்றரை கோடி வாக்குகள் அளிக்கும் தமிழர்கள் இதை ஒரு பிரச்னையாக பார்ப்பதே இல்லை .
                                                 ஆங்கிலம் தமிழ் சமூக வாழ்க்கையையும்  மிகவும் பாதிக்கும் அளவுக்கு இன்றைய தினம் ஆக்ரமித்து கொண்டிருக்கிறது .வாழ்வின் முக்கிய தருணங்களை ஆங்கிலம் எடுத்துக்கொள்கிறது .பிறந்த நாள் வாழ்த்து தமிழர் ஹாப்பி பர்த்டே  என்கிறார்கள் !காதலியைப் பார்த்து ஐ லவ் யு என்கிறார்கள் !புத்தாண்டுக்கு ஹாப்பி நியூ இயர் என்கிறார்கள் !நண்பனை அழகாக 'நண்பா 'என்று சொல்லாமல் ட் யூ ட்  என்கிறார்கள் !அப்பாவின் பெயரின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் எழுதும் பழக்கம் தமிழரிடையே மட்டும் தான் இருக்கிறது .இது எவ்வளவு கேவலம் என்பதை தமிழர்கள் யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை .இது போதாதென்று ,தன் செல்ல நாய்க்குட்டியிடமும் கூட தமிழர்கள் 'எஸ் ,நோ ' என்று தான் கட்டளையிடுவார்கள் !இதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல ,தமிழ் கவிஞர்கள் இப்போது ஆங்கிலம் கலந்து கவிதை எழுதும் படுகேவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது .சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களில் தாராளமாக ஆங்கிலம் கலந்து பாடியதைக் கண்டுதமிழர்கள்  யாருமே அதிர்ச்சி அடையாது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .
                                             தமிழ்க் குழந்தைகளோ  ஆங்கிலத்தில் விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள் .இதனால் அவர்கள் ஆங்கிலம் தெரியாத குழந்தைகளை விளையாட்டுக்கு சேர்த்து கொள்வதில்லை .எங்களுடைய தெருவில் விடுதலை தினத்தன்று கொடியேற்றிய பின், ஒரு சிறுவன் விடுதலை தினத்தை பற்றி ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தியதை அங்கிருந்த தமிழ் பெரியவர்கள் எல்லோரும் பெருமையுடன் ரசித்தனர் !ஒருவருக்கும் ஒரு சொல் கூட ஆங்கிலம் தெரியாது என்பது சுவையான தகவல் !ஆனால் ,எங்களுக்கு புரியவில்லை என்று யாரும் வாய் திறந்து சொல்லமாட்டார்கள் !அது தான் தமிழன்டா !
ஆங்கிலத்தின் அடிமையா தமிழன் ?
                                                ' இன்று காலை ஹாஸ்பிடல் சென்றேன் .அங்கு டாக்டரை பார்த்தேன் .அவர் பிளட் டெஸ்ட் எடுக்க சொன்னார் .லேபுக்கு போனால் ஈவினிங் வாங்க என்று சொன்னார்கள் .எப்போது என்றால் 6 ஓ கிளாக் ஓகே என்கிறார்கள் .ஹஸ்பண்ட் வர 7 ஆகிரும் ,வழியில் கேஸ் புக் பண்ணனும் .' இது ஒரு சராசரி தமிழனின் பேச்சு வழக்கு .இதில் ஏழைகளும் ,பிச்சைக்காரர்களும் கூட அடங்குவர் !தமிழ் பேச்சில் நஞ்சாக சுமார் 20 % - 30% சொற்கள் ஆங்கிலம் கட்டாயம் கலந்திருக்கும் .இளைய தலைமுறை தமிழர்கள்  40% வரை ஆங்கிலக்கலப்பு செய்கிறார்கள் .பாடல்களிலும் கவிதையிலும் இந்த நோய்  தொற்றியிருக்கிறது .'சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே,அட கலக்குது பார் இவ ஸ்டைலு,சிக்குவாலா சிக்குவாலா மயிலு,இவ ஓக்கேன்னா அடி தூளு'  என்று சொல்லுக்கு சொல் ஆங்கிலத்தை நுழைத்திருக்கிறார்கள் .ஆக ,தமிழ்க்  கவிஞர்களும் எழுத்தாளர்களும் கூட இதற்கு விலக்கல்ல . இந்த தமிழ் சிதைக்கும் போக்கு ஒரு எதிர்ப்பும் இல்லாமல் தமிழகத்தில் வேரூன்றி விட்டது .
                                                 பேச்சுத் தமிழ் தான் இப்படியென்றால் அச்சு ஊடகங்கள் அநியாயத்திற்கு ஆங்கிலக்கலப்பு செய்கின்றன .அமேசான் தமிழ் விளம்பரங்கள் 95% வரை ஆங்கிலக்கலப்பு செய்கின்றன .இந்த விளம்பரத்தில்  6 சொற்கள் ,அதில் 5 ஆங்கிலம் ,1 தமிழ் !
இதைப் பாருங்கள் !
இந்த தமிழ் விளம்பரத்தில் ஆங்கிலம் தான் அக்கிரமித்துக் கொண்டிருக்கிறது .'வெல்க தமிழ் 'என்று தலைப்பில் போட்டுவிட்டு ,தினத்  தந்தி நாளிதழ் கமுக்கமாக 'டி டி எஸ்  நெக்ஸ்ட் 'என்று ஆங்கில இணைப்பு வெளியிடுகிறது !
இது போதாதென்று ,தமிழ் பாடல் காணொளிகளில் ஆங்கிலத்தில் வரிகளை போடுவது இப்போது ஒரு மோசமான பாணியாகிக்கொண்டிருக்கிறது .இதோ பாருங்கள் 'பேட்ட' படப்பாடல் ஒன்றை !
பேட்ட பாடல் 
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்றால் இதைவிட படு மோசமாக ஆகிக்கொண்டிருக்கின்றன . பல நிகழ்ச்சிகளின் பெயர்களே ஆங்கிலத்திலே இருப்பதும் இல்லாமல் ,ஆங்கிலத்திலே அச்சிடப்படுகின்றது .எடுத்துக்காட்டாக 'புல்லெட் நியூஸ் 'என்று பெயரிட்டு ,அதை 'BULLET நியூஸ் ' என்று போடுகிறார்கள் .தொகுப்பாளர்கள் எல்லோரும் பேசும்போது, எப்படியாவது அவர்களுக்கும் ஆங்கிலம் தெரியும் என்று காட்டிக்கொள்ள துடிப்பது நிகழ்ச்சிகளை பார்த்தாலே புரியும் .
ஆங்கிலத்தின் சிந்தனை வழிகளையே பின்பற்றி தமிழ் பேசுபவர்கள் பலர் இன்று உருவாகிக்கொண்டிருக்கிறார்கள் .ஆங்கிலத்தில் ,மேடை பேச்சாளர்கள்,இடை இடையே  கூட்டத்தை நோக்கி 'ஆர் யு தேர் ?'என்பார்கள் .'நீங்கள் கவனிக்கிறீர்களா ?'என்பது அதன் பொருள் .சமீபத்தில் ஒரு தமிழ் பேச்சாளர் ,அதே பாணியில் கூட்டத்தை நோக்கி ,'நீங்கள் இருக்கிறீர்களா ?'என்று தமிழில் கேட்க, கூட்டத்தினர் அனைவரும் குழம்பிப்  போய் விட்டனர் !உலகிலே இயல் ,இசை ,நாடகம் என்ற  3 கிளைகளை கொண்ட ஒரே மொழி தமிழ் .அது மற்ற மொழிகளுக்கு தலைமை ஏற்கும் மொழியே அன்றி ,வேறு எந்த மொழியையும் பின்பற்ற அவசியமில்லை .தமிழர்கள் அதை மறந்து ,ஆங்கில மொழி முறைகளை பின் பற்றுவது வெட்கம் .
                                  இன்னும் இதைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம் .அந்த அளவு தமிழர்கள் ஆங்கில மன நோயாளிகள் ஆகி விட்டனர் .
யார் இந்த நிலையை மாற்றுவது ?
                                                              தமிழர்கள் தன் சொந்த தாய் மொழியை இவ்வளவு மோசமாக சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது  தமிழருக்கே தெரியாது !தெரிந்தால் 8 கோடி தமிழரில் யாராவது இதை எதிர்த்து போராட மாட்டார்களா ? இதைப் பற்றி யாரும் பேசுவது கூட இல்லை .தஞ்சை தமிழ் பல்கலை கழக வேந்தர் இதைப் பற்றி பேசியதில்லை .தமிழ் வளர்ச்சி துறை அரசு செயலர் இதைப் பற்றி பேசியதில்லை .தமிழைக்  கொண்டே ஆட்சிக்கு வந்த தி .மு .க  பேசவில்லை .கலைஞர் பேசியதில்லை .அன்புமணி பேசியதில்லை .திருமா பேசியதில்லை .சீமான் பேசியதில்லை வைரமுத்து பேசியதில்லை .இளையராஜா ஆங்கிலத்திற்கே மாறிவிட்டார் .சமஸ்கிருத திணிப்பை எதிர்க்கும் வீரமணி அவர்கள் இதைப் பற்றி பேசியதில்லை .ஜெயா அம்மா பேசியதில்லை .எதற்கெல்லாமோ வழக்கு போடும் டிராபிக் ராமசாமி கூட இதற்கு போடவில்லை !
ஏன் இந்த நிலை ?கண்முன்னே கற்பழிக்கப்   படும் தமிழ்த்  தாயை காப்பாற்ற யாருமில்லை !ஏன் இந்த அவல நிலை ?
இப்போது தேவை ஆங்கில எதிர்ப்பு இயக்கம் !
                                                ஆக ,தமிழ் நாட்டில் இப்போது உடனடி தேவை ,தமிழில் ஆங்கில கலப்புக்கு  எதிர்ப்பு இயக்கம் ஒன்றே !இது காலத்தின் கட்டாயம் .அழிவின் விளிம்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தமிழை காப்பாற்ற அது ஒன்றே வழி !இல்லையென்றால் ,இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ் 50%ஆங்கிலமாக நிச்சயம் மாறிவிடும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி .இதற்கு ஆராய்ச்சி தேவையில்லை .கண் முன்னே அரங்கேறும் அவலமாய் தெரியும் உண்மை இது .
                                                              இந்த மாதிரி இயக்கத்தை முன்னெடுக்க ,ஆங்கில சித்தப் பிரமையில் மூழ்கியிருக்கும் தமிழ் இனத்தில் உள்ள ஒருவரும் வரமாட்டார்கள் .பிரமையில் இருக்கும் தமிழர்களை உலுக்கி சுய நினைவுக்கு கொண்டுவர ஒரு தடாலடி திட்டம் தேவை .அது தான் 'தமிழில் ஆங்கிலம் கலப்பதை தடை செய்யும் ஒரு சட்டம் !'.இதைக் கொண்டு வந்தால் இந்த விடயம் ஒரு பேசுபொருளாக மாறி தமிழகத்தை உலுக்கி நிச்சயமாக சுய நினைவுக்கு கொண்டு வந்து விடும் ! இதை அரசு தான் செய்ய முடியும் .இதைக் குறித்து பலமுறை,தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை அமைச்சர் திரு .கே .பாண்டியராஜன்  அவர்களிடம் கீச்சு மூலமாக எடுத்துரைத்திருக்கிறோம் .பலமுறை அவர் கீச்சுகளை விருப்பம் போட்டிருக்கிறார் .விரைவில் அந்த சட்டத்தைக் கொண்டு வருவார் என நம்புகிறோம் .தற்போது அவர் தமிழ் நாட்டின் ஊர் /தெருப் பெயர்களை தூய தமிழுக்கு மாற்றும் உன்னத செயலில் இறங்கியுள்ளார் . அதற்காக அவரை பாராட்டுகிறோம் .
                           2021 மாநில  தேர்தலுக்கு முன் இந்த மொழி காக்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது .தாய்த்  தமிழ் ஆங்கிலத்தால் சிதையாமலிருக்க அது ஒன்றே சிறந்த வழியாகப் படுகிறது .
--------------------------------------------------------------------------------------------------------------------------இந்த பதிவு முக்கியமான பதிவு .தமிழ் அன்பர்கள் ஒவ்வொருவரும் இதை குறைந்தது 10 பேருக்காவது பகிரும் படி கேட்டுக்கொள்கிறேன் .நன்றி . 
இது வரையில்,8 கோடி தமிழரில் வெறும் 300 பார்வைகள் தாம் பட்டிருக்கின்றன .விரைவில் குறைந்தது 1000 தொட உதவும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
--------------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, 21 November 2018

