நான் அடிக்கடி நினைப்பது உண்டு .ஏன் ,இந்த தமிழர்களுக்கு இவ்வளவு அதீத ஆங்கில மோகம் என்று!சொல்லுக்கு சொல் ஆங்கிலம் இல்லாமல் பேசுவதில்லை . பல வீடுகளில் இப்போது தமிழ் தெரியாது என்று பெருமையுடன் சொல்லும் குழந்தைகள் உள்ளனர் ! அவர்கள் பெற்றோரின் முகத்திலும் அப்படி சொல்வதில் ஒரு பெருமிதம் !'அவளுக்கு தமிழ் தெரியாது !'என் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன் .வீட்டிற்குள் நுழையும் முன்னே ஒரு குட்டிப் பெண்என்னிடம் ஓடி வந்து , 'கேன் யு ஸ்பீக் இங்கிலிஷ் ?'என்றாள் .நான் 'யெஸ் 'என்றவுடன் அவள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கவேண்டுமே !வரும் தாத்தா ,பாட்டி ,மாமாக்கள் யாருக்கும் இங்கிலிஷ் தெரியவில்லை என்பது அந்த பிஞ்சு மனதின் பெரிய குறை .மொத்தத்தில் ,தமிழருக்கும் ஆங்கிலத்திற்கும் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம தொடர்பு , நெஞ்சம் மறப்பதில்லை பாணியில் உள்ளதோ என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு .இப்போது அந்த நினைப்பு உண்மையாகி விட்டதோ என்று சொல்லும் படியாக ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது .அதில் எனக்கு வியப்பு இல்லை தான் .
Sunday, 20 June 2021
ஆங்கில சொற்கள் தமிழிலிருந்து தான் தோன்றியதா ?
Tuesday, 1 June 2021
ஸ்டாலின் கீழ் தி .மு .க ஆட்சி --10 நாள் சுவை !
'ஸ்டாலின்தான் வராரு, விடியல் தர போறாரு 'என்ற மனம் கவர் மெட்டோடு ஒரு பாடல் தமிழகமெங்கும் தேர்தலுக்கு முன் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. இப்போது ஒரு வழியாக தேர்தல் முடிந்து விட்டது .தமிழகம் பயந்தது போல் வாக்கு இயந்திரத்தின் கற்பும் பறிபோகவில்லை . ஸ்டாலின் வந்து விட்டார்.ஆட்சி கட்டிலில் ,பெரும்பான்மையோடு அமர்ந்து விட்டார் .
அடுத்த கேள்வி ,ஆக ,அவர் உறுதியளித்த விடியல் தந்துவிட்டாரா ?
இந்த கேள்விக்கு பதிலளிக்க பத்து நாள் உண்மையில் பத்தாது.பொதுவாக ,100 நாள் ஆட்சியை தான் நிறுத்து பார்ப்பார்கள் . ஆனாலும் இந்த பத்து நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் செய்தது இனி வரப் போன நாட்களில் அவர் செய்யப்போவதை காட்டும் ஒரு முன்னோட்டமாக எடுத்தோம் என்றால் ,நிச்சயமாக விடியல் வெகு வெளிச்சமாகவே ஆரம்பித்துவிட்டது எனலாம் .இந்த 10 நாளில் அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை பார்ப்போம்.
- இதுவரை இல்லாத ஒரு புதிய அரசியல் நாகரிகத்தை தமிழ்நாட்டு அரசியலில் நுழைத்திருக்கிறார் திரு ஸ்டாலின் அவர்கள் .எதிர்க்கட்சி தலைவரை கடைசி வரிசையில் அமர வைத்து அவமானப் படுத்திய சர்ச் பார்க் எனும் பெரிய ஆங்கில கான்வென்டில் படித்த அம்மாவுக்கு நேர்மாறாக,திரு ஓ .பன்னீர்செல்வம் அவர்களுக்கு தேனீர் விருந்து அளித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உயர்ந்து நிற்கிறார் .அதேபோல் தினமும் வசைபாடும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நாகரீகமாக வரவேற்றது போன்ற பல காரியங்களை செய்கிறார் ஸ்டாலின் அவர்கள் .கலைஞர் இறந்தவுடன் மெரினா கடற்கரையில் அவருக்கு சமாதி அமைக்க ஸ்டாலின் அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து கெஞ்சி கூத்தாடி தான் வாங்கினார். ஆனால் இன்று எடப்பாடி அவருடைய அரசு வீட்டை காலி பண்ணாமல் நீடிக்க ஸ்டாலின் அவர்களிடம் கேட்டவுடன் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்தது , இரண்டு பேருக்கும் உள்ள ஒரு வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போல் தெளிவாக தெரிகிறது.
