Friday, 30 September 2016

அது ஒண்ணுக்கு மாத்திரம் ,மட்டும் தானா இந்த ஆத்திரம் ?



என்னங்க ,வீட்டை சுத்தி ஒரே குப்பை காடு ?

என்ன பண்றது !அவ்வளவுதான் ! 

அவனுக எங்க வேலை செய்றாங்க ?

நம்ம என்னங்க  பண்ண முடியும் !

===========================================

என்னங்க ,தெருவெல்லாம் ஒரே புகை ?

 என்ன பண்றது !அவ்வளவுதான் ! 

சொன்னா கேட்கவா போறாங்க ?

நம்ம என்ன பண்ண முடியும் !

===========================================

என்னங்க ,கழிப்பறை இல்லாமே பெண்கள் எங்க போகிறது ?

போராட்டம் எல்லாம் பண்ணிட்டோம் .

என்ன பண்றது !அவ்வளவுதான் ! 

நம்ம என்ன பண்ண முடியும் !

=========================================================

என்னங்க ,3 வயசு குழந்தையை பலாத்காரம் பண்ணியிருக்கான் ?

ஆமாங்க ,மோசமான பயலுக !

என்ன பண்றது !பாவம் !அவ்வளவுதான் ! 

நம்ம என்ன பண்ண முடியும் !

============================================================
நம்ம ஊரு மொட்டை கிணற்றிலே இதோட நாலாவது சாவு .
நாமெல்லாம் சேர்ந்து ஏதாவது பண்ணலாம்ல்ல ?
'என்னத்தை பண்றது ?
பஞ்சாயத்து தான் ஏதாவது பண்ணனனும் .
இதிலே எல்லாம் நாம என்னங்க  பண்ண முடியும் ?' 
---------------------------------------------------------------------------------------------------------------------------

என்னங்க ,அங்கே ஏதோ.... கலப்பு கல்யாணம்னு பேசிக்........?
டேய்ய்ய் !
எவண்டா அது பண்ணினது ?
டேய்ய்ய்ய் ...............
கூட்டுங்கடா நம்ம ஆட்களை !
எடுங்கடா .....விட்டுவிடுவமா அந்த பயலை ?
டேய்ய்ய் !டேய்ய்ய் !
=======================================================================

என்ன ஒரு வேகம் !என்ன ஒரு உணர்ச்சி !
ஆம் ,உணர்ச்சியுள்ளவர்கள் தாம் தமிழர் !

ஆனால் ,எதற்கு உணர்ச்சியுள்ளவராக இருக்கவேண்டுமோ 

அதை எல்லாம் விட்டுவிட்டு 

எதற்கெல்லாமோ 
எழுச்சியுடன் புறப்படும் கூட்டமா நாம் ?
உணர்ச்சி கொள்ளுவோம் !
எரிச்சல் அடைவோம் !
எதற்கு ?

நம்மை சுற்றி நல்ல சுத்தமான சூழ்நிலைக்கு ,

சொம்பை தூக்குவதை விட்டு விட்டு 
வீட்டில்கழிப்பறை கட்டும் பழக்கத்திற்கு  ,

ஒருவரை ஒருவர் மனிதனாக மதிக்கும் பண்பிற்கு  ,

ஊர்பொதுவான வசதிகளுக்கு 

ஒற்றுமையான உழைப்பு !

இதெற்கெல்லாம்  உணர்ச்சிப் படுவோம் !

ஒன்றாய்,நன்றாய்  உழைப்போம் !

Tuesday, 27 September 2016

நல்லது எது ,கெட்டது எது, நமக்காவது தெரியுமா ?


என் குட்டிப் பிள்ளை,பள்ளி முடிந்து  ஆவலுடன் ஓடி வந்தாள் .'அப்பா ,நான் பெரியவளானவுடன் உங்களத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் !'என்று ஒரு குண்டை போட்டாள் !நான் சுதாரித்துக் கொண்டு   'இல்லைடா செல்லம் ,மகள் அப்பாவை கல்யாணம் செய்ய முடியாது ,கண்ணு 'என்றேன் .ஆனால் ,அவள் முகத்தில் இன்னும் ஒரு சந்தேகம் இன்னும் நிழலாடிக்கொண்டிருப்பது எனக்கு தெரிந்தது .'யாரோ இவளுக்கு இப்படி தப்பாக சொல்லிகொடுத்திருக்க வேண்டும் .யாராயிருக்கும் ?'என்று நினைத்துக்கொண்டு ,அவளிடம் கேட்டேன் .'ஏன்டா ,அப்படி சொன்னே ?' உடன் அவள் தன் தமிழ் பாடத்தில் உள்ள ஒரு கதையை காட்டினாள் .அதில் ஒரு மகா முனிவர் அவருடைய சொந்த மகளை திருமணம் செய்வதாக ஒரு கதை ! அந்தக் கதை எனக்கும்  தெரியும் .ஆனால் ,அதைப்  போய் சின்ன குழந்தைகளுக்கு பாடத்தில் வைத்த அரசின் மதியை நினைத்து வேதனைப்பட்டேன் .'நல்லது எது, கெட்டது எது என்று பிள்ளைகள் உணர ஆரம்பிக்கும் வயது ,இளம் வயது தான் .இந்த வயதில் ,நாம் தாம் அதை பிரித்து பார்க்க  ,குழந்தைகளுக்கு  சரியாக சொல்லிக்கொடுக்கவேண்டும் .அரசின் மதியீனத்தால் ,நம் எதிர் கால சந்ததி,குழம்பி , வழி கெடும் நிலை வரலாம் .நான் ,மகளிடம் 'அது தப்பான கதை .நம்பவேண்டாம் .ஆனால் பாடத்திற்க்காக மட்டும் படித்துக்கொள் 'என்று சொல்லி ,அவள்  மனதை மாற்றினேன் .
நல்லதை நல்லது என்றும் ,கெட்டதை கெட்டது என்றும்  உணருவோம் !
நம்முடைய பண்பாட்டில் ,கதைகளில் ,பழக்கங்களில் ,பல நல்ல காரியங்களை கெட்டவைகளாகவும் ,பல கெட்ட காரியங்களை நல்லவைகளாகவும் சித்தரிக்கும்,ஒரு போக்கு இருக்கிறது .அது போல் ,எதற்கு கொதிக்க வேண்டும் ,எதற்கு சும்மா இருக்க வேண்டும் என்பதும் தவறாக போதிக்கப்படும் போக்கும் இங்கே காணப்படுகிறது .நான் சிறுவனாக இருந்தபோதே,இவைகளில் பல  எனக்கு  புலப்பட்டன .தீபாவளி கொண்டாடும் நேரத்தில் ,நான் அம்மாவிடம் கேட்டேன் 'ஏம்மா ,ஒருத்தன் செத்ததை போய் கொண்டாடணும் ?'என்று கேட்டதற்கு பதிலாக 'சும்மா ,புளு  புளு ன்னு பேசா தடா ' என்ற அம்மாவின் பதில் என்னை திருப்தி படுத்தவில்லை .அதிலிருந்து ,நானே யோசித்து நாம் பண்பாட்டில் உள்ள தவறான போதனைகளை க்கண்டு பிடிக்க ஆரம்பித்தேன் .அவைகளில் சில இங்கே தருகிறேன் .
தப்பு தப்பா நாம் படித்ததும் ,உணர்ந்ததும்  ..