கலைஞர் உண்மையில் பிராமணர்களின் எதிரியா ?

கலைஞர் பொதுவாக ,தமிழருக்கு நண்பராகவும் ,பிராமணருக்கு  எதிரியாகவும்  ஊடகங்களில் சித்தரிக்கப் படுகிறார் .
எதை வைத்து அவர் தமிழர் நண்பராகவும் ,பிராமணர் எதிரியாகவும்   பார்க்கப்படுகிறார் ?
இந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டால் உடன் வரும் பதில் ஒன்று,
 'இசுலாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மறக்காமல் அவர்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் கலைஞர் ,தீபாவளிக்கு மட்டும் ஒரு போதும் சொல்ல மாட்டார் '
என்பதாகும் .இந்த  ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு அவர் ஒரு பிராமண எதிரி என்று சொல்லிவிட முடியுமா ?
சரி ,ஒருவர் பிராமண எதிரி என்று எப்படி கண்டு பிடிக்கலாம் ?

  1. அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கூட்டத்தில் அதிகம் பிராமணர்கள் இருக்கமாட்டார்கள் .
  2. அவருடைய தனி அறிவுரை(Personal advisers ) கூறும் கூட்டத்தில் பிராமணர்கள் இருக்கமாட்டார்கள் .
  3. பிராமணர் சம்பந்தப்பட்ட சலுகைகள் அவர் ஆட்சியில் அதிகம்  இருக்காது அல்லது இருந்ததும் குறைக்கப்படும் .
  4. பிராமணர்களின் அரசியல் செல்வாக்கு அவர் ஆட்சியில் கணிசமாக குறையும் .
இவைகளெல்லாம் கலைஞர் ஆட்சியில் அல்லது அவர் தனிப்பட்ட வாழ்க்கையில்  நடந்ததா என்பதை இப்போது ஆராயலாம்.வாருங்கள் ,
1.கலைஞரின் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் பிராமணர்கள்  உண்டா ? .
கலைஞருக்கு ,சாவி ,கி .வா .ஜகன்னாதன் ,தற்போது இந்து என் .ராம் எல்லாம்  மிகவும் நெருங்கிய பிராமண நண்பர்கள் .அதில் இந்து ராம் தினமும் காலையில் ஒரு முறையாவது பேசும் நண்பராம் .
கலைஞர் மறைவிற்கு பின் இந்து குழுமமே அவர் புகழ் பாடி சிறப்பு இதழ்கள் விட்டனர் .  (இந்து ராமின் புகழாரம் )
இந்து குழுமம், பிராமணரான ஜெயலலிதாவிற்கே இந்த அளவு புகழாரம் சூட்ட வில்லை என்பது  கவனிக்கத்  தகுந்தது .
சரி ,பிராமணர் அல்லாத நண்பர்கள் கலைஞருக்கு யார் ,யார் ?யோசித்து பார்த்தால் 'நண்பர் 'என்று சொல்லும் படி வைரமுத்து ஒருவரை தவிர வேறு யாருமேயில்லை !
2.கலைஞரின் தனி அறிவுரையாளர்கள் /ஆலோசகர்கள் எல்லோரும் பிராமணர்களே !
கலைஞர் ஆட்சியில் நிதி பொறுப்பாளர்கள் /செயலர்கள் எல்லோரும் பிராமணர்களே .அவர் ஆட்சியில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளில் பிராமணர்களுக்கு  மட்டும் அவர் முக்கிய தலைமை பொறுப்புகள் வழங்குவது வழக்கம் .
3.இனி கலைஞர் ஆட்சியில் பிராமணர்கள் செழித்து வளர்ந்தார்களா அல்லது நசுக்கப் பட்டார்களா என்று பார்ப்போம் .
அவரது ஆட்சியின் ஒரு வருடத்தை எடுத்துக்காட்டாக எடுத்து ,அவர் அரசு விடுமுறை வழங்குவதில் , ஒவ்வொரு அரசியல் பிரிவுக்கும் எவ்வளவு கனமளித்தார் என்பதை பார்ப்போம் .
-------------------------------------------------------------------------------------------------------------
இதோ 2010 அரசு விடுமுறை பட்டியல் .அரசு விடுமுறை 2010 .
மொத்தம் -24 நாட்கள்.அதில் ,
      எண் . % பிரிவு ---------------------------------நாட்கள் --%

  1. 3% பிராமணர் பண்டிகைகள் --5 நாட்கள் (20 %)
  2. 0.13% ஜைனர்கள் ------------------------1 நாள் (4%)
  3. 5% தெலுங்கர்கள் ----------------------1 நாள் (4%)
  4. 6% இசுலாமியர் -------------------------4 நாட்கள் (16%)
  5. 6% கிறிஸ்தவர் --------------------------3  நாட்கள் (12%)
  6. 89% தமிழர் --------------------------------3 நாட்கள் (12%)
---------------------------------------------------------------------------------------------------------------
ஆக ,3% உள்ள பிராமணர்களுக்கு தான்  அதிக பட்சமாக 20% விடுமுறை நாட்கள் கொடுக்க பட்டுள்ளன .89% தமிழர்களுக்கே 12 % தான்  வழங்கப்பட்டுள்ளது .ஜைனர்கள் 50000 க்கு கீழ் இருந்தாலும் அவர்களுக்கும் ஒரு நாள் கொடுக்கப்பட்டுள்ளது .ஆனால் தமிழ்க் கடவுள் முருகனின் தைப் பூசத்திற்கு மலேசியாவிலே கூட விடுமுறை உண்டு ,தமிழ் நாட்டில் கிடையாது ! 
மேலும் ,கலைஞர் ஆட்சியில் ,பிராமண இசை விழாக்கள் ,கல்வி நிறுவனங்கள் எல்லாம் செழித்து வளர்ந்தன  என்பதை மறுக்க முடியாது .
4.பிராமணர்களின் அரசியல் செல்வாக்கு நன்றாக இருந்ததும் கலைஞரின் ஆட்சியில் தான் .
கலைஞரே அவர் தன் கைப்பட பிராமணர் புகழ் பாடும் 'ராமானுஜர் 'என்ற சரித்திர தொடரை உருவாக்கி அவருடைய சொந்த  தொலைக்காட்சியிலே ஒளிபரப்பினார் . எதிரி என்று காட்டி விட்டு ,பின்னர் அவர்  புகழ் பாடுமளவுக்கு கலைஞர் உயர்ந்து விட்டாரா அல்லது அது அவருடைய பிராமண நட்பின் உண்மை பிரதிபலிப்பா ? என கேள்வி எழத்தான் செய்கிறது  .அதே  கலைஞர்.பெரும் தமிழ் தலைவர்களான அயோத்தி தாசருக்கோ ,வேறு யாருக்குமோ  கூட இவ்வாறாக தொடர் எழுதவில்லை என்பது குறிப்பிட தக்கது .ஒரு குறிப்பிட்ட ஜாதிய செல்வாக்கிற்காக 'பொன்னர் சங்கர் 'கதையையும் எழுதினார் என்பதை மறுக்க முடியாது ..

                                             ஆக ,கலைஞர் பிராமண எதிரி என்ற பிம்பம் அரசியலுக்காக தயாரிக்க பட்ட ஒரு பொய் முகம் .உண்மையில் அவர் பிராமணர்களுக்கு  ஜாதிய முறையில் வழங்கப்பட்ட உயர்  தனி கவுரவத்தை,அவருடைய ஆட்சியில்  தொடர்ந்து அளித்துக் கொண்டிருந்தார்  என்பதே உண்மை .
பாவம் ,தமிழர்கள் !என்ன சொன்னாலும்,அதை உண்மை என்று  நம்பி ஏமாறும் அப்பாவித் தமிழர்கள் ! சமயத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் திராவிடக் கட்சிகளை பற்றி சொல்வது உண்மை தானோ என்று எண்ணத்தோன்றுகிறது !
------------------------------------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு: இது கலைஞரை பற்றிய ஒரு  முது நிலை  பட்டப்படிப்பு  (அரசியல்)மாணவரின் ஆய்வுக்கட்டுரை .உண்மையா ,இல்லையா என்பதை நாம் தாம் தீர்மானிக்க வேண்டும் .
இதைக்குறித்த வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன .
===================================================================



Monday, 5 November 2018

தமிழர்கள் இந்துக்களா ?