- ஸ்டாலின் அவர்கள் அரியணை ஏறும் நேரம் நல்ல நேரம் அல்ல.கொரோனாவின் இரண்டாவது அலையில் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு கொடுமையான நேரம் .அரியணையில் அவர் அமர்ந்த உடன் சூழ்ந்து நிற்கும் பல சவால்கள்.முதல் சவால் கொரோனாவிடமிருந்து இவருக்கு வாக்களித்த பொது மக்களை காப்பாற்ற வேண்டும். இதை ஸ்டாலின் அவர்கள் மிகவும் திறமையாக கையாண்டு நல்ல பேர் வாங்கி விட்டார். முதல் இரண்டு நாட்களுக்குள் அதிகாரிகள் எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு கொரோனா கட்டுப்பாடு கட்டளை மையத்தை உருவாக்கி ,கொரோனா பரவாமல் தடுத்தார் .இருக்கும் மருத்துவ கட்டமைப்பை திறம்பட பயன் படுத்த வழி வகை செய்தார் .
- தேர்தலுக்கு முன்னர் வாங்கிய புகார் மனுக்களை உடனே சரி செய்ய ஒரு தனித் துறையை உருவாக்கி அதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தது பாராட்டுக்குரியது .
- ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விஷயத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 93 பேருக்கு தலா ஒரு லட்சம் வைத்து இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது .
- பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் முதல் நாளிலே அறிவிக்கப்பட்டது.
- இவ்வாறாக இன்னும் பல நெடுநாள் காத்திருந்த காரியங்கள் உடனே செயல் படுத்தப்பட்டது .முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 10 நாளில் எடுத்த எல்லா முடிவுகளையும் நாம் இந்த பதிவில் அடக்கவில்லை .அதற்கு இடமும் இல்லை.
- எல்லாவற்றிலும் ஒரு வெளிப்படைத்தன்மையும் நம்பகத்தன்மையும் உள்ளது .
- முடிவுகள் வேகமாகவும் ,திறம்படவும் எடுக்கப்படுவது சிறப்பு .
- அதிகாரம் முறையற்ற வழிகளில் கசியவில்லை என்பதும் சிறப்பு .
முதல்வரை சூழ்ந்திருக்கும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ன என்ன ?முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று விட்டார் .ஆனால், இன்னும் பல சவால்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது .அவைகள் என்ன என்ன என்பதை பார்க்கலாம்.
- முதலாவதாக மத்திய அரசிடம் மாநிலம் பெறவேண்டியதை சரியான உத்தியில் பெறுவது .இதைப் பொறுத்தவரையில் இதுவரையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்ட கொரோனா கட்டுப்பாடு மருந்துகள், மற்ற உதவிகள் எல்லாம் திருப்திகரமாகவே வந்து கொண்டிருக்கிறது .முந்திய ஆட்சியை விட மத்திய அரசு முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கொஞ்சம் சீக்கிரமாகவே செயல்படுவதாக தெளிவாக தெரிகிறது. ஆனாலும், குஜராத் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு ஒரு தனி கவனிப்பு நடப்பதை மறுக்க முடியவில்லை. இதையெல்லாம் மெதுவாக,ஆனால் ஒரு கண்டிப்புடன் ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசை கேட்டு வாங்கிக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
மொத்தத்தில் இந்த பத்து நாள் ஆட்சிக்கு நாம் எளிதாக ஐந்துக்கு நாலு நட்சத்திரம் என்று மதிப்பீடு கொடுக்கலாம். இந்த கஷ்ட காலத்திலும் இவ்வளவு செய்தார் என்பது பெருமைக்குரிய விஷயம் .
இது ஒருபுறமிருக்க,இன்னும் செய்யவேண்டிய பல காரியங்கள் உள்ளன. குறிப்பாக, இதுவரை அவர் தமிழர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு என்பதை குறித்து ஒன்றும் சொல்லவில்லை. அதை செய்ய வேண்டும் .இரண்டாவதாக அவருடைய வெற்றிக்கு இரவு பகல் பாராது உழைத்த தொண்டர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும். இந்த ஐந்து வருட ஆட்சியில் அதிமுகவை இல்லாத கட்சியாக மாற்ற வேண்டும். வளர்ந்து வரும் தமிழ்த் தேசிய உணர்வுக்கு மதிப்பளித்து தமிழர்களுக்கு ஆட்சியில் அதிக உரிய பங்கு கொடுக்க வேண்டும்.