  • காவேரி ஆறு கமண்டலத்தில் இருந்து வந்தது !
  • அகத்திய முனிவர் தமிழை உருவாக்கினார் !
  • தெய்வங்கள் நல்லவர்களாக இருக்கவே  முடியாது !அவர்கள் திருடுவார்கள்,பெண்கள் பின்னால்  அலைவார்கள்,கொலை செய்வார்கள் ,சதி செய்வார்கள் ,மனைவியை அடிப்பார்கள் .....
  • நாம் எப்படியானாலும் குப்பையை தெருவில் எறியலாம் .அரசுதான் தெருவை  சுத்தமாக வைக்கவேண்டும்  .
  • எத்தனை குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளில் விழுந்து இறந்தாலும் ,நாங்கள் அதை மூடி வைக்க மாட்டோம் .ஆனால் போராடுவோம் !
  • தலைமேலிருக்கும் மின்சாரக் கம்பியை கூட கவனிக்காமல் தேர் இழுக்கலாம் .மின்கம்பி பட்டு யாராவது செத்தால் 'அவன் தலையெழுத்து !'என்ற போக்கு .
  • பாலை சாலையில் ஊற்றி போராடலாம் !உணவின்றி சாகும் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது !
  • பழைய துணிகளை ஏழைகளுக்கு கொடுக்க கூடாது !அவர்கள் வாங்கவும் கூடாது !அதற்கு பதில் பழைய துணிகளை எரிக்கலாம் !
  • ஆட்டோக்காரனுக்கு 10 ரூ அதிகம் கொடுக்கக்கூடாது ,ஆனால் கபாலி படத்திற்கு 2000 ரூ கருப்பு சந்தை சீட்டு வாங்கலாம் !
  • ஒரே தெருதான் .ஆனா ,பக்கத்து வீட்டு க் காரன்  சாகக்  கிடந்தாலும் உதவ மாட்டேன் !சே !அவன் கீழ் ஜாதியி ல்லே !
இன்னும் இதுபோல பல தப்பான போதனைகள் !நீங்களே ஓவ்வொன்றயும் ஆராய்ந்து நல்லது கெட்டது தெரிந்து கொள்ளுங்கள் .ஊடகங்கள் உரைக்கும் பொய்களை நம்பிவிடவேண்டாம் .

Monday, 26 September 2016

தமிழ் நாட்டில் யார் ஆட்சியில் வந்தாலும் ,இதை தமிழனுக்காக கண்டிப்பாக செய்யவும் !

  1. தமிழர்களுக்கு ஆட்சியில் 90% பங்கு 
  2. ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவதற்கு/எழுதுவதற்கு  தடை 
  3. தமிழில் படித்தவர்க்கு 90% வேலை வாய்ப்பு 
  4. ஊடகங்களில் கருப்பு தமிழர்களுக்கும்  பங்கு 
  5. கருப்பிற்கு எதிரான விளம்பரங்களுக்கு தடை 
  6. வடமொழி பெயர்களுக்கு தடை 
  7. இந்திக்கு தமிழ் நாட்டில் தடை 
  8. நிறுவனங்களில் 90% தமிழர் இட ஒதுக்கீடு 
  9. தமிழ் ,பள்ளிகளில் கட்டாய பாடம் .
  10. பெயர்ப் பலகைகள் தமிழில் மட்டும் கொள்கை .
  11. தமிழில் பேசுவது பெருமை இயக்கம் .                                                                                   

 

Sunday, 25 September 2016

காதல் கொலைகளில் தமிழ் படங்களின் முக்கிய பங்கு என்ன ?