சமீப காலங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு தலைப்பு 'தமிழர்கள் இந்துக்களா ?'என்பதாகும் .தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று, உறுதியாக  நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் ,மதுரை ஆதீனத்தின் தலைவரும் கூறியிருக்கிறார்கள் .
இதோ அதன் காணொளிப்பதிவுகள் :
சீமான் பேச்சு

மதுரை ஆதீனம் கூற்று

இவர்கள் சொல்வது உண்மை தானா  ?தமிழர்கள் உண்மையில் இந்துக்கள் இல்லையா ?இந்துக்கள் இல்லையென்றால் பின்னர் அவர்கள் யார் ?இதைக் குறித்து இப்போது நாம் விவரமாக ஆராயலாம் .
முதலில் 'இந்துக்கள் 'என்றால் யார் ?.
இந்தியாவின் முதல் குடிகணக்கு (Census) ஆங்கிலேயர்களால் 1872 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது .அப்போது ஆங்கிலேய குடிகணக்கு ஆணையர்,சட்ட மேதை அம்பேத்கர் அவர்களிடம் ஒரு கேள்வி எழுப்பினார் .அது என்னவென்றால் 'குடிகணக்கு எடுக்கும் போது ஒரு இந்துவை எப்படி அடையாளம் காண்பது ?'
 இந்து மதத்தை கரைத்து குடித்த அம்பேத்கருக்கே அந்த கேள்வி ஒரு பெரிய சவாலாக அமைந்தது !கிறிஸ்தவன் என்றால் கிறிஸ்துவை பின்பற்றுபவன் .முஸ்லிம் என்றால் நபிகளை பின்பற்றுபவன் .பௌத்தன் என்றால் புத்தரை பின்பற்றுபவன் .இந்து என்றால் ?
இந்து என்றால் யார் என்பதை அடையாளமிட வேண்டுமென்றால் ,அனைத்து இந்துக்களிடமும் காணப்படும் ஒரு பொதுவான அம்சத்தை சொல்லவேண்டும் .ஆராய்ந்து பார்த்தால் அப்படி பொதுவான அம்சம் என்று எதுவும் அம்பேத்காருக்கு புலப்படவில்லை .பொதுவான கடவுள் இல்லை .பொதுவான பண்பாடு இல்லை ,பொதுவான பண்டிகை இல்லை .தீர யோசித்து பார்த்தால் ஒன்றே ஒன்று தான் எல்லா இந்துக்களிடமும் பொதுவாக காணப்பட்ட அம்சமாக இருந்தது .அது என்னவென்றால் 'ஏற்ற தாழ்வான சாதிய சமூக அமைப்பில் பங்கு'என்ற ஒரு அம்சம் தான் .ஆனால் ,அதை குடிமை கணக்கு கேள்வியாக கேட்டு உறுதிப்படுத்தப்பட்ட பதில் பெறமுடியாது .முடிவில் 'இந்து 'என்றால் என்ன என்பதை வரையறை படுத்த முடியாமல் போனதால் 'கீழ்க்கண்டவாறு அடையாளப்படுத்த தீர்மானிக்க பட்டது .
"யார் யார் இசுலாமியர் ,கிறிஸ்தவர் ,ஜைனர் ,பௌத்தர் ,சீக்கியர் பார்சி இல்லையோ ,அவர்கள் இந்து என்று கணக்கெடுக்கப்  படுவர் '
இந்த வரையறை சரியான வரையறை என்று சொல்லமுடியாது .எடுத்துக்காட்டாக ,ரோசா மலரை எப்படி வரையறைப்படுத்தலாம் ?பொதுவாக சிகப்பு நிறம் ,நல்ல மணம் ,கிளையில் முள் உள்ள ஒரு மலர் எனலாம் .அதற்கு பதில் ,எது எது மல்லிகை ,முல்லை ,கனகாம்பரம் ,அது ,இது இல்லையோ அது தான் 'ரோசா 'என்று சொன்னால் எப்படி இருக்கும் ?அப்படி சொல்வது  போல் தான் 'இந்து 'என்ற சொல்லின் இந்த வரையறையாகும்.
'இந்து 'என்ற சொல்லின் வேரியல் 
'இந்து 'என்ற சொல் 'சிந்து 'என்ற தமிழ் வேரிலிருந்து உருவான ஒரு சொல்லாகும் .'சிந்து 'என்றால் என்ன பொருள் ?
ஆக ,'சிந்து 'என்றால் 'கடல் ,நீர் ,பெரும் ஆறு என்ற பொருள் படும் .'சிந்து 'நதி கரையில் வாழ்ந்த மக்கள் 'சிந்துக்கள் ' அல்லது மருவிய 'இந்துக்கள் 'ஆவர் .ஆக ,'இந்து 'என்றால் இடம் சார்ந்த பொருள் படும் .அந்த சொல்லிற்கு மதம் சார்ந்த பொருள் முதலில் இருந்தது கிடையாது .விக்கிப்பீடியாவின் படி இந்த'இந்து 'என்ற  பதம் மதம் சார்ந்த பொருள் படும் படியாக முதன் முதலில் பயன்பட்டது கி .பி .7ஆம் நூற்றாண்டில் தான் .பின்னர் ,18வது நூற்றாண்டில் 'இந்துயிசம் 'என்ற ஆங்கில சொல்'இந்தியாவின் மதம் ,சித்தாந்தம் ,கலாச்சாரம்' இவைகளைக் குறிக்கும் சொல்லாக  நுழைக்கப்பட்டது .
தமிழர் இந்துக்களா ?
ஆக ,'இந்து 'என்றால் என்ன என்பதை விபரமாக புரிந்துகொண்டோம் .அந்த சொல்லிற்கு ஒரு ஒத்துக்கொள்ளக்கூடிய வரையறை இல்லை என்பதையும் அறிந்து கொண்டோம் .இப்போது ,நம்முடைய தலைப்புக் கேள்வி 'தமிழர் இந்துக்களா 'என்பதை பற்றி பேசலாம் .
தமிழருடைய பல்லாயிரம் ஆண்டு வரலாற்றில் 'இந்து 'என்ற சொல் எதிலும் காணப்படவில்லை என்பது தான்,தமிழர் இந்து அல்ல என்பதற்கு  நம்முடைய முதல் சீரிய சான்றாகும் .கீழடி அகழ் ஆய்வில் கூட மதம் சார்ந்த பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது இதற்கு இன்னொரு சான்றாகும் .இந்துக்களின் முக்கிய அடையாளமாகிய சாதிய சமூக முறை தமிழரின் அற வாழ்வில் எப்போதுமே இருந்ததில்லை .தமிழருக்குள் உட்பிரிவுகள் இல்லை என்று சொல்ல முடியாது .ஆனால் ,அது உயர்வு தாழ்வான சாதிய முறையல்ல .தமிழனையும் தமிழனையும் பிரிக்கும் எந்த ஒரு சாதிய அமைப்பில்லை .
தமிழரின் வரலாற்றை தீர ஆய்ந்து பார்த்தால் அவர்களின் மதம் கீழ்க்கண்டவையாக தெரிகிறது :
  1. ஆசீவகம் 
  2. பௌத்தம் 
  3. ஜைனம் 
  4. சைவம் 
  5. வைணவம் 
  6. கிறிஸ்தவம் 
  7. இசுலாம் 
ஆக ,தமிழர் இந்துக்கள் இல்லை என்பதை மேற்கண்ட சான்றுகள் மூலமாக உறுதியாக சொல்லலாம் .



Sunday, 14 October 2018

சமூக நீதியை பற்றிய இந்த கருத்து யாருடையது ?வைரமுத்துவா ,இளையராஜாவா ,பா.ரஞ்சித்தா ?