Friday, 21 May 2021
தெலுங்கு உண்மையிலே சுந்தர தெலுங்கா ?
தமிழ் பாடல்கள் கேட்டு கேட்டு அலுத்து போய்விட்டது .சரி ,ஒரு மாற்றத்திற்கு ஒரு திராவிட (தெலுங்கு )பாட்டை கேட்போமே என்று ஒன்றை போட்டேன். ராம் சரண் ,கட்டை கால் சட்டையில் ,ஏதோ ஒரு பெயர் தெரியாத ஒரு கதாநாயகி குட்டை பாவாடையில், இருவரும் சேர்ந்து ஆடும் ஒரு செம பாடல்.
"குக்குரு குக்குரு குக்குரு
குடுகுடு குடுகுடு
அண்டி வண்டி ஹண்டி
பண்டியோடு கண்ட்லு
அப்புலு தட புடு "
என்று கட புட ஒலியுடன் ஒரு தெலுங்கு பாட்டு கேட்டேன் .நடனம் செம அழகாக இருந்தது. நாயகன் ,நாயகி அழகாக ஆடினார்கள்.காட்சி அமைப்பு பிரமாதமாக இருந்தது. ஆனால், சுந்தர தெலுங்கு தான் கடமுட கடமுட என்று ஆட்டுக்கல்லில் கருங் கல்லை போட்டு அரைத்து போல ஒரு தொனி ! காதெல்லாம் வலிப்பது போல ஒரு உணர்வு !
கேட்டு முடித்தவுடன் ,தெலுங்கு மொழியில் மெல்லிய ஒலி என்று ஒன்று கிடையாதோன்னு நினைக்க வைத்தது அந்த பாடல் .இந்த ஒரு பாடல் வைத்து ஒரு மொழியின் இனிமையை தீர்மானிக்க முடியாது அல்லவா . ஆதலால்,ஒரு சின்ன மொழி ஆராய்ச்சியில் இறங்கினேன் .
தெலுங்கில் அதிகமாக சொற்களெல்லாம் லு ,டு ,போன்ற தொனியில் தான் முடிகிறது .அதாவது ,உயிர் மெய் எழுத்து தொனிதான் அதிகம் .ஆனாலும் , ஏனோ ஒரு இனிமையே இல்லாமல் கட கட குடு குடு என்ற ஒரு சத்தத்தில் தான் மொத்தத்தில் கேட்கிறது .ஏன் ?
தெலுங்கு சொற்களின் ஒலி நயத்தை ஆராயலாம் .எடுத்துக்காட்டாக ,ஏழுமலையான் என்கிற அழகான தமிழ் சொல் ,ஏடு கொண்டல வாடு என்று பல் உடைவது போல் தெலுங்கில் தொனிக்கிறது .எஸ்.பி.பி என்று அன்பாக தமிழர்களால் அழைக்கப்படும் தெலுங்கு பாடகர் எஸ். பி .பாலசுப்பிரமணியம் அவர்களின் முழு தெலுங்கு பெயரை சொன்னால் பல் உடைந்து விடும்! இதோ அவர் முழு பெயர்:Sripathi Panditaradhyula Balasubrahmanyam ஸ்ரீபட்டி பண்டிட்டாராட்யுலா பாலசுப்ரமணியம் !அப்பாடா ,ஏன் அவர் பெயரை எஸ்.பி.பி என்று சுருக்கி வைத்திருக்கிறார் என்பது இப்போது புரிகிறதா?
இவர் பெயர் மட்டுமில்லை, தெலுங்கு பெயர்கள் அதிகமாக இப்படித்தான் இருக்கிறது.
இதோ சில எடுத்துக்காட்டுகள்:
- நண்டமுறி தாரக ராம ராவ் (என் .டி .ஆர் )
- அல்லரி நரேஷ்
- டெஜ்ஜா சஜ்ஜா
- பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ்
- விஸ்வக் சென் நாயுடு
- சமந்தா அக்கினினி
- கண்டசாலா
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து,
தோணிகளோட்டி விளையாடி வருவோம்."