காதல் சம்பந்தப்பட்ட  கொலைகளில்  தமிழ் படங்களின் முக்கிய பங்கு என்ன ?
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போலிருக்கிறதா இந்த தலைப்புக் கேள்வி ?இந்த கட்டுரையை முழுதும் வாசித்து பார்த்தால் தலைப்பின் பொருள் நன்றாகவே புரியும் .
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டால் ,எப்படி அதை எதிர்பாலரிடம் சொல்வது ?அப்படி சொல்லும்போது ,நாம் எப்படி பதில் சொல்வது ?இதற்கெல்லாம் ,மற்ற பாடங்களுக்கு இருப்பது போல் கோனார் உரை கிடையாது .இதற்கெல்லாம் ,இளைஞர்  பதில்தேடுமிடம் ,திரை படங்களாகவே இருந்து கொண்டு இருக்கிறது .திரை படங்கள் இந்த மாதிரி காட்சிகள் அமைத்து ,இளைஞரின் கேள்விகளுக்கு பதில் தருகிறார்கள் .அந்தக் காலத்தில் நாங்கள் பார்த்த எம் .ஜி .ஆர் . படங்களில் எல்லாம் ,தலைவர் பெண்களை தேடி அலைய மாட்டார் .நாயகிகள் அவரை தேடி வருமாறு நடந்து கொள்வார் !காதலை கொச்சை படுத்த மாட்டார் .அவர் படத்தை பார்த்தால் காதல் உணர்வு வரலாம் ஆனால் பால் உணர்வு கொப்பளிக்காது .பெண்களை மரியாதையுடன் நடத்த கற்று கொடுப்பார் .ஒரு போதும் புண் படுத்தும் வசனங்கள் அவர் படங்களில் வராது .
ஆனால் இன்றைய திரை காட்சிகளின் நிலைமை என்ன ?வசனங்களின் தரம் என்ன ?என்ன மாதிரி விதைகளை அவை விதைக்கின்றன ?கீழே பாருங்கள் ,விடை கிடைக்கும் !
  1. "ஒம் மூஞ்சிக்கெல்லாம் நயன்தாராவா கிடைப்பா ?ஏதாவது தேன் மொழி ,கயல்விழி ன்னு அலைவா !அவளை தேடி போ !"                                                                                                              விதைத்த விஷ விதைகள் : மூஞ்சியை பொறுத்து தான் பெண் கிடைப்பாள் ;சமஸ்க்ரித பெயர் பெண் ன்னா பெண் அழகு ;தமிழ் பெயர்ன்னா அசிங்கம் .                                                                                                           இந்த வசனம் எழுதினவன் ஓவ்வொரு தமிழனையும் கேவலப்படுத்தி இருப்பதோடு ,தோற்றத்தை பற்றி கீழ் தரமாக வர்ணித்திருக்கிறான் .இந்த எண்ணம் இளைஞர் நெஞ்சில் வேரோடி ,தன்னிடம் காதல் சொல்லும் ஆணிடம் மனம் புண் படும் விதத்தில் பதில் சொல்ல வைக்கலாம் .ஸ்வாதி ஏதோ ஒரு புண் படுத்தும் சொல்லை திரும்ப ,திரும்ப சொல்லியிருந்தால் அதற்கு காரணம் அவள் அல்ல ,இந்த வசனம் தான் என்பதை மறுக்க முடியாது .
  2. "எனக்கு கிடைக்காத அந்த சொர்க்கம் ,எவனுக்கும் கிடைக்க விடமாட்டேன் !"                       விதைத்த விஷ விதைகள்:'அவளை தீர்த்து விடு'என்ற அறிவுரை .அந்த காலத்தில் 'அவள் எங்கிருந்தாலும் வாழ்க 'என்ற அறிவுரை தான் காணலாம் . 
  3. இரட்டை பொருள் படும் படியான, 'அசிங்கமான ', இளைய சமுதாயத்தை தப்பான பாதையில் கொண்டு செல்லக்கூடிய காட்சிகள் மிகுதியாக  வருகின்றன.தாயாய் மதிக்க வேண்டிய வயதுடைய பெண்களையும் காமக் கண்ணோடு பார்ப்பது போல் காட்சிகள்.இன்னொருவரின் மனைவியையும் இச்சையோடு பார்ப்பது போல் காட்சிகள் !கல்லூரி யில்  பெண்கள் காதலுக்கத்தான் வருவது போலவும் ஆண்கள் எல்லாம் அதற்காக அலைவது போலும் காட்சிகள்.                                                                            விதைத்த விஷ விதைகள்:சேவை செய்யும் செவிலியரைக்கூட 'சைட் ' அடிக்கலாம் என்ற விஷ எண்ணம் 
  4. அடிப்பதும்  ,கொல்லுவதல்லாம் நகைச் சுவையா ?கொதிக்கும் வெந்நீரை முகத்தில் வீசுவது 'சிரிப்பா ' ? ஒரு குறிப்பிட நடிகரை அடிப்பது தான் ,எல்லா படங்களிலும் நகை சுவையாக  காட்டப்படுகிறது .எதற்க்கெடுத்தாலும் அரிவாள்களை தூக்கிக் கொண்டு விரட்டுவது போல் காட்சிகள்.பார்க்கும் குழந்தைகள் எல்லோரும் ,அரிவாளை தூக்குவதும் ,ஆளை அடிப்பது ஒன்றும் தவறில்லை ,நகைச் சுவை தான் ,என்று நம்ப வைக்கிறது இப்படியான காட்சிகள்.அப்புறம் தெருவில் யாரயாவது உதைத்தால் ,நம் இளைஞ்ச ரெல்லாம்  ,விழுந்து விழுந்து சிரித்து விட்டு போய் விடுவார்கள் !ஆண்களை அடிக்கக்  கூடாத இடத்தில அடித்தால் மரணம் தான் .ஆனால் அப்படி அடிப்பது தமிழ் படங்களில் 'ஜோக் ' !                                                                                                                    விதைத்த விஷ விதைகள்:வன்முறை ,அரிவாள் கலாச்சாரம் 
  5. இன்னொரு மோசமான போக்கு என்னவென்றால் ,ஏமாற்றி ஒருவரை எதிலாவது மாட்டி விடுவது நகைச்சுவையாக கருதப் படுவது  தான் .ஒரு படத்தில் மின்சார மோட்டார் ஒன்றை சரிசெய்து கொண்டிருக்கும் ஒரு நடிகரை ,இன்னொரு நடிகர் மின்சாரத்தை பாய விடுகிறார் .உடனே அவர் அலறுகிறார் .என்ன ஒரு 'ஜோக் ' ! இதை எப்படி சிரிப்பாக கொள்வது ? அப்பாவிகளை பிரச்னையில் மாட்டி விடுவது நல்ல நகைச்சுவையா ?
  6. ஆட்களை அசிங்கமாக வருணித்து பேசுவது அடுத்த நகைச்  சுவை !'போண்டா தலையா ,உன் கரடி மூஞ்சிக்கு ,தவக்களை ,போன்ற சொற்கள் எல்லாம் 'ஜோக் ' தானா ?சிந்திக்க வேண்டும் . 
  7. அடுத்தது ,பெரியவர்களை அவமதிப்பது ,ஆசிரியர்களை ஏமாற்றுவது போன்ற காட்சிகள் 'நகைச்  சுவையாக, வரம்பில்லாம்மல் காட்டப்படுகிறது .இவைகள் பார்ப்பவரின் மனதை நிச்சயமாக பாதிக்கும் என்பதில் ஐயமில்லை .
  8. ஒரு படத்தில் நாயகன் கருப்பு என்று நாயகி காதலிக்க மறுப்பதாகவும் ,உடனே நாயகன் வெள்ளையாக லேகியம் வாங்கி அதில் குளிப்பதாகவும் ஒரு கேவலமான காட்சி வருகிறது .  'கருப்பு'தமிழனின் பெருமைக்குரிய நிறம் .அதை வெளியிலிருந்து ,வாழ வந்தவர்கள் .நம்மை ஆள வந்தவர்கள் ஆகி ,சிறுமை படுத்தி ,வெளிரிய தோல் நிறத்தை கொண்டு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் .தமிழ் ஊடகம் முழுவதும் கருப்பு ஒருவரும் இல்லாமல் ஒழித்து விட்டார்கள் .அப்பாவி தமிழனே, தமிழனை நிறத்தை வைத்து கேவலமாக பேச வைத்து விட்டார்கள் .
இந்த காட்சிகள் எல்லாம் சமுதாயத்தை ,குறிப்பாக இளவயதினரை மிகவும் பாதித்து ,அவர்களுடைய நல்ல பண்புகளை ,தவறான பாதையில் கொண்டு செல்லக்  கூடியது என்பதை உணர்ந்து கொள்வது எல்லோருக்கும் நல்லது .சமுதாய நலனுக்காக ,இந்த மாதிரி காட்சிகளை தவிர்த்து ,நல்ல சுத்தமான  நகைச்சுவைக்  காட்சிகள் வரும் படியாக ,சம்பந்தப் பட்டவர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். நம் குழந்தைகளிடம் இதைக் குறித்து பேசி புரிய வைப்பதும் நல்லது . இத நான் ஒரு சமுதாயக் கவலையோடு தான் பதிவு செய்கிறேன் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை .காதல் கொலைகளில்  முக்கிய பங்கு தமிழ் திரைக்கு உண்டு என்பது உறுதி .

Saturday, 24 September 2016

தமிழை சிதைக்கும் காரணிகள் !