தமிழ் சமூகத்தில்முதலில் சமூக நீதி இயக்கத்தை  விதைத்தவர் யார் ?
-------------------------------------------------------------------------------------------------------------------
நாகரிகத்தின் உச்சியில் இருந்த தமிழர் எல்லாத் துறைகளிலும், எல்லா இனத்தவரையும் மிஞ்சி, எட்டா உயரத்தில் எப்போதோ இருந்தனர் .உலக மொழிகளின் தாயான தமிழ் தான் அவர்கள் பேசிய உயர் மொழி .இயல் ,இசை ,நாடகம் என்ற 3 கிளைகள் கொண்ட மகத்தான மொழி தமிழ் .யானைக்கு 60 சொற்கள் ,சிங்கத்திற்கு 24 சொற்கள் கொண்ட மொழி அது .பரிசுத்த வேதாகமத்தில்'பாபேல் கோபுரத்திலிருந்து 'தான் உலக மொழிகள் யாவும் உருவாகியதாக கூறப்படுகிறது . அங்கு குறிப்பிடப்படும் 'பாபேல் கோபுரத்தில் 'பேசப்பட்ட முதல் மொழி தமிழ் தானோ என்று சொல்ல பல சான்றுகள் உள்ளன . 
கணக்கியலில் மிக பெரிய எண் ஆன ,ஒன்று 22 மேல் உயர்த்தப்பட்ட எண்ணுக்கும் தமிழில்  ஒரு  சொல் உண்டு ;மிகச்சிறிய பாகமான எண்ணுக்கும் பெயர் உண்டு .விண்ணியலியலிருந்து உளவியல் வரை தமிழர் தீண்டாத துறையே இல்லை எனலாம் .தற்போதைய 'ராக்கெட் விஞ்ஞானம் 'கூட பண்டைக்காலத்தில் தமிழில் 'வாண சாத்திரமாக 'இருந்திருக்கிறது ..
எல்லாவற்றிலும் உயர்ந்திருந்த தமிழனின் ஒரே பலவீனம் ,அவன் சார்ந்த அற வாழ்வு தான் .சூது ,வாது அறியாத நல்லவனாய் அவனிருந்தது தான் அவனுடைய பெரும் பலவீனமாய் காலம் செல்ல செல்ல  மாறியது .
சூது தான்  உருவாக ,தம்முடைய முக்கிய வாழ்வியல் நெறியாகக்  கொண்ட ஆரியர்கள்,எங்கிருந்தோ வந்து இந்திய துணைக்கண்டத்தில் , கி .மு .காலத்தில்  குடியேறினர் .சொல்லக்கூடிய அளவில் ஒரு மொழியோ அல்லது கலாச்சாரமோ கொண்டு வராத  அவர்கள் எல்லாவற்றிலும் செழித்தோங்கிய தமிழரைக் கண்டு சிறிதும் பயப்பட வில்லை .மாறாக தங்கள் சூதினால் தமிழரை வென்றெடுக்க திட்டமிட்டனர் .சூது ,வாது அறியாத தமிழினம் ,காவல் இல்லாத கலாச்சார கருவூலம் ,வந்தாரை வாழ வைக்கும் ஏமாளித்தனம் ,இவையெல்லாம் ஆரியர்களின் மொழி மற்றும் கலாச்சார திருட்டை  எளிதாக்கின .
முதலில் தமிழ் மொழியின் கூறுகளை  திருடி அதற்கு சிறிது ஒலி முலாம் பூசி அதை 'சமஸ்கிருதம் 'என்றும் ,அது தான் அவர்களின் மொழி போன்றும் ஒரு காட்சியை உருவாக்கினர் .ஆனால் ,'சமம் 'என்றால் 'மட்டம் 'என்று தமிழில் பொருள் .'கிருக்கல் 'என்றால் 'எழுத்து 'என்று பொருள் .ஆக ,'சமஸ்கிருதம் 'என்ற சொல்லே'தூய்மையாக்கப்பட்ட எழுத்து ' என்று தமிழில் பொருள் படும் சொல் தான் ..
காலப்போக்கில்  தமிழ் மொழியின் பெட்டகங்கள் எல்லாவற்றையும் ஒன்று ஒன்றாக மெதுவாக சுரண்டி ,சமஸ்கிருதத்தில் மொழி மாற்றி ,அது தான் மூல மொழி  போல அவர்கள் காட்ட ஆரம்பித்தனர் .தமிழை 'நீச பாஷை 'அதாவது பேயின் மொழி என்றும் ,சமஸ்கிருதம் தேவ மொழி என்றும் பொய்யுரை பரப்பினர் .தமிழர்களை சூத்திரர் என்று ஒரு தாழ்ந்த வகுப்பாக்கி சாதிய முறையை தமிழ் சமூகத்தில் மெதுவாய் நுழைத்தனர் .
ஆக ,ஒரு காலத்தில் மலை போல் உயர்ந்து நின்ற தமிழினம் தற்போது அடிமைப் பட்டது .சாதி என்னும் சதிக்குள் சிக்கியது .ஆக மொத்தத்தில் தமிழர் பிராமணர்களின் அடிமையாய் மாறினர் .தமிழ் அரசர்களும் கூட இந்த சதி வலைக்குள் சிக்கினர் .
தமிழர் சமூகத்தில் கிறிஸ்தவரின் பங்கு 
இந்நிலையில் தான் முதல் நூற்றாண்டில் இந்தியா வந்த கிறிஸ்தவம் எல்லா ஜாதிகளையும் சமமாக பாவித்தது தமிழ் மக்களை மிகவும் கவர்ந்தது .அது ஓரளவுக்கு சாதிய கட்டமைப்பிலிருந்த தாழ்ந்த ஜாதிகளுக்கு விடுதலை வாங்கி கொடுத்தாலும் ,பெரும்பான்மை தமிழர்கள் அப்போதும் அடிமைகளாகவே வாழ்ந்தனர் 
பின்னர் 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிறிஸ்தவர்களின் இரண்டாவது வருகை நடந்தது .ஆம் ,ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வியாபார நிமித்தமாக நுழைந்தனர் .அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததால் எல்லோரையும் சமமாக பாவித்தனர் .ஆட்சி அதிகாரம் கொண்டவரானதால் கீழ் ஜாதிகளுக்கும் கல்வி இலவசமாக வழங்கினர் .கிறிஸ்தவ சமயப்பரப்பாளர்கள் பல இந்துக்களிடம் கிறிஸ்துவை பற்றி சொல்லி மதம் மாற்றினர் .
ஆக ,பிராமணர்களின் ஆதிக்கம் ஆங்கிலேய ஆட்சியில் வெகுவாக குறைந்தது .கீழ் ஜாதி எனப்பட்ட தமிழர்கள் கிறிஸ்தவத்தில் இணைந்து சமுதாயத்தில் நிமிர்ந்து நடந்தனர் .
சமூக நீதி என்றாலே அது அடிமட்டத்திலிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்பதை ஆங்கிலேயர்கள் நன்றாக உணர்ந்து அதை அப்படியே செயல் படுத்தினார்கள் .
ஆக ,தமிழ் சமூகத்திற்கு முதலில் சமூக நீதி வழங்கியவர்கள் யார் என்றால் அது ஐயமின்றி  ஆங்கிலேயர்களே எனலாம் .
ஆங்கிலேயர்களின் ஆட்சி ஜாதிய கட்டமைப்பிற்கு எதிராக அமையவே ,பிராமணர்கள் அவர்களை நாட்டை விட்டு விரட்ட ஒரு வழியாக இந்திய விடுதலை போராட்டத்தை முன்னெடுத்தனர் .அதன் வெற்றியாக ஒரு காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு செல்லும் காலம் வந்தது .இறுதியாக  1947ல் ஆங்கிலேயர் இந்தியாவிற்கு  அரசியல் விடுதலையும் வழங்கி விட்டு நாட்டை விட்டு சென்றனர் .
ஆங்கில கல்வி முறை ,சட்டம் ,கட்டிடங்கள் ,கட்டமைப்புகள் என்று அவர்கள் ஆட்சியின் நன்மைகளை , தங்கள் பங்களிப்பை,அழித்து விட்டு செல்லாமல், இந்திய நாட்டிற்கு அன்பு பரிசாய் விட்டு விட்டு நாட்டை விட்டு சென்றனர் .
ஈ .வே .ராவின் திராவிட சமூக நீதி போராட்டம் 
இந்நிலையில் விடுதலை பெற்ற இந்தியாவில் ஜாதி பழையபடி தலை தூக்கியது .இந்நேரம் தான் ஈ .வே .ரா என்று அன்புடன் அழைக்கப்படும் ஈ வே .ராமசாமி அவர்கள் தமிழ் நாட்டு அரசியல் களத்தில் காலூன்ற தொடங்கினர் .1939 லிருந்து அவர் அரசியலில் ,முதலில் 'ஜஸ்டிஸ் பார்ட்டி 'என்றும் ,பின்னர் 'திராவிடக் கழகம் 'என்றும் களமிறங்கினர் .இவரது கொள்கை முக்கியமாக பிராமணர் எதிர்ப்பு என்பதாகும் .அதனால் பிராமணர்களின் ஆயுதங்களாகிய இந்து மதம் ,மூட நம்பிக்கை ,ஆசாரம் போன்றவற்றயும் அவர் ஒரு சேர எதிர்த்தார் .
ஜாதிய முறையை பொருத்தவரையில் அவர், மேல்/இடை  ஜாதிகளை சேர்ந்த  தெலுங்கர்கள்  மற்றும் மேல் ஜாதி தமிழர்கள் என்ற சமூகத்தின் மேலே ,பிராமணர்கள் கூட்டம் ,ஆதிக்கம் செலுத்துவதை வன்மையாக எதிர்த்தார் .ஆனால் ,அதே பாதிக்கப்பட்ட  மேல் ஜாதியினர், தமிழ் /தெலுங்கு கீழ் ஜாதிகளின் மேல் ஆதிக்கம் செலுத்துவதை எந்த வகையிலும் எதிர்க்கவில்லை என்பது குறிப்பிட தக்கது ..