Monday, 3 May 2021
ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிறித்தவ பிரிட்டிஷாரை எதிர்த்தார்கள்?
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்துக் கட்டினார்கள்! அவைகளில் சிலவற்றை நாம் என்னவென்று பார்ப்போம்...பா ர்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,
Wednesday, 7 April 2021
பிராமணாள் கபே ---மற்றவா உள்ளே வராதீங்கோ !
ஒரு காலத்தில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர்.
0 comment
Wednesday, 31 March 2021
தி மு க இந்துக்களின் எதிரியா?
திமுக இந்துக்களின் எதிரி?????
திமுகவா இந்திய மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்தது?
திமுகவா தமிழ் நீஷ பாசை என்று சொன்னது?
திமுகவா கோவில்களில் சமஸ்கிருத மந்திரம் மட்டும் ஓதியது? தமிழை கோவில்களில் தடை செய்தது??
திமுகவா தமிழில் தேவாரம் பாடிய ஓதுவார்களை கோவிலுக்குள் வைத்து தாக்கியது? நுழைந்த நந்தனை உயிரோடு எரித்தது??
திமுகவா தீண்டாமையைக் கடைபிடிக்கச் சொன்னது?
திமுகவா தீண்டாமையைக் கடைபிடிக்காதே என்று சொன்ன இராமானுஜரை கொல்லத் துடித்தது?? மைசூருக்கு விரட்டியடித்தது?
திமுகவா முடிசூடும் பெருமாள் என உயர் தொணியில் பெயர் இருப்பதால், முத்துக்குட்டி என மாற்று என்று அய்யா வைகுண்டரை பெயர் மாற்றச் சொன்னது. அதற்காக சிறையில் அடைத்தது?
திமுகவா வள்ளலாரை
வைதீக வெறிக்கு எதிராகப் பேச வைத்தது?
திமுகவா உங்கள் சாஸ்திரங்களை குப்பையில் தூக்கி வீசுங்கள் என்று சுவாமி விவேகானந்தரை சொல்லச் சொன்னது?
திமுகவா நாமம் போடும் வைணவரை திருநீறு பூசக்கூடாது என்று சொன்னது?
திமுகவா திருநீறு பூசும் சைவரை நாமம் போடாதே என்று சொன்னது?
திமுகவா ஸ்ரீரங்கம் கோவில் யானைக்கு நாமம் போடுவதா? திருநீறு பூசுவதா என வழக்கு நடத்தியது?
திமுகவா இந்து மக்களை கோவில் கருவறைக்குள் விடாமல் தடுத்தது?
திமுகவா அனைவரும் அர்ச்சகராகக் கூடாது எனத் தடுத்தது?
திமுகவா இட ஒதுக்கீட்டை தடுக்க முயல்கிறது?
திமுகவா பிற்படுத்தப் பட்டோருக்கு நீதி வழங்கிய மண்டல்கமிசனுக்கு எதிராக ரதயாத்திரை நடத்தியது?
திமுகவா குப்புசாமியை குப்பா என்றும் , மாடசாமியை மாடா என்றும் ஒருமையில் அழைத்தது?
திமுகவா மருத்துவம் படிக்க விடாமல்
2017- அரியலூர் அனிதா
2018- திருச்சி சுபஸ்ரீ
2018- விழுப்புரம் பிரதிபா
2019- தஞ்சை வைஷ்யா
2019- திருப்பூர் ரிதுஸ்ரீ
2019- விழுப்புரம் மோனிஷா
2020- கோவை சுபஸ்ரீ
2020- மதுரை ஜோதிஸ்ரீ துர்கா
2020- அரியலூர் விக்னேஷ்
2020- தர்மபுரி ஆதித்யா
2020- திருச்செங்கோடு மோதிலால் ஆகிய இந்து மாணவ-மாணவிகளைக் கொன்றது?
இதையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளாக செய்துவிட்டு,
இதை சரிசெய்ய முயன்ற திமுகவை இந்துக்களின் எதிரி என்கிறார்கள்.
திமுக ஒன்றே குலம். ஒருவனே தேவன் என்றது. திமுக இந்துக்களுக்கு மட்டுமல்ல எல்லா மதங்களுக்கும் நண்பன் தான்.
இந்துக்களின் எதிரி சங்கிகள் தான். இந்துத்வா தான்.
இந்து வேறு
இந்துத்வா வேறு.
இரண்டுக்கும் ஒரே வேறுபாடு தான்.