      எந்த ஒரு தமிழ் வார இதழ் வாசித்தாலும் எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி  பார்த்தாலும் , ஒன்று மட்டும் பொது வாக காண ப்படுகிறது ..அது என்ன வென்றால் ,அதில் சுமார் 30% சொற்கள் ஆங்கிலமாக கலந்து இருப்பது தான்  .இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் விரைவில் தமிழ் மொழி ஒரு சிதைப்பட்ட 'தங்க்லீஷ் 'ஆக மாறிவிடும் அபாயம் உள்ளது . இதை தமிழர்கள் ஆகிய நாம் எப்படி தடுக்கலாம் ?
தமிழர்களின் அளவில்லா ஆங்கில  மோகம் 
                           தமிழ் நாட்டை பொருத்தவரையில் , ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலிருந்து ஆங்கில மோகமும் நம்மை ஆண்டுகொண்டு இருப்பதை  யாராலும் மறுக்கமுடியாது . இந்த ஆங்கில ஆதிக்கம், நம் சிந்தனையையும் ஆண்டு கொண்டு தமிழை ,தமிழில் பேசுவதை புறந்தள்ளிக் கொண்டிருப்பதை நம் கண் கூடாக காண்கிறோம் .நம் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் பெருமையுடன் சேர்த்து ,அவர்களை அதில் பேச ஊக்குவித்து ,எல்லோரிடம் சொல்லி மகிழும் ஒரே இனம் நம் தமிழ் இனந்தான் !  இதற்கெல்லாம் காரணம் தான் என்ன ? நம்மை அறியாமலேயே நாம் தமிழை அழித்துக் கொண்டிருக்கிறோமா  ? ஏன் இந்த சுய வெறுப்பு ?
என்னுடைய சிங்கை அனுபவம் 
                           சிங்கப்பூர் சென்றி ருந்த போது ,'வாட்ச் ' வாங்குவதற்காக ,ஒரு கடையில் சென்று  நான் 'வாட்ச் ' வேண்டும் என்றேன் .அங்கிருந்த தமிழ்ப்  பெண் 'அண்ணாச்சி ,மணிக் கடிகாரமா ?' என்று அழகான தமிழில் கேட்க, நான் பதிலுக்கு ,திரும்பவும்  'ஆமா ,வாட்ச் தான் 'என்று சொல்ல , அந்தப்பெண் திரும்பவும் அதே கேள்வியை கேட்க, நான் திரும்பவும் ,அதே பதிலை சொல்ல ,ஒரே வேடிக்கை தான்,போங்கள்  ! சிறிது நேரம் கழித்து தான் எனக்கு நான் ஆங்கிலத்திலே பதில் சொல்வதும் , அவர்கள் தூய தமிழ் பேசுவதும்  புரிந்தது ! ஏன் நான் அதைக் கூட புரிந்துக் கொள்ளவில்லை ? என் மேல் தப்பா ?அல்லது நம்முடைய தமிழ் சமுதாயம் மேல் தப்பா ?
                         இதைப் போல் இன்னொரு சம்பவம் .இந்த முறை இது நடந்தது கன்னியாகுமரியில் .சூரிய அஸ்தமனத்தை ரசித்துக் கொண்டிருந்த என்னை ஒருவர் தமிழில் ஏதோ கேட்டார் .நான் அதற்கு ஆங்கிலத்தில் பதில் கூறினேன் .இரு முறை என் ஆங்கில பதிலை கேட்டுவிட்டு ,அவர்  என்னிடம் "நீங்க ,தமிழன் தானே ? பின்னே ஏன் தமிழ்ல பதில் சொல்ல மாட்டேன்கிறேங்க ?" என்று ஓங்கி  கன்னத்தில் அறை விட்டது போல் கேட்டார் .எனக்கு ஒரே அவமானமான உணர்வு ! சே !இனிமேல் இருந்து தமிழ்ல தான் பேசணும் என்று முடிவெடுத்தது தான் ,அதன் பிறகு ஒரு நாள் கூட தப்பி தவறி கூட ஆங்கிலத்தில் பேசவில்லை என்று சொல்வேன் என்று எதிர் பார்க்காதீர்கள் ! இன்னும் முயன்று கொண்டுதானிருக்கிறேன் ,முடியவில்லை .ஏன் ?
நம்மை இயக்கும் நம் உள் மனது !
                                 நாம் அன்றாடம் செய்யும் செயல்கள் எல்லாம் நாம் சிந்தித்து செய்பவை அல்ல .சுமார்  75% அனிச்சை(reflex) செயலாக நடை பெறுவது தான் .இந்த அனிச்சை செயல்கள் உள்மனதின் ஆழத்தில் திட்டமிடப் பட்டு(programmed) பதிவாயிருக்கிறது .நாம் நினை த்தால் கூட இதை மாற்றுவது கடினம் .உ-ம் .யாராவது என் காலை மிதித்தால் நான் 'அம்மா ' என்று கத்தாமல் 'தாத்தா ' என்று கத் து வே ன் என்று  முடிவெடுத்து பாருங்கள் !என்ன முயன்றாலும்  'அம்மா' என்று தான் கத்த வரும் ! ஏன் என்றால் அதுஉள்மனதின் பதிவு.அதை உள்மனது நுழைந்து தான் மாற்ற முடியும் .உள்மனதில் இதைப்  பதிப்பது யார் ?
உள்மனதை ஊடுருவும் ஊடகங்கள் !
                          நான் சிறுவனாக இருந்த போது என்னுடைய நடை ,உடை,பாவனை எல்லாவற்றையும் பாதித்தது என்னுடைய குடும்பம்,ஆசிரியர்,சமூகம் ,அப்புறம் ஒரு அளவுக்கு திரை ப்படங்கள் போன்றவை தான் .என்னுடைய தமிழை தீர்மானித்ததும் இவை தான் .தொலைக் காட்சியோ ,வலைத்  தளங்களோ இல்லாத காலம் அது .என்னுடைய தமிழ் ஆங்கிலம் அதிகம் கலக்காத அழகு தமிழாக இருந்தது .ஆனால் இப்போது என் 1ம் வகுப்பு படிக்கும் பேத்தியிடம் தமிழில் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவது எளிது ,என்கிற அவல நிலை க்கு தள்ளப் பட்டிருக்கிறோம் .காரணம் ,நம்மை சூழ்ந்திருக்கும் எல்லாம் நம்மை பாதிக்கின்றன .ஆங்கிலக் கல்வி ,ஆங்கிலம் பேசினால்தான் உயர்வு என்று நினைக்கும் ஆசிரியர் ,நண்பர்கள் ,சமூகம் ,ஊடகங்களில் 30% ஆங்கில ஊடுருவல் ,நடிகர்களின் ஆங்கில உரையாடல்கள் இவை யாவும் நம் உள் மனதை ஆள்வதால்,நாம் முடிவெடுத்தாலும் கூட தூய தமிழில் பேசுவது ஒரு பெரிய சவாலாகத் தான் இருக்கிறது .இவைகளில் தொலை காட்சி நிகழ்ச்சிகள், தாம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது . பல நிகழ்ச்சிகள் பெயரே ஆங்கிலம் கலந்த பெயராகத் தான் இருக்கிறது.தற்போதைய ஊ டகங்கள் ,தொலைக்காட்சி ,வலை  மற்றும் அலை பேசி மூன்றும் உடலோடும் உள்ளத்தோடும் பிரியாத ஒன்றாகிவிட்டன .அதனால் அவைகளின் தாக்கத்தை என்ன முயன்றாலும் கட்டுக்குள் கொண்டு வரமுடியாது என்பது தெளிவான உண்மை.
'பண்ணி ' தமிழ் படுத்தும் பாடு !
                              தமிழர்கள் எல்லோரும்  இப்போது ஒரு விதமான  'பண்ணி' தமிழுக்கு மாறி விட்டார்கள்.அது என்ன, 'பண்ணி ' தமிழ் ?அது இது தான் !
                    கொஞ்சம் .'ட்ரை ' பண்ணிப் பார்த்து ,முடியலைன்னா 'கட் 'பண்ணிருங்க . 'மிக்ஸ் ' பண்ணும் போது 'கேர் புல்லா ' இருங்க ,அந்த 'லெவல் ' போயிடும்.இந்த தமிழ் நீடித்தால் தமிழ் ' ஐ சி யு வார்டில் '  அட்மிட் ' பண்ணும் நாள் தூரத்தில் இல்லை ! 
               இந்த அவல நிலையை மாற்றுவதற்கு நாம் என்ன செய்யலாம் ? தமிழை எப்படி காக்கலாம் ? இதுவரை இல்லாத இந்த ஒரு புதிய அச்சுறுத்தலை எப்படி எதிர் கொள்ளலாம் ?
தமிழைக்  காக்க என்ன செய்யலாம் ?
  • முதலில் தமிழுக்கு பெரிய  அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்து ,,அந்த செய்தியை சமூக ஊடகங்கள் மூலமாக வேகமாக  பரப்ப வேண்டும் .அழிவின் விளிம்பை நோக்கி தமிழ் செல்வதை குறித்து எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் .எதற்ககெல்லாமோ விழிப்புணர்வு பேரணி நடத்தும் நாம் இதற்கும் நடத்தலாமே ! 
  • நாம் ஒவ்வோருவரும் அன்றாடம் பேசும் தமிழில் ஆங்கில சொற்களை தவிர்த்து பேச வேண்டும் .இது கடினமாக இருந்தாலும் நம் தாய்க்காக செய்வதாய் நினைத்து கடமையாக செய்ய வேண்டும்.
  • நம் குழந்தைகள் நம்மைப்  பார்த்து கற்றுக்கொள்ளும் .இது அவர்கள் ஆங்கில அறிவை பாதிக்கும் என்று நினைக்க வேண்டாம்.
  • நம்முடைய சமூக ஊடகங்கள் பதிவுகள் தூய தமிழில் இருக்க வேண்டியது அவசியம் .அப்படி இல்லாத பதிவுகளை அன்புடன் கண்டிக்கலாம் .இதை நான் இப்போதே செய்து கொண்டிருக்கிறேன்.
  • தொலை காட்சி நிகழ்ச்சிகள்/வார இதழ்கள் போன்றவற்றில்  ஆங்கிலம் கலந்தால் நாம் எதிர்ப்பை கருத்தாகக் கூறலாம் .
  • தூய தமிழ் நிகழ்ச்சிகள் /இதழ்கள் ஆகியவைகளை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கலாம் .
  • எல்லாவற்றிற்கும் மேலாக தமிழிழ்  பேசுவதை நாம்  பெருமையாக  கொள்ள  வேண்டும் .
                              ஆங்கில  புலமையை  வளர்த்து கொள்வதில்  தப்பில்லை .அது  பிழைப்பிற்காக  ! .ஆனால்  தமிழில்   பேசுவது நம்  தாய்க்கு  செய்யும் மரியாதை,ஒரு அன்பு ! .இரண்டு மலையாளிகள்  சந்தித்தால் அவர்கள்  மலையாளத்தில்  பேசுவார்கள் .இரண்டு தெலுங்கர்கள்  சந்தித்தால் தெலுங்கில்  பேசிக் கொள்வார்கள் .ஆனால் இர ண்டு  தமிழர்கள்  சந்தித்தால் மட்டும் அதிகமாக  ஆங்கிலத்தில்  தான் பேசிக்கொள்வார்கள் .
கவிஞர் ஆழிமலரின் குறுங்கவிதை  ஒன்று என்  நினைவுக்கு வருகிறது .
இதோ அந்த கவிதை .
                                                                                   ஆங்கிலம் 
தமிழ் அறிந்த ஒரு தமிழனும் 
தமிழ் அறிந்த  இன்னொரு தமிழனும் 
பேசும் இணைப்பு மொழி !
மறக்க வேண்டாம் !
                            இந்த அவல நிலை மாறி" கல் தோன்றி மண் தோன்றா  காலத்தே, முன் தோன்றி மூத்த குடியின் பெருமையான தமிழைக்  காக்க தலையும் தருவேன்" என்று சொல்லும் தமிழர்கள்  இருக்கும் இந்த தமிழ்நாட்டில்,அது வெறும் சொல்தானோ என்று நினைக்க தோன்றுகிறது .  நான் சொன்ன தெல்லாம் செய்வது மிக எளிது தான் .முதல் செய்கையாக ,இந்த கட்டுரையை ,குறைந்தது 10 நண்பர்களுக்காவது பகிருங்கள் .பள்ளிகளில் பரப்புங்கள் .
இணைந்து தமிழை உயர்த்துவோம் !
.வாழ்க தமிழ் !. 
('வலைத் தமிழ்' தளத்தில் ஏற்கெனவே  பிரசுரமான என் கட்டுரை )