ஆக ,ஈ .வே .ராவின்  சமூக நீதி போராட்டம் என்பது 'சாதி ஒழிப்பு 'போராட்டம் அல்ல,மேல் /இடை ஜாதிகளின் மேலே பிராமணர் காட்டும் .ஆதிக்கத்தை  மட்டும் ஒழிக்கும் போராட்டமே .அது சாதி ஒழிப்பு போராட்டம் என்றால் ,சாதிய சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்து மதத்திற்குள் இருந்துகொண்டே எப்படி அவர் அதை எதிர்த்து போராடமுடியும் என்ற கேள்வி எழுகிறது .அண்ணல் அம்பேத்கார் போல இந்து மதத்தை உதறி தள்ளி விட்டு சமத்துவம் போற்றும் ,இஸ்லாத்திலோ ,கிறிஸ்தவத்திலோ,பௌத்தத்திலோ ஈ .வே .ரா ,தன் கூட்டத்தோடு சேர்ந்திருக்கலாம் .ஆனால் ,அவர் அப்படி செய்யவில்லை .ஒருவேளை அவர் நாத்திகர் என்பதால் அப்படி செய்யவில்லை என சிலர் நினைக்கலாம் .ஆனால் ,ஈ .வே .ராவை நன்கு புரிந்தவர்கள் அவர் நாத்திக வாதத்தின் அடிப்படையே பிராமணர்களையும் அவர்களின் கருவியான  கடவுள்களை மட்டும் எதிர்க்க தான் என்பதை ஒத்துக்கொள்வர் .
மேலும் அவர் போராட்டம்  சமூக நீதி போராட்டம் என்பது உண்மையானால் அது ஆரம்பிக்கும் இடம் சமூகத்தில் மிகவும் நசுக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டும் .அதை தான் ஆங்கிலேயர் செய்தனர் .ஆனால் ,திராவிட இயக்கத்தில் 'பிராமணர் எங்களை நசுக்க கூடாது ,ஆனால் நாங்கள் கீழ் ஜாதிகளை நசுக்குவோம் 'என்ற கோட்பாடு  வேலை செய்கிறது என்பது தெளிவு .இன்றும் மதுரையில் ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், மேல் ஜாதி தெரு வழியாக செல்லும் போது காலணியை கையில் எடுத்து நடக்கும் கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது .இதை எதிர்த்து தி .க .வின் வீரமணி ஒரு நாளும் போராடியது இல்லை .இனி போராடவும் மாட்டார் . 
ஆதலால் தான் திராவிட கட்சியின் 50 வருட ஆட்சிக் காலத்தில் ஜாதிக் கலவரங்கள் பல அரங்கேறின .அதில் ஒன்றில் கூட பிராமணருக்கு பங்கு கிடையாது .ஆக ,ஈ .வே .ராவின் நோக்கம்  'சமூக நீதி 'அல்ல .மாறாக பிராமணர் ஆதிக்கத்திலிருந்து மேல் /இடை சாதிகளுக்கு விடுதலை .ஆனால் ,கீழ் ஜாதி தமிழர்கள் /தெலுங்கர்களை பிராமணர் கையில் இருந்து  விடுவித்து ,தெலுங்கர் கையில் அடகு வைத்தது தான் எனலாம் .
அவரின் அரசியல் முகமான கலைஞர் மூச்சுக்கு நூறு முறை 'தமிழருக்காக 'வாழ்வது போல் பேசுவார் .ஆனால் ,உண்மையில் கலைஞரின் 'தமிழர் 'என்ற சொல்லிற்கு பொருள் என்ன ?
முதலில் ,பொதுவாக தமிழர் என்றால் யார் ,யார் அடங்கும் என்பதை பார்ப்போம் .
  • பறையர் 
  • பள்ளர் 
  • வன்னியர் 
  • முக்குலத்தோர் 
  • நாடார் 
  • கோனார் 
  • முதலியார்
  •  வேளாளர்
  • தமிழ் செட்டியார் 
  • கௌண்டர் 
  • தமிழ் இசுலாமியர் 
  • தமிழ் கிறிஸ்தவர் 
  • போன்றவர்கள் .
ஆனால் ,திராவிட இயக்கத்தின்,கலைஞரின்  'தமிழர் 'யார்,யார் ?
  • தெலுங்கர் 
  • மலையாளிகள் 
  • கன்னடர் 
  • மார்வாடி 
  • பிராமணர் 
  • தமிழ் உயர் சாதியினர் 
  • தமிழ் முக்குலத்தோர் 
  • ஜாதி கிறிஸ்தவர் (தலித் தவிர )
  • இசுலாமியர் 
ஆக ,திராவிட இயக்கங்கள் அவர்கள்  பட்டியல் படியான  'தமிழர்களை' தமிழ் நாட்டில் முன்னேற்றி இருப்பதை மறுக்க முடியாது .  தமிழ் நாட்டில் மலையாளிகளுக்கு பல கல்லூரிகளும் ,வணிக நிறுவனங்களும் உண்டு .தெலுங்கர்களுக்கு உண்டு .மார்வாரிகளுக்கு உண்டு .கன்னடர்களுக்கு உண்டு .பிராமணர்களுக்கும்  உண்டு .ஆம் .பிராமணர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லாமல் பிராமண எதிர்ப்பாளர் போல் காட்டிக்கொள்வார் கலைஞர் .ஆனால் ,அவர்களுக்கு தாராளமாக பதவி உயர்வு கொடுப்பார் .கல்லூரி தொடங்க அனுமதி கொடுப்பார் .அவர்கள் பண்டிகைகளுக்கு விடுமுறை அளிப்பார் .திருவையாறு இசை விழா நடத்த எல்லா வசதியும் செய்து கொடுப்பார் .பிராமண நண்பர்கள் சாவி ,கி .வா .ஜெகந்நாதன் ,இந்து ராம் எல்லோரிடமும் நெருக்கமாய் இருப்பார் .ஆனால் ,கிட்டத்தட்ட 20% ஜனத்தொகை உள்ள தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒன்று கூட செய்ய மாட்டார் .தலித் ஐ .ஏ .எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுக்க மாட்டார் .இட ஒதுக்கீடு இடங்களை நிரப்பமாட்டார் .ஒரு கல்லூரி கூட அனுமதி அளிக்க மாட்டார் .கர்நாடகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொறியியல் ,மற்றும் மருத்துவ கல்லூரி கூட உள்ளது .ஆந்திராவிலும் உள்ளது .தமிழ் நாட்டில் மட்டும் ஒன்று கூட இல்லாததற்கு காரணம் இந்த திராவிட இயக்கங்களின் தமிழர் /தலித் எதிர்ப்பு கொள்கையே .திராவிட அரசியல் அமைப்புகளிலோ ,அமைச்சர்களிலோ தலித்துகள்  பெயரளவில் ஒருவரோ இருவரோ தான் ஒரு சிறிய அளவில் இருப்பார்கள் .ஒரே ஒரு ராசா அத்தி பூத்ததுபோல் இருப்பார் .அந்த மக்களுக்கு  உரிய 20 % இல்லை 10% அளவில் கூட நிச்சயமாக இருக்க மாட்டார்கள் .
                                    அப்படியென்றால் தமிழர்களுக்கு திராவிட கூட்டத்தினால் ஒரு பயனுமே  இல்லையா ?அப்படி சொல்ல முடியாது .திராவிட கூட்டம் விருந்துண்ணும் மேசையிலிருந்து ஒன்றிரண்டு உணவுத்துண்டுகள் கீழே தவறி விழலாம் .அவைகள் வாயில் எச்சிலோடு காத்திருக்கும் தமிழ் தாழ்ந்த ஜாதிகளுக்கும் ,தலித்துகளுக்கும் கிடைக்கலாம் .எடுத்துக்காட்டாக பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு உயர்த்தியபோது தலித்துகளுக்கும் 2% உயர்த்தப்பட்டது .அது வேறு வழியில்லாமல் நடந்தது .அதையும் நடைமுறை படுத்தும் போது ஒரு பதவியும் கிடைக்காமல் பார்த்துக்கொள்வார்கள் !
இதை போன்றவைகளை தவிர திராவிட அரசியலில் அடிமட்ட தமிழருக்கு இடம் கிடையாது என்பது மறுக்க முடியாத உண்மை .
----------------------------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு :
இந்தக் கருத்து யாருடையதாக இருக்கும் என்று சிந்தித்து பார்த்தேன் !சீமானுடையது போல் தோன்றியது ,ஆனால் இல்லை !வைரமுத்துவின் கருத்தாக இருக்க முடியாது .ஏனென்றால் அவர் கலைஞரின் சுவைஞர் !பா .ரஞ்சித் கருத்து போல் இல்லை .அவர் சமூக நீதி போராட்டத்தில் கிறிஸ்தவத்தின் பங்கை  எப்போதுமே எடுத்து இயம்புவதில்லை .அது போல் இளையராஜாவும் கிறிஸ்தவத்தை வெளிப்படையாக எதிர்ப்பவர் தான் !
ஆக ,இது வேறு யாருடைய கருத்தோ தான் .ஆனால் ,உண்மையில்லை என்று இதை மறுக்க முடியாது .
இந்த பதிவை குறைந்தது தங்களுடைய 10 நண்பர்களுக்கு பகிரவும் .
இதை குறித்த உங்கள் கருத்துக்களையும்  இங்கு  பகிரலாமே !