காந்தி இந்து
கோட்சே இந்துத்வா.
__----*----------------------*---------
(ஆசிரியர் பெயர் தெரியாது. சமூக ஊடகங்களில் வந்தது )
Tuesday, 23 March 2021
2021 தமிழகத் தேர்தல் -- யாருக்கு வாக்கு அளிக்க கூடாது?
தமிழ் நாடு சட்டசபை தேர்தல் 2021 ,தமிழகத்தின் ,தமிழ் இனத்தின் வாழ்வா சாவா போராட்டம் என்றால் அது மிகையாகாது .தமிழக மக்கள் முன் தெளிவான 3 தேர்வுகள் உள்ளன .
1) தமிழ் இனத்தை ,பண்பாட்டை ,மொழியை ,பொருளாதார வாய்ப்புகள் எல்லாவற்றையும் அழிப்பதை வெளிப்படையான கொள்கையாக அறிவித்து வாக்கு கேட்கும் ஆரிய மலர் கட்சியும் ,தமிழ் இனத்தை பலியிட்டு ,சுய லாபம் தேடும் ஒரு இலைக்கட்சி கூட்டு .
2)தமிழர்களை ஆரிய பேயிடமிருந்து காப்பாற்றும் பலமுள்ள திராவிடப் பேய் கட்சி கூட்டு .
3)தமிழ் தேசியம் பேசும் ,ஆட்சியில் முன் அனுபவமில்லாத ,நாம் தமிழர் கட்சி .
இதில் யாருக்கு வாக்கு போடக்கூடாது என்பது வெகு முக்கியமானது .
-----------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகம் பாஜகவை அதன் கூட்டணியை ஏன்_நிராகரிக்க_வேண்டும்..?
#காரணம்_1
பாஜக தமிழர்களுக்கான கட்சியல்ல..! அது தமிழரல்லாத பார்ப்பனர்களின் நலன் காக்கும் கட்சி..!!
#காரணம்_2
பாஜகவின் தேசிய கலாச்சாரம் தமிழர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதில்லை..!!
#காரணம்_3
பாஜக தமிழரல்லாத வட இந்தியர்களின் வாழ்வியலை முன்நிலைப்படுத்துகிறது..!!
#காரணம்_4
தமிழர்களிடம் வழிபாட்டு முறையில் வேறுபாடுகள் இருந்தாலும், நம் வாழ்வியலில் வேறுபாடுகள் இல்லை. பாஜக அதில் வேறுபாட்டை விதைக்க முனைகிறது..! அதை தமிழகம் ஒருநாளும் ஏற்காது..!!
#காரணம்_5
பாஜக முன்வைக்கும் தேசியம் இந்து தேசியம். தமிழகம் மதவழி தேசியத்தை ஒருநாளும் ஏற்காது..!!
#காரணம்_6
பாஜகவின் மொழிக்கொள்கை தமிழை மூன்றாம் தர மொழியாக்கி இந்தியை, சமஸ்கிருதத்தை முன்நிறுத்துகிறது..!! தமிழர்கள் தங்கள் மொழியை விழியாக கருதுகின்றனர்..!
#காரணம்_7
பாஜக மக்களின் ஒற்றுமையை விரும்பாத கட்சி..! தமிழகமோ யாதும் ஊரே, யாவரும் உறவே..! ( கேளிர் ) என்ற உயரிய கொள்கையை உலகிற்கு அளித்த மண்..!
#காரணம்_8
பாஜகவின் தேசிய முழக்கத்தில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது..! தமிழர்களின் ஆளுமைகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றனர்..!
#காரணம்_9
பாஜகவின் மேட்டிமை தன்மையை சுயமரியாதையுள்ள தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அக்கட்சி உயர்சாதியினரின் நலன் சார்ந்து மட்டுமே சிந்திப்பதால் சமூக நீதி மண்ணான தமிழகத்தில் பாஜகவால் வேர்ப்பிடிக்க இயலாது..!!
#காரணம்_10
தமிழர்களை, தமிழ் மொழியை, தமிழரின் பண்பாட்டை, அவர்தம் கலாச்சாரத்தை தொடர்ந்து அவமதித்து வரும் பாஜகவை தங்களுக்கான இயக்கமாக தமிழர்களால் ஏற்க முடியாது.. !
(இதன் ஆசிரியர் பெயர் தெரியாது.நல்ல கருத்துக்களுக்காக பகிர்கிறேன் )