Friday, 23 September 2016

ஒலிம்பிக்கில் இந்தியாவின் பரிதாப முகத்திற்கு காரணம் என்ன ?

ஒலிம்பிக்கில் இந்தியாவின் பரிதாப முகத்திற்கு காரணம் என்ன ?சீனா முதலிடத்தில் இருக்கும் போது ,கேவலம் ஒரு பதக்கம் கூட நாம் வாங்க முடியாமல் இருப்பத்திற்கு  காரணம் என்ன ?
நாம் இங்கு  இருப்பவர்களில் நல்ல தகுதி உள்ளவரை அனுப்புகிறோமோ ?நீச்சல் போட்டிக்கு ஆள் எடுக்க ,நீரிலே பிறந்து ,நீரிலே வளர்ந்து ,நீரிலே மடியும் ஏழை மீனவரை தேர்ந்தெடுத்து,உற்சாகப்படுத்தி , வெளி நாட்டவரை கொண்டு பயிற்சி கொடுத்து ஒலிம்பிக்கிற்கு அனுப்பலாம் .மலை இனத்தவரை வில் /சுடுதல் போட்டிக்கு அனுப்பலாம்.ஆனால் நாமோ மேல் ஜாதி ,இந்தி மொழி ,வடஇந்தியன் ,பணக்காரன் என்றல்லாம் பார்த்து ,தகுதியில்லாதவர்களை அனுப்பினால் ,0 பதக்கம் தான் கிடைக்கும் !இந்தியர்கள் ,மற்ற இந்தியர்களை தேர்ந்தெடுப்பது ஏதாவது ஒரு வழியில் 'ஆள் ' பார்த்து எடுப்பது என்பது வாடிக்கை .இது மாறும் வரை இந்திய ஒலிம்பிக்கில் தலையை தொங்க போடவேண்டியது தான் ! இந்த இந்திய போட்டியாளர்  பட்டியலை பாருங்கள் .தென் இந்தியர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ?