Friday, 24 August 2018

தமிழ் நாடு தமிழர் கையை விட்டு மெதுவாக நழுவுகிறதா ?

திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி தமிழ் நாட்டின் ஒரு சிறந்த அடையாள உணவாக உருவெடுத்து உலகெங்கிலும் பேசப்பட்டு வரும் ஒரு உணவு  .சமீபத்தில் சென்னையில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி  கடைக்கு சென்று பார்த்தால், உணவு ஆணை எடுப்பவருக்கு தமிழ் தெரியாததை கண்டு திடுக்கிட்டேன் .தமிழ் நாட்டில் ,தமிழ் உணவிற்கு ,தமிழ் அறியாத ஒரு வடவர் ,அதுவும் தமிழ் நாட்டின் தலை நகரில் ஆணை எடுப்பது எதை காட்டுகிறது ?
                                             நீங்கள் சொல்லலாம் ,தமிழர்கள் கூடத்தான் வட இந்தியாவில் வேலை செய்யவில்லையா ?மும்பையில் எவ்வளவு தமிழர்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ?நாம் அங்கு செல்லும் போது ,அவர்கள் இங்கு வருவதில் என்ன தப்பு ?நியாமான கேள்விதான் !
                                 தமிழர்கள் அங்கு செல்வதற்கும் ,வடவர் இங்கு வருவதற்கும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது .தமிழர் அங்கு சென்றால் இந்தி படித்து அங்குள்ளவர்களை மதித்து வேலை செய்வார் .அங்கு வேலை செய்து பிழைப்பதை தவிர ,பெரிய அளவில் சொத்துக்கள் வாங்குவதோ ,அவர்களை அடக்கி ஆளவோ நினைப்பதில்லை .ஆனால் ,இங்கு வரும் பானி பூரிக்காரர்கள் கூட தமிழ் கற்பதில்லை ,வரும் போதே அவர்கள் பணிவோடு வருவதில்லை .ஒரு ஆளப்பிறந்தவரின் ஆணவத்தோடு தான் வருகிறார்கள் .இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று தப்பாக ஆனால் உறுதியாக நம்புகிறார்கள் .படித்தவர் ஆனாலும் பாமரர் ஆனாலும் மோதியைப் போல் அதை உண்மையென்று நம்புகிறார்கள் .
                                  மெதுவாக ஆனால் ஒரு திடமான திட்டத்தோடு அவர்கள் காய் நகர்த்துகிறார்கள் .ரயில் பெட்டி தொழிற்சாலை போன்ற தமிழ் நாட்டின் எல்லா மத்திய அரசு நிறுவனங்களிலும் பெருமளவில் வடவர்கள் நுழைந்து கொண்டு இருக்கிறார்கள் .ஊழியர்கள் எண்ணிக்கையில் தமிழ் நாட்டின் நிறுவனங்களில்   தமிழர்களின் சதவிகிதம் பெருமளவில் குறைக்கப்பட்டு கொண்டிருக்கிறது ஒரு உண்மை .நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தக்காரர்கள் கூட வடவர்கள் அதிகம் வந்து ஆக்கிரமித்து கொண்டிருக்கிறார்கள் .தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற ,தபால் காரர் போன்ற வேலைக்கு கூட வடவர்கள் ஏதோ சித்து வேலை செய்து வருவதை நாம் கண் கூடாக காண்கிறோம் .தமிழர்களை போல் அவர்கள் அற வழியில் தான் பதவிக்கு வர வேண்டும் என்று எண்ணுவதில்லை .தேர்வு கேள்வி தாளை விலைக்கு விற்பது ,வாங்குவது ,விடைகளை பார்த்து எழுதுவது எல்லாம் அவர்கள் பண்பாடு .அவர்களிடம் அந்த வழியில் தமிழர் போட்டி போட நிச்சயம் முடியாது .
                                     இந்தியின் ஆதிக்கம் தென் தமிழ் நாட்டின் எல்லை வரை வந்து விட்டது .கோவையில் 'க்சிப்ட்ட 'என்று அசிங்கமான வடமொழி பெயருடன் ஒரு பல்லடுக்கு வீட்டு வசதி கட்டப்பட்டிருக்கிறது .இதுபோல் பல ,வாயில் நுழையாத வடமொழி பெயருடன் கோவையில் முளைத்திருக்கிறது .வடவர்கள் தமிழ் நாட்டின் பெருவீட்டு திட்டங்களில் அதிகம் நுழைந்து விட்டனர் என்பது கண்கூடு ..அங்கிருக்கும் காவல்காரர்கள்க்கு கூட   தமிழ் தெரியாது .
                                          தமிழ் நாட்டின் விமான நிலையங்களில் இந்தி ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது .சமீபத்தில் திருச்சி விமான நிலையத்தில் காவலர் ஒருவர் ,தமிழில் பேசிய பயணியிடம் இந்தியில் திமிராக பதில் சொல்லி தகராறு ஆகியது .தமிழ் நாட்டில் வேலை பார்க்கும் எவருக்கும் தமிழ் தெரிய வேண்டும் என்பது இன்னும் கட்டாயமாக்கப் படவில்லை .சிங்கப்பூர் விமான சேவை ,பிரிட்டிஷ் விமான சேவையெல்லாம் தமிழில் அறிவிப்பு செய்யும் போது ,தமிழின் பிறப்பிடமான இந்தியாவில் அதை புறக்கணிப்பது எப்படி நியாயம் ஆகும் ?
                                            ஆக ,தமிழ் நாட்டில்  தமிழர் இடம் ,மொழி ,பண்பாடு எல்லாம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது .தமிழ் நாடு தமிழர் கையயை விட்டு நழுவிக் கொண்டிருப்பதை இன்னும் கூட  நாம் உணரவில்லை என்றால் நாம் அறிவில்லாதவர்கள் என்று தான் பொருள் .
சரி ,இதற்கு தமிழர் என்ன செய்யலாம் ?
                                           தமிழ் நாட்டின் இந்த பரிதாப நிலைக்கு வடவர்கள் மட்டும் தான் காரணம் என்று சொல்ல முடியாது .இதற்கு  பெரும் பொறுப்பு தமிழர்கள் தான் என்றால் அதையும்  மறுக்க முடியாது .எப்படி தமிழர்கள் இதற்கு பொறுப்பாக முடியும் ?
  • தமிழ் நாட்டில்  வேலையில்லாத தமிழர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் ?டெக்கான் கிரோனிகில் செய்தி படி 2018 ல்  1 கோடி பேர்  தமிழகத்தில் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் .(தமிழ் நாட்டில் வேலையின்மை ) ஆனால் ,இவர்களுக்கு வேலை கொடுக்காமல் 10 லட்சம் வட இந்தியர்களை தமிழ் நாட்டில் வேலைக்கு இறக்கு மதி செய்து கொண்டு வருவது யார் ? வட வர்களா ? இல்லை !பெரும்பாலும் தமிழ் முதலாளிகள் தாம் முகவர்கள் மூலமாக அவர்களை இங்கு பணியமர்த்துகிறார்கள் . எடுத்துக்காட்டாக ,கோவை மருத்துவ மையத்தில், எங்கு பார்த்தாலும் ,தமிழில் ஒரு சொல் கூட தெரியாதவர்கள் தாம் ,உணவக சேவையிலும் சுத்தம் சேவையிலும் இருக்கிறார்கள் .ஏன் தமிழர்கள் தமிழர்களை பணியமர்த்தக் கூடாது ?உலகெங்கும் தமிழர்கள் வேலை செய்யும் போது தமிழ் நாட்டில் மட்டும் ஏன் செய்ய மாட்டார்கள் என்று நினைக்க வேண்டும் ?
  • அடுத்ததாக ,இங்கு உணவகத்தில் வேலை செய்யும் வடவரிடம்  'தண்ணி கொண்டு வா 'என்றால் அவர்கள் பாட்டுக்கு கேளாதது போல் போய் விடுகிறார்கள்.இதற்கு காரணமும் தமிழர் தான் .இறக்குமதி செய்யப்பட்ட  அவர்களுக்கு அடிப்படை தமிழ் கூட சொல்லி கொடுப்பதில்லை .அவர்களாக கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லாதவர்களுக்கு நாமாக தமிழ் சொல்லிக் கொடுத்தால் ,ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயமாக பயனடைவார்கள் .இப்போது வட மானில தொழிலாளர்களுக்காக தமிழ் கடை உரிமையாளர்கள் இந்தி படிக்கும் நிலைக்கு தள்ளப் படுகிறார்கள் .குறிப்பாக ,அலைபேசி மறு ஊட்டம் செய்ய வரும் வட வர்களிடம் பேச இந்தி படிக்கும் நிலை வருகிறது .கேரளா வரும் வடவர்களுக்கு ,கேரள அரசே இலவசமாக மலையாளம் கற்றுக் கொடுக்கிறது .அது போல் தமிழக அரசோ அல்லது தமிழ் அமைப்புகளோ செய்யலாமே !
  • தமிழ் நாட்டின் பணம் சுரக்கும் பசுக்கள் எல்லாம் அந்நியர் கையில் தான் உள்ளது .எடுத்துக்காட்டாக ,தமிழ் திரை துறையை சொல்லலாம் .மலையாளத்து மக்கள் திலகம் கன்னடத்து பைங்கிளியோடு ஆட ,பின்னணியில் ஆந்திர குயில் சுசிலா பாட கைத்தட்டலோடு காசும் கொடுப்பது மட்டும் ஏமாந்த தமிழர்கள் !எல்லோரையும் வரவேற்கும் தமிழனை மதிக்கிறார்களா வந்தவர்கள் ?இல்லை ,வீட்டார்களுக்கு விருந்தாளிகள் குழி பறிக்கிறார்களா ?விடை உங்களுக்கே தெரியும் !
  • காட்சி ஊடகங்களில் இந்தி விளம்பரங்கள் வருகிறதென்றால் அதற்கு காரணம் அதன் தமிழ் உரிமையாளர்களே .அவைகளை காட்ட முடியாது என்று தமிழுக்காக அவர்கள் மறுப்பதில்லை .பணத்திற்காக தமிழை விற்று விடும் அவல நிலையை தான்  காண்கிறோம் .
  • மத்திய அரசின் திட்டங்களை புரியாத இந்தியில் விளம்பரம் செய்து ,தமிழர்களுக்கு அதன் பயன் கொஞ்சமும் செல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள் .எடுத்துக் காட்டாக ,மலிவு விலையில் மருந்து கிடைக்க ஒரு மத்திய அரசின் திட்டம் உள்ளது .இதன் பெயர் வாயில் நுழையாத 'ஜன் அவவ்சதி  கேந்திர '.எந்த தமிழருக்கும் இது புரிய வாய்ப்பில்லை .புரியாததால்  இந்த திட்டத்தின் கீழ் தமிழர்கள் பயன் பெற மாட்டார்கள் .இந்த போக்கை தமிழக அரசு எதிர்த்து ,அந்த திட்டங்களுக்கு தமிழ் நாட்டில் தமிழ் பெயரிட வலியுறுத்தலாம் .தமிழக அரசே செயல் படுத்தும் திட்டங்களுக்கு  அவர்களே தமிழ் பெயரிடலாம் .எடுத்துகாட்டாக ,'ஸ்வட்ச் பாரத் ' என்பது 'தூய்மை இந்தியா 'என மொழி பெயர்க்கலாம் .
  • தமிழர்கள் தங்கள் நிலப்பரப்பை அதிகரிக்க முயற்சி எடுப்பதில்லை என்பது வருத்தத்திற்கு உரிய ஒரு விடயம் ஆகும் .எடுத்துக்காட்டாக ,மும்பை தாராவியில் சுமார் 5 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் .ஆனால் ,தாராவியின் பெயர் 'தமிழ் நகர் 'என்று மாற்றப்பட வில்லை .பெங்களூரில் 22 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் .பெங்களூரின் ஒரு பகுதிக்கும் தமிழ் பெயர் இடப்படவில்லை .ஆனால் ,தமிழ் நாட்டின் கோவையில் ,எங்கிருந்தோ வந்த தெலுங்கர்கள் ,ஒரு தெலுங்குபாளையம் 'என்று ஒரு பகுதிக்கு துணிச்சலாக பெயர் வைக்கிறார்கள் .'நாயுடு பேட்டை,கொண்டாரெட்டி பட்டி ,ரெட்டியார்பட்டி  'என்கிறார்கள் .வடஇந்திய மார்வாடிகள் ,சென்னையின் ஒரு பகுதிக்கு 'சௌகார்பேட் 'என்று பெயரிடுகிறார்கள் .தமிழ் நாட்டின் பல பகுதிகள் /தெருக்கள் தமிழர் அல்லாதவர் பெயரில் இருப்பதற்கு தமிழரின் ஏமாந்த குணமே காரணம் என்கிறார்கள் தமிழ் ஆய்வாளர்கள் ..தமிழ் நாட்டில் எங்கேயாவது ஒரு 'பறையனூர் ,நாடார் மங்கலம் ,வன்னியபுதூர் ,பள்ளனூர்  என்றெல்லாம் தமிழர் பெயரில் ஊர்களோ ,இடங்களோ பார்த்திருக்கிறீர்களா ? அம்மாதிரி பெயர்கள் பிரிவினையை தூண்டும் ஜாதிப் பெயர்கள் என்று சொல்லிவிடுவார்கள் .அது போல் தானே 'தெலுங்குபாளையம் '?அதை ஏன் நாம் எதிர்ப்பதில்லை ?இதுவரை இதைப்பற்றி சிந்தித்திருக்கிறீர்களா  ?
  • நம்மில் எத்தனை பேர் உத்தர பிரதேசில் நிலம் வாங்கி வைத்திருக்கிறோம் ?ஆனால் ,வட இந்திய நில நிறுவனம் ஒன்று கோவில்பட்டி அருகில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களே வாங்கி வட நாட்டவர் பெயரில் பதிவு செய்துகொண்டிருக்கிறது .நெல்லை மாவட்டத்தில் சுமார் 7000 ஏக்கர் நிலத்தை ஒரு பணக்கார மலையாளி வாங்கியிருக்கிறார் .ஊட்டி ,குன்னூர் ,கொடைக்கானல் போன்ற மலை ஊர்களில் எல்லாம் வடவரும் ,மலையாளிகளும் நிறைய சொத்துக்கள் வாங்குகிறார்கள் .கல்லூரி ,மருத்துவமனை ,வியாபார இடங்கள் என்ற பெயரில் தமிழ் நாட்டில் தமிழரல்லாதோர் இடங்களை வாங்கி வைத்திருக்கிறார்கள் .விற்பது தமிழர்கள் தாம் .தமிழர்கள் ,தமிழருக்கு தான் நில விற்பனையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஏன் ஒரு உணர்வில்லை ?
  • முடிவாக ,தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா தொழிலகங்களும் ,நிறுவனங்களும் குறைந்த பட்சம் 75% தமிழர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசு சட்டம் இயற்ற தமிழர்கள் கேட்க வேண்டும் .
இவையெல்லாம் செய்யா விட்டால் என்ன ஆகும் ?பெரிதாக ஒன்றும் நடக்காது !நாம் வீடில்லாத அனாதைகள் ஆவோம் !அவ்வளவு தான் !உலகாண்ட தமிழர்கள் தம் பெரும் நில பரப்பை மெதுவாக இழந்து ,இழந்து ,ஒரு சிறிய நிலப்பரப்பான தமிழ் நாட்டில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .அதுவும் போய்விடும் .அவ்வளவுதான் !
                                                                             சரி , நிலப்பரப்பை அதிகரிக்க தான் தமிழனுக்கு எண்ணம் இல்லை .இருக்கும் நிலப்பரப்பை காக்க வேண்டும் என்ற எண்ணமாவது தமிழனுக்கு உண்டா என்றால் ,அதுவும் இல்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது .
 இந்தியாவின் பூர்வ குடிகள் தமிழர் தாம் என்பதை அறிஞர் அம்பேத்கர் அவர்களே சொல்லியிருக்கிறார் .பூர்வ குடிகளாக ஒரு சமயம் இந்திய துணைக்கண்டம் முழுவதும் தமிழர் கையில் இருந்தது .முதலில்  குமரிக் கண்டத்தை இழந்தோம் .பின்னர் சிந்து நதி பரப்பினை இழந்தோம் .சமீபத்தில் மொழிவாரி பிரிப்பின் போது தேவிகுளம் ,பீர்மேடு ,சித்தூர் ,கோலார் போன்ற நிலப்பரப்பு மொத்தம் சுமார் 70,000 சதுர கிலோமீட்டரை இழந்தோம் .
                             போதாதென்று ,இந்தியாவிற்கு வெளியே சுமேரியாவை இழந்தோம் .ஆஸ்திரேலியாவை இழந்தோம் .ஆப்பிரிக்காவை இழந்தோம் .ஈழத்தை இழந்தோம் .
                                               இப்போது இருப்பதோ சரியாக 1,30,000 சதுர கிலோமீட்டர் பரப்புடைய ஒரு சிறிய தமிழ் நாடு தான் .இதையும் தமிழர்களிடம் இருந்து மெதுவாக சுரண்டும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது .ஒரு இனம் தம் நிலத்தை  இழந்தால் அது  அழியும் நிலைக்கு தள்ளப்படும் .அதனால் தான் நாய் கூட தன் நிலப்பரப்பை பகைவர்களிடமிருந்து உயிரைக் கொடுத்தேனும் காக்கும் .
                               தமிழ் நாட்டை  இழந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு ஒரே வழி தான் மிஞ்சும் .அவர்கள் கடல் வாழ் உயிரினமாக மாறி ,இந்து மாக்கடலில் குதிப்பது ஒன்று தான் அவ்வழி !
                    தூங்கியது போதும் தமிழா ! விழிக்கும் நேரம் வந்து விட்டது !ஏமாந்தது போதும் !எழுந்து வா நம் இனம் காக்க !நம் நிலம் காக்க !

Monday, 11 June 2018

எம் .ஜி .ஆர் இருந்திருந்தால் 'காலா' வில் நடித்திருப்பாரா ?


எம் .ஜி .ஆர் ஒரு ஏழைப் பங்காளனாக திரையிலும் ,நிஜ வாழ்க்கையிலும் திகழ்ந்தார் என்பதை நாம் மறுக்க முடியாது .எல்லா ஏழைகள் பாத்திரத்திலும் அவர் தோன்றி ஜொலித்திருக்கிறார் .மீனவனாக வருவார் .ரிக்க்ஷா ஓட்டியாக வருவார் .தொழிலாளியாக தோன்றி முதலாளியை எதிர்ப்பார் .உழவனாக வருவார் .'நிழல் வேண்டும் போது ,மரம் ஒன்று உண்டு ;பகை வந்த போது ,துணை ஒன்று உண்டு !'என்றெல்லாம் பாடுவார் !
ஆனால் ,இவர்கள் எல்லோருக்கும் மேலாக துன்பப்படும் /துன்பப்படுத்தப் படும் 'தலித்தாக 'மட்டும் வரவே மாட்டார் !
                                                                                   அது போல் ,கலைஞர் கொடுங்கோல் அரசருக்கு எதிராக கொந்தளிக்கும் வசனங்களை அனலாய் ஊற்றுவார் .அந்தணரின் கொள்கைகளுக்கு எதிராய் பாமரனுக்காக எழுதுவார் .ஆனால் ,ஒரு படத்திலாவது தலித்துக்கு சாதகமாய் ,தீண்டாமைக்கு எதிராய் அவருடைய எழுது கோல் கர்ஜித்தது உண்டா ?
                         நீண்ட   இந்திய திரை வரலாற்றில் சிவாஜியாகட்டும் ,மம்மூட்டியாகட்டும் ,அமிதாப் ஆகட்டும் ,ஏன் ஒருவர் கூட ஒரு  பாதிக்கப்பட்ட தலித்தாக ஒரு படத்தில் கூட நடித்ததில்லை ?
                                        இவர்கள் யாரும் செய்ய மறுத்ததை ரஜினி துணிச்சலுடன் செய்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரியது .இன்று இந்தியா முழுவதும் 'காலா'வின் வசூலை பற்றி பேசாமல் ,ரஞ்சித்தின் கருத்து புரட்சி பற்றி பேசுவதே அவருக்கு ஒரு பெரிய வெற்றியாகும் .
 '                         திரை துறையும் ஏன் சாதியம் பார்க்கிறது ?'என்ற கேள்வி பாலிவுட் ,கோலிவுட் தளங்களில் பேச்சாக மாற வைத்திருக்கிறார் இயக்குனர் பா .ரஞ்சித் !ஒரு வேளை இந்தப் படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தால் கூட  ,அது பா .ரஞ்சித் அவருடைய கருத்து புரட்சிக்கு கொடுத்த விலையாக எடுத்துக்கொள்ளலாமா ? .இல்லை ,தலித் அல்லாதவர் இந்த திரைப் படத்தை ஆணவக் கொலை செய்ததாக எடுத்துக்கொள்ளலாம் !எதுவாயிருந்தாலும் ,திரைத் துறையில் ஒரு மாபெரும் கருத்தியல் புரட்சி நடந்ததை திருப்பி அனுப்ப முடியாது !பற்பசை குழாயிலிருந்து வெளியே பிசுக்கப்பட்ட பசையை போல !

Thursday, 7 June 2018

அந்த காமக்கண்கள் தந்தது யார் ?

ஓவ்வொரு ஆணின்  வாழ்விலும்  பெண்  என்பவள் ஒரு பெரும்  பங்காற்றுகிறாள் என்பதை மறுக்க முடியாது .பிறந்ததும் தாயின் காக்கும் அரவணைப்பு .பின்னர் அன்பு அக்கா .அடிப்பதற்கு ஒரு அழகான குட்டித் தங்கை !பின் இளமையில் கிளுகிளுப்பூட்டும் ஜோடிப் புறவாக ஒரு இளம் பெண் !பின்னர்  மனைவி !மகள் !பேத்தி என்று  !
                       இவர்கள் எல்லோருக்கும் ஆண் தனித்  தனிப்   பார்வை வைத்துள்ளான் .பொதுவாக அன்புக் கண்ணோடு தான் எல்லாப் பெண்களையும்   அவன் பார்க்கிறான் .இதற்கு விலக்கு  உண்டு .அத்தை மகளையோ ,அல்லது காதலியையோ மட்டும் காதல் கண்ணோடு அவன் பார்க்கக்கூடும் .மணமான பின் மனைவியை அவன் காமக்கண்ணோடு  பார்க்கவும்    உரிமையுண்டு .
                                                       இதுவரை இந்த நடை  முறை நம் சமுதாயத்தை நல்ல முறையில் இயக்கி கொண்டிருந்தது .குட்டி பெண்கள் தெருவில் விளையாடி கொண்டிருந்தால் ஆண்கள் அவர்களை அன்புடன் கன்னத்தை தட்டி விட்டு ,மகள் போல் கொஞ்சி விட்டு செல்வது வழக்கம் .
                                          ஆனால் ,சமீப காலத்தில் இந்த பார்வை  மாறி ,கோயிலில் விளையாடிக்  கொண்டிருந்த ஒரு குட்டி பாப்பாவை பூசாரியே மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்முறை செய்திருக்கிறார் . சித்தப்பா ஒருவர் , மகள் முறையில் உள்ள ஒரு  சிறுமியை காமக் கண்களோடு பார்த்திருக்கிறார் .ஆசிரியர் ,மாணவியை மனைவியாக பார்த்திருக்கிறார்.70 வயது பாட்டியை பலர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்முறை செய்திருக்கிறார்கள் .குர்கானில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை பலர் கூட்டு வன்முறை செய்திருக்கிறார்கள் .இது போல் இன்னும் பல ...
கேள்வி என்னவென்றால் ,இதுவரையில்லாமல் இப்படி ஏன் இப்போது மட்டும் நடக்கிறது ?