தகுதியானவர்களை தேர்ந்தெடுப்போம் !தலை குனிந்த இந்தியாவை ,தலை நிமிர்த்துவோம் !


படம் நன்றி :கூகுள் 

பயப்படாதீர்கள் !இந்தியினால் தமிழ் நிச்சயமாக அழியாது !

தமிழ் அழிவதென்றால் ,நிச்சயமாக அது இந்தியினால் இருக்காது !பின்னே எதினால் அழியும் ?யாரினால் அழியும் ?
 இதை வாசியுங்கள் ,நீங்கள் அறியாத உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் !
=======================================================================  
தமிழ் தாயின் புலம்பல் !
==========================
ஒரே பயமாக இருக்கிறது !
நாளுக்கு நாள் அது அதிகரித்துக் கொண்டிருக்கிறது !
என்ன ஆகுமோ தெரியவில்லை !
மயக்கமாக வருகிறது !
மனமெல்லாம் ஒரு சஞ்சலம் !
நினைக்கவே இல்லை !
என் சொந்த பிள்ளைகள் தான் !
 இப்படி செய்வார்களா ?
என்னிடம் பால் குடித்தவர்கள் தான்  ,
என்னால் வளர்ந்தவர்கள் தான்  ,
என்னை அழிக்க நினைப்பார்களா ?
சே !இருக்காது !
'வெறும் மனப் பிரமையாகத்தான் இருக்கும் '..
என்று கூட நினைத்தேன் !

ஆனால் ,
உற்று பார்த்தால் ....
உண்மை தான் !
அவர்கள் கைகளில் பளபளக்கும் கத்திகள் ...
எல்லாம் என்னை தாக்க !
பெற்ற தாயை தாக்க !

உண்மைதான் !
முதலில் 'நான் யார் ?'என்று 
நீங்கள் கேட்பது புரிகிறது !
என்னைத் தெரியவில்லை ?
நான்,உங்கள் தாய் !
தமிழ்த் தாய் !
புலம்புவது நான் தான் !
உங்கள் தாய் தான் !

அவர்கள் கைகளில் இருக்கும் கத்திகள் ?
'ஆங்கிலம்' என்ற கூர்மையான கத்திகள் !
சொல்லுக்கு சொல் 
அதைக் கொண்டு 
என்னைக் குத்துகிறார்கள் !

குத்தி ,குத்தி அதை 'என்ஜாய் ' பண்ணுகிறார்கள் !
இருக்கட்டும்,இது அவர்கள் காலம்  !

அந்தக் காலத்தில்
 திரவியம் தேட வெளி நாடு 
 சென்ற என் பிள்ளைகள் 
தமிழை ,
தேடி  சென்ற  நாடுகளில் விட்டார்கள் !
நட்டார்கள் !
அவர்கள் மொழியை என்னில் நட வில்லை !

ஆனால் இன்று என் பிள்ளைகள் ,
அலுவல் ஆங்கிலத்தை
அங்கே  விடாமல் 
 அழைத்து வந்து ,
தத்து எடுத்து 
எனக்குள் நுழைத்து ,
என்னை பித்தாக்குகிரார்கள் !
அசுத்தப் படுத்துகிறார்கள் !

என் பிள்ளைகளே !
ஆங்கிலத்தில் தமிழை கலந்து 
அயல் நாட்டில் போய்  பேசி பாருங்கள் !
அடியும்  உதையும் தான் 
அளவின்றி கிடைக்கும் !

தமிழில்  ஆங்கிலத்தை கலந்து தமிழ் நாட்டில்  பேசி  பாருங்கள் !
பரிசும்,பாராட்டும் பலரால் கிடைக்கும் !
சே !என்ன கேவலம் ! 
அதுவும் நான் பிறந்த 
என் தமிழ் நாட்டில்  !

எனக்கென்று பரிந்து பேச யாருமே இல்லையா ?
எங்கே என் தமிழ் பால் குடித்த   பிள்ளைகள் ?
கவி பேரரசும்,கவிக்கோவும் எங்கே  !
கண் காணும் தூரத்தில்
 கலைஞர் கூட காண வில்லையே  !
எதற்கெல்லாமோ குரல் எழுப்பும் சீமான் எங்கே ?
வைகோ ,தொல் எல்லாம் எங்கே ?
 
என்னை வைத்து
 இனி வாக்கு வாங்க
முடியாதென்று நினைத்தார்களோ  ?
தெரியவில்லை !
தொலைக் காட்சியும் உடகங்களும்
 ஆங்கிலதிற்கு அடிமை
 முகவர்களாக ஆகி 
என்னை முற்றிலும் விலக்குவது ,
உங்களுக்கு தெரிகிறதோ ,இல்லையோ 
எனக்கு தெளிவாக  தெரிகிறது !

ஒரு குவளைப் பாலிற்கு ஒரு துளி விடம் போதும் !
முற்றிலும் அழித்து அதை முழுதாய் ஒழிக்க !
நீங்களோ துளி துளியாய் 
ஆங்கில விடத்தை 
என் தொண்டைக் குழிக்குள் தொடர்ந்து இடுகிறீர்கள் !

'முயன்று ' என்று தமிழில் சொன்னால்  புரியாதா ?
ஏன் 'ட்ரை ' என்கிறீர்கள் ?
அப்படி சொல்லி 'முயன்று' பார்த்தீர்களா ?
அலை பேசி எண் கேட்டால் 
ஒன்பது,ஆறு ,மூணு ,ஐந்து ,ஏழு ...என்று சொன்னால் புரியாதா ?
ஏன் 'நயன் ,சிக்ஸ்,த்ரீ , ......சே !

எதற்காக என்னை
திட்டம் போட்டு அழிக்கிறீர்கள்  ?
பணத்திர்க்காகவா ?
பவிசிர்க்காகவா ?
எதற்காக எனக்கு கல்லறை கட்டுகிறீர்கள் ?
எனக்கு இன்று தெரிந்தாக வேண்டும் !

கல்லறை கட்டும் பணியில்
  'கர சேவை 'செய்பவர் யார்,யார் ?

இதோ அவர்கள் பட்டியல் !
அனைத்து தொலைக் காட்சிகளும் .பதிப்புகளும் !
திரைத் துறையும் ,அதன் கலைஞர்களும் !
தின செய்தி தாள்களும் ,கல்விக்கூடங்களும் !
ஊடகங்களும் ,தொழில் நுட்பமும் !
ஆசிரியர்களும் ,மாணவர்களும் !
அரசாங்கமும் ,எதிர்க் கட்சியும் !
பணக்காரனும் ,பாமரனும் !
நீங்களும் ,உங்கள் பிள்ளைகளும் !
மொத்தமாய் சேர்ந்து ,ஒற்றுமையாய் 
எனக்கு குழி தோண்டுகிறீர்கள் !
தமிழர்கள் மற்ற எல்லாவற்றிலும் 
பிரிந்து இருந்தாலும்,
எனக்கு குழி தோண்டுவதில் என்ன ஒரு ஒற்றுமை !