                                                                  (படம் :ஒன் இண்டியா )
ஏன் ?ஏன் ?ஏன் ?ஏன் ?ஏன் ?
                                            இவ்வளவு நாளும் நடக்காத இந்த பாலியல் வன்முறை இப்போது நடப்பதற்கு  காரணம் தான் என்ன ?ஆண்களின் நடத்தை ஏன் இப்படியாக  மாறியிருக்கிறது ?உளவியல் காரணங்களா ,அல்லது உடலியல் காரணங்களா ?வாருங்கள்,ஆராயலாம்  !
                                    ஆண்களுக்கு பாலியல் உணர்வு என்பது இயற்கையிலே இள வயதில் உருவாகி ,அவ்வப்போது வெளியாவது வழக்கம் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே .அவர்கள் இனப் பெருக்க மண்டலத்தில் விந்தணுக்கள் உருவாகி ,அதற்கான பையில் நிறைந்தவுடன் ,அவர்களுக்கு பலத்த  பாலுணர்வு தலையெடுக்கும் .இந்த வேளையில் அந்த விந்துவை ஏதோ வழியில் வெளியேற்ற வேண்டிய மன நிலையில் ஆண்கள் தள்ளப்படுவார்கள் .இந்நேரத்தில் பெண்களைக் காணும் போது ,அந்தப் பாலுணர்வு அதிகரிக்கும் என்பதும்  உண்மை .
                      'காமம் 'என்பது ஒரு உடற்பசியாகும்  .இந்த உடல் பசியை பின் நின்று இயக்குவது தான் 'இச்சை 'எனும் ஒரு ஆவியாகும் .இந்த ஆவி மிக பலமானது என்பதால் இந்த ஆவியை கட்டுக்குள் வைப்பது ஒரு தனி மனிதனின் /சமுதாயத்தின் மேலான கடமையாகிறது .இதற்காக பலவிதமான கட்டுப்பாடுகளை நம் முன்னோர் உருவாக்கி வைத்துள்ளனர் .
அவைகளில் தலையானவை இதோ :
  • எல்லாப் பெண்களையும்  தாயாக பார்க்க வைப்பது,இந்த ஆவியை மட்டுப்படுத்தும்  ஒரு வழியாகும்  .இன்னும் கூட தென் மாவட்டங்களில் இளம் பெண்களை 'தாய் 'என்று அழைக்கும் முறை கிராம புறங்களில் காணலாம் .குஜராத்தில் எல்லாப் பெண்களையும்  'சகோதரி 'யாக 'பெஹன் 'என்று அழைப்பார்கள் .
  • இன்னும் அறிமுகமில்லா பெண்ணையும் 'அக்கா 'என்று அழைக்கும் முறை கோவையில் காணலாம் .
  • பெண்கள் வெளியே அலைவது ,ஆளில்லா இடங்களுக்கு தனியே செல்வது போன்றவை தடை செய்யப் பட்டிருந்தன .
  • பெண்கள் 'அடக்க ஒடுக்கமாக 'இருப்பது பெற்றோரால் உறுதி செய்யப் பட்டது .அவர்கள் உடலின் கவர்ச்சி பாகங்களை சரியாக மறைப்பது ,உட்காரும் போது ஒழுங்காக அமர்வது போன்றவையும் கற்று கொடுக்கப் பட்டன .
  • பெண்கள் அளவுக்கதிகமாக சீவி முடிச்சி சிங்காரிப்பது பெரியவர்களால் கண்டிக்கப் பட்டது .
  • பெண்கள் எப்போதும் தகப்பன் அல்லது சகோதரனின் பாதுகாப்பில் தான் இருப்பது முன்பு வழக்கமாயிருந்தது .
இப்போது என்ன நடக்கிறது ?
  •  ஊடகங்களின் தாக்கம்
நம் அன்றாட வாழ்வில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஊடகங்களின் தாக்கம் இப்போது  அதிகரித்திருக்கிறது .தற்போதைய திரைப்  படங்களும் ,தொலைக் காட்சியும் பெண்களை ஒரு பாலியல் போகப் பொருளாக சித்தரிக்கின்றன .எல்லா வயது பெண்களையும் இது விடுவதில்லை .குட்டிப் பெண்களை காமப் பாட்டுகளுக்கு, உணர்வோடு ஆட வைக்கின்றன .'நேற்று ராத்திரி எம்மா 'என்று 10 வயது சிறுமி ஆட ,நடுவர் ஒருவர் 'இன்னும் முகத்தில் 'உணர்ச்சி 'தேவை 'என்று கூறும் அவல நிலைக்கு வந்திருக்கிறோம்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இப்படி கேவலமாக ஆடவிட்டு ,பின்னர் இதை கண்ணீர் மல்க பாராட்டுவது பெருங் கொடுமை !
                                      தமிழ் பண்பாட்டில் இல்லாத காமப் பார்வையை ,தமிழரல்லாத கலைஞர்கள் தமிழ் நாட்டில் திணித்து கொண்டிருக்கின்றனர் .'சிக்கு புக்கு ரயிலே 'என்ற பாடலில் தான் முதலில் இந்த பார்வை அறிமுகமாகியது .ஒரு சிறுவன் ,தன் அக்கா வயதில் உள்ள பெண்ணை பார்த்து 'கலக்குது பார் இவ ஸ்டயிலே 'என்று பாடுவது போல ஒரு கேவலமான பாட்டு.இது பிரபலமாகி அக்காக்களை காமக் கண்ணோடு பார்க்க சொல்லியது .பின்னர் மணிரத்னம் 'ரோஜா 'படத்தில் அருவிக்கரையில் பாட்டிகளை அசிங்கமாக ஆடவைத்து,பாட்டிகளையும் காமக்கண்ணோடு பார்க்க வைத்தார் .
                               தொலைக்காட்சிகள் யாரையும் விட்டு வைப்பதில்லை .பெண்கள் கல்லூரி சென்று இளம் பெண்களை வைத்து கிளு கிளுப்பூட்டும் நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள் .திருமணமான பெண்களை கொண்டு ஆட்டம் ,பாட்டம் ,கொண்டாட்டம் நடத்துகிறார்கள் .ஆக,24 மணி நேரமும் பெண், ஆணின் கண்களில் காமப் பொருளாக தோன்றிக்கொண்டு இருக்கும் ஒரு நிலை இப்போது உள்ளது  .விளம்பரங்களில் பெண்கள் வயி று  ,மார்பு அதிகமாக காட்டப்படுகிறது .'பிளாக் தண்டர் 'விளையாட்டு பூங்கா விளம்பரத்தில் 14 வயதுசிறுமிகளை  நனைத்து ஆட வைக்கிறார்கள் .மருந்து விளம்பரம் கூட ஒரு அழகான பெண்ணை வைத்து தான் இருக்கிறது .திரைப்படங்கள் சொல்லவே வேண்டாம் .'முழு நீள வண்ணப்படம்' என்பது இப்போது 'முழு நீள நீலப் படமாக'மாறியிருக்கிறது . பள்ளி மாணவிகள் ,சீருடையோடு காதல் செய்வது போல் கூட காட்சி அமைக்கிறார்கள் .புனிதமான கோயிலுக்குள்ளே காம லீலைகள் செய்வது போல காட்டுகிறார்கள் .மொத்தத்தில் காம ஆவி இல்லாத இடமே இல்லை என்பது போல் ஒரு நினைப்பை உண்டாக்கி விடுகிறார்கள் .
                              இது போதாதென்று ,இன்றைய பெண்கள் அழகு நிலையம் சென்று ,தங்களை இன்னும் கவர்ச்சியாக மாற்றுகிறார்கள் .கவர்ச்சியான உடை அணிந்து ,காம அழைப்பு தரும் பாவத்தில் நிற்கிறார்கள் ,நடக்கிறார்கள் ,பேசுகிறார்கள் .'லெக்கிங்ஸ் 'என்று காலோடு ஒட்டி ,இடுப்பு வரை தெளிவாக காலின் வடிவத்தை கவர்ச்சியாக காட்டும் உடை  இப்போது எல்லோரும் அணிகிறார்கள் .அந்தக் காலத்தில் மார்பு முந்தானை சிறிது விலகினாலே  ,சக மாணவிகள் ஜாடை காட்டி சரி செய்வார்கள் .இப்போது ,இதை பெற்றோர் சொன்னாலும் கேட்பதில்லை .சக தோழிகள் சொல்வதே இல்லை !மேலும் ஒரு குழு ,பெண்ணுரிமை என்று பேசி ,எப்படியும் உடை அணிவது எங்கள் உரிமை என்று ஆண்களைக் கவரும் விதமாக ஆடை அணிகிறார்கள் .
                            இவ்வாறாக நொடிக்கு நொடி காமப் பசியை தூண்டி,இச்சையின் ஆவியை வளர்த்து ,அதை தீர்க்க வழியில்லாமல் அலையும் ஒரு ஆண் வர்க்கத்தை இந்த ஊடகங்கள் உருவாக்கி வளர்க்கின்றன .கிடைத்தால் கடித்து குதற தயாராக இருக்கும் ஒரு பயங்கர காமப் பசி !
                       இந்தப் பயங்கரப் பசி, தனியே இருக்கும் எந்த வயது பெண்ணையும் குறிபார்க்கும் அளவு உரமூட்டப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது .இந்த இச்சையின் ஆவியை ,இதற்கு ஆளான ஆண்களால் கட்டுப்படுத்த முடியாது .மேலும் ஆவியை மனதால் கட்டுப்படுத்தவும்  முடியாது .அதுபோல் இந்த ஆவியை சட்டத்தாலோ ,தண்டனை பயத்தாலோ கட்டுப்படுத்த முடியாது .அதனால் தான் தூக்கு தண்டனை பயம் கூட ,இந்த குற்றங்களை குறைப்பதில்லை .
  • தனியே அலையும் பெண்கள் !
இதுவரை ஆணின் பாதுகாப்பிலே வெளியே வந்த பெண்கள் ,இப்போது சமுதாய சூழல் மாற்றத்தினால் ,படிப்பிற்காகவும் ,வேலைக்காகவும் எங்கும் ,ஏன் சீனா கூட தனியே செல்லும் நிலை உள்ளது .சென்னை போன்ற பெருநகரங்களில் நடு நிசி நேரத்தில் இளம் பெண்கள் தனியே அலைவது சகஜமாகிக் கொண்டிருக்கிறது .ஒரு புறம் சூடான காமப் பசி !இன்னொரு புறம் அதற்கான உணவாக  எளிதில் தெரியும் பெண்கள் ! விளைவு ,தினமும் செய்தி தாளில் ஒரு பாலியியல் குற்றம் செய்தியாக வருகிறது .
  • என்ன செய்தால் இதை மாற்றலாம் ?
ஊடகங்களை நெறிப்படுத்த ஒரு தணிக்கை முறை அவசியம் .பெற்றோர் தம் குழந்தைகளை ஆபாச நடனம் ஆட அனுமதிக்க கூடாது .அம்மாதிரி நிகழ்ச்சிகளை நாம் சமூக ஊடகங்கள் வழியாக கண்டிக்கலாம் .
                          முடிந்த அளவு பெண்கள்/சிறுமிகள்  தனியே அலைவதை தவிர்க்கலாம் .விருந்துகள் ,வைபவங்கள் இவைகளில் பெண்கள் தனிமையாய் இருக்கும் சூழ் நிலையை தவிர்ப்பது நல்லது.
பெண்கள் தங்கள் நடை ,உடை ,பாவனையில் ஒரு அடக்கம் காட்டவேண்டும் .கவர்ச்சியான பாகங்களை மறைத்து ,உடை அணிவது அவர்கள் பாதுகாப்பை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை .
                            இறுதியாக பெண்களை சகோதரப் பார்வையோடு பார்க்க பள்ளிகளில் பழக்க வேண்டும் .'எப்போது ஒரு பெண்ணை காமப் பார்வையோடு பார்த்தாயோ அப்போதே நீ அவளுடன் மனதளவில் உடல் உறவு செய்து விட்டாய் !'என்று சொன்ன இயேசு பிரானின் சொற்களை எல்லா மாணவர்களுக்கும்  போதிக்க வேண்டும் .
                          பல விதமான சமூக காரணங்களால் ,திருமணமான ஆண்கள் கூட பெண் துணையின்றி தனியே வாழும் சூழ்நிலை ஏற்படுகிறது .இதை தவிர்த்து குடும்பமாக வாழ்வது இந்த விதமான பாலியியல் குற்றங்களை குறைக்க உதவும் .
                          பலநாடுகளில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக்கப்பட்டிருக்கிறது .உணவுப் பசியை தீர்க்க உணவகங்கள் இருப்பது போல் ,காமப்பசி தீர்க்கும் சேவை மையங்கள் அமைக்க அரசு அனுமதிக்கலாம் .இவைகள் முறைப்படுத்தப்பட்டு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு நடக்கவேண்டும் .காம வெறியில் அலையும் ஆண்களுக்கு அதை தீர்க்க சட்டப்படியான ஒரு வழி அமைத்து கொடுத்தால் ,பாலியியல் குற்றங்கள் நிச்சயமாக பெருமளவில் குறையும் .
                           இந்த இச்சையின் ஆவியை கட்டாமல் இன்னும் வளர்த்தால் ,கட்டுக்கடங்காமல் போய் ,சீரிய சமூக பிரச்சனைகள் வரலாம் என்ற எச்சரிக்கை மணி எல்லோருக்கும் கேட்காமல் இருக்கலாம் .ஆனால் ,அது தான் உண்மை !
-------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒன்று .நம் குடும்பப் பெண்களை காக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது .ஆதலால் ,ஓவ்வொருவரும் குறைந்தது 10 பேருக்காவது பகிரவும் .நன்றி .