சென்னைப் பிரளயத்தில் 
இமயமாய் உயர்ந்து நின்று 
எல்லோரையும் காப்பாற்றிய இளைஞர்களே !
இந்தி மிரட்டிய போது 
எனக்காக போராடிய இதயங்களே !
எங்கு சென்றீர்கள் என் இன்னலான இந்த  நேரத்தில் ?
பொங்கி எழுங்கள் !

ஆங்கிலத்தை அலுவலில் மட்டும் அழுங்கள் !
இல்லத்திலே ,
உங்கள் உள்ளத்திலே ,
நான் மட்டும் ,
உன் தாய் மட்டும் ,
தமிழ் தாய் மட்டும்,
 தங்கட்டும் !
நாவில் தமிழ் மட்டும் 
நடமாடட்டும் !

எனக்காகக தோண்டி கொண்டிருக்கும் ,
குழியில் 
ஆங்கில மோகத்தைப் போட்டு ,
முழுதுமாய் 
குழியை மூடுங்கள் !
'கல் தோன்றாக் 
காலத்தில் தோன்றிய 
என்னை 
இன்னும் மேன்மை படுத்துங்கள் !
நான் தாய் என்றாலும் ,
கன்னித் தமிழ் தான் !

ஆங்கிலத்தை அறவே விலக்குங்கள் !
என் வலியெல்லாம் மாறும் !
வளமாய் வாழ்வேன் !
இன்னும் பல ஆயிரமாண்டு ! 
நானும் வாழ்வேன் !
நீங்களும் வாழ்வீர்கள் !
Photo

Thursday, 22 September 2016

சே !இதெல்லாம் ஒரு நகைச் சுவையா ?

தரம் தாழ்ந்து வரும் தமிழ்த்  திரை நகைச்சுவை !
                     நான் சிறுவனாக இருந்த 60 களில் தமிழ் திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த நாகேஷ் ,சந்திரபாபு ,சோ ,மனோரமா போன்றவர்களின் நகைச்சுவைக் காட்சிகள், இன்றும் மனதை விட்டு அகலாமல்  நிற்கின்றன .தூய்மையான நகைச்சுவை காட்சிகள் .யாரையும் புண் படுத்தாமல் ,சுத்தமான நகைச் சுவைக் காட்சிகள் !.ஆனால் இன்றய நிலைமை யோ  கவலை அளிக்க க்  கூடியதாக இருக்கிறது.எப்படி  ?
இப்போதைய காட்சிகள் ! 
                                         அன்றைய காலக் கட்டத்தில் நகைச்சுவை ஒரு தனி கிளை க் கதையாக அல்லது கதையுடன் பின்னப்பட்டு  ,ஒரு அடிப்படை கருத்தோடு  அமைக்கப் பட்டிருக்கும்.பல முறை சிரிப்பையும் சிந்தனையையும் உருவாக்கும் காட்சிகளாக இருக்கும்.'திருவிளையாடலில் ' தருமியின் பாத்திரம் ,'அன்பே வா ' படத்தில் நாகேஷின் காட்சிகள்,'தேன் மழை' திரைப்படம் ,  எல்லாம் நினைத் தாலே சிரிக்கும் காட்சிகளாக இருந்தன. .
                                     ஆனால் இன்றைய நாளில் நகைச்சுவை காட்சிகள் அமைக்கும் விதம் முற்றிலுமாக மாறி விட்டது.எப்படி ?
  • இரட்டை பொருள் படும் படியான, 'அசிங்கமான ', இளைய சமுதாயத்தை தப்பான பாதையில் கொண்டு செல்லக்கூடிய காட்சிகள் மிகுதியாக  வருகின்றன.தாயாய் மதிக்க வேண்டிய வயதுடைய பெண்களையும் காமக் கண்ணோடு பார்ப்பது போல் காட்சிகள்.இன்னொருவரின் மனைவியையும் இச்சையோடு பார்ப்பது போல் காட்சிகள் !கல்லூரி யில்  பெண்கள் காதலுக்கத்தான் வருவது போலவும் ஆண்கள் எல்லாம் அதற்காக அலைவது போலும் காட்சிகள்.
  • அடிப்பதும்  ,கொல்லுவதல்லாம் நகைச் சுவையா ?கொதிக்கும் வெந்நீரை முகத்தில் வீசுவது 'சிரிப்பா ' ? ஒரு குறிப்பிட நடிகரை அடிப்பது தான் ,எல்லா படங்களிலும் நகை சுவையாக  காட்டப்படுகிறது .எதற்க்கெடுத்தாலும் அரிவாள்களை தூக்கிக் கொண்டு விரட்டுவது போல் காட்சிகள்.பார்க்கும் குழந்தைகள் எல்லோரும் ,அரிவாளை தூக்குவதும் ,ஆளை அடிப்பது ஒன்றும் தவறில்லை ,நகைச் சுவை தான் ,என்று நம்ப வைக்கிறது இப்படியான காட்சிகள்.அப்புறம் தெருவில் யாரயாவது உதைத்தால் ,நம் இளைஞ்ச ரெல்லாம்  ,விழுந்து விழுந்து சிரித்து விட்டு போய் விடுவார்கள் !ஆண்களை அடிக்கக்  கூடாத இடத்தில அடித்தால் மரணம் தான் .ஆனால் அப்படி அடிப்பது தமிழ் படங்களில் 'ஜோக் ' ! 
  • இன்னொரு மோசமான போக்கு என்னவென்றால் ,ஏமாற்றி ஒருவரை எதிலாவது மாட்டி விடுவது நகைச்சுவையாக கருதப் படுவது  தான் .ஒரு படத்தில் மின்சார மோட்டார் ஒன்றை சரிசெய்து கொண்டிருக்கும் ஒரு நடிகரை ,இன்னொரு நடிகர் மின்சாரத்தை பாய விடுகிறார் .உடனே அவர் அலறுகிறார் .என்ன ஒரு 'ஜோக் ' ! இதை எப்படி சிரிப்பாக கொள்வது ? அப்பாவிகளை பிரச்னையில் மாட்டி விடுவது நல்ல நகைச்சுவையா ?
  • ஆட்களை அசிங்கமாக வருணித்து பேசுவது அடுத்த நகைச்  சுவை !'போண்டா தலையா ,உன் கரடி மூஞ்சிக்கு ,தவக்களை ,போன்ற சொற்கள் எல்லாம் 'ஜோக் ' தானா ?சிந்திக்க வேண்டும் . 
  • அடுத்தது ,பெரியவர்களை அவமதிப்பது ,ஆசிரியர்களை ஏமாற்றுவது போன்ற காட்சிகள் 'நகைச்  சுவையாக, வரம்பில்லாம்மல் காட்டப்படுகிறது .இவைகள் பார்ப்பவரின் மனதை நிச்சயமாக பாதிக்கும் என்பதில் ஐயமில்லை .
                                         இந்த காட்சிகள் எல்லாம் சமுதாயத்தை ,குறிப்பாக இளவயதினரை மிகவும் பாதித்து ,அவர்களுடைய நல்ல பண்புகளை ,தவறான பாதையில் கொண்டு செல்லக்  கூடியது என்பதை உணர்ந்து கொள்வது எல்லோருக்கும் நல்லது .புதிதாக வந்திருக்கும் நடிகர் சங்கத்தினர் இதை கருத்தில் கொண்டு ,சமுதாய நலனுக்காக ,இந்த மாதிரி காட்சிகளை தவிர்த்து ,நல்ல சுத்தமான  நகைச்சுவைக்  காட்சிகள் வரும் படியாக ,சம்பந்தப் பட்டவர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். நம் குழந்தைகளிடம் இதைக் குறித்து பேசி புரிய வைப்பதும் நல்லது . இதை  நான் ஒரு சமுதாயக் கவலையோடு தான் பதிவு செய்கிறேன் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை .

(வலைத்தமிழ் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட என் கட்டுரை )

எதை இழந்தாலும் ,இதை மட்டும் இழக்காதீர்கள் !

என்ன காரணம் கொண்டும் உங்கள் மகிழ்ச்சியை மட்டும் இழந்து விடாதீர்கள் !அதை திருட பலர் வருவார்கள் !பல வரும் !ஆனால் ,நீங்கள் உறுதியாக இருங்கள் !
'மன மகிழ்ச்சி 'இறைவன் எனக்கு தந்தது !அதை மட்டும் நான் விடவே மாட்டேன் !
படம் நன்றி :கூகுள் 

Monday, 19 September 2016

இந்த அடங்கா 'காவெறி ' ஏன் ?

வெறிகள் பலவிதம் !
'கொலை வெறி ','காம வெறி 'பற்றி கேள்வி பட்டிருக்கிறோம் .ஆனால் 'காவேரி' ஆற்றின் மேல், ஒரு மாநில  மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் 'கா வெறி 'யை பற்றி கேள்வி பட்டு இருக்கிறீர்களா ?ஏன் இந்த வெறி ? ஏன் எந்த ஒரு  நியாயத்திற்கும்  கட்டு பட மறுக்கும் ஒரு கூட்டம் ?

இரண்டு பேருக்கிடையில் ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை உண்டு என்றால் ,மூன்றாவது நபராகிய  'நீதிபதியிடம் 'செல்வது வழக்கம் .அவர் தீர்ப்புக்கு இருவரும் கட்டுப்பட வேண்டியது கட்டாயம் . , வன்முறையால்  தீர்ப்பையே எதிர்ப்பது எந்த வகையில் நியாயம் ?
அந்த பக்க நியாயம் !
எனக்கு தெரிந்த 'அந்த பக்க' நண்பர் ஒருவர் உண்டு .அவரிடம்  நட்புடன் கேட்டேன் "எப்படிங்க ,நீங்க உச்ச நீதி மன்ற தீர்ப்பையே எதிர்க்கிறீங்க ?சட்டத்துக்கு பயம் வேண்டாமா ?"அவரின் பதிலிலிருந்து நான் உணர்ந்த விடயம் என்னவென்றால் அவர்கள் எல்லோரும் ' காவேரி அவர்கள் நிலத்தில் உற்பத்தி ஆவதால் ,அவர்களுக்கு மட்டும் தான்  அது சொந்தம் 'என்று  தவறாக    எண்ணி கொண்டிருப்பது தான்   '  போராட்டத்திற்கு காரணம் .

நண்பனுக்கு அவர்கள் எண்ணம் தப்பானது என்பதை எப்படி விளக்குவது என்று யோசித்து ,ஒரு உதாரணம் சொன்னேன் .'ஒரு வீட்டின் கீழ் தளத்தில் நீங்கள் குடியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் .மாடியில் ஒரு வட இந்தியர் குடியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.உங்கள் வீட்டின் நீர் தேவை ,ஒரு ஆழ் துளை கிணறு வழியாக ,மேலேற்றி ,மாடியில் ஒரு நீர் தொட்டியில் தேக்கி வைக்க படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.' நண்பர் ,கேட்டு 'சரி ' என்றார்.'இப்போது ,மாடிக்காரர் ,நீர் தொட்டியின் குழாயை அடைத்து விட்டு 'இந்த தொட்டி என் வீட்டில் உள்ளது .ஆதலால் எனக்கு போகத்தான் விடுவேன் 'என்று சொல்கிறார் .அது சரியா ?'என்று கேட்டேன் .உடனே நண்பர் 'அது எப்படி சரியாகும் ?'என்று கோபமாக பார்த்தார் .'ஏன் ,அவர் வீட்டில் தானே நீர் தொட்டி இருக்கிறது ?அவருக்கு அதில் முழு உரிமை இல்லையா ?'என்று நான் கேட்க ,நண்பர் அவர்கள் தரப்பின் தப்பை  மெல்ல உணர ஆரம்பித்தார் !
'தலைக்காவேரி ' மஹாராஷ்டிராவில் இருந்தால் ..
நண்பரிடம் மேலும் விளக்கினேன் ,'ஒரு பேச்சிற்கு ,காவேரி உற்பத்தியாகும் 'தலைக்காவேரி ' மஹாராஷ்டிராவில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.அவர்கள் அங்கு ஒரு அணை கட்டி ,தண்ணீர் தர மாட்டோம் என்றால் ,என்ன செய்வீர்கள் ?'என்றவுடன் 'அது எப்படி ?நாங்கள் உச்ச நீதி மன்றம் சென்று நீதி பெறுவோம் !' என்றார்.'அதைத்தான் தமிழகம் இப்போது செய்திருக்கிறது !'என்றவுடன் நண்பருக்கு நம் தரப்பு நியாயம் இன்னும் கொஞ்சம் அதிகமாக புரிந்தது .
தஞ்சாவூர் உழவர்கள் கன்னடம் பேசினால் ...
நண்பர் இப்போது மெதுவாக நழுவ பார்த்தார் .நான் விடுவதாக  இல்லை."தஞ்சாவூர் உழவர்கள் இப்போது தமிழில்  பேசுவதால் அவர்களை தாக்குகிறீர்கள் .அவர்கள் கன்னடம் பேசுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.அப்போது  என்ன செய்வீர்கள் ?தண்ணீர் திறந்து விடுவீர்களா ?" என்று கேட்டேன் .
என்  நண்பருக்கு 'ஆளை விட்டால் போதும்' என்று ஓட்டம் எடுத்தார் .நானும் நம் தரப்பு நியாயத்தை சொன்ன திருப்தியில் அவரை ஓட விட்டுவிட்டேன் !இயேசு சிலுவையில் அறையப்படும் போது சொன்னாரே 'பிதாவே !இவர்களை மன்னியும் !இவர்கள் செய்கிறது என்னவென்று அறியாதிருக்கிறார்களே !'என்னும் வசனம் தான் என் நினைவில் வந்தது.